தீர்மானம் நிறைவேற்றியதற்கு நன்றி
காமன்வெல்த் மாநாட்டிற்கு எதிரான போராட்டங்கள் வெடிக்கும்!
- கு.இராமகிருட்டிணன்
தந்தை பெரியார் திராவிடர் கழகம்
----------------------------
இனப்படுகொலை செய்த இலங்கை மண்ணில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாதென்றும் இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெற்றால் அதில் இந்தியா எந்த வடிவத்திலும் பங்கேற்க கூடாதென்றும் வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இருபது நாள் பிரச்சார இயக்கத்தை நடத்தி விட்டு கோவையில் ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி,
தொலைதொடர்பு அலுவலக முற்றுகை என தொடர் போராட்டங்களில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன்.
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்திய அரசு எந்த வகையிலும் பங்கேற்கக் கூடாது என வரலாற்று சிறப்புவாய்ந்த தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் முன்மொழிந்து நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு
தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதேநேரத்தில் கடந்த காலங்களைப் போல் தமிழக சட்டமன்றத் தீர்மானத்தை அலட்சியப்படுத்தி விடாமல் வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த தீர்மானத்தை உடனடியாக ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை தந்தை பெரியார் திராவிடர் கழகம் வலியுறுத்துகிறது.
காமன்வெல்த் கூட்டமைப்பிற்கு என்று விதிமுறைகள் உள்ளன.
இன ஒதுக்கல் கூடாது,
நிறபேதம் பார்க்கக் கூடாது,
ஆண்-பெண் வேற்றுமை கூட பார்க்கக் கூடாது. சமத்துவம் காக்கப்பட வேண்டும்.
ஜனநாயகம், நீதி, மனித உரிமைகள்,
பத்திரிக்கை சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் இப்படி பல விதிமுறைகள் உள்ளன.
இவற்றில் ஒன்று கூட சிங்கள இன வெறி மண்ணில் கடைப்பிடிக்கப் படுவது இல்லை என்பது உலகத்துக்கே தெரியும்.
ஆனாலும் இந்தியா எப்பாடு பட்டாவது ராஜபக்சேவை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த "கமலேஷ் சர்மா' மூலமாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.
இது ஒட்டுமொத்த தமிழ் இனத்தை மட்டுமல்ல உலகளாவிய மனித உரிமை சட்டங்களையும், காமன்வெல்த் கூட்டமைப்பின் விதிமுறைகளையுமே அவமதிக்கிற செயலாகும்.
இலட்சக் கணக்கான ஈழத் தமிழ் மக்களை மட்டுமல்ல இந்தியக் குடிமக்களான 800க்கும் மேற்பட்ட தமிழக
மீனவர்களை கூட்டுப் படுகொலை செய்திருக்கிறது இலங்கை அரசு.
இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். ராஜபக்சே மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும்.
ஈழத் தமிழ் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்கிற தீர்மாங்கள் தமிழக சட்டமன்றத்தில்
முதல்வராலேயே முன்மொழிந்து ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
இவற்றையயல்லாம் மதிக்காமல் தொடர்ந்து இலங்கைக்கு ஆதரவாகவே இந்திய காங்கிரஸ் அரசு செயல்பட்டு
வருகிறது.
இவற்றையயல்லாம் மக்களிடையே எடுத்துக் கூறவும், காமன்வெல்த் மாநாட்டிற்கு எதிராண போராட்ட
சூழலை தமிழத்தில் உருவாக்கவும்தான் கடந்த 20 ஆம் தேதி நாகை மாவட்டம் மயிலாடுதுறையிலே தொடங்கி இந்த மாதம் 10 ஆம் தேதி சேலத்திலே முடிவடைந்த ஒரு பிரச்சார பயணத்தை நடத்தினோம்.
இருபது நாட்கள் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பல்லாயிரக் கணக்கான மக்களைச் சந்தித்து இந்தக்
கோரிக்கைகளை விளக்கியிருக்கிறோம். நாங்கள் சென்ற இடமெல்லாம் இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள், முதியோர் என அனைத்துத் தரப்பு மக்களும் எங்கள் பிரச்சாரங்களுக்கும் பேராதரவை வழங்கினார்கள். இதில் உள்ள
நியாயங்களை மக்கள் உணர்ந்துள்ளார்கள்.
எனவே, மக்களின் உணர்வுகளுக்கும், நியாயத்திற்கும், தமிழக சட்டமன்ற தீர்மானத்திற்கும் மதிப்பளித்து மத்திய காங்கிரசு அரசு நடந்து கொள்ளவேண்டும். இலங்கையை காமன்வெல்த் அமைப்பிலிருந்து வெளியேற்றவும், அங்கு மாநாடு நடைபெறாமல் தடுக்கவுமான நடவடிக்கைகளை இந்திய அரசு எடுக்கவேண்டும். இலங்கையில் மாநாடு நடந்தால், இந்தியா அதைப் புறக்கணிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பு இந்தியாவின் வாயில் இருந்து வருகிறவரை நாங்கள் ஓயமாட்டோம்! தொடர்ந்து பல வடிவங்களில் போராட்டங்களை முன்னெடுப்போம்! என்று மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
20-09-2013 முதல் 10-10-2013 வரையிலும் 20 நாட்கள் தினமும் பல ஊர்களிலும் கடும் வெயிலிலும் பிரச்சாரப் பயணம் ! அதன்பின்பும் கோவையில் 18-10-2013 அனைத்துக் கட்சிகளின், அமைப்புகளின் ஆர்ப்பாட்டம் ! 19-10-2013 கோவை காந்திபுரத்தில் அனைத்துக் கட்சிகளி