Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  1. எதிர்த்து வாக்களித்த அந்த இருவரும் யார், எந்தக் கட்சி என அறிய ஆவலாக உள்ளது.
  2. படத்தில் எல்லோரும் சந்தோசமாக சிரித்துக் கொண்டு நிற்கிறார்கள். அழுகிற மாதிரி நின்றால்தானே… IMF இன்னும் நிறைய காசு கொடுப்பார்கள். ஒருவரும்… இந்த “ரெக்னிக்கை” முன்பே சொல்லிக் கொடுக்கவில்லையா.
  3. ட்றம்ப் ஐயா… சுத்துமாத்து சுமந்திரனிடம் ரியூசன் எடுப்பது நாலது. 😂
  4. காங்கிரசுக்கு…. வாக்கு வங்கி இப்பவும் உள்ளதா. இளைய தலைமுறை… காங்கிரசை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. ஈழத்து மருமகன்…. தளபதி விஜைக்கு, ஏழரைச் சனி... காங்கிரஸ் ரூபத்தில், பிடிக்க போகுது. 🤣
  5. இஸ்லாமிய நேட்டோ அமைந்தாலும்… ஆயுதம் வாங்க… வெள்ளைக்காரன், சீனன், ரஷ்யனைத்தான் நம்பி இருக்க வேண்டும். 🥷 🧌 அவங்கள்… முட்டாள் சோனிகளை வைத்தே, கல்லாப் பெட்டியை நிரப்பி விடுவார்கள். 😂 🤣
  6. கருணாநிதி குடும்பம்…. மனைவி, துணைவி, காதலி, சின்னவீடு… என்று மிகப் பிரமாண்டமானது. 😎 அதில் பங்கு கேட்டால்…. தீம்காவிற்கு கெட்ட கோள்வம் வரும். 😂 காங்கிரஸ்…. இருக்கிறதை வைத்து சுய இன்பம் காண வேண்டியதுதான். 🤣
  7. மாகாணசபைத் தேர்தலை நடத்தி… சுத்துமாத்து சுமந்திரன், மீண்டும் தலை குப்புற கவுண்டு, மண் கவ்வுவதை பார்க்க ஆசையாக உள்ளது. ❤️ அதற்காகத்தன்னும் அனுரா மாத்தையா… மா.ச. தேர்தலை நடத்த வேண்டும். 😂
  8. இந்தத் தேர்தலில்… ஏதோ ஒரு கட்சி, ஆயிரக்கணக்கில் கள்ள ஓட்டு குத்திக் கொண்டு இருப்பதை…. ஒரு காணொளியில் காட்டினார்கள். ஆசிய நாட்டு தேர்தல்களில்… கள்ள ஓட்டு போடுவது எல்லாம் சாதாரணமப்பா, என்று கடந்து போக வேண்டியதுதான். 😂
  9. #################### ########################## அக்குரேகொட துப்பாக்கிச்சூடு – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் கைது. தலங்கம, அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொ*லைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை எடுத்துச் சென்ற மற்றும் துப்பாக்கிதாரிகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த நவகமுவவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டத்தரணியின் வாகனம் இருக்கும் இடம் குறித்த தகவல்களை வழங்கியதும் இந்தச் சகோதரர்களே எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் கொட்டாவையில் வைத்து காரில் பயணித்துக் கொண்டிருந்த போது இவர்களைக் கைது செய்தனர். நவகமுவவைச் சேர்ந்த 20 மற்றும் 24 வயதுடைய நதுன் கவிஷ மற்றும் சனோஜ் கோகில ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் கொலை சம்பவம் தொடர்பில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாட்டில் உள்ள குற்றவாளிகளான தரிந்து மதுசங்க என்ற “டுடூ” மற்றும் “மோதர நிபுண” ஆகியோரின் ஐஸ் போதைப்பொருள் கடத்தலை இலங்கையில் முன்னெடுத்து வருபவர்கள் இவர்களே எனத் தெரியவந்துள்ளது. “சுத்தா ஐயாவின் வேலை ஒன்று உள்ளது, அதைச் செய்ய வேண்டும், 7 நாட்களுக்கு ஒரு வாகனத்தை வாடகைக்கு எடுங்கள்” என வெளிநாட்டில் உள்ள குற்றவாளிகள் இவர்களிடம் கூறியுள்ளனர். அதன்படி சகோதரர்கள் கொட்டாவையில் கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளனர். கொட்டிகாவத்தையில் முச்சக்கரவண்டியில் வந்த ஒருவரிடமிருந்து துப்பாக்கி அடங்கிய பொதியைப் பெற்று, சம்பவத்தன்று அக்குரேகொட சுப்பர் மார்க்கெட் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு காருக்கு மாற்றியுள்ளனர். இக்கொலைத் திட்டம் குறித்து ஒரு வாரமாக இவர்கள் அறிந்திருந்தனர். சட்டத்தரணி தனது மனைவியை அலுவலகத்திலிருந்து அழைத்துக் கொண்டு தினமும் மாலை 4.30 – 5.00 மணியளவில் செல்வதை கண்காணித்துள்ளனர். சம்பவத்தன்று சுப்பர் மார்க்கெட் வாகனத் தரிப்பிடத்தில் சட்டத்தரணியின் கார் நிறுத்தப்பட்டுள்ள தகவலைத் துப்பாக்கிதாரிகளுக்கு வழங்கியதும் இவர்களே. இக்கொ* லைக்கு உதவியமைக்காகச் சகோதரர்களுக்குப் பணம் வழங்கப்படவில்லை, மாறாக ஐஸ் போதைப்பொருள் வழங்கப்பட்டுள்ளது. துப்பாக்கிதாரிகளில் ஒருவர் சம்பவத்திற்கு 3 நாட்களுக்கு முன்பே பன்னிப்பிட்டிய ஹோட்டலுக்கு வந்துள்ளார். அவருக்குத் தேவையான ஐஸ் மற்றும் வசதிகளைச் சகோதரர்கள் செய்து கொடுத்துள்ளனர். மற்றையவர் சம்பவத்தன்று வந்துள்ளார். வாடகைக்கு எடுத்த காரை 7 நாட்களின் பின் மீண்டும் ஒப்படைக்கச் சென்ற போதே பொலிஸார் இவர்களைப் பின்தொடர்ந்து சென்று கைது செய்துள்ளனர். இதேவேளை, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி (44) மற்றும் அவரது மனைவி டபிள்யூ.ஏ. நிசன்சலா (42) ஆகியோரின் இறுதிக்கிரியைகள் இன்று பிற்பகல் பிடிகல, கொடமுன குடும்ப மயானத்தில் சட்டத்தரணிகள் மற்றும் பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது. https://athavannews.com/2026/1465213
  10. அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா! ஈரானுடனான தொடர்புகளுக்காக அமெரிக்காவால் முன்னர் தடை செய்யப்பட்ட மூன்று எண்ணெய்க் கப்பல்களை இந்தியா அதிகாரப்பூர்வமாக பறிமுதல் செய்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், சட்டவிரோத வர்த்தகத்தைத் தடுக்க அதன் கடல்சார் மண்டலத்தில் கண்காணிப்பை இந்தியா முடுக்கிவிட்டதாக ஒரு வட்டாரம் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளது. எண்ணெய் சரக்குகளின் தோற்றத்தை மறைக்கும் வகையில், கப்பல் பரிமாற்றங்களுக்கு தனது நீர்நிலைகள் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதே இந்தியாவின் நோக்கமாகும் என்று அந்த வட்டாரம் மேலும் கூறியது. அனுமதிக்கப்பட்ட மூன்று கப்பல்களான ஸ்டெல்லர் ரூபி, அஸ்பால்ட் ஸ்டார் மற்றும் அல் ஜாஃப்சியா ஆகியவை கடலோர மாநிலங்களின் சட்ட அமுலாக்கத்தைத் தவிர்ப்பதற்காக அடிக்கடி தங்கள் அடையாளங்களை மாற்றிக்கொண்டன என்று அந்த வட்டாரம் தெரிவித்தது. அவற்றின் உரிமையாளர்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் ஒரு எண்ணெய் கப்பல் சம்பந்தப்பட்ட சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டைக் கண்டறிந்த பின்னர், மும்பைக்கு மேற்கே சுமார் 100 கடல் மைல் தொலைவில் மூன்று கப்பல்களை வழிமறித்ததாக பெப்ரவரி 6 அன்று எக்ஸில் ஒரு பதிவில் இந்திய அதிகாரிகள் கூறியிருந்தனர். அந்தப் பதிவு பின்னர் நீக்கப்பட்டது, ஆனால் கப்பல்கள் மேலதிக விசாரணைக்காக மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அந்த வட்டாரம் உறுதிப்படுத்தியது. அமெரிக்க-இந்திய உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைத் தொடர்ந்து இந்த பறிமுதல்களும் கண்காணிப்பும் அதிகரித்துள்ளன. புது டெல்லி ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை நிறுத்த ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, இந்த மாத தொடக்கத்தில் வொஷிங்டன் இந்தியப் பொருட்களின் மீதான இறக்குமதி வரிகளை 50% இலிருந்து 18% ஆகக் குறைப்பதாக அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1465177
  11. இலங்கையர்களுக்கு இந்தி கற்பதற்கு இந்தியா உதவி! இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ஆக்ராவில் உள்ள கேந்திரிய இந்தி சன்ஸ்தான் (மத்திய இந்தி நிறுவனம்) நிறுவனத்தில் 2026-2027 கல்வியாண்டிற்காக இலங்கையர்களுக்கு இந்தி கற்க உதவித்தொகைகளை வழங்குகிறது. இந்தத் திட்டம் முழுமையாக நிதியளிக்கப்பட்ட உதவித்தொகையாகும், இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு திரும்பும் விமானக் கட்டணம், உதவித்தொகை, விடுதி தங்குமிடம் மற்றும் வருடாந்திர புத்தக மானியம் வழங்கப்படும். 19-45 வயதுக்குட்பட்ட (01.04.2026 நிலவரப்படி) மற்றும் தொடக்க/இடைநிலை மட்டத்தில் இந்தி படித்த அனைத்து மாணவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். இந்தத் திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்கள் https://www.hcicolombo.gov.in/section/news/ இல் கிடைக்கின்றன. இலங்கையைச் சேர்ந்த தகுதியுள்ள மாணவர்கள் முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவங்களுடன் சுவாமி விவேகானந்தா கலாச்சார மையம் (இந்திய கலாச்சார மையம்), 16/2, கிரிகோரிஸ் சாலை, கொழும்பு 07 இல் மார்ச் 9, 2026 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நேர்காணலுக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். https://athavannews.com/2026/1465131
  12. அக்குரேகொட சட்டத்தரணி அவரது மனைவி கொ* லை: இரண்டு சகோதரர்கள் கைது! அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவியமை மற்றும் உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் 20 மற்றும் 24 வயதுடைய இரண்டு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கொட்டாவையில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் இதன்போது, அவர்களால் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 13 ஆம் திகதி தலங்கம, அக்குரேகொட பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு முன்னால் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் பிற்பகல் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1465140

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.