• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

நிலாமதி

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  9,283
 • Joined

 • Last visited

 • Days Won

  9

Everything posted by நிலாமதி

 1. தமிழ் சிறி ..........நல் லாய் குடிபீங்க்களோ ? செவென் அப (..seven up ...........) சொன்னேன்.
 2. பகிடி நல்லாய் இருக்கு சரியான லைசன்ஸ் இல்லை .......குடிச்சிட்டு ஓடுறார் .....திருட்டு கார் வேற .... .இதெல்லாம் விடுங்க ...........அந்த பத்தாயிரம் ஆருக்கு ..........?...
 3. கோமதியும் சுமதியும் நல்ல நண்பிகள். வசியும் சிறீயும் தொடர்ந்தும் நண்பர்களாய் இருக்க வாழ்த்துக்கள்.
 4. வசி சுதா வுக்கு ............பாராட்டுக்கள் . நான் நினைத்தது ............. .கோ ..ம...தி ம .....யி ...ல் தி ....ல் லை இடமிருந்து வலம் .........மேலிருந்து கீழ் சிறீ .............என்ன பரிசு கொடுக்கலாம். ? கோமதியா ? மயிலா ? தில்லை (கூத்தாண்டவர் ) கோயிலுக்கு ஒரு டிக்கற்?
 5. மீண்டும் கவனிக்கவும் ........மூன்று சொற்களும் சதுர வடிவமாக் அமையும் போது...அதே .....கருத்து மாறாது ............. ...........ex O....O....O O....O....O O....O....O.....
 6. மூன்று எழுத்துக்களை கொண்ட மூன்று தமிழ் சொற்கள் .........அவை எப்படி எழுதினாலும் சதுரவடிவமாக அமையும் போது ..........அதே சொற்கள் திரும்பவும் வரும் . அவை (அந்த சொற்கள் )எவை ..........."? உதாரணம் .......... வி க ட க வி .<............> வி க ட க வி ஆனால் நீங்கள் தரவேண்டியது மூன்று சொற்கள்.............??
 7. QUOTE (நிழலி Jun 10 2009 @ 01:25 AM) நண்டுக்கு மிக பிடித்த உணவு எது (விவாசாயிகள் இதனால் பயன் பெறுவதுண்டு)? விடை ............... நத்தை (..சரியா )........... எந்த உயிரினம் பிறந்த போது உள்ள நிறையை விட , அதன் முதிர்ச்சியான வயதில் 60,000 மடங்கு பெரிதாக இருக்கும் ? விடை .............கங்காரு ....(சரியா)...
 8. ஆறு பதிவுகள் போட்டு விடீர்கள் நிர்வாகத்துக்கு எழுதி கேட்கவும்.
 9. அடித்து சொல்கிறேன் ........நீங்கள் "நாட்டான் " என்றுதான் அழைக்கபடுவீர்கள். பெயரில் என்ன ஐயா இருக்கு ............செயலில் இறங்குங்கோ ?
 10. தமிழ் சிறி ........பிரசாந்த் ........கறுப்பி ........யாவருக்கும் நன்றி .......தாயக நிலையை கருத்தில் கொண்டு இன்றும் எனக்கு சாதாரண நாளே .......... மகிழ்வான சேதிகள் கேட்டபின் மகிழ்வை கொண்டாடுவேன். .
 11. ரகசியா சுகி .........நிர்வாகத்திடம் (மோகன்) எழுதி கேளுங்கள். அல்லது இதில் நிவாகதுக்கு ஒரு விண்ணப்பம் செய்யுங்கள்.
 12. இணையவனுக்கு ...........இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 13. யாழ் கள பதிவின் படி , இன்று பிறந்த நாள் காணும் தமிழச்சிக்கு ,வாழ்த்துக்கள்
 14. யாழ் கள பதிவின் படி இன்று பிறந்த நாள் காணும் இளங்கவிக்கு என் வாழ்த்துக்கள். இதுவரை கண்ட துன்பம் பனி போல விலகி என்றும் இன்பமாய் வாழ என் வாழ்த்துக்கள் .........அக்கா
 15. சக கள உறவாளர் ..........நெடுக்க்ஸ் ..........நூறாண்டு நோய் நொடியின்றி வாழ்க என வாழ்த்தும் அக்கா நிலாமதி
 16. நடை பயிலும் நம்ம தமிழ் சிறீ தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.......
 17. நம்ம தமிழக தம்பியை அரவணைக்காமலா போவோம் ?.........வருக நம் தம்பி தருக உங்கள் பதிவுகளை. அக்கா நிலாமதி
 18. சீதையை தொடாரா ? இல்லயா என்பது ராவணனுக்கும் சீதைக்கும் தான் தெரியும்
 19. நல்ல கவிதை .......காதலி ஒரு வேளை மனம் மாறலாம் . ஆனால் காதல் ஒரு நாளும் தோற்பதில்லை. காதல் புனிதமானது . அது கடவுள் போன்றது. முதற் காதல் நெஞ்சை விட்டு அகலாதது . நட்புடன் நிலாமதி ..............
 20. இலவம் பஞ்சு .......... நகரிலே பிரபமான ஒரு கலாசாலை , ஆண்டு விழா தமிழ் தேசீய முறைப்படி உயர் வகுப்பு ஆண்கள் பட்டு வேட்டி உடுத்து ,பெண்கள் சேலை கட்டி ,பொட்டும் பூவுமாக அந்த மண்டபம் கலகலபாக இருந்தது .விழா நாயகன் ,அதிபர் ,ஊர் பெரியவர் எல்லோரும் உரை ஆற்றி முடிய , நிகழ்ச்சிகள் தொடங்கின . நடனம் ,நாடகம், வில்லுப்பாட்டு என்று ஒரே கொண்டாட்டம் , ராகவனுக்கு இருப்பு கொள்ள வில்லை மீனாலக்ஸ்மி எனும் மீனு குட்டி இடம் தன் எண்ணத்தை சொல்ல .....மீனு ஆழகானவள் பண்பானவள் ,வசதி படைத்தவள் என்றாலும் கர்வமர்றவள் எல்லாராலும் விரும்பபட்டவள் .படிப்பிலும் கெட்டிக்காரி . ராகவன் உள்ளம் தன் மீனுக்குட்டியிடம் எப்படியாவது பேசி தன் உள்ளதை சொல்லிவிட வேண்டுமென்பது. அவனும் நல்ல பிள்ளை ,உதவும் மனம் கொண்டவன் ,உயிர் நண்பன் வாசு வுக்கும் தெரியும் ,ராகவன் மனதில் மீனு இருப்பது விழா முடிவில் ,உயர் வகுப்பினருக்கான விருந்துபசாரம் நடந்தது . எல்லோரும் ஆண் பெண் என்று மாறி மாறி அமர வேண்டும் . மீனுவுக்கு பக்கத்தில் இடம் கிடைத்த வாசு ,ராகவனுக்காக விட்டு கொடுத்தான் . ராகவனும் மீனுவும் அருகருகே ,உணவு பரிமாற்ற பட்டது . வாசு கண்ணை காட்ட , அவன் தயங்கி தயங்கி ...தொடங்கினான் , மீனு நீங்க ,தொடர்ந்து என்ன செய்ய உத்தேசம், ...அப்பா என்ன சொல்லியிருக்கிறார் ? என்று ....பிறகு .அதன் .பிறகு என்று ........நேர காலத்துடன் ஒருவனை அப்பா பார்த்து கட்டி வைப்பார் ? ஏன்று.... ஏன் கேட்கிறீங்க ? அந்த ஒருவன் ஏன் நானாக இருக்க கூடாது ? ........நீண்ட அமைதிக்கு பின் .....தனது முறை பையன் அமரிக்காவில் டாக்டருக்கு படிப்பதாகவும் ,அவருக்கு தான் தன்னை கொடுக்க போகிறார் என்றும் சொன்னாள் ராகவனுக்கு தாங்க முடியவில்லை . .. தொடர்ந்து சாப்பிட முடியவில்லை ..சாப்பாடு எங்கே உள்ளே போனது ...அவள் வாயில் என்ன பதில் என்று அல்லவா பார்த்து இருந்தான் . ....இவ்வளவு காலம் காத்து இருந்து , அவள் ப்டிப்பு வீணாக போய்விட கூடாது, குழம்பி போய்விட கூடாது ..என்று காத்து காத்து இருந்து கடைசியில் ........... வாசு பாடினான் .....மச்சான்.... .." என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே ....காதலில் தோல்வி வந்தாலும் ....தன்னாலே இன்னொன்று கிடைத்துவிடும்.....கடவுள் இருக்கிறான் மனம் ,தளராதே ........கடவுள் இருக்கிறான் மனம் தளராதே ...... This post has been edited by nillamathy: Today, 08:56 PM
 21. அப்பா வருவாரா? வாழ்க்கையின் இன்னுமொருநாள் மெல்ல உதயமாயிற்று , நித்திலா எழுந்ந்து ,காலைக்கடன் முடித்து , அடுப்பை பற்றவைத்து ,பிள்ளைகளுக்கு தேனிர் தயாரிக்க ஆயத்தமானாள் .. நிகிலாவும் நித்தியனுமாக இரு பிள்ளைகளுடன் , புலம் பெயர்ந்து யாழ் நகரத்துக்கு வந்து இரண்டே மாதங்கள் . நிதிலாவும் கணவன் ராகவனும் ,பிழைப்பு தேடி ,ஈழத்தின் ஒரு தீவிலிருந்து வந்திருந்தார்கள் ,ராகவன் எற்கானவேஆட்களை வைத்து கடற்தொழில் செய்தவான், காரைநகர் நேவியின் அட்டகாசத்தால் ,தொழில் செய்யமுடியாத i நிலையால்.கெட்டும் பட்டணம் போ என்பதற்கிணங்க .இரு மாதங்களுக்கு முன் தான் வந்திருந்தனர். யாழ் கத்தோலிக்க தேவாலயம் அருகே ஒரு குடிசை கிடைத்து ,பிள்ளைகளையும் அருகிலிருக்கும் கன்னியர் மட பாடசலையில் சேர்த்துவிட்டு ,கணவன் மனைவி இருவரும் ,வேலை தேடி ,புறப்பட்டார் கள் ., கடைசியாக ஒரு முதியவர் இரங்கி ,ஒரு சைக்கில் கடையில் திருத்துனராக் ,வேலை கிடைத்தது. ராகவன் பள்ளி காலத்தில் ்வீட்டுக்கு அருகாமையில் இருந்த மணியம் சையிக்கில் கடையில் தனது ஓய்வு நேரத்தை செலவிட்டமை ,இப்பொது கை கொடுத்தது, கடந்த இரு வாரங்களாக அவன் வேலைக்கு செல்கிறான் , வீட்டிலும் ஏதோ குடுமபத்துக்கு ,அரை வயிறு உணவாவது கிடைக்கிறது ,போதும் என்ற மனம் கொண்ட அவர்கள் வாழ்வு இனிதே ஓடிக்கொண்டு இருந்தது. அதிகாலை ஆறு மணிக்கே ,வேலைக்கு செல்லும் அவன் போய்விட்டதும் எட்டு மணிக்கு பிள்ளைகளை அனுப்பிவிட்டு , அருகில் இருந்த வயதான மூதாட்டிக்கு ஏதும் சரீர உ தவி செய்து கொடுப்பாள்,அவவும் சமையலுக்கு தேவையான் பொருட்கள், சிறு பண மும் கொடுப்பார். இது அவளது படிப்பு செலவுக்கு உதவியது. சிலசமயம் கடையில் அன்றாட தேவைக்கு பொருட்கள் கிடைக்கும் சிலசமயம் பொருட்கள் யானை விலை விற்கும் அன்றாடம் காய்ச்சியான அவர்கள் வாழ்வு, ஓரளவு ஓடிக்கொண்டு இருந்தது. ஒன்பது வயதேயான நிகிலாவும் ஆறுவயது நித்தியனும் நன்றாக படிப்பார்கள். வானில் வட்டமிடும் எதிரி வல்லூருகலுக்கும் , படையினரின் கெடுபிடிக்கும் மத்தியில் எங்கே விளையாட்டும்,பொழுது போக்கும், அருகில் உள்ள கன்னியர்மட கோவிலுக்கு சென்று வழிபாடுகளில் கலந்துகொள்வர், ஒரு நாள் ஒரு துறவி இவர்கள் துன்பத்தை கேட்டு ,பிள்ளைகளுக்கு வீட்டு பாடத்தில் உதவி செய்வதாக் சொன்னார் ,நிகிலா அமைதியானவள், நித்தியன் சற்று துடினம் சித்திரையில் பிறந்த உத்தம புத்திரன். அவனுக்கு எதிலும் வேகம், பிடிக்கும், ஒருநாள் சைக்கில் பழகி , விழுந்து காலில் காயப்படான், வைத்திய சாலைக்கு போகமுடியாத நிலையில் ,கன்னியர் மடத்தில் காயத்துக்கு கட்டு போட்டு ,முதலுதவி செய்தனர். இப்படியான ஒரு காலை பொழுதில் அவர்களது குடும்ப அமைதியை குழப்ப ஒரு சம்பவம் நடந்தது , வழக்கம் போல ராகவன் வேலைக்கு செல்லும் போது ,வெள்ளை வான் காரர், மறித்து விட்டனர் , தீவிலிருந்து ஏன் இங்கு வந்ததென்றும் ,சந்தேகம் இருப்பதாக கூ ட்டி சென்றவர்கள் விடவே இல்லை . கடைக்கார முதியவரும் அன்று மதியம் வேலைக்கு வரவில்லை ,விரைவில் முடித்து கொடுக்கவேண்டிய வேலை உள்ளது என்று வீடு தேடி வந்த பின் தான் தெரிந்தது ,நித்திலாவுக்கு ,ராகவன் ,பிடிபட்டவிடயம். அவளும் எல்லா இடமும் தேடி அலைந்து ,வேண்டியவர்களுக்கு விண்ணப்பமும் கொடுத்து விடாள் . இன்னும் ராகவன் வரவேயில்லை. நித்தியனும் தந்தையின் அருகாமையில் படுப்பவன் ,அப்பா எப்ப வருவார் ?என்று கேட்டு ,களைத்து ,இப்போதெலாம் அப்பா வருவாரா ?என்கிறான். ஊரவர்களும் பல கதைகளை சொல்லி அவள்மனம் ,வேதனையில் ,துடிக்கிறது, அவன் வருவானா? எங்கேயிருக்கிறான் , ஏதும் , உடலம் கிடப்பதாக கேள்விப்பட்டால் ,சென்று பார்க்கிறாள் அது அவனாக இருக்ககூடாதென்று. அவன் வருவானா ? அப்பாவருவாரா ? ......... எல்லாம் தெரிந்த அந்த ஆண்டவனுக்கு தான் புரியும். . This post has been edited by nillamathy: Dec 2 2008, 02:16 PM
 22. track back.........என்பதில் பின் தொடர (url) மேற்படி வருகிறது எனக்கு அதிகம் கணணி தெரியாது . அதுஎன்ன என்று விளகுவீங்களா நன்றி ./நிலாமதி