Everything posted by vasee
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
நம்பிக்கைகளும் Believes, வாழ்க்கை நெறியும் Values ஒன்றாக இணையும் புள்ளியாக பலருக்கு மதங்கள் உள்ளது, அதில் சில தவறானவர்கள் தமது தவறுகளை மதத்தின் மூலம் நியாயப்படுத்தும்போது அது கேள்விக்கு இடமின்றி அங்கீகரிக்கப்படுகின்றது, இதில் பாதிக்கப்படும் தரப்பு கூட அதனை கேள்வியின்றி அங்கீகரிப்பதுதான் வேதனைக்குரிய விடயம். இங்கு மதங்கள் பலிக்கடாக்கள் ஆக்கப்படுகின்றன சில தவறான மனிதர்களால், இதனால் அனைத்து மதங்களும் பாதிப்புள்ளாகின்றன. அதனை பதிவு செய்யுங்கள், நாங்கள் பேச விரும்பாத எமது கோரமான பக்கங்களை மறக்க முயற்சிக்கிறோம் ஆனால் அவற்றினை பேசாவிட்டால் அது தொடர்கதையாகவே செல்லும், இதனை பேசுவதற்கு முடியாமல் இருப்பதற்கு காரனம் நாங்கள் மதிக்கும் மதங்களே காரணம் இதில் நாமும் மற்ற மதங்களை போலவேதான் எமக்கு மற்றவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
கிழக்கு மாகாணத்தில் 13 வயது தமிழ் குழந்தை ஒன்றினை இஸ்லாமியர்கள் கூட்டாக வல்லுறவு செய்வதற்கும் பின்னர் அந்த குழந்தையினை கல்லெறிந்து கொல்வதற்கு உடந்தையாக இருந்த இஸ்லாமியர்கள் பலர் அந்த குழந்தையின் பெற்றோரின் வயதொத்தவர்கள், இந்த நிகழ்வுகள் தொடர் இஸ்லாமியர்களின் வன்முறைகளின் தொடரின் ஒன்றாக இருந்த காலகட்டத்தில் நிகழ்ந்த ஒன்று. தமது வக்கிர புத்தியினை எவ்வாறு மதத்தினுள் புகுத்தி கல்லெறிந்து கொல்லும் மதசடங்காக மாற்றியதுபோல எமது யாழ் சமூகத்திலும் இந்து மதத்தின் பேரால் சாதிக்கொடுமை மூலம் பலரை வனுமுறைக்குட்படுத்தப்படுவதற்கும் கொல்லப்படுவதற்கும் உறுதுணையாக இருந்த கருத்தியலை விதைத்த நாவலரை இப்போதும் கொண்டாடும் சமூகமாக இருந்து கொண்டு மற்ற சமூகங்கள் மேல் சகட்டுமேனிக்கு குற்றம் சாட்டுகின்றோம். இஸ்லாமியர்களுக்கும் எங்களுக்கும் அதிக வித்தியாசமில்லை, ஆனால் நாங்கள் புனிதர்கள் போல பேசுவது வேடிக்கையானது.
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
உங்கள் கருத்திற்கு நன்றி, நிங்கள் கூறுகின்ற காரணங்களுடன் பல காரணங்கள் உள்ளது(அனைத்து நிறுவன கொடுக்கல் வாங்கலுக்கான இரசீதுகள் -invoices டொலரில் பெரும்பாலும் நிகழ்த்தப்படுகின்றது, SWIFT, Eurodollar, Petrodollarஎன கூறிக்கொண்டே செல்லலாம்) ஆனால் இங்கு உலக இருப்பு நாணய கருத்தினை கூறவரவில்லை ஆனால் அந்த கருத்து எழுப்பப்படும் போது அதுவும் அமெரிக்க மற்றும் உலக பொருளாதாரத்தில் பாதிப்பினை ஏற்படுத்த கூடியதாக இருக்கும் என்பதனாலேயே அது பற்றி கேட்டேன். Eurodollar பாதிப்பினால் ஒரு ஜப்பானிய வங்கி ஒன்றிற்கு2025 இல் கிட்டதட்ட 10 பில்லியன் இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. இது தவிர பல அமெரிக்க வங்கிகள் கிடதட்ட 540 பில்லியன் காகித இழப்புகளை அமெரிக்க பணமுறிகளினால் ஏற்பட்டுள்ளது, இது 2008 பொருளாதார சரிவிற்கு பின்னால் ஏற்பட்ட பதில் நடவடிக்கையால் ஏற்படுகிறது(Basel3 Accord) உலக பொருளாதார சரிவின் முன்னரான காகித இழப்பு கிட்டதட்ட 75 பில்லியன் இருந்ததாக கூறப்படுகிறது அதற்கான தெளிவான ஆதாரங்கள் இல்லை ஆனால் அதன் பின்னர் பொருளாதார சரிவினால் 700 பில்லியன் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது, சந்தை பொருளாதாரத்தினால் சந்தை சரிவு 10 மடங்காக மாறியது) 540X10=5trillion? தற்போது உள்ள அமெரிக்க பொருளாதாரத்திற்கு ஏற்பட உள்ள பாதிப்பு 1929 இல் வந்த பொருளாதார பாதிப்பிற்கு ஒப்பானதாக கூறுகிறார்கள், GFC தனிய வீட்டு சந்தையில் ஏற்பட்டதாக்கம், தற்போது குறைவடைந்து செல்லும் m2 பண வழங்கள், சொத்து குமிழிகள், வங்கி திரவத்தன்மை, அரச கடன் சுமை(இது 1929 இருக்கவில்லை) இவை அனைத்தும் சேர்ந்து ஒரு பொருளாதார சரிவினை ஏற்படுத்த உள்ளது, இதன் போது பெரிய நிறுவனங்கள் தப்பிவிடும் பாதிக்கப்படுவது சாதாரண மக்களே. மிக சுருக்கமாக கூறியுள்ளேன் முன்பு விபரமாக எழுதுவதுண்டு, அதன் முலம் மற்றவர்கள் நான் கூறவருவதனை புரிந்து அதனை எதிர்த்து ஆக்கபூர்வமான எதிர்கருத்தின் மூலம் எனது கருத்தினை குறை கூறுவதன் மூலம் புதிய விடயங்களை புரிந்து கொள்ளலாம் எனும் ஒரு ஆசைதான். ஆனால் இப்போது அந்த நம்பிக்கை எல்லாம் இல்லை அதற்கு காரணம் டோல்ஸ்ரொய் கூறும் காரணமாக இருக்கலாம், Leo Tolstoy - “The most difficult subjects can be explained to the most slow-witted man if he has not formed any idea of them already; but the simplest thing cannot be made clear to the most intelligent man if he is firmly persuaded that he knows already, without a shadow of doubt, what is laid before him.”
-
புனித காசி தீர்த்தம் யாழ்ப்பாணம் உப்புவயல் குளத்தில் கலப்பு!
ஆனால் சமூக நலன் என்று பார்க்கும் போது இவ்வாறான மூட நம்பிக்கைகளை களைவதுதான் சிறப்பு, பெருந்தொற்று காலத்தில் சில நல்லடக்கங்கள் மத கோட்பாட்டிற்கெதிரானது என ஒரு தரப்பு மக்களை உசுப்பி விடுவது போல செயற்படுவது சரியாக இருக்காது, அத்துடன் எதிர்காலத்தில் இவ்வாறான நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க இறுக்கமான சட்ட ஒழுங்கு நடவடிக்கையினை அரசு மேற்கொள்ளவேண்டும்.
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
ஜப்பானிடம் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட இராணுவமே உள்ளது (ஜப்பானிற்கு இராணுவ அச்சுறுத்தல் ஏற்படும் போது அதனை காக்கும் கடமை அமெரிக்க அரசிற்குரியதாக உள்ளது), ஜப்பானிய ஜென் நாணயம் 6% ரிசர்வ் நாணயமாக பயன்படுத்தப்படுகிறதல்லவா? மிகவும் பொருளாதார உறுதித்தன்மை கொண்ட நாடாக சிங்கப்பூர் இருந்தும் ஏன் அதன் நாணயம் கையிருப்பு நாணயமாக அமெரிக்க நாணயத்தினை புறந்தள்ள முடியவில்லை? பொது நாணய அங்கீகாரம் அமெரிக்க நாணயத்திற்கு மட்டும் இல்லை, வேறு சில நாணயத்திற்கும் உள்ளது ஆனால் அவையினால் ஏன் அமெரிக்க நாணயம் போல் வர முடியவில்லை.
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
உள்ளூரில் இணையவெளியின் பாவனையைக் கூட வெளிப்படையாக கையாளும் இயல்பில்லாத சீனாவின், ரஷ்யாவின் நாணயங்களை முட்டாள்கள் தான் நம்பிக் கையிருப்பு நாணயமாக ஏற்றுக் கொள்வர். தென்னாபிரிக்கா இன்னும் சமூக ஏற்றத்தாழ்வுகளில் இருந்து வெளிவராமல் தவிக்கிறது. இதையெல்லாம் புறக்கணித்து விட்டு"கடன்முறி, கடன்முறி" என்று நீங்கள் பல்லவி பாடிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் கருத்திற்கு நன்றி, நீங்கள் கூறும் இந்த அமெரிக்க பண்புகள் வேறு எந்த நாட்டிலும் இல்லையா? ஏன் அவ்வாறிருக்க அமெரிக்க நாணயத்தினை reserve currency ஆக பயன்படுத்துகிறார்கள் என்று எப்போதாவது சிந்த்தித்ததுண்டா?
-
இலங்கையை வந்தடைந்தது இந்திய கிரிக்கெட் அணி!
வங்கதேசத்திற்கெதிராக நுவான் துசாராவின் 5 விக்கெட்டுகள் டில்சான் மதுசங்கவின் பந்துவீச்சு.
-
இலங்கையை வந்தடைந்தது இந்திய கிரிக்கெட் அணி!
இந்திய அணி இலங்கை அணியினை பயிற்சி ஆட்டத்தில் துவைத்து எடுத்ததாக கூறுகிரார்கள், நல்ல வேளை இலங்கை அணி பந்து வீச்சாளர் நுவான் திசாரா காயமடைந்து வெளியேறியமை, வங்க தேச அணிக்கெதிராக 5 வெக்கெட்டுக்களை எடுத்த ஒரு போட்டியினூடாக பிரகாசித்தாலும் அவர் பத்திரன மலிங்க போல பந்தை வீசுபவர் ஆனால் அவருக்கு மற்றீடான தில்சான் மதுசங்க இடது கை பந்துவிச்சாளர் திறமையானவர் அவருக்கு பதிலாகவே உள்ளே வந்துள்ளார் ஆனால் அவர் திறமையின் பிரகாரம் நுவான் துசாராவிற்கு பதிலாக வந்திருக்க வேண்டியவர் அவரது ஆரம்ப பந்து வீச்சு சிறப்பாக இருக்கும் வலது கை துடுப்பாட்ட வீரர்களுக்கு பொதுவாக வீசும் உள்ளே வரும் பந்து போல பந்தின் மேலாக விரல்களால் வீசும் நுணுக்கமான ஓப் கட்டர் வீரர்களை குழப்பும் திறன் வாய்ந்தது, ஆடுகளமும் வேகப்பந்து வீச்சிற்கு சாதகம், இலங்கை எதிர்பாரா வெற்றியினை பதிவு செய்யும் என கருதுகிறேன்.
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
உங்கள் கருத்திற்கு நன்றி, அமெரிக்காவிலே அதிக வருமானமீட்டும் மிக குறுகியதொகை பிரிவினரால் சமச்சீரற்ற பொருளாதார நிலையினால் அதிகளவில் உள்நாட்டு பொருளாதாரத்தில் சிக்கல்கள் நிகழ்கிறது ஆனால் அதனை மாற்றும் தைரியம் எந்த அரசியல் கட்சிக்கும் கிடையாது எனவே நினக்கிறேன் அதனை தவிர்த்து அமெரிக்க வல்லாதிக்கத்தினை நிலைநிறுத்தும் நடவடிக்கைகள் கூட அண்மைக்காலங்களில் பெரிதாக எதிர்பார்த்த விளைவை உண்டாக்காமல் எதிர்மறை விளைவினை ஏற்படுத்தியுள்ளது. இதனை அமெரிக்க கொள்கைகளின் தோல்வியாக நான் கருதுகிறேன், உதாரணமாக 2014 முதல் உக்கிரேனை பல்லுப்புடுங்கிய பாம்பாக இருந்த இரஸ்சியாவிற்கெதிராக ஒரு பலச்சமனிலையினை பேணுவதற்காக எடுத்த முயற்சிகள் எதிர்பாராவிதமாக பின்விளைவின உருவாக்கி உலக பொருளாதாரத்தில் 7% சரிவினை அமெரிக்க பொருளாதாரத்தடைகள் ஏற்படுத்தியுள்ளது (ஐ எம் எப்) கருத்தின் பிரகாரம்) அதே போல் பல பிளவுபட்ட மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதார மையங்களை தோற்றுவித்துள்ளது இந்த அமெரிக்க கொள்கை. இது உலக பொருளாதாரத்திற்கு பெரிய பாதிப்பினை இனிவரும் காலங்களில் ஏற்படுத்தலாம், மறுவளமாக அமெரிக்க பொருளாதாரம் பெரிய சவாலை எதிர்கொள்ள உள்ளது (இதனை சில ஆண்டுகளாக சொல்லி உள்ளேன்) இதனை எந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் சீர் செய்யலாம்? துரதிஸ்ரவசமாக எந்த கட்சியாலும் முடியாது எனவே நான் நினைக்கிறேன் ஏனெனெனில் இந்த உக்கிரேன் அமெரிக்க கொள்கை ஒரு வண்ணாத்தி பூச்சி இறக்கை செயலாக ஒரு பொருளாதார சுனாமி ஒன்றினை உருவாக்குகிறது, அதன் ஒரு அங்கமாக ஜப்பானிய பொருளாதார கொள்கையாக பார்க்கிறேன், அவர்கள் யதார்த்தத்திற்கேதிரான (எனது கருத்து) ஒரு போர் ஒன்றினை ஆரம்பித்துள்ளார்கள் அதன் முடிவு என்னவாக இருக்கும் என தெரியவில்லை.
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
ஒரு நாணயத்தின் இன்னொரு பக்கமாக உங்கள் கருத்து உள்ளது, இவ்வாறு சிந்திக்கவில்லை, வாழ்க்கை அனுபவம் ஒரு Implicitly learning என்பார்கள், இதனாலேயே எமது கல்விசார் சமூகம்(Explicitly learning environment) மிகவும் தவாறான முடிவுகளை எடுப்பவர்களாக இருக்கிறார்களோ?
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
'No Tax for the Middle Class' ? இது ஒரு சவாலான விடயமாக இருக்கும், ஆனால் சுவாரசியமான தகவல்கள், அமெரிக்கா பாதீட்டிற்கான வரி வருமான இடைவெளி கிட்டதட்ட 2 ரில்லியன் குறைவாக உள்ளது இதில் வருகின்ற வருமான வரி மூலமான வரியில் தனிநபர் வருமான வரி (நிருவன வரி அல்ல 11% ?) 48% இதில் மத்திய தரத்தினரின் வருமான வரியினை தள்ளுபடி செய்வார்களா?
-
குறுங்கதை 21 -- கோட்பாட்டின் சதி
உங்கள் கருத்திற்கு நன்றி, உங்கள் கதையினை குறுக்கிட மனதளவில் சங்கடமாகவே உணர்ந்தேன், பின்னர் ஒரு நகைசுவையாக அடுத்த தரப்பு எவ்வாறு சிந்திக்கலாம் என்பதாக எழுதியிருந்தேன்,பொதுவாக சில காலமாக கதைகள் வாசிப்பதில்லை ஆனால் உங்கள் கட்கை கொஞ்சம் வித்தியாசமாக இருப்பதாக உணர்கிறேன் அதனால் வாசிப்பதுண்டு. பரவலாக உங்கள் கதை யாழில் நல்ல வரவேற்பை பெறுகிறது தொடர்ந்து எழுந்துங்கள் அத்துடன் வித்தியாசமான முயற்சிகளையும் செய்யுங்கள்.
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
https://posts.voronoiapp.com/money/The-Price-of-a-Big-Mac-Around-the-World--1663 கடன் குடுக்கிற அமெரிக்காவினை விட உக்கிரேனில் வாழ்க்கை செலவு 48% குறைவாக உள்ளது!
-
குறுங்கதை 21 -- கோட்பாட்டின் சதி
மன்னிக்கவும், எனக்கு இந்த அமெரிக்கர்களின் ஏலியன் சதிக்கோட்பாட்டில் நம்பிக்கை இல்லை😁.
-
சம்பந்தர் காலமானார்
மன்னிக்கவும் நீங்கள் உண்மையாகவே விளங்காமல்தான் வினவுகிறீர்கள் என்ற புரிதலில்ல்லாமல் பதிலளித்தமைக்கு, நான் உட்படவே தவறு செய்தவர்கள் என கூறுகிறேன், மற்றது அந்த அரசியல்வாதியினை பற்றி அனைவருக்கும் தெரிந்த விடயத்தினை இனி கதைப்பதால் எந்த மாற்றமும் இல்லை, மாற்றம் எங்களிலிருந்து வருவேண்டும்.
-
குறுங்கதை 21 -- கோட்பாட்டின் சதி
கோட்பாட்டின் சதி தொடருகிறது.......... அவர் மனைவி அவரிடம் வருகின்ற பஸ் எமது பஸ்தான் கையினை காட்டுங்கள் என அவரிடம் கூறுகிறார், ஆனால் அவர் பதிலுக்கு ஒரு நக்கலான புன்னகை ஒன்றினை உதட்டருகே தவளவிட்ட வண்ணம், இது என்ன ஊரென்றா நினைத்தீர்கள்? ஒவ்வொரு தரிப்பிடத்திலும் பஸ்ஸினை அவர்கள் நிறுத்தத்தான் வேண்டும் என்றார். இங்கு அப்படி நிறுத்தாமல் போனால் வாடிக்கையாளர் நீதிமன்றில் போய்தான் பஸ்ஸினை நிறுத்தவேண்டும் என்றார். பஸ்ஸின் குறிகாட்டி விளக்கு எரியும்போதே பஸ் தனது வேகத்தினை குறைத்து இவர்கள் பக்கமாக பஸ்ஸினை நிறுத்தியது, அவர் தனது மனைவியினை பார்த்து ஒரு வெற்றி புன்னகையினை வீசி விட்டு பஸ்ஸில் தனது குடும்பத்தினரை ஏற அனுமதித்து இறுதியாக பஸ்ஸில் ஏறினார். பஸ்ஸில் அவரை பார்த்து சாரதி கூறினார், எனக்கு எப்படித்தெரியும் நீ பஸ்ஸில் ஏறப்போகிறாயா இல்லையா? என, கை காட்டியிருக்கலாமே என கேட்டார், எங்கே தனது மனைவிக்கு கேட்டுவிடுமோ என பயந்த வண்ணம் ஓ அப்படியா என பதிலளித்த அதே நேரம் அவரது மனைவி அவரை திரும்பிப்பார்த்து ஒரு புன்னகை செய்தார். பஸ் சாரதி என்ன ஓ அப்படியா என்றால் என்ன அர்த்தம் என என்று கோபத்தோடு கேட்பது அவர் காதில் பின்னால் கரைந்து போனது ஏன் இந்த சின்ன விடயத்திற்கு இந்த பஸ் சாரதி அந்த ஒன்று கூடலிற்கு வந்த ரசோதரன் மாதிரி என்ன உலகம் உருண்டையா? என அலட்டிக்கொள்கிறார் என சிந்தித்தவாறே தனது இருக்கையை நோக்கி நகர்ந்தார்.
-
சம்பந்தர் காலமானார்
இல்லை! நீங்கள் எதிர்பார்க்கும் கருத்தினை நான் பதியமாட்டேன் 😁.
-
சம்பந்தர் காலமானார்
எனது விருப்பமும் வெறுப்புகளை விட்டு ஒற்றுமையினை உருவாக்குதல்தான், அதற்கு உங்கள் விருப்பு இருப்பது மகிழ்ச்சி.
-
ஹிந்தியன் 2 விமர்சனம்.
சங்கரின் போய்ஸ் படமும் இளவட்டங்கள் நடித்த படம்தான், சிறப்பான ஒலி, ஒளிப்பதிவுகள், காட்சி அமைப்புக்கள், மற்றும் பாடல்கள் மிக பிரபலமானது ஆனால் படம் தோல்வியான படம் என நினைக்கிறேன். இந்த படத்தில்தான் தமிழில் முதல் முதலாக நேரத்துண்டுகள் (Time slice) தொழில்னுட்பம் பயன்படுத்தப்பட்டது. இந்த தொழில்னுட்பத்திற்கு இந்த காணொளியில் 55 புகைப்படக்கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. படத்தில் கதாநாயகி தனது காதலை சொல்ல சங்கர் பயன்படுத்திய தொழில்னுட்பம் இது சங்கரின் இந்த திரைப்பட பாடலில் 60 புகைப்படக்கருவிகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது, இரண்டு ஒளிப்பதிவுக்கருவிகள் இரண்டும் நேரெதிராக 180 பாகையில் அமைந்திருக்க 60 புகைப்பட கருவிகளும் அரைவட்டமாக (முதலாவது காணொளியில் உள்ளது போல) அமைந்திருக்கும் அந்த 2 ஒளிப்பதிவுகருவிகளும் 60 புகைப்பட கருவிகளும் ஒரு குறித்த காட்சியினை படம்பிடிக்கும் அதனை தொகுக்கும்போது ஒளிப்பதிவு கருவி #1 இலிருந்து 60 புகைப்பட கருவிகள் வரிசையாக தொகுக்கப்பட்டு இறுதியாக ஒளிப்பதிவு கருவி #2 இல முடிவடையும். 60 புகைப்படங்களை ஒன்றன் பின் ஒன்றாக வைக்கும்போது கிட்டதட்ட அந்த காட்சி 2.5 நொடிகள் நீடிக்கும் (24fps).
-
சம்பந்தர் காலமானார்
இன்று இந்த மறைந்த அரசியல்வாதிக்கெதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்று மக்களை ஒருங்கிணைக்கதவறியமை. 2009 முள்ளிவாய்க்கால் நிகழ்வின் மூலம் தமிழ் சிறுபான்மை மக்களின் உரிமைகளை நசுக்கிய பின் இங்கு சிட்னியில் இலங்கை தொலைக்காட்சி படப்பிடிப்பினை மேற்கொண்டது (ஒவ்வொரு வளர்ந்த நாடுக்ளிலும் இவ்வாறு படப்பிடிப்பினை மேற்கொண்டதாக கூறப்பட்டது). அந்த படப்பிடிப்பின் நோக்கம் இலங்கை உள்நாட்டு போரினை முடிவிற்கு கொண்டு வந்துவிட்டது அடுத்தது இவ்வாறு வளர்ச்சி அடைவதுதான் என்பதாக அவர்களது கருத்தாக இருந்தது. சிறுபான்மை தமிழர்களின் உரிமையினை இரும்புக்கரம் கொண்டு அடக்கி 15 வருடங்களின் பின்னர் இலங்கை வங்குரோத்து நிலமையிலிருந்து வெளிவருவது பற்றி கதைப்பதிலேயே காலம் போகிறது. மக்களை பிளவுபடுத்துவதால் அரசியல் இலாபம் பெறலாம் ஆனால் அதனால் நாட்டிற்கும் மக்களுக்கும் தீமைதான் ஏற்படும். சிறுபான்மை சமூகமாகிய நாம் பல பிரிவுகளாக பிரிந்திருப்பதால் மேலும் பலவீனமாகிறோம், ஆனால் அதற்கு எமக்குள் இருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்யாமல் குற்றம் சாட்டுவதற்கு ஒருவர் தேவைப்படுகிறார் அதற்கு பலிக்கடா இந்த அரசியல்வாதி.
-
ஹிந்தியன் 2 விமர்சனம்.
நானும் சும்மா ஒரு நகைசுவைக்காகவே இந்தியன் 3 பற்றி குறிப்பிட்டேன், ஆனால் சம்பந்தப்பட்ட தரப்பு இவ்வாறான ஒரு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதனை அறிவேன். ஒரு திரைப்படம் பெயர் அலைகள் ஓய்வதில்லை என நினக்கிறேன் அதில் கார்த்திக் அறிமுகமான படம், அந்த படத்தில் இறுதித்தருணத்தில் இரண்டு காதலர்களும் தமக்கு மதம் வேண்டாம் என மதத்தினை புறந்தள்ளியதாக படம் முடிவடையும் என நினைக்கிறேன், அந்த படத்திற்கு ஏகோபித்த ஆதரவு அக்காலத்தில் கிடைத்ததாக கேள்விப்பட்டேன். அந்த படத்தின் இயக்குனர் பாரதிராஜா, ஆனால் அந்த கதை அவரது துணை இயக்குனரான மணிவண்ணனின் கதை என கூறப்படுகிறது. சிறப்பான படத்திற்கு படத்தின் காட்சி அமைப்புகள் இசை என்பன இரண்டாம் பட்சம், ஆனால் மூலக்கதை (கரு - அதனை ஒரு வரியில் கூறுவார்கள் ) முக்கியம், ஆனால் ஜனரஞ்சகமான (மசாலா) திரைப்படத்திற்கு மூலக்கதை முக்கியமில்லை என நினைக்கிறேன், இந்த இயக்குனர் முக்கியமாக இந்தவகை மசாலா பட இயக்குனராக இருந்தாலும் இவரது கதையில் ஒரு கருத்தினை வலியுறுத்தி வருவதன் மூலம் சிறந்த திரைப்படத்திற்குரிய மூலக்கதையினையும் தொட்டு செல்ல முயற்சிப்பவர். இந்த திரைப்படத்தில் இந்த விடயம் சரி வரவில்லை போல இருக்கிறது (திரைப்படம் பார்க்கவில்லை), அதே நேரம் பிழையான இடத்தினை சுட்டி காட்டினால் நிலமை இன்னும் மோசமாகும் உதாரணமாக அலைகள் ஓய்வதில்லை படத்தில் இரண்டு மதத்தில் ஒரு சிறுபான்மை மதத்தினை சேர்ந்தவரை வில்லனாக காட்டி இருப்பார்கள் அதனையே எமது இந்து மதத்தினை சேர்ந்த ஒருவரை வில்லனாக காட்டியிருந்தால் பெரும்பான்மையானவர்களினது ஆதரவு இந்தளவிற்கு இருக்காது என கருதுகிறேன்,
-
பாரிய தகவல்தொழில்நுட்ப கோளாறு - சர்வதேச அளவில் விமானசேவைகள் வங்கி சேவைகள் செயல் இழந்தன
- ஹிந்தியன் 2 விமர்சனம்.
இந்தியன் 3 நன்றாக உள்ளதாக கூறுகிறார்கள்!- சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
இந்த வைத்தியர்களை இலங்கை சார்பாக ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை போட்டிக்கு அனுப்பினால் சில பதக்கங்களாவது கிடைக்கும்.- குறுங்கதை 17 -- நளபாகம்
நீங்கள் இந்த விடயத்தினை தொட்டு சென்ற வகையில் நீங்கள் ஒரு விபரமான சமையல்காரர் என கருதுகிறேன்,வழமை போல தெரியாத விடயமாக காட்ட முயற்சிக்கிறீர்களோ எனும் சந்தேகம் எனக்கு உள்ளது அல்லது உண்மையிலேயே உங்களுக்கும் என்னை போல சமையல் எட்டா(?)பொருத்தமோ தெரியவில்லை, நான் உங்களை தவறாக புரிந்துள்ளேனோ தெரியவில்லை. குறுக்காக வெட்டிய வெங்காயமும் நீட்டாக வெட்டிய வெங்காயமும் தன்மையிலும் (Texture), சுவையிலும் வித்தியாசம் உள்ளதென கூறுவார்கள், அதே போல வெட்டு அளவுகளும் சுவை மற்றும் தன்மையில் மாற்றத்தினை காட்டும், அது காய்கறிக்கும் பொருந்தும் அத்துடன் அசைவ உணவுகளில் கலக்கப்படும் காய்கறி மற்றும் மற்ற சுவையூட்டிகளின் அளவீடுகள் என்பவற்றைனையும் குறிப்பிடுவார்கள். - ஹிந்தியன் 2 விமர்சனம்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.