இணைப்புக்கு நன்றி சகோதரா
நான் பிறந்து வளந்ததும் ஏழாலை தான் , 1993ம் ஆண்டு மாவீரர் நாளுக்கு ராயூ அண்ணா ஏழாலைக்கு வந்து எங்கள் முன் உரை ஆற்றினார் , என்ன தான் அறிவில் பெரியவராய் இருந்தாலும் ஊர் பாசம் அவரை விட்டு போகல ,
புலம்பெயர் நாட்டுக்கு வந்த பிறக்கு தான் ராயூ அண்ணாவின் வரலாறுகளை தேடி தேடி படித்தேன் ,
வான் படைய ஆரம்பிச்சு வைச்ச சங்கர் அண்ணாவை 2001ம் இழந்தோம் , 2002 ராயூ அண்ணாவை இழந்தோம் , 2007 தமிழ்செல்வன் அண்ணாவை இழந்தோம் , 2008 சாள்ஸ் அண்ணா மற்றும் பால்ராஜ் அண்ணாவை இழந்தோம் , 2009 எல்லாத்தையும் இழந்தோம் ,
மேல எழுதின வீரமிக்க தளபதிகள் மாலை மரியாதையோடு போய் சேர்ந்தினம் , ஆனந்தபுரத்தில் வீரகாவியமான தளபதிளின் இறந்த உடலை கூட எடுக்க முடியாமல் அப்படியே போய் விட்டார்கள் ,