Everything posted by vasee
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
நீங்கள் அவுஸ்ரேலியாவில் வசிக்கிறீர்கள் என கருதுகிறேன். நீங்கள் ரியல் எஸ்டேட் முதலீட்டினை குறிப்பிடுகிறீர்கள் என கருதுகிறேன். அவுஸ்ரேலியாவில் வீட்டின் விலை ஒவ்வோரு பத்தாண்டிற்கும் இரட்டிப்பாவதாக கூறுகிறார்கள், அதாவது வருடாந்தர 7% விகித அதிகரிப்பு(10% அல்ல கூட்டு வட்டி அடிப்படையில்). அவுஸ்ரேலிய பணவீக்கம் சராசரியாக 4.75% வீட்டின் தேய்மானம் 2.5%, ஆனாலும் அவுஸ்ரேலியாவில் முதலீட்டு அடிப்படையில் வீடு வாங்கும் போது வீட்டினில் ஏற்படும் நட்டத்தினை உங்களது வருமான வரியில் தள்ளுபடி செய்யமுடியும். இங்கு leverage வருமான அதிகரிப்பினை ஏற்படுத்துகிறது( வங்கியினால் வழங்கப்பட்ட கடன்) உதாரணமாக $700,000 வீட்டினை $140,000 முதலீட்டுடன் வாங்கினால் வங்கியின் $560,000 பெறுமதி 10 வருடத்தில் இரட்டிப்பாகிறது. வீட்டினை விற்கும் போது(12 மாதத்திற்கு பின்னர்) மொத்த பெறுமதியில் 50% மட்டும் வரி செலுத்த வேண்டும். https://moneysmart.gov.au/ இந்த இணைய தளத்தில் உங்களுக்கு தேவையான கணிப்புகளை செய்து கொள்ளலாம் இதன் மூலம் முதலீடு தொடர்பான சந்தேகங்களை சொந்தமாக தீர்த்து கொள்ளலாம். அதனால் ரியல் எஸ்டேட்டில் தனிய முதலிடுவது இலாபமா இல்லையா என்பதனை அறிந்து கொள்ளலாம் என கருதுகிறேன்(இந்த இணையத்தளத்தினை முன்னர் பார்த்த போது அறிய முடிந்தது, தற்போது புதிய மாற்றங்களுடன் உள்ளது இதனை பயன்படுத்தவில்லை). வீட்டு முதலீடு தொடர்பான excel கணிப்பு உள்ளது அதன் காணொளியினை இங்கு பதிகிறேன் ஆர்வமிருந்தால், அதனை பதிவேற்ற முயற்சிக்கிறேன்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
பெரும்பாலும் இணையத்தில் பல காசு செலுத்தி பெறும் ஆலோசனைகள் அல்லது யூர்யூப்பில் உள்ள வர்த்தக ஆலோசகர்கள் இங்கு முதலில் இணைத்த பல வேறுபட்ட உண்மையான ஆலோசகர்களின் கருத்துகளையே பெரும்பாலும் மீள பழைய கள்ளு புதிய மொந்தையில் காசினை பெற்றுகொண்டு வழங்குகிறார்கள். உங்களது கேள்விகளுக்கு பெரும்பாலும் முன்னர் இணைத்த தரவுகளில் விடை இருக்கலாம், அப்படி இல்லாத பட்சத்தில் இங்கு உங்கள் கேள்வியினை பதியுங்கள், அது தொடர்பான தரவுகள் இலவசமாக இணையத்திலிருந்தால் குறிப்பிடுகிறேன். அல்லது கூகிள், சாட் ஜிபிடி போன்றவற்றின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
https://www.portfoliovisualizer.com/ இந்த தளத்தில் நேரடியாக உங்களதுமுதலீட்டு திட்டங்களை கடந்த கால தரவுகளின் அடிப்படையில் பரிசோதிக்கலாம்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
Portfolio Metrics: Sharpe Ratio: -2.324727511499123 Expected Return: 0.00019445305297545915 Standard Deviation: 0.008519513297389742 US Large Cap Stocks (30%) US Small Cap Stocks (10%) International Developed Market Stocks (10%) Emerging Market Stocks (10%) Inflation-Protected Bonds (TIPS) (15%) Real Estate Investment Trusts (REITs) (15%) Commodities (5%) Cash or Cash Equivalents (5%) சில மாற்றங்களுடன் 10 வருட காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை, முடிவினில் மாற்றம் பெரிதாக இல்லை பணமுறிகளில் முதலிடுவது இதனை விட சாதகமான விளைவினை ஏற்படுத்தலாம் என கூறுகிறது. எனது பைதன் புரோகிராமில் ஏதாவது தவறு இருக்குமா? எனும் சந்தேகம் (கணித்தல் தொடர்பில்) வலுக்கிறது, நேரம் கிடைக்கும் போது இதனை excel செய்ய முயற்சிக்கிறேன்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
முதலீடு நீண்டகால அடிப்படை கொண்டது என்பதால் 10 வருடத்திற்கு ஆன பரிசோதனை முடிவுகள் உள்ளது. இதில் Sharp ratio risk free rate 2% விகிதத்தில் கணிக்கப்பட்டுள்ளது(10 வருட அவுஸ்ரேலியாஅரச பணமுறி 3.26%). Portfolio இலாபத்தினை ஈட்டினாலும் எதிர் மறை Sharp ratio பணமுறிகளில் முதலிடுவது இந்த முதலீட்டினை விட பாதுகாப்பானதும் இலாபமுமானது என கூறுகிறது. இதில் Dividend உள்ளடக்கப்படவில்லை.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
CADJPY வர்த்தகத்தினை மூடிவிட்டேன். Modern Portfolio Theory இல் குறிப்பிட்ட 7 Asset class 12 மாத தரவுகளின் பரிசோதனை முடிவுகள் உள்ளது(11.04.2022 - 11.04.2023). portfolio நட்டமடைகிறது. Standard deviation மட்டும் குறைந்தளவிலான நட்டம் ஏற்படுகிற அமைப்பில் காணப்படுகிறது(less volatility), அதனை தவிர இந்த முதலீடு பாதகமான முதலீடு.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
2007 அமெரிக்க பொருளாதார சரிவிற்கு காரணமான வீட்டு கடன் செலுத்த முடியாமல் போகப்போவதை 2 வருடங்களுக்கு முன்னரே கணித்த மைக்கல் பரி வ்பிட் கொயின் 2021 மாசியில் விலை அப்போதைய அதி உச்ச விலையினை தொட்டிருந்த போது பிட் கொயினின் எதிர்காலத்தினை கணித்துள்ளார்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
கிரிப்டோவினை அமெரிக்க அரசு தடை செய்ய போகிறது எனும் கருத்து (வதந்தி) நிலவுகிறது. அமெரிக்க அரசு தனது பணத்தின் டிஜிட்டல் வடிவில் வெளியிட உள்ளதாகவும் இது சீன டிஜிட்டல் நாணயத்தினை போல முடிவு திகதி உள்ளது எனவும் கூறுகிறார்கள் (சேமிக்க முடியாது ஆனால் வேறு முதலீட்டு வடிவம் மூலம் சேமிக்கலாம்). Elizabeth Warren எனும் செனட்டர் கிரிப்டோவிற்கெதிராக பெரியளவில் பரப்புரையினை ஆரம்பித்துள்ளார் என அமெரிக்க ஊடகங்கள் அறிவிக்கின்றன. https://www.forbes.com/sites/digital-assets/2023/03/30/elizabeth-warren-is-building-an-anti-crypto-army-feeding-serious-us-bitcoin-ban-warnings/?sh=3635bc9671f6 கிரிப்டோ முடிவுக்கு வருமா? அமெரிக்க நாணயம் உலகளவில் பலம் இழந்துவரும் நிலையில் அதற்கு மாற்றீடாக வேறுநாட்டு நாணயங்களை விட பிட் கொயின் சிறந்த தெரிவாக (அதன் தொகையில் மாற்றம் ஏற்படாது மற்ற கிரிப்டோக்களில் ஒரு நாட்டு நாணயம் போல எண்ணிக்கை அதிகரிக்காது என கூறப்படுகிறது - யாராவது இதனை உறுதிப்படுத்த முடியுமா?) இருப்பதனால் பொதுவாக அனைத்து கிரிப்டோவையும் அமெரிக்க அரசு தடை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இதன் உண்மைதன்மையினை யாராவது தெளிவுபடுத்தவும். Nancy Pelosi இன் பங்கு சந்தை நடவடிக்கைகள் கீழே உள்ள லிங்கில் உள்ளது இது தாமதமாகவே அறியப்படுத்தப்படுகிறது (மிக பெரியளவில் செய்ற்படுகிறர்). https://www.capitoltrades.com/politicians/P000197 முன்பு ட்ரம்ப் இனது கீச்சகத்தினூடாக வெள்ளிகிழமை (வாரத்திற்குரிய கடைசி நாள்) ஒரு கருத்தினையும் பின்னர் திங்கள் கிழமை அந்த கருத்திலிருந்து பின்வாங்குதல் போன்ற செயற்பாடோ தெரியவில்லை(Bull and Bear trap). யாழ்கள உறவுகளே உங்கள் கருத்துகளை பதியுங்கள். பிட் கொயின் 32900 சென்றால் வாங்கவும் 32880 தொடாமல் கீழிறங்கினால் விற்கவும் தீர்மானித்துள்ளேன். தற்போது CADJPY கடந்த வியாழக்கிழமை 97.308 இல் வாங்கியிருந்தேன் 99.230 இல் வெளியேற தீர்மானித்துள்ளேன் 4 மணி நேர வரைபடம் மூலம் எலியட் அலை நாலாவது அலையில் வாங்கியுள்ளேன் அத்துடன் முக்கிய வலயத்தில் வாங்கியுள்ளேன் பின்னர் அதன் வரைபடத்தினை பதிவேற்றுகிறேன்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
அமிர்தலிங்கம் ஜே ஆரிற்கு ஏற்ப சாதுரியமாக நடந்துள்ளார், இதுவரை காலமும் இவர் தொடர்பாக அறியாமையினால் கொண்டிருந்த தோற்றபாட்டிலிருந்து வித்தியாசமாக உணரமுடிகிறது.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
ETF Allocation Price Qty Cost C/Price Balance US Large Cap Stocks SPY 40% 376.56 10.62248 4000 409.2 4346.718 US Small Cap Stocks IWM 10% 169.05 5.91541 1000 173.93 1028.867 International Developed Market Stocks EFA 15% 61.71 24.30724 1500 71.92 1748.177 Emerging Market Stocks EEM 5% 39.62 12.61989 500 39.37 496.845 US Corporate Bonds LQD 15% 110.61 13.56116 1500 110.29 1495.66 US Government Bonds IEF 10% 103.12 9.69744 1000 100.47 974.3018 Cash or Cash Equivalents BSV 5% 77.01 6.492663 500 76.75 498.3119 100% 10000 10588.88 8 Months 5.88 1 Year 7.84 Inflation 5 Inflation-adjusted return (Yearly) 2.84 கடந்த நிதியாண்டு ஆரம்பத்திலிருந்து தற்போதுவரை கணிக்கப்பட்டுள்ளது 8 மாதகாலத்தில் 5.88 விகித அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதனை ஒரு முழு ஆண்டிற்கு கணித்தால் 7.84% அதிகரிப்பு அதில் அமெரிக்க தற்போதய பணவீக்கம் ஆன 5% புறந்தள்ளினால் 2.84% வருமானம் உள்ளது, இதில் வாங்கும் விலைகள் (5$ * 7 = $35) தவிர்த்தால் தேறிய இலாபமாக வெறும் 2.37% வரும். மிகவும் குறைவான வருமானம் வரும் ஆனால் எந்த வித முயற்சியுமற்ற வங்கியில் முதலீடு போன்றது(வங்கி வட்டியினை விட் அதிக வருமானம்). பெரியளவில் ஆபத்தில்லாத அதே நேரம் மிகவும் குறைவான வருமானம்.
-
அந்தக் கண்கள்- நிழலி
உண்மையான கருத்து, நிழலி உங்களுக்கு whiplash ஏற்படவில்லையா? பொதுவாக வாகனவிபத்தில் ஈடுபடுவர்கள் அதிர்ச்சியில் என்ன நடந்தது என்பதனை மறந்துவிடுவார்கள், எனது காரில் மோதியவர்கள் பெரும்பாலும் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்ததை அவதானித்துள்ளேன். அவர்களை முதலில் அணுகி அவர்களுக்கு ஏதேனும் பாதிப்புள்ளதா என்பதை தெரிந்து கொள்வதும் பின்னர் அவர்களை மனரீதியாக தேற்றுவதும் உண்டு, அதில் பெரும்பாலும் தாம் தவறு செய்துவிட்டோம் என்பதாக தேவையில்லாமல் கவலைப்படுவதனை அவதானித்திறுக்கிறேன்(வாகனத்தினை தவிர மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமலேயே). நிட்சய்மாக இந்த சம்பவத்தில் நீங்கள் செயற்பட்ட விதத்தில் எந்த தவறும் இருப்பதாக நான் நினைக்கவில்லை, அவசர எண்ணிற்கு நீங்கள் அழைக்கவில்லை என்று வருந்த வேண்டிய அவசியமில்லை, உங்களது கார் முன்னால் சென்றதாலேயே அந்த இளைஞ்சன் தற்போது உயிருடன் உள்ளான் என்ற உண்மையினை நினைத்து பாருங்கள்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
ஒரு காலத்தில் இலங்கையின் வலது சாரி அரசு(UNP) போல தற்போது இந்திய அரசு(BJP) இயங்குகிறது (சிறுபான்மையினரின் மீதான வன்முறையினை அரசியல் இலாபத்திற்காக தூண்டுவது).
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
கடஞ்சா, காணொளி ஓரளவிற்கு முக்கால் பங்கு பார்த்துவிட்டேன் (தொடர்ந்து பார்க்க ஆர்வம் இல்லை). Modern portfolio theory and investment analysis எனும் புத்தகம் இணையத்தில் இலவசமாகவும் வாசிக்கலாம் என நினைக்கிறேன் (754 பக்கங்கள்). அத்துடன் சில யுரியூப் காணொளிகளில் அதனை பைதனின் உதவியுடன் Back test செய்யலாம். 1. Expected return 2. Risk - standard deviation 3. Diversification - co-relation analysis 4. Efficient frontier 5. Optimal portfolio 6. Capital asset pricing model இவை அனைத்தும் Excel இல் manual ஆக் செய்யலாம் ஆனால் பைதன் உபயோகித்தால் தானியங்கியாக செய்ய முடியும் (பைதன் இலகுவாக இருக்கும் என கருதுகிறேன்) Howard bandy இந்த வகை முதலீடுகள் இறந்துவிட்டது என கூறுகிறார்(Portfolio). ஆனால் manage fund இவ்வாறான முதலீடுகளே செய்கின்றன. நேரம் கிடைக்கும் போது பைதனில் இந்த மாதிரியினை உருவாக்கி அதனை யாழில் பதிகிறேன்(உறுதியாக கூற முடியாது அதிகரித்த வேலை பளுகாரணமாக).
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
- பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
நன்றி கடஞ்சா, வருகைக்கும் பதிவிற்கும். என்னை பொறுத்தவரை பங்குகள், ரியல் எஸ்டேட், பொண்ட் இப்போது சரியான முதலீடு அல்ல என கருதுகிறேன். நான் கூறவந்த விடயம் தற்போதுள்ள சூழ்நிலையில் அதிகரித்த பணவீக்கம் வட்ட்டி விகித அதிகரிப்பு பங்கு சந்தையில் Capital gain, dividend என்பன பாதிப்புள்ளாகும் அதே வேளை Bond சாத்கமான முதலீடு அல்ல அமெரிக்க டொலரினை Bearish market condition இயற்கையாக தங்கம் கிரிப்டோகளின் விலை இயல்பாக உயரும் என. நீங்கள் இணைத்த காணொளியில் இவர் கூறும் விடயம் Modern Portfolio Theory (MPT) காணொளியினை முழுமையாக பார்க்கவில்லை ஆரம்பம் மட்டுமே பார்த்துள்ளேன் பின்னர் பார்த்துவிட்டு கருத்தெழுதுகிறேன். இது தொடர்பாகவும் Asset allocation in MPT தொடர்பாக மாதிரி Portfolio game விளையாட்டாக அதே நேரம் இவற்றில் உள்ள விடயங்களை மெதுவாக கூறுவதற்கு தற்போது நடைபெறும் யாழ்கள ஐ பி எல் போட்டி போல முதலீட்டு விளையாட்டினை ஆரம்பிக்க விரும்பியிருந்தேன் ஆனால் ஒருவரும் ஆர்வம் காட்டாமையால் விடுபட்டு போய் விட்டது. MPT 1. Expected return - historical return, Dividend discount model, Capital asset pricing, Discount cash flow, Arbitrage pricing theory 2. Risk - standard deviation 3. diversification அந்த முதலீட்டு வியாபாரத்தில் index ETF allocation beta மாதிரிகளின் அடிப்படையில் portfolio இல் துறைசாரடிப்படையில் பங்குகளை கொண்ட மாதிரி portfolio உருவாக்குவது ஒவ்வொருவரது portfolio ஒவ்வொரு வாரமும் மாதாந்தமும் எவ்வாறு செயற்படுகிறது என்பதாக அந்த முதலீட்டு விளையாட்டு இருந்தது. சில excell spread sheet உருவாக்கி அதனுடன் எவ்வாறு செயற்படுவது என்பதான காணொளியும் பதிந்திருந்தேன். beta என்பது சந்தைக்கும் நீங்கள் கொண்டுள்ள முதலீடுகளுக்கும் உள்ள தொடர்பு விகிதம்.- பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
பிட் கொயின், தங்கம் தற்போது நிலவிவரும் பூகோள அரசியலால் அமெரிக்க டொலரின் எதிர்காலம் கேள்விக்குறியாகவுள்ள நிலையில் இந்த பிட் கொயின், தங்கம் என்பவற்றில் முதலிடுவது (வாங்குவது) நல்லதா? யாழ்கள் உறவுகளே உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
சிங்கள இராணுவத்தினர் 1983 பின்னரான காலகட்டங்களில், சாதாரண நூலகங்கள் பலவற்றினை எரித்தது கூட ஒரு திட்ட மிட்ட செயற்பாட்டினடிப்படையில் என புரிகிறது. அப்படியானால் தமிழாரது கல்வியினை பார்த்து சிங்களம் அச்சம் கொள்கிற நிலை உள்ளது என்பதினை காணமுடிகிறது, (பொதுவாக கல்வி தொடர்பாக இதுவரை எனக்கு பெரியளவில் நன்மதிப்பு இருந்திருக்கவில்லை) இந்த தொடரினை தற்போது எப்போது அடுத்த பதிவு வரும் என ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்து படிக்கும் ஒரு சுவாரசியாமான பதிவாகவும் அதே வேளை வரலாற்றினை சமரசமின்றி கூறும் பதிவாகவும் உள்ளது. நன்றி ரஞ்சித், உங்களது முயற்சிக்கு.- புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
புட்டின் என்பதற்கு பதில் பிட்டு என்று பதிந்திருந்தால் இந்த பக்கம் வந்திருக்க மாட்டேன்.- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தந்தை செல்வா நல்ல ஒரு அரசியல்வாதி என்பதனால் எந்த பிரச்சினையும் இருக்கவில்லை.- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
நல்ல ஒரு முக்கிய வரலாற்றினை ஆவணப்படுத்துகின்ற உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது, தொட்ருங்கள்...- விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
நன்றி.- விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
வெளிநாடு வந்த ஆரம்பத்தில் ஆங்கில அறிவினை வளர்ப்பதற்காக இலகு நடையில் உள்ள ஆங்கில புத்தகங்கள் வாசிப்பதுண்டு, மேலே உள்ள நாவலின் சிறுகதை வடிவ புத்தகம் வாசித்திருந்தேன். ஆபத்து வரும்போது மனிதர்களோ மிருகமோ ஒரே மாதிரியே சிந்திக்கிறார்கள், ஒன்று எதிர்த்து போரிடுவது அல்லது தப்பி ஓடுவது, இந்த கதையில் தனது எஜமானியினை விபத்திலிருந்து காக்க குதிரை புகையிரதத்துடன் போரிட முடிவு செய்கிறது (அது தன் அறிவிற்கேற்ப). அந்த விபத்தின் பின் அந்த குதிரையும் அந்த மனிதர்களும் அடிப்படையில்லாமல் கோபமுள்ள முரட்டு மனிதர்களாகவும், குதிரையாகவும் மாறிவிடுகிறார்கள். சில மனிதர்கள் வெறுப்புணர்வுடன் எப்பொதும் இருந்தால் அவர்கள் மனதிலும் இவ்வாறான காயங்களே அவர்கள் இவ்வாறு மாறுவதற்கு காரணம் என்பதனை இந்த புத்தகத்தினை வாசித்ததின் பின்னர் உணர்ந்துகொண்டேன்.- விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
ம்- விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
நீங்கள் எனது கேள்வியினை தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் என கருதுகிறேன், வேலையிடத்து விபத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நிறுவனம் மீண்ட்டும் பணி புரிய ஆரம்பிக்கும் வரை சம்பளத்தில் 80% மட்டும் வேலை செய்ய முடியாதகாலத்தில் வழங்கும். பாதிக்கப்பட்டவரின் மருத்துவ செலவுகள் மற்றும் இந்த 80% சம்பளத்தினை காப்புறுதி நிறுவனம் பொறுப்பேற்கும். பின்னர் அது தனது காப்புறுதி பிரிமியத்தினை உயர்த்தும், இதனை நிறுவனங்கள் விரும்பாது அதனால் விபத்தினை ஏற்படுத்தினவரினை எதிர்காலத்தில் வேலையினை விட்டு தூக்க விரும்பும். இதனை அறியும் நோகில்தான் கேட்டேன். நீங்கள் தவறாக புரிந்து கொண்டுவிட்டீர்கள், அது உங்களது தவறல்ல. இதனை Perception என கூறுவார்கள். கண்ணன் துரியோதனிடம் உலகை சுற்றி பார்த்து விட்டு வருமாறு கூறினாராம், துரியோதனனும் உலகை சுற்றி பார்த்துவிட்டு வந்து உலகம் முழுக்க அயோக்கியர்களாக உள்ளார்கள் என கூறினாராம். கண்ணன் தர்மனிடம் உலகை பார்த்துவிட்டு வந்து உலகு எவ்வாறு உள்ளது என கூற சொன்னார் அதே போல் உலகை சுற்றி பார்த்து விட்டு வந்த தர்மன், உலகில் தர்மம் மேலோங்கியுள்ளது என்றாராம்.- விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
எனக்கு சட்டம் தெரியாது, ஆனால் இது ஒரு பாரதூரமான குற்றம் என நினைக்கிறேன் (crime negligence). அவர் மீது வழக்கு தாக்கல் செய்யாமல் விட்டு விட்டமையால் அவர் தப்பித்தார் என நினைக்கிறேன், நீங்கள் மிகவும் நல்ல மனிதராக இருக்கிறீர்கள், உங்களது குடும்பத்தினரும் தான். உங்களுக்கு வேலையிலிருந்து நட்ட ஈடு கிடைக்கவில்லையா?(சரியாக தெரியவில்லை எனது கருத்து தவறாக இருக்கலாம்), - பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.