Jump to content

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    14088
  • Joined

  • Days Won

    16

Everything posted by வீரப் பையன்26

  1. உங்கள் இனம் உங்களையே நம்பியிருக்கிறது மாணவத் தோழர்களே!உங்களிடமே மாற்றங்களின் திறவுகோல். அதனைச் சரியாகப் பயன்படுத்துங்கள். தமிழீழ மக்களுக்காக, நீதி கோரி, தமிழகத்தில் லயோலாக் கல்லூரி மாணவர்கள், ஏந்திய தீப்பந்தம், இன்று, மாநிலம் தழுவிய ரீதியில், பற்றிப் படர்ந்து, கோபாவேசத் தீயாக தகித்துக்கொண்டிருக்கின்றது. சிங்கள ஆட்சியாளர்களை அது அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளதுடன், சிங்களத்தின் நண்பர்களுக்கு அது பயத்தையும் பீதியையும், நின்மதியற்ற நிலையையும் ஏற்படுத்தியுள்ளது. போலி அரசியல் போராட்டக்காரர்களுக்கு அது எச்சரிக்கை மணியையும் அடித்துள்ளது. கட்சி அரசியல், சமூக இயக்கங்கள் என்ற எல்லைகள் கடந்து, ஒரு போர்ச் சக்தியாக, மாநிலம் முழுதும், தன் பலத்தை மாணவர் சமூகம் வெளிக்காட்டி நிற்கின்றது. எந்தச் சுயநலங்களும் ஒட்டிக்கொள்ளவில்லை. லாபநோக்கங்கள், குறுகிய எண்ணங்கள் எதுவும் இந்தப் புனிதப் போராட்டத்தில் எட்டிப்பார்க்கவில்லை. அர்ப்பணிப்பு எண்ணம் கொண்ட, போராளிகளாக மாணவ சமூகம் கனன்றுகொண்டிருக்கின்றது. தமிழீழ மக்கள், அனுபவித்த அனுபவித்துக்கொண்டிருக்கின்ற கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல, பல தசாப்தகாலமாகத் தொடரும், சிங்கள இனவெறி அரசின் அடக்குமுறைக்கும், இனஅழிப்புக் கொடுமைக்கும் முகம்கொடுத்தபடி, குரல்வற்றிக் கிடக்கிறது தமிழீழம். இந்திய அரசின் சிங்கள அரசு சார்ந்த நகர்வுகளும், சர்வதேச சமூகத்தின் அலட்சியமும், சின்னஞ்சிறிய தேசத்து மக்களை, சிதைத்துச் சின்னாபின்னமாக்கிவிட்டுள்ளது. சாட்சிகளற்று, நடந்துகொண்டிருக்கின்ற இனஅழிப்புக் கொடூரத்தின், சிற்சில சாட்சிகள், காட்சிகள் வடிவத்தில் தற்போது வெளிவந்திருப்பதால், இப்படியும் ஒரு கொடுமையா என உலகத்தை உறையவைத்திருக்கின்றது. இவற்றைவிட மோசமான, பதறவைக்கும் கொடூரங்களை, தமிழீழ மக்கள் அனுபவித்தாயிற்று. சிங்களக் கொடுங்கோல் ஆட்சியாளர்களின் கோரமுகம் இதனைவிடப் பயங்கரமானது. காட்டுமிராண்டிகளின் ஆட்சி நடக்கும் பூமியில், ஆதரிப்பார் யாருமற்றி மருவித் துடிக்கிறது தமிழ் இனம். தமிழீழ மக்களின் ஒட்டுமொத்த நம்பிக்கை தமிழகம். தமிழகத்தில் ஏற்படுகின்ற மாற்றம், அங்கு கிளர்ந்தெழுகின்ற அப்பழுக்கற்ற, சுயநலமற்ற இனமானப் போராட்டமே அவர்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கை விழுதைப் பற்றிப் பிடித்தே, தமிழீழமும் தமிழும் நாளை நிமிர்ந்தெழும். சிங்கள எதிரியாலும், அதன் தோழமைச் சக்திகளாலும் கூட்டாக அடித்து வீழ்த்தப்பட்ட தமிழீழ மண்ணிற்கு தெம்பூட்டவேண்டியது தமிழகமே. அதனை தமிழகம் செய்யும் என்று, உறுதியாக நம்புகின்றோம். அவற்றின் வெளிப்பாடுகளாக, அண்மைய நகர்வுகள், தமிழீழ மக்களிடையே நம்பிக்கையை விதைத்திருக்கின்றன. தமிழீழ மக்களின் நிலைகுறித்து, சர்வதேச சமூகம் காலம் தாழ்த்தியேனும் சற்று அக்கறை காட்ட ஆரம்பித்திருக்கும் இத்தருணத்தில், நீதியின்பக்கம் நகரமறுக்கும் இந்திய அரசை அசைத்து வழிக்குக் கொண்டுவர, தம்மை வருத்தும் தமிழக மாணவர்கள், தமிழீழ மக்களின் நன்றிக்குரியவர்கள். அக்கினிக் குஞ்சுகள் போல், தீமையைச் சுட்டெரிக்கக் கிளம்பியிருக்கும், தமிழக மாணவர்கள் போராட்டம் வெல்ல பிரான்ஸ் தமிழர் நடுவம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது. தமிழீழ மக்களின் நீதியான நிம்மதியான வாழ்வுக்கு, தனித்தமிழீழமே தீர்வு. அதற்காக, அனைத்துலகத்தின் ஆதரவுடன் தமிழ்மக்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். இலங்கைத்தீவில் நடைபெற்றதும் நடைபெற்றுக்கொண்டிருப்பதும் இனப்படுகொலையே. போர்க்குற்றங்களையும், இனப்படுகொலையையும் விசாரிக்க அனைத்துலக சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும். தமிழகத்தில் முரசறையப்பட்டிருக்கும் இந்த மாணவ முழக்கம், உலகமெல்லாம் வாழும் தமிழ்மக்களினது தேசிய முழக்கமாக மாறட்டும். தமிழால் இணைவோம். தமிழராய் வெல்வோம். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம். தமிழர் நடுவம்- பிரான்ஸ்.
  2. திருச்சி - தஞ்சை சாலையில் உள்ள துவாக்குடியில் பொது மக்கள் சார்பாக "தனி தமிழீழத்திற்கான சுதந்திர பொது வாக்கெடுப்பு கோரி" மாபெரும் பேரணி நடைபெற்றது. தங்கள் வீட்டு பிள்ளைகளான மாணவர்களின் போராட்டத்தை அரசு நசுக்க முயற்ச்சிப்பதால் மாணவர்களுக்கு ஆதரவாக கட்சி சார்பற்று தாங்களும் களத்தில் இறங்குவதாக பொது மக்கள் குறிப்பிட்டனர். fb
  3. இந்த மாணவர் போராட்டம் பெரிய எரிமைலையாக வெடிக்கப் போக்குது சிறி அண்ணா....ஜந்து பத்து மாணவர் என்றால் கைது செய்து பயப்பிடுத்தாலாம் மானம் கெட்ட காவல்துறையால்...11 மாணவர் போராட்டமாய் ஆரம்பிச்சு இப்ப முழு தமிழ் நாட்டு மாணவர் போராட்டமாய் மாரி போச்சு......இதுக்கு தமிழ் நாட்டு அரசும் மத்திய அரசும் நல்ல பதிலை சொல்லி ஆக்கனும் இல்லாட்டி பின் விளைவு அதிகமாய் இருக்கும்..இன்று மாணவர்கள் குடுத்த பேட்டியை பார்த்தால் தெரியும்.....
  4. தமிழகத்தின் மாணவர் போராட்டங்களும்,தொடர்புகளும்: மாணவர்களுக்கு ஊக்கமளிப்போம்------------------------------------------------ தமிழகத்தில் நடந்து வரும் மாணவர் போராட்டங்களும்,தொடர்புகளும்: மாணவர்களை தொடர்ப்பு கொண்டு நமது வாழ்த்துக்களை தெரிவிப்போம். அரசு கல்லோரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளதால், கல்லூரி வளாகங்ககுக்கு வெளியே அவர்கள் தொடர்ந்து போராட ஊக்கமளிப்போம். நாமெல்லாம் அவர்களுக்கு துணை நிற்கிறோம் என்பதை உணர்த்துவோம்: 1.கும்பகோணத்தில் நடந்து வரும் அரசினர் கலைக் கல்லூரி மாணவர்களின் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம் மாணவர்களை வாழ்த்த ஆதி .ராமசாமி – 9629544289 வீரமணி 9500271504 நந்தகுமார் 9965772229 இளையராஜா 9994276759 புண்ணியமூர்த்தி 9790473650 கிருட்டிணகுமார் 9677990943 வினோத் 9789546438 இவர்களுடன் 40 மாணவர்கள் . அதில் ஜான்பீட்டர்,இராஜசேகரன் என்கிற இருவர் கண் பார்வை அற்ற மாணவர்கள். 2.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகம் போராட்டம் தொடர்புக்கு : தோழர் ஆ.குபேரன், 9042223563. 3.பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும், கேளம்பாக்கம் பெண்கள் கல்லூரி மாணவிகளும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் , தொடர்புக்கு : 9500324404 , 8754428930 4.மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் நேற்றில் இருந்து காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்துவருகிறார்கள் 1.கணேஷ் பிரபு - 9600259677 2.இஸ்ரேல் - 9976744011 3.முத்துசங்கு- 9655767989 4.மலைச்சாமி - 8489006197 5.ஆரிப் ரகுமான் - 9940906233 6.அசோக்குமார் – 9150825996 5. ஈழவிடுதலைக்காக தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தூத்துக்குடி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி, வ.உ.சி.கல்லூரி, காமராஜ் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 43 மாணவர்கள் கைது. தொடர்புக்கு :கதிரவன் 9500836016 6.அதிரை கல்லூரி போராட்ட கள மாணவர் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் அவர்களின் தொடர்பு எண் 9698564058. 7. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக மாணவர்கள் 10 பேர் உன்நிலை 1.மதன்-96594108 ¬31 2.கார்த்திக்-96 ¬98849986 3.வள்ளி கண்ணன்-95974834 ¬42 4.ராமன்- 8675260466 5.சிவ ராஜா- 801235732 8. அடையார் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் அனைத்து மாணவர்களும் உணர்வாளர்களும் போராட்டத்தில் சென்று இணையவும் ...தொடர்பு எண் : 9884667798 ,8807322832 9..திருச்சி சட்டக்கல்லூரி போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தும் வழக்கறிஞர் ராம் அவர்களை வாழ்த்த- 9080071223 10. மதுரை அனைத்து கல்லூரிகள் மாணவர்கள் சார்பாக மாபெரும் பேரணி" தொடர்பு: 90809 36365 , 97914 32380 , 95003 95653, 90439 59305 11. அரியலூர் அரசினர் கல்லூரியில் சுமார் 35 மாணவர்கள் காலவரையற்ற பட்டினிப் போராட்டம். தொடர்புக்கு, ராபர்ட் - 8883170213, கருணாநிதி - 9176785058 12. கடலூர் அரசு பெரியார்கலைக்கல்லூரி மாணவர்கள் காலவறையற்ற உண்ணாநிலைப்போராட்டம் கல்லூரி வளாகத்திலே தொடங்கினர் வழ்த்துங்கள்!!!!! குமரேசன் ----9944289601 அருள்குமார் ----9790466427 13. இன்று (New College) புது கல்லூரி (மாலை) நண்பர்கள் அனைத்து மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு. (2.00 pm) தொடர்பு: கார்த்திக் 9283111928, 9566107836. 14) விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைகல்லூரி மாணவர்கள் 20 பேர் 2வது நாளாக தொடர்ந்து உண்ணாநிலை அற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்பு: செல்வமணி : 8015107884 சார்லஸ் : 9698969277
  5. பல்வேறு இக்கட்டுகளையும் , பிரச்சினைகளையும், ஆசிரியர்களின் வற்புறுத்தல்களையும் சந்தித்து தொடர்ந்து 4 வது நாளாக உண்ணா நிலை அறப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் , தங்களது உண்ணாவிரதத்தை நிறுத்தி விட்டு போராட்டதின் வடிவத்தை இப்பொழுது மாற்றி அமைத்துள்ளனர் , மத்திய அரசு அலுவலகங்களை இழுத்து மூடியும் , மத்திய அரசின் கீழ் இயங்கும் ரயிலை மறித்து போராடுவதன் மூலம் தான் மத்திய காங்கிரஸ் அரசு தன மௌனத்தை கலைக்கும் என்றால் அதை செய்வதை தவிர வேற வழியில்லை , தமிழக மீனவன் கேட்பதற்கும் பதில் இல்லை, தமிழக மாணவன் கேட்பதற்கும் பதில் இல்லை., மாநில அரசோ மத்திய அரசோ எவரும் எங்கள் தீலிபனிய போராட்டத்திற்கு மதிப்பளிக்க வில்லை, நாங்கள் பிரபாகரனிய போராட்டத்தை முன்னெடுக்க போவதை எவனும் தடுக்க முடியாது ( எவனாவது நீ ஆயுதம் எடுப்பியா என்று கேட்பவன் என் எதிரில் உன்னை கொன்று ஆயுதத்தை உயர்த்தி பிடிப்பேன் இது சத்தியம் ) ஐந்தாம் கட்ட ஈழப்போர்....!!! எங்கு தொடங்கும் என்றா கேட்டாய்? தமிழ்நாட்டின் தற்போதைய எழுச்சி தான் அது. ஒன்றல்ல, இரண்டல்ல.... ஏழரைக் கோடிக்குமேல்.. இங்குள்ள மாணவர்களை விட சிங்களவனின் மக்கட்தொகை குறைவு , அழிக்க நினைத்தால் அழிந்தே போவாய்......!!! http://www.facebook.com/tamilnaduhungerstrike
  6. என் உயிர்மூச்சு உள்ளவரை ஈழத்திற்காக போராடுவேன் - சகோதரி மாசாணி மானிஷா.... திரைப்படத்தில் கற்ப்புகரசியா நடிக்கிறவுங்க... திரையில் அன்பே உருவமா நடிக்கிற பெண்கள்... இன்னும் எப்படி எப்படியோ நடிக்கிற நடிக திலகிகள் எல்லோரும் ஓடிவந்து இந்த சகோதரியும் காலை தொட்டு கும்புடுங்க.... fb
  7. திருப்பூரில் இன்று ரயில் நிலையம் முன்பு மிகச் சிறப்பான முறையில் ஒருங்குபடுதப்பட்ட எழுச்சிமிகு அனைத்துக் கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரத அறப் போரரட்டம் நடந்து வருகிறது .... http://www.facebook.com/tamilnaduhungerstrike
  8. நேற்று நள்ளிரவு 2 மணியளவில் மெரீனா காந்தி சிலை அருகில் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள்உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த காவல்துறையின் அராஜகம் இது. படத்தில் பாருங்கள் . http://www.facebook.com/tamilnaduhungerstrike
  9. தொடர்ந்து 6 நாட்களாக தொடர் உண்ணாநிலை போராட்டம் இருந்த வரும் திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்களில் முகமது ஜெப்ரி என்ற மாணவர் இப்பொழுது கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளார். மருத்துவமனையிலும் அவர் தனது உண்ணாநிலையை தொடர்ந்து வருகிறார். சமூக ஆர்வலர்களும்,தமிழ் உணர்வாளர்களும் எவ்வளவோ கோரிக்கை விடுத்தும் அவர் தனது நிலையில் உறுதியாக உள்ளார். http://www.facebook.com/tamilnaduhungerstrike
  10. மாணவர்களிடம் இருக்கும் ஒற்றுமை "இந்த ஒற்றுமை தமிழக அரசியல் கட்சிகளிடம் இருந்திருந்தால், என்றைக்கோ ஈழத் தமிழர்களின் பிரச்னையைத் தீர்த்திருக்கலாம்!" fb
  11. நன்றி சுண்டு....இதை செய்து ஆக்கனும்...இளங்கவி நெடுங்ஸ் விறதர் போன்றவர்கள் தான் பாட்டு வரி எழுத...தமிழ் சூரியன் அண்ணா இசை அமைத்து பாடுவார் என்று எதிர் பாப்போம்
  12. உறவே மன்னிக்கவும் நீங்கள் கேட்ட கேள்ளி என்னவோ நான் அளித்த பதில் வேர...சரி அடுத்த‌ முறை போடுறன்.... சுட்டிக் காட்டியமைக்கு நன்றி துளசி அக்கா
  13. உறவே எல்லா யாழ் உறவுகளுக்கும் முக புத்தகம் இருக்கும் என்று தெரிய வில்லை...முக புத்தகம் இல்லாத ஆக்கல்...யாழில் வந்து பார்க்க சுகமாய் இருக்கும் எல்லோ..நான் அந்த லிங்சில like பண்ணிட்டன் மூன்று நாளுக்கு முதல் நண்பர்களுக்கு அறிய குடுத்து இருந்தேன் நன்றி இந்த திரியில் ஆரம்பத்தில் இருந்து கருத்து எழுதின ஆக்களின் கருத்தை வாசிச்ச தெரியும்....!
  14. தோழர்களே !!! அடுத்த தலைமுறை வந்துவிட்டது நமோடு போராட... வெற்றியை நோக்கி பயணிக்கிறோம் என்று நம்புவோம்... ஓசூரில் நடந்து கொண்டிருக்கும் போராட்டத்துக்கு மாணவர்கள் ஆதரவு பெருகி கொண்டிருக்கும் இந்த கட்டத்தில்... நமது "தன்மானம் கலைகளத்தின்" மாணவனான கிட்டு என்கிற தமிழ்மாறன், 7 வகுப்பு மாணவன் வந்து உண்ணாநிலை போராட்டத்தில் அமர்ந்து உள்ளன்... தொடர்ந்து உன்னநிலையில் இருபதாக கூரிக்கொண்டிருக்கிறான் நாங்கள் அவனை அவன் நலம் கருதி அவன் உண்ணாநிலையில் இருக்க கூடாது என்று கேட்டுகொண்டோம் அவன் நானும் தமிழன் நான் இருப்பேன் என்று கூறி அமர்ந்திருந்தான்...பின் நங்கள் மிகவும் வேண்டி கேட்டுகொண்டதால் அவன் போரட்ட கூடத்தில் ஆதரவு மட்டும் தெரிவித்து சென்றான்... போராட களத்துக்கு வர பயப்படும் அணைத்து மாணவர்களுக்கும் ஒரு பதிலடி கொடுத்து நம்பிக்கை வரவைதுல்லான்...!!! உதவாது இனி ஒரு தாமதம் உடனே எழு தமிழா !!! இப்படிக்கு, என்றும், தோழமையுடன்.தன்மானம் சக்ரவர்த்தி.மு.ம
  15. விற்கு மனித படுகொலையில் ஹிட்லரை மிஞ்சிய ராஜபக்சே, அகிம்சையை போதித்த மண்ணில் கால் வைக்கக் கூடாது என ராஜபக்சேவை புத்தகயாவில் திருப்பிகடும் எத்ரிப்பை திர்ப்பை தெரிவித்த அனுப்பிய பீகாரைச் சேர்ந்த சுயேட்சை எம்எல்ஏசோம் பிரகாஷ் தமிழக மாணவர்களுக்கு ஆதரவளிக்க நாளை சென்னை வருகிறார். பீகார் ஒபரா தொகுதியை சேர்ந்த சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் சோம் பிரகாஷ் சிங்(38), முன்னாள் காவல்துறை அதிகாரியான இவரது முக்கிய குறிக்கோளே லஞ்ச ஒழிப்பு தான். ஈழத் தமிழர்கள் அனுபவித்த கொடுமையை அறிந்த அவர், ராஜபக்ச வருகையை கண்டித்தார் சம தர்மத்தை போதித்த நமது பாரத தேசத்தின், அண்டை நாடான இலங்கையில் தமிழர்களின் உரிமைகளுக்காகவும், தமிழ் ஈழம் அமைவதற்கும் போராடிக் கொண்டிருந்த தமிழர்களின் மீது இறுதிக் கட்ட போரில் நடந்த பேரிழப்புகள், துன்பங்கள் கணக்கில் அடங்காதவை. தமிழர்களின் உரிமை களை கொடுப்பதற்கு பதிலாக அவர்களிடம் இவர்கள் பறித்தது 1 லட்சத்து 50 ஆயிரம் தமிழர்களின் உயிர்கள். தமிழர்கள் இருந்தால் தானே அவர்கள் உரிமைகள் கேட்பதற்கு என்ற குறிக் கோளோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் ராஜ பக்சே, தனது சொந்த மக்கள் மீது போர் தொடுத்து, நரபலியில் ஹிட்லரை பின்னுக்கு தள்ளி உள்ளார். இப்படிப்பட்ட ஒரு மனித மிருகம் வருவது நமது நாட்டிற்கே கேடு. உலகிற்கே அகிம்சையை போதித்த புத்தர் பிறந்த மண் புத்த கயா. சாம்ராட் அசோகர் தனது ஆயு தத்தை தூக்கி எறிந்து உலகம் முழுவதும் அகிம்சையை போதிப்பதற்கு இந்த இடத்திலிருந்து தான் பிரசாரம் தொடங்கினார். இந்த மண்ணில் தான், நமது சகோதரர்களான தமிழர்களையும் கூடவே மனிதாபிமானத்தையும் கொன்று குவித்த ராஜபக்ச வருவதற்கு நாம் என்றுமே அனுமதிக்க கூடாது. என்று ராஜபக்சேவின் வருகையை கண்டித்து போராட்டம் நடத்தியவர்
  16. தமிழக மாணவர்களுக்கு ஆதரவளிக்க சோம் பிரகாஷ் MLA சென்னை வருகிறார். மனித படுகொலையில் ஹிட்லரை மிஞ்சிய ராஜபக்சே, அகிம்சையை போதித்த மண்ணில் கால் வைக்கக் கூடாது என ராஜபக்சேவை புத்தகயாவில் கடும் எதிர்ப்பை தெரிவித்த பீகாரைச் சேர்ந்த சுயேட்சை எம்எல்ஏசோம் பிரகாஷ் தமிழக மாணவர்களுக்கு ஆதரவளிக்க சென்னை வருகிறார்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.