Everything posted by vasee
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
இந்தியா மூடிய பயிற்சி மைதானத்தில் இரகசியமாக பயிற்சி எடுக்கிறதாக இங்கு செய்திகளில் காட்டுகிறார்கள், அவுஸிற்கு ஒரு ஸ்பெசலாக இந்தியா செய்யப்போகிறதோ தெரியவில்லை.
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
மற்றவர்கள் அழியவேண்டும் என நினைக்கும் மனப்பாண்மையே இலங்கையின் அழிவிற்கு காரணமாக இருந்துவந்துள்ளது, சிங்களவர்கள் தமிழர்களும் இஸ்லாமியர்கள் அழிய வேண்டும் என நினைக்கிறார்கள், தமிழர்களும் இஸ்லாமியர்களும் தமக்கிடையே மற்றவர்கள் அழிய வேண்டும் என நினைக்கிறார்கள். ஸஹ்ரான்? பிள்ளையான் என கூறுகிறார்கள்?
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
தமிழர்கள் மீது பல அடக்குமுறைகள் ஏற்படுத்தப்பட்ட பின்னரே தமிழர்கள் தமக்கும் சரிநிகர் உரிமை வேண்டும் என கோரினார்கள் (பெரும்பான்மையின் அடக்குமுறைதான் ஆரம்ப புள்ளி), தமிழ் இளையோர் அதில் கொள்கை பிடிப்புடன் இருந்தமையால் அவர்களை அழித்து தமிழ் மக்களை மீண்டும் ஆரம்ப புள்ளியில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்கள். ஆனால் இஸ்லாமியர்கள் அடிப்படையில் தமிழர்கள் போல் இல்லை, அவர்கள் தமக்கென தனித்துவமான கொள்கையினை கடைப்பிடிக்கிறார்கள், அதில் சாதாரண மக்களில் இருந்து அரசியல்வாதிகள் வரைஅவர்களை தமிழர்கள் மாதிரி கையாள முடியாது அத்துடன் அவர்கள் எக்காலத்திலும் தமது தனித்துவத்துவத்தினை இழக்கமாட்டார்கள். பெரும்பான்மை இனவாதத்திற்கு மக்கள் தத்தமது நம்பிக்கைகள், உரிமைகளை பேணுவதென்பது ஒரு ஒவ்வாமைக்குரிய விடயமாக உள்ளது, இவர்கள் தமிழர்களிடம் பெற்ற அனுபவம் மாதிரி இஸ்லாமியர்கள் இலகுவில் கையாள முடியாது என்பதனை அவர்கள் புரிந்து கொள்ளும் போது அது மிக தாமதமாகியிருக்கும்.
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
ஒரு சிறுபான்மை இனமாக இருந்து அதனால் ஏற்பட்ட அடக்குமுறைகளால் தமிழ் இளையோர் ஆயுதம் ஏந்திய பின்னர் புலிகள் தமிழ் மக்கள் நலன் சார் நிலையில் விட்டுக்கொடுப்பினை என்ற நிலையில் உறுதியாக நின்றார்கள், ஆனாலிஸ்லாமியர் ஆரம்பத்திலிருந்து தனித்துவமான போக்கினை கடைப்பிடிக்கின்றனர், புலிகளின் பின்னர் வந்த அரசியல்வாதிகள் தமது சொந்த நலனில் எந்தவித விட்டுக்கொடுப்பினையும் செய்யாமல் மறுவளமாக தமது இனத்தினை காட்டி வியாபாரம் செய்கிறவர்களாக இருப்பதால் சிங்கள பேரினவாதத்திற்கு இஸ்லாமியர்களும் அவர்களது அரசியல்வாதிகளும் அச்சத்தினை கொடுக்கின்ற நிலை காணப்படுகின்றது. இப்போது அவர்கள் இலக்கு இன்னொரு சிறுபான்மையினரான இஸ்லாமியார்களாக உள்ளார்கள், தமிழ் மக்களின் மீட்கு சிங்கள பெரும்பான்மை தாக்கும் போது அதனை தடுக்க எத்தனிக்காமல் அதனை விட மோசமான நடவடிக்கையாக தாமும் அதில் இணைந்து தவறு செய்தார்கள். தற்போது இஸ்லாமியருக்கு எதிராக திரும்பும் இந்த பெரும்பான்மைக்கு தமிழ் மக்கள் ஆதரவ்ளித்து தவறிழைக்க கூடாது, பாதிப்பிற்குள்ளாகும் சிறுபான்மையினரான இஸ்லாமியர்களுக்கே எமது ஆதரவு இருக்கவேண்டும்.
-
பைடனை எச்சரிக்கும் புடின்!
அரசியலில் நிரந்தர எதிர்யும் இல்லை நிரந்தரநண்பனுமில்லை ஆனால் சார் நலன் மட்டுமே நிரந்தரமானது (இதுதான் அரசியல் பாலபாடம் என நினைக்கிறேன் எனக்கும் அரசியல் தெரியாதுதான்), அமெரிக்காவிற்கும் இரஸ்சியாவின் நலனும் எப்போதும் எதிரெதிரானவை. தற்போதய தகவலின்படி புட்டின் அணு ஆயுத பயன்பாட்டிற்கான அனுமதியினை வழங்கிவிட்டதாகவும் (அணு ஆயுத பயன்பாடு தொடர்பான ஆவணத்திற்கமைய) அதனால் சந்தையி பெரிய அமளி துமளி நிலவுகிறது.
-
பைடனை எச்சரிக்கும் புடின்!
பைடன் அரசு திட்டவட்டமாக இரஸ்சியாவிற்குள் நீண்ட தூர ஏவுகணியினை பயன்படுத்துவதற்கு அனுமதி வ்ழங்கவில்லை, ஆனால் அண்மையில் பைடன் ட்ரம்பினை சந்தித்த பின்னரே இந்த அறிக்கை வெளிவந்துள்ளமையால் ட்ரம்ப் பைடனிடம் கோரியிருக்கலாம் உக்கிரேனிற்கு நீண்ட தூர ஏவுகணையினை இரஸ்சியாவிற்குள் பயன்படுத்த அனும்திக்குமாறு அதன் மூலம் இரஸ்சியாவின் மேல் அழுத்தத்தினை ட்ரம்ப் அரசு பிரயோகிக்க விரும்பியிருக்கக்கூடும். ட்ரம்ப் பைடனை போல அல்ல அவரை கணிக்கமுடியாது, அண்மையில் செலன்ஸ்கிகூட கமலா காரிஸினை விட ட்ரம்ப் விரவாக சமாதானத்தினை கொண்டு வர கூடியவர் என தொனிபட கூறியிருந்ததாக கருதுகிறேன். செலன்ஸ்கி அமெரிக்காவிடம் டொமகவாக் ஏவுகணையினை கோரியுள்ளது இது 1500 கிலோ மீர்ரர் வரை செல்லலாம் என கருதுகிறேன் (சரியாக நினைவில்லை).
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
இல்லை, ஒரு நல்ல நோக்கிற்கிற்காக உருவாக்கப்பட்ட பொறிமுறையினை அதிகாரத்தினை பயன்படுத்தி துஸ்பிரயோகம் செய்து மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு அரசியல்வாதி அதிகாரத்தினை கைப்பற்ற நினைப்பவருக்கு எப்படி ஒருவரால் தார்மீக ரீதியில் ஆதரவு வழங்க முடியும்? இந்த தேசிய பட்டியல் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பயன்படுத்த முடியாது என சட்ட திருத்தம் கொண்டு வருவதன் மூலம் தவிர்க்கலாம். ஆனால் நீங்கள் நான் சுமந்திரனின் ஆதரவாளன் என நினைப்பது தொடர்பாக எதுவும் சொல்வதற்கில்லை, அது உங்கள் உரிமை ஆனால் ஒரு மோசமான அரசியல்வாதியினை ஆதரிப்பவனாக இருக்க நான் ஒருபோதும் விரும்பவில்லை, ஆரம்ப காலத்தில் இஸ்லாமியர்களை யாழ்பாணத்திலிருந்து வெளியேற்றியமைக்கெதிராக குரல் கொடுத்த போது அவர் மக்களை ஒருங்கிணைக்க முற்படுகின்றார் என்பதனடிப்படையில் ஒரு புதிய மாற்றத்திற்கான அரசியல்வாதியாக அவரை ஆதரித்தது உண்மைதான், ஆனால் அவரும் ஒரு மோசமான அரசியல்வாதி என்பதனை நிரூபித்த பின்னர் எல்லோரையும் போல அவரை ஆதரிக்கும் நிலையில் நானும் இல்லை.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
நான் நினைக்கிறேன் இரண்டும் வேறு வேறானவை, தேசிய பட்டியலில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் நபர்கள் தேர்தலில் பங்கு பற்றாத (சாதாரண அரசியலை நாடாதவர்கள்) ஆனால் அவர்களிடம் உள்ள ஆற்றல்கள் மக்களுக்கு சேவை செய்ய பயன்படுத்தப்படுத்துவதால் அதிக நன்மை கிடைக்கும் எனும் பட்சத்தில் தேசிய பட்டியலிலூடாக துறைசார் நிபுணர்களின் சேவையினை கோரும் முயற்சி, இங்கு சுமந்திரன் தேர்தலில் தோல்வியுற்ற ஒரு சாதாரண வழக்கறிஞ்சர் அவரை விட சிறந்த பலர் உள்ள நிலையில் அவர் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் போகவேண்டுமா எனும் கேள்வியே எழாது. அத்துடன் சுமந்திரன் பாராளுமன்றம் செல்லக்கூடாது என மக்கள் ஏற்கனவே தீர்ப்பு வழங்கிவிட்டார்கள், அதனால் அதனை மீளவும் கருத்து கணிப்பிற்குட்படுத்துவது தேவையற்றது என கருதுகிறேன். இங்கு தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்லமாட்டேன் என கூறும் சுமந்திரன் தேசிய பட்டியலில் செல்வாரா என ஒரு நிகழ்தகவினை ஆய்வுப்படுத்தும் கருத்துக்கணிப்பாக இது இருக்கும் என கருதுகிறேன்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இந்த ஆட்சி மாற்றம் பொதுவான இதுவரை காலமும் நிலவிய மேற்கின் கொள்கையளவான ஜனநாயக ஆட்சி முறைமையின் பொருளாதார தோல்வியினால் குளோபல் சவுத் எனப்படும் வளர்ந்து வரும் நாடுகளில் இந்த சர்வாதிகார முதலாளித்துவ ஆட்சி முறைமை ஏற்பட்டுள்ளது எதியோப்பியா மற்றும் தூர கிழக்கு ஆசிய நாடுகளை குறிப்பிடலாம, தற்போது இலங்கை இதில் இணைந்து கொண்டுள்ளது. அதே நேரம் குளோபல் நோர்த் எனப்படும் மேற்கு நாடுகளில் பெயரளவில் நிலை கொண்டிருந்த நிஜோ லிபரலிசத்திலிருந்து நிஜோ கொன் ஆக தீவிர வலது சாரி நிலை நோக்கி மாறுகின்றது இவற்றிற்கு அடிப்படை காரணம் பொருளாதாரம். ஆனால் இவை இரண்டும் அடிப்படையில் மிகத்தீவிரமான ஒரு முனை நோக்கிய நகர்வாகும் இதில் பல பாதகமான பக்கவிளைவுகள் ஏற்படலாம். இந்த உலக மாற்றத்திற்கு அடிப்படையினை வித்திட்ட தற்போது நிலவும் அமைதியின்மை இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் எந்த வகையிலான சாதக மாற்றத்தினை உருவாக்க முடியும் என்பதனை காலம் தான் பதில் சொல்லும்.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
இது நல்ல தெரிவு.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இதற்கு கடந்த கால சுமந்திரனின் அரசியல் வாழ்க்கையினை பார்த்தால் இலகுவாக புரிந்துவிடும்.😁
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
ஆனால் பாராளுமன்ற புதிய சட்ட விவாதத்தில் ஏதாவது சட்ட சிக்கல்கள வருமாயின் சட்ட நிபுணர் இருப்பது சிறப்பல்லவா?
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
தற்போதும் தமிழ் மக்களை பிரதிநிதிப்படுத்தும் கட்சியாக தமிழரசு கட்சி முக்கியமான இடத்தில் உள்ளது, இதன் காரணமாக பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படும் சட்ட சீர்திருத்தத்திற்கான கேள்வி பதில் நிகழ்வுகளில் கட்சியின் சட்ட ஆலோசகராக யாராவது இருக்கவேண்டும் என கருதுகிறேன் அதனடிப்படையில் அவர் வெளியே இருந்து ஒன்றும் செய்ய முடியாது பாராளுமன்றத்தில் செயற்படுவதன் மூலம் அதனை செய்யலாம்.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
அரசியலில் தொடர்ந்து ஈடுபடப்போவதாகவும், புதிய அரசியலமைப்பை உருவாக்குதல் தொடர்பான விடயங்களில் தனது பங்களிப்பு இருக்கும் என்றும் மேலும் தெரிவித்தார். தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வதற்கு கட்சி கோரினால் அதற்கு கட்டுப்படுவேன் என கூறியுள்ளார்.
-
தென் ஆப்பிரிக்கா இந்தியா டி20 தொடர்
அடுத்ததாக அவுசில் இருக்கு விளையாட்டு, 5 டெஸ்ட் போட்டிகள், இந்தியா தொடர் தோல்வி ஏற்படலாம் ஆனால் இந்திய கிரிக்கட் ஜாம்பவான் கள் இந்தியா தொடரை வெல்லும் என எதிர்பார்க்கிறார்கள், கடந்து இரு தொடரில் இந்தியா வென்றிருந்தது என கருதுகிறேன்.
-
தமிழரசுக்கட்சியை தொலைத்த வடக்கும், தேடியெடுத்த கிழக்கும்…!
இல்லை, சுமந்திரனுக்கு கிடைக்கலாம்.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
எப்பிடியாவது அனுர அலைக்கு போட்டியாக சுமந்திர அலையினை உருவாக்கி விட வேண்டியதுதான்😁.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
ஆம் என வாக்களித்துள்ளேன், என்னை பொறுத்தவரை அதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளதாக கருதுகிறேன்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ஆர்வ கோளாறில், தேசிய பட்டியலில் சுமந்திரன் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவாரா என கருத்து கணிப்பு ஒன்றினை ஆரம்பித்துள்ளேன், அதற்கு உங்கள் ஆதரவின நல்கவும்.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியிலில் திரு சுமந்திரன் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவாரா?
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இந்த பாராளுமன்றத்தில் தேசிய பட்டியலிலாவது பாராளுமன்றத்திற்கு செல்லாவிட்டால் சுமந்திரனின் அரசியல் வாழ்க்கை ஓரளவிற்கு முடிவிற்கு வந்துவிடும் என்றே கருதுகிறேன். அது அவரிற்கும் தெரிந்திருக்கும்
-
தென் ஆப்பிரிக்கா இந்தியா டி20 தொடர்
SA 45/4
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நீங்கள் கூறுவது சரி, கட்சி தொலைநோக்கு பார்வையுடன் செயற்பட்டால் சுமந்திரனை தேசிய பட்டியலில் தெரிவு செய்யாமல் விடலாம் ஆனால் கட்சி தனது இருப்பை தற்காலிகமாக காட்டிக்கொள்வதற்காக சுமந்திரனை தெரிவு செய்தால் இந்த நிலை தொடரலாம்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
எதற்கும் மனதை கல்லாக்கி வைத்து கொள்ளவும், சுமந்திரனின் சேவை இந்த புதிய பாராளுமன்றத்திலும் இருப்பதாக நினைக்கிறேன், உங்களை வெறுப்பேத்துவதற்காக கூறுவதாக நினைக்காதீர்கள் ஆனால் தமிழரசு கட்சி சார்பில் இருந்து பாருங்கள் புதிய சட்ட திருத்தங்களில் தமிழரசுக்கட்சி சார்பில் கட்சியினை பிரதிநிதிப்படுத்துவத்ற்கு சுமந்து நல்ல தெரிவு.
-
தென் ஆப்பிரிக்கா இந்தியா டி20 தொடர்
இப்படியான கட்டாந்தரையில் இந்தியா தோற்றால் அது அவமானம், ஏனெனில் இந்தியாதான் சிறந்த கட்டாந்தரை விளையாட்டு வீரர்கள்(Flat track bullies).