Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

island

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by island

  1. @Justin @Kandiah57 எனது பார்வையில், கடந்த 40 ஆண்டுகளாக சுயமாக சிந்திக்கும் திறமையான அரசியல்வாதிகள் தமிழ் அரசியல் பரப்பில் விரும்பதகாதவர்களாகவே உள்ளனர். அவ்வாறான அரசியல்வாதிகள், கல்விமான்கள் பலர் அரச ஆயுதப்படையினராலோ, தமிழ் போராளிக்குழுவினர்களாலேயோ படுகொலை செய்யப்பட்ட வரலாறே உள்ளது. 2009 ன் பின்னர் கூட சுயமாக சிந்திக்கும் அரசியல்வாதிகள் வெறுப்புடன் பார்க்கப்படுபவர்களாகவே உள்ளனர். அவ்வாறாக சுயமாக சிந்திக்கும் அரசியல்வாதிகளை வளரவிட்டால் அவர்கள் கடந்த கால வரலாற்றை நேர்மையுடன் அணுகி தவறுகளை கேள்விகுட்படுத்துவார்கள் என்ற அச்சம் பலரை வாட்டுவதால் இந்த நிலை தொடர்கிறது. இந்த நிலை தொடரும் வரை தமிழரின் அரசியல் நிலை மேலும் மேலும் சிங்கள இனவாதிகளின் விருப்பத்தை பூர்ததி செய்யும் வகையிலான பின்னடைவையே நோக்கிய பாதையிலேயே தொடர்ந்து பயணிக்கும்.
  2. இப்படியான பிரச்சனைகளில் ஆட்களை போட்ட காலம் முடிந்து இப்ப வழக்கு போடும் காலம் வந்தது ஒரு முன்னேற்றம் தானே. 😂
  3. அதற்காக தான் இயற்கையே அதைக் கொடுக்கவில்லை.
  4. இந்த கட்சியில் மட்டுமல்ல தமிழ் தேசிய அரசியல் பரப்பில் ஒட்டுமொத்தமாக, அன்றில் இருந்து இன்று வரை சுயநலவாதிகளின் கூட்டமே அதிகம். தமிழ் மக்களின் பிளைகளான ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளின் தியாகங்கள் கூட இந்த சுயநல அரசியலை கொண்டு செல்லவே உதவியது என்பது வேதனை தருவது. இன்றும் கூட தனக்கு பிடிக்காதவர்களை திட்டித்தீர்ப்பதற்கும் ஓழித்துக்கட்டுவதற்குமே தேசியம் என்ற சொல்லாடல் பயன்படுகிறது.
  5. என் கண்முன்னே நடந்த விடயத்தை நீங்கள் நீங்கள் பொய்யாக்க வேண்டிய அவசியம் ஏனோ? நடந்த அந்த நிகழ்வு தவறானதாக எவரும் சித்தரிக்க வில்லை. அதை மக்கள் கூட ஏற்றுக்கொண்டிருந்தனர்.
  6. நான் கூறியது யார் உத்தியோகபூர்வமாக ஸ்போன்சர் செய்தார்கள் என்பதல்ல. யார் நிகழ்சிகளை மக்கள் முன் ஒருங்கிணைத்தார்கள் எனபதையே. ஐரோப்பாவுக்கு தமிழகத்தில் இருந்து எந்த பேச்சாளரும் புலிகளின் உத்தியோக பூர்வ அழைப்பில் வருவதில்லை என்பது தங்களுக்கு தெரியும். அவ்வாறு செய்ய புலிகள் சட்டபூர்வமான அமைப்பு அல்ல. ஐரோப்பாவில் புலிகளின் நிறுவனங்கள் புலிகளின் பெயரில் பதிவு செய்யப்படுவதில்லை. தனியார் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டது. புலிகள் அதை நிர்வாகம் செய்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும். இது போல் பல விடயங்களை கூறலாம்.
  7. நீங்கள் மறுக்கும் அளவுக்கு அது ஒன்றும் தவறான செயல் அல்ல. நிதி சேகரிப்புக்கு அது அவசியமாக பட்டதால் அன்று மிகவும் வெளிப்படையாக புலிகள் அதைச் செய்தார்கள். அதில் தவறு ஏதும் இல்லை. அது அன்றைய நிலையில் அவசியமானதும் கூட. நிகழ்ச்சிக்கான ரிக்கட் கூட வழமையாக போராட்ட நிதி சேகரிக்கும் இயக்க உறுப்பினராலேயே விற்கப்பட்டது. ( நானும் அவர்களிடம் தான் வாங்கினேன்) அதன் பின்னர் சிறிது காலத்தில் எஸ். பி பாலசுப்ரமணியம் அவர்களின் நிகழ்சியும். 1990 கோடை காலத்தில் கங்கை அமரனின் நிகழ்ச்சியும் வெளிப்படையாக புலிகளால் நடத்தப்பட்டன. அதற்கு வாழும் சாட்சிகள் பல உண்டு. அந்நேரத்தில் ஐரோப்பாவில் இயங்கிய உறுப்பினர்களை கேட்டுப் பாருங்கள். அவர்களில் பலரை எனக்கு தனிப்பட தெரியும் என்றாலும் இங்கு அவர்களின் தனிப்பட்ட விபரங்களை கூறுவது தவறு. ஆனால், நிச்சயம் உங்களுக்கு அந்த நேரத்தில் இயங்கியவர்களில் சிலரையவது தெரிந்திருக்கும். விசாரித்துப் பாருங்கள். 1985 ல் சென்னையில் தமிழ் திரையுலகின் அத்தனை நட்சத்திரங்களும் இணைந்து மிகப்பெரிய Star Night நிகழ்சியை தமிழ் ஈழ போராட்ட நிதி சேகரிப்புகாகவே செய்திருந்தனர். அதில் புலிகளின் பிரதி நிதி ஒருவரும் உரையாற்றி இருந்தார் என்பதையும் கூடுதல் தகவலாக தெரிவித்து கொள்கிறேன். . நீங்கள் கூறிய நிகழ்ச்சி பற்றி நான் கேள்விப்பட வில்லை. நடந்திருக்கலாம். ஆனால், நடிகைகள் ஆடும்போது பண நோட்டுகளை வீசியெறிந்தது என்றால் அது நிச்சயமாக தனியாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியாக இருந்திருக்கும் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்.
  8. 1988 ல் நடிகை அமலா, மோகன், வெண்ணிற ஆடை மூர்ததி, சார்லி என ஒரு பட்டாளத்தையே அழைத்து விடுதலைப்புலிகள் ஐரோப்பாவில் Star night நிகழ்ச்சி நடத்தினார்கள். இன்று தமன்னா வந்தால் கலாச்சார சீரழிவாம். சிரிப்பாக இருக்கிறது.
  9. கருத்து களத்தை திரும்ப வாசித்தால் எல்லாம் தெரியும்.
  10. நிங்கள் கேட்ட கேள்விக்கான நேரடியான பதிலையே நான் தந்தேன். அது தொடர்பாக தர்கக ரீதியான பதிலை தர முடியாத போது விடுப்பு விண்ணாணம் உங்களுக்கு தேவைப்படுகிறது. தமிழ் மக்களுக்கு முதல் எதிரிகளே உங்களைப் போன்றவர்களே. அதை மறைக்கவே உங்களது விடுப்பு விண்ணாணம். மற்றவர் மீதான வசைபாடல்.
  11. யாழ்பாண தமிழ் மக்கள் ஒன்றும் சினிமா மோகம் இலஙாதவர்கள் கிடையாது. திரைப்படங்கள் ஏக காலத்தில் இலங்கையிலும் திரையிடப்படாத காலத்தில் வல்வெட்டித்துறையில் இருந்து படகில் திருட்டுதனமாக தமிழ் நாடு சென்று அங்கு வெளியாகும் புதிய திரைப்படங்களை பார்தது ரசித்துவிட்டு திரும்பி வந்த கதைகளெல்லாம் உண்டு. அதை விட, சினிமா மற்றும் இது போன்ற star night கொண்டாட்டங்கள் மக்களின் கலாச்சாரத்தை/ கல்வியை பெரியளவுக்கு பாதிக்கப் போவதில்லை. சினிமா மோகம் கொண்டவர்கள் என்று எம்மவரால் கேலி பேசப்படும் தமிழ் நாட்டில் கல்வி கற்றவர்கள் பெருந்தொகையானவர்கள் வெளி நாடுகளில் உயர் பதவிகளில் உள்ளார்கள். பெருந்தொகையான கணணிப் பொறியியலாளர்கள் தமிழ் நாட்டில் இருந்து நேரடியாக ஒப்பந்த அடிப்படையில் பெரிய பெரிய நிறுவனங்களால் வேலைக்கு அழைக்கப்படுகின்றனர். எம்மவரில் விரல் விட்டு எண்ணப்படுபவர்களே அப்படி வரக்கூடியதாக உள்ளது. மற்றயவர்கள் அகதி விசாவிலேயே இங்கு வரும் நிலை. எம்மவரில் இங்கு கலவி கற்ற இரண்டாம் தலைமுறையினர் கல்வியில் உயர்ந்து விளங்குவதைப் போல தமிழ் நாட்டில் கல்வி கற்றவர்கள் உலகெங்கும் அதே கல்வி வல்லமையுடன் இருக்கிறார்கள்.
  12. இந்த ஜதார்தத நிலையை உணர்து செயற்படுவதே இன்றையஅவசரத் தேவை. அதை விடுத்து தம்மை தமிழ் தேசியம் பேசுவதாக கூறிக்கொண்டு எதிர்கால தலைமுறைக்கு உலை வைக்கும் கைங்கரங்களில் தான் இந்த புலம் பெயர் தேசிய அரசியல் வீணர்கள் ஈடுபடுகிறார்கள் என்ற கோபம் ஏற்படுவது இயற்கையே.
  13. இன்றைய தமிழரின் அரசியல் நிலையில் அனைவரும் வேற்றுமையில் ஒற்றுமையாக செயற்பட்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தை முறையாக அமுல்ப்படுத்த செய்து காணி, காவல்துறை அதிகாரங்களை வாங்கினாலே பெரிய விடயம். மக்கள் சற்றே மூச்சு விடவும் தமது கல்வி. பொருளாதார நிலையை உயர்த்தி எம்மை இலங்கைத் தீவில் தக்க வைத்துகொள்ளும் அரசியல் நிலையாவது ஏற்படும் என்பதை தேசியர் என்று கம்பு சுற்றி வெட்டி வீரம், வெற்றுக் கோசங்களை மட்டும் எழுதி உசுப்பேத்தி அடுத்த சந்திதிக்கும் உலை வைக்கும் வீணர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். வெளி நாடுகளில் இருந்து இப்படி உசுபேற்றும் வீணர்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் கூட அங்கு இவர்களால் உசுப்பி விடப்பட்டு அவலப்படும் சந்திதியை எட்டி கூட பார்க்காது. அது தான் ஜதார்த்தம்.
  14. அவரின் பிரச்சனை யாழ்பாணத்தில் அவருன் கட்டுப்பாட்டை மீறிய புலம் பெயர் தொழிலதிபர்கள் உருவாவது தனது அரசியலுக்கு ஆபத்தானது என்ற அவரது அரசியல் நினைப்பே. பெரியளவிலான அபிவிருத்திகளை தவிர்தது சிறிய சலுகைகளை மக்களுக்கு வழங்கி அரசியல் செல்வாக்கை உருவாக்கும் தனது செயற்பாட்டுக்கு இது ஒவ்வாது என்று நினைத்திருக்கலாம்.
  15. இதுவும்ஒ ரு உத்தி தான். விவாதிக்கப்பட்ட விடயத்தை விட்டு வேறு விடயங்களை பேசுவது. நீங்கள் முதலில் கேட்ட கேள்விக்கு நான் நேரடியாக பதில் தந்தேன். நீங்கள் அதை விடுத்து வேறு விடங்களுக்கு தாவுகின்றீர்கள்.
  16. விவாதத்தில் உணமைகளை ஜீரணித்து கொள்ள முடியாத போது வழமையான பயன்படுத்தும் இறுதி ஆயுதம் எதிரில் இருப்பவனை சிங்கள கைக்கூலி என்று வசைபாடுவது. என்ன செய்வது அதற்கடுத்த ஆயுதத்தை பயன்படுத்த முடியாத பரிதாப நிலை 😂😂
  17. தமிழர் பிரச்சனையைத் தீர்கக என்று மொட்டையாக சொல்லாமல் “ஒரு நாடு இரு தேசம்” என்ற தமது கோஷத்தை அமெரிக்க தூதுவரிடம் எடுத்து சொல்லியிருக்கலாம். அது மக்களை ஏமாற்ற போடும் அந்த வெற்றுக் கோஷத்தை இங்கு சொல்ல எனக்கு என்ன விசரா என்று நினைத்திருப்பார்.
  18. நடந்த விடயத்தை ஒரு பாடமாக எடுத்து எதிர்வரும் காலங்களில் இவ்வாறான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் போது கவனம் தேவை. சிறந்த முன்னேற்பாடுகள் அதிகளவில் கூட்டம் கூடும் போது கூட்டத்தை கட்டுப்படுத்தும் தந்திரோயாபாயத்தில் தேர்ச்சி பெற்ற ஒருங்கிணைப்பாளரிடம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பை கொடுக்க வேண்டும் நிகழ்சிக்கான பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடு மிக அவசியம். ஐரோப்பிய நாடுகளில் Event management துறைக்கு ஆட்களை அனுப்பி பயிற்றுவிக்கலாம். இல்லையெனில் கொழும்பு, மட்டக்களப்பு போன இடங்களில் இவ்வாறான பிரமாண்டமான மகிழ்ச்யாசியான நிகழ்ச்சிகளை நடத்தினால் மக்கள் அங்கு மகிழ்சசியாக நிகழ்ச்சியை ரசித்து செல்வர். யாழ்ப்பாணம் இதற்கு சரிப்பட்டு வரமாட்டாது.😂
  19. தமிழர் அரசியலை முள்ளி வாய்காலுக்கு கொண்டு சென்று அடித்து துவைத்து உயிருக்கு ஆபத்தான ICU நோயாளர் நிலைக்கு கொண்டு சென்றுவிட்டு இப்படி தினாவெட்டாக கேள்வி கேட்டால் எல்லாம் சரியாகிவிடுமா? அந்த நோயாளியை மீண்டும் சாதாரண நிலைக்கு கொண்டுவரவே இன்னும் இரண்டு தலைமுறை ஆகும். அதுவரை ( நீங்களும் நானும் வாழும்வரை) இப்படி புலம்பி ஒப்பாரி வைத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான். அது சரி காவாலிகளுக்கு வக்காலத்து வாங்க புறப்பட்ட நீங்கள் அதை மடை மாற்ற அரசியல்.
  20. அப்படியானால் 1980 ல் ஜேசுதாசின் நிகழ்வில் கவர்சசி இல்லையே. அங்கும் இதை போல காவாலித்தனம் நடைபெற்றது ஏன்?
  21. சரி. அப்படியே கம்பு சுத்திக்கொண்டு நின்ற இடத்திலேயே நிற்கும் உரிமை உங்களுக்கு உண்டு.
  22. ஆனால் இங்கு பொலிஸார் கடும் நடவடிக்கைகளை எடுத்து கலவரத்ததில் ஈடுபட்டவர்களைத் தாக்கி இருந்தால் சிங்களப் பொலிசாரின் அக்கிரமம் என்று கம்பு சுத்தியிருப்பீர்கள்.
  23. ஒரு சமூகமக வாழ வேண்டும. என்றால் சட்டத்தை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் ஆயுத்த்தாங்கிய இராணுவத்தால் அல்லது அமைப்புகளால் மட்டுமே கட்டுப்படுத்த வேண்டிய கூட்டம் என்று ஆகிவிடும். 1979 காலப்பகுதியில் என்று நினைக்கிறேன் திரு ஜேசுதாசின் கச்சேரி இதே முற்ற வெளியில. நடை பெற்ற போதும. தடுப்பு சுவர்களை உடைத்துக. கொண்டு உள்ள நுளைய முற்பட்ட கூட்டத்துக்கும் பொலிஸாருக்கும் இடையில் பாரிய ரகளை ஏற்பட்டது. ஜேசுதாஸ் யாழ்பாண மக்கள் மீது கோபம் கொண்டிருந்தார். இன்று பல தசாப்தங்களுக்கு பின்பும் திருந்த வில்லை. ஒரு தேசமாக வாழத் தகுதி அற்றவர்கள்.
  24. யாழில் நடந்த கலவரங்களால் நிகழ்சசி இடையில் நிறுத்தப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. கலவரத்தை அடக்க பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனராம்.
  25. ஆமாம், ஆறு திருமுகன் வேலிகளை உயர்த்திக்கட்டி பெண் பிள்ளைகளை பாதுகாக்கும் யாழ்பாணக் கலாச்சாரம் இப்போது இல்லை என்றும. மீண்டும் அது வேண்டும் என்றும் கவலைப்பட்டு பதிவிட்டிருக்கிறாராம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.