Everything posted by தமிழ் சிறி
-
தமிழ் – சிங்கள புத்தாண்டு : அமெரிக்க ஜனாதிபதியின் வாழ்த்து!
தமிழ் – சிங்கள புத்தாண்டு : அமெரிக்க ஜனாதிபதியின் வாழ்த்து! தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது X தளத்தில் அவர் இந்த, வாழ்த்தினை வௌியிட்டுள்ளார். இந்தச் சிறப்பான நிகழ்வைக் கொண்டாடும் உலகில் உள்ள அனைவருக்கும் தானும் தன் மனைவியும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1378019
-
இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு
இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கை ரூபாய் (LKR) உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட வளர்ந்து வரும் சந்தை நாணயமாக மாறியுள்ளது. இது ஆண்டின் தொடக்கத்தில் இருந்த பெறுமதியுடன் ஒப்பிடுகையில் 7மூ க்கும் அதிகமான வளர்ச்சியென Bloomberg சந்தை தரவு குறிகாட்டிகள் சுட்டிக்காட்டுகின்றன. ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது. https://athavannews.com/2024/1377990
-
யாழ். நகரின் தூய்மை குறித்து அவதானம் : கள விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ்
யாழ். நகரின் தூய்மை குறித்து அவதானம் : கள விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ். யாழ். நகரத்தின் சுகாதார நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவற்றை தூய்மையாக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளார். புது வருடப் பிறப்பு தினமான இன்று காலை யாழ். நகரத்தில் கண்காணிப்பு விஜயம் ஒன்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுள்ளார். இதன்போது, யாழ். நகரின் மையப்பகுதி மற்றும் புதிய மாநகரசபை கட்டட வளாகம் அதனை அண்டிய சுற்றுவட்டத்தின் நீர் வடிந்தோடும் வடிகால்கள் உள்ளிட்டவற்றை அமைச்சர் பார்வையிட்டுள்ளார். இதனையடுத்து, அவற்றை தூய்மையாக்குவது குறித்து அமைச்சர் அவதானம் செலுத்தியதாக குறிப்பிடத்தக்கது. யாழ். நகரின் தூய்மை பராமரிப்பு தொடர்பில் பல்வேறு குற்றச்சாடுக்களும் விமர்சனங்களும் எழுந்துள்ள நிலையிலேயே, அது தொடர்பில் ஆராய்வதற்காகவே அமைச்சர் இந்த கள விஜயத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378007
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
கணவன் உயிரிழப்பு : மனைவியும் கள்ளக்காதலனும் கைது!
- ஆமையும் தமிழனும்....
இலங்கை பாதுகாப்பு அமைச்சு, வெளிநாட்டு அமைச்சுக்களும்... மறுப்பறிக்கை விட்டது. 😂- தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்த கொள்கையளவில் இணங்குகிறேன் - சிறீதரன்
தமிழ் பொது வேட்பாளர் - சுமந்திரன். மக்கள்.... 😂- சிரிக்க மட்டும் வாங்க
- கணவன் உயிரிழப்பு : மனைவியும் கள்ளக்காதலனும் கைது!
பொய் சொல்லலாம். ஆனால்... ஏக்கர் கணக்கில் பொய் சொல்லக்கூடாது. "கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன். வானம் ஏறி வைகுண்டம் போனானாம்.." என்ற மாதிரி, உங்கடை கதை போகுது. 😂- கணவன் உயிரிழப்பு : மனைவியும் கள்ளக்காதலனும் கைது!
சில காலத்துக்கு முன் அப்படி ஒன்றிரண்டு... நடந்து இருக்குது.- ஆமையும் தமிழனும்....
"சிற்றுவேஷன் சாங்" ஒன்று கேட்போம்.- கணவன் உயிரிழப்பு : மனைவியும் கள்ளக்காதலனும் கைது!
@Kandiah57, @குமாரசாமி அண்ணை ஆட்களை இந்தப் பக்கம் காணேல்லை. சிலவேளை அவைதான்.... காதலர்களோ... 🤣- யாழில் சர்வதேச தரத்திலான இரு மைதானங்கள் : அமைவிடம் குறித்து அமைச்சர் டக்ளஸ் நேரில் ஆராய்வு!
அப்ப... அடுத்த ஒலிம்பிக் ஊரிலைதான். டக்ளஸ்... ஏற்கேனவே யாழ்.மத்திய கல்லூரியில் ஒரு நீச்சல்குளம் கட்டினவர் தானே... அது இப்ப, பாசி பிடித்து நுளம்பு குடித்தனம் நடத்துது.- கருத்து படங்கள்
- யாழில் சர்வதேச தரத்திலான இரு மைதானங்கள் : அமைவிடம் குறித்து அமைச்சர் டக்ளஸ் நேரில் ஆராய்வு!
ஓம். அது சதுப்பு நிலம். கொஞ்சம் மழை பெய்தாலே நீர் ஊற ஆரம்பித்துவிடும்.- 779 சிறைக் கைதிகள் தொடர்பில் ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம்.
கைதிகளுக்கு பொது பொது மன்னிப்பு. சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு நாடெங்கிலும் உள்ள சிறைச்சாலைகளிலிருந்து ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் சிறைக்கைதிகள் விடுதலைசெய்யப்பட்டனர். மட்டக்களப்பு சிறைச்சாலையில் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் 16 சிறைக்கைதிகள் இன்று காலை விடுதலைசெய்யப்பட்டனர். மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில் இந்த சிறைக்கைதிகளை விடுதலைசெய்யும் நிகழ்வு இன்று காலை 10.00மணியளவில் நடைபெற்றது. சிறு குற்றம் புரிந்த தண்டணைப் பணம் செலுத்தாத கைதிகளே இதன்போது இவ்வாறு விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1377975 @ஈழப்பிரியன்- ஈரான் – இஸ்ரேலுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம்: இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்து
ஈரான் – இஸ்ரேலுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம்: இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்து. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இன்னும் ஓரிரு நாளில் தாக்குதல் நடத்த ஈரான் ராணுவம் தயாராகி வருகிறது. ஈரானின் இந்த தாக்குதலை சமாளிக்க இஸ்ரேலும் களமிறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அடுத்த அறிவிப்பு வரும்வரை ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கும் இந்தியர்கள் யாரும் செல்ல வேண்டாம் என இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அறிவுறுத்தியுள்ளார். மேலும், அங்குள்ள இந்தியர்கள் உடனடியாக இந்திய தூதரகங்களை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1377957- சீனாவை இரும்பு கவசம் அமைத்து ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸை பாதுகாப்போம் – அமெரிக்கா
சீனாவை இரும்பு கவசம் அமைத்து ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸை பாதுகாப்போம் – அமெரிக்கா சீனாவின் ஆக்ரமிப்பைத் தடுக்க, இரும்பு கவசம் அமைத்து ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸை பாதுகாப்போம் என அமெரிக்கா வலியுத்தியுள்ளது. ஜப்பான், பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிகளுடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். இதன்போது, இந்தோ பசிபிக் கடல் பகுதியில் சீனாவின் ஆக்ரமிப்பைத் தடுக்க, இரும்பு கவசம் அமைத்து ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸை பாதுகாப்போம் என அமெரிக்கா வலியுத்தியுள்ளது. குறித்த சந்திப்பு வொஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் இடம்பெற்றது. இதன்போது, பிலிப்பனைஸ் ஜனாதிபதி ஜூனியர் பெர்டினன்ட் மார்க்கோஸ் மற்றும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோரை வரவேற்று, ஜனாதிபதி, ஜோ பைடன் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1377934- கணவன் உயிரிழப்பு : மனைவியும் கள்ளக்காதலனும் கைது!
ஹ்ம்ம்…. கள்ளக் காதலனுக்கு கட்டையிலை போற வயசு 63. 😂🤣 இந்தக் காதலனை நம்பி… 39 வயசு புருசனை கொன்று போட்டு இருக்குது விசர் மனிசி.- வெடுக்குநாறியில் அடாவடியில் ஈடுபட்ட சிவசேனை
வெடுக்குநாறியில் அடாவடியில் ஈடுபட்ட சிவசேனை. சிவசேனையின் அடாவடி தனத்தால் வெட்டுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாக குழு கூட்டம் இடைநடுவில் இரத்து செய்யப்பட்டுள்ளது. வெட்டுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாகக்குழு கூட்டம் இன்றைய தினம் ஒலுமடு பகுதியில் உள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. அதன் போது கூட்டத்திற்கு அழையா விருந்தாளிகளாக சிவசேனை அமைப்பின் மறவன்புலவு சச்சிதானந்தன் தலைமையிலான குழு வருகை தந்து கிறிஸ்தவர்களுக்கு எதிரான கருத்துக்களை கூட்டத்தில் முன் வைத்து குழப்பங்களை ஏற்படுத்தினர். அதன் போது, வெட்டுக்குநாறியில் சிவராத்திரி தினத்தன்று பொலிஸார் அடாவடியில் ஈடுபடும் போது , நீங்கள் எங்கே சென்றீர்கள் ? ஆலய பூசாரி உள்ளிட்ட 08 பேரை கைது செய்து சிறையில் அடைத்த போது எங்கே போனீர்கள் ? கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறு நெடுங்கேணி மற்றும் வவுனியாவில் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது எங்கே போனீர்கள் ? என கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கேள்வி கேட்ட போது , அதற்கு பதில் அளிக்காது கிறிஸ்தவர்களுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து கூறி வந்தனர். அதனை அடுத்து கூட்டத்தில் இருந்து வெளியேற 10 நிமிடம் அவகாசம் வழங்கப்பட்டது. அவர்கள் அதற்கு பின்னரும் வெளியேறாத நிலையில் , குழப்பங்களை தவிக்கும் முகமாக கூட்டத்தினை மண்டபத்திற்கு வெளியே நடத்த முயன்ற போதும் குழப்பத்தை ஏற்படுத்தியமையால், தற்போதைய நிர்வாகமே அடுத்த ஒரு வருட காலத்திற்கு தொடர்ந்து செயற்படும் என கூட்டத்தில் ஏக மனதாக முடிவெடுக்கப்பட்டு , கூட்டம் நிறைவு பெற்றது. கூட்டம் நிறைவு பெற்று மக்கள் அங்கிருந்து கிளம்பும் போது , மண்டபத்திற்குள் சென்ற சிவ சேனையினர் அங்கிருந்த மேசைகள் மீது படுத்து உறங்கினர். இதேவேளை சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட குறுந்தூர் மலை விகாரைக்கு சென்று அங்கிருந்த புத்தரை வழிபட்டதுடன் , விகாரதிபதியுடன் நல்லுறவில் உள்ளவர்கள் , வெடுக்குநாறியில் ஆதி சிவன் ஆலயத்தையும் அந்த விகாராதிபதியிடம் கையளிக்கும் ஏற்பாடாகவே சிவசேனையினர் கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தினர் என அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். https://athavannews.com/2024/1377874- சுமந்திரனை அவமதித்தது விரும்பத்தகாத செயல் : அமைச்சர் டக்ளஸ் கருத்து
சுமந்திரனை அவமதித்தது விரும்பத்தகாத செயல் : அமைச்சர் டக்ளஸ் கருத்து. ஜே.வி.பியின் மாநாட்டுக்கு அழையா விருந்தாளியாக சுமந்திரன் வந்திருந்தார் எனக் கூறி சுமந்திரனை அவமதித்தது விரும்பத்தகாத செயல் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள தனது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்விடயம் தொடர்பில் ஊடகவியலாளர் கேட்டதற்கு பதிலளிக்கையில் இவ்வாறு தெரிவித்தார். அண்மையில் ஜே.வி.பி கட்சி தனது கட்சி மாநாடொன்றை யாழ்ப்பாணத்தில் நடத்தியிருந்தது. இந்த மாநாட்டுக்கு அழைப்பு விடுக்காமல் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் சென்றதாக ஜேவிபியின் பேச்சாளர் எனக் கூறுபவர் ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தமையை சுட்டிக்காட்டி குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், தமது நிகழ்வில் கலந்துகொண்ட ஒருவரை அவமானப்படுத்தும் வகையில் ஏன் அவ்வாறு கூறினார் என்று தெரியவில்லை. இதேநேரம் மாநாடொன்றிற்கு ஏனைய கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பது இயல்பான ஒன்றுதான். அதேநேரம் கட்சிக்கான அழைப்பு விடுக்கப்பட்டால் அந்த அழைபை ஏற்று அழைக்கப்பட்ட கட்சியின் சார்பில் எவரும் செல்லமுடியும். அந்த வகையில்தான் சுமந்திரனும் சென்றிருப்பார் என நினைக்கின்றேன். அந்தவகையில் சுமந்திரனை அவமானப்படுத்தும் வகையிலேயே குறித்த பேச்சாளர் கூறியுள்ளார் என்றே தான் கருதுவதாக குறிப்பிடடுள்ளார். https://athavannews.com/2024/1377856- கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
- குடும்பத்தினருக்கும் காப்புறுதி வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை!
குடும்பத்தினருக்கும் காப்புறுதி வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை! தமது குடும்ப உறுப்பினர்களுக்கும் காப்புறுதித் தொகையை வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நாடாளுமன்றத் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் காப்பீட்டுத் தொகையின் மதிப்பு பத்து லட்சம் ரூபாய் ஆகும். இன்னிலையில் அந்த காப்புறுதித் தொகையில் இருந்து சில தொகையை குடும்ப உறுப்பினர்களுக்கு காப்பீட்டு தொகையயாக வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் வாரங்களில் நாடாளுமன்ற சபைக் குழுவின் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அங்கும் இது தொடர்பில் கலந்துரையாட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர். https://athavannews.com/2024/1377581- இராணுவ சேவையிலிருந்து 8000 வீரர்கள் தலைமறைவு!
இராணுவ சேவையிலிருந்து 8000 வீரர்கள் தலைமறைவு! 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 2024 ஆம் ஆண்டு வரை ஆயுதப்படையின் 197 அதிகாரிகள் உட்பட எண்ணாயிரத்து நூற்று நாற்பத்தாறு பேர் இராணுவ சேவையிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர் என தெரியவந்துள்ளது. அதன்படி மார்ச் மாதத்தில் மட்டும், ஆயுதப்படைகளின் ஒன்பது அதிகாரிகளுடன் நானூற்று நாற்பத்திரண்டு பேர் ஆயுதப்படையை விட்டு வெளியேறியுள்ளனர் மேலும் கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் இராணுவ சேவையை விட்டு வெளியேறியவர்களில் 137 இராணுவ அதிகாரிகள், 18 கடற்படை அதிகாரிகள் மற்றும் 19 விமானப்படை அதிகாரிகள் இராணுவ சேவையை விட்டு வெளியேறியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பொருளாதார பிரச்சனைகள் மற்றும் நிர்வாக பிரச்சனைகள் காரணமாக இராணுவத்தை விட்டு விலகியுள்ளமையும் தெரியவந்துள்ளது. https://athavannews.com/2024/1377613 - ஆமையும் தமிழனும்....
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.