Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

island

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by island

  1. இவ்வாறு தமிழ்த் தேசியத்தை “அங்கீகரிக்காத நாடுகள்” என்று பன்மையில் எழுதிய உங்களால் தமிழ்த் தேசியத்தை அங்கீகரிக்கும் நாடு என்று ஒருமையில்க் கூட எழுத முடியவில்லை. அங்கு தான் தெரிகிறது இது பெருமையா என்பது தெரிகிறது. நீங்கள் கூறிய பெருமையை வைத்து அப்படி அங்கீகரிக்கும் நாடு, என்று ஒற்றை நாட்டை கூட அங்கீகரிக்க வைக்க முடியாது. உலக நாடுகள் அங்கீகரித்தால் தான் தேசியம் என்ற சொல் அர்ததம் பெறும். இல்லையெனில் பஜனைக் கோஷ்டிகள் போல் நமக்குள் மட்டும் சின் சின்சா போட்டுவிட்டு போகவேண்டியது தான்.
  2. எனது முதற்பதிலிலே தெளிவாகவும் நேரடியாகவும் எழுதிய பின்னர் ஏன் இந்தக் கேள்வி. சும்மா ரைம் பாஸிற்காகவா?
  3. றஞ்சித் எழுதிய கருத்திற்கான எனது தர்க்கரீதியான பதிலுக்கு உங்களால் நேரடியாக பதிலளிக்க முடியாததால், வழமையான பாணியில் நான் சொல்லாத விடயத்தை உங்கள் கற்பனையில் கூறியுள்ளீர்கள். சிறு வயதில் செய்த குற்றத்திற்காக மிக அதிகமான நீண்ட தண்டனையை பெற்ற பரிதாபத்துக்குரியவர் என்ற ரீதியில் மக்களின் அனுதாபம் அவர் மீது எழுவது இயல்பானது. இறந்த ஒரு மனிதருக்கான மரியாதை என்ற அளவில் அது நியாயமானது. ஆனால் தமிழ் தேசியத்துடன் தமிழர் உரிமைப் போராட்டத்துடனும் இதனை இணைப்பது அபத்தமானது. தமிழ் தேசியத்திற்கும் தமிழர் போராட்டத்திற்கு இது அபகீர்த்தி கொடுக்கக்கூடியது என்பது எனது கருத்து.
  4. ராஜீவ் தன்பாவங்களுக்கு தண்டனை பெற்றார் என்ற உங்கள் கூற்று உண்மையானால் இளமைக்காலம் முழுவதையும் இழந்து இறுதியில் தாயை பார்ககாமலே மரணித்த சாந்தனுக்கும் இது பொருந்துமா? ராஜீவுக்காவது உலகம் முழுவதும் மரியாதை உள்ளது. ராஜீவ் கொலை போன்றவை புலிகளை மக்கள் நினைவில் வைத்திருக்க உதவுகின்றது என்பது உங்களுக்கு மகிழ்சசியை கொடுத்தாலும் பரந்த உலகின் முன்னால் இதில் எந்த பெருமையும் இல்லை. இவ்வாறான வெறும் சென்றி மென்ற் உசுபேற்றல்கள் தமிழரின் எதிர்காலத்திற்கு கிஞ்சித்தும் பிரயோசனப்படப் போவதில்லை.
  5. எந்த செய்தியையும் சொல்லப்போவதும் இல்லை. தமிழ் மக்களுக்கு இந்த நடவடிக்கைகளால் எந்த பலனும் கிடைக்கப்போவதும் இல்லை. படிக்கப் போன இடத்தில் கைது செய்யப்பட்டார் என்று கூறிவிட்டு முகநூல்களில் வீரவணக்கம் செலுத்துவதும் தேசக கனவை சுமந்தவன் தேசமெங்கும் நடந்தவன் போராளி சாந்தன் என்று போஸ்ரர் அடிப்பதும் சரியான ஆளுக்கு தான் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று உலகத்தை நினைக்க வைக்கும்.
  6. உங்கள் கருத்தில் உடன்படுகிறேன். Steven Hawking இறுதியாக எழுதிய நூலில், எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் பற்றி ஒரு அத்தியாயம் முழுவதும் எழுதியுள்ளார். செயற்கை நுண்ணறிவைப் பற்றி விரிவாக கூறியதுடன் அதனால் மனிதன் எதிர்நோக்கப்போகும் ஆபத்துகளைப் பற்றி எச்சரித்ததுடன், அந்த ஆபத்துகளில் இருந்து மனிதன் தன்னை தற்காத்துக்கொள்ளும் பொறிமுறையின் முன்தயாரிப்பின் அவசியத்தையும் அப் பொறிமுறை செயற்கை நுண்ணறிவை சிறந்த முறையில் கண்காணிக்க கூடிய/ கட்டுப்படுத்தக் கூடிய வகையில் இருத்தல் அவசியம் என விளக்குகிறார். இருப்பினும், செயற்கை நுண்ணறிவின் வருகை என்பது தவிர்க்க முடியாதது அதைத் தடுத்து நிறுத்த முடியாதது என்ற ஜதார்ததத்தை அவர் ஏற்றுக்கொள்வதோடு அதை எவ்வாறு மனிதன் எதிர் கொள்ள வேண்டும் என்பதை விரிவாக விபரிக்கிறார்.
  7. கொடிய யுத்தத்தின் தாக்கங்களால் தனது துடிப்பான இளமைக்காலத்தில் இருந்து வாழ்நாள் முழுவதையும் முழுவதையும் வேதனையில் கழித்தவர். அவரின் உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். சாந்தனின் சகோதரரின் முகநூல் பதிவு இவ்வாறு கூறுகிறது. நீதி என்பது நாதியற்றவர்க்கற்றது. யாரை எதிர்த்தோமோ அவர்களாலும் யாருக்காக எதிர்த்தோமோ அவர்களாலும் என் குடும்பம் அநாதையாக்கப்பட்டது. வேதனையான பதிவு
  8. இந்திய பிரதமர்களில் அடிமுட்டாள்ப் பிரதமர் என்றால் இந்த மோடி தான்.
  9. நடந்தவைகள் எல்லாம் 100% சரியானவை என்று அதற்கு நியாயம் கற்பித்து அவை எல்லாம் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை எனப் புனிதப்படுத்தி அதை எமது பெருமையாக் கூறி காவியம் எழுதுவதும், அந்தப் புனிதமானவற்றில் நியாயமற்ற பாரிய படுகொலைகளும் உள்ளனவே எனச் சுட்டிக்காட்டும் போது, அந்த விவாதத்தில் அதற்கு பதில் சொல்ல முடியாத நிலையை அடையும் போது, பழசை இனி கிண்டி என்ன பிரயோசம், நீங்கள் என்ன பழசே கிண்டிக் கொண்டிருக்கின்றீர்கள், என்று எம்மைக் குற்றம் சாட்டுவதும், அதன் பின்னர் மீண்டும் தாம் அதே பழசை கட்டிப்பிடித்து தொங்கிக்கொண்டு, தாம் பழசு என்று கூறிய அதே விடயங்களை பெருமையாக பேசி அதே தவறான அரசியலை தொடரவேண்டும் என்ற பொருள்பட பேசும் வரட்டுத் தத்துவத்துக்கு பெயர் தான் தேசியம் என்றாகி விட்டது கவலைக்குரியது.
  10. இருந்து பாருங்கள் கிருபன் இந்த கேள்விக்கான நேரடிப் பதில் வராது.
  11. மிகச் சிறந்த கருத்து ஜஸ்ரின். இக்கொலைகளைச் செய்த புலிகள் இல்லாத போது இவற்றை பேசுவதால் என்ன பிரயோசனம் என்று ஒரு உறவு கேட்டார். இந்த அரசியல் கொலைகள் தேசியப் பெருமை என்று எதிர்காலத்தில் இதனை முன்மாதிரியாக கொண்டு நடத்தப்படலாம் என்பது மிக கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயமே. எனவே தான் இவை அத்தனையும் எமது வரலாற்றின் தவறான பக்கங்கள் என்பதை எமது அடுத்த தலைமுறைக்கு கூறவேண்டிய அவசியம் உள்ளது.
  12. ஆயுதப் போராட்டம் எந்த நன்மைகளையும் தராது அழிவுகளை மட்டுமே தந்தது என்பதைக் கண்முன்னே பார்தத பிறகும் இனியும் அப்படி போராடுவோம் என்று சொல்பவன் புறப்படுபவன் ஒரு லூசனக தான் இருக்கமுடியும் கந்தையர். 😂
  13. கந்தையர் இங்கு எம்மால் பேசப்பட்ட விடயங்கள் எல்லாம் நடைபெற்ற உண்மைச்சம்பவங்களே. இவை எல்லாம் ஏற்கனவே அனைத்துலக நிறுவனங்களால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை அரசு செய்த படுகொலைகளும் அவர்கள் விரும்பாவிட்டாலும் ஆவணப்படுத்தப்பட்டே உள்ளன. நீங்கள் வேண்டுமானால் இவற்றைப் பொய் என்று. நிரூபிக்கலாமேயொழிய இவற்றை பேசக்கூடாது என்று தடை போட உங்களுக்கு உரிமை இல்லை. இவை எல்லாம் நீங்கள் கூறியது போல் சிறிய தவறுகள் அல்ல. இங்கு பேசப்பட்டது நடந்தவற்றில் வெறும் 5% தான் இருக்கும். இதற்கே இப்படி கொந்தளிக்கின்றீர்கள் என்றால் 30 வருடங்களாக நடந்த அனைத்தையும. பேசினால் வெடித்து சிதறிவிடுவீர்கள் போல. 😂 நீங்கள் விரும்பினால் அவை ஒவ்வொன்றாக எல்லாவற்றையும் பேச நான் தயார். அப்போது கூறுங்கள் சிறிய பிழைகளா அல்லது எமது போராட்டத்தை தோற்கடிக்க காரணமான தவறுகளா என்பதை.
  14. சிறிய சந்தேகம் வந்தாலே துப்பாக்கி குண்டு மூலம் தீர்ப்பெழுதுவதை ஆதரிக்கும் நீங்கள் இப்போது குற்றம் சாட்டப்பட்டவர் என்ற பதத்தை பாவித்ததன் மூலம் ஜனநாயக உலகின் சிவில் சட்டங்களை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு வந்ததை வரவேற்கிறேன். ஆனால், ஜஸ்ரின் கூறியது போல் இப்படியான சட்டங்கள் புலிகளுக்கு மட்டுமல்ல புலிகளால் படு கொலை செய்யப்பட்டவர்களுக்கும் பொருந்தும் என்பதை நீங்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்வீர்கள்.
  15. நல்ல புரட்சிகரமான வசனங்கள் வசி. 1983 ம் ஆண்டின் பின்னர் வந்த காலப்பகுதியில் இப்படியான புரட்சிகரமான வசனங்களைக் கூறிப் பாடசாலைகளிலும் சன சமுக நிலையங்களிலும் இயக்கங்களுக்கு ஆள்ச் சேர்த்தார்கள். இப்படியான வசனங்களை நம்பி இயக்கங்களில் சேர்ந்த பல இளைஞர்களில் பலர் சக இயக்கங்களாலேயோ சொந்த இயக்கத்தாலேயோ வேட்டையாடப்பட இயக்கங்களில் சேராது தயக்கம் காட்டிய இளைஞர்களில் பலர் இன்று ஊரிலும் ஐரோப்பாவிலும் சுக போகமாக பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் இனிதே வாழ்கிறார்கள் என்பதே ஜதார்த்தம்.
  16. அது தான் கூறுகிறேன் புலிகள் மேற்கொண்ட அரசியல் படுகொலைகள் அனைத்தும் நியாயமானவை என்றும் புலிகளால் கொல்லப்பட்ட அனைவரும் கொல்லப்பட வேண்டியவர்களே என்றும், இங்கு நீங்கள் வசிக்கும் நாட்டுப் பத்திரிகைகள் இணையங்கள் , பின்னூட்டங்கள், முக நூல்கள் ஆகியவற்றில் அந் நாட்டு மொழியில் எழுதி புலிகள் பயங்கரவாதிகள் அல்ல கொல்லப்பட வேண்டியவர்களையே அவர்கள் கொன்றார்கள் என்று நிறுவலாமே? அதை செய்வது சொந்த வாழ்ககைக்கு உலை வைக்கும் என்பதால் எந்த தேசியரும் அதை செய்ய மாட்டார் என்பது தெரியும். 😂
  17. தமிழரின் அரசியல் போராட்டம் இன்னும் பல தலைமுறைக்கு கூட முன்னெடுக்க முடியாத அவல நிலையை உருவாக்கி விட்டுச் சென்றது பொற்காலம் இல்லை. ஒருவரை அடித்து துவைத்து ICU நோயாளராக்குவது எளிது. அவரை மீண்டும் நலமாக்க நீண்ட காலம் எடுக்கும். ஆனால், கருத்து தெரிவித்தாலே படுகொலை செய்யப்படுவர் என்ற உயிர்ப் பயம் இன்றி மக்கள் வாழ்வது ஒரு ஆறுதல் அவ்வளவுதான்.
  18. 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 இந்த கேள்வியை கேட்கும் போது அனைத்து மக்களுக்கும் இப்படி சிரிப்பு வரும். நீங்களும் மனதுக்குள் சிரித்தீர்கள் அல்லவா விசுகு. 😂😂😂😂😂
  19. சந்திரிக்கா தோல்வியை தழுவவில்லை புத்தன். 1999 ம் ஆண்டு தேர்தலில் அவர் வெற்றி பெற்றிருந்தார். யாழ்பாணத்தில் கூட கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தார். 1999 ல் அவரை மனித வெடிகுண்டு மூலம் கொல்ல முயன்று பயங்கரவாதிகள் என்ற அரசின் பிரச்சாரத்துக்கு எம்மவர் துணை புரிந்தார்கள்.
  20. சுருக்கமான கேள்வி. தீர்வுத்திட்டத்தை தயாரித்த காரணத்தால் அவர் கொலை செய்யப்பட்டது சரியானதா? ஆம் / இல்லை ஆம் என்றால் புலிகள் மேற்கொண்ட அரசியல் படுகொலைகள் நியாயமானவை என்று நீங்கள் வாழும் ஜேர்மன் நாட்டு பத்திரிகையில் எழுதி அதை ஜேர்மன் மக்களால் ஏற்றுக்கொள்ளச் செய்ய முடியுமா? ஏன் ஜேர்மன் மக்கள் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும் நாங்கள் தமிழர்கள் அல்லவா என்று விதண்டாவாமன பதில் வேண்டாம். ஏனெனில் ஒரு நாட்டை அமைப்பதென்றால் உலக நாடுகளின் அங்கீகாரம் இல்லாமல் அதை அமைக்க முடியாது. உங்களை மட்டும் கேட்கவில்லை இங்கு கொலைகளை நியாயப்படுத்தும் ஒவ்வொருவரும் தாம் வாழும் நாட்டு மக்களை அரசாங்கங்களை அதனை ஏற்றுக் கொள்ள வைக்க முடியுமா? மேலே எத்தனை செயல்கள் கூறியுள்ளேன். அதை மீண்டும் கூறவா?
  21. ஒரு தகராறும் இல்லை. அரசியல் வலிமையற்ற மக்கள் கூட்டமாக எமது தமிழ் மக்கள் வந்து சேர்ந்ததற்கன காரணிகளை மட்டுமே நேர்மையுடன் கூறுகிறேன். எமது விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று எதிரி பிரச்சாரப்படுத்துகையில் அவர்களின் பிரச்சாரத்தை உலக நாடுகளை நம்ப வைக்கும் வகையிலான ஆதாரங்களைக் கொடுத்த புலிகளின் செயல்களை மட்டுமே நான் விமர்சிக்கிறேன். யுத்த களத்தில் இராணுவத்துடன் போராடிய போராளிகளையோ யுத்த களத்தில் மடிந்த மாவீரர்களையோ நான் என்றுமே விமர்சிக்கவில்லை.
  22. சரியாக சொன்னீர்கள் அந்த ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டதால் மிச்சம் இருக்கும் தமிழ் மக்களும் தப்பித்தார்கள் என்று தமிழ் மக்களை நினைக்க வைக்கும் அளவுக்கு நடந்து கொள்கிறார்கள். இவர்கள் தமிழ் ஈழத்தின் அரசியலமைப்பை எழுதினால் kill first, explain later" என்று எழுதக் கூடிய மன நிலை படைத்தவர்களே. இங்கு இப்படி கொலைகளுக்கு வக்காலத்து வாங்குவதை இவர்கள் வசிக்கும் நாட்டு மொழியில் அந்த நாட்டு பத்திரிகைகளுக்கு எழுத முடியுமா? இதை ஒரு சவாலாகவே விடுக்கிறேன்.
  23. நீங்களும் சுமந்திரன் சுமந்திரன் என்று ஒரு தனி நபர் மீது உங்களுக்கு உள்ள வக்கிரத்தை வருடக்கணக்காக இங்கு வந்து கொட்டலாம் என்றால் எமது தமிழ் இனத்தின் அரசியல் வரலாற்றையே புரட்டிப் போட்டு எமது தலைமுறையை நிரந்தர அடிமைகளாக்க செய்த அறிவற்ற செயல்கள் பற்றி பேசக்கூடாதா? ஏன் சரண்டைந்தார்கள் என்பது இந்த திரியிலேயே உள்ளது. சென்று வாசித்துப் பாருங்கள். வட்டுக் கோட்டையில் அண்மையில் நடந்த சம்பவத்துக்காக 1990 ல் அட்வான்ஸாக யாரோ வேறு உத்தியோகஸ்தர்களை கொலை செய்யப்பட்டார்கள் என்று கூறவருகின்றீர்களா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.