Everything posted by தமிழ் சிறி
-
அரசமாளிகையில் இருந்து வெளியேறுகிறார் மஹிந்த!
அரசியலை ஒருபோதும் கைவிடமாட்டேன்! -மஹிந்த ராஜபக்ச நாட்டு மக்களுக்காக தனது அரசியலை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, விஜேராம இல்லத்தில் இருந்து வெளியேறும் போது ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளுக்கு கடந்த காலத்தில் அளவிற்கு அதிகமாக வரப்பிரசாதங்களை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் குறைத்து புதிய சட்டம் ஒன்றை நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருந்தது. இப் புதிய சட்டம் நேற்றில் இருந்து அமுலுக்கு வந்த நிலையில் அரச இல்லங்களை இன்று வரை பயன்படுத்தியிருந்த மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிக்கா ஆகியோர் இன்று அங்கிருந்து வெளியேறியுள்ளனர். அந்தவகையில் கொழும்பு, விஜேராம வீதியில் அமைந்துள்ள இல்லத்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது மனைவியுடன் தங்கல்லையில் அமைந்துள்ள கால்டன் வீட்டுக்கு சென்றார் இதன்போது அவரது ஆதரவாளர்கள் மகிந்தவின் வாகனத்தை முற்றுகையிட்டு ஆரவாரம் செய்திருந்தனர். இது குறித்து கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ” அரசியலை ஒருபோதும் கைவிடமாட்டேன். அரசியல் நடவடிக்கைகள் தொடரும் நாட்டுமக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். எம்மை உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறசொன்னார்கள் அதனால் இங்கிருந்து செல்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக இன்று காலை உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அரசியல்வாதிகள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் ஆதரவாளர்கள் என பல்லேறு தரப்பினர் வருகை தந்திருந்தனர். குறிப்பாக இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென்ஹொங் உள்ளிட்ட பல இராஜதந்திரிகளும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகை தந்திருந்தனர். இந்நிலையில் ”தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உயிரோடு இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார்” என மகிந்தவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே இதன்போது தெரிவித்திருந்தார். இது குறித்து மகிந்தவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே கருத்துத் தெரிவிக்கையில் ”பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் இன்றைய நாள் அவருக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒருநாளாக இருந்திருக்கும். இன்றைய நாள் அரசாங்கத்திற்கு மிகவும் சந்தோசமான நாள். அத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களான டயஸ்போராக்களுக்கு சந்தோசமாக இருக்கும் என நினைக்கிறேன். சட்டத்திற்கு மதிப்பளித்து மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 24 மணிநேரத்திற்குள் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறியுள்ளார். ஒரு வாரத்திற்குள் இந்த வீடு உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்படும். 30வருடகால யுத்தத்தினை நிறைவுக்கு கொண்டுவந்து நாட்டில் அமைதியை ஏற்படுத்திய தலைவருக்கு அரசாங்கம் கௌரவமளிக்கும் விதத்தினை நாட்டு மக்கள் இன்று கண்முன்பார்க்கக்கூடியதாக இருந்தது. சிங்கம் எங்கிருந்தாலும் சிங்கம்தான். தங்காலையில் அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படுமாயின் அதற்கான பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உயிரோடு இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1446859
-
அரசமாளிகையில் இருந்து வெளியேறுகிறார் மஹிந்த!
சம்பந்தன் இப்ப உயிருடன் இருந்திருந்தாலும்.... இப்போ... அரச மாளிகையை விட்டு வில்லங்கமாக வெளியேற்றப் பட்டிருப்பார். எதிர்க்கட்சி தலைவர் பதவி பறி போன பின்பும்... ஏழு, எட்டு வருசமாக அடாத்தாக அரச மாளிகையில் இருந்து அனுபவித்து விட்டுத்தான் செத்துப் போன ஆள்.
-
அரசமாளிகையில் இருந்து வெளியேறுகிறார் மஹிந்த!
உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்தார் மைத்திரி! முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் நேற்று (10) ஜனாதிபதிகளின் சிறப்பு உரிமைகளை நீக்குதல் சட்டம் மூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரினால் 2025 ஓகஸ்ட் 07ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்தச் சட்டமூலம் 1986ஆம் ஆண்டின் 4ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலமாகும். நீக்கப்பட்ட சட்டத்தின் 2 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் நியதிகளின்படி முன்னாள் ஜனாதிபதிக்கு அல்லது முன்னாள் ஜனாதிபதியின் கைம்பெண்ணுக்கு வழங்கப்பட்ட ஏதேனும் வதிவிடம் அல்லது செலுத்தப்பட்ட மாதாந்த படி, நீக்கப்பட்ட சட்டத்தின் 3 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் நியதிகளின்படி முன்னாள் ஜனாதிபதிக்கு அல்லது முன்னாள் ஜனாதிபதியின் கைம்பெண்ணுக்கு செலுத்தப்பட்ட மாதாந்த செயலகப் படித்தொகை, வழங்கப்பட்ட அலுவலக போக்குவரத்து மற்றும் அத்தகைய வேறு வசதிகள், நீக்கப்பட்ட சட்டத்தின் 4 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் நியதிகளின்படி முன்னாள் ஜனாதிபதியின் கைம்பெண்ணுக்கு செலுத்தப்பட்ட மாதாந்த ஓய்வூதியம் என்பன இரத்துச் செய்யப்படும். https://athavannews.com/2025/1446773
-
அரசமாளிகையில் இருந்து வெளியேறுகிறார் மஹிந்த!
உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு வெளியேறினார் சந்திரிக்கா! முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தான் பயன்படுத்திவந்த உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறியுள்ளார். நேற்று (10) நாடாளுமன்றில் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதனை சபாநாயகர் நேற்றைய தினமே சான்றுரைப் படுத்தியிருந்தார். இதன்படி குறித்த சட்டம் நேற்றுமுதல் அமுலுக்கு வந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் இல்லங்களை விட்டு வெளியேறியுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு வெளியேறவுள்ளார். https://athavannews.com/2025/1446792
-
கருத்து படங்கள்
- அரசமாளிகையில் இருந்து வெளியேறுகிறார் மஹிந்த!
புதிய சட்டத்தின் கீழ் உத்தியோகப்பூர்வ இல்லங்களை இழக்கவுள்ள முன்னாள் ஜனாதிபதிகள்! “ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குதல் சட்டத்தின்” விதிகளின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகப்பூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் திருப்பித் தர வேண்டி ஏற்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் உத்தியோகபூர்வ இல்லங்களை பயன்படுத்தி வருகின்றனர். நேற்று (10) நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தின்படி, அவர்கள் அந்த சலுகையை இழந்துள்ளனர். அதன்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (11) உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரும் தங்கள் உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் ஒப்படைப்பார்கள் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. சம்பந்தப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்கள் ஒப்படைக்கப்படாவிட்டால், எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், “ஜனாதிபதி சிறப்புரிமைகளை நீக்குதல்” சட்டத்தின் விதிகளின்படி எதிர்காலத்தில் செயல்பட எதிர்பார்ப்பதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு கூறுகிறது. ஜனாதிபதியின் சிறப்புரிமைகளை நீக்குவதற்கான சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது, தொடர்புடைய வாக்கெடுப்பில், ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டன. ஜனாதிதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குதல் சட்டமூலம் 150 மேலதிக வாக்குகளால் நேற்று (10) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 151 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் பதிவாகின. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரினால் 2025 ஓகஸ்ட் 07ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்தச் சட்டமூலம் 1986ஆம் ஆண்டின் 4ஆம் இலக்க சனாதிபதிகளின் உரித்துரிமைகள் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலமாகும். நீக்கப்பட்ட சட்டத்தின் 2 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் நியதிகளின்படி முன்னாள் சனாதிபதிக்கு அல்லது முன்னாள் ஜனாதிபதியின் கைம்பெண்ணுக்கு வழங்கப்பட்ட ஏதேனும் வதிவிடம் அல்லது செலுத்தப்பட்ட மாதாந்த படி, நீக்கப்பட்ட சட்டத்தின் 3 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் நியதிகளின்படி முன்னாள் ஜனாதிபதிக்கு அல்லது முன்னாள் ஜனாதிபதியின் கைம்பெண்ணுக்கு செலுத்தப்பட்ட மாதாந்த செயலகப் படித்தொகை, வழங்கப்பட்ட அலுவலக போக்குவரத்து மற்றும் அத்தகைய வேறு வசதிகள், நீக்கப்பட்ட சட்டத்தின் 4 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் நியதிகளின்படி முன்னாள் ஜனாதிபதியின் கைம்பெண்ணுக்கு செலுத்தப்பட்ட மாதாந்த ஓய்வூதியம் என்பன இரத்துச் செய்யப்படும். அத்துடன், “ஜனாதிபதிகளின் சிறப்பு ரிமைகள் நீக்குதல்” சட்டமூலத்தில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன நேற்று பிற்பகல் தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். இதற்கு அமைய குறித்த சட்டமூலம் 2025 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க ஜனாதிபதிகளின் சிறப்பு ரிமைகள் (நீக்குதல்) சட்டமாக நடைமுறைக்குவரும். https://athavannews.com/2025/1446719- உலகின் மிகப் பெரும் செல்வந்தர் பட்டத்தை இழந்தார் ஈலோன் மஸ்க்
உலகின் மிகப் பெரும் செல்வந்தர் பட்டத்தை இழந்தார் ஈலோன் மஸ்க். டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான ஈலோன் மஸ்க், உலகின் மிகப் பெரும் செல்வந்தர் என்ற பட்டத்தை இழந்துள்ளார். ஒரக்கிள் மென்பொருள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி எலிசன், அவரை முந்தி முதலிடத்தைப் பிடித்துள்ளார். இது குறித்து ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டு எண் தெரிவித்ததாவது, புதன்கிழமை காலை நிலவரப்படி எலிசனின் சொத்து மதிப்பு 393 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. இதேவேளை மஸ்க்கின் சொத்து மதிப்பு 385 பில்லியன் டொலர்களாகக் குறைந்துள்ளது. ஒரக்கிள் பங்குகள் 40 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்ததே எலிசன் 1 ஆவது இடத்தைப் பிடிப்பதற்குக் காரணமாகும். இவ்வாண்டு டெஸ்லா பங்குகள் சரிவு கண்டுள்ளமையும் எலோன் மஸ்கின் வீழ்ச்சிக்குக் காரணம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1446745- டொனால்ட் ட்ரம்பின் நம்பகமான நண்பர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!
டொனால்ட் ட்ரம்பின் நம்பகமான நண்பர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு! அமெரிக்காவின் மிக உயர்ந்த பழமைவாத ஆர்வலர்கள் மற்றும் ஊடக பிரமுகர்களில் ஒருவராகவும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நம்பகமான நண்பராகவும் இருந்த சார்லி கிர்க் (Charlie Kirk) துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். 31 வயதான கிர்க் புதன்கிழமை (10) உட்டா பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்வின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் கழுத்தில் காயமடைந்த நிலையில் உயிரிழந்தார். அதேநேரம், துப்பாக்கிச் சூடு நடந்து ஆறு மணி நேரத்திற்குப் பின்னரும் அதிகாரிகள் இன்னும் ஒரு சந்தேக நபரைகூட பகிரங்கமாக அடையாளம் காணவில்லை. எந்த சந்தேக நபரும் காவலில் இல்லை என்று சட்ட அமுலாக்க வட்டாரங்களை மேற்கோள் காட்டி அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பெயர் குறிப்பிடப்படாத ஒருவர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டதாக அமெரிக்க புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் தெரிவித்துள்ளது. 18 வயதில் அவர் நிறுவிய “Turning Point USA” அமைப்பு – இப்போது நூற்றுக்கணக்கான கல்லூரிகளுக்கு விரிவடைந்துள்ளது – இது தாராளவாத சார்பு கொண்ட அமெரிக்க கல்லூரிகளில் பழமைவாத கொள்கைகளைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டது. கிர்க்கின் அதிர்ச்சியூட்டும் மரணத்தை அறிவித்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “மாபெரும், மற்றும் புகழ்பெற்ற சார்லி கிர்க் இறந்துவிட்டார். அமெரிக்காவில் சார்லியை விட வேறு யாரும் இளைஞர்களின் இதயத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்று கூறி இரங்கல் தெரிவித்தார். https://athavannews.com/2025/1446727- யாழில் பெண் நாய்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானம் - பிரதேச சபை அறிவிப்பு!
கருத்தடை பண்ணிய நாயை இலகுவில் கண்டு பிடிக்க, காதில் ஓட்டை போடுகிறார்கள் என்பதால்... ஒரு முறை கருத்தடை பண்ணிய நாயை மீண்டும் கொண்டு போக முடியாது. சுவியர்... மேலே நான் பகிடிக்கு எழுதினேன். சீரியசாக எடுக்காதீர்கள். 😂- இஸ்ரேல் கத்தார் நாட்டில் உள்ள ஹமாஸ் தலைவர்களை இலக்கு வைத்து தாக்கியுள்ளது
இந்த வருடம் மே மாதத்தில் டிரம்பிற்கு 1.2 டிரில்லியன் டாலர்களை அள்ளி வழங்கியது கத்தார். அதுமட்டுமா 400 மில்லியன் டாலர் பெருமதியான அதி சொகுசு போயிங் 747-8 விமானத்தை அந்த பைத்தியத்திற்கு பரிசாக வழங்கியது. அதற்கு பரிசாக இன்று, தோஹா மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் ட்ரம்பின் அனுமதியோடு அவனது மேற்பாரவையில் சிறப்பாக இடம் பெற்றது. உண்மை உரைகல்- யாழில் பெண் நாய்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானம் - பிரதேச சபை அறிவிப்பு!
அடுத்த முறை கொலிடேக்கு, ஊருக்கு வரும் போது... முதல் வேலையாக உங்கள் வீட்டு பெட்டை நாயை பிடித்து, கருத்தடை ஆபரேஷன் பண்ணி விட்டுத்தான் அடுத்த அலுவல் பார்க்கிறது. இப்ப சந்தோசமா ஏராளன். 😂- யாழில் பெண் நாய்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானம் - பிரதேச சபை அறிவிப்பு!
கம்பெனி ரகசியத்தை வெளியே சொன்னால்... எனக்குத்தான் நட்டம். 😂 🤣- யாழில் பெண் நாய்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானம் - பிரதேச சபை அறிவிப்பு!
நாயை.... கடிக்காமல் பிடிக்க, ஒரு ரெக்னிக் இருக்குது. 😂 அந்த ரெக்னிக்கை பாவித்து பிடித்தால்... வாலை ஆட்டிக் கொண்டு சாதுவாக நிற்கும். 🤣- யாழ்ப்பாண தமிழ் பெண்கள், சிங்களவர்களை திருமணம் முடிப்பது அதிகரிப்பு.
ஸ்க்றீன் ஷொட் எடுத்து வைக்கப் போகிறோம் என்பதை @தனிக்காட்டு ராஜா கேள்விப்பட்டால் அடுத்த ஆறு மாதத்துக்கு இந்தப் பக்கம் எட்டியும் பார்க்க மாட்டார். 😂- யாழ் மருதனார் மடம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் 5 பேர் காயம்!
காணொளி: 👉 https://www.facebook.com/watch?v=24805456195728930 👈 👉யாழில் பாரிய ஒரு விசித்திர விபத்து! CCTV_காணொளி‼️‼️‼️ மோட்டார் சைக்கிள் மூன்றும் துவிச்சக்கரவர்த்தி ஒன்றும் மோதி விபத்து! யாழ்ப்பாணம் - மருதனார்மடம் காங்கேசன்துறை வீதியில் இன்றையதினம் மோட்டார் சைக்கிள் மூன்றும் துவிச்சக்கரவர்த்தி ஒன்றும் மோதி விபத்து சம்பாதித்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்....வீதியில் பயணித்துக் கொண்டிருந்த துவிச்சக்கர வண்டி ஒன்று வீதியை கடக்க முற்பட்ட வேளை பின்பக்கமாக வந்த மோட்டார் சைக்கிள் அந்த துவிச்சக்கர வண்டி மீது மோதியது. பின்னர் அந்த மோட்டார் சைக்கிள் நிலைகுலைந்து பக்கம் மாறி வலது பக்கம் சென்று எதிர்த்திசையில் வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது. விபத்தில் சிக்கியவர்கள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். விபத்து சம்பவம் குறித்தான விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். நம்ம யாழ்ப்பாணம்- யாழ் மருதனார் மடம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் 5 பேர் காயம்!
யாழ் மருதனார் மடம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் 5 பேர் காயம்! யாழ்ப்பாணம் சுண்ணாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதனார் மடம் பகுதியில் இன்று துவிச்சக்கர வண்டி மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியில் மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயம் மற்றும் வெங்கடேஸ்வரர் ஆலயம் இரண்டிற்கும் இடை நடுவில் இன்று காலை 8 மணியளவில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது. முச்சக்கர வண்டியொன்று வீதியில் வைத்து திரும்ப முற்பட்ட போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று குறித்த துவிச்சக்கர வண்டி மற்றும் எதிரே வந்த மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியதில் நான்கு மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விபத்தில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுண்ணாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. Athavan Newsயாழ் மருதனார் மடம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் 5...யாழ்ப்பாணம் சுண்ணாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதனார் மடம் பகுதியில் இன்று துவிச்சக்கர வண்டி மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்துள்ளனர். யாழ்https://www.facebook.com/Athavannews/videos/1138292688361845- ஜெனீவா சென்று முறையிடப்போவதாக அர்ச்சுனா சபையில் தெரிவிப்பு!
ஜெனீவா சென்று முறையிடப்போவதாக அர்ச்சுனா சபையில் தெரிவிப்பு! நாட்டில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் தான் ஜெனீவா சென்று முறையிடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் “ஆளும் கட்சியில் யாரையும் வடக்கு மக்களுக்கு தெரியாது. அமைச்சர் சந்திரசேகர் மற்றும் இளங்குமரன் ஆகியோரையும் எங்களுக்கு தெரியாது. இருந்தாலும் வடக்கு மக்கள் உங்களுக்கு வாக்களித்தமைக்கு காரணம் இருக்கின்றது. ஒரு காலத்தில் எங்களை போலவே நீங்களும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் செய்தவர்கள். இதனாலேயே நம்மை போன்றவர்கள் என எண்ணி வடக்கு மக்கள் உங்களுக்கு வாக்களித்தனர். அத்துடன், இன்று வரை எங்களுக்காக மரணித்த ஒருவரை கடவுள் என நாடாளுமன்றத்தில் கூறிய ஒரே தமிழ் அரசியல்வாதி நான் மட்டுமே. வடக்கு கிழக்கில் குற்றச்செயல்கள் நடைபெறுகின்றன. ஆனால், அதற்கான நடவடிக்கைகள் இன்றுவரை எடுக்கப்படவில்லை. யாரும் அதற்காக கைது செய்யப்படவில்லை. ஆனால், நீங்கள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கைது செய்தீர்கள். வன்முறைகளை நாம் விரும்புவதில்லை. உங்களுடைய கட்சியை சேர்ந்த நால்வர், அரகலய காலத்தில் நாடாளுமன்றத்தை எரிக்குமாறு கூறினார்கள். ஆனால், நீங்கள் இன்று நாடாளுமன்றத்தால் வழங்கப்பட்ட வாகனங்களிலேயே பயணிக்கின்றனர். நாங்கள் கடவுச்சீட்டு அலுவலகம் கேட்கவில்லை, கிரிக்கட் மைதானம் கேட்கவில்லை. மாறாக தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வையே கேட்டோம். அதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை. இந்த நாட்டில் தமிழர்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் தொடர்பில் நான் ஜெனீவா சென்று முறையிடுவேன். அதன் பின்னர் நாட்டிற்கு வந்தவுடன் என்னை கைது செய்வதாயின் கைது செய்யுங்கள். ஆனால், நான் என்றாவது ஒரு நாள் சிங்கள மக்கள் வாழும் ஒரு தொகுதியில் நின்று தேர்தலில் போட்டியிடுவேன். அப்போது உங்கள் கட்சியில் எத்தனை குழந்தைகள் மீதம் இருக்கிறது என்பதை பார்ப்போம்”இவ்வாறு இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1446688- யாழில் பெண் நாய்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானம் - பிரதேச சபை அறிவிப்பு!
ஒரு பெட்டை நாயை பிடித்துக் கொடுத்தால்... 600 ரூபாய் என்பது, நல்ல காசு. நான் ஊரில் நின்று இருந்தால்.... ஒரு கிழமைக்கு 50 பெட்டை நாயை பிடித்துக் கொடுத்து 30,000 ரூபாய் உழைத்து இருப்பேன். 😂- நேபாளத்தில் 1,500 கைதிகள் தப்பியோட்டம்!
நேபாளத்தில் 1,500 கைதிகள் தப்பியோட்டம்! நேபாளத்தில் சமூக ஊடகத் தடைக்கு எதிராக வெடித்த இளைஞர் போராட்டங்கள், நாட்டின் அரசியல் அமைப்பில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை எதிர்ப்பு நடவடிக்கையாக, ‘ஜென் Z’ போராட்டம் எனப்படும் இயக்கத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள் வீதிகளில் குதித்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த வன்முறைகளில் இதுவரை 19 பேர் உயிரிழந்ததுடன், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கலவரங்கள் தீவிரமடைந்த நிலையில், போராட்டக்காரர்கள் நாகு சிறையை உடைத்து கைதிகளை வெளியேற்றினர். முதல் கட்டமாக சுமார் 2,000 கைதிகள் விடுவிக்கப்பட்டனர். பின்னர் மற்றொரு பகுதியில் இருந்த 1,500 கைதிகளும் சிறையிலிருந்து வெளியேறினர். பொலிஸார் தங்கள் இடங்களை விட்டு விலகியதால், கைதிகள் எளிதில் வெளியேறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கலவரங்களின் பின்னணியில், முன்னாள் துணைப் பிரதமரும் ராஷ்டிரிய சுவதந்திரக் கட்சி தலைவருமான ரபி லாமிச்சானே விடுவிக்கப்பட்டார். அவர் விடுதலையானதும் மக்களிடம் உரையாற்றி, ஊழலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர வேண்டுமென வலியுறுத்தினார். இதன் பின்னர், கடும் அழுத்தத்திற்கு இடமான நேபாளப் பிரதமர் கே.பி. ஷர்மா ஓலி ராஜினாமா செய்தார். மேலும், லாமிச்சானே தலைமையிலான RSP கட்சியைச் சேர்ந்த 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதன் மூலம் நேபாள அரசியல் நிலைமை மேலும் அலைக்கழிக்கப்படுகிறது. போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் ஊழல் அரசியல்வாதிகளை தண்டிக்க வேண்டும். கருத்துச் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் தர வேண்டும். அனைத்து கட்சிகளும் இணைந்த தேசிய அரசை அமைக்க வேண்டும். அரசியல் தலைவர்களுக்கு ஓய்வு வயது நிர்ணயிக்க வேண்டும். தப்பியோடிய கைதிகள் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1446667- யாழ்ப்பாண தமிழ் பெண்கள், சிங்களவர்களை திருமணம் முடிப்பது அதிகரிப்பு.
ரீச்சர்.... வீட்டிலை இல்லைப் போலை இருக்கு. 😂- இரசித்த.... புகைப்படங்கள்.
குருவியை விட மீன் பெரிசாக இருக்குது. சாவின் விளிம்பில்... குருவி என்று வர வேண்டும். 🤣- உலக அரங்கில் பெரியார்; ஆக்ஸ்ஃபோர்டு கருத்தரங்கமும், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த பெரியாரின் திருவுருவப் படமும்
அப்பிடியே…. பக்கிங்ஹாம் அரண்மனையிலும் சொரியாரின் சாரி… பெரியாரின் போட்டோவை மாட்டி விட்டிருக்கலாம். 😂- இந்தியாவின் 15 ஆவது துணை ஜனாதிபதியாகிறார் சி.பி. ராதாகிருஷ்ணன் !
இந்திய ஜனாதிபதியே ஒரு வேலைக்கு ஆகாத பல்லு புடுங்கின பாம்பு. அதுக்கு ஒரு துணை ஜனாதிபதி இப்ப முக்கியம் தேவைதான். 😂- சமூகவலைத்தள முடக்கத்துக்கு எதிராக நேபாளத்தில் வெடித்த 'Gen Z' இளைஞர்கள் போராட்டம்
- அரசமாளிகையில் இருந்து வெளியேறுகிறார் மஹிந்த!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.