Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

vasee

கருத்துக்கள உறவுகள்

Everything posted by vasee

  1. பெரும்பான்மை மாற்றத்திற்காக அணீதிரளும்போது சிறுபான்மையினர் தமது பிரச்சினைகளை கவனிப்பது பெரும்பான்மையினரிற்கு எதிர்ப்பான விடயமாக அனுராவால் பார்க்கப்படுகிறது, பெரும்பான்மையினரின் பிரச்சினை என இவர் கூறுவது வாழ்வாதார பிரச்சினையான பொருளாதார பிரச்சினை, இலங்கையின் அடிப்படை பிரச்சினையாலேயே இந்த பொருளாதார பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இவர் எதிர்பார்ப்பது ( இல்லை திணிப்பது) சிறுபான்மையினர் தமது பிரச்சினைகளைப்பற்றி பேசக்கூடாது எனும் ஒரு வித அடக்குமுறை, இவர் ஒரு சர்வாதிகாரியாக வந்து இதற்கு முன்னர் இருந்த அரசியல்வாதிகளை எல்லாம் பரவாயில்லை என நினைக்க வைத்துவிடுவாரோ என கருதுகிறேன். நீங்கள் பெரிய ஆள்தான் 3 வருடங்களாவது உங்கட இமேஜை காத்திருக்கிறீர்கள், எனக்கு திருமணம் நடக்கும் முன்னமே என்னுடைய இமேஜ், டமேஜ் ஆகிவிட்டது.😁
  2. சாதாரண பொது விடயங்களில் அரவனைத்து போதல் எவ்வளவு முக்கியமாக இருக்கும் போது, ஒரு நாட்டினை தலைமை தாங்கி நடத்தும் பொறுப்பிற்கு போட்டியிடுவரது வாதமாக இதனை பார்க்கும் போது அவர் எந்தளவிற்கு இந்த பதவிக்கு தகுதியானவர் எனும் எண்ணம் வருகிறது, இங்கு மற்றவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதனை கூற எனக்கு எந்த உரிமையும் கிடையாது, இவர் கடுமையான இடது சாரி அடக்குமுறையாளராக வருவதற்கு தற்போதுள்ள இந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை வேறு அவருக்கு உதவ போகிறது என கருதுகிறேன்.
  3. உண்மையாக உளமார அனுரவின் கட்சி ஒரு இலங்கையின் சிறந்த கட்சியாக செயல்பட்டு சகல பிரச்சினைகளையும் தீர்த்து நாட்டினை முன்னேற்ற வேண்டும் என விரும்புகிறேன், ஆனால் ரோஸ்வெல்டின் கூற்றினை போல பேச்சின் வீரியத்தினை கண்ட மக்கள் செயலினை பார்க்கத்தானே போகிறார்கள் (எனது எதிர்மறைவான எண்ணத்திற்குக்காரணம் கடந்த கால இலங்கை வரலாறுதான்), இந்த விடயத்தில் நான் தவறாக இருக்கவே விரும்புகிறேன். ஒவ்வொரு கட்சிகளும் மற்ற கட்சிகளை குறைகூறி தம்மை மிகைப்படுத்துவது வழமையான விடயம் ஆனால் செயற்பாடென வரும்போது அவையும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான், இதில் அனுர விதிவிலக்கல்ல என நான் கருதுகிறேன் (எனது கருத்து தவறாக இருக்க விரும்புகிறேன்). என்னைப்பொறுத்தவரை இவர்தான் சிறுபான்மையினரை மற்றய கட்சிகளை விட மோசமாக நடத்தக்கூடும் என எதிர்பார்க்கிறேன், இடது சாரி கொள்கையினை இவர் தனது நலனுக்கு மட்டும் தேவையானவற்றை பயன்படுத்தும் ஒரு சந்தர்ப்பவாதியாக கருதுகிறேன், என்னைப்பொறுத்தவரை இவர்தான் ஆபத்தானவர்.
  4. ரோஸ்வெல்ட் கூறிய ஒரு வாசகம் சரியாக நினைவில்லை, ஒரு பெரிய தடியினை வைத்தபடி மென்மையாக பேச வேண்டும் எனும் வாசகம் நினைவில் வருகிறது. பெருமளவில் இந்த புதிய அரசு தொடர்பான நம்பிக்கையூட்டும் தகவல்கள் பெருமளவில் வெளிவந்து கொண்டுதானிருக்கிறது, இலங்கையில் இவ்வாறான நம்பிக்கையூட்டும் வாசகங்கள் தேர்தலுக்கு முன்பாக வெளிவந்துள்லதால் இது எங்கேயோ கேட்ட குரல் உணர்வினை ஏற்படுத்துகிறது, அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தினை கடந்தகாலத்தில் சந்திரிக்கா அம்மையார் ஏற்படுத்தியிருந்தார், அவர் கூட ஒரு இடதுசாரி பின்புல கட்சியினை கொண்டவர்தான். இன்னொரு அமெரிக்க ஜனாதிபதி கூறிய ஒரு கதை, ஒரு கட்சி கூட்டத்தின் பின்னர் (இங்கு கட்சி முக்கியம் அல்ல) குறித்த கட்சியின் பேரினால் ஒரு சிறுவன் பூனைக்குட்டியினை விற்பனை செய்வதற்காக குறித்தகட்சி பெயரினை கூறி அந்த கட்சின்யின் பூனைக்குட்டியினை வாங்குமாறு வந்திருந்தவர்களிடம் விற்பனை செய்து கொண்டிருந்தான். அந்த மனிதர் எதிக்கட்சியின் கூட்டத்திற்கு சென்ற போது அதே சிறுவன் அந்த எதிர்க்கட்சியின் பெயரால் பூனைக்குட்டிகளை விற்பனை செய்து கொண்டிருந்தான், அவனிடம் நீதானே அந்த கட்சிக்கூட்டத்திலும் பூனைக்குட்டி விற்றாய் இந்த அந்தகட்சி பூனைக்குட்டிக்கும் இந்தக்கட்சி பூனைக்குட்டிக்கும் என்ன வித்தியாசம் என கேட்டார். அதற்கு அந்த பூனைக்குட்டிகள் கண் திறக்கவில்லை என கூறினான்.
  5. இலங்கையின் புதிய பிரதமர் ஹரினி அமரசூரிய தமிழர்கள், நீதி மற்றும் இனவாதம் 24 செப்டம்பர் 2024 இலங்கையின் புதிய ஜனாதிபதி, தனது தேசிய மக்கள் சக்தி (NPP) கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் ஹரிணி அமரசூரியவை புதிய பிரதமராக நியமித்துள்ளார். இலங்கையின் நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்படும் என்ற தகவல்களுக்கு மத்தியில் அனுர திஸாநாயக்க அமரசூரியவை நியமித்துள்ளார். ஈழத் தமிழர்கள், இலங்கையில் இனவாதம் மற்றும் 13 வது திருத்தச் சட்டத்தின் மூலம் அதிகாரப் பகிர்வு பற்றி அமரசூரிய முன்னர் கூறிய கருத்துக்களை நாம் திரும்பிப் பார்க்கிறோம். கருப்பு ஜூலை கொழும்பில் தமிழ்த் துறைகளில் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் அழிக்கப்படுவதை நிறுத்திய சிங்களக் கலவரக்காரர்கள் கொண்டாடுகிறார்கள் 2020 ஆம் ஆண்டு பெண்கள் அரசியலுக்கு அளித்த நேர்காணலில் , அமரசூரிய 1983 கறுப்பு ஜூலை படுகொலையை நினைவு கூர்ந்தார் , அப்போது அரசாங்க ஆதரவு சிங்கள கும்பல் ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்றது. அவளிடம் கேட்கப்பட்டது: இலங்கையில் மோதல்களுக்கு மத்தியில் எப்படி வளர்ந்து கொண்டிருந்தது? குறிப்பாக பெண்களுக்கு இது போன்ற கடினமான காலகட்டம் இருந்ததா? தமிழ் பெண்கள் மீது இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஃபெடரலிடம் பேசிய அமரசூரியவிடம் கேட்கப்பட்டது: இலங்கையில் நடந்த நீண்ட உள்நாட்டுப் போரில் பெண்களும் குழந்தைகளும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் என்பதைத் தீர்க்கமாக எழுதியும் பேசியும் இருக்கிறீர்கள். உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய சகாப்தத்தில் அவர்களின் குரல்களை உண்மை மற்றும் நல்லிணக்க செயல்முறைக்கு எவ்வாறு கொண்டு வருவீர்கள்? காணாமல் போனவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் உட்பட வடக்கு-கிழக்கு முழுவதிலும் உள்ள தமிழர்கள் உள்நாட்டு உண்மையைத் தேடும் பொறிமுறையை மீண்டும் மீண்டும் நிராகரித்து, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) மூலம் சர்வதேச பொறுப்புக்கூறலை மீண்டும் மீண்டும் கோரியுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தமிழ் குடும்பங்கள் இலங்கைக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். மற்றொரு 2020 நேர்காணலில், அமரசூரிய கூறினார், சிங்கள இனவாதம் பற்றி மே 2020 இல் தி வயர் இதழில் அமரசூரிய எழுதுகையில் , 13 வது திருத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வு இந்த ஆண்டின் தொடக்கத்தில் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பான NPP நிலைப்பாட்டை விளக்குமாறு கேட்டபோது, அமரசூரிய கூறினார் : அவள் மேலும் தெரிவித்தாள், அமரசூரியவின் உறுதிமொழி இருந்தபோதிலும், 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் நிறுவப்பட்ட 13 வது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு எதிராக அவரது கட்சியில் உள்ள மற்ற மூத்த அதிகாரிகள் வெளிப்படையாகப் பேசினர் . 1970களின் முற்பகுதியிலும் 1980களின் பிற்பகுதியிலும் ஜே.வி.பி அரசுக்கு எதிராக இரண்டு கிளர்ச்சிகளை நடத்தியது. இவற்றில் பிந்தையது முக்கியமாக இந்திய-இலங்கை ஒப்பந்தம் மற்றும் வடக்கு-கிழக்கில் உள்ள தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க முயன்ற 13வது திருத்தத்தின் பிரதிபலிப்பாகும். பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்படுமாயின் ஜே.வி.பி எதிர்ப்பதாக 2010 இல் திஸாநாயக்கவே கூறினார் . தொடர்புடைய கட்டுரைகள்: 22 செப்டம்பர் 2024 : அனுரகுமார திஸாநாயக்க இலங்கை அதிபராகப் பிரகடனம் செய்தார் 20 செப்டம்பர் 2024 : அனுரகுமார திஸாநாயக்க யார்? நிழழி இணைத்த இணைப்பை கூகிள் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  6. இவரால் எந்த மாற்ற்த்தினையும் இலங்கையில் ஏற்படுத்த முடியாது, இதுவும் ஒரு இனவாத சிங்களத்தின் தம்மை தக்கவைப்பதற்கான பரீட்சார்த்த முயற்சி, கோட்டபாய அரசினை ஆட்சிக்கு கொண்ட வந்த போது அவர்களுக்கு இஸ்லாமியர்களால் அவர்களது இருப்பிற்கு பாதிப்பு இருப்பதாக எண்ணினார்கள், அவர்கள் எப்போதும் சிறுபான்மையினருக்கு அதிகாரம் வழங்குவது தமக்கான இருப்பினை கேள்விக்குறியாக்கும் எனும் பிற்போக்குத்தனமான சிந்தனையின் அடிப்படையிலே இருந்தார்கள் இருக்கின்றார்கள். அவர்கள் ஆட்சிக்கொண்டு வந்த கோட்டபாய இலங்கையினை இன்னமும் ஒரு படி கீழிறக்கி விட்டுள்ளார். தற்போது இவர், இவருக்கு பொருளாதார, அரசியல், சமூக, வெளிவிவகாரம் என பல முனைகளில் பிரச்சினை உள்ளது, இவரும் ரணில் போல ஒரு ஆட்சியினையே வழங்க முடியும் அதிக பட்சமாக அதற்கு மேல் இவரால் எதுவும் செய்ய முடியாது குறிப்பாக ஊழலை ஒழிக்க முடியாது, நிர்வாக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பூகோள அரசியல் ரீதியாகவும் இலங்கை ஒரு இருண்ட கால கட்டத்திற்குள் நுழைந்துள்ளது, இந்த தீவிர இடது சாரி பிரச்சாரங்களை மேடை பேச்சோடு வைத்தால் ஓரளவிற்கு சிறிது காலம் தாக்கு பிடிக்கக்கூடும். இதுவும் ஒரு மண்குதிர்தான்.
  7. நியூசிலாந்து கிறைஸ் சேர்ச் என்னுமிடத்தில் அவுஸ்ரேலியர் ஒரு மசூதியில் நிகழ்த்திய படுகொலைக்கு அந்த நாட்டு அரசு மிகவும் கடினமான நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டது, இது போல் இனிமேல் நிகழ கூடாது என்பதற்காக அவரது பெயரை பிரபலப்படுத்தக்கூடாது எனுமளவிற்கு தீவிரமாக இருந்து, அவர் எதிர்பார்த்த ஊடக விளம்பரத்தினை தடுத்திருந்தது, அத்துடன் நிற்காது அந்த் நாட்டு பிரதமர் இஸ்லாமிய முறைப்படி உடையணிந்து அவர்களது இறுதி நிகழ்வில கலந்து கொண்டார். என்னுடன் வேலை செய்யும் நியுசிலாந்து நண்பரிடம் பாகிஸ்தானிய பெண்மணி கூறினார் இவ்வாறு செய்திருக்காவிட்டால் லெபனானை சேர்ந்தவர்கள் அதற்கான பதிலை நியுசிலாந்திற்கு காட்டியிருபார்கள் என்றார், இருந்தும் இலங்கையினை சேர்ந்த தமிழர் ஒருவர் இஸ்லாம் மதத்தினை சார்ந்த இவர் தனனை தமிழராக அடையாளம் காட்டியிருந்தார் (அகதி கோரிக்கைகாக இருக்கலாம்), அவர் அங்கு கத்தி குத்தில் ஈடுபட்ட போது சுட்டுக்கொல்லப்பட்டார். அப்பாவி மக்களை தாக்குவதற்கு இவர்கள் நினைக்கும் காரணம் தமக்கு நடக்கும் அநியாங்களை தமது அரசுகளை தட்டி கேட் கவில்லை, அதனை செய்யும் தரப்புக்கு தார்மீக ஆதரவு, பொருளாதார உதவிகளை இந்த நாடுகள் செய்கின்றமை உடந்தையாக இருத்தல் எனும் அடிப்படையில், தமது வலிகளை இந்த மக்களும் உணரவேண்டும் எனும் அடிப்படையில் சிந்திக்கிறார்கள் என கருதுகிறேன். ஆனால் உண்மையில் இங்குள்ள மக்கள் அவர்களது வலிகளை புரிந்தவர்களாகவே இருக்கிறார்கள், அண்மையில் ஒரு ஐரிஸ் பின்னணி கொண்ட அவுஸ்ரேலிய பெண் கூறினார் அவர்களி படும் வலியினை பார்த்து தான் கண்ணீர் விட்டதாக கூறினார். நாங்கள் விரும்பியோ விரும்பமாலோ இந்த கொடுமைகளுக்கு பங்காளிகளாக இருக்கிறோம் என்பதனை யாரும் மறுக்க முடியாது, எம்மால் தெரிவு செய்யப்பட்ட அரசுகளின் ஆதரவுடன் எமது வரிப்பணத்தின் உதவியுடன் தான் இந்த கொடுமைகள் நிகழுகின்றது. போர் பின் புலத்திலிருந்து வரும் மக்கள் பல உளவியல் பிரச்சினைகளுக்கு உள்ளாகிறார்கள் அவ்வாறான மனநலனற்றவர்களை மதம் எனும் பெயரில் அவர்கள் மனதில் நஞ்சை விதைக்கிறார்கள், இதற்கு இவர்களது பிற்போக்கு தனங்களை கருவியாக பயன்படுத்டுகிறார்கள், இந்து சமயத்திலும் பல பிற்போக்குத்தனங்கள் இருந்தன அவற்றினை மக்கள் சிறிது சிறிதாக கைவிட்ட நிலைமையே தற்போதய நிலை ஆனாலும் இன்னும் பல பிற்போக்குத்தனஙகள் இந்து மதத்தின் பெயரால் இன்றும் பின்பற்றப்பட்டுக்கொண்டுதானிருக்கிறது. இவ்வாறு சாதாரண மக்களை கொன்று தமது எதிர்ப்பை காட்ட விளையும் லெபனானியர்கள் லெபனானுக்கே சென்று இஸ்ரேல் இராணுவத்திற்கெதிரான பதில் நடவடிக்கையில் ஈடுபடலாம், ஆனால் ஒரு மிக சொற்பமானவர்களே (விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள்) செய்கிறார்கள் மற்றவர்கள் அவ்வாறல்ல என கூற முடியாது சிட்னியில் இவ்வாறு ஒரு பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டு பலரை கொலை செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் போது அந்த பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்களை கடவுள் காக்க வேண்டி இஸ்லாமியர்கள் மத பிரார்த்தைனையில் ஈடுபட்டதாக 2GB எனும் வானொலி குற்றம் சாட்டியிருந்தது. இந்த வகை செயற்பாடு அங்குள்ள மக்களுக்கு எந்த நன்மையினையும் செய்யாது இன்னும் தீமையினை கொடுக்கும்.
  8. ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற அனுர இனிமேல்தான் முக்கிய பிரச்சினைகளை கையாளப்போகின்றார், அது இலங்கை பிரச்சினை அல்ல உலக வல்லரசுகளின் போட்டியினை சாதுரியமாக சமாளித்தல். மற்ற நாடுகளில் உள்ள வெஸ்மினிஸ்ரர் பாராளுமன்ற ஆட்சி முறைமையில் இலங்கையில் இல்லை (இங்கிலாந்து காலனித்துவ நாடுகளில் உள்ளதனை போன்ற), இலங்கை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறைமையாக இருந்தாலும் பாராளுமன்ற தேர்தலில் அனுர கட்சி பெரும்பான்மையினை நிரூபிப்பது அவசியமாகிறது. தற்போது இந்த இங்கிலாந்து பாணியிலான பாரளுமன்ற ஆட்சி முறைமை கொண்ட பல நாடுகளில் பல உதிரிக்கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்ததால் அதனை பயன்படுத்தி உலக வல்லரசுகள் அந்தந்த நாடுகளில் தலையாட்டும் பொம்மை அரசுகளை உருவாக்கி விட்டுள்ளது, அவர்கள் தம் விருப்பப்படி நடக்காவிட்டால் கூட்டணி கட்சிகள் ஆதரவை விலக்க ஆட்சி கவிழும் நிலை உருவாகும், இந்த நிலை உண்மையில் பெரும்பான்மை மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்காத உலக முடிவுகளில் எடுப்பதற்கு இந்த உதிரி கட்சிகள் நிர்ப்பந்திக்கப்படுகின்றன இந்த போக்கு உலக வல்லரசுக்களுக்கு வாய்ப்பாக உள்ளது. இலங்கை ஜனாதிபதி முறைமை அவ்வாறில்லை பாராளுமன்றத்தினை விட அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதால் எப்போதும் கத்தி ஜனாதிபதிக்கு மேலேயே தொங்கிக்கொண்டிருக்கும், அதனை சமாளிக்க முடியாதவர்கள் கோத்தபாய போல ஓட வேண்டியிருக்கும். ஜுலி சங்கிற்கு இப்போதுதான் வேலையே தொடங்கியுள்ளது. பலரை சந்திக்கவேண்டும் முதலாவது ஜனாதிபதி அடுத்து இராணுவத்தளபதி என பல பேரை சந்திக்கவேண்டியுள்ளது. இதற்குள் இந்தியாவையும் சமாளிக்க வேண்டும், பார்ப்போம் அனுர எவ்வளவு காலம் தாக்கு பிடிக்கிறார் என (புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள்).
  9. இந்த விடயங்கள் உண்மையில் ஒன்றுமில்லாத விடயங்கள்தான் அதனை தீவிரமாக எடுக்க தேவையில்லை, நீங்கள் ஒரு விவாதத்திற்காக கூறினீர்கள் என்பதும் தெரியும்.
  10. உல்லாச பயணிகலை இந்த கட்டமைப்பு ரீதியான மாற்றம் பாதிக்காது, ஆனால் மக்களை பாதிக்கும், கடனுகான கட்டனங்களை 2028 பின்னரே செலுத்தவுள்லதால் அது வரை பிரச்சினை இல்லை, எவ்வாறான பொருளாதார கொள்கையினை கடைப்பிடிக்கப்போகிறார் எனப்தனை பாராளுமன்ற தேர்தலின் பின்னர் தான் அறிய முடியும் (உண்மையான முகம்).
  11. இங்கு தமிழ் பொது வேட்பாளரை மக்கள் முழுமையாக ஒதுக்கவில்லை என்றாலும், தமிழ் மக்கள் ஒரு செய்தியினை சொல்லிவிட்டார்கள், இது ஒரு வகையில் தெளிவான செய்திதான் அனைத்து மக்களும் இலங்கையராக பயணிக்க கூடிய ஒரு சூழ்நிலை உருவானால் தமிழ் மக்களும் எந்த் வித தய்க்கமுமின்றி இணைந்து பயணிக்க தயாரக உள்ளார்கள் என்பதே, இது ஒட்டு மொத்த இலங்கைக்கும் கூறப்பட்டுள்ள செய்திதானே? இந்த பொது வேட்பாளரால் ஏற்பட்ட நன்மை எனக்கொள்ளலாம் (பொது வேட்பாலரை ஆதரித்தவர்களில் நானும் ஒருவன்). மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதனை புரிந்து புலம்பெயர் தமிழர்களும் செயற்படுவார்கள்தானே?
  12. முன்னர் இலங்கையில் சுதந்திரக்கட்சி இடதுசாரி கட்சி, ஐக்கிய தேசிய கட்சி வலது சாரி கட்சி ஆகவும் இருந்து வந்துள்ளது, கண்டி சிங்களவர்கள் இலங்கையின் சீரழிவிற்கு ஐக்கிய தேசிய கட்சியினை குற்றம் சாட்டுவர், தனிய ஐக்கிய தேசிய கட்சி தான் இனப்பிரச்சினையினை தோற்றுவித்தது போல கூறுவார்கள், ஐக்கிய தேசிய கட்சிக்காலத்தில் இலங்கை அமெரிக்க சார்பு நிலை எடுத்தது என்பது ஓரளவு உண்மை அதுவரை இந்தியாவுடன் உறவு நிலையிலிருந்த இலங்கை அமெரிக்காவுக்கு சார்பான வொய்ஸ் ஒப் அமெரிக்கா வானொலி நிலையம் அமைக்க உதவியது (இந்திய தகவல் தொடர்புகளை ஒட்டு கேட்பதற்காக என இந்தியாவால் குற்றம் சாட்டப்பட்ட) இலங்கையில் அமெரிக்க தளங்கள் மூலம் காலூன்ற உதவ முயன்றது என இந்திய அரசிற்கு பீதியினை கிழப்பியதில் ஐக்கிய தேசிய கட்சிக்கு பெரும் பங்கு உண்டு. தற்போது ஆட்சிக்கு வரவுள்ள அனுர தீவிர இடது சாரி கொள்கை கொண்டவர் அவர் இந்திய எதிர்ப்பு சீன ஆதரவாளராக இருக்க அதிக வாய்ப்புள்ளது, இதனால் இலங்கை தொடர்பில் இந்தியாவிற்கு மீண்டும் தலியிடி அதிகரிக்கும். மக்கள் நலன் செயற்பாட்டில் கவனம் செலுத்துவதற்கு முன்னுரிமை வழங்க போவதாக கூறியமையால் ஐ எம் எப் மற்றும் உலக நாடுகளுடன் அவரால் இணைந்து பயணிக்க முடியாது. சிறிமாவோ கொண்டு வந்த தன்னிறைவு பொருளாதார காலத்தில் பல உயர் மத்திய தர வர்க்கத்தினர் பெருமளவில் அதிருப்திக்கு ஆளானார்கள், ஒரு பழைய சிங்கள திரைப்பாத்தில் அதன் கதாநாயகனான காமினி பொன்ஸ்சேகா ஒரு வைத்தியர், அவர் வறுமை காரணமாக இலஞ்சம் பெற்று சிறை செல்வதாக காட்டப்பட்டிருக்கும், அனுர என்ன செய்ய போகிறாரோ.
  13. முயற்சிப்பதில் தவறில்லைதானே? (இந்த மூஞ்சி பரவயில்லையா?) விசுகு! பொதுவான கருத்துக்களை ( வெறும் சாதாரண கருத்து) தனிப்பட்ட ரீதியில் எடுக்க வேண்டாம், இவ்வாறான கருத்துக்கள் உங்களை பற்றி ஒரு விம்பத்தினை உருவாக்கிவிடலாம்.
  14. இந்த நுண் அரசியல் செய்தவர்கள் ஆங்கிலக்கல்வியினை கற்றவர்கள், சமூகத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள் ஆங்கிலக்கல்வியின் மூலம் பொருளாதார வளம் பெற்று சமூக மாற்றம் ஏற்படுவதனை விரும்பவில்லை இவ்வாறான செயலை கிப்பொகிரட் என ஆங்கிலத்திலும் தமிழில் முரண்நகை (நயவஞ்சகர்) என கூறுவார்கள். அது காலனித்துவ கால பிரச்சினை, தற்போது உங்கள் சந்தேகத்திற்கு வருவோம், பிரான்ஸில் பிறக்கும் உங்கள் பேரப்பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாமல் பிரென்ச் மொழி மட்டும் தெரியும் என வைத்துக்கொள்வோம்; அவர்கள் பிரன்சு பிரஜைகளாக இருந்தாலும் அவர்களை நீங்கள் பிரென்சு இனத்தவர் என அழைப்பீர்களா அல்லது தமிழர் என அழைப்பீர்களா? அவ்வாறே நீங்க்ளே விரும்பி பிரென்சு இனத்தவர் என அழைத்தாலும் பிரென்சு இனத்தவர்கள் அதனை ஏற்றுக்கொள்வார்களா? ஒற்றுமைக்கு தடையாக இருக்கும் வேற்றுமையினை களையவேண்டும் என்பதற்காக கூறினேன், சிங்கள பெரும்பான்மையினர் எவ்வாறு இலங்கையிலுள்ள மற்ற சிறுபான்மையினரை தமக்கு சமமாக கருதவேண்டும் என விரும்புகிறோமோ அதே போல் எம்க்குள்ளும் அதே நிலைப்பாடு இருக்க வேண்டும். உண்மையில் நீங்கள் நினைப்பது போல இதனை உரிந்து கொள்வது சிக்கலான விடயம் ஒன்றும் இல்லை, எல்லோரும் சாதாரண மனிதர்கள்தான் என்ற சாதாரண புரிதலிருந்தால் போதும்.
  15. தரவுகள் நிறைந்த சிறப்பான கருத்து.
  16. ஆரம்பத்தில் ஆங்கிலேய ஆட்சியின் போது ஆங்கில மூலக்கல்வி இருந்தது, ஆங்கில கல்வி கற்றவர்கள் அதன் மூலம் அரச உயர் உத்தியோகங்களை பெற்று முன்னேறி செல்ல அதனை தொடர்ந்து அனைத்து மக்களும் ஆங்கில கல்வி பெற்று அரச உத்தியோகம் பெறும் நிலை வரும் போது அதனை தடுக்க தாய் மொழிக்கல்வியினை கொண்டு வந்து தமக்கு சேவகம் செய்ய ஒரு ஆண்டான் அடிமை அடிப்படையான ஒரு நிலையினை உருவாக்கியதாக கூறப்படுகிறது (இந்த கூற்று தவறாகவும் இருக்கலாம்). இதனால் தமிழ் மொழி வளர்ச்சி பெற்றது என கூறி தமிழிற்கு சேவை செய்தார், மதத்திற்கு சேவை செய்தார் என நுண்ணிய அரசியல் செய்ததைப்போலவே (இந்த கூற்று தவறாகவும் இருக்கலாம்) தமிழ் நாட்டில் பிராமனர் ஈடுபட்டனர், இந்தியாவில் இவ்வாறு பிற்படுத்தப்பட்ட சமூகங்களை பொருளாதார ரீதியாக தர முயர்த்த பல சலுகைகள் அங்குள்ள பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு உள்ளது ஆனால் எமது சமூகம் அவ்வாறான நிலையின் உருவாக்க விரும்பாத நிலையே இன்னமும் அடிப்படை கல்வியினை பெறமுடியாத வறுமை சூழ்நிலையிலேயே வறுமைக்கோட்டிற்க்கு கீழே பல தலைமுறைகளாக வாழும் நிலை காணப்படுகிறது. ஊரில் ஒருவரது மாடு காணாமல் போய்விட்டது அவர் தமிழீழ காவல்துறையில் சென்று முறயிட்டார், அவரிடம் உங்களுக்கு யார் மேலாவது சந்தேகம் உண்டா என கேட்டார்கள் அதற்கு அவர் சாதிய வார்த்தையில் விழித்து அவர்கள் மேல்தான சந்தேகம் உள்ளது என்றார், அவருக்கு 5000 ரூபா அபராதம் விதிதார்கள், அமெரிக்காவில் ஆபிரிக்க வம்சாவளியினரை குற்றப்பரம்பரையாக பார்ப்பது போல பார்க்கும் நிலை எம்மிடமும் உள்ளது. என்னை பொறுத்தவரை தமக்கான உரிமைகளை இழந்து பல தலைமுறைகளாக சைவர், தமிழர் என தமது சுயத்தினை இழந்து தமிழ் சமூகம் எனும் போர்வையில் அடிமைகளாக இருப்பதனை விட வேறு மதம், இனம் என்பதன் மூலம் சாதாரண மனிதர்கள் போல சகல உரிமைகளோடு வாழ வேண்டும். நீங்கள் கூறுவது போல திருமண பந்தத்திற்கு மட்டும் சாதி பார்ப்பதாக எடுத்து கொன்டாலும், இந்த வேற்றுமையினை எதிர்பார்க்கின்ற சமூகமாக இருந்த வண்ணம் எவ்வாறு தமிழர், மதம் எனும் ஒருமைப்பாட்டுற்குள் வரவேண்டும் என எதிர்பார்ப்பது நியாமாக இருக்குமா? உண்மையாக உங்கள் கருத்திற்கு எதிரான கருத்தல்ல, அத்துடன் தனிப்பட்ட ரீதியில் சமய, மொழி எனும் அடிப்படையில் பெயர் பெற்ற காலமானவர்கள் மேல் எனக்கு எந்த காழ்ப்புணர்வும் இல்லை, ஆனால் இந்த பிற்போக்குவாதத்தினை கடந்து தமிழராக நாம் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும்.
  17. முழுமையான தடை விதிக்க வேண்டும், இந்த இழுவை படகுகளில் பயன்படுத்தப்படும் வலையின் முன் பகுதி பெரிய கனமான பொருளால் உருவாக்கப்படுவதாக கூறுகிறார்கள், அது கடல் நீரில் அடியில் தரையில் காணப்படும், படகு பயணிக்கும் பகுதி எங்கும் ஒரு உழுவை இயந்திரம் போல் கடலடி வளங்களை அழிக்கின்றது, இந்த இழுவைப்படகுகளை தொடர்ந்து பயன்படுத்தினால் சில காலங்களில் கடல் வளங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுவிடும். ஒரு காலத்தில் (தற்போதும் என நினைக்கிறேன்) மிகவும் மீன் வளம் பொருந்திய சோமாலிய கடற்பரப்பில் வெளிநாட்டு மீன் பிடி இழுவைப்படகுகள் அந்த நாட்டின் உள்நாட்டு பிரச்சினையினை பயன்படுத்தி அங்குள்ள வழங்களை கொள்ளை அடித்து உள்நாட்டு மீன்வர்கள் மீன்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டமையால் சிறு குழுக்களாக தாமாகவே தமது கடல் வழங்களை காப்பாற்ற (ஆயுதம் மூலம்) முயன்றவர்கள் பின்னாளில் கடல் கொள்ளையர்களானார்கள், இத்தனைக்கும் அது ஒரு ஆழ் கடல் மீன் வளம் கொண்டநாடு ஆனால் இலங்கையின் வட கடல் அவ்வாறு ஆழம் கூடிய கடல் அல்ல. இலங்கை கடற்பகுதியில் இவ்வகை இழுவைப்படகுகளை தடை செய்து சட்டம் இயற்றினால் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை தானாக தீர்ந்துவிடும்.
  18. 50 புள்ளி வட்டி விகித குறைப்பு எதிர்பார்த்தவாறு 100 புள்ளிகள் அதிகரிப்பினை S&P 500 இல் ஏற்படுத்தியுள்ளது, இந்தவட்டி விகித அதிகரிப்பு பரவலாக எதிர்பார்க்கப்பட்ட 25 புள்ளி அதிகரிப்பிற்கு பதிலாக 50 புள்ளி அதிகரிப்பு என்பது அமெரிக்க பொருளாதார மந்தநிலையினையினை குறிக்கிறது, அதனால் தற்போது ஏற்பட்டுள்ள இந்தவிலை அதிகரிப்பு ஒரு தற்காலிகமானதாக தெரியவில்லை (எனது கருத்து மட்டும்) குறித்த நாளில் ஏற்பட்ட விலை அதிகரிப்பின் விலை தளம்பல் ஏற்படவில்லை, ஆனால் பொதுவாக இவ்வாறன நிகழ்வு வார இறுதி விலை உச்சத்துடன் வார இறுதியினை எட்டும் ஆனால் விலை தற்போது மெதுவாக இறங்குகிறது இவ்வாறு நிகழ்வது சற்று வித்தியாசமாக உள்ளது, ஆனால் Bullish flag போலொரு சந்தை அமைப்பினை ஒரு மணி நேர வரைபடத்தில் காட்சி அளிக்கிறது இந்த Bullish flag மேல் நோக்கி உடைத்தால் தற்போது உள்ள 5700 இலிருந்து 5800 வரை உயர வாய்ப்புள்ளது.
  19. வவுனியா இந்திய இராணுவ சிறையில் உள்ள கைதிகளிற்கு தண்டனையாக அவர்களின் தலையை மொட்டை அடிப்பார்களாம், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்முகமாக ஏனைய போராளிகளும் தமது தலையினை மொட்டை அடித்து எதிர்ப்பினை தெரிவிப்பது வழமையாக இருந்ததாம், அதே சிறை முகாமில் இந்திய இராணுவத்துடன் இயங்கும் புலிக்ளுக்கெதிரான தமிழ் குழுக்களின் உறுப்பினர்களையும் சில நேரங்களில் சில காரணங்களுக்காக இந்திய இராணுவத்தினால் சிறை வைக்கப்படுவார்களாம். வவுனியா முகாம் சிறை உடைப்பு முயற்சிக்கப்பட்ட போது ஒரு போராளியிற்கு இந்திய இராணுவம் மொட்டை அடித்திருந்தது, ஆனால் அந்த தடவை மட்டும் மற்ற போராளிகள் மொட்டை போடவில்லை, அதற்குக்காரணம் சிறையுடைப்பின் பின்னர் மொட்டையுடன் குழுவாக தப்பி ஒடினால் இலகுவாக அடையாளம் காணப்பட்டு விடப்படுவார்கள் என்பதால் ஆனால் மொட்டை அடிக்கப்பட்ட போராளியிற்கு அந்த விபரம் தெரியாது, ஏன் வழமையாக மொட்டை அடித்து எதிர்ப்பை காட்டும் போராளிகள் தன் விடயத்தில் ஆதரவு தெரிவிக்கவில்லை என அவர் ஆதங்கப்பட அதனை அறிந்த புலிகளுக்கெதிரான தமிழ் குழுக்களில் சிறையில் இருந்தவர் அவருக்கு அந்த போராளிக்கு ஆதரவாக தான் மொட்டை போட பிரச்சினை சூடு பிடித்ததாம். இந்த விவகாரத்திலாவது இலங்கைக்கும் இந்தியாவிற்கும் பிரச்சினை வருதா என பார்க்கலாம். பொதுவாக இலங்கை மீனவர்கள் முதலாளி மீன் பிடி உபகரணம் என்பவற்றை கொடுக்க மீனவர்கள் அதில் மீன் பிடித்து தமது வருமானத்தினை சம பங்குகளாக பிரிப்பர் என கருதுகிறேஎன் ( தவறாக இருக்கலாம்), அதே போல ஒரு சூழ் நிலை இந்திய மீனவர்களிடம் இருக்கலாம் என நினைக்கிறேன் அதனாலேயே அவர்கள் எல்லை தாண்டிய மீன் பிடிகளில் ஈடுபடுகிறார்கள், இது தெரிந்தே செய்யப்படுகிறது. இவர்கள் கடல் வளத்தினை மட்டும் அழிக்கவில்லை இலங்கை மீன்வர்களின் வலைகளை அறுத்து அவர்களின் வாழ்வாதாரத்தினை குறுகிய நீண்ட கால நோக்கில் பாதிப்பினை ஏற்படுத்துகிறார்கள். எமது பிரச்சினைக்கு தீர்வினை நாம் தான் தேட வேண்டும் மற்றவர்கள் உதவுவார்கள் என எமது உரிமைகளை விட்டுக்கொடுத்தால் அங்குள்ள மீனவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகும். பிறகு இலங்கை மீனவர்களும் சோமாலிய மீன்வர்கள் போல் கடல் கொள்ளையர்களாகத்தான் வேண்டும்,
  20. மொஸ்கோவிற்கு வடமேற்கே அமைந்துள்ள இரு இரஸ்சிய ஆயுத கிடங்கின் மேல் உக்கிரேன் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது, இந்த தாக்குதல் பற்றிய அறிவிப்பினை இரஸ்சியா இது வரை அறிவிக்கவில்லை என கூறப்படுகிறது (எவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டது என) அண்மையில் பின்லாந்திலிருந்து வந்த உக்கிரேன் டரோனை இரஸ்சியா சுட்டு வீழ்த்தியிருந்தது , இந்த தாக்குதல் நீண்ட தூர ஏவுகனை அல்லது பால்டிக் நேட்டோ நாடொன்றிலிருந்து உக்கிரேன் ட்ரோன் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது, ஆயுத கிடங்கு தீப்பற்றி எரியும் காணொளிகள் இணையதில் வலம் வருகிறது.
  21. நீங்கள் கூறுவது சரிதான், இதனை Military logistic என கூறுவார்கள், தற்போது உலகலவில் இந்த இரண்டு நாடுகளிலே பெரியளவிலான இந்த வசதிகள் உள்ளது அதில் அமெரிக்கா முதல் இடத்திலும் சீனா இரண்டாம் இடத்திலும் உள்ளது, ஆனாலும் இந்த கட்டுமானங்கள் உறுதியாக போரின் போக்கை தீர்மானிகின்றன ஆனால் இந்த கட்டுமானத்தில் ஒப்பீட்டளவில் பாரிய வித்தியாசம் உள்ள புலிகள் அமைப்பு இலங்கை இராணுவத்தின் மிக சிறந்த கட்டுமானங்கள் கொண்ட படையினை சமாளிப்பதற்காக அவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை சிறப்பாக பயன்படுத்தியமை குறிப்பிடலாம் (துருப்புகளையும் பின் கள வசதிகளையும் விரைவாக நகர்த்தும் திறன்). கேர்ஸ்க் ஊடுருவலுக்கு கூறப்பட்ட தொழினுட்பம், திட்டம் அடங்கலாக அனைத்து கட்டுமானமும் நேரடியான நேட்டோவின் மாதிரி, ஆனால் அதனை இரஸ்சியா பலவீனமாக்கிய விடயத்திலேயே எனது நேட்டோ தொடர்பான சந்தேகம் உள்ளது.
  22. உலகத்தின் மிக வேகமான இந்தியன் எனும் ஒரு படம் வெளியாகியிருந்தது, அது ஒரு நியுசிலாந்து நபரின் கதையினை கூறும் படம், அவர் அமெரிக்காவிற்கு கார்? பந்தயத்திற்காக செல்வார், அங்கு ஒரு காரை வாங்கி அதனை தவறான பாதையில் செலுத்துவார் அதனால் ஏற்பட இருந்த விபத்தினை ஒருவாறு தவிர்த்து விடுவார், அவர் தனது தவறுக்கு காரணம் வீதி முறைமை இரு நாடுகளிலும் வேறு வேறாக இருந்தது என கூற (நியுசிலாந்தில் இடது புற வாகன செலுத்தும் முரைமை) பக்கத்திலிருந்தவர் கூறுவார் நீங்கள் எந்த நாட்டிலும் எந்த முறைமையிலும் வாகனம் செலுத்தலாம் உங்கள் சாரதி இருக்கை வீதியின் மையத்தில் இருக்கவேண்டும் என கூறுவார். உல்கில் இராணுவத்தினரை வெவ்வேறு தளங்கள் வெவ்வேறு வடிவங்களில் மதிப்பிடலாம்; அளவு, பாதீட்டின் செலவீட்டின் அடிப்படையில், மொத்த சனத்தொகை விகிதாசாரத்தில் என எவ்வாறு வேண்டுமானாலும் மதிப்பிடலாம். அடிப்படையில் பெரிய இராணுவம் என்றால் எண்ணிக்கை அதனோடு இணைந்த ஆயுத தளபாடமே கணிக்கப்படும் உதாரனமாக ஒரு குறிப்பிட்ட தொகை கொண்ட இராணுவத்தில் ஒரு சிறிய அணியில் (பிளட்டூன்) எத்தனை இலகு இயந்திரத்துப்பாக்கி, எறிகணை அல்லது உந்து கணை என்பதனை அந்த சிறிய அணியில் உள்ள சிப்பாய்களின் எண்ணிகை அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என கருதுகிறேன். இந்த நிலை ஒவ்வொரு அடுத்த நிலை உயர்வுக்கும் அதற்கேற்ப அதன் கனரக ஆயுதங்கள் கட்டமைப்பினால் உருவாக்கப்படும் இராணுவம் அதன் பலம் தீர்மானிக்கப்படும். பெரிய இராணுவ அமைப்புக்களை கொண்ட ஒரு இராணுவத்தினை சிறிய இராணுவம் தோற்கடிக்க முடியாதா என்றால் முடியும் அதற்கு உத்தியினை காரணமாக கூறலாம், இஸ்ரேல் பலங்கொண்ட எதிரி நாடுகளை தோற்கடிக்க வான் மேலாதிக்கத்தினை பெற தாழ்வாக பறந்து எதிர்களின் இரடார் சாதனங்கலை அழித்தவுடன் எதிரிப்படையின் விமானப்படையினை அழித்து வான் மேலாதிக்கத்தினை பெற்று அதன் மூலம் 6 நாள் போரில் வெற்றி பெற்றது அதே உத்தியினை அமெரிக்கா ஈராக்கிற்கு எதிராக பயன்படுத்தியிருந்தது. நீங்கள் இணையத்தில் தேடல் செய்ததிலிருந்து வளமையான பெரும்பான்மையிலிருந்து சற்று வேறுபட்டுள்ளீர்கள், யதார்த்தத்தினை அறிந்து வைத்திருந்தால் பல வழிகளில் உதவியாயிருக்கும்தானே?😁
  23. பெரும்பாலும் இந்த மீனவர்கள் கூலிக்கு வேலை செய்பவர்கள், இந்த தமிழக அரசியல்வாதிகள்தான் முதலாளிகளாக இருப்பார்கள், இந்த முதலாளிகள் மீன் வளங்களை அழித்து சிறிய மீனவர்களின் வாழ்வாதாரத்தினை கேள்விக்குறியாக்கியமையால் தற்போது கூலிக்கு எல்லை தாண்டி மீன் பிடித்தலில் ஈடுபட்டு இலங்கை கடல் வளத்தினை அழிக்கிறார்கள், இவர்களுடன் சேர்த்து அந்த தமிழக அரசியல்வாதி முதலாளிகளுக்கும் தண்டனை (முதலாளிக்கு அதிக தண்டனை விதித்தால் பிரச்சினை முடிவுக்கு வரலாம்) வழங்கவேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.