Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. தவிசாளர் கதிரையில் சுடப்பட்டு இறந்தார் மிதிகம லசா..! மாத்தறை, வெலிகம பிரதேசசபை தவிசாளர் லசந்த விக்கிரமசேகர மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அவர் இறந்துள்ளார். பிரதேச சபை தவிசாளர் அறைக்குள் நுழைந்த துப்பாக்கிதாரிகள் அவரை சுட்டதாக முதற்கட்ட தகவல். லசந்த விக்கிரமசேகர, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர். அவரது மரணம் தொடர்பில் பாராளுமன்றில் பேசிய சஜித் பிரேமதாச, பொதுப்பாதுகாப்பு குறித்து கேள்வியெழுப்பியுள்ளார். விசாரணைகளை பொலிசார் முன்னெடுக்கின்றனர். 🔴 வெலிகம பிரதேச சபை சார்ந்த சில பின்னணிகள். * வெலிகம பிரதேச சபையின் கன்னி அமர்வு 27.06.2025 அன்று கூடியபோது சபை வளாகத்தில் உறுப்பினர்கள் மோதல் இடம்பெற்றது. - அன்று தவிசாளர் தெரிவுக்காக சென்ற இரு NPP உறுப்பினர்கள் கடத்தப்பட்டிருந்தனர். * வெலிகம பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் வீட்டின்மீது 16.07.2025 அன்று துப்பாக்கிப்பிரயோகம் நடத்தப்பட்டது. 🔴 யார் இந்த மிதிகம லசா (Midigama Lasa)? * தெற்கின் பாதாள உலகில் அறியப்பட்ட 38 வயதான ஒரு நபர். * ஹரக் கட்டா எனப்படும் பாதாளகுழு தலைவனின் நெருக்கத்துக்குரிய ஒருவர். * 2020 செப்டெம்பரில் கொலைச்சம்பவம் ஒன்றுக்காக கைது செய்யப்பட்ட ஒருவர். * 2025 இல் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் வழக்கறிஞர் தாரக நாணயக்காரவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக லசந்த விக்ரமசேகரவுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கும் உள்ளது. 🔴 வெலிகம பற்றிய அண்மைய செய்திகள் * சரியாக ஒரு மாதத்துக்கு முன்னர் (22.09), ரஸ்ய நபரின் வழிகாட்டலில் இயங்கிய இடத்தில் மீட்கப்பட்ட மெபெட்ரோன் என்ற போதைப்பொருள் மீட்கப்பட்ட பிரதேசமே வெலிகம. அங்கே மோல்டா நாட்டவரும் கைதாகியிருந்தார். * 24.09 அன்று, துப்பாக்கிகள், ரவைகள், போதைப்பொருட்களோடு பெண் உட்பட 2 பேர் வெலிகமவில் கைதாகினர். * முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் வெலிகம பகுதியில் ஹோட்டல் அருகில் 2023ம் ஆண்டு நடந்த துப்பாக்கி சூடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். 🔻 ஆக மொத்தத்தில், மக்களால் தெரிவுசெய்யப்பட்டு அரசியல் அதிகார கதிரையில் இருந்த ஒரு குற்றப்பின்னணியான நபர் இன்று சுடப்பட்டு இறந்துள்ளார். இத்தகைய பின்னணியுள்ள ஒருவரை தவிசாளராக மட்டுமல்ல வேட்பாளராக நியமிக்கவேண்டிய தேவை ஏன் ஐ. ம. சக்திக்கு ஏற்பட்டது? நீதிமன்ற வழக்கும், பிடியாணையும் விதிக்கப்பட்டிருந்த போதும் அவரது பதவியை பறிக்காகததும், உறுப்பினர் பதவியை வறிதாக்காமல் விட்டதும் ஐ. ம. சக்தியின் பெரும் தவறு. பொதுப்பாதுகாப்பு குறித்து பாராளுமன்றில் கேள்வியெழுப்பும் எதிர்க்கட்சித்தலைவர், இவற்றுக்கும் பொறுப்பேற்று அதே சபையில் விளக்கமளிக்க வேண்டியது கட்டாயமானது. Janakan Sivagnanam
  2. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர உயிரிழப்பு! வெலிகம பிரதேச சபை அலுவலகத்தில் இன்று காலை (22) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) உறுப்பினரும் வெலிகம பிரதேச சபையின் தலைவருமான லசந்த விக்ரமசேகர உயிரிழந்தார். வெலிகம பிரதேச சபை அலுவலகத்தில் வைத்து துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடாத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள், தவிசாளரிடம் கையொப்பம் பெற வந்ததாகக் கூறி, பிரதேச சபை வளாகத்திற்குள் பிரவேசித்துள்ளமை தெரியவந்துள்ளது. பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்ரமசேகர நாற்காலியில் அமர்ந்திருந்தபோது, மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடாத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். இதனையடுத்து அவர் உடனடியாக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இதேவேளை, சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர். https://athavannews.com/2025/1450861
  3. கெஹெல்பத்தர பத்மேவின் 50 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்! கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு தலைவரான ‘கெஹெல்பத்தர பத்மே’ வின் 29 பேர்ச்சஸ் காணியும், 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வு பிரிவினரால் இன்று(22) இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, கெஹெல்பத்தர பத்மேவிற்கு சொந்தமானதாக அடையாளம் காணப்பட்ட சொத்துக்களான மடெல்கமுவ, படபொத்த, உடுகம்பொல என்ற முகவரியில் உள்ள விடுதிக்குப் பின்னால் அமைந்துள்ள 20 பரப்பு காணி, அதே முகவரியில் உள்ள அதே விடுதி வளாகத்தில் அமைந்துள்ள ஆறு அறைகளைக் கொண்ட பகுதியளவு முடிக்கப்பட்ட கட்டிடம் என்பனவே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சொத்துக்கள் தொடர்பான தொடர்புடைய உண்மைகள் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கெஹெல்பத்தர பத்மேவுடன் தொடர்புடைய சொத்துக்கள் இன்று (22) அதிகாரப்பூர்வமாக பறிமுதல் செய்யப்பட்டன. அண்மையில், இந்தோனேசியாவில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கைகயில் கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட பாதாள உலக குழுவின் செயல்பாட்டாளர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளுக்கமைய, பல்வேறு நடவடிக்கைகளை பொலிஸாரும் குற்றப் புலனாய்வு பிரிவினரும் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2025/1450875
  4. போதைப் பொருள் கடத்தலின் பின்னணியில் உயர் அதிகாரிகள்? – விசாரணை சி.ஐ.டி.யிடம்! போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் முன்னாள் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் உயர் அதிகாரிகள் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு (சிஐடி) விசாரணையை ஆரம்பித்துள்ளது. வாராந்திர அமைச்சரவை ஊடக சந்திப்பில் உரையாற்றிய பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சருமான ஏஎஸ்பி எஃப்.யு. வுட்லர் இந்த விடயத்தை வெளிப்படுத்தினார். தவறான செயல்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட எந்தவொரு நபரும், தகுதி அல்லது பதவியைப் பொருட்படுத்தாமல் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் உறுதிபடுத்தினார். கடல் வழியாக அதிக அளவில் மெத்தம்பேட்டமைன் (ICE) மற்றும் ஹாஷிஷ் கடத்தப்படுவது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த விசாரணை நடத்தப்பட்டது. முன்னாள் சிரேஷ்ட போதைப்பொருள் அதிகாரிகள் இந்த சட்டவிரோத பொருட்களை கொண்டு செல்வதற்கு உதவியதாக ஒரு நபர் குற்றம் சாட்டியதாக சமூக ஊடக அறிக்கைகளை மேற்கோள் காட்டி ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். https://athavannews.com/2025/1450897
  5. கிண்ணியாவில் நிலத் தகராறில் 30 மாடுகள் மீது வாள்வெட்டு! மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக கிண்ணியா பிரதேசத்தில் நிலவும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் வேளாண்மை விவசாயிகளுக்கும் இடையேயான நீண்டகால நில மீட்புப் போராட்டத்தின் உச்சகட்டமாக, 30 மாடுகள் வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிண்ணியா குரங்குபாஞ்சான் இரட்டைக்குளம் பகுதியில் வைத்து நேற்று காலை(21) இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக, கிண்ணியா பிரதேச கால்நடை விவசாயிகளுக்கும் வேளாண்மை விவசாயிகளுக்கும் இடையிலான நில மீட்புப் போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. சுமார் 2876 ஹெக்டேயர் நிலம் மேய்ச்சல் தரைக்கு உரியது என மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த மே மாதம் 28 ஆம் திகதி தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பானது, கால்நடைகளுக்கு மேய்ச்சல் தரையின்றிப் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வந்த கிண்ணியா கால்நடை விவசாயிகளுக்கு வாழ்வில் விடிவை ஏற்படுத்தியிருப்பதாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். எனினும், இத்தீர்ப்பைத் தொடர்ந்து, கிண்ணியா மற்றும் குறிஞ்சாக்கேணி கமநல சேவை நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகள், தங்களுக்குரிய விவசாய நிலங்களில் பயிர் செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கித் தொடர்ந்து விவசாயம் செய்ய அனுமதிக்குமாறு கோரி தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இணங்க, நீதிமன்றத்தால் அடையாளப்படுத்தப்பட்ட குறித்த பகுதிக்குள் விவசாயிகளை வேளாண்மை செய்ய அனுமதிக்க வேண்டாம் என கமநல சேவை திணைக்களங்களுக்கு கிண்ணியா பிரதேச செயலாளரால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையிலேயே இரு தரப்பினருக்கும் இடையில் தொடர்ந்து முரண்பாடு ஏற்பட்டு வருகின்ற நிலையில் இந்த பின்னணியில் நேற்றையதினம் 30 மாடுகள் வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் இது குறித்து கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அதன்படி, 30 மாடுகள் வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளதுடன் 12 மாடுகளின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் நான்கு மாடுகளைக் காணவில்லை எனவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாள் வெட்டுக்கு இலக்கான மாடுகள், கால்நடைகள் பராமரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து கால்நடை வளர்ப்பாளர்கள் மிகுந்த கவலை தெரிவித்துள்ளனர். நீதிமன்றத் தீர்ப்பின் பின்னணியிலும் பதற்ற நிலை நீடிப்பதை இச்சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. இதேவேளை, சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1450852
  6. இந்திய இறக்குமதிகள் மீதான வரிகளை அமெரிக்கா 15%-16% ஆகக் குறைக்க வாய்ப்பு! இந்தியப் பொருட்களுக்கான அமெரிக்க வரிகளை தற்போதைய 50% இலிருந்து சுமார் 15–16% ஆகக் குறைக்கக்கூடிய நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் நிலையில் இந்தியாவும் அமெரிக்காவும் இருப்பதாக கூறப்படுகிறது. அறிக்கையின்படி, முன்மொழியப்பட்ட ஒப்பந்தம் முக்கியமாக எரிசக்தி மற்றும் விவசாயத் துறைகளில் கவனம் செலுத்துகிறது. ரஷ்யாவிலிருந்து மசகு எண்ணெய் இறக்குமதியை இந்தியா படிப்படியாகக் குறைப்பது குறித்து விவாதிக்கப்படும் முக்கிய விடயங்களில் ஒன்றாகும். இது ரஷ்ய எரிசக்தி விநியோகங்களை உலகளாவிய அளவில் சார்ந்திருப்பதைக் கட்டுப்படுத்தும் வொஷிங்டனின் முயற்சிகளுடன் ஒத்துப்போகிறது. பேச்சுவார்த்தைகளை நன்கு அறிந்த அதிகாரிகள், பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தில் இருப்பதாகவும், இந்த மாத இறுதியில் நடைபெறவிருக்கும் ஆசியான் உச்சிமாநாட்டிற்கு முன்னர் ஒப்பந்தத்தை முடிக்க இரு தரப்பினரும் பணியாற்றி வருவதாகவும், அங்கு முறையான அறிவிப்பு வெளியிடப்படலாம் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த வார தொடக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இடையே நடந்த தொலைபேசி உரையாடலுக்குப் பின்னர் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தம் முடிவடைந்தால், 2020 இல் கட்டண வேறுபாடுகள் காரணமாக பேச்சுவார்த்தைகள் முடங்கியதிலிருந்து இந்தியா-அமெரிக்க வர்த்தக உறவுகளில் மிக முக்கியமான முன்னேற்றத்தைக் குறிக்கும். இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக அமெரிக்கா தொடர்ந்து உள்ளது. அண்மைய ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகம் 200 பில்லியன் டொலர்களைக் கடந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1450889
  7. உகாண்டாவில் ஏற்பட்ட கோர விபத்தில் 63 பேர் உயிரிழப்பு! உகாண்டாவின் மிகவும் பரபரப்பான நெடுஞ்சாலைகளில் ஒன்றில்.. இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குறைந்தது 63 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர் என்று பொலிஸார் புதன்கிழமை (22) தெரிவித்தனர். தலைநகர் கம்பாலாவிற்கும் வடக்கு நகரமான குலுவிற்கும் இடையிலான நெடுஞ்சாலையில் நள்ளிரவுக்குப் பின்னர் இந்த விபத்து நிகழ்ந்தது. எதிர் திசைகளில் இருந்து வந்த இரண்டு பேருந்துகள், ஒரு லொரி மற்றும் பரிதொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றதால் இந்த விபத்து ஏற்பட்டதாக ஆரம்ப விசாரணைகள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2025/1450863
  8. ட்ரம்ப் – புட்டின் சந்திப்பு நிறுத்தி வைப்பு! உக்ரேனில் போரை தீர்ப்பது குறித்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை (21) தெரிவித்தார். இந்த சந்திப்பு கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. திகதி நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும், அது ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இடையேயான அழைப்பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலையில், ட்ரம்ப் – புட்டின் இடையிலான எதிர்கால சந்திப்பு தொடர்பான எந்த திட்டமும் இல்லை என்று பெயர் குறிப்பிட விரும்பாத வெள்ளை மாளிகையின் அதிகாரி ஒருவர் செவ்வாயன்று கூறியுள்ளார். அமைதிக்கான அமெரிக்கா மற்றும் ரஷ்ய திட்டங்களுக்கு இடையிலான முக்கிய வேறுபாடுகள் இந்த வாரம் பெருகிய முறையில் தெளிவாகத் தெரிந்தன. இது ஒரு உச்சிமாநாட்டிற்கான வாய்ப்புகளை அழித்துவிட்டது போல் தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு உச்சிமாநாட்டின் போது ட்ரம்பும் புட்டினும் இறுதியாக அலாஸ்காவில் சந்தித்தனர். ஆனால் உறுதியான முடிவுகள் எதுவும் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1450858
  9. கொழும்பிலிருந்து மன்னார் நோக்கிச் சென்ற சொகுசு பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு, பலர் காயம்! கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது மன்னார்-மதவாச்சி பிரதான வீதியின் வவுனியா, பரையநாளன் குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகட்டு பகுதியில் இன்று (22) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக செட்டிக்குளம் வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறித்த சொகுசு பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிய வருகின்றது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பரையநாளன் குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1450843
  10. அந்த அமெரிக்கர், கூச்ச சுபாவம் உடையவர். அவர் சொல்ல மாட்டார். 😂
  11. இந்த நாய்கள்... போதைப் பொருள் கலந்த நீரை குடித்த பின்பு, அதுகள் எல்லாம் தமது வாலை பார்த்தபடி... பம்பரம் மாதிரி ஒரே இடத்தில் நின்று சுத்திக் கொண்டு இருந்ததை பார்க்க பாவமாக இருந்தது. வாய் பேசாத ஜீவனும்... இந்தப் போதை பொருளால் பாதிக்கப் பட்டிருக்கும் கொடுமையை என்னவென்று சொல்வது.
  12. கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அனேகமான பகுதிகளில் தொடர்ந்தும் பலத்த மழை-மூவர் மரணம் -144 குடும்பங்கள் பாதிப்பு! இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை எதிர்வரும் மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது இதன் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதுடன் இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றிரவு 8.30 வரை அமுலில் காணப்படும் வகையில் குறித்த மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, பதுளை, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மாத்தறை நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலையில் சீரற்ற வானிலைக் காரணமாக மூன்று ;மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் பலத்த மழைக் காரணமாக 144 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இந்த குடும்பங்களைச் சேர்ந்த 585 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அத்துடன் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மலையக தொடருந்து மார்க்கத்தில் திட்டமிடப்பட்டிருந்த 04 தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கோட்டை தொடருந்து மார்க்கத்தில் மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளமையால் தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி கண்டி, மாத்தளையில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் மாத்தறை வரையிலான 04 தொடருந்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. https://athavannews.com/2025/1450782
  13. புத்தளத்திலிருந்து அந்த போதை மாத்திரை ஏற்றிய லொறி…. தமிழ்ப் பகுதியை நோக்கி வந்தது என்றால், முஸ்லீம்களை தவிர, வேறை யாராக இருக்க முடியும். தமிழன், சிங்களவன் என்றால்…. பெயர், ஊர், விலாசம் எல்லாம் போட்டு செய்தி வந்திருக்கும்.
  14. தெற்கின் அரசியல் சூத்திரம் அம்பலம் ஆகுமா |||||••••••••• •••••••••••••••••••••••••••••• செவ்வந்தி மித்தெனிய சென்று தப்பிச் செல்ல மனம்பேரியின் உதவி பெற்றாரா? °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° நேபாளத்தில்.. தமிழினி எனும் பெயரில் அறிமுகமாகி கைதான செவ்வந்தி பாதாளக் குழு தற்போது வெவ்வேறு விசாரணை குழுக்களினால் துருவித் துருவி தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன கனேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பிறகு இலங்கை பாதுகாப்புத் துறைக்கு சவாலாக தண்ணி காட்டிய செவ்வந்தி, பெகோ சமந்த பத்மேயின் உதவியுடன் நீர்கொழும்புக்கு தப்பிச் சென்று தனது சிகை அலங்காரத்தை மாற்றியுள்ளார். செவ்வந்தி மித்தெனியவுக்கு தப்பிச் சென்று.. அங்கு யார் யாருடைய உதவிகளைப் பெற்றுள்ளார் என்பதையும்... இந்தியாவுக்கும், நேபாளத்துக்கு தப்பிச் சென்றார். அத்துடன் கனேமுல்ல சஞ்சீவ நீதிமன்ற கொலைக்கு 12 மணித்தியாலங்களுக்கு முன்பு ராஜபக்ஷ வலவ்வையின் காவல்காரன் கஜ்ஜா தனது பிள்ளைகளுடன் கொலை செய்யப்படல் போன்றதுடன்... கஜ்ஜா கொலைக்கு மனம்பேரியுடன் தொடர்புபட்டு ஆயுதங்களை வழங்கிய பெகோ சமந்த அடுத்து வந்த பாதாள சம்பவங்களுக்கும் மனம்பேரியுடன் இணைந்து செயல்பட்டாரா? மனம்பேரி தொடர்பு இல்லாமல் செவ்வந்தி தப்பித்திருக்க முடியாது என பாதுகாப்புதரப்பு தீவிரமாக நம்புவதுடன்... கஜ்ஜா மற்றும் செவ்வந்தி இடையிலான தொடர்புகள் வெளிவந்தால் தெற்கு அரசியலின் ஆயுத பாதாள கொலைக் கலாசாரத்தின் இரகசியங்கள் வெளி வந்து விடலாம் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது Fais Journalist
  15. எனக்கு ஐரோப்பாவுக்கு செல்ல ஆசை. கெஹெல்பத்தர பத்மே என்னை, ஐரோப்பாவுக்கு அனுப்புவதாக வாக்குறுதி அளித்தார். அதனால் தான் நான் 'கணேமுல்ல சஞ்சீவ'வை கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்தேன் - செவ்வந்தி Jaffna Muslim
  16. 🔴 வவுனியாவில் மாணவர்களுக்கு விற்க தயாராக இருந்த பல மில்லியன் பெறுமதியான போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக தகவல்! பத்து மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான மூன்று இலட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளை புத்தளம், கல்பிட்டியிலிருந்து வவுனியாவிற்கு கொண்டு சென்ற சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதன்படி, குறித்த சந்தேகநபர் நேற்று (19.10.2025) வவுனியா, முண்டிமுருப்பு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்தனர். கருவாடு கொண்டு செல்வதாகக் கூறி கெப் வண்டியொன்றினுள் மறைத்து வைத்து குறித்த போதை மாத்திரைகளை கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா குற்றப் புலனாய்வுப் பிரிவின் ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் படி, மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் போதைப்பொருட்களை கொண்டு சென்ற கெப் வண்டியுடன், சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியாவில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருக்கு வழங்குவதற்காக இந்த போதைப்பொருள் கொண்டு வரப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பாடசாலை மாணவர்களை குறிவைத்து நடத்தப்படும் இந்த போதைப்பொருள் கடத்தல் நீண்ட நாட்களாக இடம்பெற்று வருவதாகவும் ஒவ்வொரு போதை மாத்திரையும் 300 ரூபாய்க்கு விற்க தயாராக இருந்ததாகவும் தெரியவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. Vaanam.lk
  17. தென் மாகாணத்தில் இன்று முதல் GovPay செயலி மூலம் அபராதம் செலுத்த முடியும்! தென் மாகாணத்தில் ஆரம்பம் தென் மாகாணத்தில் இன்று முதல் GovPay செயலி மூலம் நேரடியாக அபராதம் செலுத்த முடியும் என்று பொலிஸ்ஸார் தெரிவித்துள்ளனர். இந்த வசதி அடுத்த மாதம் வட மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் 9 மாகாணங்களையும், இந்த திட்டத்துக்குள் உள்ளடக்கத் திட்டமிட்டுள்ளதாக பொலிஸ்ஸார் தெரிவிக்கின்றனர். மேலும் GovPay செயலி மூலம் தொலைபேசி அல்லது பிற சாதனத்தைப் பயன்படுத்தி எந்த இடத்திலிருந்தும் எளிதாகப் பணம் செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1450775
  18. ஒறிஜினல் தமிழர்கள் என்றால்... பார்சல் கட்டிக் கொண்டு போவது நோர்மல்தானே. 😂
  19. தீபாவளி பண்டிகையில் 26 இலட்ச அகல்விளக்குகள் ஏற்றி உலக சாதனை! உலகம் முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி அயோத்தியின் சரயு நதிக்கரையில் ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றி வழிபாடு நடத்துவது வழக்கமாகும் இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி நகரில் சுற்றுலாத்துறை, மாநில அரசு மற்றும் அயோத்தி மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து மகா தீபத்திருவிழாவை நடத்தியது. இதன்போது சரயு ஆற்றின் கரையில் 26,17,215 இலட்சம் அகல் விளக்குகள் ஏற்றி உலக சாதனை படைக்கப்பட்டது. திரளான மக்கள் கலந்து கொண்டு தீபங்களை ஏற்றினர். உத்தரப் பிரதேசத்தின் முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத், 26 இலட்சத்திற்கும் அதிகமான விளக்குகளை ஏற்றியமைக்கு கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழ் பெற்றார். இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1450772
  20. மக்களின் வளர்ச்சிக்கான ஒரு புதிய யுகத்தை நாம் கூட்டாக ஆரம்பித்துள்ளோம்-பிரதமரின் தீபாவளி நல்வாழ்த்து. தீபாவளியைக் கொண்டாடும் உலகெங்குமுள்ள மக்களுக்கும், விசேடமாக இலங்கைவாழ் மக்களுக்கும் எனது உளம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். தீபாவளி தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இதனைக் தெரிவித்தார் இன்று, இலங்கை தேசம் ஒரு முக்கியமான திருப்புமுனையில் நிற்கிறது. நீண்ட கால பொருளாதார, சமூக இருளிலிருந்தும், பின்னடைவுகளிலிருந்தும் விடுபட, மக்கள் புதிய எதிர்பார்ப்புக்களையும், நம்பிக்கைகளையும் சுமந்து நிற்கும் ஒரு காலகட்டம் இது. மக்களின் வளர்ச்சிக்கான ஒரு புதிய யுகத்தை நாம் கூட்டாக ஆரம்பித்துள்ளோம். இந்தத் தீபாவளியின் ஒளி, பொருளாதார மீட்சிக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் வித்திடும் மெய்ஞ்ஞான ஒளியாக அமையட்டும் என்றும் நாம் அனைவரும் கலாசாரப் பல்வகைமையின் மதிப்பை உணர்ந்து, கௌரவம், ஏற்றுக்கொள்தல், சகோதரத்துவம் ஆகிய பண்புகளுடன் கைகோர்ப்போம். வீடுகளிலும், நகரங்களிலும் ஏற்றப்படும் ஆயிரக்கணக்கான தீபங்களின் ஒளி, அனைத்து இலங்கையர்களினதும் மனங்களில் நம்பிக்கை, நல்லிணக்கம் மற்றும் ஞானத்தின் ஒளியைப் பரவச் செய்வதாக அமையப் பிரார்த்திக்கிறேன் என பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1450757

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.