Everything posted by தமிழ் சிறி
-
மித்தேனியவில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனம் ஐஸ் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பொருள் என உறுதி!
மித்தேனியவில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனம் ஐஸ் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பொருள் என உறுதி! மித்தேனியவில் உள்ள ஒரு நிலத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனப் பொருள், மெத்தம்பேட்டமைன் (ICE) உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பொருள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மித்தேனியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனங்கள் குறித்து தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை (NDDCB) தனது அறிக்கையை பொலிஸாரிடம் சமர்ப்பித்த பின்னர் இது தெரியவந்தது. அதன்படி, மித்தேனியாவிலிருந்து எடுக்கப்பட்ட 20 மாதிரிகளில் 17 மாதிரிகளில் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டதாக NDDCB இன் அறிக்கை வெளிப்படுத்தியது. செப்டம்பர் 5 ஆம் திகதி, மித்தேனியாவின் தலாவாவில் உள்ள ஒரு வீட்டில் ஒரு தொகுதி இரசாயனப் பொருட்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இலங்கையில் ‘ஐஸ்’ உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்பட்ட இந்த இரசாயனங்கள், மேற்கு வடக்கு குற்றப்பிரிவு நடத்திய நடவடிக்கையின் போது புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. கண்டுபிடிக்கப்பட்ட மொத்த இரசாயனங்களின் அளவு சுமார் 50,000 கிலோ கிராம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் அங்குணுகொலபெலஸ்ஸ பிரதேச சபை உறுப்பினர் பியல் மனம்பேரி கைது செய்யப்பட்டார். பொலிஸ் விசாரணையில், பியால் மனம்பேரி மற்றும் அவரது சகோதரர் இருவரும் இரசாயனங்களை மறைப்பதில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் அவர்கள் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் அண்மையில் பல கும்பல் உறுப்பினர்களுடன் கைது செய்யப்பட்ட பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கெஹல்பத்தர பத்மேவின் நெருங்கிய நண்பர் என்பதும் தெரியவந்தது. இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட ‘பேக்கோ சமன்’ என்று அழைக்கப்படும் சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ‘கெஹல்பத்தர பத்மே’ ‘ஐஸ்’ உற்பத்தியில் பயன்படுத்தப்படும் இரசாயனங்களை நாட்டிற்கு இறக்குமதி செய்ததாக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. சந்தேக நபரான ‘கெஹெல்பத்தர பத்மே’ சிஐடி காவலில் இருக்கும் போது நடத்தப்பட்ட விசாரணைகளின் போது இந்த தகவல் வெளிப்பட்டது. மேலும் விசாரணையின் மூலம் பெறப்பட்ட தகவல்களின்படி, சந்தேக நபர் இந்த நடவடிக்கையில் ரூ. 4 மில்லியனுக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளதாகவும், அதை மேற்கொள்வதற்காக நுவரெலியாவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. போதைப்பொருள் உற்பத்திக்குத் தேவையான சுமார் 2,000 கிலோகிராம் இரசாயனப் பொருட்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டதாகவும் சந்தேக நபர் வெளிப்படுத்தியிருந்தார். https://athavannews.com/2025/1447100
-
210 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகள் மீட்பு!
210 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகள் மீட்பு! கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று (14) காலை 210 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் விமான நிலைய தலைமை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சுங்க அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய சந்தேக நபர், சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு சேவைகள் அமைப்பின் தலைவராகவும் உள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. இவரிடமிருந்து மீட்கப்பட்ட தங்க பிஸ்கட்டுகளின் எடை 5.94 கிலோ கிராம் ஆகும். விமான நிலையத்திலிருந்து ஏற்றுமதி செய்வதற்காக ஒரு குறிப்பிட்ட நபர் இந்த தங்க பிஸ்கட் கையிருப்பை அவரிடம் ஒப்படைத்திருக்கலாம் என்றும், சந்தேக நபர் நீண்ட காலமாக இந்தக் கடத்தலை மேற்கொண்டு வந்திருக்கலாம் என்றும் சுங்க அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். மேலும், கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் சந்தேக நபரை காவலில் எடுத்துள்ளனர். சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளையும் அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1447114
-
குடியேற்றத்திற்கு எதிராக லண்டனில் மிகப்பெரிய போராட்டம்!
குடியேற்றத்திற்கு எதிராக லண்டனில் மிகப்பெரிய போராட்டம்! மத்திய லண்டன் சனிக்கிழமையன்று (14) அண்மைய பிரித்தானிய வரலாற்றில் மிகப்பெரிய வலதுசாரி ஆர்ப்பாட்டங்களில் ஒன்றைக் கண்டது. குடியேற்ற எதிர்ப்பு ஆர்வலர் டோமி ரொபின்சனின் பதாகையின் கீழ் 100,000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் அணிவகுத்துச் சென்றனர். ஆர்ப்பாட்டங்களின் போது பல அதிகாரிகள் தாக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். “Unite the Kingdom” அணிவகுப்பு என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வில் சுமார் 110,000 பேர் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், போராட்டத்தின் வான்வழி காட்சிகள் மத்திய லண்டன் வீதிகளின் சில கிலோ மீட்டர்கள் போராட்டக்காரர்களால் நிரம்பி வழிவதைக் காட்டியது. இது அதிகாரிகளால் எண்ணிக்கையை குறைத்து மதிப்பிட்டிருக்கலாம் என்பதைக் குறிக்கிறது. நடந்து வரும் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் 26 அதிகாரிகள் காயமடைந்ததாகவும், அதில் நான்கு பேர் படுகாயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக மேலதிக படைகள் வரவழைக்கப்பட்டன. அதிகாரிகள் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்திருந்தனர் மற்றும் சட்ட ஒழுங்கை மீட்டெடுக்க உதவும் வகையில் பொருத்தப்பட்ட பிரிவுகளின் ஆதரவுடன் செயல்பட்டனர். ஆரம்ப கட்ட தகவலின்படி மொத்தம் 25 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த அணிவகுப்பு இங்கிலாந்தில் மிகவும் பரபரப்பான கோடையின் உச்சக்கட்டத்தை அடையாளப்படுத்தியது. புலம்பெயர்ந்தோர் வசிக்கும் ஹோட்டல்களுக்கு வெளியே போராட்டங்களால் குறிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரித்தானியாவின் யூனியன் கொடியையும், இங்கிலாந்தின் சிவப்பு மற்றும் வெள்ளை செயிண்ட் ஜார்ஜ் சிலுவையையும் ஏந்திச் சென்றனர். போராட்டக்காரர்கள் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை விமர்சிக்கும் கோஷங்களை எழுப்பினர் மற்றும் “அவர்களை வீட்டிற்கு அனுப்புங்கள்” என்று கூறும் பதாகைகளை ஏந்திச் சென்றனர். பிரித்தானியாவில் குடியேற்றம் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் பிரச்சினையாக மாறியுள்ளது. னெனில் நாடு சாதனை எண்ணிக்கையிலான புகலிடக் கோரிக்கைகளை எதிர்கொள்கிறது. இந்த ஆண்டு இதுவரை 28,000க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் கால்வாயைக் கடந்து சிறிய படகுகள் மூலமாக அங்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2025/1447097
-
ரஷ்யாவில் 7.7 ரிச்டர் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை
ரஷ்யாவில் 7.7 ரிச்டர் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை. ரஷ்யாவின் கம்சட்கா கரையோரப் பகுதியில் இன்று (13) 7.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து அப் பகுதிக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 7.7 ரிச்டர் அளவில், 39.5 கிலோமீட்டர் ஆழத்தில் இந் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் கம்சட்காவின் சில பகுதிகளில் சுமார் 4 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் செவெரோ, குரில்ஸ்க் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக அவ்விடங்களிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். https://athavannews.com/2025/1447050
-
விசேட சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் நிமலரஞ்சன் காலமானார்!
ஆழ்ந்த அனுதாபங்கள். 🙏
-
திருச்சியில் தொண்டர்கள் வெள்ளத்தில் விஜய்யின் பிரசாரம்
போகிற போக்கை பார்க்க… விஜய் தான், அடுத்த முதலமைச்சர் போல் உள்ளது. ஸ்ராலின், உதயநிதி, சபரீசன் எல்லாம் அடுத்த பத்து வருசத்துக்கு எம். ஜீ. ஆர்., ஜெயலலிதா காலத்தில் கருணாநிதி கூப்பிலை உட்கார்ந்து இருந்த மாதிரி வீட்டிலை குந்தி இருக்கப் போகிறார்கள் போலுள்ளது. அவர்கள் சேர்த்த சொத்து இன்னும் 50 தலைமுறைக்கு காணும் என்ற படியால் ஆறுதலாக வீட்டில் காலை நீட்டிக் கொண்டு இருந்து சாப்பிடட்டும். 😂 வருங்கால முதல்வர், ஈழத்தின் மருமகன் விஜய் வாழ்க. 💪 👍🏼 🤝 🥰 🙏🏽
-
திருச்சியில் தொண்டர்கள் வெள்ளத்தில் விஜய்யின் பிரசாரம்
- அரசமாளிகையில் இருந்து வெளியேறுகிறார் மஹிந்த!
- கருத்து படங்கள்
- தாய்நாட்டுக்கு எவரேனும் துரோகமிழைத்தால் நான் மீண்டும் எழுந்து நிற்பேன்; சட்டத்திற்கும் என் மக்களுக்கும் முன்னால் மட்டுமே தலை வணங்குவேன் - மஹிந்த
- ஈழத்தமிழர் தொடர்பாக வெளியான பொய்களால் குழப்பத்தில் சர்வதேசம்!
பெருமாள் அவர்கள் நல்லூர்த் திருவிழாவுக்கு போய் இப்பதான் வந்திருக்கின்றார். 😂- தாய்நாட்டுக்கு எவரேனும் துரோகமிழைத்தால் நான் மீண்டும் எழுந்து நிற்பேன்; சட்டத்திற்கும் என் மக்களுக்கும் முன்னால் மட்டுமே தலை வணங்குவேன் - மஹிந்த
எல்லோருக்கும் விசாரணை, கைது என்ற பயம் வந்தவுடன்… நோயும் தொற்றிக் கொண்டு குளிரூட்டப் பட்ட வைத்தியசாலைகளில் இருக்க திட்டம் போடுகின்றார்கள். வருடக் கணக்கில் சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு குரல் கொடுக்காத சுமந்திரனும் சிங்கள அரசியல்வாதிகள் கைது என்றவுடன் முந்திரிக் கொட்டை மாதிரி சட்ட நுணுக்கம் பேசும் சிங்களப் பாசத்தை என்னவென்று சொல்வது. இந்த சீத்துவத்தில்…. சுமந்திரனுக்கு வட மாகாண முதலமைச்சர் கனவும் இருக்குது. பிய்ந்த செருப்பை… சாணியில் முக்கி எடுத்து… முதுகில் நாலு சாத்து, சாத்த… மக்கள் தயாராகவே இருக்கின்றார்கள். 😂 ஹ்ம்ம்… புத்த பிக்குகளை வழிக்கு கொண்டு வர “அரகலய” மாதிரி, அண்மையில் நேபாளத்தில் வெற்றியளித்த ஒரு புரட்சி மாதிரி ஏதாவது ஒரு மக்கள் புரட்சி ஏற்பட்டால்தான் உண்டு. ஆனால் அதுகளையும் தங்கள் வசதிக்கு ஏற்ற மாதிரி திசை திருப்ப…. இந்தியா, சீனா, அமெரிக்கா என்று பின் புலத்தில் பல மறை கரங்கள் உண்டு.- இரசித்த.... புகைப்படங்கள்.
அவரின் நடை, உடை பாவனையை பார்க்கும் போது…. தோட்டக்காரர் போல் தெரியவில்லை. 😂 🤣 சுமந்திரன்…. வயல் உழுத மாதிரி இருக்கு. 😂😂😂😂😂- தாய்நாட்டுக்கு எவரேனும் துரோகமிழைத்தால் நான் மீண்டும் எழுந்து நிற்பேன்; சட்டத்திற்கும் என் மக்களுக்கும் முன்னால் மட்டுமே தலை வணங்குவேன் - மஹிந்த
ஶ்ரீலங்காவில்… முன்னாள் ஜனாதிபதி ரணிலை விளக்கமறியலில் வைத்தால் இல்லாத வருத்தம் எல்லாம் சொல்லி ஆஸ்பத்திரியில் போய் படுக்கின்றார். மற்றைய முன்னாள் ஜனாதிபதிகள் அரசுக்கு எதிராக ஒன்று சேர்ந்து குரல் எழுப்புகின்றார்கள். மக்களும் நீதிமன்றம் முன் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்கின்றார்கள். போதாக்குறைக்கு… சுத்துமாத்து சுமந்திரனும் தனது நண்பர் ரணிலை கைது செய்தமைக்கு கண்டனம் தெரிவிக்கின்றார். ரணில் வெளியில் வந்தவுடன் வருத்தம் எல்லாம் பறந்து பழைய மாதிரி அரசியல் செய்கின்றார். மகிந்தவின்…. அரச வீட்டை சட்டப்படி காலி செய்யச் சொன்னவுடன்…. ஏதோ சொத்து சுகம் இல்லாதவன் பிளாட்பாரத்தில் படுப்பது மாதிரி… புலம்பி அரசை மிரட்டுகின்றார்கள். இவர்கள் செய்த கொலை, கொள்ளைகள், பாதாள உலக நடவடிக்கைகளை மக்கள் மறந்து புனிதர் பட்டம் கொடுக்க முனைகிறார்கள். இப்படிப்படிப் பட்ட…. உணர்ச்சி அரசியலில் ஈடுபடும் முட்டாள் மக்களும், புத்த பிக்குகளும் உள்ள நாட்டில் ஆரோக்கியமான அரசியலை எதிர்பார்ப்பது சிரமம் போலுள்ளது.- அனைத்து போக்குவரத்து பொலிஸாருக்கும் உடலில் அணியக்கூடிய கமராக்கள்
லஞ்சம் ஊழலைத் தடுக்க போக்குவரத்து பொலிசாரின் உடலில் கமரா அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாடு முழுவதும் உள்ள அனைத்து போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் உடலில் அணியக்கூடியெ கெமராக்கள் வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்க, அதிகாரிகளின் பொறுப்பை உறுதி செய்வதையும், ஊழலைத் தடுப்பதற்கும், வெளிப்படையாக தங்கள் கடமைகளைச் செய்வதற்கான வாய்ப்பை பொலிஸாருக்கு வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். சில சாரதிகள் தங்கள் தவறுகளை மறைக்க அதிகாரிகள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் மற்றும் அதிகாரிகள் செய்யக்கூடிய தவறுகள் அனைத்தும் இந்த கெமராகக்ளில் பதிவு செய்யப்படும் என்றும், அனைவரின் பொறுப்புணர்வையும் உறுதி செய்யும் என்றும் பேச்சாளர் தெரிவித்துள்ளார். Uduppiddy News- இரசித்த.... புகைப்படங்கள்.
பார்த்தேன் ஈழப்பிரியன். அழகிய காட்சி. 🙂- இனி பாலஸ்தீன நாடு கிடையாது : அந்த நிலம் எங்களுடையது - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
இனிமேல் பாலஸ்தீனம் என்ற எதுவும் கிடையாது! இனி பாலஸ்தீன நாடு என்று எதுவும் கிடையாது எனவும், அந்த நிலம் தங்களுக்கே சொந்தமானது எனவும் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் மேலும் இஸ்ரேலிய குடியேற்றத்தை விரிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய E1 குடியேற்ற விரிவாக்க திட்டத்தில் நேற்று கையெழுத்திட்டதன் பின்னர் ஊடகங்களை சந்தித்து கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்””எங்கள் வாக்குறுதிகள் நிறைவேறி வருகின்றன. இனி பாலஸ்தீன நாடு என்றவொன்று இல்லை. இந்த நிலம் எங்களுடையது மட்டுமே. இங்கு இன்னும் ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்படும். நமது கலாச்சாரம், நிலம் பாதுகாக்கப்படும். மேற்குக் கரையின் மக்கள் தொகை இரட்டிப்பாகும். இங்கு பல சிறந்த விஷயங்கள் நடக்கும்” என்று கூறினார். இஸ்ரேலில் குடியேறிகளுக்கு 3,000 புதிய வீடுகளைக் கட்டுவதற்கான திட்டமே E1 ஆகும். மேற்குக் கரையின் மாலே அடுமிம் பகுதியில் உள்ள குடியிருப்புகளை ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமுடன் இணைக்கும் இந்தத் திட்டம், கிழக்கு ஜெருசலேமிலிருந்து உள்ள பாலஸ்தீனியர்களிடமிருந்து மேற்குக் கரையை முற்றிலுமாகத் துண்டிக்கும். சர்வதேச அழுத்தத்தால் பல ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த E-1 திட்ட பணிகள் கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கியது. பாலஸ்தீனியர்களுக்காக பிரத்தியேகமாக வடக்கு மற்றும் தெற்கு மேற்குக் கரைகளை இணைக்கும் சாலையை அமைக்கும் திட்டத்தை இஸ்ரேல் இதன் மூலம் தொடங்கியது. இது பாலஸ்தீனியர்கள் பிரதான நெடுஞ்சாலையில் நுழைவதைத் தடுக்கும். தற்போதைய நிலவரப்படி, மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் உள்ள 300 சட்டவிரோத குடியிருப்புகளில் சுமார் 700,000 இஸ்ரேலிய குடியேறிகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1446977- கருத்து படங்கள்
- அரசமாளிகையில் இருந்து வெளியேறுகிறார் மஹிந்த!
- பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 72 பேருக்கு எதிராக சிவப்பு அறிவித்தல்!
பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 72 பேருக்கு எதிராக சிவப்பு அறிவித்தல்! நாட்டில் இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள நிலையில் பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 72 பேருக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்துள்ளதாவது” ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போதும் நாட்டுக்குள் வரும் போதும் அவர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்வதற்கு விசேட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள 556 பேரை தொடர்ச்சியாக கண்காணிப்பதற்கு விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நாட்டில் ஏதேனும் பகுதியில் குற்றச்செயல்கள் இடம்பெற்றால் துரிதரகமாக செயற்படுவதற்கு சகல பொலிஸ் நிலையங்களில் பொறுப்பதிகாரிகள் மற்றும் ஏனைய பாதுகாப்பு தரப்பினரை ஒன்றிணைந்து வட்சப் செயலி ஊடாக விசேட குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புக்கள் சோதனை சாவடிகள் போடப்பட்டு வாகனங்கள் சோதிக்கப்படுகின்றன. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வெளிநாடுகளில் பதுங்கியுள்ளவர்களை கைது செய்வதற்கு இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 72 பேருக்கு எதிராக சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாகவே அண்மையில் இந்தோனேசியாவில் பிரதான நிலை போதைப்பொருள் வர்த்தகர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் இதுவரையான காலப்பகுதியில் வெளிநாடுகளில் இருந்து 11 பேர் சிவப்பு பிடியாணை ஊடாக கைது செய்யப்பட்டு நாட்டுக் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 105 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளதுடன், இச்சம்பவங்களுடன் தொடர்புடைய 34 துப்பாக்கிதாரிகளும், ஒத்தாசை வழங்கியவர்கள் உட்பட 322 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் ரி56 ரக துப்பாக்கிகள் 58 உட்பட 1698 துப்பாக்கி மற்றும் ஏனைய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பாதாள குழுக்களின் உறுப்பினர்கள் டுபாய், இத்தாலி, பிரான்ஸ், சுவிஸ்ர்லாந்து, கனடா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இரகசியமான முறையில் பதுங்கியுள்ளார்கள். இவர்களை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பாதுகாப்பு, பாதுகாப்பு அமைச்சு, மற்றும் வெளிவிவகாரத்துறை அமைச்சு கூட்டாக இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள குழுக்களுக்கும் கடந்தகால அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அரசியல்வாதிகளுக்கும் இடையில் தொடர்புண்டு என்பது குற்றப்புலனாய்வு பிரிவின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்குரிய விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைவாக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களுக்கமைய கம்பஹா பகுதியில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் மல்லாவி பாலைநகர் பகுதியில் இராணுவ அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகள் தீவிரமான முறையில் முன்னெடுக்கப்படுகிறது. பாதாள குழுக்களுடன் தொடர்புடைய எவரும் தப்பித்துச் செல்ல நாம் இடமளிக்கடாட்டோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1446907- 2026க்கான முழு பாடசாலை சீருடைத் துணிகளையும் மானியமாக வழங்கும் சீனா!
2026க்கான முழு பாடசாலை சீருடைத் துணிகளையும் மானியமாக வழங்கும் சீனா! அரசாங்கத்தின் மற்றும் அரசாங்கத்தின் உதவி கிடைக்கும் 4,418,404 பாடசாலை மாணவர்களுக்காக 2026 ஆம் ஆண்டுக்கு தீர்மானிக்கப்பட்ட சகல சீருடைகளையும் சீன அரசாங்கத்தின் அன்பளிப்பாக வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட இணக்கப்பாடுகளுடன் சீருடைகளைப் பரிமாறும் நிகழ்வு நேற்று (11) பத்திரமுல்ல கல்வி அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்றது. கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, சீன தூதுவர் கிவ் ஸெங்க்ஹொங் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதன் போது 2026ஆம் ஆண்டுக்கான பிள்ளைகளை வழங்குவதற்கு இணக்கத்தை தெரிவிக்கும் சான்றிதழை பரிமாறிக் கொள்ளும் நிகழ்வு கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கழுவெவ மற்றும் சீன தூதுவர் கிவ் ஸெங்ஹொங் இடையே இடம்பெற்றது . இங்கு கருத்து தெரிவித்த கல்வி உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுரை சனவரி “2025ஆம் ஆண்டுக்காக 11.82 மில்லியன் மீட்டர் துணி சீனாவிடம் இருந்து இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இதனால் முழு தேசிய அவசியத்தவையும் பூரணப்படுத்துவது போல் நாடு முழுவதும் உள்ள 4.6 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களுக்கு நன்மை கிடைப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. 5.17 வில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதி பங்களிப்பு, சிறுவர்கள் முதல் தேசிய பரீட்சைக்காக மாணவர்கள் வரை ஒவ்வொரு பிள்ளைக்கும் கௌரவம் மற்றும் சமத்துவத்துடன் கல்வி கற்பதற்கு வழி செய்யப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்காக இவ்வாறான பங்களிப்பை வழங்கியமை வரவேற்கப்பட வேண்டும்” இதன் போது மேலும் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் 2026 ஆம் ஆண்டுக்கான சீருடைகளை வழங்குவது தொடர்பாக விரைவாக பதில் அளித்த இலங்கை மற்றும் சீன அரசாங்கங்களுக்கிடையே காணப்படும் அந்நியோன்ய நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கான ஏற்பாடாகவும் இது காணப்படுகிறது. இந்நிகழ்வில் சீன தூதுவராலயத்தின் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். https://athavannews.com/2025/1446908- கட்டுநாயக்கவில் உயிருள்ள ஆறு பாம்பு குட்டிகள் மீட்பு!
கட்டுநாயக்கவில் உயிருள்ள ஆறு பாம்பு குட்டிகள் மீட்பு! கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ஆறு உயிருள்ள வெளிநாட்டுப் பாம்புகள் பயணி ஒருவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பங்கொக்கிலிருந்து சென்னை வழியாக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தின் மூலமாக இலங்கையை வந்தடைந்த பயணியிமிருந்தே இந்த பாம்புகள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல்லுயிர், கலாச்சார மற்றும் தேசிய பாரம்பரிய பாதுகாப்பு பிரிவுடன் இணைந்து இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினால் இந்த மீட்பு மேற்கொள்ளப்பட்டது. 40 வயதுடைய அந்தப் பெண் பயணி, தனது பொதிகளில் பாம்புகளை மறைத்து வைத்திருந்தார். https://athavannews.com/2025/1446891- நாமலின் மின்சாரக் கட்டணம் தொடர்பான மனுவைத் தொடர அனுமதி!
நாமலின் மின்சாரக் கட்டணம் தொடர்பான மனுவைத் தொடர அனுமதி! நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண வரவேற்பறையில் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்காக இலங்கை மின்சார சபைக்கு (CEB) 2 மில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தத் தவறியதன் மூலம் இந்த நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி சட்டத்தரணி ஒருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த மனுவை சட்டத்தரணி விஜித குமார தாக்கல் செய்துள்ளார். இதில், CEB உள்ளிட்ட ஒரு குழு பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தது. இந்த மனு நேற்று (11) தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் நீதிபதி அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இலங்கை மின்சார சபையின் அசாதாரண நடவடிக்கை இலங்கையில் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என்று நீதிமன்றத் தீர்ப்பைக் கோரி சட்டத்தரணி இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். https://athavannews.com/2025/1446888- பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதிக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதிக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை! இராணுவப் புரட்சிக்கு சதி செய்த குற்றச்சாட்டில் பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் மற்றும் மூன்று மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி குற்றவாளி என்று தீர்ப்பளித்த சில மணி நேரங்களுக்குப் பின்னர், ஐந்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட குழு மேற்கண்ட தண்டனையை வழங்கியது. 2022 தேர்தலில் இடதுசாரி போட்டியாளரான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவிடம் தோல்வியடைந்த பின்னர், ஆட்சியில் தொடர்ந்தும் இருப்பதை நோக்காக் கொண்டு ஒரு சதித்திட்டத்தை வழிநடத்தியதற்காக அவர் குற்றவாளி என்று அவர்கள் தீர்ப்பளித்தனர். நான்கு நீதிபதிகள் அவரை குற்றவாளி எனக் கண்டறிந்தனர், ஒருவர் அவரை விடுவிக்க வாக்களித்தார். போல்சனாரோவின் சட்டத்தரணிகள் இந்த தண்டனை அபத்தமானது எனக் கூறியுள்ளதுடன், மேன்முறையீடு செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளனர். மேலும், உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழு, 2033 வரை அவர் பொதுப் பதவிக்குப் போட்டியிடுவதையும் தடை செய்தது. வெளிநாடு தப்பிச் செல்லும் அபாயம் இருப்பதாகக் கருதப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட போல்சனாரோ, இந்த இறுதி கட்ட விசாரணையில் நேரில் கலந்து கொள்ளவில்லை. இந்த தீர்ப்பின் மூலமாக 70 வயதான போல்சனாரோ, இப்போது தனது வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிக்கும் துரதிர்ஷ்டவசமான வாய்ப்பை எதிர்கொள்கிறார். அவரது சட்டத்தரணிகள் அவரை சிறைக்கு அனுப்புவதற்குப் பதிலாக வீட்டுக் காவலில் வைக்க வேண்டும் என்று வாதிடுவார்கள் – அதே போல் குறைந்த தண்டனைக்கு வாதிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்வதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் இது கடினமாக இருக்கலாம் என்று சட்ட வல்லுநர்கள் கூறியுள்ளனர். ஏனெனில் இது பொதுவாக ஐந்து நீதிபதிகளில் இருவர் விடுவிக்க வாக்களித்திருந்தால் மட்டுமே சாத்தியமாகும். போல்சனாரோ ஐந்து குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். இவை அனைத்தும் 2022 தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அதிகாரத்தில் ஒட்டிக்கொள்ள முயன்றது தொடர்பானது. ஆனால், 2026 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க இது வடிவமைக்கப்பட்டதாக அவர் கடந்த காலத்தில் கூறியிருந்தார். ஏற்கனவே தனித்தனி குற்றச்சாட்டுகளின் பேரில் பொதுப் பதவியில் இருந்து அவர் தடை செய்யப்பட்டுள்ளார். சதித் திட்டம் தொடர இராணுவத்திடம் போதுமான ஆதரவைப் பெறத் தவறிய போதிலும், ஜனவரி 8, 2023 அன்று போல்சனாரோவின் ஆதரவாளர்களால் அரசாங்க கட்டிடங்களைத் தாக்குவதில் மும்முரமாக இருந்தனர். இதன்போது சுமார் 1,500 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். https://athavannews.com/2025/1446881- அரசமாளிகையில் இருந்து வெளியேறுகிறார் மஹிந்த!
🔴 தினமும் பல லட்சம், ஆண்டுதோறும் பல மில்லியன் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு செலவு, ஏன் விஷேட சலுகை தள்ளுபடி முக்கியம்? நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் விஷேட சலுகைகள் நீக்கப்படும் சட்டமூலம் மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கை குறித்து கூறுகையில், முன்னாள் அரச தலைவர்களுக்கான பாதுகாப்பு தனியாக நிர்வகிக்கப்பட்டு வருவதாகவும், அது அப்படியே தொடரும் எனவும் வலியுறுத்தினார். தமது பாதுகாப்புக் குறித்து கவலை கொண்ட எவரும், பாதுகாப்புக் இடர் குழுவிடம் கோரிக்கை சமர்ப்பிக்க முடியும் எனவும், அக்குழுவே தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கு பொறுப்பானது எனவும் அவர் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட விரிவான பணியாளர்கள் குறித்தும் இதன்போது அமைச்சர் விஜேபால விவரித்தார். அதன்படி விஷேடமாக, மஹிந்த ராஜபக்சவுக்கு 111 பணியாளர்கள் வழங்கப்பட்டுள்ளனர். அவர்களில், 9 மருத்துவ ஊழியர்கள் 8 சாரதிகள் 2 எழுதுபவர்கள் 5 இயந்திரப் பணியாளர்கள் 1 கடற்படை உதவியாளர் 46 சிறப்பு நடவடிக்கைப் பணியாளர்கள் 16 சமையல்காரர்கள் 26 மின்சார வல்லுநர்கள் 4 சிவில் பொறியியலாளர்கள் 4 தொழில்நுட்ப பொறியியலாளர்கள் 2 களஞ்சிய காவலர்கள் 3 உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர்கள் 1 தச்சர் 1 நாய் பராமரிப்பாளர் ஆகியோர் அடங்குவதாக அவர் கூறினார். மேலும், கோட்டாபய ராஜபக்சவுக்கு 60 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில்: 3 மருத்துவ உதவியாளர்கள் 1 பராமரிப்பு தொழில்நுட்ப வல்லுநர் 6 சாரதிகள் 5 எழுதுபவர்கள் 8 பாதுகாப்பு அதிகாரிகள் 13 ஆதரவு பணியாளர்கள் 8 சமையல்காரர்கள் 3 தொழில்நுட்ப வல்லுநர்கள் 1 உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் 6 சிறப்பு நிபுணர்கள் 1 நாய் பராமரிப்பாளர் ஆகியோர் உள்ளடங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். சலுகைகள் சட்டத்தின் கீழ், ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளுக்கும் அவர்களது விதவைகளுக்கும் 2024 ஆம் ஆண்டில் அரசாங்கம் ரூபா 98.5 மில்லியன் செலவழித்ததாக அமைச்சர் தெரிவித்தார். அதன் விபரம்: ஹேமா பிரேமதாச – ரூபா 2.687 மில்லியன் சந்திரிகா குமாரதுங்க – ரூபா 16.43 மில்லியன் மஹிந்த ராஜபக்ச – ரூபா 54.62 மில்லியன் மைத்திரிபால சிறிசேன – ரூபா 15.77 மில்லியன் கோட்டாபய ராஜபக்ச – ரூபா 12.28 மில்லியன் ரணில் விக்கிரமசிங்க – ரூபா 3.49 மில்லியன் இவ்வாறு பொதுப்பணத்தை குறிப்பிட்ட அரசியல் தலைவர்களுக்கு அதிகபட்சமாக செலவளிப்பதானது நாடு தற்போதுள்ள நிலையில் சிந்திக்கவேண்டியது என்றும் குறிப்பிட்டார். Vaanam.lk - அரசமாளிகையில் இருந்து வெளியேறுகிறார் மஹிந்த!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.