Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

vasee

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by vasee

  1. சில சமூகங்களிலும் குறிப்பாக எமது சமூகத்தில் முன்பு இவ்வாறு இருந்துள்ளதுதானே.
  2. மன்னிக்கவும் கோசான், நான் உங்கள் பதிவிற்கு பதிலளிக்காமைக்கு. எனது சந்தேகத்தினை நீங்கள் உண்மையாக உணர்ந்திருக்கவில்லை என்பதனை தற்போது உணருகிறேன், ஆனால் நீங்கள் வேணுமென்றே கருத்தினை திசை திருப்புவதாக நானாக ஒரு முடிவுக்கு வந்து கருத்தாடலை முடித்துவிடலாம் என்று விட்டு விட்டேன், பின்னர் ஜஸ்ரினது கருத்தினை பார்த்த பின்னர்தான் உண்மையில் பூடகமாக கூறியது தவறோ எனும் சந்தேகத்தினை உருவாகியது. அமெரிக்க தற்போதய கடன் 122% மொத்த உள்நாட்டு வருமானத்தில் உள்ளது. https://www.presidency.ucsb.edu/statistics/data/federal-budget-receipts-and-outlays https://www.macrotrends.net/countries/USA/united-states/gdp-gross-domestic-product#:~:text=U.S. gdp for 2022 was,a 4.13% increase from 2018. https://www.investopedia.com/us-national-debt-by-year-7499291 மேலே உள்ள இணைய தளங்கள் உள்ளடங்கலாக இணையதளங்களில் இருந்து பெறப்பட்ட தகவலினடிப்படையில் எதிர்பார்ப்பு கடன் தொகையான 240% (GDP) அடைவதற்கு 16 ஆண்டுகள் எடுக்கும் (2039). இதற்கு பயன்படுத்திய தரவு தற்போதய கடன் 122$ (GDP) பாதீட்டில் துண்டுவிழும் தொகை அதிகரிப்பு 23% (கடந்த ஆண்டு செப்டெம்பரில் இருந்து இந்த ஆண்டு ஒக்டோபர் வரையான காலம்) பொருளாதார வளர்ச்சி விகிதம் 3%. முக்கிய பிரச்சினை பாதீட்டில் துண்டுவிழும் தொகையின் விகிதம் ஆகும், அண்மையில் பைடன் 2 ரில்லியன் வருமான அதிகரிப்பினை மேற்கொள்வதற்காக உயர்வருமானம் பெறுவோர்களின் மீதான அதிக வருமான வரிவிதிப்பு, மற்றும் நிறுவனங்களின் மீதான வரிவிதிப்பு (மொத்த வரிவருமானத்தில் 49% தனிநபர் வரியில் இருந்து வருமானம் பெறும் அமெரிக்க அரசு, நிறுவனங்களின் வரி விதிப்பின் மூலம் வெறும்10% க்கும் சற்று குறைவான அளவிலேயே வரிவருமானம் பெறுகிறது). அமெரிக்க அரசு எதிம்கொள்ளும் பிரச்சினையினை உணர்ந்துள்ளதாலேயே 4.44 ரில்லியன் வருமானத்தினை 6.44 ரில்லியனுக்கு உயர்த்த முனைகிறது, இதன் மூலம் அமெரிக்க அரச தரப்பு தாம் எதிகொள்ளும் ஆபாயத்தினை உணர்ந்துள்ளது. முன்பு (கிட்டதட்ட ஒரு வருடத்திற்கு முன்பு இரஸ்சிய உக்கிரேன் போர் திரிகளில் ஒன்று நாம் விவாதித்து கொண்ட) கீன்ஸின் தத்துவார்த்ததின் அடிப்படையில் 1930 களில் தோன்றிய புதிய திட்டம் அமெரிக்க சாம்ராஜ்ஜித்தினை உருவாக்க உதவியது போல மீண்டும் செயல்படுத்தப்படவேண்டும். கல்வி கடன் விவகாரத்தில் 300 பில்லியன் வருமான இழப்பு ஏற்படவில்லை என நோக்குவது ஒரு குறுகியகால தீர்வாகும், நீண்ட காலத்தில் இது ஒரு எதிர்வினையாற்றும் என கருதுகிறேன் (தவறாக இருக்கலாம்). வரி விகித அதிகரிப்பு பொருளாதார வளர்ச்சியினை பாதிக்கும், அரசின்நிதிக்கொள்கையினை(Fiscal policy) பாதிக்கும். இத்தகைய சமூக, பொருளாதார பிரச்சினையினை அமெரிக்க அரசு எவ்வாறு எதிர்கொள்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.
  3. இந்த யுத்தமும் நீண்டு செல்லும் யுத்தம் ஆகும் என கூறுகிறார்கள், இதனால் பாதிப்படைவது மக்கள்தான். 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு எல்லா கண்டங்களும் ஒன்றான மிக பெரிய ஒரே நிலப்பரப்பாக இருந்ததாக கூறுகிறார்கள், இதில் யார் முதலில் இருந்தார்கள் என்ற கேள்வியே அடிபட்டு போய்விடுகிறது. அப்படி ஒன்றாக நிலம் இருந்தாலும் பிராந்திய சண்டை ஓயாது ஏனெனில் மிருகங்களிடையே தற்போதும் பிராந்திய சண்டை உள்ளது, அதற்கு காரணங்கள் கூறலாம் ஆனால் குதிரை பந்தயம் போல் அணி பிரிந்து மக்களை கொல்லும் செயல்களை எப்படி நியாப்படுத்துகிறார்கள். மிருகங்களில் கூட ஆண் மிருகம்தான் இந்த பிராந்திய சண்டைக்கு காரணம், நாடுகளில் அரசியலில் ஆண்களை நீக்கினால் ஏதாவது உலக மாற்றம் ஏற்படுமோ தெரியவில்லை, சில காலாவதியான மதங்கள் சமூகங்கள் பெண்கள் கல்வியினை தடுப்பதன் காரணம் இவ்வாறான பிற்போக்கு சிந்தனை தொடர வேண்டும் என்பதற்காகவோ தெரியவில்லை, ஒரு பெண் படித்தால் அந்த குடும்பம் நன்மை பெறும் இப்படி அனைத்து பெண்களும் படித்தால் சமூகம் நன்மை பெறும், பின் தமக்கு வேலை இருக்காது என்பதால் தடுக்கிறார்கள்.
  4. நான் கூறவந்த விடயம் அமெரிக்கா போரை முடித்துவிட விரும்பவில்லையோ என்பதைத்தான். அதற்கு காரணம் ஐரோப்பாவின் விளிம்பில் போரை தொடர்வதன் மூலம் பொருளாதார உறுதித்தன்மையினை சிதைப்பதற்காக இருக்கலாம், ஏனெனில் புவியியல், பொருளாதார, வரலாற்று ரீதியாக ஐரோப்பா ஒரு முதலாவது அதிகாரப்போட்டியாளர். மற்றது நீங்கள் கூறுவது போல அமெரிக்கா இருக்கும், ஆனால் தற்போதய நிலை போலில்லாமல் இரண்டாம் உலக யுத்தத்தின் பின் இருக்கும் பிரித்தானியா போல் என கருதுகிறேன் (இலக்கங்கள் அவ்வாறுதான் கூறுகின்றன). அமெரிக்கா உள்நாட்டில் சமூக சேவை, மருத்துவ, கல்வி செலவீட்டினை மட்டுபடுத்துவதாக கேள்விப்பட்டேன், அதாவது உயர் வருமானத்தில் உள்ளவர்களின் நிலை பரவாயில்லை ஆனால் குறைந்த வருமானம் பெறும் மக்கள் நிலை கடினம், கல்வி ஒரு நாட்டிற்கு எவ்வளவு அவசியம் மாணவ கடனை தளர்வு செய்யும் வழக்குகள் மில்லியன் கணக்கான டொலரிற்காக தள்ளுபடி செய்யப்படுகின்ற நிலையினை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்? என்னை பொறுத்தவரை ஒரு அழிவின் ஆரம்பமாக பார்க்கிறேன். தற்போதிருக்கும் உலக மேலாதிக்கம் அமெரிக்காவினை விட்டு தானாக போய்விடும், அதனால் அமெரிக்காவிற்கு பெரிதாக இழப்பு இருக்கும் என நான் நம்பவில்லை.
  5. நீங்கள் கூறுவதும் சரிதான், ஆனால் எமது போராட்டம் ஒழிக்கப்படுவதற்கு காரணம் ஒற்றை உலக ஒழுங்குதான் என்பதனை குறிப்பிட்டிருந்தேன் அதாவது பலச்சமனிலை அற்றநிலை, அது என்ன விலை கொடுத்தாலும் அமைதியினை கொண்டுவருவதுதான் நோக்கமாக இருந்தது. போராட்டத்தின் வெற்றி என்பது புறனிலை தாக்கம் அப்போது அதிகமாக காணப்பட்டிருந்தது, புறச்சூழ்னிலை எந்த தாக்கம் செலுத்தாவிட்டால் போராட்டத்தின் வெற்றியினை போராட்ட அமைப்புகளிலேயே தங்கியிருக்கும் அல்லவா?
  6. நீங்கள் நான் கூறவந்தை தவறாக புரிந்து கொண்டுவிட்டீர்கள் என கருதுகிறேன், எனது சந்தேகம் நீங்கள் கூறுவது போல அமெரிக்காவிற்கு காசு ஒரு பிரச்சினை இல்லை என்பதற்காகவே இஸ்ரேலிற்கு உடனடியாக 100 பில்லியன் கொடுத்தது, அப்படியாயின் இதே தொகையினை உக்கிரேனிற்கு வழங்கியிருந்தால் இரஸ்சியா 87 பில்லியன் ஒதுக்கியிருந்த காலத்தில் 175 பில்லியனை கொண்டு ஒரு இரானுவ மேலாதிக்கதினை உக்கிரேன் ஏற்படுத்தி இரஸ்சியாவினை தொற்கடித்திஉர்க்க முடியுமல்லவா?
  7. இரஸ்சிய - உக்கிரேன் போர் ஆரம்பித்து இதுவரை 75 பில்லியன் உதவி மட்டும் அமெரிக்க செய்துள்ளது(உத்தியோக பூர்வ அறிக்கையின் படி என கருதுகிறேன்) ஆனால் இஸ்ரேலிற்கு உடனடியாக 100 பில்லியனை ஒதுக்கியுள்ளது. இரஸ்சியாவினை அமெரிக்கா அழிப்பதுதான் நோக்கம் என்றால் இரஸ்சிய பாதுகாப்பிற்கு அண்ணளவாக 112 டொலரினை 2024 பாதீட்டில் இரஸ்சியா ஒதுக்க உள்ளதாம், ஏன் அமெரிக்கா ஒரு 200 பில்லியனை உக்கிரேனிற்கு வழங்கி இராணுவ மேலாதிக்கத்தினை உக்கிரேனிற்கு ஏற்படுத்தகூடாது? இது எனது சந்தேகம், உங்களது கருத்து என்ன?
  8. எமது போராட்டம் அழிக்கப்பட்ட காலம் சோவியத் யூனியன் உடைவிற்குபின் பலச்சமனிலை அற்ற ஒற்றை உலக ஒழுங்கு நிலவிய காலத்தில், ஆனால் நிலமை தற்போது மாறிவிட்டது, குறிப்பாக அமெரிக்க போர்க்கப்பல் தொடர்பாக இரஸ்சியாவின் கருத்து. ஒடுக்குமுறைக்குள்ளாகும் பிரிவுகளுக்கு இந்த மாறிவரும் பலதுருவ உலக ஒழுங்கு மீண்டும் பனிபோர் கால உலக ஒழுங்கினை போல ஒரு உவப்பான காலம் ஆகும், ஆனால் உலகில் அமைதியின்மை அதிகரிக்கும் ஆனால் பலவீனமானவர்களின் குரலை அமைதியாக்கி ஒரு மயான தீர்வை ஏற்படுத்துவதிலும் இது சிறப்பானது.
  9. நன்றி விசுகு, ஏன் பலஸ்தீனியர்கள் அடிப்படையில் கடினமானவர்களாகிறார்கள் (பொதுவெளியில் வெளிநாடுகளில் மற்றவர்கள் அவர்களை மோசமானவர்கள் என கூற காரணம்) என்பது புரிகிறது அழிவின் விழிம்பில் இருப்பவர்கள் பல தலைமுறைகளாக இதனை எதி கொள்வதால் இவ்வாறு மாறுகிறார்களோ (உள ரீதியாக) என எண்ண தோன்றுகிறது. இலங்கையில் இருக்கும் போது இரத்தம், மரணம், காயம் இழப்புகள் என்பது வழமையான தின நடைமுறைகளாக வாழ்ந்தபோது நாகர்கோவில்(வடமராட்சி கிழக்கிள்) பாடசாலையில் இலங்கை விமான படை குண்டு வீச்சில் பல குழந்தைகள் கொல்லப்பட்டும் அவயங்களை இழந்து காயப்பட்ட காட்சி இலகுவில் கடந்து போனது ஆனால் சில காலம் வெளிநாட்டில் வாழ்ந்து பிறகு செய்திகளில் குழந்தைகள் விபத்தில் இறந்த செய்திகளை கடந்து போகமுடியாதவாறு மாற்றம் ஏற்பட்டுள்ளதை உணர முடிகிறது. இலங்கையில் சிறுபான்மை சமூகம் ஒன்று எமது நியானமான போராட்டத்தினை எதிர்கின்றார்கள் என்றால் பிழை அவர்களில் இல்லை அவர்களுக்காகவும் போராடுகிறோம் எனும் நிலைப்பாட்டினை உணர்த்த முடியாத எம்மிலேயே தவறுள்ளது. எனது கருத்து யாரையும் குறிப்பிடவில்லை, முன்னய காலத்தில் எனது நிலைப்பாட்டு தவறினை சுட்டும் கருத்து மட்டுமே.
  10. https://news.sky.com/video/exclusive-us-treasury-secretary-speaks-to-sky-news-wilfred-frost-12985530 அமெரிக்க கருவூல செயலாளர் உக்கிரேன் இஸ்ரேலிய யுத்தத்திற்கான செலவீட்டிற்கு முன்னுரிமை என அறிவித்துள்ளார்.
  11. 2030 அல்ல 2033 (10 ஆண்டில்), 2.5% வீத வட்டி அல்ல 2% விகித வட்டி.
  12. ஆம், வேறு திரிகளி உரையாடியுள்ளோம். பிரித்தானியா இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்க முடிவெடுக்க காரணமாக இருந்ததிற்கு காரணமாக கூறப்படுவது, பிரித்தானியா அப்போது அதன் கடன் தொகை GDP இல் 240%, தற்போது அமெரிக்கா 122% GDPஇல் கடனை கொண்டுள்ளது, முன்பு கணிக்கப்பட்ட 5% ஆண்டு கடனதிகரிப்பினடிப்படையில் 31 ரில்லியன் கடனில் (தற்போது 33 ரில்லியன்) 50.3 ரில்லியன் கடன் 10 ஆண்டுகளில் ஏற்படும், தற்போது அமெரிக்க பொருளாதார வளர்ச்சி ஆண்டொன்றிற்கு சராசரியாக 5% என்றால் 10 ஆண்டுகளில் கிட்டதட்ட 37.7 ரில்லியன். ஆனால் தற்போது 2.1% பொருளாதார வளர்ச்சி 28.4 ரில்லியன் பொருளாதாரம், தற்போது பணமுறி வட்டி விகிதம் 5.95% வரை அதிகரித்துள்ளது, சராசரி கடனுக்கான வட்டி யாக 2.95% தற்போது செலுத்துகிறது, புதிய கடன் வட்டி 5% மேலாக அதிகரிக்க வாய்ப்புள்ளது இதனை கருத்தில் கொள்ளும் போது 10 வருடங்களில் இரண்டாம் உலக போரின் பின்னரான காலத்தில் பிரித்தானியாவின் நிலை அதாவது பொருளாதாரத்தினை விட 2 மடங்கு அதிகமான கடனினை உள்ள நாடாக அமெரிக்கா மாறிவிடும். நீங்கள் கூறுவது போல உக்கிரேனிற்கான 100 அல்லது 200 பில்லியன் செலவு என்பது அமெரிக்காவினை பொறுத்தவரை ஒன்றுமில்லை ஆனால், அமெரிக்க பொருளாதார கொள்கைக்கும் இராஜதந்திர கொள்கைக்குமிடையேயான முரண் பொருளாதார நலிவினை துரிதமாக்குகிறது, எதிர்காலத்தில் தற்போதய அமெரிக்க ஏகாதிபத்தியம் இல்லாமல் போவதற்கு காரணமாகும். இதனை தவிர்க்க வேண்டுமாயின் அதிகரித்த இராணுவ செலவீட்டினை கட்டாயம் மட்டுப்படுத்தியே ஆகவேண்டும் குறிப்பாக பல நாடுகளில் உள்ள தளங்களை உடனடியாக மூடவேண்டும்,மற்றது டொலரினை ஆயுதமாக பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும், மூன்றாவது பொருளாதார வளர்ச்சியினை தூண்டுவது, மூன்றாவது முதல் இரண்டிலும் தங்கியுள்ளதுடன் அரசின் பொருளாதார கொள்கையிலும் தங்கியுள்ளது. என கருதுகிறேன் எனது கருத்து தவறாக இருக்கலாம்.
  13. உக்கிரேனிற்கான மேற்கின் முழுமையான நிதி உதவி நின்றால் எனவே புட்டின் குறிப்பிட்டதாக கருதுகிறேன். உக்கிரேனது நாளொன்றிற்கான செலவாக் 100 மில்லியன் செலவிடப்படுகிறதாக உக்கிரேன் கூறுகிறது ஆனால் அந்த தொகை 200 மில்லியனுக்கு கூடுதலாக உள்ளதாக அண்மையில் எங்கோ வாசித்த நினைவு. https://kyivindependent.com/reznikov-russias-war-costs-ukraine-100-million-daily/#:~:text=Ukraine spends around %24100 million,state-run media outlet Ukrinform. உக்கிரேனின் பொருளாதாரம் 200 பில்லியன் பொருளாதாரம், அதாவது நாளொன்றிற்கு 1% தனது GDP இல் செலவு செய்தாக வேண்டும். தற்போது தனது GDP இல் 70% கடனை கொண்டுள்ளது, உக்கிரேனின் வட்டி விகிதம் 18% விகிதத்திற்கு சற்று கூடுதலாக உள்ளது. இந்த நிலவரங்களை வைத்து பார்க்கும் போது உக்கிரேன் மேற்கின் உதவிகள் நிறுத்தப்படுமாயின் தற்போது போல போரினை தொடர முடியாது எனவே கருதுகிறேன். மறுவளமாக எவ்வளவு காலம் இரஸ்சியா இந்த போரினை தாக்குபிடிக்கும்? இரஸ்சிய பொருளாதாரம் ஏறத்தாழ 1 ரில்லியன் என கருதுகிறேன் , அதன் கடன் 20% GDP இல் உள்ளது, வட்டி விகிதம் ஏறத்தாழ 13% அதன் பாதுகாப்பு செலவு 87 பில்லியன், இரண்டு வருட காலம் தொடர்ந்து போரினை தொடர்ந்தால் தற்போதுள்ள கடன் 30% GDP இல் அதிகரிப்பினை ஏற்படுத்தும், ஏற்கனவே தனது இருப்பில் உள்ள தங்கத்தினை இரஸ்சியா விற்றதாக கூறப்பட்டது(அளவு தெரியவில்லை). இரஸ்சியாவின் சேமிப்பு முழுமையாக இல்லாவிட்டாலும் மேலும் இரண்டு வருடங்களுக்கு அதனால் தற்போதுள்ள சூழ்நிலையின்படி ( பெற்றோல் விலை அதிகரிப்பு, பலனற்ற பொருளாதார தடை) எந்த வித பிரச்சினையுமின்றி போரினை தொடரமுடியும். பெற்றோலின் விலையினை சரிப்பதற்காக அமெரிக்கா மத்திய கிழக்கில் உற்பத்தியினை அதிகரிக்க கூறிய உத்தரவினை மத்திய கிழக்கு நாடுகள் அலட்சியம் செய்தமையினால் அமெரிக்கா தனது இருப்பினுள் இருந்த பெற்றோலினை குறைந்த விலையில் விற்றுவிட்டு தற்போது வெறும் 17 நாள் இருப்பு எனும் ஆபத்தான கட்டத்தில் நிற்கிறது. முன்பு ஒரு திரியில் குறிப்பிட்ட 2030 இல் இரு வேறுபட்ட வட்டி விகிதத்தில் அமெரிக்க கடன் (வட்டி விகிதம்2.5%) 1 ரில்லியன் கடன் வட்டி, அடுத்த வட்டி விகிதம் (5%) 2ரில்லியன் கடன் வட்டி என ஒரு அண்ணளவான கணிப்பினை அந்த இலக்கங்களுடன் குறிப்பிட்ட நினைவுள்ளது. https://www.foxbusiness.com/economy/the-us-paying-record-amount-interest-on-national-debt இந்த தளத்தில் 2032 1.4 ரில்லியன் கடன் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது மொத்த பாதீட்டில் 10% அதிகளவான கடன் வட்டி செலுத்தும் நிலை உருவாகும், ஏற்கனவே அமெரிக்க பணமுறியினை நாடுகள் விற்பதனால் அதன் yeild 5% மேலாக அதிகரித்து விட்டது, பல தடவை ஜெனற் ஜெலன் சீன விஜயம் செய்தும் பணமுறி விற்பனை அதிகரிப்பு குறையவில்லை, இதனை வேறு ஒரு திரியில் அமெரிக்க மத்திய வங்கி 1919 பின் முதல் தடவையாக பண இழப்பை சந்திக்கிறது என குறிப்பிட்ட நினைவுள்ளது. ஒரு கட்டத்தில் அமெரிக்கா விரும்பினாலும் இந்த போரிற்கு உதவிட முடியாது. போரினை சமாதானமாக முடிப்பதே சிறந்தது.
  14. தவறான செய்திகள் x தளத்தில் பரப்பபடுகிறதாக கூறப்படுகிறது.
  15. Jump the creek இனை testing the support என கூறுவார்கள் இந்த Support (0.52)இல் ஒரு தொகுதி speculators வாங்குவார்கள், ஆனால் 0.73 விலை மீறும்போது வாங்குவதுதான் சிறந்த முடிவு (நிகழ்தகவு சாதகமானது).
  16. நான் தற்போது AUDJPY நாணய மட்டுமே வர்த்தகத்தில் ஈடுபடுவதால் மற்ற முதலீட்டு பொருள்களை கவனிப்பதில்லை சில வேளை எனது கணிப்பீடு தவறாக இருக்கலாம். https://www.youtube.com/channel/UCVD_DPF1dSV9kZRuv6ePckg காணொளி கருத்து பகுதியில் எனது வர்த்தக கணக்கினை இனைத்துள்ளேன் அந்த இணையத்தளத்திற்கு சென்று வரைபடத்தினை அழுத்தினால் எனது வாங்கல் விற்றல் நடவடிக்கையினை அவதானிக்கலாம் அத்துடன் முடிந்த வரை வார இறுதியில் எனது தொழில்னுட்ப ஆய்வினை(AUDJPY) காணொளியாக பதிவிடுவேன். விலை தற்போதுள்ள விலையினை விட அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது போலவே உள்ளது, ஆனால் உறுதிபட கூறமுடியாது. எனது கணக்கு இலாப விகிதம் அதிகமாக இருப்பதற்கான காரணம் எனது கணக்கில் 3% ஒவ்வொரு வர்த்தகத்தின் போதும் Risk ஆக பயன்படுத்துகிறேன் இது ஒரு மிகவும் ஆபத்தான முயற்சி, ஆனால் தற்போது உள்ள சிறிய கணக்கினை ஒரு குறிப்பிட்ட தொகைக்கு உயர்த்திய பின் ஆபத்தின் அளவினை குறைத்துவிடுவேன,
  17. 2018 இல் 3.00 ஆரம்பித்து பின்னர் அடிப்படை support 0.28 விலையில் பயணம் செய்து பின்னர் கிரிப்டோக்களின் அதீத வளர்ச்சிக்காலமான கோவிட் காலகட்டத்தில்(2021 ஆரம்ப காலத்தில்) 1.60 எட்டியுள்ளது. பின்னர் மீண்டும் 0.28 support வரை கீழிறங்கி (0.30) தற்போதுள்ள நிலையில் உள்ளது. இதனை தொழினுட்ப ஆய்வடிப்படையில் தெளிவாக கூறுவதாயின் கோவிட் காலத்திலிருந்த விலையின் இறங்குமுகத்தின் தொடர்ச்சி இன்னமும் மாறவில்லை. HH = higher high (Uptrend) HL = higher low (Uptrend) LH = Lower high (Downtrend) LL = Lower low (Downtrend) கோவிட் காலத்திலிருந்து தற்போது வரை Downtrend இலேயே உள்ளது, கடைசி Lower high 0.73, ஆனால் விலை 0.30 இற்கும் 0.52 இடையில் விலை ranging எனும் நிலையில் இந்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து இந்த ஆண்டு நடுப்பகுதி வரை சென்றுள்ளது. இதனை Accumulation என கூறுவார்கள் இந்த ஆண்டு ஜூலை பகுதியில் ஏற்பட்ட 0.73 விகித அதிகரிப்பு மேலே உள்ள வரைபடத்தில் உள்ள Low volume sell off ஆகும் தற்போதுள்ள விலை நிலையினை Jump the creek இணையாக கூறலாம். அடுத்து நிகழ உள்ளது Mark up விலை 0.73 கடக்கும் போது speculators இணைந்து கொள்வார்கள், அதன்பின் விலை சடுதியாக அதிகரிக்கும். இவ்வாறுதான் நிகழும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை ஆனால் அதற்கான வாய்புகள் அதிகம். The three skills of top trading இந்த புத்தகத்தினை இணையத்தில் இலவசமாக வாசிக்கலாம் ( கிட்டதட்ட 100 அவுஸ்ரேலிய காசளவில் வாங்கலாம்) இது ஒரு தத்துவார்த்தமான புத்தகம் மட்டுமே. ஆரம்பத்தில் அவசரமாக எழுதியதால் சரியாக வரைபடத்தினை அவதானிக்கவில்லை. தற்போது 3.00 அதிகபட்ச விலையாக உள்ளது அந்த விலையினை மீறினால் ஒப்பீட்டளவில் நல்ல எதிர்காலம் என கூறலாம்.
  18. தெரியவில்லை, தற்போது மேலோட்டமாக வரைபடத்தினை பார்த்தேன், தற்போதய uptrend line இலிருந்து விலை கீழிறங்கியுள்ளது, இதனை மட்டும் கருத்தில் கொண்டு விலை வீழ்ச்சியடையும் என கூற முடியாது விலை 0.45 விட்டு கீழிறங்கும் போது downtrend (Market structure) ஆரம்பமாகும். தற்போதுள்ள நிலையில் 0.58 resistance, 0.45 support நீண்டகால கணிப்பீடல்ல இது technical analysis அடிப்படையில் கூறப்பட்டது.
  19. intrinsic value என்னவாக இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்?
  20. தொடர்ந்து எழுதுங்கள், நீங்கள் கூறிய அந்த 4% அதிகரிப்பு விலை ஒரு தற்காலிக அதிகரிப்பாகவே இருக்கும், பின்னர் விலை பழைய விலையினை விட குறைவதற்கும் வாய்ப்புள்ளது (பொதுவான நடைமுறை). பெரிய நிதிநிறுவனங்கள் தமது கையிருப்பிலுள்ள பங்குகளை விலை குறையாமல் விற்பதற்கு இந்த நல்ல செய்திகளை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. Buying climax இந்த வரைபடத்தில் விலை மாற்றத்தினை குறிக்கும் Candle ( open price, high price, low price, close price ஆகிய 4 தரவுகலை கொண்ட), Candle நீளம் சிறிதாக இருக்கும் ( குறைந்த அளவு விலை மாற்றம்) ஆனால் கைமாறிய எண்ணிக்கை அதிகமாக இருக்கும் (Volume).
  21. தொடர்ந்து எழுதுங்கள், கோவிட் காலத்தில் உலக நாடுகள் பெரியளவில் quantitative easing ஈடுபட்டமையால் சந்தையில் நிரம்பி வழிந்த காசில் பல முதலீடுகள் asset inflation உருவாக்கி விட்டிருந்திருந்தது, எதில் முதலிட்டாலும் இலாபம் எனும் நிலை உருவாகி அதனால் கிறிப்டோக்களில் ஏற்பட்ட அதிகரிப்பு போல அடுத்த ஒரு வருடத்திற்கு நிகழாது எனவே தோன்றுகிறது. அவுஸ்ரேலியா தனது முதலாவது வட்டி விகித குறைப்பினை எதிர்வரும் ஆண்டு ஆவணி மாதமளவில் ஏற்படுத்தும் என கருதுகிறார்கள், ஆனால் வேலையின்மை விகிதம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது, அத்துடன் தற்போது மேற்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுருக்கம் உழைப்பாளர்களின் ஒரு அலகு உறபத்திக்கான செலவினை அதிகரித்துள்ளது, இது பல நிறுவனந்கள் வேலை நீக்க அதிகரிப்பினை தூண்டும் என கூறப்படுகிறது. இந்த QE மற்றும் QT பயன்படுத்தும் பணமுறி வாங்கல் விற்றல் நடவடிக்கையால் நாடுகளின் மத்திய வங்கிகள் பெரும் இழப்பினை சந்திப்பதாக கூறுகிறார்கள், இது போல 1916 இல் நிகழ்ந்ததாக கூறுகிறார்கள், அதன் தொடர்ச்சியாக பெரும் பொருளாதார பேரிடர் ஏற்பட்டது (இவ்வாறு நிகழும் என எந்த பொருளியல் நிபுணர்களும் இது வரை கூறவில்லை அதனால் இவ்வாறு நிகழ்வதற்கு வாய்ப்பில்லை). இவற்றினை பார்க்கும் போது தற்போது நிகழும் அரசியல் பூகோள சூழ்நிலைகள் மாறாவிட்டால், புதிய முதலீடுகள் ஆபத்தான நிலையிலேயே உள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.