Jump to content

நிலாமதி

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  10347
 • Joined

 • Last visited

 • Days Won

  12

Everything posted by நிலாமதி

 1. வடி கால் , வாய்க்கால், கழிவு நீர்க்கால் வாய் ..பத்திரிகைக் காரனுக்கு நல்ல தமிழும் தெரியுதில்லை
 2. மிக மிக அழகாக சொல் லி இருக்கிறீர்கள் . அப்பாக்கள் மட்டுமே இதை உணர முடியும். பாராட்டுக்கள்
 3. காலச்சக்கரம் சித்திரையில் கொட்டித் தீர்த்த பெருமழையில் சிந்திய விதைகள் வளர்ந்து பெருவிருட்ஷமாகி கோடையில் நல் நிழல் தந்து பச்சை பசேலென்ற வண்ணங்க்காட்டி மலர்தல் காய்த்து கனி தரும் என மக்கள் மனம் குளிர்ந்த வேளை "சட்டென மாறுது வானிலை "என அயலூரில் சுழன்று அடித்த சூறாவளியுடன் எங்கள் மண்ணிலும் மெல்ல குளிர் எட்டிப்பார்க்கிறது ."நேற்று போல் இன்று இல்லை என்றுமே மாற்றம்" தான் இனி மரம் கிளைகள் அனைத்து தாவரங்களும் அணையப் போகும் விளக்கு சுடர் விட்டு ஒளிர்வது போல பல வண்ணம் காட்டி நிற்கும்,மெல்லிய காற்றில் ஆடி அசைந்து கோலங் காட்டி மகிழும். மீண்டும் ஒரு பலத்த காற்று மழை என சுற்றுச்சூழல் இலை உதிரும் , மரங்கள் விதவைக் கோலம் கொள்ளும். பறவைகள் இடம் மாறும் விலங்கினங்கள் சில்லிடும் குளிர் காலம் ஆரம்பித்த தென மானிடன் மூணு முனைப்புடன் அன்றாடம் பணி செய்வார்.குளிரைக் கடத்த அடுக்கடுக்காய் ஆடைகள் , அடுக்குகள் காலம் மெல்ல நகரும். ஆண்டு முடியும் , தை பிறந்தால் வழி பிறக்கும் என நம்பிக்கை நோக்கி நாட்கள் மெல்ல நகரும் கொட்டித் தீர்க்கும் பனிமழை , சறுக்கல் , சக்தி "விழுந்து எழுவது தான் வாழ்க்கை" என தத்துவம் பேசும் மெல்ல தை பிறக்கும் மாசி பனி மூசி(மூர்க்கமாக )பெய்யும் மெல்ல நிலம் வெளிக்கும் சித்திரை வரை ஆமை வேகமாக காலம் நகரும் ...இறுதியில் சித்திரை பிறந்து மீண்டும் ஒரு வசந்தம் காண காலச்சக்கரம் சுழலும்.
 4. உண்மையாகத்தான் கேட்க்கிறீர்ர்களா ? டென்மார்க்கிலிருந்த்து வந்த பண உதவி மூலம் வாழ்வில் கஷ்ட பட்ட் மக்களுக்கு உணவு விநியோகம், குடி நீர் கிணறு சிறு குடிசை அமைக்க உதவி போன்ற மனிதாபிமான செயல்களை அவரது ட்யூப் தமிழ் நிறுவனமூலம் தனது குழுவுடன் இணைந்து செயற்படடார் . இவருக்கு அம் மக்களிடையே செல்வாக்கு இருந்தது இதை பொறுக்காத அரசியல் ( வியாதிகள் )வாதிகள்.. கருப்பு ஆடுகள் என்பவர்களால் ..தூண்டப்படட சிலரின் முயற்சியால் ராணுவத்திடம் ஒப்படைக்க ப ட டார் .
 5. புலம் பெயர்ந்த தமிழர்கள் பல விதம் இந்த ஒற்றுமையற்ற சுயநலமிக்க இனத்துக்கு எப்படி விமோசனம் கிடைக்கும். ? இனத்துக்காக உயிரைவிடட ஆன்மாக்கள் மன்னிக்காது
 6. வணக்கம். வாழ்த்துக்கள். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. எம் உறவுகளின் பசி போக்க அவர்கள் துயர் நீக்க ஓடி வந்தமைக்கு மிக்க நன்றிகள். தந்தையின் இறப்பிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் . பகைவர்களும் வெட்க்கி தலை குனிய உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள்
 7. சிரிப்பு கதம்பம். அவர்: ஏன்டா உங்க அப்பன் பேர பிரிஜ்ஜூக்குள்ள எழுதி வச்ச?? இவன்: என் பெயர் கெட்ராம பாத்துக்கன்னு அவர்தான் சொன்னாரு.. பேராசிரியர்: சாப்ட்வேர்னா என்னா, ஹாடுவேர்னா என்னா? இவன்: செடியில உள்ளது சாப்ட்வேரு.. மரத்துல உள்ளது ஹாடுவேரு. அவர்: ஜிம்முக்கு போற பசங்கள ஈசியா கண்டுபிடிச்சிடலாம். இவர்: எப்படி.? அவர்: ரெண்டு கைலயும் சாம்பார் வாளிய தூக்கிட்டு போறமாதிரி நடப்பானுங்க. அவர்: ஆண்கள்ல 65% பேர் மனைவி சொல்றத கேப்பாங்க. இவர்: அப்ப மீதி பேர்? அவர்: இன்னும் கல்யாணம் ஆகல. சோமு: நாட்ல அநியாயம் நடக்குது.. பாபு:எப்புடி சொல்றீங்க.? சோமு: வெயில் காலத்துல மோர் பந்தல் வைக்கிற மாதிரி, மழை காலத்துல டீபந்தல் வைக்கமாட்றாங்களே.! அவர்: டாக்டருக்கு நீட் தேர்வு வேணுமோ வேண்டாமோ ஆனா ஒரு தேர்வு அவசியம். இவர்: என்ன அது? அவர்: நீட்டா எழுத தேர்வு. என்னா எழுதுறார்னு ஒன்னுமே புரியமாட்டேங்குது. அவர்: அபராதத்திற்கும், வரிக்கும் வித்தியாசம் தெரியுமா? இவர்: தெரியாது சொல்லுங்க. அவர்: தவறான செயலுக்கு தண்டம் கட்டுனா அபராதம்.. சரியான செயலுக்கு தண்டம் கட்டுனாஅது வரி.! அவன்: இதோ போறானே அவனுக்கு பொது அறிவு சுத்தமா இல்ல. இவன்: எப்டி சொல்றீங்க? அவன்: பழமொழிக்கு இங்லீஸ்ல என்னன்னு கேட்டான். புரூட் லாங்வேஜ்னு சொன்னா ஒத்துக்க மாட்றான். டாக்டர்: இந்த மருந்த காலைல வெறும் வயத்துல சாப்டுங்க.. வந்தவர்: ஒரு பனியன்கூட போட்ருக்ககூடாதா டாக்டர்.? கனவன்: என்ன சாம்பார்ல 2 காயின் கிடக்கு.? மனைவி: நீங்கதானே சமையல்ல சேஞ்ச் வேனும்னு சொன்னீங்க.?! அவர்: அச்சனை உங்க பேருக்கா.? இவர்: சாமி பேருக்கே பண்னுங்க.. எனக்கு தினம் வீட்டலயே அர்ச்சனை நடக்குது. அவர்: உங்க மனைவிய செல்லமா எப்டி கூப்புடுவிங்க.? இவர்: கூகுள்னு.. எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சுடுவா.. தீபாவளி எபக்ட்... மனைவி: எனக்கு இதே டிசைன்ல வேற கலர்ல காட்டுங்க !! கணவன்: அடியேய் ! துணி எல்லாம் எடுத்து முடிச்சு நாம இப்ப காய்கறி கடைல இருக்கறோம்!! தாத்தா : அந்த காலத்துல உன் வயசுல நான் கடைக்கு இரண்டு ரூபாய் எடுத்துட்டு போனா வீட்டுக்கு வரும்போது பால், பழம், ரொட்டி, மிட்டாய், சோப்பு, பவுடர் எல்லாம் கொண்டு வருவேன்.. தெரியுமா ? பேரன் : இப்ப அப்படியெல்லாம் முடியாது தாத்தா.. எல்லா கடையிலயும் நிறைய C C TV காமரா வச்சுருக்காங்க...! அவர்: “என் பொண்ணு பின்னாடியே சுத்துறியே.. தம்மு, தண்ணி பழக்கம் இருக்கா…?” இவன்: “வீணா சந்தேகப்படாதீங்க சார்..! உங்க பொண்ணு ரொம்ப நல்ல டைப்..”
 8. தொப்புள் கொடி சொந்தம் தந்து ..... எங்கேடா செல்லம் இருக்கிறாய். தாய்ப்பாசம் போலி அல்ல .இசை உலகம் இனங்காண வேண்டும் . * முன்பு பதிந்து இருக்கலாம். மன்னிக்கவும்.
 9. மனம் தறி கெட்டு ஓடுகின்ற கற்பனை . இது கற்பனையாகவே இருந்து விட வேண்டும். உலகம் தாங்காது .
 10. ஒவ்வொருவருடைய வாழ்விலும் சில சந்தர்ப்பங்கள், வாழ்வின் திருப்பு முனையாக அமைவது உண்டு . அந்த வகையில் சாதனா வாழ்க்கையிலும் ஒரு சம்பவம். பள்ளிப் படிப்பின் பத்தாம் ஆண்டு , முதற் தடவை ஓல் பரீட்ச்சை யில் எட்டுக்கு ஐந்து படங்கள் சித்தி எய்திய நிலையில் கணிதம் அவளுக்கு தோல்வியை தந்தது . பெற்றோரிடமும் ஆசிரியரிடமும் நன்றாக வாங்கி கட்டிக்க கொண்டாள் . " பராக்கு க்கு கூடிபோச்சு" "படிச்சு முன்னேறும் வழியை பாரு " " தோழிகள் சகவாசம் கூடிப்போச்சு" "தலை யலங்காரம் செய்யும் வேளை படித்தால் என்ன ? என சில நாகரிகமற்ற வசவுகள் . அவளை மேலும் கவலை யும் கண்டனங்களும் ஈட்டியாய் குத்தின.. அடுத்த கல்வி ஆண்டு ( ஏ எல்) வேறு பாடசாலை க்கு சக மாணவிகள் பாடசாலை மாற தயாரானார்கள். கணிதத்தில் தோற்றவர்கள், அடுத்த வருடம் பாஸ் சித்தி எடுத்து தருவதாக உறுதி அளித்தால் அவளும் பள்ளி மாறலாம். அல்லது மீண்டும் பரீடசை ( ஆண்டு இறுதி ஒருவருடத் தால் ) தோற்றி சித்தியடைந்து பள்ளிமாறலாம். சாதனா மிகுந்த கவலைப் படடாள் சக மாணவிகள் சென்று விடுவார்கள் என்ற கவலை , தன்னிலும் வயது குறைந்த வர்களுடன் படிக்க வேணுமெனும் வெட்கம். சிலர் maths (கணிதம் ) எடுக்காமல் எண்கணிதம் (a rithmatic ) எடுத்து ஈடு செய்யலாம் எனும் முயற்சியில் பள்ளி மாறினர். சாதனவின் பெற்ற்வர்கள் மீண்டும் பரீடசைக்கு தோற்ற அந்த பள்ளியில் படிக்க வைத்தனர். அது ஒரு கன்னியர் மட த்தினர் நிர்வாகிக்க படும் பாடசாலை . ஆண் ஆசிரியர்கள் படிப்பிப்பதில்லை. பெண்களை ஆண் பையன்களுடன் பேச அனுமதிப்பதில்லை மிகுந்த கட்டுப்பாடு . ஆனால் ஆண்கள் கல்லூரி பையன்கள் பெண்க ள் பாடசாலையை (தாண்டி ) கடந்து தான் தங்கள் பாடசாலைக்கு செல்வார்கள். எத்தனையோ ஜோடிக் கண்கள் சந்தித்து கொள்ளும் .கதை பேசும் கடிதங்கள் பரிமாறப்படும். காதல் துளிர் விடும், கை கால் துரு துருக்கும் சைக்கிள் வண்டிகள் தேவையில்லாமல் வடடமிடும். மீண்டும் விடுமுறையில் இள நெஞ்சங்கள் திங்கள் கிழமைக்காய் ஏங்கும் . சாதனா கணிதத்தில் சித்தி எய்து விடவேண்டும் எனும் பெரு முயற்சியில் இருந்தாள் . சக தோழி மாலை கல்வி முடிய ஒரு பிரத்தியேக வகுப்புக்கு செல்வதாக தெரிவித்தாள். படடனத்தில் படிக்கும் .பல்கலைக் கழக முதலாம் ஆண்டு இளைஞர்கள் இருவர் தமது (கைச் செலவு புத்தக செலவு படடனத்துக்குக்கான போக்குவார்த்துச் செலவு ) பாடம் நடத்தினர் . இவளும் சேர்ந்து கொள்ள ஆசைப்படடாள். வீட்டில் அனுமதித்தாலும் கன்னியர்கள் மட ஆசிரியரின் எதிர்ப்பை தாங்கி கொள்ள வேண்டி வந்தது. . கல்வியே கண்ணாக ( chemistry physics maths ) பா டங்களில் தன் முழு ஈடுபாடடை செலுத்தி கற்றாள். பரீடசையும் வந்தது. கன்னியர் மட பிள்ளைகள் எல்லாம் மிக திறமையான சித்திகள் பெற்றார்கள். பள்ளி நிர்வாகத்துக்கு உள்ளூர மகிழ்ச்சி . சாதனா 2C 3S முன்பு பெற்றவள். D 4C 3S பெற்றாள் . கணித்துக்கு டி தர சித்தி . அடுத்த கல்லூரி வகுப்பு மாற்றத்துக்காக ஆவலோடு காத்திருந்தாள். முதல் தடவை கணித்துக்கு F எடுத்தவள் தற்போது தரத்துக்கு சித்தி அடைந்தாள். கடின உழைப்பு (விளையாட்டு, பசி , பழைய பள்ளி தோழிகள் தன்னிலும் வயது (வருடம்) இளையவர்களுடன் படிக்கும் அசவுகரியங்கள் சில தியாகங்கள் ) காலையில் நடந்து 8.30 க்கு கல்லூரியில் வந்தால் கட்டி வந்த காய்ந்த பிட்டு மதிய உணவாகும். மாலை 3.30 பாடசாலை விட்ட்தும் டியூஷன் மலை 4 மணிக்கு , முடிந்து மீண்டும் வீடு செல்ல 7.௦௦ மணியாகி விடும். பள்ளிக்கு கூட வீட்டுப்பாடங்கள் , டியூஷன் வீட்டுப் பாடங்கள் இரவு விழிப்பு , போதிய உறக்கமின்மை .. பெற்றவர்களின் ஒத்துழைப்பு ( ஊக்கங் கண்டு உள்ளூர மகிழ்ச்சி) மீண்டும் மறுநாள் தொடரும் . வாழ்வில் தியாகங்கள், முழு ஈடுபாடு , சகிப்பு தன்மை வெற்றிக்கு வழி காட்டுகின்றன. நிச்சயம் வாழ்வில் திருப்புமுனைகள் வந்தே தீரும் இனங்கண்டு முயற்சித்தாள் வாழ்வு வளம் பெறும்
 11. மருமகள் மெச்சிய மாம னார். ஒவ்வொரு மாமனாரும் ஒரு தந்தையாக இருந்தால் அந்த குடும்பத்துக்கு அவர் ஒரு தூண் போல , எனக்கும் ஒரு நல்ல ஒரு மாமனார் கிடைத்து இருந்தார் .
 12. மிகவும் கடினமான அருவருப்பான பணியை ஏற்க தயங்கும் தொழில் . இவர்கள் வேலை நிறுத்தம் செய்தால் நாடே நாறும். இவர்கள் சமபளத்திலா கைவைக்க வேண்டும்.
 13. மொடடைத்தலைக்கும் முழங்காலுக்குமான முடிச்சு போல ....ஒரு கருத்து மயக்கம், சில்மிஷம் ஊடக தர்மமற்ற தலையங்கம் . ஊடக விபச்சாரம் .
 14. நல்ல திறமையான கைவண்ணமுள்ள இரவின் அழகை மெருகூட்டும் அழகிய மாயா ஜாலம்.
 15. இன்பத்தில் மகிழ்ந்து துன்பத்தில் துவண்டு வாழ்க்கையே முடிந்ததென அலைபாயும் மானிடா, சோகங்கள் மட்டுமே வாழ்க்கையல்ல மகிழ்வான தருணங்களை எண்ணிப்பா பார் கட்டிளம் காளையாய் மண மேடையில் மகிழ்வை அமர்ந்திருந்த தருண ங்கள் உறவுகளின் வாழ்த்துமழையில் பூரித்த தருணங்கள். அன்பு மனையாள் உன் உயிர் சுமந்த சேதி வாய் மலர்ந்த இன்ப அதிர்வு வினாடிகள் கருவாகி உருவாகி ஜனித்து துணி பொதிந்து சிறு மலராக குறு வென்ற பார்வையில் பிஞ்சு விரல்களும் எட்டி உதைக்கும் கால்களையும் கொண்டு பொக்கிஷமாய் உன் கை சேர்ந்த தருணங்கள். "அப்பா "என பதவி கொடுத்த குழந்தைகளை கண்டு குடும்ப பொறுப்போடு மனைவி மக்களை கண் போல காத்த தருணங்கள் தத்தி தவழ்ந்து தளிர் நடைபோட்டு பள்ளிக்கு அடியெடுத்து வைத்த அத்தருணங்கள்.,கல்லூரி புகுந்து கலாநிதி படடம் பெற்று சீருடையுடன் காண்கையில் என் மகன் /மகள் என் பெருமை கொண்ட தருணங்கள். பணியிடம் தேடி பணிக்கமர்ந்து முதல் சம்பளம்பெற்று தாய் தந்தை பணிந்து சாண்பிள்ளையானாலும் ஆண் பிள்ளை /என் பெண் பிள்ளை என்னையும் தங்குவான் /வாள் தோள் கொடுப்பான்/பாள் என் நெஞ்சம் நிமிந்த வேளை கால சக்கர ஒடடத்தில் மக்கள் மணப்பருவம் அடைந்த வேளை ஒரு துணை தேடி //தேர்ந்து மணக்கோலம் கண்ட நேரம் இன்ப பிரிவால் தலைமகனை /மகளை இன்னொரு அம்மாவை பிரிந்த நேரம் ,ஆண் பிள்ளைக்கு அம்மா மீதும் பெண் மகவுக்கு அப்பா மீதுமான ஈர்ப்பு, முதற் பேரக் குழந்தை என் கையில் தவழ்கையில் என் குலம் தழைக்க வந்த குல விளக்கே என நெஞ்சம் மகிழ்ந்த வேளை பிஞ்சுவிரல்கள் என் விரல் பிடித்த வேளை குச்சிக் கால்கள் எட்டி உதைத்த தருணம் உலகமே என் வசம் என எண்ணியிருந்தேன். காலச்சுழற்சி வயதின் முதிர்ச்சி சற்று நோய்வாய்ப்படட போது நினைவலைகள் கடந்த காலத்தை மீட்டிட சோகங்கள் மட்டுமே வாழ்க்கையில்லை , இன்னும் சற்று மன உறுதி யோடு வாழ வழியுண்டு என வாழ மனம் திடம் கொள்கிறது இத்தனையும் கடந்தாலும் இன்றுவரை என வாழ வைக்கும் அந்த தெய்வ கருணை அன்பான உறவுகளின் ஊக்கம் "வருந்தாதே மனமே அவனின்றி ஓர் அணுவும் அசையாதே " வருவது வரட்டும் வழியுண்டு வாழ்ந்துப்பார்ப்போம்
 16. டென்மார்க்கிலிருந்து அனுப்பப்படும் நிதி மூலம் ஏழை எளிய மக்களுக்கு கோவிட காலத்தில் பொருளுதவி வழங்க முன்னென்றவர்கள். எதிரிகளின் சூழ்ச்சியால் சிறை செல்ல படடவர்கள். இவர்கள் விடுதலைக்கு மகிழ்ச்சி அவ்வாறே ஏனைய சிறைவாசிகளுக்கும் விடுதலை கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ள பட வேணுமென்பது எல்லோருடைய வேண்டுதல்கள்.
 17. யாழ் உறவுகளின் ஆறுதல் வார்த்தை என்னை விரைந்து குணமடைய வைக்கும் என நம்புகிறேன். நான் விருப்பும் பொழுதுபோக்கு .அதிக நேரம் செலவிடும் தளம். தற்போது குறிக்க படட நேரமே என்னவர் அனுமதிப்பார். கால் தொங்க விடும்போது வீக்கம் அதிகரிக்கும். சில மணித்துளிகளாவது எட்டிப்பாராமல் இருக்க முடியாது. என பாரங்களை இறக்கி வைத்த ஒரு அமைதி . சிறகில்லாத இந்த மனம் எங்கெங்கோ அலைகிறது.வருந்தாதே மனமே
 18. மருந்துகள் நோயின் தாக்கத்தை குறைக்கும் தவிர குணமாக்காது . அதன் பக்க விளைவுகளே வேறு நோயை கொண்டு வரும். இராசயனங்களின் சேர்க்கையே மருந்து . கவர்சியாக கலர் கலராக இருக்கும். மருந்துபோட ஆரம்பித்தால் எண்னிக்கை அதிகரிக்குமே தவிர குறையாது. ஒவ்வொரு உறூப்பும் ஒவ்வொரு மருந்துகளால் இயக்க படுகிறது . உடல் மன சமநிலை குலைந்த வாழ்வே நோய்.
 19. சிறீத்தம்பி ...........சில நாட்களாக நினைத்து கொண்டிருந்த ஒருவர் நீங்கள் தான் தற்போது சற்று தேறி வருகிறேன். மூன்று நாட்களில் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். ஆஸ்பித்திரி சாப்பாடு பழகி விட்ட்து . வீட்டுச் சாப்பாடு என் அன்பான கணவனால் தரப்படுகிறது. பசியில்லை மனமில்லை ...மிகவும் கஷ்ட படுத்துகிறேன் என் உள்ளுணர்வு ....காதல் மனைவியை கண் கலங்காமல் கவனிக்கும் கடமையை செய்யும் திருப்தி அவருக்கு . நல்ல காலம் "பென்சனியார் " அவர் பொழுது என்னுடனே கழிகிறது . இல்லவிட்டால் பேரப்பிள்ளைகளுடன் செலவிடுவார்.
 20. " இதுவும் கடந்து விடுவேன்" ....... காலச்சக்கரத்தின் வேக சுழற்சியால் வாழ்க்கை இன்பமும் துன்பமுமாய் போராடடமும் வெற்றியுமாய் நகர்ந்து செல்கையில் ...நோய்வாய்ப்படுதல் ஒரு திடீர் விபத்தாக வந்து விடுகிறது . நோயற்று வாழவே எல்லோரும் விரும்புவோம் நோய் கண்டு, மருத்துவ மனைகண்டு தாதியர் துணை கொண்டு படுக்கைதனில் வீழும்போது .. "என்னடா வாழ்க்கை" இது என்று சலிக்க தோன்றி விடும். அரை மயக்கத்தில் உன் உறவினர் ,அருகில் அப்போது தான் சத்திரசிகிச்சை முடித்து படுக்கையில் கிடத்தியிருப்பார்கள். எல்லாம் மரத்துப்போய் அசைக்க முடியாமல் உன் உடலின் அங்கமே உனக்கு சுமையாக கொக்கியில் மாட்டிய ஜீவ நீர் " சேலைன் " வழியாக துளித்துளியாக இறங்கி கொண்டிருக்கும். நடப்புகள் உறவுகளும் நினைவில் வந்து போவர் , அண்மையில் இந்நிலை கண்ட நண்பன் அடிக்கடி வந்து போவான். இரண்டு வார்த்தை அவனுடன் பகிர்வோமென்றால் ஏன் மீண்டும் அவனை கவலைப்பட வைப்பான்" இது என்னுடனே போகட்டும் "என்பேன் . வலி கண்டவருக்குத் தானே வலி உணர முடியும். "இது வும் கடந்து போகும்..." என மனசு தன வலியை தேற்ற முயலும். நாட்கள் ஒவ்வொன்றாக நகரும் . நிற நிறமாய் தாதியர் அவசர வேகத்தில் ."இந்தா மருந்து" .. .நாளை எழுந்து நடக்க தயாராக இரு .... இயற்கை உபாதைகளை துணையின்றி சென்று முடிக்க முடியாதிருக்கும் . என் மீதே எனக்கு கோபம் வரும். கை பிடித்து ஆதரவாய் கதை சொல்ல ஒரு உறவைத்தேடும். இரவு உறக்கமும் விழிப்புமாய் வந்துபோகும். காலை விடியும் , கட்டிடம் கலகலப்பாகி விடும். சிட்டுக்களாக பறந்து திரியும் தாதியரும் உதவியாளர்களுமாய். உணவு வரும் உயிரை பிடித்து வைக்க வேண்டுமே என உண்ணத்தோன்றும் . நாக்கு செத்துப்போகும். வைத்தியர் வருவார் ..உடற்பயிற்சியாளர் வருவார். தங்கள் கடமை முடிந்ததென கை கழுவி செல்வர். மீண்டும் தனிமை ..ஆட்டி அசைத்த கால் வலியெடுக்கும். ஒரு வித மயக்க நிலைக்கும் சோர்வுக்குமாய் கண் யாரும். கடைக்கு கண் வழியே நீர் சொரியும். "பாவி என்னை மறுபடியும் பிறக்க வைக்காதே ".. என மனம் ஓலமிடும். வீட்டுக்கு செல்ல அனுமதி தரப்படும்.அன்பான ஒருவரின் கவனிப்பால் நாட்கள் நகரும் . "என்னால் இயங்க முடியவில்லையே என " மனம் ஏங்கும் " "இதுவும் கடந்துபோகும். மீண்டு விடுவேன்" என பழையபடி எண்ணத்தோன்றும். என்னை நானே கொண்டு நடத்த முடியாத வாழ்க்கை ... .சலிக்க தொடங்கு ம். அரிது அரிது மானிட ராதல் அரிது அதிலும் நோய் நீங்கி பிறத்தல் அரிது.ஏன் இத்தனை துயரம் ? கர்மாவா ? உணவுப் பழக் க வழக்கமா ? உடல் உறுப்புகளின் இயக்க மின்மையா? அவசர உலகில் பிடுங்கி நடப்பட்ட் மரமாக அந்நிய தேச கால நிலையா ? நஞ்சேற்றப்பட்ட் உணவா ?... வேறு மருந்துகளின் தாக்கமா ? உன்னை நோய் பிடித்துக் கொள்ள (கொல்ல ).... உன் உடல் ஒரு கோவில் அதை கவனித்து பேணு . இல்லையேல் நோய் பிணியும் துயரமும் தொற்றிக்கொள்ளும். சந்தர்ப்பங்கள் சம்பவங்களை ஆக்கு கின்றன . சம்பவங்களை இறக்கி வைக்கும்போது மனதின் ஒரு ஓரத்தில் சின்ன அமைதி . நீண்ட நேரம் தடடச்சியதில் கால் செங்குத்தானதில் ஒரு வலி ..முள்ளாக ஆரம்பிக்கிறது. மீண்டும் பேசுகிறேன் " காணும் என்னும் கண்டிப்பான" கடடளையுடன் படுக்கையில் ச ரிகிறே ன். "யாரும் கவலைப்படாதீர்கள்". என் நடப்புகள் தவிர வேறு யாரிடம் பேசுவேன்..... ஆறு நாட களாக கனன்று கொண்டிருந்த தீ ... தணியத்துடிக்கிறது. எனக்கும் சத் திர சிகிச்சைக் இரவும் பகலும் போல ........"இதுவும் கடந்து விடுவேன் .."...
 21. ஊரில் பிரண்டையின் அருமை தெரிந்ததா ? கத்தாழைக்கு வந்த மவுசு . உடலை வலிமையாக்கும் நோய் எதிப்புச் சக்தி உள்ளது
 22. கவலையற்ற உண்மையான மகிழ்ச்சி இவர்களிடம் தான் உள்ளது வறுமையிலும் ஆடிப் பாடி மகிழ்ச்சி அடையும் இவர்கள் தான் வாழ்க்கையை வெல்பவர்கள்
 23. அங்கு சென்ற "புலம் பெயர்ந்தவர்கள்" விலையை ஏற்றி விட்டிருப்பார்கள். ஆனால் நிதி கோவிலுக்காக என்பதால் குறை சொல்ல இடமில்லை.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.