Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. 12 மணித்தியாலங்களில் 04 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவு! நாட்டில் கடந்த 12 மணித்தியாலங்களில் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற 4 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மஹாவத்தை, கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்றிரவு ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிசூட்டில் அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேவேளை, பஞ்சிகாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்நிலையில் , நீர்கொழும்பு பகுதியில் ஒரு வீட்டின் மீது அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகளால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்ட நிலையில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதேவேளை, பாணந்துறை, அலுபோமுல்ல பகுதியில் ஒரு கடையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை. https://athavannews.com/2025/1446263
  2. எல்ல – வெல்லவாய பேருந்து விபத்து- வெளிவந்த உண்மைகள்! எல்ல – வெல்லவாய பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்தானது, கடந்த 2023ஆம் ஆண்டு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் பதிவு நீக்கம் செய்யப்பட்ட பேருந்து என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். மேலும் விபத்துக்களைக் குறைப்பதற்கு வீதி மேம்பாட்டு ஆணைக்குழு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கிடையில் விபத்துக்குள்ளான பேருந்தை ஆய்வு செய்வதற்கு மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் ஒரு குழுவினர் இன்று அப்பகுதிக்கு சென்றுள்ளது. மேலும் வீதி பாதுகாப்பு குறித்த திட்டத்தில் இணைக்கப்பட்ட போக்குவரத்து மருத்துவ சபை மற்றும் போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் குழுவும் இன்று எல்ல பகுதிக்குச் சென்று விபத்துக்குள்ளான பேருந்தை ஆய்வு செய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் நேற்று முன்தினம் (04) இரவு நடந்த கோர பேருந்து விபத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் வரை காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் நிலைமை தற்போது சீராகி வருவதாகவும், அவர்களில் யாருக்கும் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் வைத்தியசாலையின் வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1446248
  3. ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்காமல் தவிர்க்க முடிவு! ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்காமல் தவிர்க்க முடிவு செய்துள்ளாகவும் அவருக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்கா செல்வதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையில் 80வது பொதுச்சபைக் கூட்டம் எதிர்வரும் 9ஆம் திகதி நியுயோர்க்கில் ஆரம்பமாகிற நிலையில் கூட்டத்தொடரில் உயர்மட்ட பொது விவாதம் 23ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நடக்க உள்ளது. முதல் பாரம்பரிய பேச்சாளரான பிரேசில் தலைவர் பேச்சை தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் உறையாற்றவுள்ளார். இதேவேளை, இந்த பொதுச்சபைக் கூட்டத்தில் இந்தியாவும் பங்கேற்கிறது. அமெரிக்காவின் வரி விதிப்பால் அந்நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டில் இந்தியா உள்ளது. இந் நிலையில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றால் அங்கு அமெரிக்க ஜனதிபதியை சந்திக்க நேரிடும். எனவே, வரி விதிப்பு விவகாரத்தில் இன்னமும் தீர்வு காணப்படாத நிலையில் பிரதமர் மோடி ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. https://athavannews.com/2025/1446258
  4. பிரித்தானிய துணைப் பிரதமர் இராஜினாமா! பிரித்தானிய துணைப் பிரதமர் ஏஞ்சலா ரெய்னர்(Angela Rayner) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனது சொத்துக்களுக்கான வரிகளைக் குறைவாகச் செலுத்திய குற்றச்சாட்டை அவர் ஏற்றுக்கொண்ட நிலையில் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த வாரம் தனது பொருளாதார ஆலோசனையை வலுப்படுத்த பிரதமரின் அலுவலகத்தில் பணிபுரியும் ஆலோசகர்கள் குழு மறுவடிவமைக்கப்பட்டது. இந்நிலையில், ஒரு ஆலோசகரின் மறுசீரமைப்பு எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரித்தானியாவின் சுயாதீன ஆலோசகர் ரெய்னர் சரியான வரி செலுத்தத் தவறியதன் மூலம் விதிமுறைகளை மீறியதாக தீர்ப்பளித்த பின்னர் , அவர் தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1446250
  5. காலத்தால் அழியாத பாடல்களைத் தந்த கவிஞர் பூவை செங்குட்டுவன் அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
  6. கருணாநிதி பேரூந்து நிலையம் என்று வைத்துக் கொண்டு… பஸ்சுக்கு ரிக்கற் எடுக்கச் சொன்னால், வடக்கனுக்கு கோபம் வரும் தானே. கருணாநிதி ரயிலுக்கே ரிக்கற் எடுக்காமல் கக்கூசில் ஒளித்து பயணம் செய்யும் ஓசி பிரயாணி. அதே வழியை… வடக்கன்சும் பின்பற்றுவதில் தவறு இல்லையே. 😂
  7. கீழே உள்ள செய்தியையும் பாருங்கள் ஈழப்பிரியன். எவ்வளவு அநியாயம் எல்லாம் செய்திருக்கிறார்கள். ☹️ செம்மணியில் 2 எலும்புக்கூட்டுக்கு குறுக்காக மற்றொரு எலும்புக்கூடு!! மொத்த என்புக்கூடுகளின் எண்ணிக்கை 231!! Newtamils.com
  8. செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளின் போது நேற்றைய தினம் வியாழக்கிழமை குவியலாக எட்டு மனித என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் போது, இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அவற்றுள் ஒரு மனித என்பு கூட்டு தொகுதி கால்கள் மடிக்கப்பட்டு அமர்ந்த (சப்பாணி) நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. Babu Babugi
  9. Jaffna International Cricket Stadium, யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதானம் இப்படித்தான் அமையப்போகிறது. 3D அமைப்பில் திட்டமிடப்பட்டிருக்கும் மைதானம் மற்றும் புற அமைப்பு. Vaanam.lk
  10. அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி விடுதலை நீர் சேகரிக்கும் நிகழ்வு. சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, இலங்கையின் வடக்கு கிழக்கில், விடுதலை நீர் சேகரிக்கும் நிகழ்வு தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குறித்த நிகழ்வு தற்போது விரிவுபடுத்தப்பட்டு, அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வலுசேர்க்கும் முகமாகப் புலம்பெயர் தேசங்களிலிருந்தும் இந்த விடுதலை நீர் சேகரிப்பு இடம்பெற்று வருகின்றது. இதனடிப்படையில் நேற்றையதினம், காசி உட்பட இந்தியாவின் பல தீர்த்தங்களிலிருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு விடுதலை நீர் சேகரிப்பு பானையில் சேமிக்கப்பட்டது. இந்த நீர் சேகரிப்பு நிகழ்வு, நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் நடைபெற்றது. இந்த விடுதலை நீர் சேகரிப்பு நிகழ்வில் வேலன் சுவாமிகள், காணாமல் ஆக்கப்பட்டோரது சங்கத்தினர், அரசியல் கைதிகளின் உறவுகள், குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினர், தென்னிந்தியாவிலிருந்து வருகை தந்த உறவுகள், யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1446212
  11. 51 உத்தியோகப்பூர்வ இல்லங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை! முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட 51 உத்தியோகப்பூர்வ இல்லங்களை பறிமுதல் செய்து அவற்றை பொருளாதார செயற்பாடுகளுக்கு பயன்படுத்த எதிர்ப்பார்த்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கறுவாத்தோட்டம் புதிய பொலிஸ் நிலைய கட்டிட திறப்புவிழாவில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை குறிப்பிட்டார் இதேவேளை நாட்டில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை நடத்திச் செல்வதற்காக இரண்டு பாக்கிஸ்தானியர்கள் நாட்டுக்கு வரவழைக்கப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். இது குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவிக்கையில் ”இந்த நாட்டில் மிக நீண்டகாலமாக குற்றச் செயல்களுடனான கலாச்சாரம் காணப்பட்டது. அந்த கலாச்சாரத்தால் தோற்றம் பெற்ற செயற்பாட்டாளர்களையே அண்மையில் கைது செய்தோம். நாட்டில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை நடத்திச் செல்வதற்காக இரண்டு பாக்கிஸ்தானியர்கள் நாட்டுக்கு வரவழைக்கப்பட்டிருந்ததாக விசாரணைகளின் போது வெளிவந்துள்ளது. தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையிலான தொடர்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் மேலும் தீவிரமாக ஆராயப்பட்டு அதற்குரிய நடவடிக்கைகள் சட்டத்தின் ஊடாக எடுக்கப்படும். நாட்டில் சட்டவாட்சியை உறுதிப்படுத்துவதற்காக பொலிஸாருக்குரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட 51 உத்தியோகப்பூர்வ இல்லங்களை பறிமுதல் செய்து அவற்றை பொருளாதார செயற்பாடுகளுக்கு பயன்படுத்த எதிர்ப்பார்த்துள்ளோம். இவற்றை பொருளாதார தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ஏற்கனவே தெரிவித்திருந்தார். அரச நிறுவனங்களை நடத்திச் செல்வதற்கும் பொருத்தமான இடங்கள் தேவைப்படுகின்றன” இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1446194
  12. எல்ல பேருந்து விபத்து; உயிர் பிழைத்த பயணியின் திகில் அனுபவம்! எல்ல பேருந்து விபத்தில் உயிர் பிழைத்த பயணி ஒருவர், சம்பவம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு சாரதி பிரேக் செயலிழந்ததாகக் கூறியதாகத் தெரிவித்துள்ளார். குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனருடன் உரையாடலில் ஈடுபட்டதாகவும், அப்போது ஒரு வளைவில் செல்லும்போது பிரேக் செயலிழந்ததாக சாரதி தெரிவித்ததாகவும் பாதிக்கப்பட்ட நபர் கூறியுள்ளார். சாரதியின் கூற்றைக் கேட்டு பேருந்து நடத்துனரும், ஏனைய சில பயணிகளும் சிரித்ததாகவும், அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அவர் மேலும் கூறினார். எனினும், இரண்டாவது வளைவு ஒன்றில் பேருந்து பயணித்த போது பிரேக் செயலிழந்துள்ளதை உண்மையில் நாங்கள் உணர்ந்தோம். பின்னர் பேருந்து எதிர் திசையில் வந்த ஒரு வாகனத்துடன் மோதியது, அதன் பின்னர் அது பள்ளத்தாக்கில் கவிழந்து விபத்துக்குள்ளானது. சுமார் ஒரு மணி நேரம் மயக்கமடைந்திருந்த நான், ஒரு குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு விழித்தேன். என்னால் நகர முடியவில்லை. பின்னர், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் வந்து எங்களை மீட்டனர் என்று குறித்த பயணி கூறினார். பாதிக்கப்பட்டவர் சிகிச்சை பெற்று வரும் பதுளை வைத்தியசாலையில் இருந்து ஊடகங்களுக்கு அளித்த செவ்வியின் போது இந்த தகவலை தெரிவித்தார். நேற்று இரவு வெல்லவாய நோக்கிச் சென்ற பேருந்து ஜீப் மீது மோதி 1000 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மொத்தம் 15 பேர் உயிரிழந்தனர், 18 பேர் காயமடைந்தனர். விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் சுமார் 30 பேர் இருந்தனர். 06 ஆண்கள் மற்றும் 09 பெண்கள் சம்பவத்தில் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களில் 6 ஆண்கள், 5 பெண்கள், 3 ஆண் குழந்தைகள் மற்றும் 2 பெண் குழந்தைகள் அடங்குவர். தங்காலையிலிருந்து எல்லவுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. முப்படையினர் பொது மக்களின் உதவியுடன் மீட்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1446202
  13. அரச வைத்திய சாலையில் எலி கடித்ததில் 2 குழந்தைகள் உயிரிழப்பு: ராகுல் காந்தி கண்டனம். மத்திய பிரதேசத்தில் உள்ள மகாராஜா யஷ்வந்த்ராவ் அரச வைத்திய சாலையில் எலி கடித்ததில் இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இது குறித்து மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “மத்தியப் பிரதேசத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையில் எலி கடித்து இரண்டு பிறந்த குழந்தைகள் இறந்தனர். இது தற்செயல் நிகழ்வு அல்ல, இது முழுமையான கொலை. இந்த சம்பவம் மிகவும் கொடூரமானது, மனிதாபிமானமற்றது மற்றும் அர்த்தமற்றது. இதைப் பற்றிக் கேள்விப்பட்டாலே முதுகுத்தண்டில் நடுக்கம் ஏற்படுகிறது. சுகாதாரத் துறை வேண்டுமென்றே தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்போது சிகிச்சை பணக்காரர்களுக்கு மட்டுமே. ஏழைகளுக்கு, அரசு மருத்துவமனைகள் இனி உயிர் காக்கும் இடங்களாக இல்லை, ஆனால் மரணக் குகைகளாக மாறிவிட்டன. பிரதமர் மோடியும் மத்தியப் பிரதேச முதல்வரும் வெட்கித் தலைகுனிய வேண்டும். உங்கள் அரசாங்கம் நாட்டின் மில்லியன் கணக்கான ஏழைகளின் சுகாதார உரிமையைப் பறித்துவிட்டது. இப்போது குழந்தைகள் அவர்களின் தாய்மார்களின் மடியில் இருந்து பறிக்கப்படுகிறார்கள்” என்று ராகுல் கடுமையாக சாடினார். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க இந்தூர் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். https://athavannews.com/2025/1446178
  14. எல்ல பேருந்து விபத்து; உயிரிழந்தவர்களின் தொகை 15 ஆக உயர்வு! எல்லா-வெல்லவாய பிரதான வீதியின் 24 ஆவது கி.மீ கம்பத்துக்கு அருகிலுள்ள பள்ளத்தாக்கில் நேற்றிரவு (04) பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆறு ஆண்களும், ஒன்பது பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். அதேநேரம் இந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட குறைந்தது 18 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 11 ஆண்கள் மற்றும் ஏழு பெண்கள் அடங்குவதாகவும், அவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். தங்காலை நகராட்சி சபையைச் சேர்ந்த ஊழியர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து, வீதியை விட்டு விலகி சுமார் 500 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவம் நடந்தபோது பேருந்தில் சுமார் 30 பேர் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://athavannews.com/2025/1446138
  15. படகு மூழ்கியதில் 60 பேர் உயிரிழப்பு ; நைஜீரியாவில் சோகம்! வட மத்திய நைஜீரியாவில் 80 பேரை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில் 60 பேர் உயிரிழந்தனர். நைஜீரியாவின் வட-மத்திய நைஜர் மாநிலத்தில் பயணிகள் 80 பேரை ஏற்றிச் சென்ற படகே இவ்வாறு விபத்துக்குள்ளானது. மலாலே மாவட்டத்தில் உள்ள துங்கன் சுலேவிலிருந்து துக்காவுக்கு துக்க நிகழ்ச்சிக்கு சென்ற போது குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 60 பேர் உயிரிழந்துள்ளதுடன் பத்து பேர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் இன்னும் தேடப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த படகு அதிக சுமையுடன் பயணித்தமையே இவ் விபத்திற்கான காரணம் என்பது விசாரணையில் தெரியவந்தது. நைஜீரியாவில்,அண்மைக்காலமாக படகு விபத்துக்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பித்தக்கது. https://athavannews.com/2025/1446088
  16. வணக்கம் ரதன், வாங்கோ. 🙏 உங்களை அன்புடன் யாழ். களம் வரவேற்கின்றது. 🙂
  17. இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்க அனுமதி. 2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதிக்கு முன் உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்து, அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை தமிழர்கள் இனி சட்டவிரோத குடியேறிகள் அல்ல எனவும், சமீபத்தில் அமுல்படுத்தப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் உள்ள தண்டனை விதிகளிலிருந்தும் இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை விட்டு வெளியேறி இந்தியாவின் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் சுதந்திரமாக இந்தியாவில் தங்கியிருப்பதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1446093
  18. நாங்க என்ன செய்யுறது.? புரட்டாசி மாசம் இதுகளை தேடி, ஊரிலை உள்ள நாய்கள் வளவுக்குள்ளையும், வேலிகளுக்கு இடையிலும் செருகுப் பட்டுக் கொண்டு நிற்குதுகள். சரி... அதுகள் சந்தோசமாக இருந்திட்டுப் போகட்டுமன் என்று பார்த்தால், 4 மாதம் கழித்து அதுகள்... வத வத என்று பத்து, பன்னிரண்டு என்று குட்டியளை பெத்து தள்ளுது. இதுகளாலை மனுஷர் ஊருக்குள்ளை நடமாட முடியாமல் கிடக்கு. 😂
  19. தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் தேர் உற்சவம்! வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் தேர் உற்சவம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. பஞ்ச கோபுரங்களைக் கொண்ட தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் 2025 மகோற்சவ பெருவிழாவில் இன்று காலை பக்தர்கள் புடை சூழ இனிதே இடம்பெற்றது. இதன்போது அம்பாளுக்கு விசேட அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்று வசந்த மண்டபத்தில் விநாயகப் பெருமான் துர்க்கை அம்மன் முருகப்பெருமான் ஆகியோருக்கு சிறப்பு பூசைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து தெல்லிப்பழை துர்க்கை அம்மன் வசந்த மண்டபத்தில் இருந்து வெளி வீதி எழுந்தருளி தேரிலே ஆரோகணித்து மங்கள வாத்தியங்கள் முழங்க பிராமண ஆச்சாரியர்களின் வேத மந்திரங்கள் ஒலிக்க பக்தர்களுக்கு அருள் காட்சி அளித்தார். அரோகரா கோசத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ரத உற்சவம் இனிதே நடைபெற்றது. 12 நாட்களைகொண்ட இவ்வாலய மகோற்சவத்தில் கடந்த 25 திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பான மகோற்சவத்தில் 10 நாட்கள் சிறப்பான திருவிழாக்கள் தினமும் சிறப்பாக நடைபெற்ற நிலையில் 11 நாளான இன்று ரத உற்சவமும் நாளை 12-ஆம் நாள் திருவிருவிழாவாக தீர்த்த உற்சவமும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1446047
  20. மோட்டார் சைக்கிளில் முன்னுக்கு வாறவரை... "ஜிம்மியும்", இரண்டாவதாக வாறவரை... "பிரவுணியும்" திரத்திக் கொண்டு போய் அடுத்த சந்தியிலை விடுங்க. நாங்கள் மாநாடு நடத்தும் போது ... இவங்கள் ஏன், குறுக்காலை வாறாங்கள். 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.