Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. ரைட்டானிக்கைக் காணச் சென்றவர்களும் உயிரிழப்பு! டைட்டானிக்கப்பலின் சிதைவுகளைப் பார்வையிட titan என்ற நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்த 5 சுற்றுலாப் பயணிகளும் உயிரிழந்துவிட்டதாக அமெரிக்க கடற்படையினர் அறிவித்துள்ளனர். ‘ஓஷன்கேட்‘ நிறுவனத்திற்குச் சொந்தமான குறித்த நீர் மூழ்கிக் கப்பலில் பிரித்தானியாவைச் சேர்ந்த கோடீஸ்வரரும், ஆராய்ச்சியாளருமான ஹமிஷ் ஹார்டிங் உட்பட 5 செல்வந்தர்கள் கடந்த 18 ஆம் திகதி அழைத்துச் செல்லப் பட்டிருந்த நிலையில், கப்பல் புறப்பட்டு 1 மணி நேரம் 45 நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை டைட்டன் இழந்தது. இதனையடுத்து தேடுதல் பணியானது தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் வியாழக்கிழமை மாலை அமெரிக்கக் கடலோரப்படை, டைட்டானிக் தளத்தைச் சுற்றியுள்ள குப்பைகளுக்கு மத்தியில் titan னின் ஐந்து பெரிய துண்டுகளை கண்டுபிடித்ததாகக் கூறியது. இதனையடுத்து நீர்மூழ்கியின் அழுத்த அறை வெடித்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர்கள் ஐவரும் உயிரிழந்து விட்டதாக அமெரிக்கக் கடற்படை அறிவித்துள்ளது. கடந்த 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் திகதி 22,00பேருடன் பயணித்த டைட்டானிக் கப்பலானது அட்லாண்டிக் கடல் பகுதியில் பனிமலையொன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 1,600 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது அதன் சிதைவுகளைப் பார்வையிடச் சென்ற 5 பேரும் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. https://athavannews.com/2023/1336017
  2. 600 - 700 கிலோ நிறையுடைய இந்த மரை இவ்வளவு உயரமும், நீளமும் பாய்வத்து அதிசயம். வாகனத்தில் மோதினால் நேரே... கைலாயம்தான்.
  3. இந்த யானையை, இப்படியான நிலையில் வதைத்து எடுத்ததை... அறிந்த உலகமே மிகவும் பரிதாபப் பட்டது. உடனே... சிங்களம், யானையின் நோய் குணமாக நேர்த்தி வைத்து கண்டி பெரகரா ஊர்வலத்தில் கலந்து கொள்ள வைக்கப் பட்டதாக சொல்லி தப்பிக் கொண்டது. இந்த யானையின் பெயர் டிக்கிரி. அது நோய் குணமாகாமலே இறந்து விட்டது.
  4. ஒன்றரை லட்சம் தமிழ் மக்களை கொன்றதற்கு பாராளுமன்றத்தில் கவலை தெரிவிக்காதவர்கள், ஓரு யானை, சுகயீனப் பட்டதற்கு கவலை தெரிவிக்கின்றார்கள்.
  5. அணில் குஞ்சு.. மாட்டுப் பட்ட தருணம். 😂 🤣
  6. மீண்டும் இலங்கைக்கு வரும் முத்துராஜா சிகிச்சைக்குப் பின்னர் தாய்லாந்தில் இருந்து முத்துராஜா யானை (சக்சுக்ரின்) மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாகவும், இதற்கான ஆவணங்களைத் தாய்லாந்து அதிகாரிகளிடம்தான் சமர்ப்பித்துள்ளதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். சுகவீனமுற்ற முத்துராஜா யானை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தாய்லாந்தினால் இலங்கைக்குப் பரிசாக அளிக்கப்பட்ட முத்துராஜா திடீரென சுகையீனமுற்ற நிலையில், அதற்கு முறையான சிகிச்சையளிக்க இலங்கை அதிகாரிகள் தவறியமையினால் முத்துராஜாவை ஏற்றிச் செல்வதற்காக தாய்லாந்து ஏர்லைன்ஸின் சிறப்பு சரக்கு விமானம் இம்மாதம் 24 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1335634
  7. இப்ப உங்கடை காணியை விற்காதேங்கோ... நேற்றையான் குண்டு வீச்சுக்கு பிறகு, காணி விலை.. கிடுகிடுவென சரிந்திருக்கும். 😂 இந்த அமளி அடங்கினால் பிறகு, ஒரு மாசம் பொறுத்து விற்கலாம்.
  8. சீச்சீ…. நான் சொல்ல மாட்டன். புது மட்டுவா, பழைய மட்டுவா… கந்தர்மடத்தில் காணி வாங்கினவர். 😂 நேற்று, டாக்குத்தர் வீட்டிலை விழுந்த குண்டு வீச்சுக்கு பிறகு, கந்தர்மடத்திலை ஏன் காணியை வாங்கினான் என்று யோசிப்பாரோ. 🤣
  9. ரம்பா புருசன் இந்திரன்… நம்மூரில் கடை வைத்திருப்பது கந்தர்மடத்துக்கே பெருமைதானே. சின்னத்தம்பி கடைக்குப் பக்கத்தில் ஒரு ஹொட்டேல் உள்ளதாக அறிந்தேன்.
  10. அட… நம்ம ஏரியாவிலை குண்டுத் தாக்குதல் நடந்திருக்கு. 🧐 @nilmini, @ஈழப்பிரியன், @suvy
  11. குஸ் குஸ்... செய்து முடித்தாயிற்று. மிக அழகாககவும், சுவையாகவும் வந்துள்ளது. நன்றி சுவியர். 🙏
  12. வெங்காயத்துடன், நிற குடை மிளகாயையும்.. மெல்லிதாக வெட்டி மிக சாதுவாக வதக்கிப் போடலாம் என்று இருக்கின்றோம். 🙂
  13. இப்போ... கடைக்கு, இதற்குத் தேவையான பொருட்கள் வாங்கப் போக ஆயத்தப் படுத்த உங்களது பதிலும் வந்தது. பீன்சும் வாங்கி போடலாம் என்றிருக்கின்றேன். 🙂
  14. பகிர்விற்கு நன்றி சுவியர். 👍 இன்று செவ்வாய்க் கிழமை என்றபடியால்... கோழி போடாமல், காளான் போட்டு... இந்த முறையில் குஸ் குஸ் செய்ய இருக்கின்றோம். வேறு என்ன மரக்கறி போட்டால் நன்றாக இருக்கும்.
  15. தர்பூசணி பழம்... இனிப்பானதா என்று எப்படி கண்டு பிடிப்பது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.