பாவம் மனுசன் அங்க எந்த மட்டை வச்சி பத்த வைக்குதோ தெரியல🤔🤣
ம் தேங்காய் உரிச்ச மட்ட ( உரிமட்டை என்பார்கள் சாமி ) அதை எரித்து அதனுள் இலையை போட்டு எரிப்பம் இப்பவும் நுளம்புக்கு அதை விட எந்த மருந்தும் இல்ல
அது சரி உந்த சாமானுகள போட்டிற்று வயலுக்க களிக்க இறங்கலாமோ??😎
இஞ்சால பெரிசுகள் எல்லாம் புகைச்சட்டியும் தேங்காய் உரிச்ச மட்டையும் சிலர் விறகு கட்டையும் தான் எரிச்சு குளிர் காய்ந்தார்கள்
வங்காள விரிகுடா ஆச்சே
காணாமல் போனோர் எக்கச்சக்கம் குளித்தவர்களும் சரி , மீன்பிடிக்காக கடலுக்கு சென்றவர்களும் சரி
சிலர் காணாமல் போய் பர்மாவோ பங்களாதேசிலிருந்தோ வந்ததாக சொல்வார்கள்
எனக்கு பழகிய ஒன்று தான் ஆனால் இங்குள்ள பலருக்கு அது புதுசு சாமியார்
மத்திய கிழக்கில் இதைவிட குளிர் ஐரோப்பாவை விட குறைவு
ஆடு மாடு இறப்பது வழமை குளிர் , மழைக்கு மாட்டுக்கு புகை வைப்பார்கள் ஆட்டை திறக்காமல் கொட்டகைக்குள் ஒரு ஓரத்தில் நெருப்பை எரிப்பார்கள் அதன் சூடு ஆட்டை சூடாக வைத்திருக்கும் என்பதால்
இஞ்ச வந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆகிறது மனிசன் இந்த சனம் ஏசுறத்துக்கு லீவு எடுத்துட்டு போய்விட்டார் போல பகவானே வாங்க உங்க அருமை இப்ப தெரியுது
இங்க விலை குறைவு ஆனால் காணி இல்ல சுனாமி பயத்தால் விலை குறைவு கொஞ்சம் தூரமான பகுதி பேர்ச் 10 லட்சத்துக்கு மேல் அதுவே மெயினாக இருந்தால் 20ம் 25 லட்சம் பேர்ச் அண்ண
அநேகமாக இந்த பகுதிகள் அனைத்தும் கடற்தொழிலுக்கு மிக முக்கியமான பிரதேசங்கள் அண்ண கல்லும் போட முடியாது தோணி படகு கரைக்கு இழுக்க முடியாது அதனால் கடல் பின்னுக்கு போனால் தான் உண்டு சில இடங்களில் கல்லை இட்டு நிரப்பியுள்ள்ளார்கள் நிரப்பிய பகுதியை விட்டு மற்ற பகுதிக்குள் கடல் உள் வருகிறது அதில் எனது ஊரும் உண்டு
நன்றி ஏராளன்
இங்கயும் அதுமட்டும் இல்லை நுவரேலியா போல கடும் குளிர் பெரியவர்கள் , சிறியவர்கள் கடும் அவதியுற்றார்கள் மூச்சு பிரச்சினை உள்ளவர்கள் பலர் ஆஸ்பத்திரியில் சேர்ந்துள்ளார்கள்
ம்ம் சொல்லப்போனால் இரண்டு நாள் சரியான தூக்கம் இல்லை கடும் காற்று கடல் சீற்றம் எனது வீடும் மிக அருகாமையில் உள்ளதால் ஒரு வித பயத்துடன் இரவைக் கழிக்க நேர்ந்தது
கடலில் இருந்து ஒரு 100 மீற்றர் அருகிலே தற்போதும் வசிக்கிறேன்
2001 என நினைக்கிறன் திருவாதிரை தீர்த்ததில் சக நண்பர்கள் 6 பேர் நீரில் மூழ்கி பலியானார்கள் அவர்கள் நினைவாக கட்டியது இந்த நினைவு தூபி
கடற்படை முகாம்
அரித்து செல்லப்பட்டது இதுவரைக்கும் 100 மீற்றருக்கு மேல்
பயங்கர குழப்பம் போல இருக்கு அண்ணைக்கு
நன்றி அண்ண அந்த கடற்படை முகாம் அமைந்திருப்பது நான் பிறந்து வளர்ந்த காணி சுனாமியின் பின்னர் கடற்படை கைப்பற்றியது (அரச காணியென அறிவித்தது அரசு) தினம் அங்க போவது வழமை ஏதோ ஓர் நிம்மதி போல. ஊரை காக்க எல்லையில் ஒரு கோவிலையும் கட்டி வைத்தோம் இன்று அதுவும் கடலுக்குள்வீழ்ந்துள்ளது மதில் 30 வருடத்திற்கு மேலாக இருந்த பூவரசும் சாய்ந்துள்ளது கடலில். தொழில் செய்வதும் இனி சவாலே கரைவலை இழுப்பது.
நன்றி அண்ணை
எங்களுடைய பகுதியில் சுனாமிக்கு முன்னர் வந்தது குழாய் நீர் அப்போது யாரும் எடுக்க வில்லை கிணற்று நீர்தான். சுனாமியின் பிறகு சகலரும் குழாய் நீர்தான் குடிப்பதற்காக, மலசலகூடம் பிற தேவைகளுக்கு கிணற்று நீர்
இங்கினியாகல நீர்த்தேக்கத்திலிருந்து அம்பாறை பகுதிக்கும், உன்னிச்சை குளத்திலிருந்து மட்டக்களப்பிற்கும் ஆனால் மட்டக்களப்பு மேற்கு பகுதியில் கிணற்றை பயன்படுத்துகிறார்கள் குழாய் நீர் பழக்கமில்லாதவர்கள் சனத்தொகை பெருக பெருக நிலத்தடிநீரும் கெட்டுப்போகும்