Everything posted by vasee
-
கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
இது ஒரு தனிப்பட்ட இரு தரப்பினருக்கிடையேயான பிணக்காக தெரிகிறது, தன்னை மக்கள் செயற்பாட்டாளராக காட்ட முனைந்து சுய தீர்மானத்தினடிப்படையில் மலர் மாலையினை கோவில் நிர்வாகத்திடம் கொடுத்துள்ளார், அதனை அணிவிப்பதும் அணிவிக்காததும் கோவில் நிர்வாகத்தின் விருப்பம் அதனால் ஏற்பட்ட பிணக்கினை நிதிமன்றில் தீர்த்து கொண்டுள்ளார்கள் அவ்வளவே, அவருக்கு சட்ட ரீதியான தீர்வு கிடைத்துள்ளது, அந்த சம்பவத்தினை தனது சுய விளம்பரத்திற்காக குறிப்பிட்ட நபர் பயன்படுத்தியுள்ளதனை போல உள்ளது. கனடிய தமிழர் பேரவையின் கட்டடத்தினை தாக்கினவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும், இவ்வாறான செயற்பாடுகளை தமிழர் நலன் விரும்பிகள் செய்திருந்தால் தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் (கனடிய தமிழர் பேரவை தந்து நிலைப்பாட்டினை தெளிவாக கூறிய பின்னும் அதற்கான மறுவினையாக இந்த சம்பவம் இருந்தால்). சிங்கள அரசின் கைகூலிகளின் வேலையாக இருக்கவும் சாத்தியமுள்ளது ஏன் கனடிய தமிழர் பேரவை கூட செய்திருக்கலாம் (அப்படி செய்திருந்தால் அவர்களையும் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்). சிட்னியில் சில காலத்தின் முன்னர் எரிபொருள் நிலையத்தில் வேலையில் இருந்த இலங்கையர் தனது வாகன காப்புறுதி கட்டமுடியாமல் தனது உறவினர் உதவியினுடன் எரிபொருள் நிலையத்திலிருந்து காரினை எடுத்து சென்று ( அவர் அப்போது கடமையில் இருந்தார்.) ஒரு சிறிய கணப்பொழுதுகள் கண்காணிப்பு கருவிகளில் பதிவாகுமாறு தடயமில்லாமல் இருப்பதற்காக நீர்நிலை ஒன்றில் தள்ளிவிட்டு அந்த பணத்தினை பெற்று கொண்டாராம். தற்போது இலங்கையிலும் வெளிநாடுகளிலும் நிகழ்வுகளை பார்ர்கும்போது இரண்டே இரண்டு செயற்பாட்டாளர்கள்தான் அதிகளவில் செயற்படுகிறார்கள். 1. தமிழர் விரோத சிங்கள அரசின் நேரடி கை கூலிகள். 2. தமிழர் நல் செயற்பாட்டாளர் எனும் போர்வையில் இந்தமாதிரி பாதகமான செயல்களை செய்யும் சிங்கள அரசின் கைகூலிகளின் இரண்டாவது அணி.
-
ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில் விடுதலை செய்யப்பட்டோரை இலங்கைக்கு அனுப்பக்கோரி சிறீதரன் கடிதம்!
அதிகாரங்களின் மூலம் தனிப்பட்ட ரீதியில் பலனடைவதுதான் அவரது குறிக்கோளாக இருக்கலாம், இது அவரது கடந்த கால செயற்பாடு தொடர்பான கருத்தாக உள்ளது, இது தவறானதாக இருக்கலாம், ஆனால் காலம் அவருக்கு ஒரு சந்தர்ப்பத்தினை வழங்கியுள்ளது தன்னை நிரூபிப்பதற்கு, அவர்தான் தனது பாதையினை தெரிவு செய்யவேண்டும்.
-
Economic growth is the key to recovery | Raj Rajaratnam speech at Jaffna University
நல்ல ஒரு விடயத்தினை பகிர்கிறார், ஆனால் பார்வையாளர்களிடம் ஆர்வம் இல்லை.
-
ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில் விடுதலை செய்யப்பட்டோரை இலங்கைக்கு அனுப்பக்கோரி சிறீதரன் கடிதம்!
இதனை ஆர்வ கோளாறு என்று சாதாரண வழக்கில் சொல்லப்படுவதுண்டு. ஒரு விடயம் அல்லது ஒரு பொருள் எதுவாக இருப்பினும் குறிப்பிட்ட காலத்தில் திடீரென அதற்கான கேள்வி அதிகரித்த போது மக்கள் அதனை தவறவிடக்கூடாது எனும் எண்ணத்தில் அவசரப்பட்டு சரியாக ஆராயமல் செய்யும் விடயங்கள், இதனை Cognitive bias (FOMO - Fear Of Missing Out என்பதன் சுருக்கம்) என அழைக்கிறார்கள். https://www.convertize.com/psychology-black-friday/ சிறீதரனுக்கு திட்டமிடெல்லாம் சிந்தித்து மக்களை மாயையில் வைத்திருக்கும் நோக்கம் இல்லை என கருதுகிறேன்.
-
மாயையை கிழித்திருக்கிறது சர்வதேச நீதிமன்றம் - அமைச்சர் டக்ளஸ்
கடந்த காலத்தில் இலங்கை ஸ்கொட்லன்ட் யார்டின் உதவியினை நாடியுள்ளது.
-
மாயையை கிழித்திருக்கிறது சர்வதேச நீதிமன்றம் - அமைச்சர் டக்ளஸ்
இலங்கையின் நீதித்துறையின் சீரழிவே சர்வதேச நீதிமன்றத்தினை நாட மக்கள் விரும்புகிறார்கள், மக்கள் அனைத்தினையும் சகித்து வாழவேண்டும் என கூறுவதன்மூலம் கொஞ்ச நஞ்சமுள்ள சாதாரண மனிதர்களின் உரிமைகளை குழிதோண்டி புதைத்துவிட்டு காட்டு இராஜ்ஜியம் செய்ய அமைச்சர் விரும்புகிறார். இதனை எப்படி பகிரங்கமாக கூறுகிறார்கள்? எதிர்காலத்தில் மக்கள் சிந்திப்பதனை நிறுத்திவிடவேண்டும் என விரும்புகிறார்கள். ஆரம்ப பாடசாலை தமிழ் புத்தகத்தில் பக்தூர் எனும் கதை உள்ளது ரவீந்திரனாத் தாகூர் காதாசிரியர் என கருதுகிறேன்) ஒர் ஒநாய் ஒரு செல்வந்தர் வீட்டில் வசிக்கும் நாயின் செல்வசெழிப்பை பார்த்து தானும் அங்கு வாழ விரும்பும், அந்த நாயும் தன்னை எவ்வாறு அந்த வீட்டினர் கவனித்து கொள்கிறார் என கூறிகொண்டு வீடுவரை வந்துவிடும், ஓநாய் நாயின் கழுத்தில் ஒரு பட்டி காணப்பட அது என்ன என வினவ தன்னை கட்டிப்போட பயன்படுத்தும் பட்டி என நாய் கூற ஓநாயிற்கு புரிந்தது நாயின் நிலை. தொடர்ந்து நியாத்திற்காக போராடமல் விட்டால் இலங்கையிலுள்ள அனைத்து இன மக்களுக்கும் ஆபத்தாக முடிந்துவிடும். நீதியினை இலங்கையில் கோருவது மாயை என இலங்கை அமைச்சர் தன் வாயாலேயே கூறுகிறார்.
-
மசூதி, தேவாலயங்களில் காவிக்கொடி - அயோத்தி ராமர் கோவில் திறந்த பிறகு நாடெங்கும் நடந்தது என்ன?
தெற்காசிய நாடான இலங்கை எனும் நாடு ஒரு முன்னுதாரணமாக உள்ளது, அதனை பார்த்தும் திருந்தாத நாடுகளில் இந்தியாவும் ஒன்று, மக்களை பிரிக்கும் சாதாரண அரசியல் இலாபங்கள் இலங்கை போன்ற அதிகமான முட்டாள்கள் வாழும் நாடுகளிலே சாத்தியம்
-
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் செய்திகள்
இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராகவுள்ள முன்னாள் நியுசிலாந்து அணித்தலைவர் பிரன்டன் மக்கலத்தின் ஆடுமுறை உத்தி, வழமையான 5 தின போட்டிகளில் ஆடும் பாதுகாப்பு முறையுடன் கூடிய 5 நாளிற்குரிய நேர்த்தியான ஆட்டம் போலில்லாமல் வழமைக்குமாறான ஆட்டமுறைமை, இது இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது குறிப்பாக கை மாற்றி ஆடுவது, நிலை மாற்றி ஆடுவது என. இதே போலவே மக்கலம் ஆக்கிரோசமாக இந்த மைதானத்திலே 200 ஓட்டங்களுக்கு மேல் குவித்திருந்தார் என கருதுகிறேன், இவரது பாணியினை இங்கிலாந்து அணிக்கு கடத்தியுள்ளார், இந்த வெற்றிகளின் பின்னே சத்தமின்றி இருந்த வீரராக மககலத்தினை கருதுகிறேன். https://en.wikipedia.org/wiki/Bazball
-
ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீண்டும் ஆயுதங்களை வழங்கவேண்டும் : சாணக்கியன் கோரிக்கை!
ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வரிகள் கேட்டி பைரன் என்பவரது வரிகள். இஸ்லாமிய பயங்கரவாதம் எனும் கருதுகோள் இரட்டை கோபுரத்தாக்குதலின் பின்னர் உருவானதாகும், அதில் சம்பந்தப்பட்ட இரண்டு தனிப்பட்ட தரப்புகளும் அவ்வாறான கருதுகோள் உருவாக்கத்திற்கு காரணியானவர்கள், தாக்குதல் நடத்தியவர் தனது தனிப்பட்ட பிணக்கினை (தன்னை பயன்படுத்திவிட்டு தூக்கியெறிந்துவிட்டமையால்) ஒரு பொதுநலன் நடவடிக்கை என தனது பிணக்கினை தீர்த்து கொண்டார், அதன் மூலம் நிதி என பல விடயங்களில் ஆதாரமும் கிடைத்தது, மறுதரப்பிற்கு அதன் நவீன கால காலனித்துவ நோக்கத்திற்கு அது ஒரு அனுகூலமாக இருந்து. ஆனால் அதனால் உண்மையாக பாதிக்கப்பட்டது சாதாரண பொதுமக்கள் அவர்கள் மேலும் மேலும் அடக்குமுறைக்குள்ளாக்க இந்த கருதுகோள் உதவியது, மறுதரப்பிலிலும் பாதிக்கப்பட்டது சாதாரண பொதுமக்கள்தான். இலங்கையில் நடந்த ஈஸ்டர் தாக்குதல் இன்னுமொரு உதாரணம். Cognitive Distortions என்பது எமது சிந்தனைகள் எவ்வாறு ஒரே வகையாக சிந்திக்க தலைப்படுகிறது என கூறப்படுகிறது. இதில் குறிப்பாக ஒருவகை மனப்பிறழ்வினை கறுப்பு வெள்ளையாக சிந்தித்தல் என கூறுவார்கள், அதாவது ஒன்றில்லாவிட்டால் மற்றது (இரண்டே இரண்டு தெரிவுகள் கொண்ட சிந்தனை, சிந்தனைகளுக்கு அடையாளம் கொடுப்பது). இவ்வாறான மனப்பிறழ்வு சிந்தனை படித்த மற்றும் பாமர மக்களிடையே காணப்படுகிறறதாக கூறப்படுகிறது. இந்த வகை மனப்பிறழ்வினை வியாபாரத்தில் வாடிக்கையாளரது பலவீனத்தினை அவர்களுக்கெதிராகவே பயன்படுத்துவார்கள். தனிப்பட்ட சிலரது நடவடிக்கைகளுக்கு தவறான அடையாளம் கொடுத்து, வெறுப்பு சிந்தனைகளை உருவாக்குவது குறுங்கால நலனை கொடுக்கும் ஆனால் நீண்ட காலத்தில் அது அவர்களுக்கு தீமையினை அதிகம் உருவாக்கும், இலங்கையில் பேரினவாதம் போல்.
-
ஸ்ரீலங்கா டெலிகொமில் முதலீடு செய்வது குறித்து முகேஸ் அம்பானி ஆர்வம் - இந்திய ஊடகம்
உங்கள்கருத்திற்கு நன்றி, சாதாரண பத்திரிகை செய்திகளினடிப்படையாக கொண்டு சமூகமாற்றங்களை அடையாளம் காணுவதற்காக வியாபாரத்துறையில் முன்னாள் புலனாய்வாளர்கள் பயன்படுத்த பட்டுவதாக வாசித்துள்ளேன். https://trends.google.com/trends/?geo=AU&hl=en-US முக்கிய அரச அதிகாரிகள் மற்றும் அரச பிரதிநிதிகளின் தொலைதொடர்புகள் ஒரு முக்கியமான விடயமாக இருக்காதா? முன்னைய காலங்களை விட தற்கால தொலைதொடர்பில் மிகவும் பாதிப்பினை ஏற்படுத்த கூடிய நிலையில் (தொலை தொடர்பு, இணைய, பூகோள அமைவிட அவதானிப்பு) வளர்ந்துள்ளதாக கருதுகிரேன். தற்கால இலத்திரனியல் போருக்கு பெருமளவில் இந்த தொலைதொடர்பினை பயன்படுத்துகிறார்கள், வெளியில் இருந்து செய்யப்படும் செயலை கண்டுபிடித்துவிடலாம் ஆனால் அந்த சேவை வழங்குநரே செய்தால் வெளியே தெரியவாய்ப்பில்லை என கருதுகிறேன்.
-
ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீண்டும் ஆயுதங்களை வழங்கவேண்டும் : சாணக்கியன் கோரிக்கை!
when the mind believes what it thinks, its names cannot be named, and tries to make it real through a name. it believes that its names are real, that there's a world out there separate from itself. that's an illusion. the whole world projected. சாதாரணமாக சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை திசை திருப்ப மத ரீதியாக இஸ்லாமிய பயங்கரவாதம், இன ரீதியாக தமிழ் தேசியம் என பிரச்சினைகளை மடை மாற்றம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் நிலையினை எம்மவர்களும் அதன் தாக்கம் புரியாமல் உள்வாங்கப்படும் நிலை உருவாகி வருவது போல் காணப்படுகிறது. தனிப்பட்ட நிலையில் ஒருவரது புரிதலுக்கு ஒரு பெயர் வழங்கப்பட்டு அதனை தீவிரமாக்கி பின்னர் அதனை ஒரு தீவிரவாதமாக்குவதினூடாக அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதனை தவிர்ப்பதில் அடக்குமுறையாளருக்கு தொடர்ந்து வெற்றிகிடைத்துவருகிறது.
-
ஸ்ரீலங்கா டெலிகொமில் முதலீடு செய்வது குறித்து முகேஸ் அம்பானி ஆர்வம் - இந்திய ஊடகம்
இது இந்திய பாதுகாப்பு, மற்றும் உளவு சம்பந்தப்பட்ட விவகாரமாக இருக்க வாய்ப்பிருக்கும் என கருதுகிறேன், இலங்கை அரசின் தகவல் பரிமாற்றம் ஒரு நெருக்கடிக்குள் தள்ளப்படலாம், சில தேசிய நிறுவனங்களை வெளியாருக்கு விற்க கூடாது, எனது கருத்து தவறாக இருக்கலாம்.
-
ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்
https://en.wikipedia.org/wiki/1953_Iranian_coup_d'état 1953 இல் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரச தலைவரை தூக்கியெறிந்துவிட்டு மன்னர் ஷாவினை தொடர்ந்தும் ஆட்சிப்பொறுப்லிறுத்தியதற்கான காரணமாக BP எரிபொருள் நிறுவனம் தனது ஈரானிய எரிபொருளிற்கான கொடுப்பனவை சரியாக செய்கிறதா என பரிசோதிப்பதற்கான அனுமதியின மறுத்ததில் இருந்து ஆரம்பமாகிய விவகாரம், பின்னர் பிரித்தானிய அரசு, ஈரானிற்கெதிராக உலக பொருளாதார புறக்கணிப்பு, அதன் தொடர்ச்சியாக அந்த மக்களாட்சி அரசு தூக்கியெறியப்படும் நிலை என உருவாகியுள்ளதாகவும், இந்த சதிப்புரட்சியின் பிண்ணனியில் அமெரிக்க வகிபாகத்தினை 2013 இல் அமெரிக்கா வெளியிட்டதாக இந்த விக்கி இணைப்பில் கூறப்பட்டுள்ளது. தேசிய மயப்படுத்தல் எனும் வார்த்தை பிரயோகம் அந்தந்த நாட்டு மக்களை கவரலாம், ஆனால் அதனை நடைமுறைப்படுத்த முடியாது, அமெரிக்காவாகட்டும் பிரித்தானியாவாகட்டும் அந்த நாடுகளின் வெளிவிவகார கொள்கையினை முதலாளிகள்தான் தீர்மானிக்கிறார்கள் என்பது எனது தனிப்பட்ட அவதானிப்பு.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
சென்னை விமானநிலையத்தில் குண்டு வெடித்தாலும் அல்லது கட்டுநாயக்கா விமானநிலையத்தில் குண்டு வெடித்தாலும் பாதிக்கப்படுவதென்னவோ சாதாரண மக்கள் என்ற அடிப்படை அறிவில்லாத செயல்.
-
செங்கடலிற்கு ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிராக கப்பலை அனுப்புவதா ? ஆராய்கின்றது இலங்கை கடற்படை
நீங்கள் தேவையில்லாமல் குழம்புகிறீர்கள். இந்த திரைப்படம் ஒரு உண்மை சம்பவம், நியூசிலாந்திலிருந்து அமெரிக்கா செல்லும் இவர் மாறுபட்ட சாலை விதிகளால் நகரத்தில் வாகனம் செலுத்தி விபத்தினை ஏற்படுத்தும் நிலையினை தவிர்த்திருப்பார், அதற்கு மாறுபட்ட வீதி ஒழுங்கினை குற்றம் சாட்டுவார் அதாவது அமெரிக்காவில் வலது புறமாக வாகனத்தினை செலுத்தவேண்டும் நியுசிலாந்தில் இடது புறமாக வாகனத்தினை செலுத்தவேண்டும், அதற்கு அவருடன் கூட இருந்தவர் கூறுவார் நீங்கள் எந்த நாட்டில் வேண்டுமானாலும் வாகனம் ஓட்டலாம் உங்கள் சாரதி இருக்கை வீதியின் மத்திய பகுதியில் இருக்கவேண்டும் என்பார். இந்த தத்துவம் போலவே நாம் எங்கு வேண்டுமானாலும் போகலாம் அவர்கள் போல் பேசலாம் ஆனால் அடிப்படை மாறாது.
-
செங்கடலிற்கு ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிராக கப்பலை அனுப்புவதா ? ஆராய்கின்றது இலங்கை கடற்படை
2002 இல் அமெரிக்க ஆதரவுடன் தமது படையினரை இலங்கை வலுப்படுத்தியுள்ளது. https://en.wikipedia.org/wiki/Sri_Lanka–United_States_relations அமெரிகா இலங்கை படையினருக்கு கொத்துகுண்டுகளை பயன்படுத்துவதற்கு ஆலோசனை தெரிவித்ததாக மேலே உள்ள இணைப்பில் கூறப்படுகிறது, ஆனால் இலங்கை அதனை முன்னரே பயன்படுத்தியிருந்தது. கவுதிகளினுடன் நேரடியாக போராட வேண்டியதேவை இலங்கை கடற்படைக்கு இல்லை, கவுதிகள் புலிகள் போல குறைந்த வளங்கலை மட்டும் வைத்து கொண்டே நேரடியாக மோதும் அமைப்பு அல்ல, அவர்கள் ஏவுகணைத்தாக்குதல் செய்வதுதான் கவுதிகளின் போர் முறை, இலங்கை கடற்படையிடம் ஏவுகணை எதிர்ப்பு தொழில்னுட்பம் இல்லை என்பதால் அந்த எல்லையினை விட்டு வெளியே ( இலங்கையில் துறைமுகத்தில் கட்டி வைப்பதை போல ஒரு நிலைதான்) பாதுகாப்பாக இருப்பார்கள். ஆனால் இலங்கைக்கும் அமெரிக்காவிற்குமிடையே உள்ள ஒப்பந்தினை இலங்கை அரசு மதிப்பதாக தெரிகிறது அதனாலேயெ இலங்கை தனது கடற்படையினையும் அங்கு அனுப்புகிறது (இலங்கைகு கடற்படை அனுப்ப வேண்டிய கட்டாயம் இல்லாத போதும்), ஒரு காலத்தில் இலங்கைக்கு உதவிய அமெரிக்க, மேற்கு கூட்டணிக்கு தற்போது இலங்கை தனது நன்றி கடனை செலுத்துகிறது. அதுவும் ஒரு அரசியல்தான், இலங்கையில் தற்போதுள்ள அரச தலைவர் வலதுசாரி பின்புலம் கொண்டவர் (யு என் பி) அதனால் அமெரிக்க, மேற்கு மற்றும் இஸ்ரேலிய ஆதரவு நிலைதான் உண்மையான நிலைப்பாடு.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள், அந்த பதிவும் இன்னுமொரு யாழ்கள முக்கிய பதிவாக வருவதற்கு வாய்ப்புள்ளது.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
இந்த றோ அதிகாரியினை தேன் பொறி (Honey Trap) எனும்முறையில் தம்பக்கம் அமெரிக்கா ஈர்த்திருந்ததாக கூறப்பட்டது, இந்திய இலங்கை ஒப்பந்தம் நிக்ழ்ந்த 3ம்ணித்தியாலத்திற்குள் அமெரிக்க அரசு அதனை வரவேற்றதன் பிண்ணனியிலேயே அவரினை இந்தியா அடையாளம் கண்டு கொண்டதாக பத்திரிகைகளில் வாசித்தாக நினைக்கிறேன். அவ்வாறாயின் இலஙகை அரசிற்கும் இந்த ஒப்பந்த விவகாரம் ஏற்கனவே தெரிந்திருக்க வாய்ப்புள்ளது, இலங்கை அரசு இலங்கை அரச தொலைக்காட்சியில் ஒரு ஆவணம் (Documentary) ஒன்றினை வெளியிட்டிருந்தது அதன் தலைப்பு அக்கோடிங் அன்ட் வித்டோரவல் என நினைக்கிறேன் சரியாக தெரியவில்லை, ஒப்பந்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால் என்ன நிகழும் எனும் தொனியிலான ஒரு ஆவணம்.
-
இலங்கை வருகிறார் ஜப்பானிய நிதியமைச்சர்
தாம் இலங்கையர் என பெருமையாக கூறுபவர்கள் அவமானப்படும் வகையில், இலங்கை ஒரு சிறுபான்மையினரினை அடக்குவதற்காக கடன் வாங்கி; இப்போது அதனை செலுத்த முடியாமல் திணறுகின்றது. இலங்கையில் இன்னமும் பயங்கரவாத சட்டத்தின் பின்னே மறைந்து கொண்டே அரசுகள் இயங்கும் கேவலமான நிலையிலேயே இலங்கை உள்ளது, இதனை பற்றி படித்த, பாமர மக்கள் கூட கவலைப்படுவதில்லை, காரணம் அந்தளவிற்கு இனவாதம் கண்ணை மூடியுள்ளது, அந்த அவமானகரமான நிலையினை கூட உணரமுடியாதவாறு எருமை மாட்டின் மேல் மழை பெய்வது போல இருக்கும் இலங்கை குடிமக்களுக்கு, அவர்கள் அரசு கொடுக்கும் பரிசு என்ன என்பதனை காலம் தீர்மானிக்கும். இலங்கை எவ்வாறான கடன் மீழ்சீரமைப்பிற்கு தயாராகிறது என்பதனை இதுவரை தெரிவிக்கவில்லை, 87 பில்லியன் கடனினை எவ்வாறு தீர்க்கவுள்ளது? debt swap 1:1 அல்லது 1:2 என்பது கூட தெரிவிக்கபடவில்லை. நாடுகளின் கடன் மறுசீரமைப்பு தெரியவில்லை, ஆனால் நிறுவனங்கள் தமது கடன் மறு சீரமைப்பிற்கு 1:1 என்றால் $100 கடனிற்கு $100 செலுத்துவது 1:2 என்றால் $100 கடனிற்கு $200 செலுத்துவது. ஏற்கனவே 87 பில்லியன் கடன் நாட்டின் மொத்த தேசிய வருமானத்தில் 131% இந்த 87 பில்லியனை 1:2 என செலுத்துவதாயின் 174 பில்லியன் கடனாகிவிடும், அது தற்போதய கடனினை விட இரட்டிப்பானது. இந்த கடன் சுமைகள் அனைத்தும் மக்கள் மேலேயே சுமத்தப்படும், ஆரம்பத்தில் 10 வருட பணமுறியினை பயன்படுத்தி கடன் மீழழிப்பு செய்யப்படும் என கூறப்பட்டது, இலங்கையின் கிரடிட் தரம் தாழ்வாக உள்ள நிலையில் முதலீட்டாளர்கள் எவ்வாறு ஆர்வம் காட்டுவார்கள்? இலங்கை பணமுறியில் முதலிட? அல்லது அதிக வட்டி செலுத்த வேண்டும் (ஆபத்தான முதலீடு). வட்டி அதிகம் செலுத்தினால் ஒரு கட்டத்தில் மீண்டும் இலங்கை கடன் செலுத்த முடியா முறிவு நிலைக்குள்ளாகும் (குறைந்த கால முதிர்ச்சி கடன்), உதாரணமாக 30 வருட வீட்டுக்கடனை 10 வருடத்திற்குள் செலுத்துவதென்றால் மீள செலுத்தும் மாதாந்த கட்டணம் அதிகரிக்கும் அதனை போல ஒரு நிலைதான். இலங்கை தொடர்ந்தும் கடன் வாங்கி கடன் செலுத்தி ஒரு ஐந்தாறு வருடங்களின் பின்னர் மீண்டும் தற்போதுள்ளதனை விட அதிக கடனுக்கு வட்டி கூட செலுத்தமுடியாமல் தற்போதுள்ள நிலையினை விட இன்னும் மோசமானநிலையில் முறிவடையலாம். இதற்கு காரணம் அரசுகள் மட்டுமல்ல அங்குள்ள மக்களின் மனங்களும்தான் காரணம். பொதுவாக பார்க்கும் போது இலங்கை இந்த நச்சுவட்டத்திற்குள்ளே தொடர்ந்திருக்க வாய்ப்புள்ளது அல்லது ஏதாவது புரட்சிகரமான மாற்ற்ம் நிகழ வேண்டும்.
-
காத்தான்குடியின் முதல் Satellite 🛰️
சின்ன வயதில் பழைய VHF & UHF video cassette player இனை செய்மதி அலைகளை பெறுவதற்காக செய்த கோமாளித்தனங்கள் நினைவுக்கு வருகின்றது இந்த கட்டுரையினை வாசிக்கும் போது😁.
-
நியூசிலாந்து பாராளுமன்றத்தை அதிரவைத்த இளம் பெண் MP
1840 இல் நியூசிலாந்து பழங்குடி இனத்தலைவர்களுக்கும் பிரித்தானியாவிற்குமிடையே ஏற்பட்ட உடன்பாட்டினை பிரித்தானியா கடைப்பிடிக்கவில்லை என தற்போதுவரை பிரச்சினை அங்குள்ளது என கருதுகிறேன், அதிகாரத்தினை கைபற்றுவதற்கான ஒப்பந்தத்தினை உருவாக்கி பின்னர் அதனை குப்பையில் போட்டுவிட்டார்கள் எனும் கருத்து நிலவுகிறது. அழகான நாடு, பழகுவதற்கு இனிமையான மனிதர்கள் கொண்ட அமைதியான நாடு, தனது இராணுவத்தினை மிக சிறியளவில் பேணும் நாடு, தனது பணத்தினை தேவையற்ற யுத்த செலவிற்காக செலவிட விரும்பாத நாடு. கடந்தகாலத்தில் இஸ்லாமியர்களின் மேல் நிகழ்த்தப்பட்ட வெறுப்பு தாக்குதலுக்கெதிராக (அவுஸ்ரேலியர் மேற்கொண்ட தாக்குதல்) உறுதியான முடிவினை எடுத்து மேற்குநாடுகளுக்கு முன் மாதிரியாக திகழ்ந்த நாடு, துணிச்சலாக பொருளாதார முடிவு எடுக்கும் ஒரு சிறியநாடு.
-
கர்வம் - அதை எல்லாம் எப்போதோ தூக்கி எறிந்துவிட்டேன்.. இளையராஜா பேச்சு..!
இளையராஜா திறமையானவர் மற்றும் உளவியலாக சில இடையூறினை சந்திப்பவராக இருப்பார் எனகருதுகிறேன், இளையராஜாவுக்கு கர்வம் இருப்பதாக உணரவில்லை, ஆனால் அவர் சிறுவயதில் பாதிக்கப்பட்ட ஒரு பிற்போக்கு சமூகத்தின் பாரபட்சத்தினால் ஏற்பட்ட கோபத்தினால் தன்னிலை மீறுகிறார், ஒரு சமூக போரளியின் நியாயமான கோபம் இலக்கின்றி காட்டாறு போல போவதாக உணர்கிறேன். மற்றது கர்வம் என்பது ஒருவித பெருமிதம் என கருதுகிறேன் சிலர் அதனை சில்லறைதனமாக நடப்பதனை கர்வம் என தவறாக கருதுகிறார்களோ என தோன்றுகிறது. எனக்கு கர்வம் இல்லை என்ற கர்வம் உண்டு😁.
-
ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம்: வவுனியாவில் பதற்றம்!
காணாமல் போனவர்களுக்காக போராடுபவர்களின் போராட்டம் உண்மையில் ஒரு உண்மையான ஜனநாயகத்திற்கான போராட்டம், 87 காலப்பகுதியில் பெரும்பான்மை இனமக்கள் கூட காணாமல் ஆக்கப்பட்டனர், இது ஒரு சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிரான போராட்டம், அனைத்து மக்களுக்கும் சட்டம் மூலம் உரிய பாதுகாப்பினை உறுதி செய்யும் போராட்டம் என்பதனை சகல மக்களும் உணர்ந்து இப்போராட்டத்திற்கு ஆதரவு வழங்கவேண்டும். தமிழ் மக்களில் கூட இந்த போராட்டத்தினை கண்டு கொள்ளாமல் இருப்பதும், அதற்காக அவர்களுக்கு ஆதரவு வழங்குபவர்களின் செயற்பாட்டை உணர்ச்சிவசப்படுபவர்கள் என கொச்சைபடுத்துபவர்களும் நம்மில் இருகின்றார்கள். அவர்களின் போராட்டம் ஒரு சுயநல போராட்டம் அல்ல மறைமுகமாக ஒட்டு மொத்த இனங்களின் சாமானியனின் அடிப்படை சட்ட உரிமைக்கான போராட்டம். இந்த போராட்டத்தினை கொச்சைபடுத்துபவர்கள் தமக்கு இவ்வாறு இழப்புகள் ஏற்படும்போதுதான் அந்த வலியினை உணருவார்கள்.
-
வறுமை நிலைக்குள்ளாகியுள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தை தாண்டியுள்ளது
அதிகரிக்கும் வருமான வரி பொருளாதார வளர்ச்சியில் மறைமுகமான பாதிப்பினை ஏற்படுத்தும், அமெரிக்காவினது கடன் அதன் மொத்த தேசிய வருமானத்தில் 122% உள்ளது, இலங்கையின் கடன் மொத்த தேசிய வருமானத்தில் 131% உள்ளது, ஒப்பீட்டளவில வெறும் 9% மட்டுமே இலங்கையினை விட குறைவான கடனையுடைய அமெரிகா எப்பிடி இவ்வளவு கெத்தாக திரிய இலங்கை மட்டும் பிச்சைகாரன் மாதிரி (கடன்பட்டான் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்) திரிகிறது?
-
செங்கடலிற்கு ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிராக கப்பலை அனுப்புவதா ? ஆராய்கின்றது இலங்கை கடற்படை
இறுதி யுத்த காலத்தில் இலங்கை கடற்படை, இலங்கை விமான படை ஆதரவுடன் சர்வதேச கடற்பரப்பில் புலிகளின் கப்பல்களை தாக்கி அழித்தது, அதனை இலங்கை கடற்படை தாம் ஒரு நீலக்கடல் கடற்படை என்பதாக குறிப்பிட்டது (blue water navy). மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட வழங்கல் தொழினுட்பம் கொண்ட எதிரியுடன் போரிட்ட இலங்கை கடற்படை, மத்திய கிழக்கு நடவடிக்கையில் ஒரு சிறு துரும்பையும் எடுக்காது, இது ஒரு இலங்கை அரசின் அரசியல் சதுரங்க நடவடிக்கை போலவே தென்படுகிறது.