Everything posted by தமிழ் சிறி
-
கருத்து படங்கள்
- எங்கே கனவுகள் தொலைந்து போனதா-பா.உதயன்
இருந்தவற்றை நினைத்து ஏங்கிய கவிதை. உதயன்.. இதனை சுய ஆக்கம் பகுதியில் பதிந்தால் நன்றாக இருக்கும்.- விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
விளங்க நினைப்பவன், ஜேர்மனியில்... வேலை விபத்துக்கு பணம் கொடுப்பது வெகு அரிது. 🙂 ஆனால்.... விபத்திலிருந்து மீண்டு வர எவ்வளவு பணம் என்றாலும் செலவழிப்பார்கள். வேலை விபத்து ஆட்களுக்கு வைத்தியம் செய்வதற்காகவும், தெரப்பி செய்யவும் என்று குறிப்பிட்ட இடங்களில் மருத்துவ மனைகள் உள்ளது. அதில் உயர்தர உணவு, சிகிச்சைகளுடன், சென்று வர வாகன வசதிகள் என்று.. எது தேவையோ.. அவற்றை அவர்களே ஒழுங்கு செய்து தருவார்கள். உதாரணத்துக்கு.... சிறிய பிள்ளைகள் வீட்டில் இருந்து, ஒரு பெண் விபத்தில் சிக்கியிருந்தால்.. பிள்ளைகளை பராமரிக்க கணவனுக்கு சம்பளத்துடன் விடு முறையும், சமைக்கவும் ஆட்களை ஒழுங்கு பண்ணி தருவார்கள். அந்த வகையில் மிகவும் பயனுள்ள வேலைகளை செய்வதால்... எமக்கும் அது மிகப் பெரிய ஆறுதலாக இருக்கும். 👍- விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
நில்மினி... வீட்டிலும் உணவு விடயத்தில் நாட்டுக் கோழி முட்டைக் கோப்பி, திரிபோசா மா உருண்டை, ஆட்டுக்கால் சூப் குரக்கன் மா புட்டுக்கு... பாரை மீன் குழம்பு, மரவள்ளிக்கிழங்கு கறி.. பயத்தம் பணியாரம், பகோடா, தோடம்பழ சாறு என்று நல்ல கவனிப்பு கவனித்து.. பத்து கிலோ... ஏறி விட்டது. 😂 தெரப்பி செய்த குழுவினரையும் மிகவும் பாராட்ட வேண்டும். 👍 எலும்பு பொருந்தவும், நரம்புக்கும், சதை வளர்ச்சிக்கும், உடல் சமநிலையை பேணவும்... எவ்வளவோ... பொறுமையாக அவர்கள் மேற்கொண்ட ஒவ்வொரு விடயமும் பிரமிக்க வைத்தது. நீங்களுமா நில்மினி.... வீட்டிலேயே மனைவி, பிள்ளைகள் Qtex பாவிப்பதில்லை, அப்படியிருக்க... நான் பூசுவதென்றால்... பக்கத்து வீட்டு அன்ரியின் Qtex போத்தலை வாங்கித்தான் பூச வேணும்.- விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
நன்றி... நன்னிச் சோழன். 🙏- விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
ஆம்... ஈழப்பிரியன், அமெரிக்கன் கொடுத்த நட்ட ஈடுகளைப் பற்றி சுவராசியாமாக பத்திரிகை செய்திகளில் வரும். 🙂 அதில் ஒன்று... கொரோனா நேரம், வீட்டில் இருந்து வேலை (Home Office) செய்து கொண்டு இருந்த ஒருவர், தன்னுடைய வீட்டு பாத் ரூமுக்கு போகும் போது... அங்கு நிலம் ஈரமாக இருந்து, வழுக்கி விழுந்ததுக்கும் பெரும் தொகையான நட்ட ஈடு எடுத்தவர். 🤣 நீங்கள் சொல்வதும் சரி சாத்தான். அவசரப் படாமல், கொஞ்ச நாளைக்கு பொறுப்பம். நான் போய்... கதைக்க வெளிக்கிட்டால் தன்னில் பிழை இல்லை என்றும் நினைத்து விடுவார். 🙂- நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
நில்மினி, வீட்டின்.... பழமையை அழிக்காமல், புதுமையையும் கலந்து அழகு படுத்தியமை நன்றாக உள்ளது. தோட்டம் செய்பவர் நன்றாக மினக்கெட்டுள்ளார். அவருக்கும் எமது பாராட்டுக்கள். அந்த வரவேற்பறையில் இருந்து... தேனீர் குடித்தது, நல்ல நினைவில் உள்ளது. 🙂- கருத்து படங்கள்
- மடகஸ்கார் பயண அனுபவம்
ஆகா…. நில்மினி. பயணக் கட்டுரை, அழகான படங்களுடன். 🙂 மடகஸ்காரை பற்றிய செய்திகளை தொலைக்காட்சிகளில் பார்த்த போது… அந்த நாட்டில் உள்ள 🦋🐛அழகிய 🦩பறவைகள்🦜, 🦥விலங்கினங்கள்🦨, 🌳தாவரங்கள்🌴 போன்றவற்றை பார்த்து வியந்து இருக்கின்றேன். ஒரு முறையாவது அங்கு போக வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. ஆரம்ப கட்டுரையே…. பலவித தகவல்களுடன் வாசிக்கும் ஆவலை தூண்டியுள்ளது. தொடருங்கள் நில்மினி. 👍🏽- பைத்தியம் - U mad bro - குறுங்கதை
இந்தப் பாகத்தில்… திடீரென்று இன்ஸ்பெக்டர் பிலிப்ஸ் வருவது ஏன் என்று புரியவில்லை. அவரை யார் அழைத்தார்கள்.- சிரிக்க மட்டும் வாங்க
- கருத்து படங்கள்
- நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
படங்களை இணைத்தமைக்கு நன்றி நில்மினி. சிவன் சிலை வைத்தவர்கள்.... இன்னும் உண்டியல் வைக்கவில்லை. காலப் போக்கில் வரும் என நினைக்கின்றேன். 😂 புங்கையூரான்... இங்கெல்லாம், சொந்த வளவில் நிற்கும் மரத்தின் கொப்பை வெட்டவே, நகர சபையின் அனுமதி பெற வேண்டும். அப்படி வெட்டுவதென்றால் தகுந்த காரணம் இல்லாமல் வெட்டவே முடியாது. நம்மூரீல் நினைத்த மாதிரி எல்லாம் செய்கிறார்கள்.- இரசித்த.... புகைப்படங்கள்.
மிகுந்த அவதானத்துடன், மினக்கெட்டு செய்திருக்கிறார்கள். இவை யாவும்... வளருக்கின்ற செடிகள் என நினைக்கின்றேன்.- கருத்து படங்கள்
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
நில்மினி... கீழே உள்ள இணைப்பில், ´ படம் இணைக்கும் இரு வழிமுறைகள் கொடுக்கப் பட்டுள்ளது. முயற்சித்து பாருங்கள். 🙂- விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
ஆம் புங்கையூரான். உங்கள் கருத்திற்கு நன்றி. 🙏 நன்றி சுவைப்பிரியன். எனக்கும் மகிழ்ச்சியாக உள்ளது. 🙂 பிரபா சிதம்பரநாதன் அவர்களே... உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. 🙏- விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
சாத்தான்... உண்மையில் அவனும், நானும்... நீண்ட காலமாகவே அறிமுகமானவர்கள். வேலை இடத்திலும் நாம்... சுமூகமான உறவையே கொண்டிருந்தோம். அவன் பாலஸ்தீனத்தை சேர்ந்தவன். நன்றாக வேலை செய்யக் கூடியவன். ஆனால்... காரணம் இல்லாமல் ரென்ஷனில் நிற்பது அவன் சுபாவம். இன்னும் அவன் குற்ற உணர்விலிருந்து மீளவில்லையோ அல்லது எல்லாம் நாடகமோ என்று என்னால் கண்டு பிடிக்க முடியாமல் உள்ளது. 🙂- விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
கந்தையா அண்ணை... நானும் அவனும் வெவ்வேறு பகுதிகளில் மட்டுமல்ல, ஒரு நிர்வாகத்தின் கீழ் இயங்கும், வெவ்வேறு நிறுவனங்களில் வேலை செய்தாலும்.. அடிக்கடி சந்திக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் அதிகம். தற்காலிகமாக... சில கிழமைகள் நான் வேறு ஒரு பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தாலும் பழைய இடத்திற்கு செல்ல வேண்டிய சந்தர்ப்பமும் வரலாம். நீங்கள் சொல்வதும் சரி. நான் நிச்சயமாக... வலியப் போய் கதைக்க மாட்டேன். அவன் வந்து கதைத்தால்... கதைப்பேன். 🙂- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஈழப்பிரியன்... நேரம் கிடைக்கும் போது திகதியை மாற்றி விடுகின்றேன்.🙂- விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
வசி.... அமேரிக்கா, கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ளது போல் வேலை விபத்து சட்டமும், நடை முறையும் ஜேர்மனியில் மிக வித்தியாசமானது. தற் செயலாக நடந்த... வேலை இடத்து விபத்துக்கு நட்ட ஈடு கொடுக்க மாட்டார்கள். அவர் வேண்டுமென்றோ, என்னை பழிவாங்கவோ விபத்தை ஏற்படுத்தி இருந்தால்... (அதனை கண்ட சாட்சிகள் இருவர் இருக்க வேண்டும்)... வழக்கு தொடுத்து நட்ட ஈடு பெறலாம். அல்லது காலோ, கையோ... துண்டிக்கப் பட்டு அன்றாட கருமங்களை ஆற்ற முடியாத நிலையில் இருந்தாலும் பல வித சோதனைகளுக்குப் பின்... அதற்குரிய விகிதாசாரத்தில் நட்ட ஈடு கிடைக்கும். கடைசியாக அந்த விபத்தால்... இதுவரை செய்த வேலைகளை, உடல் அசைவுகளை முன்பு போல் செய்ய முடியாமல் இருந்தால்... கொஞ்சப் பணம் மாதாந்தம் தருவார்கள். அதனையும் பல சோதனைகளின் பின் நிரூபித்த பின் தான் கிடைக்கும்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
முகப் புத்தகத்தில் இருப்பது... Fake Id பெயரும் அப்பிடித்தான், வயதும் அப்பிடித்தான். அதை நம்பாதீங்க. 😂- விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
நாதம்ஸ்... எனக்கு விபத்து நடந்த ஓரிரு நாட்களிலேயே, விபத்து ஏற்படுத்தியவரும் தனக்கு மனம் சரியில்லை, மேலும் தவறு நடந்து விடுமோ என்று... மூன்று கிழமைக்கு மேல் சுகவீன விடுப்பில் நின்றதாக மற்றையவர்கள் சொன்னார்கள். அவன் சாதாரணமாகவே... ரென்ஷன் பார்ட்டிதான். ஆனால் நல்ல வேலைகாரன். 🙂- விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
வரவுக்கும், கருத்துக்கும்... நன்றி நெடுக்ஸ். உடலை உடனே வருத்தக் கூடாது என்றுதான்... படிப்படியாக குறைந்த நேரத்தில் இருந்து வேலையை ஆரம்பிக்க சொல்லியுள்ளார்கள். ஆக முடியாவிட்டால், மீண்டும் விடுப்பு எடுக்கலாம் என்று நினைக்கின்றேன். இது வரைக்கும் சிறிதான வலி இருந்தாலும், சமாளிக்கக் கூடியதாக உள்ளது. வீட்டில் இருந்து உடம்பு வளர்ப்பதை விட, வேலைக்குப் போவதால்... மனதும் உற்சாகமாக உள்ளது. 🙂 - எங்கே கனவுகள் தொலைந்து போனதா-பா.உதயன்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.