Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. செம்மணி மனித புதைகுழியில் இன்றைய தினம் சனிக்கிழமை மேலும் மூன்று மனித எலும்புக்கூட்டு தொகுதிகளும் மேலும் சில சிதிலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம் கட்ட அகழ்வு பணியின் மூன்றாம் நாள் பணிகள் இன்றைய தினம் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. இன்றைய அகழ்வு பணிகளின் போது மூன்று மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுவரை காலமும் 27 மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 22 எலும்பு கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம்.com
  2. சுப. சோமசுந்தரம் ஐயா அவர்களே... நல்ல ஒரு பகிர்விற்கு நன்றி. 👍
  3. 'வறுமையில் பிறந்த உணவு': அமெரிக்காவில் 'உணவுக்கான ஆஸ்கர்' வென்ற மதுரை தமிழர். நியூயார்க்கின் மன்ஹாட்டன் பகுதியில் பருவங்களுக்கு ஏற்ற வகையில் மாறி வரும் உணவின் சுவைக்கு நடுவே, சமையல் கலைஞர் விஜய் குமார் அமைதியாக ஒரு புரட்சியையே ஏற்படுத்தியிருக்கிறார். நியூயார்க் மாகாணத்தின் சிறந்த சமையல் கலைஞருக்கான ஜேம்ஸ் பியர்ட் விருதைப் பெற்று அசத்தியுள்ளார் விஜய் குமார். தனிநபருக்கான அங்கீகாரம் மட்டுமின்றி கலாசார மாற்றத்தின் புள்ளியாக இந்த விருது கருதப்படுகிறது. உணவுகளின் வரலாறு குறித்து ஆய்வு செய்யும் சென்னையைச் சேர்ந்த ராகேஷ் ரகுநந்தன் இது குறித்து பேசும் போது, "இந்த விருதுகளை ஏற்கனவே வென்ற தமிழ் வம்சாவளியினரான ராகவன் ஐயர் மற்றும் பத்ம லட்சுமியின் வழியே, விஜய் குமாருக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம், உலக சமையல் அரங்கில் வளர்ந்து வரும் தென்னிந்தியர்களின் குரல்களை பிரதிபலிக்கிறது," என்று கூறினார். "இலங்கை தமிழ் மற்றும் இதர தென்னிந்திய உணவு முறைகளுடன், தமிழ் உணவுகள் உலக அரங்கில் உள்ள உணவகங்களில், மேம்படுத்தப்பட்ட, உயர்ந்த மற்றும் கலாசாரத்தில் வேரூன்றிய உணவு வகைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது," என்றும் அவர் கூறினார். தென் தமிழகத்தின் மதுரை மாவட்டம் அரசம்பட்டி என்ற சிறிய விவசாய கிராமத்தில் பிறந்தவர் விஜய் குமார். 44 வயதான அவர் எப்போதும் தன்னுடைய நினைவுகளில் இருந்து உணவை தேர்வு செய்கிறார். காடுகளும், உணவு தேடல்களும், விறகு அடுப்பும், வீட்டிற்கு தேவையான உணவை சமைக்கும் அம்மாவும் பாட்டியுமாக அந்த நினைவு நிரம்பியுள்ளது. https://www.bbc.com/tamil/articles/cyvjq05drr1o?fbclid=IwY2xjawLMryRleHRuA2FlbQIxMABicmlkETBlSUNTVG96M2YzazZWcXQyAR4nhltk2eBLL5RAfc_kyVpkYhxppK2pVcmfr_54kUfwQK086Kvx2LDCHXGMKw_aem_BmJ_GOXwGjt2Iq6B8kFT2g
  4. ஈரானுடன் நடந்த போரில் இஸ்ரேலுக்கு 12 பில்லியன் டொலர் நட்டமாம். இஸ்ரேல் ஆழம் தெரியாமல் காலை விட்டுட்டு... ஈரானிடம் செமத்தியாய் வாங்கிக் கட்டியிருக்கு. நீண்ட வருடங்களின் பின், இந்தப் போரில் தான்... இஸ்ரேல் மக்கள் அகதியாக கூடாரத்தில் வசித்த காட்சியையும் உலகம் பார்த்தது. யாழ். களத்தில் ஒருவர், ஈரானுக்கு... இஸ்ரேலிடம்தான் மருந்து இருக்கு என்று பெரிய அரசியல் அறிவாளி மாதிரி வருசக்கணக்கில் சொல்லிக் கொண்டு திரிந்தார். அதுக்கும்... ஆமாம் போட்டுக் கொண்டு, சிலர் பின்னால் திரிந்தது எல்லாம் உங்களுக்கு நினைவிற்கு வருகின்றதா. 😂
  5. காசாவில் அடுத்த வாரத்திற்குள் போர்நிறுத்தம் எட்டப்படும்! இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், காசாவில் அடுத்த வாரத்திற்குள் போர்நிறுத்தம் எட்டப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். இதேவேளை, நேற்றைய தாக்குதலில் 60 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், உதவிப் பொருட்களைத் தேடி பட்டினியால் வாடும் பாலஸ்தீனியர்களை “வேண்டுமென்றே சுட” படையினருக்கு உத்தரவிடப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்களில் வெளியான தகவல்கள், காசாவில் “போர்க்குற்றங்களுக்கு” மேலும் சான்றாகும் என காசாவின் அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. காசா மீதான இஸ்ரேலின் போரில் இதுவரை குறைந்தது 56,331 பேர் கொல்லப்பட்டதுடன் 132,632 பேர் காயமடைந்துள்ளனர் என காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1437424
  6. செம்மணி மனித புதைக்குழி விவகாரம் – மேலும் இரண்டு மனித சிதிலங்கள் கண்டுபிடிப்பு! செம்மணி மனித புதைக்குழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் நேற்றைய தினம் ஆரம்பிக்கபட்டிருந்த நிலையில் இன்று(27) இரண்டாவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதன்போது இரண்டு மனித சிதிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுகளுக்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என்ற உத்தரவாதத்திற்கு அமைய நேற்று இரண்டாம் கட்ட அகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது. நிலையில் குழந்தையின் மண்டையோட்டுத் தொகுதி உட்பட மூன்று மனித சிதிலங்கள் நேற்றைய தினம் மீட்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் இரண்டாவது நாளாகவும் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் மேலும் இரண்டு மனித சிதிலங்களும், ஏனைய சிறு சிறு மனித எச்சங்களும் மீட்கப்பட்டிருந்தன. செம்மணி, சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் கடந்த பெப்ரவரி மாதம் அடையாளம் காணப்பட்ட மனிதப்புதைகுழியில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அகழ்வுகள் இடம் பெற்றன. மூன்று குழந்தைகளின் மனிதச் சிதிலங்கள் உட்பட 19 மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் புதை குழி மனிதப் புதைகுழியாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது. அத்துடன் 45 நாட்களுக்கு இரண்டாம் கட்ட அகழ்வுகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது. இதன்படி அகழ்வுகளுக்கான செலவீன பாதீடு சமர்ப்பிக்கப் பட்ட நிலையில், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெற்ற உத்தரவிற்கு அமைய வியாழக்கிழமை இரண்டாம் கட்ட அகழ்வுகளை முன்னெடுக்கப்பட்டது. இன்றைய தினத்துடன் இதுவரை 24 மனித சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 45 நாட்களுக்கு பாதீட்டு அளவு உள்ளதால் முதல் 15 நாட்களுக்கு அகழ்வு பணிகள் சிறிய இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்து நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1437390
  7. மத்திய ஆப்பிரிக்க குடியரசில் பாடசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 29 மாணவர்கள் உயிரிழப்பு! மத்திய ஆப்பிரிக்க குடியரசின் தலைநகரில் பாங்குயில் பாடசாலைக் கட்டிடமொன்று தீப்பிடித்து எரிந்ததில் 29 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி 280 பேர் காயம் அடைந்துள்ளனர். மத்திய ஆப்பிரிக்க குடியரசின் தலைநகரில் பாங்குயில் உயர்நிலைப் பாடசாலையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இந்தப் பாடசாலையில் இந்த ஆண்டுக்கான இறுதித் பரீட்சைகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இதனிடையே நேற்று மாணவர்கள் பாடசாலையில் அமர்ந்து தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு குண்டு வெடிப்பது போல பயங்கர சத்தம் கேட்டதனால் பீதியடைந்த மாணவர்கள் அங்கும் இங்குமாக ஓடினர். இதனை தொடர்ந்து பாடசாலை கட்டிடம் தீப்பிடித்து எரிந்ததுள்ளது. இதற்கிடையே தீ விபத்து குறித்து மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்துக்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த கோர சம்பவத்தில் 29 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி 280 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களை மீட்பு படையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என்று அஞ்சப்படுகிறது. https://athavannews.com/2025/1437379
  8. மத்தியப் பிரதேசம்; தண்ணீர் கலந்த டீசலை... நிரப்பியதால், முதலமைச்சர் மோகன் யாதவின் வாகன ஊர்தியில் சென்ற 19 வாகனங்கள் பழுதாகி நடுவழியில் நின்றது.
  9. செம்மணி மனித புதைகுழியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மேலும் இரண்டு மனித எலும்புக்கூட்டு தொகுதிகளும், மேலும் சில சிதிலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம்.com
  10. பணக்காரர்கள் கூட மூடீட்டு இருப்பார்கள். ஆனால் சில்லறைகள் இப்படித்தான். நம்ம யாழ்ப்பாணம்
  11. உறுப்பினரிடையே ஒருமித்த கருத்தின்மை – யாழ் மாநகர சபையின் விசேட அமர்வில் குழப்பம்! யாழ்.மாநகரின் நியதிக் குழுக்களை நியமிப்பதில் உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்தின்மையால் யாழ் மாநகர சபையின் விசேட அமர்வின் போது குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. யாழ். மாநகர சபையின் கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற முதலாவது அமர்வின் தொடர்ச்சியாக, விசேட அமர்வுக்காக இன்றையதினம் (27) திகதியிடப்பட்டிருந்தது. இதனடிடையில் இன்று காலை(27) முதல்வர் மதிவதனி தலைமையில் சபையின் விசேட அமர்வு ஆரம்பமானது. கூட்டம் ஆரம்பமான நிலையில் கடந்த வாரம் ஏற்பட குழப்பத்தால் ஒத்திவைக்கபட்ட சுகாதாரக் குழுவுக்கான உறுபினர்கள் தெரிவு இன்று நடைபெற்றது. அதன் பின்னர் மேலும் சில குழுக்களுக்கான உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர். குழுக்களுக்கான உறுப்பினர்கள் தெரிவு முடிவடைந்த பின் கூட்டத்தை முடித்துக்கொள்வதாக முதல்வர் அறிவித்து சபையிலிருந்து வெளியேறினார். இந்நிலையில் முன்னதாக சபையின் உறுப்பினர் தர்சானந்த், கடந்த 23 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் சுகாதார குழுவில் உள்வாங்கப்பட உறுப்பினர்கள் குறித்து ஏற்பட்ட இணக்கமின்மையால் கூட்டம் நிறுத்தப்பட்டு இன்று(27) அதன் தொடர்ச்சி நடைபெற்றது. ஆனால் அன்று குழப்பத்தை ஏற்படுத்திய அதே தெரிவுகள் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இது எவ்விதத்தில் நியாயமானது. தமக்கு தமது கருத்துக்களை கூற சபையில் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். கூட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டாம் என சபையின் உறுப்பினர் தர்சானந்த் கோரிக்கை விடுத்து சபையின் குறுக்கே சென்று முதல்வர் வெளியேறுவதை தடுத்ததால் அங்கு குழப்பம் ஏற்பட்டது. ஆனாலும் முதல்வர் வெளியேறியதால் தமக்கு தமது எதிர்ப்பை காண்பிக்க நியாயம் கிடைக்கவில்லை என கூறியதுடன் சபையில் வெளி நபரது ஆதிக்கம் வலுவாக இருப்பதாகவும் இது சபையின் நன்மைக்கு ஏற்றதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1437366
  12. காணி சுவீகரிப்பு வர்த்தமானி குறித்து உயர் நீதிமன்றத்தின் உத்தரவு! காணி நிர்ணய சட்டம் பிரிவு 4க்கு அமைவாக வடக்கில் காணிகளை சுவீகரிக்கும் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் திகதியிடப்பட்ட 2430/25 இலக்கமிடப்பட்ட வர்த்தமானியை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தாக்கல் செய்த மனு இன்று (27) விசாரணைக்கு எடுக்கப்பட்ட பின்னர் குறித்த வர்த்தகமானியை தற்காலிகமாக பலமற்றதாக்கும் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 02 ஆம் திகதி இடம்பெறவுள்ளநிலையில், குறித்த வர்த்தமானியை மீள கைவாங்குவதற்கான வர்த்தமானியை அரசாங்கம் வெளியிட்டால் அதனை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் இதன்போது உத்தரவிட்டுள்ளது. இந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு இல. SC/FR/112/25 இல் மனுதாரர் எம்.ஏ. சுமந்திரன் சார்பில் சட்டத்தரணி மோகன் பாலேந்திராவின் அறிவுறுத்தலின் பேரில் ஜனாதிபதி சட்டத்தரணிகள் க. கனக-ஈஸ்வரன், விரான் கொறேயா மற்றும் சட்டத்தரணிகள் பவானி பொண்சேகா, லக்ஷ்மணன் ஜெயக்குமார், நிலோஷன் ரவீந்திரன், பெனிஸ்லஸ் துஷான் ஆகியோர் ஆஜராகினர். Athavan Newsகாணி சுவீகரிப்பு வர்த்தமானி குறித்து உயர் நீதிமன்றத்தின்...காணி நிர்ணய சட்டம் பிரிவு 4க்கு அமைவாக வடக்கில் காணிகளை சுவீகரிக்கும் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் திகதியிடப்பட்ட 2430/25 இலக்கமிடப்பட்ட வர்த்தமானியை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவ...
  13. ஈரானுடன் நடந்த போரில் இஸ்ரேலுக்கு 12 பில்லியன் டொலர் சேதம்! ஈரானுடன் நடந்த 12 நாள் போரில் இஸ்ரேலுக்கு சுமார் 12 பில்லியன் டொலர் அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஈரான் – இஸ்ரேல் இடையேயான தாக்குதலில் இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் கடும் சேதமடைந்ததுடன் குறிப்பாக இஸ்ரேலின் வான் பாதுகாப்பை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்நிலையில், ஈரான் தாக்குதலில் இஸ்ரேலுக்கு சுமார் 12 பில்லியன் டொலர் மதிப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் வரித்துறை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நாடு தற்போது மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது. இஸ்ரேலின் வரலாற்றில் இதுபோன்ற சேதத்தை நாடு இதுவரை சந்தித்ததில்லை. ஈரான் தாக்குதலில் சேதமடைந்த கட்டிடங்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் 12 பில்லியன் டொலர் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். எனினும் சேதமடைந்த இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் ஆயுதங்களை கணக்கெடு சேத மதிப்பு கூடுதலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. https://athavannews.com/2025/1437375
  14. செம்மணி மனித புதைகுழியில்-குழந்தை உள்ளிட்ட மூவரின் எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்பு! செம்மணி மனித புதைகுழியில் இருந்து குழந்தை ஒன்றின் மண்டையோட்டு தொகுதி உள்ளிட்ட மூன்று மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம் கட்ட அகழ்வு பணியின் முதல்நாள் பணிகள் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது இதன்போது சிறு குழந்தையின் மண்டையோட்டு தொகுதி உள்ளிட்ட மூன்று மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்து வரும் நாட்களில் அவைகள் அகழ்ந்து எடுக்கப்படவுள்ளன. அதேவேளை அகழ்வு பணிகளை 45 நாட்கள் முன்னெடுக்க நிதியினை விடுவிப்பதற்கான ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ள போதிலும் , அதற்கான நிதி எதிர்வரும் திங்கட்கிழமையே கிடைக்கப்பெறும் எனவும் , 45 நாட்கள் அகழ்வு பணிகளுக்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் , 15 நாட்கள் தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் நடைபெற்று , பின்னர் சிறு கால இடைவெளியின் பின்னரே பணிகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1437316
  15. நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; உயர்ஸ்தானிகர் வலியுறுத்தல்! பயங்கரவாதத் தடை சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிப்பதுடன், நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் வலியுறுத்தியுள்ளார். தமது விஜயத்தை நிறைவு செய்வதற்கு முன்னதாக கொழும்பில் நேற்று மாலை ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை, நீண்டகாலமாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் கைதிகள் குறித்து விரைவாக மதிப்பாய்வு செய்து அவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1437333
  16. இவர்கள் கூட்டமாக செல்ல எத்தனையோ பிரச்சினைகள் தமிழ் மக்களிடம் உள்ளது. இவர்கள்... தமது இருப்பை காட்ட வேண்டும் என்று நினைத்தால்.... தையிட்டி விகாரைக்குப் போய், தமது எதிர்ப்பை பதிவு செய்யச் சொல்லுங்கள்.
  17. நடிகர் கிருஷ்ணா பிணை கோரி மனு! போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட நடிகர் கிருஷ்ணாவுக்கு பிணை வழங்குமாறு கோரி நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த்இ ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே, போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் கிருஷ்ணாவும் நேற்று காலை கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதோடு அவர் இ நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது அவரை ஜூலை மாதம் 10ஆம் திகதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கு பிணை வழங்குமாறு கோரி சிறப்பு நீதிமன்றில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1437321

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.