Everything posted by island
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
என் கண்முன்னே நடந்த விடயத்தை நீங்கள் நீங்கள் பொய்யாக்க வேண்டிய அவசியம் ஏனோ? நடந்த அந்த நிகழ்வு தவறானதாக எவரும் சித்தரிக்க வில்லை. அதை மக்கள் கூட ஏற்றுக்கொண்டிருந்தனர்.
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
நான் கூறியது யார் உத்தியோகபூர்வமாக ஸ்போன்சர் செய்தார்கள் என்பதல்ல. யார் நிகழ்சிகளை மக்கள் முன் ஒருங்கிணைத்தார்கள் எனபதையே. ஐரோப்பாவுக்கு தமிழகத்தில் இருந்து எந்த பேச்சாளரும் புலிகளின் உத்தியோக பூர்வ அழைப்பில் வருவதில்லை என்பது தங்களுக்கு தெரியும். அவ்வாறு செய்ய புலிகள் சட்டபூர்வமான அமைப்பு அல்ல. ஐரோப்பாவில் புலிகளின் நிறுவனங்கள் புலிகளின் பெயரில் பதிவு செய்யப்படுவதில்லை. தனியார் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டது. புலிகள் அதை நிர்வாகம் செய்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும். இது போல் பல விடயங்களை கூறலாம்.
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
நீங்கள் மறுக்கும் அளவுக்கு அது ஒன்றும் தவறான செயல் அல்ல. நிதி சேகரிப்புக்கு அது அவசியமாக பட்டதால் அன்று மிகவும் வெளிப்படையாக புலிகள் அதைச் செய்தார்கள். அதில் தவறு ஏதும் இல்லை. அது அன்றைய நிலையில் அவசியமானதும் கூட. நிகழ்ச்சிக்கான ரிக்கட் கூட வழமையாக போராட்ட நிதி சேகரிக்கும் இயக்க உறுப்பினராலேயே விற்கப்பட்டது. ( நானும் அவர்களிடம் தான் வாங்கினேன்) அதன் பின்னர் சிறிது காலத்தில் எஸ். பி பாலசுப்ரமணியம் அவர்களின் நிகழ்சியும். 1990 கோடை காலத்தில் கங்கை அமரனின் நிகழ்ச்சியும் வெளிப்படையாக புலிகளால் நடத்தப்பட்டன. அதற்கு வாழும் சாட்சிகள் பல உண்டு. அந்நேரத்தில் ஐரோப்பாவில் இயங்கிய உறுப்பினர்களை கேட்டுப் பாருங்கள். அவர்களில் பலரை எனக்கு தனிப்பட தெரியும் என்றாலும் இங்கு அவர்களின் தனிப்பட்ட விபரங்களை கூறுவது தவறு. ஆனால், நிச்சயம் உங்களுக்கு அந்த நேரத்தில் இயங்கியவர்களில் சிலரையவது தெரிந்திருக்கும். விசாரித்துப் பாருங்கள். 1985 ல் சென்னையில் தமிழ் திரையுலகின் அத்தனை நட்சத்திரங்களும் இணைந்து மிகப்பெரிய Star Night நிகழ்சியை தமிழ் ஈழ போராட்ட நிதி சேகரிப்புகாகவே செய்திருந்தனர். அதில் புலிகளின் பிரதி நிதி ஒருவரும் உரையாற்றி இருந்தார் என்பதையும் கூடுதல் தகவலாக தெரிவித்து கொள்கிறேன். . நீங்கள் கூறிய நிகழ்ச்சி பற்றி நான் கேள்விப்பட வில்லை. நடந்திருக்கலாம். ஆனால், நடிகைகள் ஆடும்போது பண நோட்டுகளை வீசியெறிந்தது என்றால் அது நிச்சயமாக தனியாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியாக இருந்திருக்கும் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்.
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
1988 ல் நடிகை அமலா, மோகன், வெண்ணிற ஆடை மூர்ததி, சார்லி என ஒரு பட்டாளத்தையே அழைத்து விடுதலைப்புலிகள் ஐரோப்பாவில் Star night நிகழ்ச்சி நடத்தினார்கள். இன்று தமன்னா வந்தால் கலாச்சார சீரழிவாம். சிரிப்பாக இருக்கிறது.
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
கருத்து களத்தை திரும்ப வாசித்தால் எல்லாம் தெரியும்.
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
நிங்கள் கேட்ட கேள்விக்கான நேரடியான பதிலையே நான் தந்தேன். அது தொடர்பாக தர்கக ரீதியான பதிலை தர முடியாத போது விடுப்பு விண்ணாணம் உங்களுக்கு தேவைப்படுகிறது. தமிழ் மக்களுக்கு முதல் எதிரிகளே உங்களைப் போன்றவர்களே. அதை மறைக்கவே உங்களது விடுப்பு விண்ணாணம். மற்றவர் மீதான வசைபாடல்.
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
யாழ்பாண தமிழ் மக்கள் ஒன்றும் சினிமா மோகம் இலஙாதவர்கள் கிடையாது. திரைப்படங்கள் ஏக காலத்தில் இலங்கையிலும் திரையிடப்படாத காலத்தில் வல்வெட்டித்துறையில் இருந்து படகில் திருட்டுதனமாக தமிழ் நாடு சென்று அங்கு வெளியாகும் புதிய திரைப்படங்களை பார்தது ரசித்துவிட்டு திரும்பி வந்த கதைகளெல்லாம் உண்டு. அதை விட, சினிமா மற்றும் இது போன்ற star night கொண்டாட்டங்கள் மக்களின் கலாச்சாரத்தை/ கல்வியை பெரியளவுக்கு பாதிக்கப் போவதில்லை. சினிமா மோகம் கொண்டவர்கள் என்று எம்மவரால் கேலி பேசப்படும் தமிழ் நாட்டில் கல்வி கற்றவர்கள் பெருந்தொகையானவர்கள் வெளி நாடுகளில் உயர் பதவிகளில் உள்ளார்கள். பெருந்தொகையான கணணிப் பொறியியலாளர்கள் தமிழ் நாட்டில் இருந்து நேரடியாக ஒப்பந்த அடிப்படையில் பெரிய பெரிய நிறுவனங்களால் வேலைக்கு அழைக்கப்படுகின்றனர். எம்மவரில் விரல் விட்டு எண்ணப்படுபவர்களே அப்படி வரக்கூடியதாக உள்ளது. மற்றயவர்கள் அகதி விசாவிலேயே இங்கு வரும் நிலை. எம்மவரில் இங்கு கலவி கற்ற இரண்டாம் தலைமுறையினர் கல்வியில் உயர்ந்து விளங்குவதைப் போல தமிழ் நாட்டில் கல்வி கற்றவர்கள் உலகெங்கும் அதே கல்வி வல்லமையுடன் இருக்கிறார்கள்.
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
அவரின் பிரச்சனை யாழ்பாணத்தில் அவருன் கட்டுப்பாட்டை மீறிய புலம் பெயர் தொழிலதிபர்கள் உருவாவது தனது அரசியலுக்கு ஆபத்தானது என்ற அவரது அரசியல் நினைப்பே. பெரியளவிலான அபிவிருத்திகளை தவிர்தது சிறிய சலுகைகளை மக்களுக்கு வழங்கி அரசியல் செல்வாக்கை உருவாக்கும் தனது செயற்பாட்டுக்கு இது ஒவ்வாது என்று நினைத்திருக்கலாம்.
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
இதுவும்ஒ ரு உத்தி தான். விவாதிக்கப்பட்ட விடயத்தை விட்டு வேறு விடயங்களை பேசுவது. நீங்கள் முதலில் கேட்ட கேள்விக்கு நான் நேரடியாக பதில் தந்தேன். நீங்கள் அதை விடுத்து வேறு விடங்களுக்கு தாவுகின்றீர்கள்.
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
விவாதத்தில் உணமைகளை ஜீரணித்து கொள்ள முடியாத போது வழமையான பயன்படுத்தும் இறுதி ஆயுதம் எதிரில் இருப்பவனை சிங்கள கைக்கூலி என்று வசைபாடுவது. என்ன செய்வது அதற்கடுத்த ஆயுதத்தை பயன்படுத்த முடியாத பரிதாப நிலை 😂😂
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
தமிழர் அரசியலை முள்ளி வாய்காலுக்கு கொண்டு சென்று அடித்து துவைத்து உயிருக்கு ஆபத்தான ICU நோயாளர் நிலைக்கு கொண்டு சென்றுவிட்டு இப்படி தினாவெட்டாக கேள்வி கேட்டால் எல்லாம் சரியாகிவிடுமா? அந்த நோயாளியை மீண்டும் சாதாரண நிலைக்கு கொண்டுவரவே இன்னும் இரண்டு தலைமுறை ஆகும். அதுவரை ( நீங்களும் நானும் வாழும்வரை) இப்படி புலம்பி ஒப்பாரி வைத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான். அது சரி காவாலிகளுக்கு வக்காலத்து வாங்க புறப்பட்ட நீங்கள் அதை மடை மாற்ற அரசியல்.
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
அப்படியானால் 1980 ல் ஜேசுதாசின் நிகழ்வில் கவர்சசி இல்லையே. அங்கும் இதை போல காவாலித்தனம் நடைபெற்றது ஏன்?
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
சரி. அப்படியே கம்பு சுத்திக்கொண்டு நின்ற இடத்திலேயே நிற்கும் உரிமை உங்களுக்கு உண்டு.
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
ஆனால் இங்கு பொலிஸார் கடும் நடவடிக்கைகளை எடுத்து கலவரத்ததில் ஈடுபட்டவர்களைத் தாக்கி இருந்தால் சிங்களப் பொலிசாரின் அக்கிரமம் என்று கம்பு சுத்தியிருப்பீர்கள்.
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
ஒரு சமூகமக வாழ வேண்டும. என்றால் சட்டத்தை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் ஆயுத்த்தாங்கிய இராணுவத்தால் அல்லது அமைப்புகளால் மட்டுமே கட்டுப்படுத்த வேண்டிய கூட்டம் என்று ஆகிவிடும். 1979 காலப்பகுதியில் என்று நினைக்கிறேன் திரு ஜேசுதாசின் கச்சேரி இதே முற்ற வெளியில. நடை பெற்ற போதும. தடுப்பு சுவர்களை உடைத்துக. கொண்டு உள்ள நுளைய முற்பட்ட கூட்டத்துக்கும் பொலிஸாருக்கும் இடையில் பாரிய ரகளை ஏற்பட்டது. ஜேசுதாஸ் யாழ்பாண மக்கள் மீது கோபம் கொண்டிருந்தார். இன்று பல தசாப்தங்களுக்கு பின்பும் திருந்த வில்லை. ஒரு தேசமாக வாழத் தகுதி அற்றவர்கள்.
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
யாழில் நடந்த கலவரங்களால் நிகழ்சசி இடையில் நிறுத்தப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. கலவரத்தை அடக்க பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனராம்.
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
ஆமாம், ஆறு திருமுகன் வேலிகளை உயர்த்திக்கட்டி பெண் பிள்ளைகளை பாதுகாக்கும் யாழ்பாணக் கலாச்சாரம் இப்போது இல்லை என்றும. மீண்டும் அது வேண்டும் என்றும் கவலைப்பட்டு பதிவிட்டிருக்கிறாராம்.
-
அரசியல் கட்சி தொடங்கினார் நடிகர் விஜய்
விஜய்யின் அரசியல் பிரவேசம் என்பது நல்ல திரைப்படங்களை மகிழ்சசியாக பார்தது ரசிக்க விரும்பும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி. திரைப்படங்களில் ஹீரோ என்றால் நல்லவனாக இருக்கவேண்டும் என்ற நிலையை மாற்றி Ganster Rowdy யாகவும் விளையாட்டாக சற்று பொறுக்கித்தனம் பண்ணுவதாகவும் இருப்பதே உண்மையான ஹீரோ என்று இளம் சமுதாயத்தை நினைக்க வைத்த புரட்சியை செய்த விஜய் ஒரு புரட்சி ஹீரோ தான். அரசியலில் ஆரம்ப கால விஜய்யாக மாற்றம் பெற்று வந்தால் வந்தால் நல்லது.
-
இலங்கை தமிழரசுக்கட்சி உடைந்துவிட்டது! - சித்தார்த்தன்
உண்மை வரலாற்றை நேர்மையுடன் பார்ககும் ஒருவருக்கு இங்கு எல்லோருமே அவரவர் தத்தமது விசுவாசிகளுக்கு வெள்ளை அடிப்பதும் அடுத்தவர் மீது சேறுவாரி தூற்றி தனது விசுவாசிகளின் தவறுகளை/ அக்கிரமங்களை மூடி மறைப்பது தெரியவரும். அது தான் தமிழர் அரசியல். அதன் விளைவை அனுபவித்தவர்களும் கடும் இழப்பை சந்தித்தவர்களும் இனி அனுபவிக்கப் போகின்றவர்களும் தமிழர்கள் தான்.
- IMG_3660.jpeg
-
துவாரகா உரையாற்றியதாக...
பூசி மெழுகும் அரசியல் கட்டுரைகள் மத்தியில் இவ்வாறான எம்மை புடம் போட முற்படும் கட்டுரைகள் காலத்தின் தேவை. எம்மை ஒட்டு மொத்தமாக மீள் பார்வை செய்வதே எமது கடந்த கால பலவீனங்களை களையும் என்ற உண்மைகளைக் கூறும் கட்டுரை. 👍🏼 இதனை இங்கு இணைத்த கள உறவு @கிருபன் க்கு நன்றிகள்.
-
துவாரகா உரையாற்றியதாக...
இந்த துவாரகா பார்ட்டி கொஞ்சம் ஓவராக ஆட்டம் போடுகிறார்கள் என்பதை தவிர தமிழர்களின் அரசியலை கொண்டு செல்கிறோம் என்று கூறி தாயகத்திலும் புலம் பெயர் நாடுகளிலும் தேசிய அரசியல் என்று (ஏமாற்றும்) செயற்படும் ஒட்டு மொத்தமான எல்லா அமைப்புகளுக்குமே சாத்தியமான அரசியல் தீர்வை நோக்கி நகரும் எந்த அக்கறையும் இல்லை. ஆகவே, இந்த துவாரகா குறூப்புக்கும் மற்றய தேசிய அமைப்புகளுக்கும் பெரிய வேறுபாடு இல்லை என்பதே நிஜம். தாயகத்தில் தமிழ் மக்களின் இருப்பு காப்பாற்றப்பட வேண்டுமானால் தற்போதைய நிலையில் சாத்தியமான, விரைவான, அரசியல் தீர்வை நோக்கிய நகர்வு மிக அவசியம். அதைச் செய்ய ஒருங்கிணைந்த புரிந்துணர்வுடன் கூடிய செயற்பாடு அவசியம் என்ற அரசியல் பாலபாடத்தை கூட புரிந்து கொள்ளாது தமக்குள் குறுகிய அரசியல் செய்யும் தாயக/ புலம் பெயர் தேசிய அமைப்புகளுக்களுக்குள் கொஞ்சம் விசர் கூடிய அமைப்பே இந்த துவாரகா பார்ட்டி.
- IMG_2827.jpeg
-
திண்ணை
உண்மை நெடுக்கு திண்ணையில் முஸ்லிம் இனவாதம் யாராவது பேசினால் அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்தல் வேண்டும். இனவாதம் என்ற வார்த்தைக்குள் எல்லாவகை மனித வெறுப்பும் அடங்கும்.
-
திண்ணை
நன்றி மோகன். திண்ணையில் இனவெறி கருத்துக்களை யார் தெரிவித்தாலும் கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளுகிறேன். சிங்கள இனவாதத்திற்கு எதிர்வினையாக ஆரம்பித்த தமிழ் தேசியவாத்துக்குள் சிங்கள இனவாதத்துக்கு சமாத்தரமான இனவாதத்தை திணிக்க முயற்சிகள் நடை பெறுகின்றன.