Everything posted by vasee
-
விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
15 மாதத்தின் பின் வளமைக்கு திரும்பியுள்ளீர்கள் சந்தோசம். சில நேரங்களில் நீங்கள் எதிர்பார்ப்பது போல அவரது தவறினை உணர்ந்து கொண்டிருப்பார் என்றில்லை, எதற்கும் கவனத்துடன் அணுகவும். மனித மனம் வித்தியாசமானது, மனதில் ஏற்படும் வலிகளை உணராதிருக்க முயற்சி செய்யும் 1.உளப்பூர்வமாக தான் தவறே செய்திருந்தாலும் தவறு தனது பக்கமல்ல என நினைத்து அதனால் ஏற்படும் வலியினை கடக்க முற்படும். 2.சம்பவத்தினை அப்படியே மறந்து விட்டு விடும். ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இரு வழி பாதை கொண்ட வீதியால் வேலை முடித்து அதிகாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தேன், மழை இருட்டு வேறு; ஒரு வீதி சிக்னலில் எதிர் தரப்பில் வந்த கார்கள் இரண்டு விபத்துகுள்ளாகியிருந்தது. வார இறுதி என்பதால் பெரிதாக வாகனங்கள் வீதியில் இல்லை, அதனால் எதிர் தரப்பில் வந்த 3 வாகனங்கள், விபத்து வாகனங்களை தவிர்ப்பதற்காக நான் செல்லும் பாதையினூடாக வந்தன. அதனை அவதானித்தமையால் எனது வாகனத்தினை சிறிது தொலைவிலேயே நிறுத்திவிட்டேன். கடைசி வாகனம் கடந்த பின் எனது வாகனத்தினை எடுக்க தயாரான போது எங்கிருந்தோ(அதுவரையிலும் எனது பாதையில் ஒரு காரும் வரவில்லை) வந்த கார் எனது காரின் பின் மோதியது. காரினை பக்கத்தில் இருந்த பாதுகாப்பான இடத்தில் நிறுத்தினேன், என்னை பின் தொடர்ந்த அந்த காரும் எனது காரின் பின் நிறுத்தினார், காரில் இருந்து இறங்கி அந்த காரின் உரிமையாளரினை பார்த்து கேட்டேன் உனக்கு ஒரு பிரச்சினையுமில்லையா? அவர் அதிர்ச்சியில் இருந்தார், ஆனாலும் இல்லை எனக்கு எந்த பிரச்சினையுமில்லை, உனக்கு எதுவும் பிரச்சினையா எனக்கேட்டார். ஆனாலும் அவரது பதட்டத்தினை பார்த்து சொன்னேன் விபத்தினால் இருவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. பாதிப்பு வாகனத்திற்குதான், உன்னிடம் காப்புறுதி உள்ளதல்லவா எனக்கேட்டேன், ஆம் என்றார். அதனால் பிரச்சினை இல்லை என கூறிவிட்டு எனது விபரங்களை அவரிடம் கொடுத்து விட்டு அவரது விபரங்களை கோரினேன். அதுவரை என்ன நடந்தது என தெரியாத அவர் என்னிடம் என்ன நடந்தது எனக்கேட்டார், நடந்தவற்றை கூறினேன் அதில் அவருக்கு திருப்தியில்லை, எதற்காக வாகனத்தினை நிறுத்தி வைத்திருந்தாய் என கேள்வியினை திரும்ப திரும்ப கேட்டார், பின்னர் புரிந்து கொண்டேன் அவர் தவறு எனது என்பதாக நிறுவ முயல்கிறார். நீண்டநேர வேலை நித்திரையும் இல்லை, மீண்டும் வேலை ஆரம்பிப்பதற்கு 6 மணித்தியாலமளவில்தான் நேரம் இருந்தமையால், எனக்கு நேரம் இல்லை நான் போகிறேன் என கூறிவிட்டு வந்து விட்டேன், அத்துடன் அவர் பதற்றம் எல்லாம் நீங்கி தன்னை தற்காத்து கொள்ளும் அளவில் நல்ல தெளிவில் இருந்தார். வீட்டிற்கு வந்து குளித்து விட்டு இணையத்தில் வாகன விபத்தினை பதிவு செய்ய தயாராகி கொண்டிருக்கும் போது அவர் தொலைபேசியில் அழைத்தார். நல்ல வேளை உனது காரில் மோதினேன், இல்லாவிட்டால் ஏற்கனவே மற்ற இரண்டு கார் விபத்தினை வீதியின் ஓரமாக பார்த்து கொண்டிருந்த மக்கள் மேல் மோதியிருப்பேன் என்றார்(அவர் எனது காரினை மோதுவதை தவிர்ப்பதற்காக காரினை வீதியின் ஓரமாக திருப்பியிருந்தார்). இந்த தகவலை அவர் அங்கிருந்த மக்களிடம் கேட்டறிந்து கொண்டுள்ளார்(தவறு யார் பக்கம் என அறியும் அவரது முயற்சியில்).
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
நான் வெளிநாடு வருவததென்று நினைத்துகூட பார்த்திருக்கவில்லை, மேற்கு நாட்டிற்கான பயணமாகவும் ஆரம்பிக்கவில்லை, தற்போது மேற்கு நடொன்றில் வாழ்கிறேன், ஆனால் இதுவரை ஒரு தடவை கூட இலங்கைக்கு பயணிக்கவில்லை, அனால் பயணிக்க வேண்டிய தேவைகள் உண்டு. இலங்கையிலிருந்து வெளியேறும் போது திரும்ப இலங்கைக்கு வருவதில்லை எனும் முடிவுடன் வெளியேறியிருந்தாலும், எதிர்காலத்தில் அதில் மாற்றம் ஏற்படலாம்.
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
அவர் ஒரு ஆண், பெண்ணில்லை. அவருக்கு வேலை இழப்பு ஏற்பட்ட போது130000 அவுஸ்ரேலிய பணம் கிடைத்தது என கூறியிருந்தார். நான் நினைக்கிறேன் மேலை நாட்டவர்கள் பாதுகாப்பான வாழ்க்கை வாழ்ந்து சலித்துவிட்டதால் ஒரு சவாலான வாழ்க்கை வாழ முயற்சிக்ககூடும்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
தங்கம் Down trend இல் இருந்தாலும் தங்கத்தினை தற்காலிகமாக 1855 இல் வாங்கியுள்ளேன்(தவறான முடிவு counter trend), stop loss 1849. target 1900. பைதனில் தற்போது உத்தியினை பரிசோதிக்கும் கட்டத்தில் உள்ளது, மென்பொருளினை சரியாக எழுதிவிட்ட பின்பும் அதில் தவறு காட்டுகிறது, அந்த போல்டரினை இன்னொருவருக்கு அனுப்பியிருந்தேன் அவருக்கு சரியாக வேலை செய்கிறது என கூறியுள்ளார், கணனி இயங்கு தள மென்பொருளில் பிரச்சினை உள்ளதோ தெரியவில்லை.
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
கோவிட் காலத்தில் வேலை குறைவாக இருந்த போது தற்காலிகமாக வழங்கல் பிரிவில் வேலை செய்தேன் அப்போது ஒரு அவுஸ்ரேலியருடன் நட்பு ஏற்பட்டது. அவரது வயது 50, அவருக்கு பேர குழந்தையும் உண்டு, வேலை குறைப்பு ஏற்பட்ட போது தாய்லாந்திற்கு குடியேற முயன்றார்; ஆனால் நிரந்தரமாக குடியேற முடியாது 6 மாதகாலத்திற்கு ஒரு முறை விசாவினை புதுப்பிக்க வேண்டும் என கூறியதாக நினைக்கிறேன் (சரியாக நினைவில்லை). அவருக்கு சில உறவினர் அந்த நாட்டில் உள்ளதாக கூறியிருந்தார், அவுஸ்ரேலியாவிற்கு அவர் சிறிய வயதில் பெற்றோருடன் பிரித்தானியாவிலிருந்து வந்து குடியேறியிருந்துள்ளார், வளர்ந்து வரும் நாட்டில் குடியேறுவதற்கான காரணம் வாழ்கை செலவு குறைவு என்ற காரணத்தினை கூறியிருந்தார். தாய்லாந்து சென்று ஒரு மாதத்தில் வாகன விபத்தில் உயிரிழந்துவிட்டார்.
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
பல சமயம் முடிவுகளை எடுக்கும் போது உள்ளுணர்வு அடிப்படையிலேயே எடுக்கிறோம் என கருதுகிறேன்(Herd mentality?). பொருளாதாரம், காலனிலை போன்ற வாழ்வாதாரத்தில் முன்னிற்கும் சில நாடுகளை தவிர்த்து குளிர் நிறைந்த ஒப்பீட்டளவில் பொருளாதார ரீதியில் குறைவான நாடுகளில் ஏன் எம்மவர்கள் அதிகளவில் குடியேறுகின்றனர்? முக்கியமாக பாதுகாப்பு உணர்வு(Native),மற்றது ஒவ்வொருவரது பட்டறிவு(Perception)?
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
நல்ல எழுத்துதிறமை உங்களுக்குள்ளது, தொடருங்கள். பொருள்கள் சேவைகள் பெறும்போது இலங்கையரைவிட வெளிநாட்டவர்களுக்கு அதிகளவில் விலை செலுத்துகின்ற நிலையினை எவ்வாறு பார்க்கிறார்? (இன நிற வேறுபாடு போல அன்னியர்கள் மீதான தாக்குதல் மாதிரியான உணர்வை பெற்றாரா?)
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
இந்த கருத்து தை 20 திகதியில் இட்டிருந்தேன், தங்கம் தொடர்பான எனது அப்போதய அபிப்பிராயமாக இருந்தது, 1900 இனை விலை உடைத்து கீழிறங்கும்போது விற்க தீர்மானித்தேன். தற்போது தங்கத்தினை விற்கும் வர்த்தகம் மட்டும் தற்காலிகமாக செய்யும் எண்ணம் உள்ளது விலை உயரும் போது தங்கத்தினை விற்கவுள்ளேன்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
தங்கம் 1950 விலையினை Re test (Bull trap) செய்து பின்னர் முக்கிய வலயமான 1900 வலயத்தினை விட்டு கீழிறங்கியுள்ளது. விலை 1926 வலயத்தில் குறுகிய வலயத்திற்குள் விற்பனையாகி கொண்டிருந்த போது விலை 1950 அல்லது 1900 இல் உடைத்த பின்பு வர்த்தகம் செய்வது ஒப்பீட்டளவில் சாதகமானது. எதிர் வரும் வாரத்தில் தங்கத்தினை விற்கவுள்ளேன், ஆனால் விலை 1900 மீண்டும் வரும் போது(Test). https://www.tradeguider.com/mtm_251058.pdf Wyckoff வகையான ஆய்வு, இவர்களது தளத்தில் மின்னஞ்சல் பதிவு செய்தால் புதிய புத்தகம் இலவசமாக வழங்குவார்கள், இந்த புத்தகத்தில் உள்ள விடயங்கள்த்தான். இந்த புத்தகம் சுவாரசியமாக இருக்கும் வாசித்து பாருங்கள்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
https://www.freecodecamp.org/ இந்த காணொளியினை வழங்கியவர்களின் இணையத்தளத்தில் இலவச கற்கை நெறிகளும் உண்டு, பலருக்கு உபயோகமாக இருக்கும் என கருதுகிறேன். வலைத்தளம் உருவாக்கல், கணனி விளையாட்டு என பைதன் பல பயன்பாட்டுதன்மை கொண்டது, நீங்கள் கூறுவது போல அதனை ஒரு பாடமாக கற்பிப்பது ஒரு பயனுள்ள விடயம்தான்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
இந்த காணொளியில் மென்பொருள் எழுதுவதற்கு பயன்படுத்தும் pycharm இற்கு பதிலாக python IDLE பயன்படுத்துகிறேன் பைதனை கற்பதற்காக. Forex broker API மென்பொருள் எழுதுவதற்கு juypter notebook பயன்படுத்துகிறேன் (வின்டோஸ் பிரச்சினையினை தவிர்ப்பதற்கு?).
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
நன்றி இணையவன், இந்த யுடுயுப்பில் மிக சுருக்கமாக அதே நேரம் முக்கியமானவற்றை கூறுகிறார். விண்டோசில் பைதன் பயன்படுத்தும்போது சில சிக்கல்களை உணர முடிகிறது லினக்ஸ் இலவச மென்பொருள் மிக சிறந்த என கூறுகிறார்கள். மக் கணனி அடுத்த தெரிவு என கூறுகிறார்கள். விண்டோசில் கொமான்ட் பிரொமில் பைதன் அதனுடன் சம்பந்தப்பட்ட மென்பொருள் உணரமுடியவில்லை, அதனை உறுதிபடுத்திவிட்டு தொடரலாம் (ஆரம்பத்தில் பைதன் 3.11 தரவிறக்கியிருந்தேன் பின்னர் மைக்க்ரோ சொப்ட் ச்டொரில் 3.10 தரவிறக்கியபின் அந்த பிரச்சினை தீர்ந்தது). பைதனை வெறுமனே பாடமாக படிக்காமல் அதனுடன் எமது வேலையினையும் சமநேரத்தில் இனைத்து படித்தால் இலகுவாகக்கற்கலாம் என கருதுகிறேன். இங்கு அவுஸ்ரேலியாவில் Forex broker இல் மிக சிலரே பைதனுக்கான API வசதியினை வழங்குகிறார்கள், சிலர் பெரிய நிறுவனக்களுக்கு மட்டும் அந்த வசதியினை வழங்குகிறார்கள்(Pepperstone). IG, Oanda இரண்டு நிறுவனத்தில் பதிவு செய்துள்ளேன் அதில் Oanda API கிடைத்துவிட்டது, Oanda மாதிரி கணக்கில் ($100000) தானியங்கி வர்த்தகம் செய்வதற்கான தயார்படுத்தலும் முழுமையடையும் நிலையில் உள்ளது. ஆரம்பத்தில் Technical analysis அடிப்படையில் முயற்சி செய்யவும் பின்னர் நீண்டகால அடிப்படையில் Quantitative analysis (பெரிய நிறுவனங்கள் செய்வது போல) அட்டிப்படையில் முயற்சி செய்வதற்கான முயற்சியில் உள்ளேன் அதற்காக இலவசமற்ற சில கற்கை சம்பந்தமான பொருள்கள் வாங்கியுள்ளேன் (economics mathematics). இந்த காணொளியில் மற்ற காணொளிகளை போலல்லாமல் செயல்முறையில் பயிற்றுவிக்கின்றார், அதில் கூறப்படும் விடயங்களை செய்கை முறையில் கற்பதால் பைதன் பயில்வதற்கு இலகுவாக உள்ளது, முன்னனுபவம் இந்த மென் பொருள் துறையில் இல்லை ஆனால் மென்பொருளில் அதன் parameter மாற்றுவது போல சில வேலைகள் செய்த அனுபவம் இருக்கிறது.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
நாணய வர்த்தகத்தினை தானியங்கி வர்த்தகமாக செய்யும் ஒரு எண்ணம் தற்போதுள்ளது, அதனால் மலைபாம்பு கணனி மென்பொருளினை கற்க ஆரம்பித்துள்ளேன் (யூரியுப்பில்தான்) குறைந்த பட்சம் 30 நாள்களாவது எடுக்கும் (சில வேளை பல மாதங்கள் கூட எடுக்கலாம், அதன் பின்னர் ஒரு இரண்டு மாதங்கள் பரீட்சித்த பின்னர் குறைந்த பட்சம் 3 மாதமாவது மாதிரி கணக்கில் வர்த்தகம் செய்யவும் அதன் பின்னர் உணமையான கணக்கில் வர்த்தகம் செய்யதீர்மானித்துள்ளேன். அதனால் குறைந்த பட்சம் 6 மாதகாலமலவில் யாழுக்கு வருவதனை மட்டுப்படுத்தவுள்ளேன், அதன் பின்னர் வழமை போல மீண்டும் யாழில் வருகை தருவதுடன் பதிவும் இடுவேன்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
1921 இல் தங்கத்தினை விற்றிருந்தேன் Stop loss 1929 இனை அடைந்ததால் நட்டத்துடன் வர்த்தகம் மூடப்பட்டது, தங்கம் அடுத்த எதிர்ப்பு வலயத்தில் (Resistance level) 1976 இல் தங்கத்தினை விற்கபோவதில்லை. தங்கம் தொடர்பாக எனது Bearish கண்ணோட்டம் தவறானது என்பதை சந்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக கருதுகிறேன்(குறைந்த பட்சம் தற்காலிகமாகவாவது). Markets are never wrong opinions often are. Back your judgment and don't trust your opinion, until the action of the market itself confirms your opinion - Jesse Livermore 1900 தற்காப்பு வலயம் (Support tested) உறுதி செய்யப்பட்டுள்ளமையால் விலை 1900 கீழிறங்கினாலேயே விற்பது அதிக பாதுகாப்பான வர்த்தகமாக இருக்கும். ஆனால் முக்கிய வலயமாக தற்போது 1926 உள்ளது இந்த வலயத்தில் தங்கம் தனது தற்காப்பு வலயமாக உறுதி செய்தால் தற்காலிகமாக தங்கத்தினை வாங்கவுள்ளேன், எதிர்பார்ப்பு இலக்கு விலை இறுதி உயர்விலை (குறுங்கால வர்த்தகம்).
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
முன்பு ஏற்கனவே கூறியதுபோல தங்கம் 1926 வலயத்தினை மீள பரிசோதிக்கும் போது (Re - Test the level) விற்பதாக இருந்த திட்டத்தினை 1921 இல் Doji candle in hourly (Entry signal for short) சிறு தயக்கம் காரணமாக விட்டு விட்டேன் தற்போது 1908 இல் விற்பனையாகிறது. விலை 1926 இற்கும் 1900 இடையே பக்கவாட்டாக தற்காலிகமாக நகரும் என நம்புகின்றேன், மீண்டும் 1926 இற்கு விலை அண்மையாக வரும்போது விற்கதீர்மானித்துள்ளேன். Break out ஏற்பட்டு விலை தற்காலிகமாக அதிகரிக்கலாம் ஆனால் தங்கத்தினை வாங்குவதில்லை விற்பது எனும் முடிவில் உள்ளேன். சாதகமான நிலையில் விற்கத்தீர்மானித்துள்ளேன். விலை மீண்டும் 1926 வரை உயராமல் 1900 கீழிறங்கினால் அந்த விலையில் விற்க தீர்மானித்துள்ளேன்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
தங்கம் தற்போது 1920 இல் விற்கப்படுகிறது, கடந்த வார இறுதியுடன் தங்கம் வாங்கியிருந்த வர்த்தகங்களை மூடிவிட்டேன். தங்கம் முக்கிய எதிர்ப்பு வலயங்களாக (Resistance) 1926, 1976, 2070 உள்ளது. Fib 61.8 - 1896 இல் உள்ளது தற்போதுள்ளவிலையில் தங்கம் விலை உயராமல் விலை சரிந்தால் குறித்த வலயத்தினை மீண்டும் பரிசோதிக்கும் போது (Re - Test the level) விற்க தீர்மானித்துள்ளேன். ஆனால் அவசரப்பட்டு தற்போதயவிலையில் விற்கப்போவதில்லை, அதற்கான பொருளாதார புறச்சூழ்நிலையும் தற்போது நிலவவில்லை. தங்கம் 2000 இனை எட்டுமா? கள உறவுகளே உங்கள் அபிப்பிராயம் என்ன?
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
Speculation
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
Commodity (OTC market) Shares நீங்கள் ஒரு நிறுவன பங்கு வாங்கினால் அந்த நிறுவனத்தின் பங்குதாரர், பங்கு இலாபத்தின டிவிடெண்ட் என அழைப்பார்கள் அது சில நிறுவனங்கள் ஒவ்வொரு காலாண்டிற்கும் வழங்குவார்கள் அவுஸில் பெரும்பாலும் ஆண்டிற்கு இரு முறை வழங்குவார்கள், அதுதவிர நிறுவனத்தின் பெறுமதி அதிகரித்தால் ஏற்படும் விலை அதிகரிப்பாலும் பணம் ஈட்டலாம் அல்லது நட்டமடையலாம். Forex உம் OTC market தான் ஆனால் Manipulate செய்வது கடினம் Regulated market (Share market) less manipulation? நீண்ட கால முதலிடுபவர்கள் டிவிடெண்ட் குறிவைத்து முதல் இடுவர், அவ்வாறாயின் நிறுவனத்தின் பங்கு விலைமாற்றத்தினால் எதிர்காலத்தில் விலை குறையலாம் என கருதும் முதலீட்டாளர்கள் தமது பங்குகளை தற்காலிகமாக மற்றவர்களுக்கு கடனாக கொடுப்பர் (ஒரு தொகை வாங்கிவிட்டு). விலை மிகைப்பட்டுள்ளது என கருதும் Speculator அந்த பங்குகளை முதலீட்டாளரிடம் கடனாக வாங்கி சந்தை விலையில் விற்பர் (Short selling) விலை குறைந்த பின் அந்த பங்குகளை வாங்கி (Short Cover) மீளவும் முதலீட்டாளரிடம் திரும்ப கொடுத்து விடுவார்கள். உள்வீட்டு தகவலினடிப்படையில் (தவறான) டூக் சகோதரர்கள் தோடம்பழ சாற்றினை வாங்குவார்கள், எடி மேர்பி நண்பரும் தவறான தகவலை மாற்றி வைத்துவிடுவார்கள், பின்னர் டூக் சகோதரர்கள் வாங்கும் போது அவர்களுக்கு அதிக விலையில் எடி மேர்பி விற்கிறார் (Shorting Orange juice). செய்தி வெளியாகி விலை இறங்கியபின் அந்த விற்ற ஒப்பந்தங்களை (Short contract) திரும்பவும் குறைந்த விலையில் மீள வாங்கி சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைத்துவிடுகிறார்கள் (Short cover). குறைந்த விலையில் வாங்கி விற்று இலாபம் ஈட்டலாம் அல்லது கூடிய விலையில் உள்ள பங்கினையோ அல்லது வேறு எந்த உபகரணத்தினையோ விற்று விட்டு திரும்ப அதனை வாங்கி கொடுக்கலாம். Short selling CFD இல் மிக இலகுவானது, குறித்த விலையில் விற்றல் நடவடிக்கையினை தெரிவு செய்து விட்டு பின்னர் அந்த ஓடரினை மூடிவிட்டால் சரி.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
இங்கு Back test செய்ய பயன்படுத்த பட்ட மென்பொருள் Amibroker 6.00, இந்த மென்பொருள் இலவச தரவுகள் மட்டும் வழங்குகிறது யாகூ பைனான்ஸ் இல் இருந்து, சில இணைகள் மட்டும் நாணய வர்த்தகத்திற்கு இலவசமாக உண்டு. Amibroker ஒரு தடவை மட்டும் பணம் செலுத்தினால் ஆயுட் காலம் முழுவதும் பயன்படுத்தலாம், தரமான தரவுகளுக்கும் அனைத்து விதமான சந்தை தரவுகளுக்கும், 3 ஆம் தரப்பு நிறுவனங்களுக்கு பணம் செலுத்த வேண்டும், Amibroker இலவச தரவு சில குறைபாடு கொண்டது. இது ஒரு Charting program மட்டுமே ஆனால் Interactive broker இல் கணக்கிருந்தால் AUTO TRADING செய்யலாம் ( மனித குறுக்கீட்டுடன் semi automatic அல்லது மனித குறுக்கீடு முழுவதுமற்ற Fully automatic). 3 ஆம் தரப்பு இதற்கான தரவுகளை வழங்குகின்றன, அனைத்து வகையான சந்தைகளையும் கொண்ட தரவுகளை ஆண்டு ஒன்றிற்கு 30 யூரோ செலுத்தி பெறுகிறேன். மேலே அவுஸ்ரேலிய புளூசிப் பங்குகள் கொண்ட உத்தி இற்கான (sell on may go away) AFL Coding (மேலே இணைத்துள்ள வர்த்தக Strategy back test program) தேவைப்படுபவர்கள் தனிமடலில் தொடர்பு கொள்ளவும், இங்கு இணைக்க முடியாது என கருதுகிறேன் (இணையத்தில் இலவசமாக உள்ள ப்ரோகிராமிங் மாற்றங்கள் செய்துள்ளமையால்). தற்போது புதிய இணைய மூலம் பல நிறுவனங்கள் தரவுகளுடன் தானியங்கி வர்த்தக வசதியுடன் மாதாந்த கட்டணத்திற்கு இந்த வசதிகளை வழங்கின்றன. Trading view அதில் ஒன்று ஆனால் இந்த இணைய வழி நிறுவனங்களில் Automatic back testing இல்லை அதனை manual ஆக செய்யவேண்டும்,back testing இலவச பகுதியில் தற்போது நிறுத்திவிட்டார்கள். MT4 traderகள் Fx blue இன் free trading stimulation இனை Back test இற்கு இலவசமாக பயன்படுத்தலாம் இந்த இணைய வழி நிறுவனங்களுக்கான உங்களது சொந்த உத்திகளுக்கான ப்ரோகிராமிங் (ப்ரோகிராமிங் கற்காதவர்கள்) எழுதுவதும் கடினமாக இருக்கும் என கருதுகிறேன் (எனது சொந்த கருத்து).
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
Sell on MAY and go away https://www.investopedia.com/terms/s/sell-in-may-and-go-away.asp "மே இல் விற்றுவிட்டு எங்காவது செல்" எனும் பதம் பங்கு சந்தையில் உள்ளது. பொதுவாக அமெரிக்க சந்தைகள் மட்டுமல்ல அவுஸ்ரேலிய சந்தையிலும் இது பொருந்தும், காரணம் இங்கு வர்த்தக ஆண்டு யூனில் முடிவதால் பங்கு சந்தையில் பெரியநிதி நிறுவனங்கள் தமது பங்குகளை விற்று கணக்கெடுக்கின்றன. யூனில் இருந்து ஒக்டோபர் வரை (6 மாதங்கள்) பங்கு சந்தையில் வர்த்தகம் செய்வதினை தவிர்த்துவிட்டு ஒக்டோபரில் பங்குகலை வாங்கி கிறிஸ்மஸ் முன்னர் விற்றல் (3 மாதகாலம்), மார்கழி மற்றும் தை மாதம் பங்கு சந்தை மெதுவாக இருக்கும் இந்த 2 மாதங்களை தவிர்த்துவிட்டு மாசியில் வாங்கி சித்திரையில் விற்றல். இந்த நடவடிக்கையினை எனது நீண்டகால முதலீட்டு அடிப்படையில் ஓய்வூதிய கணக்கில் செய்வதுண்டு. இந்த ஒளிப்பதிவில் ஒக்டோபர் முதல் இன்றுவரையான ASX 20 (Blue chip) பங்குகளின் 5 bar break out (15 நிமிட) Back test உள்ளது. அவுஸ்ரேலிய பங்கு சந்தையில் முதல் 20 பங்குகள். இந்த பங்குகள் Dividend ஆக வாங்கப்படும் பங்குகள் பெரிய அளவில் இலாபத்தினை நட்டத்தினையோ கொடுக்காத பாதுகாப்பான பங்குகள் தை மாதத்தில் வாங்கி டிசம்பரில் வித்தால் -0.04% நட்டமேற்படும். ஆனால் டிவிடன் அதனை ஈடு செய்துவிடும் ஆனால் வங்கி வட்டி விகிதம் கூடுதலாக இருக்கும் காலங்களில் இதனை விட வங்கி வட்டி விகிதம் இலாபகரமாக இருக்கும். இணையவன் நீங்கள் கூறிய ஒரு நாள் வர்த்தக உதாரணம் போன்றதே இதுவும், ஆனால் இது ஒரு வருட காலத்தினை கொண்டது. Initial capital 10000 10000 Ending capital 13856.79 13856.79 Net Profit 3856.79 3856.79 Net Profit % 38.57% 38.57% Exposure % 83.88% 83.88% Net Risk Adjusted Return % 45.98% 45.98% Annual Return % 351.35% 351.35% Risk Adjusted Return % 418.89% 418.89% Total transaction costs 830 830 All trades 83 83 (100.00 %) Avg. Profit/Loss 46.47 46.47 Avg. Profit/Loss % 0.17% 0.17% Avg. Bars Held 31.76 31.76 Winners 41 (49.40 %) 41 (49.40 %) Total Profit 5567.87 5567.87 Avg. Profit 135.8 135.8 Avg. Profit % 1.25% 1.25% Avg. Bars Held 46.24 46.24 Max. Consecutive 4 4 Largest win 692.87 692.87 # bars in largest win 130 130 Losers 42 (50.60 %) 42 (50.60 %) Total Loss -1711.08 -1711.08 Avg. Loss -40.74 -40.74 Avg. Loss % -0.89% -0.89% Avg. Bars Held 17.62 17.62 Max. Consecutive 4 4 Largest loss -234.17 -234.17 # bars in largest loss 31 31 Max. trade drawdown -276.31 -276.31 Max. trade % drawdown -7.11 -7.11 Max. system drawdown -342.76 -342.76 Max. system % drawdown -2.76% -2.76% Recovery Factor 11.25 11.25 CAR/MaxDD 127.34 127.34 RAR/MaxDD 151.81 151.81 Profit Factor 3.25 3.25 Payoff Ratio 3.33 3.33 Standard Error 202.23 202.23 Risk-Reward Ratio 98.61 98.61 Ulcer Index 0.84 0.84 Ulcer Performance Index 412.06 412.06 Sharpe Ratio of trades 1.83 1.83 K-Ratio 0.12 0.12 மேலே உள்ள தரவு 01 ஒக்டோபர் முதல் 20 டிசம்பர் வரையான தரவாகும்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
பெரிதாக வரி செலுத்தும் நிலையில் தற்போது எனது பங்கு வர்த்தகம் செல்லவில்லை என்பதுதான் உண்மை, குறிபாக சொன்னால் நட்டத்தில்தான் செல்கிறது, அதனால் பெரிதாக வரியினை பற்றி கவலைப்படவில்லை.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
சி எப் டி இல் கொமிசனாக விலகல் எடுப்பார்கள் (அதாவது வாங்கும் விலை உதாரணமாக 2.00 என எடுத்து கொண்டால் 2.80 வாங்கும் விலையாக இருக்கும்), இன்னொரு வகை குறைந்த விலகல் ஆனால் கொமிசன் எடுப்பார்கள், நான் தேர்ந்தெடுத்தது முதலாவது. வரி செலுத்தவேண்டும், ஆனால் வரி குறைப்பதற்காக கணக்காய்வாளர் சில நடைமுறைகளை கையாளக்கூடும், ஒரு தடவை எனது கணக்காய்வாளர் முன்பு ஏதோ கூறினார் நினைவில் இல்லை (ஆர்வம் இல்லாததனால் கண்டு கொள்ளவில்லை). உங்களது கணக்காய்வாளருடன் கதைத்துவிட்டு கணக்கினை ஆரம்பிக்கலாம்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
நஸ்டாக் 100 குறியீட்டில் வர்த்தகம் செய்துள்ளீர்கள் என கருதுகிறேன், எனது கருத்து சரியா என அறியத்தரவும். இதில் 4 விற்றல் வர்த்தகமும் ஏனையவை அனைத்தும் வாங்கல் வர்த்தகம் (பிரென்சு தெரியாது ஊகத்தினடிப்படையில்) மேற்கொண்டுள்ளீர்கள். இது ஒரு தின வர்த்தக அடிப்படையில் செய்துள்ளீர்கள் குறித்த நாள் ஆரம்ப விலையும் இறுதி விலையும் கிட்டதட்ட ஒன்றாக உள்ளது. இந்த நாளிற்குரிய மெழுகுதிரி அமைப்பு (Daily candle stick ) Doji candle ஆகும், விலை ஒரு புள்ளியில் ஆரம்பித்து விலை அதிகரித்து பின்னர் குறைந்து அல்லது மறுவளமாக இறுதியில் குறித்த விலையில் முடிவடைகிறது. இந்த நிலையினை நடுநிலையான அல்லது தீர்மானமற்ற சந்தை நிலவரம் என கூறுவார்கள், ஒவ்வொரு நாளும் இதே மாதிரி நிகழாது அல்லது அதற்கான நிகழ்தகவு குறைவு என கருதுகிறேன் (எனது கருத்து தவறாக இருக்கலாம்). உங்களது இந்த முயற்சி ஒரு சிறந்த முயற்சி, நீங்கள் தனித்துவமாக உங்களுக்கு ஏற்ற ஒரு முறைமையினை (strategy) கடைப்பிடிக்க முயல்வது நல்லது. Maximum adverse excursion vs Maximum favorable excursion மேலே இணித்துள்ள காணொளிகள் சிறந்த காணொளிகள் அல்ல விடயத்தினை சுருக்கமாக கூறுகின்றன. ATR என்பது சராசரி நாளில் சந்தை எவ்வளவு ஏற்றத்தாழ்வு ஏற்படும் எனபதுடன் நிற்காமல் சந்தை நிலவரத்தினை கூறுகின்றது (trending market / Ranging market). தனிய ஒரு பங்குகளில் முதலிடாமல் குறியீட்டில் முதலிடும்போது Stop loss எனபது பிரச்சினையில்லைதான் எப்படியாவது விலை மீண்டும் குறைந்த பட்சம் வாங்கின விலைக்கு வரும் ஆனால் சில வேளை நீண்ட நாள் காத்திருக்கவேண்டும். கிட்டதட்ட ஆரம்பகாலத்தில் இதே போல தின வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளேன் ஆனால் சிறிய வித்தியாசம் அவுஸ்ரேலிய சந்தைகளில். அமெரிக்க சந்தைகள் இங்கு அதிகாலையில் முடிவடைய இங்கு சந்தை ஆரம்பமாகும், அமெரிக்க சந்தை சிறப்பாக செயற்பட்டால் 99% அதனை அப்படியே அவுஸ்ரேலிய சந்தை பின் தொடரும். அமெரிக்க சந்தை சிறப்பாக செயற்பட்டால், அவுஸ்ரேலிய சந்தை (ALL ordinaries, ASX 200) திறக்கப்பட்டதும் முந்தைய நாளின் விலையினைவிட அதிகரித்த விலையில் ஆரம்பிக்கும், இதனை இடைவெளி வர்த்தகம் (gap trade) என அழைப்பார்கள். இதில் 3 வகையுண்டு ஆனாலும் பெரும்பாலும் runaway gup நிகழும்(Gap never filled that day). முதல் 15 நிமிடங்களில் ஏற்படும் ஆக உயர் விலை (Resistance) Break out / Reverse (temporally) முதல் 15 நிமிடங்களில் ஏற்படும் ஆக குறைந்த விலை (Support) Reverse குறியீட்டிற்கும் தனித்தனி பங்குகளின் விலைக்குமிடையே சிறிது நேரத்திற்கு மட்டும் வேறுபாடு காணப்படும் அதன் அடிப்படையில் வர்த்தகம் செய்யலாம். அதே நேரம் குறியீட்டின் ஆரம்ப அதிக / குறைந்த விலை நோக்கி குறியீடு நகரும்போது பங்குகளின் விலையில் ஏற்படக்கூடிய மாற்றங்களை முன்னரே அறிகுறி காட்டிவிடும். இது உங்களுக்கு விளங்கும வகையில் சொல்லவில்லையோ என கருதுகிறேன். இவர் அமெரிக்காவில் ஒரு மிக பெரிய நிதி நிறுவனம் நடாத்துகிறார். தினவர்த்தகம் செய்யும் போது 1.Tape reading (level 2) 2.Catalyst (News) 3.Chart 4.intution 5. Big picture முக்கியம் என கூறுகிறார். இதில் Big picture என்பது குறியீட்டினை என கருதுகிறேன், இதனையே மேலே குறிப்பிட்டுள்ளேன்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
All trades Long trades Short trades Initial capital 10000 10000 10000 Ending capital 13341.84 13341.84 10000 Net Profit 3341.84 3341.84 0 Net Profit % 33.42% 33.42% 0.00% Exposure % 51.67% 51.67% 0.00% Net Risk Adjusted Return % 64.68% 64.68% N/A Annual Return % 235.22% 235.22% 0.00% Risk Adjusted Return % 455.27% 455.27% N/A Total transaction costs 0 0 0 All trades 191 191 (100.00 %) 0 (0.00 %) Avg. Profit/Loss 17.5 17.5 N/A Avg. Profit/Loss % 0.15% 0.15% N/A Avg. Bars Held 16.4 16.4 N/A Winners 106 (55.50 %) 106 (55.50 %) 0 (0.00 %) Total Profit 4613 4613 0 Avg. Profit 43.52 43.52 N/A Avg. Profit % 0.38% 0.38% N/A Avg. Bars Held 21.14 21.14 N/A Max. Consecutive 6 6 0 Largest win 294.62 294.62 0 # bars in largest win 41 41 0 Losers 85 (44.50 %) 85 (44.50 %) 0 (0.00 %) Total Loss -1271.16 -1271.16 0 Avg. Loss -14.95 -14.95 N/A Avg. Loss % -0.13% -0.13% N/A Avg. Bars Held 10.48 10.48 N/A Max. Consecutive 4 4 0 Largest loss -54.12 -54.12 0 # bars in largest loss 4 4 0 Max. trade drawdown -133.61 -133.61 0 Max. trade % drawdown -1.2 -1.2 0 Max. system drawdown -161.68 -161.68 0 Max. system % drawdown -1.42% -1.42% 0.00% Recovery Factor 20.67 20.67 N/A CAR/MaxDD 165.08 165.08 N/A RAR/MaxDD 319.5 319.5 N/A Profit Factor 3.63 3.63 N/A Payoff Ratio 2.91 2.91 N/A Standard Error 133.36 133.36 0 Risk-Reward Ratio 108.76 108.76 N/A Ulcer Index 0.49 0.49 0 Ulcer Performance Index 467.6 467.6 N/A Sharpe Ratio of trades 12.67 12.67 0 K-Ratio 0.1 0.1 N/A இது முன்பு குறிப்பிட்ட முதலீட்டிற்கான உத்தி (Break out) 15நிமிட இடைவெளியில் வர்த்தகம் செய்யும் போது. Year Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec Yr% 2022 N/A N/A N/A N/A N/A N/A N/A N/A N/A 8.80% 13.90% 7.60% 33.40% Avg 0.00% 0.00% 0.00% 0.00% 0.00% 0.00% 0.00% 0.00% 0.00% 8.80% 13.90% 7.60% இந்த மாதமும் இதற்கு முந்திய இரண்டு மாதமுமாக ஏறத்தாழ 3 மாதகாலப்பகுதியில் செய்யப்பட்டது.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
Price action trading 1 மணித்தியாலம், 4 மணித்தியாலம்,நாளாந்த வரைபடம் பயன்படுத்துவது நல்லது, மேலே சில சொற்கள் தவறுதலாக இடம்பெறவில்லை, அத்துடன் முதலீட்டு வர்த்தகத்திற்கு நாளாந்த வரைபடம் பயன்படுத்தலாம். சில Manage fund களில் முதலிடுவது ஓரளவிற்கு நீங்களாக முதலீடு செய்வதற்கு இணையாகும் தேவையற்ற மினக்கேடு இல்லை ஆனால் அவர்களது சேவைக்கட்டணம் மிக அதிகமாக இருக்கும் சராசரியாக 1.5% அறவிடுவார்கள். Back test செய்வதற்கு காசு செலவழித்து மென்பொருள் வாங்க தேவையில்லை FX blue trading simulator plug in பயன்படுத்தி MT4 data பயன்படுத்தலாம். Trading journal இற்கு evernote போல பல இலவச மெபொருள் இணியத்தில் உள்ளது.