Everything posted by தமிழ் சிறி
-
ஒரே மேடையில் மோதி, ஷீ ஜின்பிங், புதின் - டிரம்பின் செயல்களால் தனித்து விடப்படுகிறதா அமெரிக்கா?
தியானன்மென்னில் நடந்த சீனாவின் பிரமாண்டமான இராணுவ அணிவகுப்பு! ரஷ்யாவின் விளாடிமிர் புட்ன் மற்றும் வட கொரியாவின் கிம் ஜொங் உன் ஆகியோரின் பங்களிப்புடன் புதன்கிழமை (03) தனது நாட்டின் மிகப்பெரிய இராணுவ அணிவகுப்பை சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் நடத்தினார். இதன்போது பேசிய சீன ஜனாதிபதி, உலகம் அமைதி அல்லது போருக்கு இடையேயான தேர்வை எதிர்கொள்கிறது என்று தியானன்மென் சதுக்கத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கூடியிருந்த கூட்டத்தில் வலியுறுத்தினார். இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஜப்பான் தோல்வியடைந்த 80 ஆண்டுகளைக் குறிக்கும் இந்த ஆடம்பர நிகழ்வை மேற்கத்திய தலைவர்கள் பெரும்பாலும் புறக்கணித்து வருகின்றனர். உக்ரேன் போர் மற்றும் கிம்மின் அணுசக்தி இலட்சியங்கள் காரணமாக மேற்கத்திய நாடுகளின் விரோதிகளாக பார்க்கப்படும் புட்டின் மற்றும் கிம் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாக இந் நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர். சீனாவின் இராணுவ வலிமை, இராஜதந்திர செல்வாக்கை வெளிப்படுத்த அரங்கேற்றப்பட்ட இந்த நிகழ்வு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக வரிகள் மற்றும் நிலையற்ற கொள்கை வகுத்தல் ஆகியவை பங்காளிகள் மற்றும் போட்டியாளர்களுடனான அதன் உறவுகளை சீர்குலைக்கும் நேரத்திலும் வந்துள்ளது. இந்த அணி வகுதிப்பில் படைப் பலம், ஏவுகணைகள், டாங்கிகள் மற்றும் ட்ரோன்கள் போன்ற அதிநவீன இராணுவ உபகரணங்கள் என்பனவும் காட்சிப்படுத்தப்பட்டன. நிகழ்வுக்கு முன்னதாக முன்னாள் தலைவர் மாவோ சேதுங் அணிந்திருந்த உடையை அணிந்திருந்த ஜின்பிங், 20க்கும் மேற்பட்ட தலைவர்களை சிவப்பு கம்பள வரவேற்புடன் வரவேற்றார். Related Athavan Newsதியானன்மென்னில் நடந்த சீனாவின் பிரமாண்டமான இராணுவ அணிவகுப...ரஷ்யாவின் விளாடிமிர் புட்ன் மற்றும் வட கொரியாவின் கிம் ஜொங் உன் ஆகியோரின் பங்களிப்புடன் புதன்கிழமை (03) தனது நாட்டின் மிகப்பெரிய இராணுவ அணிவகுப்பை சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் நடத்தினார். இதன்போது பேசி
-
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் திறந்துவைப்பு!
🔴 வடக்கில் தொடரும் AKD’க்கான அன்பு! தனது ஜனாதிபதி பதவியின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு பல அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிக்கவும், அங்குரார்ப்பணம் செய்யவும் செப்டம்பர் 1, 2 திகதிகளில் இலங்கையின் வடக்கு பகுதிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரவுக்கு மக்களின் நெருக்கமான அன்பும் மரியாதையும் கிடைத்திருப்பதை அங்குள்ள பல்வேறு புகைப்படக்கருவிகள் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Vaanam.lk
-
கச்சத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி
இது முதலே தெரிந்திருந்தால்... இளைய தளபதியிடம் சொல்லி ஒரு அறிக்கை விடச் சொல்லி இருக்கலாம். 😂
-
கச்சத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி
- யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!
காணொளி: 👉 https://www.facebook.com/watch?v=1099335105203292 👈 ஜனாதிபதி செம்மணி மனித புதைகுழியையும் பார்வையிட்டு சென்றிருக்கலாம்.😔 யாழிலிருந்து செம்மணி வீதியூடாக ஜனாதிபதி கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு சென்றபோது காணொளி - யாழ்.தீபன்- கச்சத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி
கச்சதீவை தங்களுக்கு தரும்படி... ஈழத்தின் மருமகன் விஜய் கேட்கின்றார். இப்ப என்ன செய்யிறது. 😂 கச்சதீவினை மீட்டு தருமாறு பிரதமர் மோடியிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் கோரிக்கை!- யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!
- கருத்து படங்கள்
நரி ஊருக்குள் உலாத்த கிளம்பி விட்டது. 😂- ஒரே மேடையில் மோதி, ஷீ ஜின்பிங், புதின் - டிரம்பின் செயல்களால் தனித்து விடப்படுகிறதா அமெரிக்கா?
- நிலுவையிலுள்ள வழக்குகள் குறித்து நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் உத்தரவு!
நிலுவையிலுள்ள வழக்குகள் குறித்து நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் உத்தரவு! நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள அனைத்து வழக்குகளையும் எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் முடிக்க வேண்டும் என நீதிச் சேவைகள் ஆணைக்குழு (JSC) உத்தரவிட்டுள்ளது. மாவட்ட நீதிபதிகள், நீதவான் நீதிமன்ற நீதிபதிகள், மேல்நீதிமன்ற நீதிபதிகள், அந்தந்த நீதிமன்றங்களுக்கு நிர்வாக ரீதியாக பொறுப்பாக இருப்பவர்கள் தங்கள் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை அகற்றுவதற்கு நேரடியாக பொறுப்புக்கூற வேண்டும் எனவும் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. உள்ளூர் ரீதியான விடயங்களை ஆணைக்குழு கண்காணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவ் விடயத்தில் மாதாந்த முன்னேற்ற அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என அனைத்து நீதிபதிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலுவையிலுள்ள வழக்குகளை விசாரிப்பதும் தீர்ப்பதும் அனைத்து நீதிமன்ற ஊழியர்களின் தனிப்பட்ட மற்றும் கூட்டு பொறுப்பாகும். மேலும் தங்கள் கடமைகளை நிறைவேற்றத் தவறும் எந்தவொரு ஊழியருக்கும் எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணைக்குழு எச்சரித்துள்ளது. அண்மைக் காலங்களில் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளின் தரவுகள் சேகரிக்கப்பட்ட நிலையில், அவற்றின் தீர்வுகளை தாமதமின்றி வழங்குமாறு ஆணைக்குழு குறித்த அனைத்து நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. https://athavannews.com/2025/1445684- கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை நவீன வசதியுடன் புதுப்பிக்க நடவடிக்கை!
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை நவீன வசதியுடன் புதுப்பிக்க நடவடிக்கை! ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB) உதவியுடன் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த முயற்சியின் கீழ், மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கூடிய நவீன வசதியாக இந்த நிலையம் மேம்படுத்தப்பட உள்ளது என்று அமைச்சு கூறியுள்ளது. இந்த திட்டத்திற்காக 1,395 மில்லியன் ரூபா மதிப்பிடப்பட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 15 மாத காலக்கெடுவிற்குள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஏற்கனவே கேள்வி விலை மனு கோரல் அழைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் மேம்பாட்டுப் பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் கூறியது. https://athavannews.com/2025/1445669- தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உத்தியோகபூர்வ பயணமாக ஜெர்மனிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி” எனக் குறிப்பிட்டார். தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் ஜெர்மனிக்கு சென்றுள்ள அவர், TNRising ஜெர்மனி முதலீட்டு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார். இதன்போது, தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாகவும், அதிகளவிலான தொழிற்சாலைகள், திறமையான மனிதவளங்கள் மற்றும் உயர் நகர்மயமடைந்த மாநிலமாகவும் இருப்பதை விளக்கினார். இந்த மாநாட்டில், 3,819 கோடிஇந்திய ரூபாய் மதிப்பிலான 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் 9,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த ஜெர்மனி பயணத்தில் மொத்தம் 7,020 கோடி இந்திய ரூபாய் மதிப்பிலான 26 ஒப்பந்தங்கள், 15,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் தனது உரையில், ஜெர்மனியின் தொழில் நுணுக்கம், புதுப்பிப்பு திறன், கலையுணர்வு ஆகியவை தமிழ்நாட்டை ஈர்த்துள்ளது எனவும், “Made in Germany” தரச்சின்னமாக இருப்பது போலவே, “Made in Tamil Nadu” என்பதும் உலகளவில் தரத்திற்கான அடையாளமாக உருவாகிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் BMW, Daimler, Mercedes-Benz, Siemens, Bosch உள்ளிட்ட பல்வேறு ஜெர்மன் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் ஏற்கெனவே வெற்றிகரமாக செயற்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மோட்டார் வாகனங்கள், மின்சார வாகனங்கள், மின்னணு உற்பத்தி, தோல் மற்றும் ஆடைத் தொழில், தகவல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உயர் மருத்துவ சேவைகள் போன்ற துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1445675- இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலை.யில் ‘திராவிடர் இயக்க’ நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஸ்டாலின்!
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கக்கூஸில் கூட, பெரியாரின் படம் வைக்க வாய்ப்பு இல்லை. 😂- ஒரே மேடையில் மோதி, ஷீ ஜின்பிங், புதின் - டிரம்பின் செயல்களால் தனித்து விடப்படுகிறதா அமெரிக்கா?
அமெரிக்க அழுத்தங்களுக்கு மத்தியில் ஜி ஜின்பிங் – புட்டின் பெய்ஜிங்கில் சந்திப்பு! அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் அதிகரித்து வரும் அழுத்தங்களுக்கு மத்தியில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளார். சீன நகரமான தியான்ஜினில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் இருவரும் கலந்து கொண்ட மறுநாளும், இரண்டாம் உலகப் போரின் 80 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பெய்ஜிங்கில் ஒரு பிரமாண்டமான சீன இராணுவ அணிவகுப்புக்கு முந்தைய நாளிலும் இந்த பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் “முன்னோடியில்லாத அளவில்” இருப்பதாக புட்டின் இந்த சந்திப்பின் போது பாராட்டினார். மேலும், அவர்களின் “நெருக்கமான தொடர்பு ரஷ்ய-சீன உறவுகளின் மூலோபாய தன்மையை பிரதிபலிக்கிறது” என்றும் கூறினார். உக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்ய தலைவருடனான ஒப்பந்தம் ட்ரம்பிற்கு எட்டாத நிலையில், ஜி இப்போது பெய்ஜிங்கில் புட்டினை வரவேற்றுள்ளார். திங்களன்று நடந்த உச்சிமாநாட்டின் போது ஜி மற்றும் புட்டின் மேற்கத்திய அரசாங்கங்களை விமர்சித்தனர். இரண்டாம் உலகப் போரின் முடிவில் சீனாவில் ஜப்பானியர்கள் சரணடைந்த 80 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், சீனாவின் மிகப்பெரிய இராணுவ அணிவகுப்பை ஜி ஜின்பிங் புதன்கிழமை (03) நடத்த உள்ளார். உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக மட்டுமல்லாமல், ஒரு இராஜதந்திர ரீதியாக பெய்ஜிங்கின் சக்தியை சர்வதேச அரங்கில் முன்வைக்க ஜி ஜின்பிங் முயற்சிக்கும் நேரத்தில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. https://athavannews.com/2025/1445680- யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!
ஒட்டுக் குழுத் தலைவன் டக்ளஸ் தேவானந்தாவிற்கு…. கடத்தி, கொன்று, புதைத்த இடங்கள் எல்லாம் விபரமாக தெரியும்.- மதகுருமார் வர வேண்டாம் – கெஞ்சிய அதிகாரிகள்
யாழ், மண்டைதீவு விளையாட்டரங்கு அடிக்கல் நாட்டு விழாவில் தையிட்டி விகாராதிபதிக்கு அழைப்பு கொடுத்து, அவர் கலந்து கொண்டதாக வேறு செய்திகளில் உள்ளது. தையிட்டி விகாரை ஏற்கெனவே பிரச்சினை உள்ள நிலையில் அவரை அழைக்காமல்…. யாழ். விகாராதிபதியையோ, நயினாதீவு விகாராதிபதியையோ அழைத்திருக்கலாம் என்பது பலரது கருத்து. தையிட்டி விகாராதிபதிக்கு இந்த அங்கீகாரத்தை கொடுத்ததன் மூலம் அனுர அரசு தமிழ் மக்களுக்கு சொல்லும் செய்தி என்ன.- யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!
யாழ்ப்பாண கிரிக்கெட் மைதானம்... 138 ஏக்கர் நிலப்பரப்பளவில் 40,000 இருக்கைகளுடன் கட்டப் படவுள்ளது. 3 ஆண்டுகளில் கட்டடப் பணியை நிறைவேற்றத் திட்டம். #################### ################## முதலில் ஒரு தமிழனுக்கு தேசிய அணியில் விளையாட சந்தர்ப்பம் குடுங்க. Dushy Fly- குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் திறந்துவைப்பு!
மாற்றத்தின் முன்னுதாரணம்! வாசிக்க: “பொதுமக்களின் நிதியை பயன்படுத்தி” மற்றும் ஜனாதிபதியின் பெயர் பொறிக்கப்படவில்லை! மக்கள் பணத்தில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் சிறு சிறு அரசியல்வாதிகள் முதற்கொண்டு ஜனாதிபதிகள் வரையிலும் தமது பெயரை பொறித்தலும் இடங்களுக்கு தம் சுயப்பெயரை சூட்டுதலும் இருந்த கலாசாரத்தில் எத்தனை மாற்றம்… இன்று திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாண கடவுச்சீட்டு அலுவலகத்தில் இந்த மாற்றம் கண்கூடாக காணக்கூடியதாக உள்ளது. Vaanam.lk ################# ################## ################ நல்லவைகளை பாராட்டுவோம். யாழ்ப்பாணத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்கள பிராந்திய அலுவலகத்துக்கான திரைநீக்க பலகையில் தமிழ் மொழியை முதல் மொழியாகவும், எந்தவொரு எழுத்துப்பிழைகளும் இன்றி, சனாதிபதி பெயர் குறிப்பிடாது அமையப்பெற்றுள்ளமை நாட்டின் தலைவர் ஓர் கல்வியாளன் என்பதை சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது. Prashanthan Navaratnam- குட்டிக் கதைகள்.
ஒரு அரசன், நம்பக்கூடிய சிறந்த பொய்யை சொல்லும்ஒருவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று அறிவித்தார். நாட்டின் பல பகுதியிலிருந்து பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர். ஆனால் அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை. ஒரு நாள் கந்தல் உடை அணிந்த ஒருஏழை அரச சபைக்கு வந்து தான் அப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவதாகக் கூறினான். அரைகுறை மனதுடன் அரசன் சம்மதம் தெரிவித்தார். அந்த ஏழை சொன்னான், ''அரசே, உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? நீங்கள் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தர வேண்டியிருக்கிறது. அதை வாங்கத்தான் இன்று இங்கு நான் வந்தேன். ''அரசனுக்கு கோபம் வந்து விட்டது.'' நீ பொய் சொல்கிறாய்.. நானாவது உனக்கு பணம் கடன் தர வேண்டியிருப்பதாவது?' என்று கத்தினான். உடனே ஏழை சொன்னான்,''அரசே,நீங்களே ஒத்துக் கொண்டுவிட்டீர்கள், நான் சரியான பொய் சொன்னேன் என்று. எனவே போட்டி விதியின்படி எனக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுங்கள்.''அரசன்,தான் அவசரத்தில் உளறிவிட்டோம் என்பதை உணர்ந்தான். உடனே சொன்னான், ''இல்லை,இல்லை, நீ பொய் சொல்லவில்லை.'' என்று அவசரமாக மறுத்தான். ஏழை சொன்னான்,''நல்லது அரசே, நான் சொன்னது பொய் இல்லை, உண்மைதான் என்றால், எனக்கு தர வேண்டிய ஆயிரம் பொற்காசுகளைக் கொடுங்கள்,' 'அரசன் அந்த ஏழையை சிறந்த பொய்யன் என்று ஏற்று ஆயிரம் பொற்காசுகளை வழங்கினான். கதை கருத்து காமெடி- குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் திறந்துவைப்பு!
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் திறந்துவைப்பு! குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்று(01) திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டச்செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இவ்அலுவலகம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களால் இன்று திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, கடற்றொழில் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ,வடக்குமாகாண ஆளுனர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் ,பிரதியமைச்சர்களான சுனில் வட்டஹல. நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், மற்றும் சி.வி.கே சிவஞானம் அமைச்சின் செயலாளர்கள், பிரதம செயலாளர் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் கலந்துகொண்டனர். மேலும், குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.சமிந்த பத்திராஜ ,யாழ் மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் , பிரதியமைச்சர்கள் ,யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதேவேளை, யாழ் மாவட்டச் செயலகத்தின் 60 ஆவது ஆண்டு பூர்த்தயினை முன்னிட்டு முத்திரையும் தபால் தலையும் வெளியிடப்பட்டது. https://athavannews.com/2025/1445545- இஷார செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்!
இஷார செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்! கடந்த பெப்ரவரி 19 அன்று வாழைத்தோட்டம் நீதிமன்ற வளாகத்திற்குள் பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டதற்கு உதவியதாகக் கூறப்படும் தப்பியோடிய பெண் ‘இஷார செவ்வந்தி’ நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் அண்மையில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட கெஹல்பத்தர பத்மே மற்றும் பிறரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது இந்த தகவல் தெரியவந்ததாக சி.ஐ.டி. தெரிவித்துள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை குறிவைத்து இலங்கை பொலிஸார், இந்தோனேசிய பொலிஸார் மற்றும் இன்டர்போல் நடத்திய கூட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தக் கைதுகள் நடந்தன. கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சாலிந்த மற்றும் பேக்கோ சமன் உள்ளிட்ட குழுவினர் தற்போது 72 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்படுகிறார்கள். https://athavannews.com/2025/1445565- யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!
யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு! யாழ்ப்பாணம் மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று(01) ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் யாழ்ப்பாணம் மண்டைதீவில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் ஷாமி சில்வா, விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், ச.ஶ்ரீபவானந்தராஜா வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். வடமாகாணத்தில் கிரிக்கெட்டின் மேம்பாட்டிற்கும், இளம் வீரர்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இந்த மைதானம் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த மைதானம் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கான வழிவகையை ஏற்படுத்தி, இலங்கையின் விளையாட்டுத் துறையில் புதிய கட்டத்தை ஆரம்பிக்க உள்ளது. இலங்கை கிரிக்கெட் சபை, இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து, நாடு முழுவதும் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காகவும், அனைத்துப் பகுதிகளிலும் உள்ள திறமையான வீரர்களுக்குச் சர்வதேசத் தரத்திலான வசதிகளை அளிப்பதற்கும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. இதேவேளை, எதிர்வரும் 3 வருடங்களில் இங்கு சர்வதேச போட்டிகள் இடம்பெறும் என ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடடதக்கது. https://athavannews.com/2025/1445596- உக்ரைன் மோதலுக்கு மேற்கத்திய நாடுகள் தான் காரணம்! -புடின்
உக்ரைன் மோதலுக்கு மேற்கத்திய நாடுகள் தான் காரணம்! - புடின். உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இடம்பெற்று வரும் மோதலுக்கு மேற்கத்திய நாடுகள் தான் காரணம் என ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். சீனாவின் தியான்ஜின் நகரில் நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”உக்ரைனை நேட்டோ அமைப்பில் இணைக்க மேற்கு நாடுகள் தொடர்ந்து முயற்சிப்பது உக்ரைன் மோதலுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியபடி, இது ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாக அமைகிறது. 2014ம் ஆண்டு உக்ரைனில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு, மேற்கத்திய நாடுகளில் தூண்டுதலின் பேரில் நடந்தது”இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1445535- ஆப்கன், பாகிஸ்தானில் நிலநடுக்கம்: நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்க வாய்ப்பு - தாலிபன் என்ன செய்கிறது?
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் 800க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு (31) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 800க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 2500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன் மக்கள் பலரும் நகங்கர் மாகாணத்தில் தஞ்சமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் எல்லை அருகே அமைந்துள்ள அந்நாட்டின் நகங்கர் மாகாணம் ஜலாலாபாத்தை மையமாக கொண்டு 8 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 6.0 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 800ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, நிலநடுக்கத்தால் காயமடைந்தவர்கள் நிலை கவலைக்கிடமாக இருப்பதனால் உயிரிழப்பு எண்ணிக்கை கூடும் என அஞ்சப்படுகிறது. இரவு மக்கள் உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலரும் பதற்றத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட 20 நிமிடம் கழித்து அதே மாகாணத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 4.5 ஆக பதிவானது. கட்டிடங்கள் குலுங்கி, பல வீடுகளின் கூரைகள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களில் பல அப்பாவி குழந்தைகளும் அடங்குவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அடுத்தடுத்து நிகழ்ந்த 2 நிலநடுக்கத்தால் நகங்கர் மாகாணத்தில் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள், பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் வரையிலும் உணரப்பட்டன. https://athavannews.com/2025/1445573- கருத்து படங்கள்
- யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.