Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. இலங்கையை பொறுத்தவரை தேவை இல்லாமல் வாகன ஒலி எழுப்புவது எரிச்சலை ஊட்டியதாக மட்டும் குறிப்பிட்டார். வேறு குறைகளை தெரிவிக்கவில்லை. 🙂 ஆனால் பிடித்தவைகளை நிறைய பட்டியலிட்டார். ✅ 1) திருகோணமலையில் நீருக்கு அடியில் நீந்தும் பயிற்சியை ஜேர்மன் மொழியில் பெற்று அங்கேயே கடலுக்கு அடியில் சென்று பவளப் பாறைகளை பார்த்து ரசித்தமை… 2) நுவரேலியாவில் 🫖 தேயிலை தோட்டம், தேயிலை பதனிடும் முறைகளை அறிந்து கொண்டமை…. 3) கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் குடித்த சுவையான ☕️ கோப்பியைப் போல் வேறு எங்கும் குடிக்கவில்லையாம். அந்த வீட்டுக்காரர் அவர்கள் தோட்டத்தில் விளைந்த கோப்பியை வறுத்து தயாரித்த கோப்பி என்றார். வரும் போது அவர்களிடம் அதே கோப்பித் தூளை வாங்கி வந்து, இங்கு கோப்பி தயாரித்தால்… அந்த வாசனையும், சுவையும் வரவில்லை என்றார். 4) இலங்கை போன கையுடன்… மரத்தால் செய்த ஒன்றரை அடி உயரமான யானை 🐘 சிற்பம் ஒன்றை 40 ஐரோவிற்கு வாங்கி விட்டு அதை பாதுகாப்பாக எங்கு வைப்பது என்று தெரியாமல்…. யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி, நுவரேலியா எல்லாம் காவிக் கொண்டு திரிந்தவராம். அந்த யானையை வைக்க… சீன போலி தயாரிப்பான Adidas Rucksack 🎒 ஒன்று மலிவு விலையில் வாங்கி, அதற்குள் வைத்துக் கொண்டு திரிய வசதியாக இருந்ததாம். இலங்கையில் பிரச்சினை கொடுக்காத அந்தப் பை… திரும்பி வரும் வழியில், டுபாயில் விமானம் மாறும் போது, அறுந்து விட்டதாம். 😁 பிறகென்ன… டுபாய் டியூட்டி free’யில், ஒறிஜினல் Adidas பை வாங்கி… ஜேர்மனி வந்து சேர்ந்தாராம். 🤣
  2. ஈழப்பிரியன்… அந்தப் பெடியனும், பெட்டையும் அங்கை ஸ்கூட்டர் 🛵 எல்லாம் வாடகைக்கு எடுத்து ஒடி இருக்கினம். இவ்வளவிற்கும் அதற்குரிய லைசன்ஸ் இல்லை. ஸ்கூட்டர் வாடகைக்கு கொடுப்பவர்…. வெள்ளைக்காரரை பொலிஸ் சோதிக்க மாட்டுது என்று சொல்லித்தானாம் கொடுத்தவர். 😂 ஆனால் ஒரு நாள் இரண்டு பேரையும் பொலிஸ் மறிக்க, இவையளுக்கு பயங்கர உதறல் எடுத்திருக்கு. இங்கத்தை பொலிஸ் மாதிரி கடுமையான தண்டனை கிடைக்கப் போகுது என்று பயந்து கொண்டிருக்க… பொலிஸ்காரன் சும்மா கதைத்து விட்டு அனுப்பி விட்டானாம். 😁 பொலிஸ்காரனுக்கு… வெளிநாட்டு ஆட்களுடன் கதைக்க ஆசையாக இருந்திருக்குமாம்‼️, அதுதான் தங்களை மறித்து கதைத்தவனாம் என்று பெடியன் சொல்லுறான். 🤣
  3. சுவியர்… அவன் நண்பியை, வீட்டில் விட்டுட்டு… இங்கை தனிய வந்து இருக்கிறான். 😃
  4. ஆட்டோவில்… மீற்றரை விட அதிக காசு கேட்பதாக சொன்னார். அவருக்கு உள்ளதை உள்ள படி பெறாமல்… குறுக்கு வழியில் பணம் பெற முயல்வது ஏமாற்றமாக இருந்தது. அதனை சிறு குற்றச் சாட்டாக சொன்னாரே தவிர பெரும் பொருட்டாக எடுக்கவில்லை. துருக்கி போன்ற இடங்களுக்கும் அவர் சென்றுள்ளதால்… வெளி நாட்டவர்களிடம், உள்ளூர் வியாபாரிகள் அதிக பணம் அறவிடுவதை எதிர்பார்த்தே இருந்திருக்கின்றார். அத்துடன் அவருக்கு… நிறைய நல்ல அனுபவங்கள் கிடைத்ததால் இதனை பெரும் குறையாக எடுக்கவில்லை.
  5. என்னுடன் தற்போது Reha Clinic‘ல் தெரப்பி செய்து கொண்டு இருக்கும், 25 வயதுடைய ஜேர்மன் இளைஞனும் அவனது நண்பியும், சென்ற வருடம் 2022 மாசி மாதமளவில் “Gotha Go Home“ போராட்டம் மும்முரமாக நடந்து கொண்டிருந்த போது இலங்கைக்கு நான்கு கிழமை ✈️ சுற்றுலாவில் 🛩 சென்றவர்கள். பெடியனுக்கு… 25 வயது என்ற படியால், அவன் என்றே தொடர்ந்து குறிப்பிடுகின்றேன். 😁 அவன் போன நேரம்… காலி முகத் திடல் மட்டுமல்லாது பல இடங்களிலும் ஆர்ப்பாட்டாங்கள் நடந்து கொண்டு இருந்தாலும்… தங்களை அது பெரிதாக பாதிக்கவில்லை என்றும், பார்ப்பதற்கு சுவராசியமாக இருந்ததாக குறிப்பிட்டார். ஶ்ரீலங்கா போய் இறங்கிய நேரம் ஒரு ஐரோ 280 ரூபாய் இருந்தது என்றும், பிறகு தினமும் 📈 அதிகரித்து சென்று 380 ரூபாயில் வந்து நின்றது மகிழ்ச்சியாக இருந்தது என்று சொன்னார். ஒரு முறை 🚅 ரயிலில் போக… ரயில் நிலையத்துக்கு சென்று பயணசீட்டு கேட்ட போது, அங்கு இருந்த அரச 👨🏻‍✈️ ஊழியர் இனி ரயில் ஒண்டும் ஓடாது, வேண்டுமென்றால் மலிவான விலையில் வாடகைக் 🚙 கார், சாரதியுடன்… ஒழுங்கு செய்து தருவதாகவும், இலங்கையில் நிற்கும் காலம் முழுக்க அதனையே பாவிக்கலாம் என்றும்… ஒரு நாள் வாடகை 250 ஐரோ படி, மிகுதி மூன்று கிழமைக்கும் மொத்தமாக முற்பணம் செலுத்த வேண்டும் என்றும் அந்த ரயில் நிலைய அரச அதிகாரி கேட்டாராம். தான் ஹோட்டேலுக்கு போய் யோசித்து சொல்வதாக சொல்லிவிட்டு வந்துவிட்டாராம். அடுத்த நாள் பார்த்தால்… வழமை போல் ரயில் ஒடுவதாகவும். நல்ல காலம் ஒரு ஏமாற்று பேர் வழியிடம் இருந்து தப்பி விட்டதாகவும் குறிப்பிட்டார். 🚂 ரயிலில்… கதவருகே இருந்து… அவனும், நண்பியும் தொங்கிக் கொண்டு சாகசம் செய்தபடி போன தருணங்கள் மிக இனிமையான நிகழ்வுகளில் ஒன்றாக குறிப்பிட்டார். 🐘 யானையில் சவாரி செய்ததையும், யானையை தொட்டு குளிப்பாட்டியதையும் அடிக்கடி குறிப்பிடுவதோடு… மற்றைய ஜேர்மன்காரருக்கும் அந்தப் படங்களை காட்டி பெருமைப் பட்டுக் கொள்வார். 😀 நான் இலங்கையில் வசிக்கும் போது…. சிவனொளிபாத மலை, சிகிரியா போன்றவற்றை பார்க்கவில்லை என்று அறிந்ததும்… நான் பார்க்காததை, தான் பார்த்து விட்டதாக… அவருக்கு அற்ப சந்தோசமும் உள்ளது. 😂 உணவு வகைகளில்…. விதம் விதமான 🥬 மரக்கறி வகைகள் தமக்கு மிகவும் பிடித்தவை என்றும், தாம் மாமிசம் சாப்பிடாதவர்கள் என்பதால், தம் வாழ் நாளில் சாப்பிடாத 🥒 மரக்கறிகளை உண்டதாகவும், அதிலும் பிலாக்காய் கறியின் 🌶 சுவையையும் பாராட்டினார். 🍌 வாழைப்பழம் எல்லாம்… ஒரே மாதிரி என்று நினைத்துக் கொண்டிருந்த தனக்கு…. இலங்கை சென்ற பின்தான் தெரிந்ததாம் சிவப்பு, பச்சை நிறங்களிலும்… வித்தியாசமான அளவுகளிலும், சுவைகளிலும் வாழைப்பழங்களை பார்த்து ஆச்சரியப் பட்டதாக கூறினார். ஒரு முறை, தான் வாங்கிய ரயில் பயணச் சீட்டு குறிப்பிட்ட ரயிலுக்கு செல்லாது என தெரிந்து கொண்ட உள்ளூர் தம்பதிகள்.. தம்முடைய செலவிலேயே புதிய ரயில் பயணச் சீட்டை வாங்கித் தந்ததை நன்றியுடன் குறிப்பிட்டார். எப்போ, எங்கு… சாப்பிடப் போனாலும் தினமும் பருப்புக் கறியை தந்து, தனக்கு வெறுப்பு ஏற்படுத்தி விட்டார்களாம். 😂 ஜேர்மனிக்கு வந்து ஒரு வருடமாகியும் பருப்பை கண்டால் வெறுப்பாக இருக்குதாம். 🤣 பெடியன்… யாழ்ப்பாணம், நயினாதீவு எல்லாம் போயிருக்கிறான். 🥰யாழ்ப்பாண பயணம்தான்… இலங்கையிலேயே தனக்குப் பிடித்த இடம் என்றான். அது வரை, நான் அங்கு பிறந்ததாக அவனுக்கு சொல்லவில்லை. அவனாகவே சொன்ன கருத்து அது. ஏன் யாழ்ப்பாணம் பிடிக்கும் என்று கேட்ட போது… வெள்ளைக்காரர் ஒருவரும் இல்லாமல் தாங்கள் மட்டும் அந்த மக்களிடையே வித்தியாசமாக இருந்தது தனக்கு மிகவும் பிடித்துக் கொண்டதாக கூறினார். பிற்குறிப்பு: கிளினிக்கில் இருந்து கைத்தொலை பேசியில் எழுதியதால், பதிவை… வர்ணமயமாக மெருகூட்ட முடியாமைக்கு மன்னிக்கவும். இன்னும் இரண்டு நாள்தான் இங்கு இருப்பேன். பெடியனிடம் உங்கள் சார்பாக கேட்க வேண்டிய கேள்விகள் இருந்தால் கீழே எழுதவும். கேட்டு பதில் சொல்கின்றேன். 😁 புதன் கிழமை வீட்டிற்கு செல்வதால்… அதற்குப் பின் கேட்கும் கேள்விகளுக்கு பதில் வராது. 🤪 🤣
  6. மொசாம்பிக் நாட்டில் காணப்படும், Taraco என்னும் பறவை.
  7. 👉 https://www.facebook.com/watch?v=540592144521739 👈 அடச்சீ! நடிகரை கொண்டாடும் ரசிகர்களே.. முட்டாள்களே! நீங்கள் வெட்கி தலைகுனியும் பதிவு!
  8. சவுக்கு சங்கர், பிராமணர் என்று எனக்கு இன்று தான் தெரியும்.
  9. ஒரு மாதிரி... "அன்ரெனா" பூட்டியாச்சு. ஆராவது... இந்த, ஏணியை எடுத்து தருவீங்களா... 😂
  10. முஸ்லீம் பெண்கள் மாதிரி, முக்காடு போட்ட.. மகிந்த ராஜபக்சவின் மனைவி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.