நாதமுனி…. உங்களுக்கு கந்தபுராண வீதி, அரசடி வீதியின் ஆரம்பத்தில் இருந்த வீட்டில் வசித்த கலியாண புறோக்கர் தட்சிணாமூர்த்தியை தெரியுமா.
கந்தர்மட சந்தியில் வாடகை கார் வைத்திருந்தவர்களான சின்னத்தம்பி, கனகலிங்கம் என்ற சகோதரர்களின் வீடும் கந்தபுராண வீதியில் தான் உள்ளது. அவர்கள் வேளைக்கே இறந்து விட்டார்கள்.
இன்னுமொருவர்…. பெயர் நினைவிற்கு வரவில்லை, அவர் வீட்டிலேயே பிள்ளைகளுடன்
ஆங்கிலத்தில் கதைத்து பிள்ளைகளை சிறு வயதிலேயே ஆங்கிலத்தை சரளமாக பேச பழக்கி வைத்திருந்தார். இவர்களின் வீட்டிற்கு முன்னால்… ஒரு கட்டிடம், எனக்கு தெரிந்த நாளில் இருந்து பாவனையில் இல்லாமல், பூட்டியே இருந்தது. அதற்கு பலாலி வீதியிலும் வீட்டுடன் முன் வாசல் உள்ளது. இப்போ அதனை சிங்களவர் ஒருவர் வாங்கி தளபாட கடையாக வைத்திருக்கிறார் என்றார்கள்.
கந்தபுராண வீதி, அம்மன் வீதி சந்திக்கும் இடத்தில்… யாழ். இந்துக் கல்லூரியில் இரசாயனம்
கற்பித்த ஆசிரியர் முத்துக்குமாரசாமி மாஸ்ரரின் மேல்வீடு ஒன்றும் இருந்தது.