Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

island

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by island

  1. நீலனின் தீர்வு திட்டத்தில் போதாமை இருந்திருந்தால் அதை உரிய அரசாங்களுடன் பேசி அதை சீரமைப்பது தான் நாகரீகம் அடைந்த ஒரு சமுதாயங்கள் செய்வது. அதற்காக அதனை உருவாக்கியவரை போட்டுத் தள்ளுவது காட்டுமிராண்டித்தனமானது என்பதை இப்போது கூட புரிந்து கொள்ளும் பண்பு இல்லைப் போல உள்ளது. இந்த நிலையில் சிங்கள இனவாதிகளிடம் இதை எப்படி எதிர் பார்பபது? இவர்கள் கையில் நாடோ அதிகாரமோ செல்லக் கூடாது என்ற தீர்மானத்தை உலக நாடுகளை எடுக்க வைத்தது இவ்வாறான பலவேறு பயங்கரவாதச் செயல்களே. அவை ஒவ்வொன்றையும் இங்கு விலாவாரியாக எழுதமுடியாது.
  2. நீங்கள் கூறிய விடயங்கள் நடப்பதற்கு முன்பே ஆயுதமின்றிச் சரணடைந்த 600 இலங்கைப் பொலிசாரை ஈவிரக்கமின்றி கொலை செய்தார்களே. 1986 ல் தொடங்கிய ஊழித்தாண்டவம். எல்லாப்பாவமும் இறுதியில் அப்பாவித்தமிழ் மக்கள் தலையில் இடியாக வந்து இறங்கியது தமிழ் மக்களின் வாழ்வில் வந்த சோகம் தான்.
  3. இனவழிப்பு, போர குற்றம் என்று சர்வதேச சமுகத்திடம் நீதி கேட்டுக்கொண்டே அநீதியான அக்கிரமமான இவ்வாறான கொலைகளை கயமைத்தனமாக நியாயப்படுத்தி எக்காளமாக பேசுவதைப் பார்ககும் ஒரு வேளை நாடும் போது நாடும் அதிகாரமும் கிடைத்திருந்தால்……………. இயற்கைக்கே பொறுக்கவில்லைப் போலும்.
  4. மேலே உள்ளது ஒரு செய்தியா அல்லது வெறும் காழ்புணர்வினால் எழுதப்பட்ட வசை பாடலா? சுமந்திரன் மற்றயவர்களை போல ஒரு சராசரி அரசியல்வாதி மட்டுமே. அவரின் மீது எல்லா குற்றச்சாட்டுகளையும் சுமத்தி மற்றய கள்ளர்கள் எல்லாம் தப்பிக்கும் உத்தியே இந்தக் கட்டுரை. சுமந்திரன் அரசியலுக்கு வருவதற்கு முன்பே தமிழரின் போராட்டம் பூச்சிய நிலைக்கு கீழே பல மடங்கு ஆழத்திற்கு சென்று விட்டது.
  5. 13 ஐ அமுல்ப் படுத்துமாறு இந்தியா கொடுக்கும் அழுத்தம் இலங்கைக்கு சுகமளிக்கும் மசாஜ் போல் இருப்பதால் 13 ஐ அமுல்ப்படுத்தி அந்த மசாஜ் சுகத்தை இலங்கை இரக்க விரும்பவில்லைப் போலும். 😂
  6. படு கொலை செய்யப்பட்ட அத்த 600 பொலிசாரும் யுத்தத்தில் ஈடுபட்டு சரணடைந்தவர்கள் அல்ல. சமாதான பேச்சுவார்தை நடந்த சம காலத்தில் கிழக்கு மாகாணத்தில் பொலிஸ் நிலையங்களை புலிகள் சுற்றி வளைத்த போது அன்றைய ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் பேரில் ஆயுதமின்றி சரணடைந்த உத்தியோகஸ்தர்களே. “நீங்கள் சரணடையுங்கள் பேச்சுவார்த்தை மேசையில் உங்களை வெளியே கொண்டுவர தாம் நடவடிக்கை எடுக்கிறோம்”, என்ற உறுதி மொழியோடு கிழக்கு பொலிஸ் அத்தியட்சகருக்கு ஜனாதிபதி பிரேமதாச விசேட பணிப்புரையை விடுத்திருந்தார். கருணா, பதுமன் மீது மட்டும் பழி போட்டு தப்பிக்க முடியாது. கருணா இயக்கத்தை விட்டு வெளியேறும் வரை அதற்காக தண்டிக்கப்படாதது தலைமையின் உத்தரவின் படியே அது நடந்தது என்பதைத் தெளிவாக உறுதிப்படுத்துகிறது.
  7. கந்தையா போரிடும் புலிகளை இராணுவம் கொன்றால் அது இன அழிப்பும் ஆகாது போற்குற்றமும் ஆகாது. ஆனால், ஆயுதமின்றி சரணடைந்த புலிகளை இலங்கை இராணுவம் கொலை செய்தது நிச்சயமாகப் போர்க குற்றம் தான். ஆனால் 1990 ல் ப ஆயுதமின்றி சரண்டைந்த பொலிசாரை புலிகளும் சுட்டுக் கொலை செய்த போர்க்குற்றத்தை செய்துள்ளார்கள் என்பது தமிழ் மக்களின் போராட்டத்தை பின்னடையச்செய்த நிகழ்வுதான்.
  8. அண்மையில் ஒரு zoom உரையாடல் கேட்டேன். அதில் இவ்வாறான பல அரசியல் படுகொலைகளைப் பற்றியும் ஆயுதமின்றிச் சரணடைந்த 600 இலங்கைப்பொலிசார் புலிகளால் கொலை செய்யப்பட்டது பற்றியும் பேசப்பட்டது. அதில் கலந்து ஐரோப்பாவில் இருந்து கலந்து கொண்ட தேசிய பற்றாளர் ஒருவர் கொலைகளை நியாயப்படுத்தி பேசினார். கொல்லப்பட்ட துரோகிகள் எல்லோரும் துரோகிகள் என்றும் எனவே கொல்லப்பட வேண்டியவர்களே என்று கூற குறுக்கிட்ட கலந்துரையாடலின் நெறியாளர் சர்வதேச விசாரணை ஒன்று வருமானால் தமிழர் தரப்பில் இதைக் கூற முடியுமா என்று கேட்க, பதட்டப்பட்ட தேசியபற்றாளர் இந்த விடயங்கள் எல்லாம் சர்வதேச விசாணைக்குட்படுத்த முடியாது. அது தமிழ்மக்களின் விவகாரம். முள்ளிவாய்க்கால் விடயத்தை மட்டுமே சர்வதேச விசாரணை செய்யலாம் என்று பதிலளித்தார். கோத்தபாயவுக்கும் அந்த தேசியருக்கும் என்னால் எந்த வித்தியாசத்தையும் காணமுடியவில்லை. 😂
  9. நானும் இந்த செய்தியை வாசித்து அறிந்துள்ளேன். வந்தவர்களை பரிசோதிக்க வேண்டாம் என்று காவலாளிகளிடம் யோகேஸ்வரன் கூறியது வந்தவர்கள மீது வைத்த நம்பிக்கையில். அமிர் கொடுத்த பிஸ்கட்டுகளை சாப்பிட்டுவிட்டு அவரின் மனைவி தயாரித்த தேனீரை அருந்தி விட்டு கொலை செய்தது என்ன அறம் என்று தெரியவில்லை. இவ்வாறான பல படுகொலைகள் மூலம் சிங்கள அரசுக்கு எமது போராட்டத்தை அழிக்க உடந்தையாக தவறு.
  10. நன்றி ஜஸ்ரின். நில உச்சவரம்பு சட்டம் இன ரீதியான அடக்கு முறை சட்டம் என்று முதல் தடவையாக இந்த திரியில் கேள்விப்படுகிறேன். அது சம்பந்தமான தரவுகள் உண்டா?
  11. @vasee இலங்கையில் இனவாத அரசுகள் தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகளை முன்னெடுத்தது அனைவரும் அறிந்த விடயமே. அதற்கு எதிராக தான் போராட்டமே ஆரம்பிக்கப்பட்டது. அதை எவரும் இங்கு மறுக்கவில்லை. அப்படி இருக்கும் போது தேவையில்லாமல் அது பற்றி பேசுவது ஏன்? ஆயுதப் போராட்டத்தை நடத்திய அனைத்து அமைப்புகளாலும் நிகழ்த்தப்பட்ட பல அரசியல் படுகொலைகள் அனைத்துலக ரீதியில் பிரச்சாரப் படுத்தப்பட்டு எவ்வாறு அது எமது போராட்டத்தின் பின்னடைவுக்கும் இறுதியில் பேரழிவுக்கும் காரணமாக அமைந்தது என்பதை பற்றியே இங்கு என்னால் உரையாடப்பட்டது. இதை வெளிப்படையாக கூறுபவர்கள் எப்படி இலங்கை அரசுக்கு உடந்தையாக இருப்பார்கள்? சும்மா வேண்டுமென்றே அடுத்தவர் மீது எழுந்த மானமாக பழி போடுவது தர்ககரீதியான விவாதமாக அமையாது என்பது உங்களுக்கு தெரியாதா? வேண்டுமென்றே இந்த விடயத்தை திசை திருப்புவதற்காக நில உச்சவரம்பு சட்டத்தை கூட துணைக்கு அழைத்திருக்கின்றீர்கள். நில உச்ச வரம்பு சட்டம் இன அடிப்படையில் அமைந்ததாக புதிதாக கதை கட்டுகின்றீர்கள். நில உச்சவரம்பு சட்டம் தமிழ் மக்களுக்கு எதிரானது என்று எந்த தமிழ் தலைமையும் கூறவும் இல்லை அதற்கெதிராக போராட்டமும் மேற்கொள்ளவில்லை. இன ரீதியிலான தரப்படுத்தலே தமிழர்களுக்கு எதிரானது. அது கூட 1977 ல் ஐதேக அரசால் மாவட்ட அடிப்படையில் மாற்றப்பட்டபோது பின் தங்கிய தமிழ் பிரதேச மாணவர்கள் பலனடைந்தார்கள். அப்போது யாழ்பபாண மாணவர்கள் இங்கு படித்துவிட்டு பரீட்சையை வன்னி சென று தோற்றியதன் மூலம் வன்னி தமிழ் மாணவர்களின் வாய்ப்புகளை தட்டி பறித்த செயல்கள் குறித்துப் பேச மாட்டீர்கள். தர்ககரீதியான விவாதம் என்பது அடுத்தவர்மீது பழி போட்டு அவரை துரோகியாக்கி வெற்றி கொள்வதல்ல. புரிந்து கொள்ளுங்கள்.
  12. கொலை செய்யும் ஒவ்வொரு கொலைகாரனும் தமதுகொலைக்கு இப்படி பல காரணங்களை சோடித்து தாம் செய்த கொலையை நியாயப்படுத்துவது உலக வழமை. கொலைகார்ரின் ஆதரவாளர்களும் அதையே செய்வர். நீங்களும் அந்த உலக வழமைக்கு விதிவிலக்கு இல்லைத் தானே. 😂
  13. உண்மை தான். ஏற்றுக்கொள்கிறேன். தங்களுக்கு கருத்து சொல்லும் உரிமை உண்டு. அதை நான் என்றும் மறுக்கவில்லை. என்னால் தெரிவிக்கப்பட்ட கருத்தை மறுக்கும் பாணியில் நீங்கள் கேள்வி கேட்டதால், உங்களுக்கு அது சொல்லப்படவில்ல, நீங்கள் அதை ஏற்கவேண்ட அவசியம் இல்லை என்று, உங்கள் கருத்துரிமையை மதித்தே அதை தெரிவித்தேன் நண்பரே. கருத்துரிமையை அனைத்து ஆயுத்தாரிகளும் மறுத்து அவ்வாறு சுதந்திரமாக சிந்திப்பவர்களை, கருத்து தெரிவித்தவர்களை நர வேட்டையாடிய துயர வரலாறு இனி வேண்டாம் என்ற உங்களது கருத்துடன் நானும் உடன் படுகிறேன்
  14. ஒவ்வொரு வீட்டு வளவுகளில் பற்றைகள் வளர்ந்து கவனிப்பாரற்று கிடப்பதால் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் வருவதாகவும் அதனை துப்பரவு செய்யாதவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுபதாகவும. செய்திகள் வருகின்றன. அவ்வாறான காணிகளை துப்பரவு செய்து அதில் காயப்போடுவதுடன் அந்த வளவுகளை பராமரிப்பதுடன் நோய்களில் இருந்தும் காத்து கொள்ளலாம். அதை விடுத்து வாகனப் போக்குவரத்துக்கென அமைக்கப்பட்ட வீதிகளில் இவ்வாறு செய்வதை பற்றி அங்குள்ள சிவில் சமூகம் கூட எதிர்ப்பு தெரிவிக்காது இருப்பது ஆச்சரியம் அளிக்கின்றது. ஒரு வாகனத்தை போக்குவரத்துக்கு இடைஞ்சலாக மிக சொற்ப நேரம் நிறுத்தி வைப்பதற்கே நாம் பயப்ப்படும் உலகில் இது ஆச்சரியமான விடயம் தான்.
  15. இதற்கான மாற்று வழிகளை விவசாயிகள் தான் சிந்தித்து நடைமுறைப்படுத்த வேண்டும். பயிரிடப்படாத தரிசு நிலங்கள் நிறைய உண்டு தானே அங்கு படங்குகளை விரித்து காயப்போடலாம் தானே. கிடங்கு முடங்கான மோசமான தெருக்கள் இருந்த காலத்தில் தெருக்களில் நெல்லைக் காயப் போடும் வழக்கம் இருக்கவில்லை. அபோது எங்கே காயப்போட்டார்களாம்?
  16. தெருவில் நெல்லை காயப்போடுவது மக்களின் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் செயல். நெல்லை காயப் போடுவதற்கு வேறு பல வழிகள் இல்லையா? அதை முயற்சிக்காமல் இப்படி சோம்பேறித்தனமாக தெரிவில் காயப் போடுவது தெருவில் அசௌகரியப்படுத்தும். விபத்துக்களுக்கு வழி சமைக்கும்.
  17. உங்களுக்கு யார் சொன்னது. அது உண்மையை நேர்மையுடன் சிந்திக்க விரும்புபவர்களுகானது.
  18. அந்த சிவப்பு தான் எனது கருத்துற்கான அங்கீகாரம். உங்களுக்கு கோபம் வருகிறது என்றால் அது உண்மையான கருத்து என்று அர்ததம்.
  19. எனது கருத்து ஒன்றுக்கு உங்களிடம் இருந்து சிவப்பு புள்ளி வருகிறது என்றால் அது மிகவும் சரியான கருத்து என்பது உறுதியாகிறது. ஆகவே சிவப்புப் புள்ளி மூலம் எனது கருத்தை. சரியான கருத்து என்று நிறுவும் உங்களுக்கு நன்றி விசுகு.
  20. எனது பதில் பகிடி என்ற உறவின் கேள்விக்கு வழங்கப்பட்ட பதில். மற்றப்படி ஒடுக்கப்பட்ட இனம் எந்தப் படுகொலைகளையும் செய்யவில்லை. எனவே அந்த அப்பாவிகளை இங்கு இழுக்க வேண்டாம். இங்கு பேசப்பட்ட விடயம் அந்த அப்பாவி ஒடுக்கப்பட்ட இனத்தின் போராட்டத்தை பேரழிவுக்குள்ளாக்கி அவர்களை நிர்கதியாக்கிய முன்யோசனை சிறிதும் அற்ற தொடர்ச்சியான செயற்பாடுகள் பற்றியதே.
  21. அப்ப இன அழிப்பு, போர்குற்றம் எல்லாம் நன்றாவே நடந்தது என்கிறீர்களா?
  22. அப்ப நமது பக்கத்தில் வெற்றிக்களிப்பில் சிரித்துக்கொண்டிருக்கின்றார்களா?
  23. இரண்டாவது இந்தக் கொலைகளால் தமிழரின் போராட்டம் சர்வதேச ரீதியில் அடைந்த நனமைகள் எவை? ஒட்டு மொத்த போராட்டதையே புரட்டிப் போட்ட தீமைகளே விளைந்தது. சொந்த செலவில் தமக்கே சூனியம் வைத்த இந்த செயல்களுக்கு நியாயம் கற்பிப்பவர்கள் நிச்சயமாக தமிழ் மக்களின் எதிரிகளாகவே இருப்பர்.
  24. கோத்தபாயவின் ஆதரவாளர்களும் சிங்கள இனவாதிகளும் இதையே கூறினால் நீங்கள் அந்த காலத்திற்கு ஏற்றாற்போல காரியங்கள் நடந்தன என்று ஏற்றுக்கொள்ளுவீர்களா?
  25. நீலன் திருச்செல்வம் உலக்கில் உள்ள பெரும்பாலான் உயர் ராஜதந்திரிகளால் அறியப்பட்ட அவர்களால் மதிக்கப்பட்ட ஒருவர். அவரை கொன்றதன் மூலம் அந்த கொலையாளிகள் எதையும் சாதிக்கவில்லை. போராட்டத்தின் பின்னடைவுகளுக்கு காரணமான பலவற்றில் நீலனின் கொலையும் ஒன்று. ஐநா பொது செயலாளர் பதவிக்குத் தகுதியான ஒருவர் நீலன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.