Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. பாடசாலை விளையாட்டு மைதானத்துக்கு அருகில் உள்ள கட்டிடத்தின் கூரையில் தொங்கிய பந்துகள்.
  2. யாருக்கு... ஒவ்வொரு இரவும், இந்தப் பிரச்சினை இருக்கு. 🤣
  3. வாராந்திர சந்தை. ஒவ்வொரு கிழமையும் தோட்டக்காரர், தமது தோட்டத்தில் விளைந்த பொருட்களை, அந்த நகரங்களில் கொண்டு வந்து நேரடியாக விற்பனை செய்வார்கள். 🙂 கிழமையில் இரண்டு நாட்கள் இப்படியான சந்தை காலை 🕗 8 மணியிலிருந்து மணிவரை நடக்கும். 😎 இப்போதெல்லாம்... தோட்டக் காரரின் வரவு குறைந்து, அந்த இடத்தை இடைத் தரகர்கள் 🤼‍♂️ அதிகமாக காணப் படுகின்றார்கள். தோட்டக் காரருக்கும்... நாள் முழுக்க கடையில் நின்று, மினக்கெடுவதற்கு... நேரம் காணாமையும், முக்கிய காரணம் என நினைக்கின்றேன். 🙂 தமிழ் சிறி. 🤣
  4. நில்மினி... பவேரியாவில் இருந்து, 250 கிலோ மீற்றர் தூரத்தில் நாங்கள் வசிக்கின்றோம். நில்மினிக்கு.. புட்டும், மீன் குழம்பும் என்றால், நல்ல விருப்பமோ.... 😂 படம்: கூகிள்.
  5. ஆகா... நில்மினி, சொன்ன மாதிரி... அடுத்த நாள் மினக்கெட்டு அந்த இடத்திற்குப் போய் படத்தை எடுத்து இணைத்தமைக்கு நன்றிகள். 🙏 இரண்டு வீடுகள் அடுத்தடுத்து உள்ளது அழகாக உள்ளது. மற்றைய வீடுகளும், மிகப் பிரமாண்ட வேலைப்பாடுகளுடன் கட்டியமை... அவர்களின் திறமையை வெளிப்படுத்துகின்றது. 👍 இங்கிருந்து இவ்வளவு தூரம் போய்.... தாங்கள் விரும்பியபடி கட்டியவர்கள்... உண்மையிலேயே கெட்டிக்காரர்தான். ஏனோ தெரியவில்லை, இப்படியான இந்த வீடுகளை எங்காவது கண்டால் என்னை அறியாமலே நின்று அதனை ரசித்து விட்டுத்தான் செல்வேன். 🥰
  6. உங்கள் நகரத்து படங்களை இணைத்தமைக்கு நன்றி குமாரசாமி அண்ணை. சில கட்டிடங்கள், ஒருவகை சீமெந்து பூச்சுக்களாலும் சிலது மலையில் பெயர்த்தெடுத்த தட்டுப் போன்ற கற்களாலும், சில... செங்கற்களாலும், சிவரை மூடி இருந்தாலும்... எல்லா இடமும் முக்கியமாக மரத்தை பாவித்துள்ளார்கள்.
  7. சுவைப்பிரியன், படங்களை… ரசித்தமை எமக்கும் மகிழ்ச்சியாக உள்ளது. 🙂
  8. 👉 https://www.facebook.com/watch?v=925219501843847 👈 யாழில்... 75 வயது பாட்டி, இளசுகளுடன் போட்டி போட்டு ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்ட காட்சி.
  9. எப்படி இருக்கு... இந்தக் கோழிக் கூடு. 🤣
  10. ஆட்டின் கால், மரத்தில் ஏறுவதற்கு ஏற்ற மாதிரி வடிவமைக்கப் படவில்லை. அப்படி இருந்தும், ஏறுகின்றது என்றால் அதிசயம்தான். கீழே இவ்வளவு செடிகள் இருந்தும், அதனை தின்னாமல்... மரத்தில் ஏறித்தான் தின்னுவேன் என்று அடம்பிடிக்குது இந்த ஆடு.
  11. அமெரிக்கன் கட்டத்துரை, ஒரே.... உலாத்துப் போலை கிடக்கு. 😂 எப்பவாவது "மன்ஹற்றன்" போனால், மறக்காமல் படங்களை எடுங்கள். அவசர காரியமில்லை... ஈழப்பிரியன். 🙂
  12. இங்கு கத்தோலிக்கர் என்றால்... வரும் சம்பளத்திலிருந்து 100 € நேரடியாகவே அந்த அமைப்பிற்கு போய் விடும். வத்திக்கானிடம் இல்லாத பணமா, நாங்கள் ஏன் கொடுக்க வேண்டும் என பேசுவார்கள். இதனால்... கடுப்பேறிய பலர் மதத்தை விட்டு விலகி விடுகிறார்கள். பல தேவாலயங்களில் மக்கள் இல்லாமல், பூசை நடக்கின்ற கொடுமையும் உள்ளது. சில தேவாலயங்கள் விற்பனைக்கும் போகின்றது.
  13. ஓம் நுணாவிலான். பேர்லினுக்கு முன்பு, பொன் (Bonn) தான் தலைநகரமாக இருந்தது. இந்தக் கட்டிடங்களை... நினைவுச் சின்னமாக பாதுகாக்கின்றார்கள். சில வருடங்களுக்கு முன், இப்படியான பராமரிப்புக்காக ஒரு வீட்டின் நிலத்தை இடித்த போது பல சாடிகளில் லட்சக் கணக்கான பழைய அரிய நாணயக் குற்றிகளை கண்டெடுத்தார்கள். 🙂
  14. நில்மினி, இந்த இடம் எங்கள் வீட்டில் இருந்து 70 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள நகரம். இதனை மருத்துவ நகரம் என்றே சொல்லலாம். அவ்வளவிற்கு அதிக பிரத்தியேக தேவைக்குரிய வைத்திய சாலைகளும், மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களும், வைத்தியசாலை ஊழியர்களின் பயிற்சி கல்லூரிகளும் நிறைந்து உள்ளது. மிக அதிகமான வெளிநாட்டு மாணவர்களை எங்கும் காணலாம். நீங்கள், கெட்டிக்காறி நில்மினி. 😁 இந்தப் படங்களை ஞாயிற்றுக் கிழமை காலை 8 மணிக்கும் 9 மணிக்கும் இடையில் எடுத்தேன். அந்த நேரத்தில் மக்கள் எல்லோரும் விடுமுறை நாள் என்ற படியால், தூக்கத்தில் இருந்து எழும்பவில்லை. அனேகமாக இந்த நாளில்… மதியம் 11 மணிக்குப் பின் தான் நகரம் உயிர்புடன் இயங்கத் தொடங்கும். வேலை நாட்களில் காலை 5 மணிக்கே மக்கள் மெதுவாக நடமாட தொடங்கி விடுவார்கள். இங்குள்ள அனேகமான நகரங்களிலும் இது தான் நிலை. பிரதான நகரங்கள் விதி விலக்கு. அமெரிக்காவிலும் இது தான் நிலை என ஊகிக்கின்றேன். அமெரிக்காவின் 75 வருடத்துக்கு முற்பட்ட மக்களின் வதிவிட முறையை அறிய சுவராசியமாக இருந்தது. 👍🏼 நில்மினி, நீங்கள் நேற்றுப் பார்த்த வீட்டின் படத்தை பார்க்க ஆவலாக உள்ளேன். நேரம் கிடைக்கும் போது, படம் எடுத்து இணைத்து விடுங்கள். 🙂
  15. உண்மைதான் சுவியர், பழமையை பேணுவதில்.... வெள்ளைக்காரனை அடிக்க ஆளில்லை. நம்ம நாட்டில், இதனை கண்காணிக்கவோ, இதன்... அருமை பெருமைகளை விளங்கிக் கொள்ளவோ ஆட்கள் இல்லை. 🙂
  16. ஈழப்பிரியன், எனக்கும் நியூயோர்க்கில் உள்ள இப்படியான கட்டிடங்களை பார்க்க ஆசையாக உள்ளது. நீங்கள் இந்த மாதம் நியூயோர்க் செல்வதாக முன்பு குறிப்பிட்ட நினைவு. அப்படி சென்றால்.. நேரம் ஒதுக்கி சில படங்களை இணைத்து விடுங்களேன். 🙂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.