Everything posted by island
-
சிறந்த ஜனாதிபதி வேட்பாளா் ரணில்தான் – பாராளுமன்றில் சந்தித்த பின்னா் விக்னேஸ்வரன் கருத்து.
இப்போது ரணிலை பொது வேட்பாளராக ஏற்றுக்கொண்டு விட்டார்.
-
சிறந்த ஜனாதிபதி வேட்பாளா் ரணில்தான் – பாராளுமன்றில் சந்தித்த பின்னா் விக்னேஸ்வரன் கருத்து.
ரணிலையும் தன்னைப்போல் சங்கியாக்கிய மகிழ்ச்சி போல.
-
கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
கிழித்து தொங்க விட்டதை அந்த பெண்மணி போகும் போது எடுத்து சென்றாரா? ஏனென்றால் நடு ரோட்டில் கிழித்து தொங்க விட்டால் வாகனங்கள் போகமுடியாதே!
-
ஈழம் அழிந்ததற்கு தி.மு.கவை மட்டும் குறை கூறுகிறார்கள்; ஆனால் உலகளவில் நடந்த அரசியலைப் பற்றி யாரும் பேசவில்லை! – திருமாவளவன்
நீங்கள் சொன்னதைத் தான் கூறினேன். இதை எனக்கு கற்பித்த ஆசிரியரான உங்களுக்கு நன்றி.
-
அரசியல் கட்சி தொடங்கினார் நடிகர் விஜய்
விஜய்யின் அரசியல் பிரவேசம் என்பது நல்ல திரைப்படங்களை மகிழ்சசியாக பார்தது ரசிக்க விரும்பும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி. திரைப்படங்களில் ஹீரோ என்றால் நல்லவனாக இருக்கவேண்டும் என்ற நிலையை மாற்றி Ganster Rowdy யாகவும் விளையாட்டாக சற்று பொறுக்கித்தனம் பண்ணுவதாகவும் இருப்பதே உண்மையான ஹீரோ என்று இளம் சமுதாயத்தை நினைக்க வைத்த புரட்சியை செய்த விஜய் ஒரு புரட்சி ஹீரோ தான். அரசியலில் ஆரம்ப கால விஜய்யாக மாற்றம் பெற்று வந்தால் வந்தால் நல்லது.
-
கோயிலை கட்டுவது எதனாலே?
அது மதங்களின் Advertising department இன் திறமை.
-
ஈழம் அழிந்ததற்கு தி.மு.கவை மட்டும் குறை கூறுகிறார்கள்; ஆனால் உலகளவில் நடந்த அரசியலைப் பற்றி யாரும் பேசவில்லை! – திருமாவளவன்
கருணாநிதியை மட்டுமல்ல உலகில் யாரை எல்லாம் இதற்காக குற்றம் சாட்ட முடியுமோ அவர்களை எல்லாம் இழுத்து குற்றம் சாட்டுவார்கள். அப்படிக்குற்றம் சாட்டும் போது மற்றய விரல்கள் தம்மை குற்றம் சாட்டுவதை மறந்துவிடுவார்கள்.
-
சாந்தனை நாட்டுக்குக் கொண்டு வரப்போவது யார்? நிலாந்தன்.
ஓரிரு முறை இப்படி எழுத்து பிழை விட்டு எழுதினால் அதுவே பழக்கமாகி அந்த பழக்கத்தையே உண்மை என்று நம்பி அதைத் தொடருவதுடன் அடுத்த தலைமுறைக்கும் அதையே கிளிப்பிள்ளை மாதிரி கூறப்பழக்கும் வகையிலேயே தமிழ் மக்களின் அரசியல் பொது அறிவு தமிழர் அரசியலில் தமிழ் அரசியலைப் பிரதிநிதித்துவம் கொடுக்கும் எல்லாத் தலைமைகளாலும் கட்டி வளர்க்கப்படுகிறது.
-
கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
நீங்கள் அப்படி உணர்வது உங்கள் பார்வை. ஆனால் அப்படி தமிழர்கள் தமக்குள் மோத யாரோ அடுத்தவர் செயல்படத் தேவையில்லை. அரசியலில் சகிப்பு தன்மை அறவே இல்லாமல் போராடப் போன நோக்கத்தையே மறந்து தமக்குள்ளேயே ஆளையாள் போட்டுத்தள்ளிய, கும்பல்கும்பலாக கொலை செய்த அரசியல் பாரம்பரியத்தை எமக்குள்ளேயே உருவாக்கிய வரலாற்றை கொண்ட தமிழர்களை மோத விட வெளியார் செயற்படத் தேவையில்லை என்பது எனது கருத்து.
-
கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
உண்மைதான் கந்தையா அது 30 அண்டுகளுக்கு முதல் தமிழர்களால் தமிழர்களின் நூலகத்தின் மீது புரியப்பட்ட கடைந்தெடுத்த காடைத்தனம். உங்கள் கூற்று சரியானதே.
-
கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
ஈழத் தமிழ் அமைப்புகளுக்குள் தமிழர்களால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் பற்றி தெரியாமல் இருக்கின்றீர்கள் என்றால் நீங்கள் செவ்வாய்க் கிரகத்தில் இருந்து இப்போது தான் வந்துள்ளீர்கள் போல் இருக்கிறது. 😂 https://noolaham.net/project/55/5493/5493.pdf
-
கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
இந்த தாக்குதல் என்பதை தமிழ் சமூகத்தில் ஒரு விதி விலக்கு என்று கூறுகிறார். இதற்கு முன் தமிழ் சமூகத்தில் இப்படி தாக்குவது இல்லையாம். கடந்த 25 வருடங்ககளில் தமிழ் சமூகத்தில் ஒரு தமிழ் அமைப்பு மீது தாக்குதல் நடந்தது இதுவே முதல் தடவை என்று சிரிக்காமல் கூறியிருப்பதில் இருந்து இவர் தமிழ் தேசியவாதியாக இருப்பதற்கான முழுத் தகுதியை பெற்றிருக்கிறார் என்று நினைக்கிறேன். 😂
-
32 வயதில் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே மரணம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்
இவர் இறக்கவில்லை என்று வீடியோ வெளியிட்டிருப்பதாக செய்தி வந்துள்ளது. உண்மைத் தன்மையை உறுதி செய்ய முடியவில்லை. https://m.dinamalar.com/detail-amp.php?id=3541931
-
கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
அந்த முக்கிய விடயங்கள் என்பவை காடைத்தனம் வன்முறை, அடாத்து இன்னும் பல.
-
ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில் விடுதலை செய்யப்பட்டோரை இலங்கைக்கு அனுப்பக்கோரி சிறீதரன் கடிதம்!
இதுவே இந்த தமிழ் அரசியல்வாதிகளின் குடும்ப உறுப்பினர் ஒருவர் இவ்வாறு ஒரு சிக்கலில் மாட்டியிருந்தால் நிதானமாக யாரைத் தொடர்பு கொண்டால் விஷயம் விரைவில் நடக்கும் என்பதை முறைப்படி விசாரித்து இலங்கை வெளிவிவகார அமைச்சை தொடர்பு கொண்டு தமது அரசியல் செல்வாக்கு, தனிப்பட்ட நட்புகள் ஆகியவற்றை பிரயோகித்து காதும் காதும் வைத்தமாதிரி விஷயத்தை கெட்டித்தனமாக முடித்திருப்பார்கள். பொது விஷயம் என்றால் பொங்குவதும் தங்கள் தனிப்பட்ட விடயம் என்றால் பம்முவதும் குழைந்து குழைந்து பேசி தமது அலுவலை முடிப்பதும் தமிழ் தேசிய அரசியலாளர்களுக்கு கைவந்த கலை.
-
‘தமிழக கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது’- பழநி கோயில் வழக்கில் ஐகோர்ட் உத்தரவு
அப்படியே முஸ்லீம் நாடுகளில் இருந்து வரும் பெற்றோலியத்தை இந்துக்கள் உபயோகிக்க்கூடாது என்றும் கிறிஸ்தவர் கண்டுபிடித்த மின்சாரம் இந்து கோவில்களுக்குள் வரக்கூடாது என்றும் பிரித்தானியர் அறிமுகப்படுத்திய பாராளுமன்ற ஆட்சிமுறை இந்தியாவில் செல்லாது என்றும் ஒரு கோர்ட் உத்தரவைப் போட்டுவிடவேண்டியது தானே.
-
கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
தமிழர் அரசியலில் காடைத்தனம் செய்வது இயல்பான நடை முறை தானே. இது ஏதோ முதல் முறையா? கடந்து சென்று விட வேண்டியது தான்😂
-
இலங்கை தமிழரசுக்கட்சி உடைந்துவிட்டது! - சித்தார்த்தன்
உண்மை வரலாற்றை நேர்மையுடன் பார்ககும் ஒருவருக்கு இங்கு எல்லோருமே அவரவர் தத்தமது விசுவாசிகளுக்கு வெள்ளை அடிப்பதும் அடுத்தவர் மீது சேறுவாரி தூற்றி தனது விசுவாசிகளின் தவறுகளை/ அக்கிரமங்களை மூடி மறைப்பது தெரியவரும். அது தான் தமிழர் அரசியல். அதன் விளைவை அனுபவித்தவர்களும் கடும் இழப்பை சந்தித்தவர்களும் இனி அனுபவிக்கப் போகின்றவர்களும் தமிழர்கள் தான்.
-
மாயையை கிழித்திருக்கிறது சர்வதேச நீதிமன்றம் - அமைச்சர் டக்ளஸ்
ஐயோ விசுகு! உங்களை குற்றவாளி என்று நான் எப்போதுமே கூறவில்லை. நீங்கள் என்னோடு அரசியல் விமர்சன கருத்தாடும் கள உறவு. தனிப்பட உங்களை என்றுமே வசைபாட வில்லை அப்படி செய்யவும் மாட்டேன். அரசியல் செய்பவர்களை விமர்சிப்பது என்றுமே குற்றமாக்காது. ஆகவே கருத்துக் களத்தில் அரசியல் விமர்சனம் செய்யும் நீங்களோ நானோ குற்றவாளி அல்ல. இங்கு பலர் தாயகத்தில் உள்ள அரசியல்வாதிகளை தரக்குறைவாக வசை பாடிய இடங்களில் கூட மெளனம் காத்த நீங்கள் எனது. பதிவுகளில் மட்டும் அரசியல்வாதிகளை அவர்களின் அரசியல் நடவடிக்கைகளை மட்டும் விமர்சனம் செய்யும் போது அவ்வாறு செய்ய கூடாது என்ற தொனியில் என்று கூறுவதையே கேள்விக்குள்ளாக்குகின்றேன்.
-
மாயையை கிழித்திருக்கிறது சர்வதேச நீதிமன்றம் - அமைச்சர் டக்ளஸ்
நிச்சயமாக இல்லை. உங்கள் பழைய பதிவுகள் அனைத்தையும் தேடியெடுத்தால் உண்மை தெரியும். உங்கள் மனச்சாட்சிக்கும் அது தெரியும்.
-
மாயையை கிழித்திருக்கிறது சர்வதேச நீதிமன்றம் - அமைச்சர் டக்ளஸ்
விசுகு, உங்கள் பழைய அரசியல் பதிவுகளை கிண்டியெடுத்து, நீங்கள் தாயக அரசியல் நடவடிக்கைகளை அல்லது அரசியல்வாதிகளை விமர்சித்த பதிவுகளை தேடியெடுக்க இப்போது என்னால் முடியாது. ஒவ்வொரு பதிவாக வாசித்து அதை செய்ய நீண்ட நேரம் எடுக்கும். ஆனால், யாழ் இணையத்தில் பல கள உறவுகள் தாயக அரசியல்வாதிகளின் அரசியலை விமர்சித்த துள்ளபோதும் அந்தப் பதிவுகளில் எனது பதிவுகளை தவிர வேறு பதிவுகளில் வந்து அவ்வாறு விமர்சிப்பது தவறானது என்று நீங்கள் கூறவில்லை. ஏன் தாயக அரசியல்வாதிகளின் தனிப்பட்ட வாழ்ககையை விமர்சித்து அவதூறு புரிந்த பதிவுகளில் கூட நீங்கள் அது தவறு என்று கூறவில்லை. நிற்க, தாயக அரசியலை விமர்சிப்பது தவறான செயல் அல்ல. தமிழ் பொதுமக்கள் அனைவருக்கும் அந்த உரிமை உள்ளது. அதன் பிரகாரமே இங்கு கள உறவுகள் அதை செய்கிறார்கள். அது உலகம் முழுவதும் ஜனநாயக ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயம். பொது வாழ்வில் இவ்வாறான விமர்சனங்கள் தேவை. தாயகத்தில் மக்களின் அரசியலை தீர்மானித்த/ நடைமுறையில் தீர்மானம் எடுக்கும் அனைவரையுமே விமர்சிக்கும் உரிமை பொது மக்களுக்கு உண்டு. இதில் விதிவிலக்கு எவருக்கும் இல்லை. விமர்சனம் என்பது அவர்களின் அரசியல் நடவடிக்கைகளை மட்டுமேயன்றி அவர்களது தனிப்பட்ட வாழ்வைப்பற்றதல்ல. தாயக/ புலம் பெயர் அரசியலை விமர்சிப்பது தவறு என்று நீங்கள் முடிவெடுத்து அதை எதிர்காலத்தில் செயற்படுத்தினால் அதை செய்யும் முழு உரிமையும் உங்களுக்கு உண்டு. அதில் எவரும் தலையிட முடியாது.
-
மாயையை கிழித்திருக்கிறது சர்வதேச நீதிமன்றம் - அமைச்சர் டக்ளஸ்
உங்களது இந்த அட்வைஸை நீங்களே கடைப்பிடிப்பதில்லை. இதே யாழ்களத்தில் எத்தனை முறை அரசியல்வாதிகளை நீங்கள் விமர்சித்திருப்பீர்கள் என்பதை கள பதிவுகளை பார்ததாலே தெரியும். உங்களுக்கு ஒவ்வாத கருத்துக்களுக்கு ஜதார்ததமாக தர்ககரீதியில் பதில் கூற முடியாத போது எரிச்சலுடன் ஒன்றில் எதிர்க்கருத்தாளர் மீது அபாண்டமாக பழி போடுவது அல்லது இப்படிப்பட்ட ஒரு சில மனப்பாடம் செய்யப்பட்ட வசனங்களை ஒப்புவிப்பது. 😂
-
ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில் விடுதலை செய்யப்பட்டோரை இலங்கைக்கு அனுப்பக்கோரி சிறீதரன் கடிதம்!
இந்திய, இந்திய அரசாங்கங்களை அணுகுவதற் மூலமே இந்த பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும். இந்திய குடிவரவு சட்டத்தின் கீழ் தான் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்திய குடிவரவு சட்டத்தின்படி முறைப்படியான ஆவணங்கள் அற்றவர்கள் இவ்வாறான சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள். இதுவும் ஒருவகையில் சிறை தான். ஶ்ரீதரன் செய்ய வேண்டியது இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து இவர்களுக்கான பயண ஆவணங்களை இந்தியாவில் உள்ள இலங்கை தூதரகம் மூலம் இவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்வதே. பயண ஆவணங்களை இலங்கை அரசு வழங்குமானால் இந்திய அரசினால் இவர்களை தடுத்தது வைத்திருக்க முடியாது. இந்த விடயத்தில் எந்த அதிகாரமும் அற்ற தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் எழுதுவது வெறும் பயன்ற்ற அரசிலாகத் தான் இருக்க முடியும். ஏதோ தான் முயற்சி எடுத்ததாக பத்திரிகைகளில் செய்தி வந்தால் சரி என்று நினைக்கிறார் போல உள்ளது.
-
மாயையை கிழித்திருக்கிறது சர்வதேச நீதிமன்றம் - அமைச்சர் டக்ளஸ்
ஜதார்தத்திற்கு புறம்பாக சுயநல அரசியலை செய்துவரும் புலம் பெயர் நாட்டு மற்றும் தாயக அரசியல்வாதிகளின் அரசியலை பற்றியே நான் பேசினேன். அதை பேசுவதற்கு உங்களுக்கு உள்ள அதே உரிமை எனக்கும் உள்ளது. செயற் திட்டங்களை செய்வது தலைமைகளே தவிர தனி மனிதர்கள் அல்ல. உங்களால் அரசியலில் எந்த செயற் திட்டத்தையும் செய்ய முடியாதது போலவே எனக்கும் செய்ய முடியாது. தற்போதைய நிலையில் நீங்கள் விசுவாசம் வைத்திருக்கும் புலம் பெயர் மற்றும் தாயக அரசியல்வாதிகளிடமேயே எந்த செயற் திட்டமும் இல்லாது காலத்தை வீண்டிக்கும் போது நீங்கள் என்னிடம் செயற் திட்டத்தை பற்றி பேசுகின்றீர்கள். தர்ககரீதியில் கருத்தாட முடியாத போது கருத்தாடும் எதிர்தரப்பு மீது அபாண்டமாக பழி போட்டு நான் சொல்லாததை சொன்னதாக பொய்யுரைத்து விவாதம் செய்வது உங்களைப் போன்றவர்களின் வழமையான பாணிதான்.
-
மாயையை கிழித்திருக்கிறது சர்வதேச நீதிமன்றம் - அமைச்சர் டக்ளஸ்
@விசுகு நான் என்ன கூறினேன் என்று புரியவில்லையா அல்லது புரியாதது போல் நடிக்கின்றீர்களா? அறிவுள்ளவன் என்று என்னை நான் பீத்திக் கொள்ள வில்லை. இன்றைய நாடுகளின் தமது நலன் சார் அரசியலில் சர்வதேச விசாரணைக்கான சாத்தியப்பாடு மிகக் குறைவானது என்பதை பொது அரசியல் அறிவுடையோர் எல்லோருக்கும் தெரிந்த விடயம் என்றே கூறினேன். உங்களுக்கும் அது தெரியும். நடைமுறை சாத்தியம் குன்றிய ஒன்றில் எமது மக்களின் அரசியல் முழுமையாக தங்கி இருப்பதில் எந்த பிரயோசனமும் இல்லை எனபதை புரிந்தும், சர்வதேச விசாரணை மூலம் தமிழர் பிரச்சனையை தீர்க்கலாம் என்று சுத்து மாத்து காட்டும் சுயநல அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளில் மாயை அரசியலை நம்புபவர்கள் உண்மையில் பைத்தியக்காரர்கள் தான்.