Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. கருணாநிதி.... நாடகங்களில் நடித்துக் கொண்டு இருந்த ராஜாத்தியுடன் கள்ளத் தொடர்பை ஏற்படுத்தும் போது, ராஜாத்தி... (மேலே படத்தில் உள்ள) செந்தாமரை என்பவரின் மனைவி. ராஜாத்தி தனது கையை விட்டுப் போனதை.... தாங்க முடியாமல் மீண்டும் இணைந்து வாழ செந்தாமரை எவ்வளவோ முயற்சித்தும்.... கருணாநிதி தனது ரவுடியிச செல்வாக்கை வைத்து... ராஜாத்தியை நிரந்தரமாக தனதாக்கிக் கொண்டார். ராஜாத்தியின் மகள் தான்... கனிமொழி. கோசான்..... நாங்கள் எல்லாம், கருணாநிதியின் வாழ்க்கை சரித்திரத்தை கரைத்து குடித்து விட்டுத்தான்... யாழ்.களத்திலேயே இணைந்தனாங்கள். இராஜாத்தி... இன்னொருத்தரின் மனைவி அல்ல என்று கருணாநிதிக்கு வெள்ளை அடிக்கிற கதை, கம்பி கட்டுற கதை போன்ற பொய் செய்தி எல்லாத்தையும் @Kandiah57 அண்ணை போன்ற ஆட்களுக்கு சொன்னால் அவர்கள் நம்பலாம். ஆனால் எங்களிடம் உங்கள் பருப்பு வேகவே, வேகாது. 😂 செந்தாமரை... பின்னாளில், தமிழ் திரையுலகத்தில் பிரபலமாக பேசப் பட்ட குணசித்திர நடிகர் ஆவார். ஸ்ராலின் அவர்கள்... தனது தந்தை செய்த அருவருப்பான செயலுக்கு பிராயச்சித்தம் செய்யும் விதமாக... தனது மகளுக்கு செந்தாமரை என பெயர் சூட்டியுள்ளார் என்றே கருத இடம் உள்ளது. ஆக.... கருணாநிதியின் குடும்பத்தில்... உதயநிதியின் சகோதரியாக இப்போதும் செந்தாமரை வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார். 🙂
  2. இலங்கையின் ஏற்றுமதி 6.61% அதிகரிப்பு! 2025 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித் துறை தொடர்ந்து மீள்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சியைக் காட்டியது. அதன்படி, குறிப்பிட்ட காலப் பகுதியில் மொத்த வருவாய் 11,554.32 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் (EDB) தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இது 6.61% வலுவான அதிகரிப்பை பிரதிபலிக்கிறது என்று EDB ஒரு அறிக்கையை வெளியிட்டு கூறுகிறது. 2025 ஆகஸ்ட் மாதம் மாத்திரம் மொத்த வணிகப் பொருட்கள் மற்றும் சேவைகள் இரண்டையும் உள்ளடக்கிய மொத்த ஏற்றுமதிகள் 1,607.58 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியது. இது 2024 ஆகஸ்ட் மாதத்தை விட ஆண்டுக்கு ஆண்டு 2.57% வளர்ச்சியைப் பதிவு செய்தது. இந்த செயல்திறன் இலங்கையின் ஏற்றுமதித் துறையின் வலிமையையும், சந்தை அணுகலை விரிவுபடுத்துவதற்கும் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும் செயல்படுத்தப்பட்ட உத்திகளின் செயல்திறனையும் எடுத்துக்காட்டுகிறது. https://athavannews.com/2025/1448332
  3. கெஹெல்பத்தர பத்மே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தடுப்புக் காவலில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் கெஹெல்பத்தர பத்மே, கொழும்பு துறைமுகப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு, மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது, கணேமுல்ல சஞ்சீவ் மற்றும் கம்பஹா பஸ் பொட்டா ஆகியோரைக் கொலை செய்ய தானே திட்டமிட்டதாக பத்மே ஒப்புக்கொண்டார். அத்துடன் கம்பஹா ஒஸ்மன் மீதான கொலை முயற்சியில் நேரடி தொடர்பு இல்லையெனவும், தம்மிட்ட அவிஷ்க மற்றும் கமாண்டோ சலிந்த ஆகியோரின் கோரிக்கையின் பேரில் அதற்கு ஒத்துழைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கொக்கேய்ன், ஹெரோயின், ஐஸ், குஷ் மற்றும் கேரள கஞ்சா போன்ற போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்ததாகவும், தமது கைபேசியில், “கொக்கேய்னை ஐ என்ற குறியீட்டு பெயராக பயன்படுத்தியதையும், அவர் உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன், தன்னிடம் இருந்த அனைத்து துப்பாக்கிகளையும் பொலிஸார் ஏற்கனவே மீட்டுள்ளதாகவும், தற்போது தன்னிடம் இன்னும் ஒரு துப்பாக்கி மட்டுமே மீதமுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும், அவர் கூறியுள்ளார். https://athavannews.com/2025/1448286
  4. தங்காலை போதைப்பொருள் விவகாரம்; காணி உரிமையாளரை கண்டறிய விசேட பொலிஸ் குழு! தங்காலையில் அண்மையில் ஒரு தொகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட காணிகளின் உரிமையாளரை கண்டறிய விசேட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளது. தங்காலை பகுதியில் ஏற்பட்ட சந்தேகத்துக்கிடமான மரண சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது, 705 கிலோ கிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த போதைப்பொருள்கள் காணப்பட்ட காணிகளின் உரிமையாளரை கண்டறிய ஒரு விசேட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். இதேவ‍ேளை, தங்காலை சீனிமோதர பகுதியில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் மர்மமான முறையில் இறந்த மூன்று பேரின் உடல்களின் பிரேத பரிசோதனையில், அவர்கள் ஹெரோயின் மற்றும் பீர் கலவையை அதிகமாக உட்கொண்டதால் இறந்ததாக தெரியவந்துள்ளது. அவர்களின் உடல்கள் தொடர்பான பிரேதப் பரிசோதனையில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனைகளை தங்காலை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ருவன் நாணயக்கார நடத்தினார். இறந்தவர் ஹெரோயின் மற்றும் பீர் கலவையை அதிகமாக உட்கொண்டதால் இறந்ததாக இதன்போது தெரியவந்துள்ளது. https://athavannews.com/2025/1448304
  5. ரகசா புயலின் கோரத்தாண்டவம்; தாய்வானில் 14 பேர் உயிரிழப்பு! இந்த ஆண்டின் உலகின் மிக சக்திவாய்ந்த வெப்பமண்டல சூறாவளியான ரகசா, புதன்கிழமை (24) ஹொங்கொங்கை வலிமையான காற்று மற்றும் பலத்த மழையால் தாக்கியது. அதேநேரத்தில், தயாவானலில் உள்ள ஏரி ஒன்றின் தடுப்பு சுவர் உடைந்ததால் குறைந்தது 14 பேர் உயிரிழந்தனர். மேலும், 124 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ரகசா என்ற சூப்பர் சூறாவளி தீவை பலத்த மழையுடன் தாக்கி கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளில் பரவலான சேதத்தை ஏற்படுத்தியதை அடுத்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ரகசா சூறாவளி திங்கள்கிழமை முதல் தாய்வானை நோக்கி நகர்ந்து தெற்கு சீன கடற்கரையை நோக்கி நகர்கிறது. ரகசா புயல் பலத்த காற்று மற்றும் மழையுடன் நெருங்கி வருவதால், ஹொங்கொங் மற்றும் தெற்கு சீனாவின் சில பகுதிகள் புதன்கிழமை (24) மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தன. இதனால் சீன அதிகாரிகள் குறைந்தது 10 நகரங்களில் பாடசாலைகள் மற்றும் வணிகங்களை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்குப் பின்னர் ஹொங்கொங்கிலிருந்து எந்த விமானங்களும் புறப்படவில்லை என்று விமான நிலையத்தின் வலைத்தளம் தெரிவித்துள்ளது. கேத்தே பசிபிக் முன்னதாக அதன் 500க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்தது. உள்ளூர் நேரப்படி புதன்கிழமை அதிகாலை 2.40 மணிக்கு ஹொங்கொங், ஆய்வகம் அதன் மிக உயர்ந்த புயல் எச்சரிக்கையான T10 ஐ வெளியிட்டது. புயல் நகரும்போது குறிப்பிடத்தக்க அளவு வீக்கம் மற்றும் புயல் எழுச்சி ஏற்படும் என்றும், சில பகுதிகளில் இயல்பை விட நான்கு முதல் ஐந்து மீட்டர் வரை நீர் மட்டம் உயரக்கூடும் என்றும் எச்சரித்தது. https://athavannews.com/2025/1448326
  6. எனக்கு… 🚰 தண்ணியிலை கண்டம் இருக்கு என்று சிவன் கோயில் சாத்திரியார் சொன்ன படியால், மூன்று மாதத்துக்கு ஒருமுறைதான் 🛀🏾 🪣ஒரு வாளி தண்ணீரில் குளிப்பேன். 😂
  7. இந்த வருமான வரி சோதனை செய்பவர்களுக்கு… ஸ்ராலின், உதயநிதி, சபரீசன் வீடுகள் ஒன்றும் கண்ணுக்கு தெரியாதோ… 😂
  8. படத்தில்… குளிப்பவரின் கமக்கட்டு முழுக்க ஒரே காடாக பார்க்க அசிங்கமாக இருக்கின்றது. 🤮 அவரை முதலில்… அதுகளை சவரம் செய்து விட்டு, குளிக்கச் சொல்லுங்க, ப்ளீஸ்….. 😂
  9. சட்டம் இப்பதானே… வந்தது. கருணாநிதி கில்லாடி, முந்தி விட்டார். 😎
  10. பொலிஸாருடன் முரண்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா! கொழும்பில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரை முட்டாள் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா திட்டும் காணொளியொன்று தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பேசுபொருளாகியுள்ளது. கொழும்பில் மிகவும் பரபரப்பான வீதியான கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக காரை நிறுத்தியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் காரை போக்குவரத்து பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். காரை குறித்த இடத்தில் ஏன் நிறுத்தினீர்கள் என கேட்டதற்கு “காரை இங்கே நிறுத்தாமல், உங்கள் தலையிலா நிறுத்துவது” என அவமரியாதையாக பொலிஸ் அதிகாரியிடம் நடந்து கொள்வது காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள மற்றும் பேருந்துகள் நிறுத்தப்படும் குறித்த பகுதியில் வாகனங்களை நிறுத்துவது தடை செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இராமநாதன் அர்ச்சுனா இவ்வாறு செயற்பட்டுள்ளார். நேற்றையதினம்(22) இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் இந்த சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1448248
  11. கண் கெட்ட பின், சூரிய நமஸ்காரம். மேற்கு நாடுகளின் இரட்டை வேடம். பாலஸ்தீனம் அழியும் மட்டும்... பார்த்துக் கொண்டு இருந்து விட்டு, தற்போது கற்குவியலாக இருக்கும் பாலஸ்தீனத்தை அங்கீகரித்த பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ். ################# ######################### ஏற்கனவே இருந்த ஒரு நாட்டை புது கதை சொல்லி ஏதோ தானமாக வழங்குவது போல படம் காட்டுகிறார்கள். இந்தத் திருத்தம்.. இஸ்ரேலுக்கு ஒரு தனி பிரதேசத்தை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது. Mohamed Niyasdeen
  12. அண்மையில் கைதுசெய்யப்பட்ட போதைப் பொருள் கடத்தல் குற்றவாளி சம்பத் மனம்பேரி என்பவர் தமிழ்த்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் படுகொலையுடன்( 2006 ம் ஆண்டு ) தொடர்புடையவர் என்று தென்னிலங்கை இணையத்தளமாகிய Debasa.lk தெரிவித்துள்ளது. மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி செயற்பட்டபோது மாமனிதர் ரவிராஜ் MP கொழும்பில் அவரது வாகனத்தில் வைத்து நடுவீதியில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுவரை கொலையாளிகளுக்கான தண்டனை கிடைக்கப்பெறவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. ராஜபக்ச குடும்பத்தின் கட்சியான பொதுஜன பெரமுன கட்சியின் பிரமுகர் சம்பத் மனம்பேரி தடுப்பு விசாரணையில் வழங்கிய தகவலுக்கமைய ராஜபக்சவின் சொந்த ஊரான அம்பாந்தோட்டை தங்காலையில் நேற்று (22) மீட்கப்பட்ட போதைப்பொருள் 9,888 மில்லியன் ரூபாய் பெறுமதியானவை என பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது. 3 லொறிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 705.91 கிலோகிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது. அதில் 284.94 கிலோ ஹெரோயின், 420.976 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த 3 லொறிகளினதும் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. Kunalan Karunagaran
  13. ஹொங்கொங், தெற்கு சீனாவை நோக்கி நகரும் ரகசா புயல்! வடக்கு பிலிப்பைன்ஸ் கிராமங்களில் மூவரின் இறப்புக்கு காரணமாகவும், ஆயிரக்கணக்கான மக்களை வெளியேற்றிய ஒரு சூப்பர் சூறாவளி இப்போது ஹொங்கொங், சீனாவின் தெற்குப் பகுதிகள் மற்றும் தாய்வானை நோக்கி நகர்கிறது. அங்கு மக்கள் மிகவும் கடுமையான வானிலையை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர். ரகசா புயல் ஹொங்கொங்கிற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2017 இல் ஹடோ மற்றும் 2018 இல் மங்குட் ஆகிய புயல்களின் அளவை எட்டக்கூடும் என்றும் கூறப்படுகிறது. ‍ஹொங்கொங்கின் அதிகாரிகள் மூன்றாவது மிக உயர்ந்த புயல் எச்சரிக்கையை விடுத்துள்ளனர். மேலும், குறைந்தது 700 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இதுவரை மிகவும் சக்திவாய்ந்த புயலாக உருவெடுத்துள்ள இது, அதிகபட்சமாக மணிக்கு 230 கிமீ வேகத்திலும் கடக்கக்கூடும் என்று வானிலையாளர்கள் கூறுகின்றனர். அடுத்த 24 மணி நேரத்திற்குள் புயல் அதன் தற்போதைய வலிமையைத் தக்க வைத்துக் கொள்ளும் என்றும், பின்னர் சீனக் கடற்கரையை நெருங்கும்போது சற்று பலவீனமடையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. புயல் தாக்கத்தினால் பிலிப்பைன்ஸில் குறைந்தது மூன்று பேர் இறந்தனர். மேலும் சூப்பர் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பரவலான வெள்ளம், நிலச்சரிவுகள் மற்றும் வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியதால் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். ஹொங்கொங் மற்றும் மக்காவ்வில் பாடசாலைகள் மூடப்பட்டன, குடியிருப்பாளர்கள் மளிகைப் பொருட்களை சேமித்து வைத்தனர். அருகிலுள்ள சீன தொழில்நுட்ப மையமான ஷென்சென் 400,000 மக்களை வெளியேற்ற உத்தரவிட்டுள்ளது. https://athavannews.com/2025/1448232
  14. அடுத்தவன் குடும்பத்தில் தலையிட்டால்… கோடிக் கணக்கில் நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்ற செய்தியை… எல்லோரும் அறிய வேண்டும் என இணைத்தேன் சாத்தான். 😁 அரசியல்வாதிகளும், சினிமா நடிகர்களும் இனி எச்சரிக்கையாக இருப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.
  15. முன்னாள் குடிவரவு-குடியகல்வுத் திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு 2 ஆண்டுகள் சிறை! முன்னாள் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு உயர் நீதிமன்றம் இன்று (23) இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இலங்கையின் இ-விசா செயல்முறையை இடைநிறுத்துவது தொடர்பான இடைக்கால உத்தரவை மீறியதற்கான நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்காக அவருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோரின் ஒப்புதலுடன், நீதிபதி யசந்த கோடகொட இந்த தீர்ப்பை அறிவித்தார். தீர்ப்பை வழங்கும்போது, ஹர்ஷ இலுக்பிட்டிய தனது செயல்கள் மூலம் நீதித்துறைக்கு எதிராக கடுமையான அவமதிப்புச் செயலைச் செய்துள்ளதாக நீதிபதி கோடகொட கூறினார். நாட்டின் ஒன்லைன் விசா முறையை நிர்வகிக்க VFS குளோபல் நிறுவனத்துடனான அரசாங்கத்தின் ஒப்பந்தத்தைச் சுற்றியுள்ள சர்ச்சையிலிருந்து இந்த வழக்கு உருவாகிறது. அதிகரித்து வரும் விமர்சனங்கள் மற்றும் சட்ட சவால்களுக்கு மத்தியில், புதிய இ-விசா செயல்முறையை செயல்படுத்துவதை நிறுத்தி உயர் நீதிமன்றம் முன்னதாக ஒரு இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. https://athavannews.com/2025/1448196
  16. எக்ஸ்-பிரஸ் பேர்ல் பேரழிவு: அபராதத்தை செலுத்த மறுக்கும் கப்பல் நிறுவனம்! சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட கப்பல் நிறுவனம் ஒன்று, நாட்டின் மிக மோசமான சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்குக் காரணமானதற்காக இலங்கை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட 1 பில்லியன் அமெரிக்க ‍டொலர் இழப்பீட்டை செலுத்த மறுப்பதாக இன்று (23) அறிவித்துள்ளது. எக்ஸ்-பிரஸ் ஃபீடர்ஸ் தலைமை நிர்வாகி ஷ்முவேல் யோஸ்கோவிட்ஸ் ஒரு பிரத்யேக நேர்காணலில், பணம் செலுத்துவது உலகளாவிய கப்பல் போக்குவரத்தில் பரந்த அளவிலான தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் “ஆபத்தான முன்னுதாரணத்தை அமைக்கும்” என்றும் நம்புவதாகக் கூறினார். அத்துடன், கசிவுகளை அகற்றவும், கடல் அடிப்பகுதி மற்றும் கடற்கரைகளை சுத்தம் செய்யவும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் US$170 மில்லியனை செலவிட்டுள்ளதாக அவர் கூறினார். இந்த நிறுவனம் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட கொள்கலன் கப்பலான MV X-Press Pearl ஐ இயக்கியது. ஜூன் 2021 இல் கொழும்பு துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு – நைட்ரிக் அமிலக் கசிவு இரண்டு வாரங்கள் நீடித்தது. அதன் சரக்குகளில் அமிலங்கள் மற்றும் ஈய இங்காட்கள் உட்பட ஆபத்தான பொருட்கள் கொண்ட 81 கொள்கலன்களும் நூற்றுக்கணக்கான டன் பிளாஸ்டிக் துகள்களும் அடங்கும். கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் வருவதற்கு முன்பு கசிந்த நைட்ரிக் அமிலத்தை இறக்குவதற்கு கத்தார் மற்றும் இந்தியாவில் உள்ள துறைமுகங்கள் அனுமதி மறுத்தன. கப்பலில் இருந்து டன் கணக்கில் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் இலங்கையின் மேற்கு கடற்கரையில் 80 கி.மீ நீளமுள்ள கடற்கரையை மூழ்கடித்தன. பல மாதங்களாக மீன்பிடித்தல் நடவடிக்கை பாதிக்கப்பட்டது. இலங்கை உயர் நீதிமன்றம் ஜூலை மாதம், அந்நிறுவனம் இலங்கை அதிகாரிகளுக்கு ஒரு வருடத்திற்குள் $1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், முதல் தவணையாக US$250 மில்லியன் செப்டம்பர் 23 ஆம் திகதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. https://athavannews.com/2025/1448162
  17. தங்காலையில் மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 9,888 மில்லியன் ரூபா என தகவல்! தங்காலை பகுதியில் பொலிஸாரால் மீட்கப்பட்ட போதைப்பொருள் தொகையின் மொத்த பெறுமதி சுமார் 9,888 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட மொத்த போதைப்பொருட்களின் அளவு 705.91 கிலோ கிராம் என்றும், அதில் 284.94 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் 420.976 கிலோ கிராம் ஐஸ் ஆகியவை அடங்கும் என்றும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட லொறிகளின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தங்காலை பகுதியில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள், வெளிநாட்டில் உள்ள ஒரு போதைப்பொருள் வியாபாரியுடையது என்பது தற்போது தெரியவந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள ‘உனகுருவே சாந்த’ என்ற குற்றவாளியால், சம்பந்தப்பட்ட போதைப்பொருள் கப்பல் இந்நாட்டிற்கு அனுப்பப்பட்டது என்பது பொலிஸாரால் நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தங்காலை, சீனிமோதர பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மூன்று பேர் மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (22) சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, மூன்று லொறிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ், ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் மீட்கப்பட்டன. நாட்டில் ஒரே நாளில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகையாகவும் இது கருதப்படுகிறது. இந்த நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுக்கு மேலதிகமாக, ஒரு T-56 துப்பாக்கி மற்றும் 5 பிஸ்டல் வகை துப்பாக்கிகளையும் பொலிஸார் மீட்டனர். சீனிமோதர பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு சடலங்கள் காணப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து பொலிஸார் நடத்திய விசாரணையில், வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு சிறிய லொறியில் 10 கிலோ கிராம் ஐஸ் என்ற போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது. குறித்த வீட்டில் இருந்த மற்றொரு நபரும் திடீர் சுகவீனம் காரணமாக தங்காலை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், தங்கலையின் கடுருபோகுனா பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு லொறியை சோதனை செய்தபோது, அதற்குள் பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் பல துப்பாக்கிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு லொறியை பொலிஸார் மீண்டும் ஒருமுறை சோதனை செய்தனர். மேலும், இதன்போது 400 கிலோ கிராம் அளவுக்கு அதிகமான போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த போதைப்பொருட்கள், சம்பந்தப்பட்ட வீட்டிலிருந்து விநியோகிக்க தயாரிக்கப்பட்ட போதைப்பொருட்கள் என்று பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இறந்த மூன்று நபர்களும் போதைப்பொருள் விநியோக வலையமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அவர்களின் இறப்புக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், முந்தைய இரவு அவர்கள் வேறொரு குழுவுடன் மது அருந்தியிருப்பது தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று (23) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தொடர்புடைய போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட லொறியின் சாரதி மற்றும் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மோசடியில் தொடர்புடைய மேலும் பல சந்தேக நபர்களைக் கைது செய்ய பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர். மேலும் தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கித்சிறி ஜெயலத்தின் அறிவுறுத்தலின் பேரில் இது தொடர்பாக மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன. https://athavannews.com/2025/1448147
  18. 24 ஆண்டுகளில் 1 நாள் கூட விடுமுறை எடுக்காத ஒரே தலைவர் பிரதமர் மோடி!- அமித்ஷா புகழாரம். கடந்த 24 ஆண்டுகளில் 1 நாள் கூட விடுமுறை எடுக்காத ஒரே தலைவர் பிரதமர் மோடி என மத்திய உட்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டுத் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் “கடந்த 24 ஆண்டுகளில் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காத ஒருவரை நான் பார்த்திருக்கிறேன். அது பிரதமர் நரேந்திர மோடிதான். இத்தகைய அர்ப்பணிப்பு தற்செயலாக வருவதில்லை.பொது சேவைக்கான அவரது அர்ப்பணிப்பால் மட்டுமே இது சாத்தியமானது” என்று தெரிவித்தார். மேலும் ”மோடி, உள்ளூர் மட்டத்தில் ஒரு கட்சி ஊழியராக தனது வாழ்க்கையைத் தொடங்கி பாஜகவின் தேசியத் தலைவராக உயர்ந்தார். பின்னர் குஜராத்தின் முதல்வரானார். பின்னர் மிகவும் பிரபலமான பிரதமரானார். மோடியின் செயல்திறனை அருகிலிருந்து பார்க்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது” என்று அமித் ஷா தெரிவித்தார். https://athavannews.com/2025/1448175
  19. திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்! திருமண உறவில் குறுக்கிடும் மூன்றாவது நபரிடம் நஷ்டஈடு கோரி, பாதிக்கப்பட்ட வாழ்க்கைத் துணைவர் வழக்குத் தொடரலாம் என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டெல்லியில் தனது கணவரின் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர், தங்கள் திருமண வாழ்வில் தெரிந்தே தலையிட்டதாகக் கூறி, பெண் ஒருவர் தனது கணவரின் சக ஊழியரிடம் இருந்து 4 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஏற்கனவே தம்பதிகளுக்கு இடையே விவாகரத்து வழக்குகள் குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், இதுபோன்ற நஷ்டஈடு கோரும் தனி உரிமையியல் வழக்கை தனியாகத் தொடரலாம் என்று சட்டத்தில் இடம் இருப்பதால், பாதிக்கப்பட்ட மனைவி உயர் நீதிமன்றத்தை நாடினார். இவ்வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ‘கணவன் அல்லது மனைவியின் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவில் ஈடுபடும் மூன்றாவது நபர் மீது, பாதிக்கப்பட்ட வாழ்க்கைத் துணைவர் (கணவர் அல்லது மனைவி) நஷ்டஈடு கோரி உரிமையியல் வழக்குத் தொடரலாம் எனத் தீர்பளித்துள்ளது. திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு என்பது குற்றச் செயல் அல்ல என உச்ச நீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டு தீர்ப்பளித்திருந்தது. தற்போது, அது குற்றமாகாது என்றாலும், அதுவே தம்பதிகளுக்கு இடையிலான திருமண முறிவுக்கு காரணமாக அமையும் பட்சத்தில், அதனால் ஏற்படும் சட்டரீதியான பாதிப்புகளுக்கு இழப்பீடு கோர முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் திருமண உறவில் வேண்டுமென்றே, தவறான நோக்குடன் தலையிடும் மூன்றாவது நபருக்கு அவ்வாறு செய்யாமல் இருக்க வேண்டிய கடமை உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது செயலால் திருமணம் முறிந்தால், நஷ்டஈடு கோருவது செல்லும். அதே சமயம், திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவில் ஈடுபட்ட கணவன் அல்லது மனைவியின் செயல்பாடு, எந்தவித வற்புறுத்தலும் இன்றி முற்றிலும் தன்னிச்சையானதாக இருந்தால், மூன்றாவது நபர் மீது நஷ்டஈடு கோர முடியாது’ என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விவாகரத்து வழக்குகளில், திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவை நிரூபிக்க, கணவன் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த பெண்ணின் தொலைபேசி அழைப்பு விவரங்கள் மற்றும் இருப்பிடத் தகவல்களை மனைவி கோரலாம் என டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த ஓகஸ்ட் மாதம் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1448085
  20. உலகளாவிய திறமையாளர்களை ஈர்க்க சீனாவின் புதிய ‘K’ விசா” அமெரிக்காவின் எச்1பி (H-1B) விசா குழப்பங் களுக்கு மத்தியில், உலகளாவிய திறமையாளர்களை ஈர்க்க சீனா ‘கே’ எனும் புதிய வகை விசாவை அறிமுகப்படுத்துகிறது. எச்1பி (H-1B) விசா முறை மூலம் அமெரிக்க நிறுவனம், வெளிநாட்டிலிருந்து சிறப்பு திறமை வாய்ந்த ஊழியரை சட்டபூர்வமாக அமெரிக்காவில் வேலை செய்ய அழைத்து வர முடியும். எனினும் சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்1பி விசாவுக்கான கட்டணத்தை வரலாறு காணாத வகையில் உயர்த்தி, வெளிநாட்டு பணியாளர்களுக்கு அதிர்ச்சியளித்தார். எச்1பி விசா வைத்துள்ளவர்களில் இந்தியாவிற்கு அடுத்து சீனா இரண்டாம் இடத்தில் உள்ளது. இதையடுத்து, இளம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறமையாளர்களை தன் பக்கம் ஈர்க்க, சீனா ஒரு புதிய வகை விசாவை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. சீனாவில் தற்போது 12 வகை சாதாரண விசாக்கள் கிடைத்து வருகின்றன. இந்த விசாக்களுடன் கே எனும் வகை விசாவை சேர்க்க அந்நாடு முடிவு செய்துள்ளது. இந்த விசா மற்ற விசாக்களுடன் ஒப்பிடுகையில், எண்ணிக்கை, செல்லுபடியாகும் காலம், தங்கும் காலம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான இளம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களுக்கு அதிக வசதிகளை வழங்கும். எச்1பி விசாவைப் போன்று இல்லாமல், இந்த கே விசா மிகவும் எளிமையான மற்றும் நெகிழ்வான நடைமுறைகளை கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த விசாவுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரருக்கு சீனாவில் உள்ள எந்த ஒரு நிறுவனத்தின் ஆதரவும் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக வெளிநாட்டினரின் நுழைவு மற்றும் வெளியேற்றத்திற்கான ஒழுங்குமுறைகளை திருத்துவதற்கான உத்தரவில் சீன பிரதமர் லி கியாங் கையெழுத்திட்டுள்ளார். இப்புதிய விதிகள் வரும், ஒக்டோபர் மாதம் 1ம் திகதி முதல் அமுலுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. கே விசாவில் சீனாவிற்கு செல்பவர்கள் கல்வி, கலாசாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளிலும், அது தொடர்புடைய தொழில்முனைவோர் மற்றும் வணிக நடவடிக்கைகளுக்கான பரிமாற்றங்களிலும் ஈடுபட அனுமதிக்கப்படுவர். இந்த விசாவிற்கான விண்ணப்பதாரர்கள் சீன அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்ட தகுதிகள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் மற்றும் அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1448185
  21. பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரித்த பிரான்ஸ்! பாலஸ்தீன அரசை பிரான்ஸ் முறையாக அங்கீகரித்துள்ளது. இந்த நடவடிக்கையை எடுக்கும் நாடுகளின் வரிசையில் அண்மைய நாடாக அது மாறியுள்ளது. நியூயோர்க்கில் உள்ள ஐ.நா.வில் பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், “சமாதானத்திற்கான நேரம் வந்துவிட்டது” என்றும், “காசாவில் நடந்து வரும் போரை எதுவும் நியாயப்படுத்தாது” என்றும் கூறினார். இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை (23) ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்ற உள்ளார். அதே போல் ஜோர்தான் மற்றும் கட்டார் போன்ற முக்கிய பிராந்திய நாடுகளின் தலைவர்களும் உரையாற்ற உள்ளனர். திங்களன்று, பிரான்ஸ் மற்றும் சவுதி அரேபியா நடத்திய ஒரு நாள் உச்சிமாநாட்டில் அமெரிக்கா கலந்து கொள்ளவில்லை. இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் போர்ச்சுகல் ஞாயிற்றுக்கிழமை (21) அங்கீகாரம் அறிவித்ததைத் தொடர்ந்து, பெல்ஜியம், லக்சம்பர்க், மொல்டா, அன்டோரா மற்றும் சான் மரினோ ஆகிய நாடுகளும் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க உள்ளன. காசாவில் விரிவடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடி மற்றும் மேற்குக் கரையில் குடியேற்றக் கட்டுமானம் தொடர்பாக இஸ்ரேல் மீது சர்வதேச அழுத்தம் அதிகரித்து வருகிறது. 2023 ஒக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஆயுதக் குழு நடத்திய தாக்குதலுக்கு ஹமாஸுக்கு அங்கீகாரம் வெகுமதி அளிக்கும் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். காசாவின் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகத்தின்படி, இஸ்ரேலால் 65,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலியப் படைகள் தற்போது காசா நகரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தரைவழித் தாக்குதலை நடத்தி வருகின்றன. அங்கு ஒரு மில்லியன் மக்கள் வசித்து வந்தனர். https://athavannews.com/2025/1448191

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.