Everything posted by தமிழ் சிறி
-
நாளை சுற்றுப்பாதையில் ஏவப்படவுள்ள இலங்கையின் மூன்றாவது செயற்கைக்கோள்!
இலங்கையின் மூன்றாவது நனோ செயற்கைக்கோள் இன்று சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம்! இலங்கையின் மூன்றாவது நனோ செயற்கைக்கோள் இன்று சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சியில் மற்றொரு மைல்கல்லைக் குறிப்பதாக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது. விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் செயற்படும் மொரட்டுவையில் உள்ள ஆர்தர் சி. கிளார்க் இன்ஸ்டிடியூட் ஃபார் மொடர்ன் டெக்னாலஜிஸின் (Arthur C. Clarke Institute for Modern Technologies) வழிகாட்டுதலின் கீழ் இலங்கை பொறியியலாளர்கள் குழுவால் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது. ‘BIRDS-X DRAGONFLY’ என பெயரிடப்பட்ட இந்த நனோ செயற்கைக்கோள், ஆகஸ்ட் 24 ஆம் திகதியன்று நாசாவினால், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்தநிலையில் இந்த செயற்கைக்கோள் இன்று இலங்கை நேரப்படி பிற்பகல் 2:15 மணிக்கு ISS இலிருந்து சுற்றுப்பாதையில் செலுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு ஆர்தர் சி. கிளார்க் நிறுவனத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இலங்கை 2019 இல் அதன் முதல் நனோ செயற்கைக்கோளான ராவணா-1 யும் இரண்டாவது செயற்கைக்கோளான KITSUNE 2022 இலும் ஏவியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1447717
-
தொல்பொருள் சின்னமான மந்திரி மனை இடிந்து விழுந்தது!
மந்திரி மனை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது! -பிமல் ரத்நாயக்க. இலங்கையில் காணப்படும் பாரம்பரியமான மாளிகைகளில் ஒன்றான மந்திரி மனை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். யாழ் நல்லூரில் அமைந்துள்ள மந்திரி மனையை நேற்று பார்வையிட்டதன் பின்னரே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது ”இலங்கையில் காணப்படும் பாரம்பரியமான மாளிகைகளில் ஒன்றான மந்திரி மனை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது. எனவே இதனை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதி அழித்தார். நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள மந்திரிமனை இடிந்து விழுந்து பகுதியளவில் சேதம் அடைந்திருந்தது. இதனை அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க ராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கருணை நாதன் இளங்குமரன் ஆகியோர் பார்வையிட்டனர். அவர்களுடன் தொல்லியல் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் யு.ஏ பத்துல ஜீவ மற்றும் தொல்லியல் திணைக்களத்தின் புனர்நிர்மாண உத்தியோகத்தர் கபிலன் ஆகியோரும் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1447731
-
வொஷிங்டனில் ஜனாதிபதி ட்ரம்புக்கு 12 அடியில் தங்க நிறத்தில் சிலை
வொஷிங்டனில் ஜனாதிபதி ட்ரம்புக்கு 12 அடியில் தங்க நிறத்தில் சிலை. அமெரிக்காவில் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கையில் ‘பிட்காயின்’ எனப்படும் மெய்நிகர் நாணயம் வைத்திருப்பது போன்ற, 12 அடி உயர தங்க நிறத்தாலான சிலை நிறுவப்பட்டுள்ளது. அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் உள்ள பார்லிமென்டுக்கு வெளியே, நேஷனல் மால் பகுதியில் கையில் பிட்காயின் ஏந்தியபடி இருக்கும் ட்ரம்பின் 12 அடி உயர பொன்நிற சிலை நிறுவப்பட்டுள்ளது. இச்சிலை மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், பல்வேறு விவாதங்களையும் கிளப்பியுள்ளது. அந்நாட்டின் மத்திய வங்கியான, பெடரல் வங்கி, கடந்த 2024 டிசம்பருக்கு பின் தற்போது அதன் வட்டி விகிதத்தை 25 சதவீத அடிப்படை புள்ளிகள் குறைப்பதாக அறிவித்தது. அறிவிப்பு வந்த அதே நேரத்தில் இச்சிலை திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும், இச்சிலைக்கு கிரிப்டோ கரன்சி முதலீட்டாளர்கள் நிதியளித்துள்ளதாக கூறப்படுகிறது. கிரிப்டோ கரன்சிக்கு வெளிப்படையாக ஜனாதிபதி ட்ரம்ப் ஆதரவு வழங்கி வருவதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், டிஜிட்டல் நாணயத்தின் எதிர்காலம், பணவியல் கொள்கை மற்றும் நிதி சந்தைகளில் அரசின் பங்களிப்பு குறித்த விவாதத்தை தூண்டும் நோக்கத்துடன் இச்சிலை நிறுவப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1447726
-
வரவு-செலவுத் திட்டங்களுக்கு எதிராக பிரான்ஸ் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்!
வரவு-செலவுத் திட்டங்களுக்கு எதிராக பிரான்ஸ் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்! அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக பிரான்ஸ் முழுவதும் வியாழக்கிழமை (18) முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் இலட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் அவரது புதிய பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னுவும் சமர்ப்பிக்கப்படவுள்ள தங்களது வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களை கைவிடுமறும் வலியுறுத்தினர். போராட்ட நாளின் ஒரு பகுதியாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களில் ஆசிரியர்கள், ரயில் சாரதிகள், மருந்தாளுநர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அடங்குவர். அதே நேரத்தில், பதின்ம வயதினர் உயர்நிலைப் பாசாலைகளை மணிக்கணக்கில் முற்றுகையிட்டனர். போராட்டக்காரர்களும் தொழிற்சங்கங்களும் முந்தைய அரசாங்கத்தின் நிதித் திட்டங்களைக் கைவிட வேண்டும், பொது சேவைகளுக்கு அதிக செலவு செய்ய வேண்டும், செல்வந்தர்கள் மீது அதிக வரிகள் விதிக்க வேண்டும், ஓய்வூதியம் பெற மக்கள் நீண்ட நேரம் வேலை செய்ய வைக்கும் ஒரு பிரபலமற்ற மாற்றத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களில் 1 மில்லியன் மக்கள் பங்கேற்றதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. எனினும், போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அந்த எண்ணிக்கையில் பாதியாக இருப்பதாக அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். அதேநேரம், லியோன் மற்றும் நான்டெஸ் நகரங்களில் மோதல்கள் நடந்ததாகவும், பாரிஸில் பொலிசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே சிறிய அளவிலான மோதல்கள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சில போராட்டக்காரர்கள் வணிகங்கள் மற்றும் கட்டிடங்களை சேதப்படுத்தியதை அடுத்து, கலவரத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தலைநகரின் மையத்தில் கூட்டத்தைக் கலைக்க கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் கேடயங்களைப் பயன்படுத்தினர். முன்னாள் பிரதமர் பிரான்சுவா பேரூவின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் நெருங்கிய நண்பரான செபாஸ்டியன் லெகோர்னு பிரதமராக நியமிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பின்னர் இந்தப் போராட்டங்கள் வெடித்துள்ளன. போராட்டங்களால் வியாழக்கிழமை பொதுப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. பாரிஸில் பல மெட்ரோ பாதைகள் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் பிரான்ஸ் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் போராட்டக்காரர்கள் வீதிகளை மறித்தனர். தலைநகர் மற்றும் அதற்கு அப்பால் உள்ள பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு முன்னால் மாணவர்கள் கூடி, நுழைவாயில்களைத் தடுத்து, கோஷங்களை எழுப்பினர். ஆசிரியர்களில் மூன்றில் ஒரு பங்கு பேர் வெளிநடப்பு செய்தனர். மருந்தாளுநர்களும் கூட்டமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். 98% மருந்தகங்கள் மூடப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்ஸ் முழுவதும் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. பொது சேவைகளுக்கான செலவுகளை அதிகரிக்கவும், செல்வந்தர்கள் மீதான வரிகளை அதிகரிக்கவும், குறுகிய கால பேய்ரூ அரசாங்கத்தால் கோடிட்டுக் காட்டப்பட்ட வரவுசெலவுத் திட்ட வெட்டுக்களை குறைக்கவும் தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. https://athavannews.com/2025/1447732
-
தொல்பொருள் சின்னமான மந்திரி மனை இடிந்து விழுந்தது!
நம் மரபுரிமைகளைக் காப்போம். Oorukaai
-
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார்!
மறைந்த நடிகர் ரோபோ சங்கர், கடந்த 6 ஆம் திகதி யாழ்ப்பாணம் பிரான்பற்றில் நடந்த இசை நிகழ்ச்சியில் நகைச்சுவை செய்து பலரை மகிழ்ச்சிப் படுத்தியிருந்தார். Kadoo Kapu
-
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார்!
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார்! நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் சென்னையில் உயிரிழந்துள்ளார். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் பெருங்குடியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். https://athavannews.com/2025/1447695
-
விரைவில் சுமோவுக்கு நிரந்தர ஓய்வு...!
அன்னதானம்.... தேவாலயத்திலா, கோவிலிலா, மசூதியிலா அல்லது புத்த விகாரையிலா கொடுக்க நேர்த்தி வைத்துள்ளீர்கள். 😂
-
ஐஸ் போதைப்பொருளுடன் தேரர்கள் இருவர் கைது!
இந்தப் பிக்குமார்... இனி இல்லை என்ற காவாலி, கழிசடைகள். முன்னைய அரசாங்கங்களிலும் இவர்கள் போதை வஸ்து பாவிக்கின்ற ஆட்கள்தான். ஆனால்... அவர்களை கைது செய்யாமல் சீராட்டி வைத்துக் கொண்டு இருந்தவர்கள். இப்போ... இவர்களை பாதுகாக்க எவரும் இல்லை. போதை வஸ்து பாவித்த பழக்கம், அவர்களை மீள விடுகுதில்லை. அதனால் கையும் களவுமாக அம்பிட்டு, கைது செய்யப்படுகின்றார்கள்.
-
விரைவில் சுமோவுக்கு நிரந்தர ஓய்வு...!
சுமந்திரனுக்கு... தமிழ்மக்கள் ஏற்கெனவே வேண்டாம் போ... என்று, ஓய்வு கொடுத்துத் தானே.... இருக்கின்றார்கள். 😂 இனி என்ன, ஓய்வாக இருக்கும்.
-
சுய மரியாதை இயக்கம் தமிழ்நாட்டின் அரசியல், மொழி, பண்பாட்டுத் தளத்தில் ஏற்படுத்திய மாற்றம் என்ன?
வாய்ப்பில்லை ராஜா.
-
தொல்பொருள் சின்னமான மந்திரி மனை இடிந்து விழுந்தது!
யாழில் கடும் மழை.. இடிந்து விழுந்த சங்கிலியனின் மந்திரிமனை; புனரமைக்க விடாமல் தடுத்த தனிநபர்.! யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனையை கடந்த 14 வருடங்களுக்கு மேலாக பாதுகாக்க நடவடிக்கை எடுத்தும் பயனளிக்கவில்லை என தொல்லியல் திணைக்களம் கைவிரித்துள்ளது. யாழ்ப்பாணம்.com
-
கருத்து படங்கள்
- நாளை சுற்றுப்பாதையில் ஏவப்படவுள்ள இலங்கையின் மூன்றாவது செயற்கைக்கோள்!
நாளை சுற்றுப்பாதையில் ஏவப்படவுள்ள இலங்கையின் மூன்றாவது செயற்கைக்கோள்! உள்ளூர் பொறியாளர்களின் தொழில்நுட்ப நிபுணத்துவத்துடன் உருவாக்கப்பட்ட இலங்கையின் மூன்றாவது சிறிய செயற்கைக்கோள் நாளை (19) சுற்றுப்பாதையில் ஏவப்பட உள்ளதாக மொரட்டுவையில் உள்ள ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனம் அறிவித்துள்ளது. ‘BIRDS-X Dragonfly’ என்று பெயரிடப்பட்ட இந்த செயற்கைக்கோள், ஆகஸ்ட் 24 அன்று நாசாவால் ஏவப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ்-33 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) கொண்டு செல்லப்பட்டது. முன்னதாக, 2019 ஆம் ஆண்டில், இலங்கை தனது முதல் சிறிய-செயற்கைக்கோளான ‘ராவணன்-1’ ஐ வெற்றிகரமாக ஏவியது. மேலும் 2022 ஆம் ஆண்டில், ஐந்து சர்வதேச கூட்டாளர்களை உள்ளடக்கிய பன்னாட்டு தொழில்நுட்ப ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக ‘கிட்சூன்’ செயற்கைக்கோள் ஏவப்பட்டது. அதன்படி, BIRDS-X டிராகன்ஃபிளை சிறிய செயற்கைக்கோள் நாளை பிற்பகல் 2:15 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து அதன் நியமிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது இலங்கையின் விண்வெளி தொழில்நுட்ப பயணத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க படியை குறிக்கிறது. https://athavannews.com/2025/1447577- ஹெரோயினுடன் பிக்கு உள்ளிட்ட மூவர் கைது!
போதை வஸ்து பொருட்களுடன் இரண்டு நாட்களில் ஐந்து பிக்கு கைது. இன்னும்.... எத்தனை பிக்குகள் தலைமறைவாக இருக்கிறதோ... அந்தப் புத்தனுக்குத்தான் வெளிச்சம்.- ஹெரோயினுடன் பிக்கு உள்ளிட்ட மூவர் கைது!
ஹெரோயினுடன் பிக்கு உள்ளிட்ட மூவர் கைது! ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை மாத்தளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இதன்போது அவரிடம் இருந்து 10.3 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிக்கு அலவ்வ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விகாரையொன்றில் சேவையாற்றிய 38 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது. அவருடன் கைதான ஏனைய இரண்டு பேரும் 29 மற்றும் 31 வயதுடையவர்கள் எனவும் அவர்களிடம் இருந்து 17 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, கைதான மூன்று சந்தேக நபர்களும் நேற்று பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மினுவாங்கொடையைச் சேர்ந்த “நேவி தினேஷ்” என்ற நபரால் இயக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2025/1447589- தொல்பொருள் சின்னமான மந்திரி மனை இடிந்து விழுந்தது!
இதுவே ஒரு சிங்கள அரசன் சம்பந்தப் பட்ட தொல்லியல் பகுதியாக இருந்திருந்தால்... சிங்கள அரசு அந்தத் தனியாரிடம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டு இருக்குமா? மாறாக அவரை அதி உச்ச சட்டத்தை பாவித்து அந்த கட்டிடத்தை தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கும். தமிழ் அரசன் சம்பந்தப் பட்ட கட்டிடம் என்றபடியால்... சிங்கள அரசு எமக்கு "அம்புலிமாமா" கதை எல்லாம் சொல்லிக் கொண்டு உள்ளது. அதை நம்பவும் நம்மில் பலர் இருக்கின்றார்கள். அந்தக் கட்டிடத்தின் முக்கியத்துவத்தையும், நிலைமையையும் கருதி அரசும், தமிழ் அரசியல்வாதிகளும் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தவறி விட்டார்கள். இவர்களை காலம் மன்னிக்காது.- சுய மரியாதை இயக்கம் தமிழ்நாட்டின் அரசியல், மொழி, பண்பாட்டுத் தளத்தில் ஏற்படுத்திய மாற்றம் என்ன?
தி.மு.க. தலைவர்கள் நூற்றாண்டு விழா மேடைக்கு செல்லும் பாதையில்... சிறுநீர் கழிக்கும் உடன்பிறப்பு. 😂 Arya S R Tvk- ஐஸ் போதைப்பொருளுடன் தேரர்கள் இருவர் கைது!
தேரர்கள்... பாலியல் வன்முறையில் ஈடுபவதை விட, ஐஸ் (கிறீம்) பாவித்தே சாகட்டும்.- மனிதனை கடிக்கும் தெரு நாய்களுக்கு ஆயுள் தண்டனை!
மனிதனை கடிக்கும் தெரு நாய்களுக்கு ஆயுள் தண்டனை! இந்தியா முழுவதும் தெருநாய் பிரச்சனை ஒரு பெரிய சிக்கலாக உருவெடுத்து இருக்கும் நிலையில் இது தொடர்பாக உத்தரபிரதேச அரசு ஒரு வினோதமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதாவது ஒரு தெருநாய் காரணமே இல்லாமல் இரு முறை மனிதர்களைக் கடித்தால் அந்த நாய்க்கு ஆயுள் முழுவதும் காப்பகத்தில் அடைக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில காலமாகவே இந்தியாவில் தெருநாய் பிரச்சனை மிக மோசமான ஒன்றாக மாறியிருக்கிறது. தெருநாய் பிரச்சனையைக் கையாள உச்ச நீதிமன்றமும் கடந்த மாதம் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்து இருந்தது. மேலும், இந்த விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து தடுப்பூசி , கருத்தடை பணிகளை எல்லா மாநில அரசுகளும் தீவிரமாக மேற்கொண்டு வந்தன. இந்த நிலையில்தான் உத்தரப் பிரதேச அரசு வினோதமான ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதாவது ஒரு மனிதனைக் காரணமின்றிக் கடித்தால் நாய்களுக்குத் தண்டனையாம். இதுபோல முதல் முறை நடந்தால் அந்த நாய்கள் 10 நாட்களுக்கு விலங்கு மையத்தில் வைக்கப்படுமாம். அதேநேரம் மீண்டும் அந்த நாய் காரணமில்லாமல் மனிதர்களைக் கடித்தால் வாழ்நாள் முழுவதும் அந்த நாய் அங்கேயே அடைக்கப்படும் என்றும் உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. இது கிட்டத்தட்ட நாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிப்பதற்குச் சமம். அப்படிக் காப்பகத்தில் அடைக்கப்படும் நாய்கள் தப்பிக்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறதாம். யாராவது ஒருவர், அந்த நாயைத் தத்தெடுத்தால் மட்டுமே அது காப்பகத்தில் இருந்து விடுவிக்கப்படும். மீண்டும் நாயைத் தெருக்களில் விட மாட்டோம் என உறுதிமொழிப் பத்திரம் கொடுத்தால் மட்டுமே நாயை விடுதலை செய்வார்களாம். கோபத்தை கட்டுப்படுத்தமுடியாத நாய்களைக் கையாளும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே அம்மாநில முதன்மைச் செயலாளர் அம்ரித் அபிஜாத் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். தெருநாய் கடி காரணமாக ஒருவர் ரேபிஸ் தடுப்பூசி பெற வந்தால், அந்தச் சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நாய் விலங்குகள் மையத்திற்கு அழைத்துச் செல்லப்படுமாம். கால்நடை மையத்தில் நாய்கள் பரிசோதிக்கப்பட்டு கருத்தடை செய்யப்படாவிட்டால், கருத்தடை செய்யப்பட்டு பின்னர் 10 நாட்கள் அந்த நாயின் நடத்தை கண்காணிக்கப்படும் எனவும் விடுவிக்கப்படுவதற்கு முன்பு, அந்த நாய்க்கு மைக்ரோசிப் பொருத்தப்படும் எனவும் இதன் மூலம் நாயின் இருப்பிடத்தைக் கண்காணிக்க முடியும் எனவும் இந்திய மாநில கால்நடை அலுவலர் பிஜய் அம்ரித் ராஜ் தெரிவித்துள்ளார். அதே நாய் மீண்டும் மனிதனைக் காரணமின்றி இரண்டாவது முறை கடித்தால், அது வாழ்நாள் முழுவதும் மையத்திலேயே வைக்கப்படும் எனவும் நாய் காரணமில்லாமல் கடித்ததா.. இல்லை தற்காப்பிற்காகக் கடித்ததா என்பதைக் கால்நடை மருத்துவரைக் கொண்ட 3 பேர் கொண்ட குழு முடிவு செய்யும் எனவும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1447561- தொல்பொருள் சின்னமான மந்திரி மனை இடிந்து விழுந்தது!
இது எமது அடையாளம். அரசாங்கம் இதில் அக்கறை செலுத்தப் போவதில்லை. அரசுக்கு... இது அழிவதில் உள்ளூர சந்தோசம். நாம்தான் இதனை வருங்கால சந்ததிக்காக பாதுகாத்து கொடுக்க வேண்டும்.- தொல்பொருள் சின்னமான மந்திரி மனை இடிந்து விழுந்தது!
தொல்பொருள் சின்னமான மந்திரி மனை இடிந்து விழுந்தது! யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்(17) பெய்த கனமழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரி மனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது. அந்தக் கட்டடம் உடைந்து விழும் நிலையில் காணப்பட்ட நிலையில் அதற்கு முட்டுக்கொடுத்து கம்பிகள் நடப்பட்டிருந்தன. அந்த கம்பிகள் அண்மையில் திருட்டு போன நிலையில் , குறித்த பகுதி இடிந்து விழுந்துள்ளது. இந்நிலையில் இன்று பெய்த மந்திரி மனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது. https://athavannews.com/2025/1447545- கருத்து படங்கள்
- இலங்கை போக்குவரத்து சபையில் விரைவில் பெண் சாரதிகள்!
இலங்கை போக்குவரத்து சபையில் விரைவில் பெண் சாரதிகள்! இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பொது போக்குவரத்து சேவையில் பெண் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் விரைவில் சேர்க்கப்படுவார்கள் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். கொழும்பு மாவட்ட செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதன்போது மேலும் உரையாற்றிய அமைச்சர், 25 பேருந்து டிப்போக்களை நவீனமயமாக்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. SLTB ஊழியர்களின் தற்போதைய பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 750 புதிய சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் ஆட்சேர்ப்பு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. SLTB ஒரு இலாபகரமான நிறுவனமாக மீண்டும் கட்டியெழுப்பப்படுவதாகவும் அவர் கூறினார். https://athavannews.com/2025/1447484- இங்கிலாந்து சென்றடைந்தார் டெனால்ட் ட்ரம்ப்!
இங்கிலாந்து சென்றடைந்தார் டெனால்ட் ட்ரம்ப்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது வரலாற்று சிறப்புமிக்க இரண்டாவது அரசு பயணமாக செவ்வாய்க்கிழமை (16) இங்கிலாந்து சென்றடைந்துள்ளார். அரச கொண்டாட்டங்கள், வர்த்தக பேச்சுவார்த்தைகள் மற்றும் சர்வதேச அரசியல் ஆகியவற்றின் கலவையாக இந்த விஜயம் அமைகிறது. செவ்வாய்க்கிழமை மாலை அமெரிக்க ஜனாதிபதி லண்டன் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் தரையிறங்கினார். அங்கு அவர் விமானத்தில் இருந்து இறங்கும் போது, அவரை இங்கிலாந்தின் புதிய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் உள்ளிட்டோர் வரவேற்றனர். மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா புதன்கிழமை (17) லண்டனுக்கு அருகிலுள்ள வின்ட்சர் கோட்டைக்கு ஜனாதிபதி ட்ரம்ப்பையும், முதல் பெண்மணியையும் வரவேற்பார்கள். அங்கு அவர்கள் விருந்துபசாரத்தில் பங்கெடுப்பார்கள். அநேரம், வியாழக்கிழமை (18) பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ட்ரம்பை அவரது அதிகாரப்பூர்வ நாட்டு இல்லமான செக்கர்ஸில் சந்திப்பார். இதன்போது, உக்ரேன் படையெடுப்பு தொடர்பாக ரஷ்யா மீது அழுத்தம் கொடுப்பதற்கான வழிகள் குறித்து அவர்கள் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யாவின் மசகு எண்ணெய் இறக்குமதி தொடர்பாக இந்தியா – சீனா மீதான வரிகளை உயர்த்துவதில் ஜி7 நாடுகளும் நேட்டோ உறுப்பு நாடுகளும் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ட்ரம்ப் விரும்புகிறார். செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட மேம்பட்ட தொழில்நுட்பங்களை உருவாக்க அமெரிக்காவும் இங்கிலாந்தும் இதன்போது ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2025/1447479 - நாளை சுற்றுப்பாதையில் ஏவப்படவுள்ள இலங்கையின் மூன்றாவது செயற்கைக்கோள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.