Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. மிக்க நன்றி கோசான். 🙏 உண்மைதான்... கவி அருணாசலம் இருந்திருந்தால் அழகிய கருத்தோவியமாக வரைந்து இருப்பார். 🙂 மற்றது... அந்த எம்.ஜி.ஆர். விசயத்தை குமாரசாமியார் வந்தவுடன் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். 😂
  2. பையா.... நீங்கள், குமாரசாமி தாத்தா... தாத்தா... என்று இனி கூப்பிடாதேங்கோ. 😂 நான் நேற்றுப் பார்த்த அளவில், அவர் தான் உங்களை "பையன் தாத்தா" என்று கூப்பிட வேணும் போலுள்ளது. 🤣 ஓம்... சுவி. தமிழனின் இந்த நல்ல பழக்கத்தை பல இடங்களில் நேரில் கண்டுள்ளேன். 🙂
  3. தமிழ்ப் பொது வேட்பாளர் தமிழ்ப் பொது நிலைப்பாட்டின் குறியீடு! நிலாந்தன். தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கும் சிவில் சமூகங்களின் கூட்டிணைவு யாராலோ இயக்கப்படுகிறது என்று ஒரு சந்தேகத்தை சில கட்சிகளும் சில ஊடகங்களும் பெரிதாக்கி வருகின்றன.மேற்படி சிவில் சமூகங்களின் கூட்டிணைவு வவுனியாவில் கூடிய பொழுது அந்தக் கூட்டத்துக்கு யாரோ நிதி உதவி வழங்கியிருப்பதாகக் கூறப்படுவது சரியா ? சிவில் சமூகங்களின் கூட்டிணைவைச் சேர்ந்தவர்கள் தரும் தகவல்களின்படி வவுனியா தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின் அங்கே ஓர் உண்டியல் வைக்கப்பட்டிருக்கிறது.அந்த உண்டியலில் கூட்டத்தில் பங்குபற்றிய அனைவரையும் தங்களால் இயன்ற நிதிப் பங்களிப்பைச் செய்யுமாறு கேட்கப்பட்டுள்ளது.அக்கூட்டத்தில் பங்குபற்றிய மதத் தலைவர்களும் உட்பட பெரும்பாலான குடிமக்கள் சமூகப் பிரதிநிதிகள் தங்களால் இயன்ற பங்களிப்பை நல்கியியிருக்கிறார்கள். மண்டபத்துக்குரிய வாடகையைக் கூட ஒரு சிவில் சமூகப் பிரதிநிதிதான் வழங்கியிருக்கிறார்.அந்த உண்டியலில் சேர்க்கப்பட்ட தொகை மொத்தச் செலவில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்குக்குக் கிட்ட வரும் என்று சம்பந்தப்பட்டவர்கள் கூறுகிறார்கள். ஆனால் அந்தக் காசை யாரோ ஒரு வெளிநாடு வழங்கியதா என்ற சந்தேகம் சில தரப்புகளால் எழுப்பப்படுகிறது. இக்கேள்விக்கு பதிலாக சில கேள்விகளையே திருப்பி கேட்கலாம். முதலாவது கேள்வி இக்குற்றச்சாட்டை முன்வைப்பவர்கள் அதற்குரிய ஆதாரங்களை வெளிப்படுத்துவார்களா? இரண்டாவது கேள்வி, வவுனியா தீர்மானத்தை நிறைவேற்றிய குடிமக்கள் சமூகங்கள் தமது தீர்மானத்தில் எதனைக் கூறுகின்றன? தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டப் போவதாகக் கூறுகின்றன.அப்படியென்றால் தமிழ் மக்கள் இப்பொழுது ஒரு தேசமாக இல்லையா ? இல்லை. தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரள விடாது பிரிக்கும் சக்திகள் பலமடைந்து வருகின்றன என்பதுதான் உண்மை. தமிழ் மக்களின் தாயகத்தை வடக்கு கிழக்காக பிரிப்பதற்கு உழைக்கும் சக்திகள் கிழக்கில் வாக்கு பலத்தோடு மேலெழுந்துள்ளன. அதேசமயம் தமிழர் தாயகம் எங்கும் தமிழ் மக்களைக் கட்சிகள் பிரிக்கின்றன. கட்சி ஆதரவாளர்களாக தமிழ் மக்கள் பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள்.ஒரு கட்சி எதிர்க் கட்சிக்காரர்களை அரசாங்கத்தின் அடிவருடிகள் அல்லது துரோகிகள் அல்லது கைக்கூலிகள் என்றெல்லாம் வர்ணிக்கின்றது. இவ்வாறு தமது அரசியல் எதிரிகளை ஒருவர் மாறி ஒருவர் துரோகியாகச் சித்தரிப்பதன்மூலம் தமிழ் மக்கள் துரோகிகளாகவும் தியாகிகளாகவும் பிரிக்கப்படுகின்றார்கள். இது தவிர தீவிர இந்து மத நிலைப்பாட்டைக் கொண்ட தரப்புக்களால் மதப் பிரிவுகள் ஊக்குவிக்கப்படுகின்றன. இந்தப் பிரிவுகளைத் தாண்டி தமிழ் மக்களை ஒன்றாக்க வேண்டிய கட்சிகள் தங்களுக்கு இடையேயும் ஒற்றுமையாக இல்லை மட்டுமல்ல, கட்சிகளுக்குள்ளேயும் உடைவுகள் வந்துவிட்டன. இப்படிப்பார்த்தால் தமிழ் மக்களைப் பிரிக்கும் சக்திகள்தான் தாயகத்தில் பலமாகக் காணப்படுகின்றன.அப்படித்தான் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும். அங்கேயும் இறந்தவர்களை நினைவு கூரும் விடயத்தில் தமிழர்கள் இரண்டாகி நிற்கிறார்கள்.அதுமட்டுமல்ல இறந்தவர்களை உயிர்பிக்கும் விடயத்திலும் தமிழ் மக்கள் இரண்டாக நிற்கிறார்கள். தாயகத்தில் உள்ள தமிழ் மக்களை கலந்து பேசாமல் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்கள் சில இமாலய பிரகடனத்தை வெளியிடுகின்றன. இப்படியாக தாயகத்திலும் புலம்பெயர்ந்த பரப்பிலும் தமிழர்கள் தொடர்ந்து பிரிக்கப்படுகிறார்கள். இத்தகைய பொருள்படக் கூறின் தமிழ் மக்களைத் தேசமாகத் திரட்டுவதற்குரிய சக்திகள் பலவீனமாக இருக்கின்றன என்று தான் கூற வேண்டும். அதனால்தான் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்ட வேண்டும்; தமிழ் சக்தியை ஒரு மையத்தில் குவிக்க வேண்டும்; தமிழ் பலத்தை ஒரு மையத்தில் குவிக்க வேண்டும் என்று குடிமக்கள் சமூகங்கள் கேட்கின்றன. அவ்வாறு தமிழ் மக்களை ஒரு மையத்தில் திரட்டுவது தமிழ் மக்களுக்கு நல்லதா கெட்டதா? ஆனால் சில அரசியல்வாதிகள் கூறுகிறார்கள், அவ்வாறு தமிழ் மக்களைத் திரட்டும் நடவடிக்கைகளுக்கு பின்னணியில் ஏதோ ஒரு தூதரகம் அல்லது வெளிநாடு இருப்பதாக. இப்பொழுது மேலும் ஒரு அடிப்படைக் கேள்வியைக் கேட்கலாம். உலகில் ஒரு மக்கள் கூட்டத்தை -அது சிறியதோ பெரியதோ- ஆள நினைக்கின்ற அல்லது தோற்கடிக்க நினைக்கின்ற அல்லது கையாள நினைக்கின்ற வெளிநாடுகள் அந்த மக்கள் கூட்டத்தை பிரித்துப் பிரித்துக் கையாளுமா? அல்லது சேர்த்துக் கூட்டிக்கட்டிக் கையாளுமா? அதற்கு ஆங்கிலத்தில் “டிவைட் அண்ட் ரூல்” என்ற கோட்பாடு உண்டு. எல்லாப் பேரரசுகளும் தமக்கு அருகே உள்ள சிறிய நாடுகளை பிரித்துத்தான் கையாண்டன. அப்படிப் பார்த்தால் ஒரு மக்கள் கூட்டத்தைக் கையாள முற்படும் எல்லா வெளித் தரப்புகளும் அந்த மக்கள் கூட்டத்தை எப்படி பல்வேறு கூறுகளாகப் பிரிக்கலாம் என்றுதான் சிந்திக்கும். ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள சில கட்சிகள் கூறுகின்றன, தமிழ் மக்களைப் பிரிக்கும் சக்திகளுக்கு எதிராக செயல்படுவது ஒரு வெளிநாட்டு நிகழ்ச்சி நிரல் என்று. உலகிலேயே ஐக்கியம் அல்லது ஒற்றுமை எனப்படுவதனை ஒரு வெளிநாட்டுச் சதி என்று சந்தேகிக்கும் மக்கள் கூட்டமாக ஈழத் தமிழர்கள் மாறிவிட்டார்கள். 2009 க்குப் பின்னரான தமிழ்க் கூட்டு உளவியலின் அடுத்த கட்ட வீழ்ச்சி இது. 2009க்குப் பின்னரான தமிழ்க் கூட்டு உளவியல் எனப்படுவது ஆறாக் காயங்களும் ஆறாத் துயரங்களும் நிறைந்த கொந்தளிப்பான ஒரு கூட்டு மனோ நிலை. கொந்தளிப்பான மனோநிலை காரணமாக தமிழ் மக்கள் யாரைத் தங்களுடைய பிரதிநிதிகளாகத் தெரிவு செய்கின்றார்களோ அவர்களையே மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து வருகிறார்கள். தமிழ்த் தேசிய பரப்பில் உள்ள எல்லா தலைவர்களின் மீதும் பெட்டி கை மாறிய குற்றச்சாட்டு அல்லது மதுபானக் கடைக்கான லைசன்ஸ் வாங்கிய குற்றச்சாட்டு அல்லது தூதரகங்களிடம் மாதாந்தச் சம்பளம் பெறுவதான குற்றச்சாட்டு போன்ற பல்வேறு வகைப்பட்ட குற்றச்சாட்டுகளும் உண்டு. அப்படியென்றால் இவ்வளவு குற்றச்சாட்டுகளையும் அவர்கள் மீது வைத்துக்கொண்டு ஏன் அவர்களை தலைவர்களாக தெரிவு செய்தார்கள்? கடந்த 15 ஆண்டுகளிலும் தமிழ் மக்கள் மத்தியில் விமர்சனத்திற்கு இடமற்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜன வசியம் மிக்க தலைவர் என்று யார் உண்டு ? பதவியேற்ற புதிதில் விக்னேஸ்வரனுக்கு எதோ ஒரு ஜனவசியம் இருந்தது. ஒரு பண்பாட்டுத் தோற்றமும் இருந்தது. ஆனால் இப்பொழுது அது இல்லை. இப்பொழுது அரங்கில் ஜனவசியம் மிக்க தலைவர்கள் அனேகமாக இல்லை என்று ஒரு நிலை. இந்த வெற்றிடத்தை மிக ஆழமாக வியாக்கியானம் செய்தால், தமிழ் மக்களை ஒன்று திரட்டி வழி காட்ட வல்ல கவர்ச்சியான தலைவர்கள் யாருமே இல்லை என்று பொருள். இது மிகவும் பாரதூரமான ஒரு வெற்றிடம். கடந்த 15 ஆண்டு காலத் தேர்தல் அரசியலானது தமிழ் மக்களை தங்களுடைய பிரதிநிதிகளை நம்பாத ஒரு மக்கள் கூட்டமாக ;ஒருவர் மற்றவரைச் சந்தேகிக்கும் ஒரு மக்கள் கூட்டமாக; எல்லாப் புதிய நகர்வுகளுக்கும் பின்னால் சூழ்ச்சி கோட்பாடுகளைத் தேடி அலையும் ஒரு மக்கள் கூட்டமாக மாற்றி விட்டதா ? இவ்வாறு தமிழ் மக்கள் அவிழ்த்து விட்ட பாக்கு மூட்டையைப் போல சிதறிப் போவதைத் தடுப்பதற்காகத்தான் குடிமக்கள் சமூகங்கள் முதலில் ஒன்று திரண்டு வவுனியாத் தீர்மானத்தை நிறைவேற்றின.நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை முன்னிறுத்துவதன் மூலம் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்ட வேண்டும் என்ற பெருவிருப்பத்தை சிவில் சமூகங்கள் வவுனியா தீர்மானத்தில் வெளிப்படுத்துகின்றன. சிவில் சமூகங்களின் இந்த விருப்பத்தை உள்வாங்கி அரசியல் கட்சிகள் முதலில் தங்களுக்கு இடையிலான வேறுபாடுகளைக் களைந்து தங்களுக்கு இடையே விசுவாசமான ஐக்கியத்தைக் கட்டி எழுப்ப வேண்டும். அதன்மூலம் தமது வாக்காளர்கள் மத்தியில் தங்கள் மதிப்பையும் அந்தஸ்தையும் உயர்த்தி கொள்ள வேண்டும். அடுத்த கட்டமாக கட்சிக்காக வாக்கு சேர்ப்பதற்கு பதிலாக தேசத்துக்காக வாக்குச் சேர்க்கும் ஒரு கட்சி அரசியலைக் கட்டி எழுப்ப முன் வர வேண்டும். அப்பொழுதுதான் தமிழ் மக்கள் முழுமையான பொருளில் ஒரு தேசமாகத் திரள்வார்கள்.தமிழ் மக்கள் மத்தியில் இப்பொழுது நிலவும் அவநம்பிக்கைகளையும் கசப்பையும் வெறுப்பையும் குற்றச்சாட்டுகளையும் சூழ்ச்சி கோட்பாடுகளையும் தோற்கடிப்பதற்கு ஒரே வழி விசுவாசமான உருகிப் பிணைந்த ஐக்கியம்தான். அதை எந்த ஒரு வெளிநாடும் காசு கொடுத்துச் செய்யப் போவதில்லை. எந்த ஒரு அனைத்துலக அரசு சார்பற்ற நிறுவனமும் அதற்கு நிதி உதவி வழங்கப் போவதில்லை.அது ஒரு சதியல்ல அது ஒரு புரொஜக்ட் அல்ல.அது ஒரு பெருஞ் செயல்.அது தமிழ் மக்கள் தாங்களாகவே செய்ய வேண்டிய ஒன்று. அதைத் தமிழ் மக்களைத் தவிர வேறு யாருமே செய்ய முடியாது. அதைத் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள கட்சிகளும் குடிமக்கள் சமூகங்களும் புத்திஜீவிகளும் ஊடகங்களும் மத நிறுவனங்களும் ஒன்றிணைந்து செய்ய வேண்டும். ஒரு காலம் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த உன்னதமான தியாகங்களையும் வீரச் செயல்களையும் செய்த ஒரு மக்கள் கூட்டம்தான் ஈழத் தமிழர்கள்.மகத்தான சித்தர்களையும் ஞானிகளையும் சான்றோர்களையும் அறிஞர்களையும் நிறுவன உருவாக்கிகளையும் கலைஞர்களையும் உற்பத்தி செய்த ஒரு மக்கள் கூட்டம்தான் ஈழத்தமிழர்கள். இப்பொழுது புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் இரண்டாம் தலைமுறையானது ஏனைய சமூகங்களைக் கூர்ந்து கவனிக்கவைக்கும் கவர்ச்சியான வெற்றிகளைப் பெறத் தொடங்கிவிட்டது. தமிழ் மக்கள் பண்பாட்டுச் செழிப்பு மிக்கவர்கள். பண்பாட்டுச் செழிப்பு மிக்க ஒரு நடுத்தர வர்க்கத்தை கொண்ட மக்களை எந்தப் புறத்தியாரும் தோற்கடித்து விட முடியாது. பண்பாட்டுச் செழிப்பு மிக்க நடுத்தர வர்க்கத்தை கொண்ட ஒரு மக்கள் கூட்டத்தை இலகுவாக தோற்கடித்து விட முடியாது என்பதனை அமில்கார் கப்றால் போன்ற தேசியவாத சிந்தனையாளர்கள் அழுத்திக் கூறுகிறார்கள். பண்பாட்டு மறுமலர்ச்சியே விடுதலையின் திறவுகோல். தமிழ் மக்கள் மத்தியில் ஒரு புதிய பண்பாட்டு விழிப்பை ஏற்படுத்த வேண்டும். இப்போது நிலவும் அவநம்பிக்கைகள்,குற்றச்சாட்டுகள், சூழ்ச்சிக் கோட்பாடுகள் போன்றவற்றிலிருந்து தமிழ் மக்களை விடுவித்து, உருகிப் பிணைந்த ஒரு தேசமாகத் தமிழ் மக்களைக் கட்டியெழுப்ப வேண்டும். ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்தும் அரசியல் தெரிவானது அதைச் செய்யுமாக இருந்தால் கடந்த 15 ஆண்டுகளில் தமிழ் மக்கள் பெற்ற மகத்தான வெற்றியாக அது அமையும். https://athavannews.com/2024/1384115
  4. தற்கொலை குண்டுதாரிகளை பிரபாகரன் உருவாக்கியதற்கான காரணம் இதுதான் – வவுனியாவில் அநுர தெரிவிப்பு! இந்த நாட்டிலுள்ள வடக்கு – தெற்கு ஆட்சியாளர்களே மக்கள் மத்தியில் பாரிய இனவாதத்தை தூண்டி, மாபெரும் யுத்தத்தை உருவாக்கியதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். மேலும், 1981 இல் தேர்தலில் வெற்றி காண்பதற்காக, ரணில் விக்கிரமசிங்கவே யாழ். நூலகத்தை எரித்தான எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். வவுனியாவிலுள்ள இரட்டைபெரியகுளம் விருந்தினர் விடுதியில் நேற்று இடம்பெற்ற, தேசிய மக்கள் சக்தியின் மகளிர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “இந்த நாடு நெருப்பாலும் வெள்ளத்தாலும் அழிந்த நாடு அல்ல. அனைத்து செல்வ செழிப்பும் நிறைந்த பொக்கிஷமே எமது நாடு. ஆனால், இந்த மாபெரும் பொக்கிஷத்தில், உண்பதற்கும் குடிப்பதற்கும் இன்றி மக்கள் தவித்து வருகின்றனர். மருந்தின்றி இறந்து போகின்றார்கள், வீடின்றி வாழ்கின்றார்கள். ஆகையால், ஆட்சி செய்தவர்கள் இந்த நாட்டை வளர்க்கவில்லை. எனவே, தேசிய மக்கள் சக்தியுடன், மக்களும் ஒன்றாக இணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியம் என தேசிய மக்கள் சக்தி உறுதியளிக்கிறது. நாம் எமது நாட்டு மக்களின் வாழ்க்கையை சிறப்பாக மாற்றுவோம். இந்த ஆட்சியாளர்கள் மக்கள் மத்தியில் பாரிய இனவாதத்தை தூண்டி, மாபெரும் யுத்தத்தை உருவாக்கினார்கள். அது தானாக உருவான யுத்தம் அல்ல. வடக்கு – தெற்கிலுள்ள அரசியல் வாதிகள், அவர்களின் பதவிக்காக அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட யுக்தியினால் உருவான யுத்தம். பிரபாகரனால் தற்கொலை குண்டுதாரிகள் உருவாவதற்கு பிரதான இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது, 1981 இல் அபிவிருத்தி சபை தேர்தல். ரணில் விக்கிமசிங்கவின் குழுவினர் யாழ்ப்பாணத்துக்குச் சென்று யாழ். நூலகத்தை எரித்தார்கள். தேர்தலுக்காக, வாக்குகளை பெறுவதற்காக நூலகத்தை எரித்த சம்பவத்தை நீங்கள் எங்காவது கேள்விப்பட்டதுண்டா? வடக்கிலுள்ள தமிழ் மக்கள் வாசிப்பு பழக்கத்துடன் மிகவும் நெருக்கமானவர்கள். அம்மக்கள் யாழ். நூலகத்துக்குச் செல்கையில், தெய்வ ஸ்தலங்களுக்கு செல்வதைப்போன்று தமது காலணிகளை வெளியில் விட்டுவிட்டுச் செல்வதை நான் கண்டுள்ளேன். வடக்கு மக்களுக்கும் யாழ். நூலகத்துக்கும் இடையில் அவ்வாறானதொரு ஒற்றுமையிருந்து. ஆனால், ரணில் விக்கிரமசிங்கவின் குழுவினர், 1981 இல் தேர்தலில் வெற்றிக்காண அந்த நூலகத்தை தீக்கிரையாக்கினார்கள். தெற்கிலுள்ள அரசாங்கம் தமது நூலகத்தை தீயிட்டு எரிப்பதனை நினைத்து அம் மக்கள் வேதனைப்பட்டார்கள். இதனை தொடர்ந்து 1983 ஆம் ஆண்டு முக்கியமான சம்பவமொன்று நிகழ்ந்தது. மக்கள் விடுதலை முன்னியுடன், மக்கள் ஒன்றிணைந்து செயற்படுவதைக்கண்டு ஜேஆர் ஜெயவர்தன பயந்து, எமது கட்சியின் பயணத்தை ஒழிக்க முடிவு செய்தார். மக்கள் விடுதலை முன்னணியின் வளர்ச்சி ஜேஆர் ஜெயவர்தனவின் அரசியலுக்கு தடையாக இருந்தது. அதனால், அவர் எம் கட்சியை தடைசெய்ய முயற்சித்தார். https://athavannews.com/2024/1384123
  5. கல்வி உயர் மட்டத்தில் பேணப்பட்டதனாலேயே யாழ்ப்பாணம் கட்டியெழுப்பப்பட்டது – யாழில் ஆசிரியர்களுக்கான நியமனங்களை வழங்கி வைத்த ஜனாதிபதி தெரிவிப்பு! கல்வி உயர் மட்டத்தில் பேணப்பட்டதன் காரணமாகவே யாழ்ப்பாணம் கட்டியெழுப்பப்பட்டதாகவும், யாழ்ப்பாணத்திலுள்ள சில பாடசாலைகள் உலகம் முழுவதும் பெரும் புகழைப் பெற்றதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்க தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தின் யாழ். மாவட்டத்தில் புதிய ஆசிரியர்களுக்கான நியமனங்களை வழங்கி வைத்த ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். யாழ்.மாவட்டத்திலுள்ள புதிய ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு, யாழ்ப்பாணம் தந்தை செல்வா கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது. இதன்போது, வடக்கு மாகாணத்தின் யாழ். மாவட்டத்தில் 375 ஆசிரியர்களுக்கான நியமனங்களை வழங்கி வைத்ததன் பின்னர் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தில் காணப்பட்டிருந்த யாழ்ப்பாண ஆசிரியர் பாரம்பரியமே, நாட்டிலுள்ள ஆசிரியர்களுக்கு இன்றும் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்வதாக சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, இந்த யாழ்ப்பாணத்து ஆசிரியர் பாரம்பரியத்தை மீள் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். கடந்த காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்த ஆசிரியர்கள் சேவைகள், நாடளாவிய ரீதியிலும் சர்வதேச அளவிலும் மிகவும் கௌரவத்துடன் பார்க்ப்பட்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். அந்தப் பொறுப்பை யாழ். ஆசிரியர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் நிறைவேற்றியிருந்ததாக தெரிவித்தார். மேலும் தான் படித்த கொழும்பு றோயல் கல்லூரியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் இருந்ததாகவும், அவர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருந்ததாகவும் குறிப்பிட்டார். யாழ்ப்பாண ஆசிரியர்களின் விசேடமான அர்ப்பணிப்பின் காரணமாகவே, யாழ்ப்பாணத்தில் பிரபல ஆசிரியர்கள் குறித்து சமூகத்தில் பேசப்பட்டதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அந்த ஆசிரியர் பாரம்பரியம், நாட்டின் ஆசிரிய சேவைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியதாகவும், கல்வி உயர் மட்டத்தில் பேணப்பட்டதன் காரணமாகவே யாழ்ப்பாணம் கட்டியெழுப்பப்பட்டதாகவும் தெரிவித்தார். குறித்த நியமனங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசொன்றை இதன்போது வழங்கியிருந்தார். மேலும் இந் நிகழ்வில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், குலசிங்கம் திலீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2024/1384111
  6. ஆம் சுவி, எதிர் பார்த்ததை விட ஒரு மங்களகரமான இனிமையான சூழலில் இந்தச் சந்திப்பு நடை பெற்றதாலும்… சந்திப்பின் போது மூவரும் மாறி மாறி சுவராசியமான விடயங்களை பேசிக் கொண்டு இருந்ததாலும் இரண்டரை மணித்தியாலம் எப்படி போனதென்றே தெரியவில்லை. உண்மையில் மனதிற்கு மகிழ்வான சந்திப்பாக அமைந்ததில் எம் மூவருக்கும் மகிழ்ச்சியே. 🥰
  7. ஏராளன் உங்கள் ஊக்கத்திற்கு நன்றி🙏. நான் எழுத தவற விட்டதை… குமாரசாமி அண்ணையும், பாஞ்ச் அண்ணையும் தொடர்ந்து எழுதுவார்கள் என நம்புகின்றேன். 🙂
  8. அதை ஏன்…. கேட்கிறீர்கள். குமாரசாமியார் தந்த உபசரிப்பையும், விருந்தோம்பலையும் வாழ்க்கையில் மறக்கவே முடியாத அளவிற்கு செய்து விட்டார். ❤️ நாம் புறப்படும் போது… இரண்டு பெரிய பை நிறைய உளுந்து 🥯வடைகளையும், அதற்கு பச்சை மிளகாய் சம்பலும், பூந்தி லட்டுக்களும், 🍰“கேக்”குகளையும் 🎂 எமது வாகன தரிப்பிடத்துக்கு கொண்டு வந்து தந்து அசத்தி விட்டார். 💓
  9. நீங்கள் வேறை… நாங்கள் எதிர் பார்த்துப் போன குமாரசாமி அண்ணைக்கும், நேரில் கண்ட தோற்றத்திற்கும் மிகவும் பாரிய வித்தியாசம். உண்மையில் அவர் மிகவும் வயது முதிர்ந்தவராக, பெரிய உடல் அமைப்புடன் இருப்பார் என்று பார்த்தால்…. குமாரசாமி அண்ணையை இளமையான தோற்றத்தில் உடற்பயிற்சி செய்யும் உடல்வாகுடன் கண்டு ஆச்சரியம் அடைந்தோம். அதிலும் அவரின் வேற்று மொழி கலக்காத சுத்தமான தமிழ்ப் பேச்சு அற்புதம். இன்னும் கொஞ்ச நேரம் உரையாடி இருக்கலாமோ என நினைக்கும் அளவிற்கு அவர் தனது பேச்சின் மூலமும் செய்கையின் மூலமும் எம்மை கவர்ந்து இருந்தார். 🥰
  10. அதில் ஒரு “தொழில் ரகசியம்” இருக்கு கண்டியளோ….. 😁 தலைப்பிலேயே…. சந்திப்பில் ஒரு படமும் இல்லை என்றால், ஒரு குருவியும் திரிக்குள் வந்து எட்டியும் பார்க்க மாட்டார்கள் என்பதால் போடவில்லை.😂 (சும்மா தமாசு.) 🤣 நாளை பாஞ்ச் அண்ணையுடன் இதனைப் பற்றி விரிவாக எடுத்துச் சொல்கின்றேன். எப்படியும் அடுத்த சில நாட்களுக்குள், அவரை மீண்டும் யாழ். களத்தில் எழுத வைக்க வேண்டும் என்பது எனது ஆசை. அதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்துக் கொண்டுளேன். 🙂
  11. எங்கள் உரையாடலில்… உங்களின் திறமையை பற்றியும் கதைத்தோம். அதிலும்… யாழ். அகவை 26, சுய ஆக்கம் பகுதியில் நீங்கள் பல்வேறு கருப் பொருளில், பல ஆக்கங்களை எழுதிய உங்கள் ஆற்றலைப் பார்த்து வியந்தோம். 🤝👍🏽 அந்தத் திறமைக்கு… எமது பாராட்டுக்கள் ரசோதரன். 👏🏻 🙂
  12. காலை பத்தரை மணிக்கு... பாஞ்ச் அண்ணையும், நானும் ஒரு இடத்தில் சந்தித்து, ஒரு வாகனத்தில் இருவருமாக பயணிப்பது என தொலை பேசியில் முடிவெடுத்து 10:30 மணிக்கு நான் காத்திருக்க, பாஞ்ச் அண்ணையை அங்கு காணவில்லை. தமிழ் ஆட்களின் நேரத்தைப் பற்றி 😂 நான் நன்கு அறிந்து இருந்ததால்.... பத்தரை மணிக்கே, பாஞ்ச் அண்ணைக்கு தொலை பேசி எடுக்க, அவர் தனது மகளுடன் எனக்கு முன்னால் தாங்கள் வந்து விட்டோம் என்று காரில் கைகாட்டிய படி கடந்து சென்றார். 🙂 நான் அவர்களின் நேரம் தவறாமையை தவறாக எடை போட்டு விட்டேனே என்று மனதிற்குள் சங்கடப் பட்டுக் கொண்டு... பாஞ்ச் அண்ணையும் நானும் ஒரு காரில் குமாரசாமி அண்ணையை சந்திக்க அதிவேக நெடுஞ்சாலையில் பழைய தமிழ்ப் பாடல்களை கேட்டுக் கொண்டு பயணித்தோம். எனக்கு வாகனம் ஓடுவதை விட.... அருகில் இருந்து பயணிப்பதுதான் பிடித்தமானது என்பதால்... வாகனம் ஓடும் பொறுப்பை பாஞ்ச் அண்ணையிடமே கொடுத்து விட்டேன். நாங்கள் எதிர்பார்த்த நேரம் 11 மணிக்கு, மண்டபத்திற்கு சென்று வாகனத்தை தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு மண்டபத்தின் உள்ளே சென்றால்.... தவில், நாதஸ்வர கச்சேரி இசை நடந்து கொண்டிருந்தது. குமாரசாமி அண்ணையை... முன், பின் கண்டிராததால் அவரை எப்படி கண்டு பிடிப்பது என்ற யோசனையுடன் நானும், பாஞ்ச் அண்ணையும் போற, வாற ஆக்களைப் பார்த்து... இவர் குமாரசாமியாக இருப்பாரோ... அவர் குமாரசாமியாக இருப்பாரோ என்று புன்முறுவல் பூத்துக் கொண்டு இருந்தோம். 😂 🤣 குமாரசாமியார் சுழியன். எங்களுக்குத்தான்... குமாரசாமியாரை தெரியாதே தவிர, அவருக்கு எங்களை நன்றாக தெரிந்தே இருந்தது🙂. பட்டு வேட்டி சால்வையுடன்... தமிழ்ப் பழமாக எங்கள் முன் ஒருவர் சிரித்துக் கொண்டு வந்து கதைக்கும் போதும் பாஞ்ச் அண்ணை குமாரசாமியை தேடுகின்றோம், அவர் எங்கு இருக்கின்றார் என்று சொல்ல முடியுமா என்று கேட்க, வந்தவர் வாங்கோ... இந்த மேசையில் இருந்து கதைப்போம் என்று, அவரும் பிடி கொடுக்காமல் எம்மை அழைத்துச் சென்றார். குமாரசாமியாரின் குரல் எனக்கு பரிச்சயமானது என்பதால்... இவர்தான், நாம் தேடிய ஆள் என்று கண்டு பிடித்து... கட்டிப் பிடித்து... கொஞ்சிய கையுடன் பொறுங்கோ என்று... கோப்பியும், தட்டு நிறைய பலகாரமும் கொண்டு வந்து தந்தார். அந்த சுப நிகழ்விற்கு குமாரசாமி அண்ணையை நாம் தேடிப் போய் இருந்தாலும்.... பாஞ்ச் அண்ணை முன்பு ஜேர்மன் விளையாட்டுக் கழகத் தலைவராக இருந்த போது... சிறுவர்களாக விளையாடிய பலர் இளைஞர்களாக பாஞ்ச் அண்ணையிடம் வந்து தமது அன்பை பரிமாறிக் கொண்டார்கள். என்னுடன் முன்பு வேலை செய்த பலரையும் அந்த நிகழ்வில் 25 வருடங்களுக்கு பின்பு கண்டு கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது. 🙂 யாழ். களத்தில் உள்ள ஒவ்வொருவரின் தனித் திறமையை பற்றி நாம் நிறைய கதைத்தோம். சிலரின் அபரிதமான ஆற்றல்கள் உண்மையிலேயே வியக்க வைத்தது. அந்த வகையில்... யாழ்.களத்தின் ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் போற்றுதலுக்கு உரிய திறமைசாலிகள் என்பதை நாம் ஒரு மனதாக ஏற்றுக் கொண்டது சிறப்பு. 👍 முதல் முறை சந்தித்த சந்திப்பு என்ற போதும்... உடன் பிறந்த சகோதரன் ஒருவரை கண்ட மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடித்தது. இப்படியான நல் உள்ளங்களுடன் பழகக் கிடைத்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்த யாழ்.களத்தை நன்றியுடன் நினைவு கூர்ந்து இனிய நினைவுகளுடன் விடை பெற்றோம். ❤️
  13. நன்றி இணையவன். இதனை பாஞ்ச் அண்ணைக்கு தெரிவித்து விடுகின்றேன். 🙏
  14. ஈழப்பிரியன்... பாஞ்ச் அண்ணை தனது இருதய அறுவைச் சிகிச்சையின் பின் சிறிது காலம் ஓய்வு எடுத்து இருந்தது உண்மைதான். ஆனால் தற்போது உடல் நலம் சற்று தேறி உள்ள நிலையில்... யாழ். களத்திற்குள் வர பல முறை முயற்சி எடுத்தும், உள் நுழைய முடியவில்லை என்று கூறினார். தான் வழமையாக பாவிக்கும் கடவுச் சொல்லையே பாவித்தும் ஏதோ தடங்கல் காட்டுகின்றது என்றார்.
  15. அவர்களை போகும் வழியில்... வீட்டிற்கு வந்து உணவு அருந்திவிட்டு செல்லும் படிதான் கேட்டிருந்தேன். ஆனால் அவர்கள் தவிர்க்க முடியாத காரணத்தால், நேற்று மதியம் தாண்டித்தான் அங்கிருந்து புறப்பட்டு இரவு இங்கு விடுதிக்கு வந்து சேர்ந்ததால்.... என்னால் அவர்களை வீட்டிற்கு கூப்பிட முடியாமல் போய் விட்டது. 🙂 அத்துடன் நாளை காலை அவர்கள் புறப்படுவதால்... சந்திப்பை தவற விட்டுவிடுவமோ என்ற அச்சத்தால் இன்றே அந்த நிகழ்வில்.... பட்டு வேட்டி சால்வையுடன் மங்களகரமாக நின்ற குமாரசாமி அண்ணாவை சந்தித்தோம்.
  16. படம் எடுத்தால்.... ஆயுள் குறைந்து விடும் என்று படம் எடுக்கவில்லை ஈழப்பிரியன். (லொள்)
  17. குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு. சென்ற மாதமளவில் @குமாரசாமி அண்ணை, நான் வசிக்கும் இடத்திற்கு அண்மையில் ஒரு சுப நிகழ்வு நடைபெற இருப்பதாகவும் அதில் கலந்து கொள்ள தான் வருவதாகவும் அப்படி வரும் போது எம்மை சந்திக்க ஆவலாக உள்ளதாகவும் கூறி இருந்தார். அதற்கு நானும் தாராளமாக வாருங்கள் சந்திப்போம் என்று கூறி இருந்தேன். அந்த நாளும் நெருங்க... குமாரசாமி அண்ணை நேற்று முன்தினம் தொடர்பு கொண்டு தாங்கள் புறப்பட இருப்பதாக கூறி தான் இங்கு வந்து தங்கி நிற்கும் உல்லாச விடுதியையும், நிகழ்ச்சி நடைபெறும் மண்டப விலாசத்தையும் அனுப்பி இருந்தார். அந்த இடங்கள் 30-40 கிலோ மீற்றர் சுற்றாடலில் இருந்த படியால் அவ்வளவு தொலைவில் இல்லை எல்லாம் வாகனத்தில் 🚗 30 நிமிடத்தில் செல்லக் கூடிய தொலைவில்தான் இருந்தது நல்லதாக போய் விட்டது. அவர்... நேற்று வந்து, இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டு விட்டு நாளை காலை புறப்பட இருப்பதாக தெரிவித்து இருந்தமையால்... காலம் குறுகிய நேரம் என்பதாலும், எப்படியும் இன்று சந்திப்பது என்று முடிவெடுத்து... அதை அந்த சுப நிகழ்வு நடக்கும் இடத்திலேயே செய்யலாம் உங்கள் விருப்பம் என்ன என கேட்ட போது, அவரும் அதனை தாராளமாக செய்யலாம் என சொன்னார். குமாரசாமி அண்ணை வசிப்பது ஜேர்மனியின் ஒரு தொங்கலில் என்றால்... நாம் வசிப்பது மற்ற தொங்கல். இடையில் 550 கிலோ மீற்றர் தூர இடைவெளியில் வசிக்கின்றோம். இந்தச் சந்தர்ப்பத்தை தவற விட்டால் வேறு சந்தர்ப்பம் மீண்டும் எப்போ கிடைக்கும் என தெரியாது என்ற படியால்... இருவரும் இந்தச் சந்திப்பை நிகழ்த்தியே தீர்வது என்பதில் உறுதியாக இருந்தோம். 🙂 இனி... எமது வீட்டிற்கு அண்மையில் வசிக்கும் @Paanch அண்ணையுடன் தொடர்பு கொண்டு, குமாரசாமி அண்ணையை சந்திக்க இன்று மதியம் நேரம் இருக்குமா என கேட்ட போது... அவரும் முழு உற்சாகத்துடன் தானும் வருவதாக தெரிவித்தார்🥰. பின்... @Kavi arunasalam த்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர் இன்று குடும்பத்துடன் ஐரோப்பிய உல்லாசப் பயணம் செய்ய புறப்பட்டுக் கொண்டு இருப்பதால்.. கலந்து கொள்ள முடியாமைக்கு தனது கவலையை தெரிவித்து இருந்தார். தொடரும்.... ✍️
  18. ஆழ்ந்த இரங்கல்கள்... வாதவூரான்.
  19. தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகள் குறித்து அமெரிக்கா அதிருப்தி! தொல்பொருள் திணைக்களமானது பௌத்த பிக்குகள் மற்றும் ஏனைய அரச கட்டமைப்புக்களுடன் ஒன்றிணைந்து பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பதற்காக வட, கிழக்கு மாகாணங்களில் இந்து மற்றும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளை ஆக்கிரமித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக சர்வதேச மதச் சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழு (United States Commission On International Religious Freedom), மதச்சுதந்திரத்துடன் தொடர்புடைய விவகாரத்தில் இலங்கையை விசேட கண்காணிப்புப் பட்டியலில் சேர்க்குமாறு ஜோ பைடன் தலைமையிலான அரசாங்கத்துக்குப் பரிந்துரை செய்துள்ளது. பல்வேறு சந்தர்ப்பங்களில் பௌத்த பிக்குகளால் மத சிறுபான்மையினருக்கு எதிராகத் தூண்டப்பட்ட அமைதியின்மை மற்றும் வன்முறைகளைத் தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் தவறியிருப்பதாக, குறித்த ஆணைக்குழு தமது வருடாந்த அறிக்கையில், சுட்டிக்காட்டியுள்ளது. சிறுபான்மையினருக்கு எதிராக பௌத்த பிக்குகளால் தூண்டப்பட்ட ஒடுக்குமுறைகளைத் தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதாக இலங்கையின் மதச்சுதந்திரம் தொடர்பான வருடாந்த அறிக்கையில் அமெரிக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்தோடு, பல்வேறு சந்தர்ப்பங்களில் பௌத்த பிக்குகளால் மத சிறுபான்மையினருக்கு எதிராகத் தூண்டப்பட்ட அமைதியின்மை மற்றும் வன்முறைகளைத் தடுப்பதற்கும் இலங்கை அரசாங்கம் தவறியிருப்பதாக சர்வதேச மதச் சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆகவே, மதச்சுதந்திரத்துடன் தொடர்புடைய விவகாரத்தில் இலங்கையை விசேட கண்காணிப்புப் பட்டியலில் சேர்க்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான அரசுக்கு சர்வதேச மதச் சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் சர்வதேச நாடுகளின் மதச்சுதந்திர நிலைவரம் தொடர்பில் அமெரிக்க அரசு முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் உள்ளடங்கலாக மதச்சுதந்திரம் தொடர்பில் விரிவான தகவல்களை உள்ளடக்கிய 102 பக்க வருடாந்த அறிக்கையிலே சர்வதேச மதச் சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையின் மதச்சுதந்திர நிலைவரம் 2023 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து பின்னடைவை சந்தித்ததாகவும் இலங்கை அரசாங்கம் மத சிறுபான்மையினரை தொடர்ச்சியாக ஒடுக்கியும், அச்சுறுத்தியும் வந்திருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சில சந்தர்ப்பங்களில் அவர்களது வழிபாட்டுத்தலங்களுக்குள் பிரவேசிப்பதற்கு அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, சிறுபான்மையினரை இலக்குவைத்து கண்காணிப்பதற்கும் தடுத்துவைப்பதற்கும் அரசாங்கம் அடக்குமுறைச் சட்டங்களைப் பயன்படுத்தியதாகவும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம் மக்கள்கைதுசெய்வதற்கும் தடுத்துவைப்பதற்கும் பரந்துபட்ட அதிகாரங்களைக் கொண்ட பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த ஆண்டு தொல்பொருள் திணைக்களம், பௌத்த பிக்குகள் மற்றும் ஏனைய அரச கட்டமைப்புக்களுடன் ஒன்றிணைந்து பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பதற்காக வட மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்து மற்றும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளை ஆக்கிரமித்தாகவும் சர்வதேச மதச் சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1384026
  20. சில வாரங்களில் 3 ஆவது உலக போர் : இந்திய ஜோதிடரால் பரபரப்பு! உலகில் இன்னும் சில வாரங்களில் 3 ஆவது உலக போர் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்தியாவை சேர்ந்த பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்திருப்பது சமூக வலைத்தளங்களில் தகவலாகப் பரவிவருகின்றது. அரியானாவை சேர்ந்த பிரபல ஜோதிடரான குசால் குமார் என்பவரே இது தொடர்பாக தனது வலைதளப்பக்கத்தில் கூறியுள்ளார். தற்போது ரஷ்யா – நோட்டா உறுப்பு நாடுகளின் ஆதரவு பெற்ற உக்ரைன் இடையிலான போர் மற்றும் வட மேற்கில் இஸ்ரேல், பாலஸ்தீனம், ஈரான், சிரியா ஆகிய நாடுகளில் நிலவும் அமைதியின்மை போன்றவற்றால் மூன்றாம் உலகப்போர் குறித்த பேசப்படும் நிலையில் இவரின் கணிப்பு மக்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. அதன்படி 2024 ஆம் ஆண்டு உலகெங்கிலும் நடைபெறும் போர் பதற்ற சூழ்நிலைகளாளே இதை கணிக்க கூடியதாக உள்ளதாகவும் கொரியா நாடுகள், சீனா மற்றும் தைவான், மத்திய கிழக்கு போன்ற போர் பதற்றம் உள்ளிட்ட செய்திகளும், உக்ரைன், ரஷ்யா போர், இஸ்ரேல், காசா போரும் இதற்கு உதாரணமான கணிப்பை தருகின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சில நாடுகளில் ஆட்சி அதிகாரம் பெற்ற சிலர் பெரும் கவலைக்குரிய சூழ்நிலையை எதிர்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிலர் கடுமையான உடல் நிலையால் பாதிக்கப்படலாம் அல்லது இராஜினாமா செய்ய நேரிடலாம் எனவும் இன்னும் சில நாடுகளின் அரசியல் எழுச்சி ஏற்படலாம் என்பதுடன், அதை தடுக்க இராணுவம் கொண்டு வரப்படலாம் எனவு; அவர் தனது கணிப்பில் கூறியுள்ளார். https://athavannews.com/2024/1384030
  21. முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 40) வரை. 1) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 2: 1:30 AM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா எதிர் கனடா USA எதிர் CAN 2) முதல் சுற்று குழு C :ஞாயிறு ஜூன் 2: 3:30 PM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் பபுவா நியூகினி WI எதிர் PNG 3) முதல் சுற்று குழு B: திங்கள் ஜூன் 3: 1:30 AM, பார்படோஸ், நமீபியா எதிர் ஓமான் NAM எதிர் OMA 4) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 3: 3:30 PM, நியூயோர்க், சிறிலங்கா எதிர் தென்னாபிரிக்கா SL எதிர் SA 5) முதல் சுற்று குழு C :செவ்வாய் ஜூன் 4: 1:30 AM, கயானா, ஆப்கானிஸ்தான் எதிர் உகண்டா AFG எதிர் UGA 6) முதல் சுற்று குழு B: செவ்வாய் ஜூன் 4: 3:30 PM, பார்படோஸ், இங்கிலாந்து எதிர் ஸ்கொட்லாந்து ENG எதிர் SCOT 7) முதல் சுற்று குழு D :செவ்வாய் ஜூன் 4: 4:30 PM, டாலஸ், நெதர்லாந்து எதிர் நேபாளம் NED எதிர் NEP 8 ) முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 5: 3:30 PM, நியூயோர்க், இந்தியா எதிர் அயர்லாந்து IND எதிர் IRL 9) முதல் சுற்று குழு C :வியாழன் ஜூன் 6: 12:30 AM, கயானா, பபுவா நியூகினி எதிர் உகண்டா PNG எதிர் UGA 10) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 1:30 AM, பார்படோஸ், அவுஸ்திரேலியா எதிர் ஓமான் AUS எதிர் OMA 11) முதல் சுற்று குழு A: வியாழன் ஜூன் 6: 4:30 PM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா எதிர் பாகிஸ்தான் USA எதிர் PAK 12) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 8:00 PM, பார்படோஸ், நமீபியா எதிர் ஸ்கொட்லாந்து NAM எதிர் SCOT 13) முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 7: 3:30 PM, நியூயோர்க், கனடா எதிர் அயர்லாந்து CAN எதிர் IRL 14) முதல் சுற்று குழு C :சனி ஜூன் 8: 12:30 AM, கயானா, நியூஸிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான் NZ எதிர் AFG 15) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 8: 1:30 AM, டாலஸ், சிறிலங்கா எதிர் பங்களாதேஷ் SL எதிர் BAN 16) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 8: 3:30 PM, நியூயோர்க், நெதர்லாந்து எதிர் தென்னாபிரிக்கா NED எதிர் SA 17) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 8: 6:00 PM, பார்படோஸ், அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து AUS எதிர் ENG 18) முதல் சுற்று குழு C :ஞாயிறு ஜூன் 9: 1:30 AM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் உகண்டா WI எதிர் UGA 19) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 9: 3:30 PM, நியூயோர்க், இந்தியா எதிர் பாகிஸ்தான் IND எதிர் PAK 20) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 9: 6:00 PM, அன்ரிகுவா, ஓமான் எதிர் ஸ்கொட்லாந்து OMA எதிர் SCOT 21) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 10: 3:30 PM, நியூயோர்க், தென்னாபிரிக்கா எதிர் பங்களாதேஷ் SA எதிர் BAN 22) முதல் சுற்று குழு A: செவ்வாய் ஜூன் 11: 3:30 PM, நியூயோர்க், பாகிஸ்தான் எதிர் கனடா PAK எதிர் CAN 23) முதல் சுற்று குழு D :புதன் ஜூன் 12: 12:30 AM, புளோரிடா, சிறிலங்கா எதிர் நேபாளம் SL எதிர் NEP 24) முதல் சுற்று குழு B: புதன் ஜூன் 12: 1:30 AM, அன்ரிகுவா, அவுஸ்திரேலியா எதிர் நமீபியா AUS எதிர் NAM 25) முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 12: 3:30 PM, நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா எதிர் இந்தியா USA எதிர் IND 26) முதல் சுற்று குழு C :வியாழன் ஜூன் 13: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் நியூஸிலாந்து WI எதிர் NZ 27) முதல் சுற்று குழு D :வியாழன் ஜூன் 13: 3:30 PM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ் எதிர் நெதர்லாந்து BAN எதிர் NED 28) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 13: 8:00 PM, அன்ரிகுவா, இங்கிலாந்து எதிர் ஓமான் ENG எதிர் OMA 29) முதல் சுற்று குழு C :வெள்ளி ஜூன் 14: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, ஆப்கானிஸ்தான் எதிர் பபுவா நியூகினி AFG எதிர் PNG 30) முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 14: 3:30 PM, புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா எதிர் அயர்லாந்து USA எதிர் IRL 31) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 15: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், தென்னாபிரிக்கா எதிர் நேபாளம் SA எதிர் NEP 32) முதல் சுற்று குழு C :சனி ஜூன் 15: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து எதிர் உகண்டா NZ எதிர் UGA 33) முதல் சுற்று குழு A: சனி ஜூன் 15: 3:30 PM, புளோரிடா, இந்தியா எதிர் கனடா IND எதிர் CAN 34) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 15: 6:00 PM, அன்ரிகுவா, நமீபியா எதிர் இங்கிலாந்து NAM எதிர் ENG 35) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 16: 1:30 AM, செயின்ற் லூஷியா, அவுஸ்திரேலியா எதிர் ஸ்கொட்லாந்து AUS எதிர் SCOT 36) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 16: 3:30 PM, புளோரிடா, பாகிஸ்தான் எதிர் அயர்லாந்து PAK எதிர் IRL 37) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 17: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ் எதிர் நேபாளம் BAN எதிர் NEP 38) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 17: 1:30 AM, செயின்ற் லூஷியா, சிறிலங்கா எதிர் நெதர்லாந்து SL எதிர் NED 39) முதல் சுற்று குழு C :திங்கள் ஜூன் 17: 3:30 PM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து எதிர் பபுவா நியூகினி NZ எதிர் PNG 40) முதல் சுற்று குழு C :செவ்வாய் ஜூன் 18: 1:30 AM, செயின்ற் லூஷியா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் ஆப்கானிஸ்தான் WI எதிர் AFG முதல் சுற்று குழு A: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND PAK CAN IRL USA 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (2 புள்ளிகள்) IND #A2 - ? (1 புள்ளிகள்) PAK 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! CAN முதல் சுற்று குழு B: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG AUS NAM SCOT OMA 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (2 புள்ளிகள்)ENG #B2 - ? (1 புள்ளிகள்) AUS 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! OMA முதல் சுற்று குழு C : 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) WI NZ AFG PNG UGA 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #C1 - ? (2 புள்ளிகள்) WI #C2 - ? (1 புள்ளிகள்) NZ 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! UGA முதல் சுற்று குழு D : 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) SA SL BAN NED NEP 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #D1 - ? (2 புள்ளிகள்) SA #D2 - ? (1 புள்ளிகள்) SL 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! NEP சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை. 53) சுப்பர் 8: குழு 2: புதன் ஜூன் 19: 3:30 PM, அன்ரிகுவா, A2 எதிர் D1 A2 எதிர் D1 PAK SA 54) சுப்பர் 8: குழு 2: வியாழன் ஜூன் 20: 1:30 AM, செயின்ற் லூஷியா, B1 எதிர் C2 B1 எதிர் C2 ENG NZ 55) சுப்பர் 8: குழு 1: வியாழன் ஜூன் 20: 3:30 PM, பார்படோஸ், C1 எதிர் A1 C1 எதிர் A1 WI IND 56) சுப்பர் 8: குழு 1: வெள்ளி ஜூன் 21: 1:30 AM, அன்ரிகுவா, B2 எதிர் D2 B2 எதிர் D2 AUS SL 57) சுப்பர் 8: குழு 2: வெள்ளி ஜூன் 21: 3:30 PM, செயின்ற் லூஷியா, B1 எதிர் D1 B1 எதிர் D1 ENG SA 58) சுப்பர் 8: குழு 2: சனி ஜூன் 22: 1:30 AM, பார்படோஸ், A2 எதிர் C2 A2 எதிர் C2 PAK NZ 59) சுப்பர் 8: குழு 1: சனி ஜூன் 22: 3:30 PM, அன்ரிகுவா, A1 எதிர் D2 A1 எதிர் D2 IND SL 60) சுப்பர் 8: குழு 1: ஞாயிறு ஜூன் 23: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், C1 எதிர் B2 C1 எதிர் B2 WI AUS 61) சுப்பர் 8: குழு 2: ஞாயிறு ஜூன் 23: 3:30 PM, பார்படோஸ், A2 எதிர் B1 A2 எதிர் B1 PAK ENG 62) சுப்பர் 8: குழு 2: திங்கள் ஜூன் 24: 1:30 AM, அன்ரிகுவா, C2 எதிர் D1 C2 எதிர் D1 NZ SA 63) சுப்பர் 8: குழு 1: திங்கள் ஜூன் 24: 3:30 PM, செயின்ற் லூஷியா, B2 எதிர் A1 B2 எதிர் A1 AUS IND 64) சுப்பர் 8: குழு 1: செவ்வாய் ஜூன் 25: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், C1 எதிர் D2 C1 எதிர் D2 WI SA சுப்பர் 8 குழு 1: 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) A1 B2 C1 D2 IND WI 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி 1A - ? (3 புள்ளிகள்) IND #அணி 1B - ? (2 புள்ளிகள்)WI 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! SL சுப்பர் 8 குழு 2: 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) A2 B1 C2 D1 ENG NZ 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி 2A - ? (2 புள்ளிகள்) ENG #அணி 2B - ? (1 புள்ளிகள்) NZ 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! PAK அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: வியாழன் ஜூன் 27: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, அணி 1A (குழு 1 முதல் இடம்) எதிர் அணி 2B (குழு 2 இரண்டாவது இடம்) ENG 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் ஜூன் 27: 3:30 PM, கயானா, அணி 2A (குழு 2 முதல் இடம்) எதிர் அணி 1B (குழு 2 இரண்டாவது இடம்) IND இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) சனி ஜூன் 29: 3:30 PM, பார்படோஸ் அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி IND உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? IND 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? PNG 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Babar Azam 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )அணி? PAK 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)வீரர்? Jasprit Bumrah 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )அணி? IND 80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )வீரர்? Jonny Bairstow 81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )அணி? ENG 82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)வீரர்? Matheesha Pathirana 83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )அணி? SL 84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)வீரர்? Wanindu Hasaranga 85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )அணி? SL
  22. எதிர்வரும் தேர்தலின் பின்னர் அரசியலில் ஈடுபட மாட்டேன் : விஜயகலா மகேஸ்வரன் அறிவிப்பு! கடந்த காலங்களில் தவறாக மக்கள் வாக்களித்ததால் தான் பல மோசமான தலைவர்கள் ஆட்சிக்கு வந்து நாட்டை சோமாலியாவின் நிலைக்குக் கொண்டு சென்றார்கள் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்தார். ஆனால், தேர்தலில் படுதோல்வியடைந்தும் இன்று ஒரு ஆசனத்துடன் ஆசியாவின் சிறந்த தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களுக்கு சேவையாற்றுகின்றார் என விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் காணிகளுக்கான உறுதிப்பத்திரங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தோற்ற பின்னர் எமது நடவடிக்கை அமைதியாகவே இருந்ததுடன், கடந்த 2020 இல் படுதோல்வியை ஐக்கிய தேசிய கட்சி எதிர்கொண்டது எனவும் அவர் குறிப்பிட்டார். இந்நிலையில், கொரோனா இடர், கட்சியில் கருத்து வேறுபாடு காரணமாக பலர் தங்களிடம் இருந்து பிரிந்து போன நிலையிலும் தாங்கள் கட்சியினை விட்டு வெளியே போகவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன், அடுத்த தேர்தலே தனது அரசியல் பயணத்தின் இறுதித் தேர்தல் என்றும், அதிலிருந்து தானும் அரசியலில் இருந்து விலகி விடுவேன் என அவர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2024/1383981
  23. ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புபட்ட சந்தேகநபர் கொழும்பில் கைது! இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 4 ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த இலங்கையர் ஒருவர் மாளிகாவத்தை பகுதியில் வைத்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள 4 ஐ.எஸ். பயங்கரவாதிகள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு இலங்கையர்கள் தொடர்பிலான தகவல்களை குறித்த குழுவிலுள்ள புலனாய்வுப் பிரிவினர் கோரியுள்ளனர். இந்த நிலையில் குறித்த நான்கு நபர்களுடன் நாட்டினுள் தொடர்பு வைத்திருந்த நபர்கள் தொடர்பாக ஏற்கனவே தனியான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த ஒருவர் மாளிகாவத்தையில் வைத்து பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரே சம்பந்தப்பட்ட நால்வருக்கும் விமானச் சீட்டு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து வந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் தற்போது பயங்கரவாத புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கடந்த 19 ஆம் திகதி இரவு இண்டிகோ விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக சென்னை நோக்கி குறித்த நால்வரும் இலங்கையில் இருந்து புறப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால், இலங்கையை சேர்ந்த வேறு ஐ.எஸ். பயங்கரவாதிகள் வேறு விமானங்களின் ஊடாக இந்தியாவிற்கு சென்றுள்ளனரா என்பது தொடர்பாகவும் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட நால்வரும் இதற்கு முன்னரும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும், இந்தியாவில் கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவரான மொஹமட் நுப்ரான், நாட்டில் பாரிய போதைப்பொருள் கடத்தல் காரரான பொட்ட நௌபரின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1383845

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.