Jump to content

தனிக்காட்டு ராஜா

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    9914
  • Joined

  • Last visited

  • Days Won

    38

Everything posted by தனிக்காட்டு ராஜா

  1. உலகில் தங்களை அதி புத்திசாலியானவர்கள் என நினைத்துக்கொள்பவர்கள் மனிதர்கள்தானாம் எங்கோ வாசித்த நியாபகம் கிருபன்
  2. நன்றி ஜெகதா துரை அவர்களே நன்றி கருத்துக்கு புங்கையூரன் அண்ண இன்றுவரைக்கும் யாழ் எனது ஓர் நண்பன் யாழ்ப்பாணத்தவரும் எனது உறவுகள்தான் நான் இறக்கும் வரைக்கும் அதற்கிடையில் எந்த பேதமும் எனக்கில்லை என்பதை சொல்ல்லிக்கொள்கிறேன் பிரிந்து வந்த பல ஆயிரம் போராளிகள் மத்திய கிழக்கில் தஞ்சமடைந்தார்கள் அவர்கள் கதைகள் ஓவ்வோர் இரவிலும் நினைவு மீட்பார்கள் அண்ண அதன் சுருக்கம் எனக்கு கதையாக இன்னுமொருவர் இருந்தார் போராட்ட காலம் 1983 ம் ஆண்டு இணைந்தவர் அவர் சொன்ன கதைகள் இன்னும் ஏராளம் . உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி அண்ண
  3. ஈடு செய்ய முடியாத ஓர் இழப்பு ஆழந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன் நெடுக்ஸ்
  4. அப்போது பார்த்தால் கள்ள மரம் வெட்டுபவர்கள் அவர்கள். எல்லோரும் ஒரே நேரத்தில் எழும்பி துப்பாக்கியை நீட்ட அவர்கள் அலறினார்கள் எங்களுக்கு சிங்களம் தெரியாது. அவர்களோ கைபாஷையில் மரம் வெட்ட வந்ததாக சொன்னார்கள் இவர்களை விடுவதா? அல்லது சுடுவதா? அல்லது கைது பண்ணி செல்வதா? என எங்களுக்குள் பாரிய வினா எழுகிறது ?? அப்போது எனது அப்பா ஞாபகமும் வருகிறது இப்படித்தான் எனது அப்பாவும் அகப்பட்டிருப்பாரோ படையினரிடம் என நினைத்து கொடிகளால் அவர்கள் கைகளை கட்டி மரக்கிளையுடன் அமர வைக்கிறோம் சத்தம் போட கூடாது என‌. நேரம் 3 மணி ஆனதும் அன்றய தாக்குதல் சம்பவங்களோ சண்டையோ இடம்பெறவில்லை அவர்களை விடுவதா அல்லது முகாமுக்கு கொண்டு செல்வதா என கேள்விகள் மீண்டும் எழ நான் விட்டு விடுவோம் ஆனால் இனிமேல் இங்கே வரக்கூடாது என சொல்ல கைகூப்பி கும்பிட்டு அவர்கள் காட்டுக்குள் ஓடுகிறார்கள் ஆனால் அவர்களால்தான் பல போராளிகள் சுடப்பட்டார்கள் என்பது தெரிந்தும் விட்டு செல்கிறோம். இந்த சம்பவம் பொறுப்பாளருக்கு தெரிய எனக்கு பணிஸ்மென்ற் கொடுக்கப்படுகிறது சமையல் பிரிவில் அந்த நேரமே சமாதான உடன்படிக்கை ஏற்பட்டு யுத்த நிறுத்தம் வருகிறது போராளிகளுக்கு சரியான சந்தோசம் பலர் அரசியல் நடவடிக்கயென எல்லா இடங்களுக்கு செல்கிறார்கள். மனிதர்களும் மனதும் மாறக்கூடியவை இதில் போராளிகளும் விதிவிலக்கல்ல நகர் புறங்களில் சென்றவர்கள் பலர் நாள் தோறும் விலகி செல்ல ஆரம்பித்தார்கள் சிலர் வெளிநாடு செல்ல ஆரம்பித்தார்கள். ஆனால் நாங்கள் செல்லவில்லை வெளிநாடு செல்ல காசும் இல்ல. பேச்சு வார்த்தையின் இடையில் போராட்டமும் நியாயப்படுத்தலால் பிளவுறுகிறது எங்களுக்கு என்ன நடக்கிறது ஏது நடக்கிறது என தெரியவில்லை ஒர் நாள் கர்ணா அம்மானால் அனைத்து போராளிகளும் அழைக்கப்படுகிறார்கள் நான் போராட்டத்திலிருந்து விலகுறன் இல்லாட்டால் கிழக்கு பகுதிய நாம் வச்சிருக்கணும் அப்படி இல்லையென்றால் அண்ணன் ஏதும் செய்ய வெளிக்கிட்டால் யாரும் இங்க நிற்கக்கூடாது எல்லோரும் அவங்கவங்க வீட்ட போகலாம் என்றார் அடியும் தெரியல முடியும் தெரியாமல் போராளிகள் முளித்துக்கொண்டிருந்தார்கள் பல ஆயிரக்கணக்கான போராளிகள் விலகி செல்ல ஆரம்பித்தார்கள் என்பதை விட அம்மாமார் வந்து அழைத்து செல்ல ஆரம்பித்துவிட்டார்கள். முக்கியமானவர்கள் சிலரே இருந்தார்கள் போராட்டம் தலைகீழாக மாறியது ( அது யாவரும் அறிந்தது) என்னையும் அம்மா அழைத்து சென்றுவிட்டார் நானும் நகர் பகுதிதில் வந்து ஒளிந்து கொண்டேன் அழைப்புக்கள் வந்தன இணையச்சொல்லி ஆனால் மீண்டும் சேரவோ இணையவோ மனதும் உறவுகளும் விரும்பல ஆனால் காட்டிக்கொடுப்பால் சிறை செல்ல அங்கே சகோதர யுத்தமும் அரங்கேறுகிறது இந்த நேரத்திலே அரசு வெற்றி கொண்டது என்றும் சொல்லலாம். சிறையிலிருந்து வந்தால் எல்லாமே வேதனையான வெற்றியுடன் முற்று முழுதாக முற்றுப்பெற்றிருந்தது. படிப்பும் இல்லை தொழிலும் இல்லை அம்மாவை தேடி நானும் செல்ல அம்மாவோ படுக்கையில் அண்ணன் மிருக வைத்திய துறையில் தங்கை திருமணம் முடித்து இருந்தாள் நம்மவர் யாரிடமாவது ஓர் வேலையை பெற்று வாழலாம் என நினைத்தால். வாழ்க்கையை இந்த சமுதாயத்தில் வாழ முடியாது ஓடி விடு என துரத்திக்கொண்டே இருக்கிறது துரோகியென்ற‌ பட்டத்துடன். திடிரென யாரோ என் மீது விரலால் தட்ட துப்பாக்கி முனைதானோ என‌ துடித்து எழும்புகிறேன் தம்பி கடையை திற சனம் வந்துட்டுது என்று சொன்னார் அந்த முஸ்லீம் கடை முதலாளி முகத்தை கழுவி முன்கண்ணாடியில் பார்க்கிறேன் கண்ணாடி மட்டும் பொய் சொல்லாமல் என்னைப்பார்கிறது. பொய்யென்றும் சொல்ல முடியல கற்பனையென்றும் சொல்ல முடியல‌ முற்றும் .
  5. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நிழலி தணிக்கை ஒன்றை கையில் வைத்தே நகர்த்துகிறேன் வீட்டுக்கு ஒரு போராளி வந்தே ஆகவேண்டுமென்ற கட்டாயத்திலே பல இளவயது திருமணங்கள் நடந்து மட்டு மேற்கு கல்வியில் இன்று பிந்தங்கி நிற்கிறது ஆனால் அந்த ஆளணி சேர்ப்பை இங்கே குறை சொல்ல ஆட் கள் இல்லை காரணம் போராட்டம் வெல்ல வேண்டும் ஆயிரக்கணக்கான தாய்மார்கள் கண்ணீரின் வேதனையென்பது இப்பவரைக்கும் சொரிந்து கொண்டே இருக்கும் ஓர் துர்ப்பாக்கிய நிகழ்வு கருத்துக்கு நன்றி அண்ணா மட்டு தமிழ் வித்தியாசமானது யாழ்ப்பாண தமிழ் போல் அல்ல தற்போது ஆள் வீட்டுச்சுவரை கிறுக்க ஆரம்பித்துவிட்டாள் அம்மா ஆசிரியை மகள் கிறுக்கத்தொடங்கி விட்டாள் வீட்டு சுவற்றையும் நிலத்தையும் வீட்டிலிருந்து 100 மீற்றர் தொலைவில் கடல் உள்ளது அந்த மணலில் கிறுக்கி விளையாட கொண்டு செல்வதுண்டு ஆளை
  6. ஏன் யாயினி வெள்ளைகள் இதைவிட அசிங்கமாக பேசுவார்களே ?? நம்மவர்கள் நாலைஞ்சு பேர் நிண்டால் கொஞ்சம் மூச்சாகத்தான் பேசுவார்கள் சண்டை பிடிக்கான் எண்டு வையுங்கோ நாலு பேர் விலக்க நிண்டால் சண்டை கொஞ்சம் சத்தமா இருக்கும் சட்டை கிழியும் வரைக்கும் அதுதான் நம்மவர்கள் சண்டித்தனம் கண்டுக்கதீங்க நம்ம வேலை எதுவோ போய்கிட்டே இருக்க வேண்டியதுதான்
  7. நேரம் வேலையும் பிள்ளையும் இருப்பதால முற்றாக எழுதி முடிக்க முடியல கணணியை திறந்தால் ஏறி மடியில் இருந்து கீ போட்டை தட்டுகிறாள் ரெண்டு மூணு கீ போர்ட் மாத்தியாச்சு என்றால் பாருங்கோவன் கருத்துக்கு மிக்க நன்றி விரைவில் கதை முடியும் ( தணிக்கைகைகளுக்குள் கதையும் கட்டுப்படுகிறது) நன்றி புத்து கருத்துக்கும் வருகைக்கும் மகிழ்ச்சி தோழர் நன்றி உடையார் ஒரு பக்க விமர்ச்னம் என்பதை உன்மையெனவும் ஏற்றுக்கொள்ள மனம் ஏற்க மறுக்கிறது எங்கள் பயிற்ச்சி ஆரம்பமானது அரைகாற்சட்டையுடன் முடி ஒட்டையாக வெட்டி பயிற்ச்சிகள் கனமாக இருந்தது எனது பெயரோ மாற்றப்பட்டு கங்கையாழியன் என அழைக்கப்பட்டது கங்கா எனவும் சுருக்கமாக‌ அழைத்தார்கள் நாள் தோறும் காலையில் அம்மா வருவா ஆனால் சந்திக்க முடியாது பயிற்சி முடிவடைந்ததும் தளபதிகள் முன்னிலையில் அணி வகுப்பு நடந்து பாசறையிலிருந்து வெளியேறுகிறோம். அன்றுதான் முக்கியமான தளபதிகளை நேரில் காண்கிறோம் அன்று பூசிக்கப்பட்டவர்கள் அவர்கள். வன்னிக்கான படையும் செல்ல தயாராக இருந்தது கிழக்கில் பெரும் சண்டைகள் தொடர்வதில்லை அதனால் வன்னிக்கே படையணிகளில் அதிகமானவர்கள் அனுப்பப்படுவதுண்டு போராட்டத்தின் இதயம் அது தலைவர் தலைவரே எல்லாம் என எங்களுக்கும் உரம் ஊட்டப்பட்டது அவரின் நாமத்துக்கே பலபேர் இணைந்தார்கள் என்றும் சொல்லலாம் அந்த அணியில் என் பெயர் இல்லை ஆயிரக்கணக்கில் போராளிகள் மட்டக்களப்பில் இருந்ததை அன்று காணக்கிடைத்தது மட்டக்களப்பில் பொருட்களுக்கு பஞ்சம் இல்லை ஆனால் மாற்று இயக்கத்திற்கும் , ஆளஊடுவல் செய்யும் ஆட்களும் மிகவும் சவாலாக இருந்தார்கள். அதையும் சமாளித்து போராட்டம் வலுபெற்றிருந்த காலம் அது. அதற்கு புலனாய்வு துறையை சிறப்பாக செய்த தளபதியை பாராட்டலாம் கிழக்கை அக்குவேர் ஆணிவேராக அறிந்திருந்தவர் வன்னி போல் அல்லாமல் கிழக்கில் எந்தப்பக்கமும் இருந்தும் எதிரிகள் உள் நுழையலாம் அத்தனை பேரையும் சமாளிக்கும் துணிச்சல் மிக்க அணிகள் அவர்கள் அப்போது மாவீரர் நாள் வருகிறது துயிலுமில்லங்கள் வண்ணக்கோலம் பூண்கிறது போராட்டம் , இழப்பு , பாராமரிப்பு என அத்தனை விடயங்களும் கற்று அன்றைய நாளுக்காககவும் நினைவு கூரலுக்காகவும் புலிப்படை திரள்கிறது அதில் நானும் எனும் போது பிரமிப்பாக இருக்கிறது .அன்றைய நாளில் எனைக்காண வந்த அம்மா, அண்ணா , தங்கச்சியை கண்டதில் மிகுந்த சந்தோசம் எனக்கும். எல்லாச்சாப்பாடும் கிடைக்குமாடா ஓமோம் அங்க கிடைக்காத சாப்பாடு எல்லாம் கிடைக்கும் இங்க அதுக்கு கவலையே இல்ல அம்மா. எனது குடும்பம் சந்தோசத்திலிருக்க மற்ற அம்மாக்கள் அழ துளிர்விட்டசந்தோசமும் அழுகையாக மாறுகிறது அம்மாவை தேற்றியவனாக அங்கே துயிலும் எங்கள் உறவுகளின் கனவுகளை சொல்லி அம்மாவை தேற்றுகிறேன். மாவீரர் நாள் முடிந்ததும் அழைக்கப்படுகிறோம் சின்ன தாக்குதலுக்கு அன்றுதான் முதல் சண்டையென்பதால் ஒரு பத பதப்பும் , பயமும் தொற்றிக்கொள்கிறது நாங்கள் 10 பேரும் சில‌விபரங்களுடன் காட்டுக்கு செல்கிறோம் பல கிலோ மீற்றர் நடந்து சென்று சருகுக்குள் ஆளை மறைத்து படுத்துக்கொள்கிறோம் காலை விடிகிறது நேரம் 6 மணி இருக்கும் சருகு மெல்ல சரசரக்கிறது சிங்கள உரையாடலுடன். பேச்சு சத்தம் எங்களை நோக்கி வருகிறது இன்னும் பயம் அதிகரிக்கிறது போர் என்றால் ஆளையாள் சுடுவார்கள் என்ற நினைப்பு அந்த நொடி எனக்குள் வரும் போது அது என்னை மிரட்டும் நொடியாக அந்த நிமிடம் இருந்தது . எந்த ஒரு அசைவும் வராமல் நாங்கள் பதுங்கியே இருந்தோம். இன்னும் ஒரு பகுதி மட்டும் மீதம் இருக்கிறது ....................
  8. நன்றி சுவி அண்ணை நான் கருத்துக்கள் வராது என நினைத்து இருந்தன் இந்த கதைக்கு
  9. அன்றைய நாள் மாலை நால்வரும் சாப்பிட ஆயத்தமாகிறார்கள். பொன்னாங்கண்ணி சுண்டல், மீன்பொரியல் ,செல்வன் மீன் குழம்பு அம்மா கையால அந்த சாப்பாடுதான் கடைசி சாப்பாடு என சின்னவன் நினைத்துக்கொள்கிறான். அடுத்த நாள் காலை மூத்தவனையும் , மகளையும் பாடசாலைக்கு அனுப்பி விட்டு சின்னவனை கூட்டிக்கொண்டு களுவாஞ்சிக்குடி வந்து கல்லடியில் உள்ள பாடசாலையில் கதைத்து கொஸ்டலில் சேர்த்துவிட்டு மகன் இங்க நல்லா படி படிச்சால் படிக்கிற பிள்ளையெண்டு ஒன்றும் செய்ய மாட்டாங்கள். சரியா சரி அம்மா அடிக்கடி வாங்கம்மா இல்லாட்டி அண்ணாவையும் ,தங்கச்சியையும் கூட்டிக்கொண்டு இங்க வாங்களன் அம்மா நிம்மதியாக இருக்கலாம் தானே. இல்ல மகன் அங்கதானே எல்லாம் இருக்கு இங்க எங்க? ஆடு, மாடு வளர்க்கிற அதுகளை வளர்த்தால் தானே சோறாவது சாப்பிடலாம் நாம். அவனோ ஒன்றும் பேசாமல் இருக்கிறான் சரி மாதத்துக்கு ஒரு தடவையெண்டாலும் வாம்மா உன்ன பார்க்கணும் வரும் போது அண்ணாவையும், தங்கச்சியையும் கூட்டிக்கொண்டு வாம்மா சரி நான் போறன். நீ கவனமா இரு ரோட்டால வாகனம் அதிகம் ரோட்டு மாறுததெல்லம் கவனமா மாறு ரெண்டு பக்கமும் பார்க்கணும் சரியா ம் ம் கண்களால் கண்ணீர் சொரிய இருவரும் பிரிகிறார்கள் . அடுத்த பஸ்ஸ பிடித்து ஊர் வருகிறாள் பொன்னி இரு பிள்ளைகளும் வீட்டிலே இருக்க மூத்தவன் என்ன அம்மா ஆள விட்டாச்சோ? ஓம்டா சரியா குளறுறான்டா என்று சொன்னவளும் மன நிம்மதியான அழுகையை தொடர்கிறாள். சரி அம்மா அவன்ற நல்லதுக்குத்தானே எனச் சொல்லி மூத்தவன் பொன்னியை தேர்த்துகிறான் . சில மாதங்கள் கழிகிறது மூத்தவன் ஏ எல் பரீட்சை எழுதி முடித்துவிடுகிறான் மாட்டை மேய்க்க சென்றவன் அன்று மாலை வீடு வரவில்லை. எங்கு தேடியும் அவன் இல்லை ஒரு வழியாக அவனை பொடியங்கள் பிடித்துப்போனதாய் கேள்விப்படவே வீட்டில் பெண்பிள்ளையை விட்டு தனியே செல்ல முடியவில்லை அவளால். அடுத்தநாள் காலை பயிற்சி முகாமுக்கு செல்கிறாள். அவன் வரவும் இல்லை அவனை பிடிக்கவும் இல்லை என்றார்கள் அவர்கள் இவளோ விடுவதாயில்ல என்ற பிள்ளய கொடுங்கள் இல்லாட்டால் நான் தூங்கி சாகப்போறன் என மிரட்டியும் அவன் இங்கில்லை என்ற பதிலை மட்டுமே தந்தார்கள் . அடுத்தநாள் கல்லடிக்கு வந்து சின்னவனைக்கூட்டிக்கொண்டு சைக்கிளில் அவன் ஏற்றிக்கொண்டு அவள் தம்பி இருக்கும் முகாமுக்கு செல்கிறார்கள் (பொன்னியும் இளையவனும்). அவனோ விசாரிச்சு பார்க்கிறன் அக்கா என்று சொல்லிவிட்டு விசாரிச்சு இருக்கிறான் ஓமாம் அக்கா தரவையில தான் நின்கிறான் போல அங்க போ நான் வந்தால் வேற பிரச்சினையாகும் நீ போ கத்து , வெரட்டிப்பாரு என்று சொல்ல சைக்கிள் தரவை விரைகிறது அங்கே சென்று பார்க்கும் போது பல பிள்ளைகள் பயிற்சியில் நிற்கிறார்கள் எல்லோரும் கட்டாயமாக பிடித்து செல்லப்பட்டவர்கள் . எடேய் மூத்தவா அவள் கூப்பிட கூப்பிட்ட குரலைக்கேட்டதும் அழுகிறான் அவன். அவன விடுங்கடா என்ட பிள்ளைய தாங்கடா எனக்கு என ஒப்பாரி வைக்க‌ பொறுப்பாளரோ நான் கூட இப்படித்தான் குளறுனான் என்ற அம்மாவும் இப்படித்தானி இஞ்ச நிண்டு அழுதவ என்று சொல்ல அதான் என்ற தம்பிய தந்திருக்கனே என்ட பிள்ளய விடுங்கடா பதில் இல்லை அண்ண இஞ்ச கொஞ்சம் வாங்கள் ஓம் என்ன தம்பி அண்ண அவன விடுங்கள் நான் வாரன் போராட்டத்துக்கு உங்களோட சரியா?? அம்மா மீண்டும் விறைச்சுப்போகிறாள் குளறாதீங்க அம்மா அவனுக்கு ஒன்றும் தெரியாது அவன கூட்டிட்டு போங்க என்னை பிரிஞ்சு இருந்து பழகி இருப்பீங்க தானே அது போல நினைச்சுங்க என்றான் இளையவன் அம்மா மீண்டும் ஓலமிட்டா ஆனால் ஒன்றும் ஆகப்போவதில்லையென்பதை உணர்ந்தேன் நான் உள்ளே செல்ல அண்ணா என்னை கட்டிப்பிடித்து விட்டு அம்மாவைத்தேடி ஓடுகிறான் அம்மாவோ அவனைக்கண்டதும் தம்பிய பிடிச்சிட்டானுகளென மீண்டும் அழுகிறாள் நான் தூரம் செல்கிறேன் வீட்ட போங்கள் என சைகையால் காட்ட‌ அவர்களோ போகாமல் என்னையே பார்த்திருந்தார்கள். போய் பெயர் விலாசம் எல்லாம் பதிந்த பின் வந்து பார்க்கிறேன் அவர்களைப்போல பலரை துரத்திக்கொண்டிருந்தார்கள் பொறுப்பாளர்கள் . பொறுப்பாளர் சொன்னார் இவர்களை இங்கு வைத்திருந்தால் இவர்களை பார்க்க அவர்கள் ஒவ்வொரு நாழும் வருவார்கள் இடத்தை மாற்ற சொன்னார் அவர். இடமும் மாற்றப்பட்டது . அம்மாவுக்கு அதிக பாசம் அவனுடன் மூத்த பிள்ளையும் நல்லா படிப்பான் ஆடு , மாடுகள் கோழிகள் எல்லாவற்றையும் பொறுப்பாக பார்த்துக்கொண்டு அப்பா இல்லாமல் போனதும் குடும்பத்தை சுமந்தவனும் அவனே நானோ விளையாட்டுப்பிள்ளை. தொடரும் .
  10. நான் ஜிம்மாவுக்கு போய் வருகிறன் கடை பூட்டித்தான் இருக்கிறது நீ வெளியில் இரு. சரி காக்கா. அந்த மனுசன் கடவுளுக்கு மிக பயந்தவர் 5 வேளையும் தொழுது கொண்டே இருப்பார். நான் சிறையிலிருந்து வந்து பல இடங்களில் வேலை தேடினேன் கிடைக்கவில்லை யாரும் கொடுப்பதாகவும் இல்லை போராளிகளுக்கு வேலை கொடுத்தால் எங்களுக்கு பிரச்சினை வரும் என்று சொன்ன கூட்டங்களுக்காக போராடினோமே என நினைக்கும் போது மனத்துக்குள் எனக்கு நானே காறி உமிழ்ந்து கொள்கிறேன். சிறையிலிருந்த‌ சிங்களவராகட்டும் , சிறைக்காவலராகட்டும் , அடிமை என நினைத்தாலும் மனிதராக பார்த்தார்கள் தமிழர்களோ மனிதராக பார்க்காமல் விரோதியாகவும் , துரோகியாவுமே பார்த்தார்கள் இதில் தமிழர்களின் பழக்கம் ஒன்று இருக்கிறது எப்பவும் வெளித்தோற்றத்தை வைத்து ஒருவரை கணித்து விடுவது, அல்லது இப்படித்தான் நடந்து இருக்குமெனவும் எண்னி கணித்தும் விடுவார்கள் இதுதான் இன்றுவரைக்கும் தொடர்கிறது என நினைத்து. வெளியில் இருந்த ஒரு உடுப்பு மூடையில் சாய நித்திரை வருகிறது எப்போதும் வேலை நேரத்திலே நித்திரை வரும் .நித்திரைக்கு போனால் நித்திரை வரவே வராது எனக்கு. பலர் ஏன் மதம் மாறுகிறார்கள் இனத்தை விட்டு தூர செல்கிரார்கள் என மெல்ல எனக்கும் புரிய வைத்தது அந்த வேலைத்தள சம்பவங்கள் எப்போதும் கஸ்டத்தில் இருப்பவர்களை கண்டு கொள்ளாது நம்ம சமூகம் அவன் வேறு மதத்தை தளுவிக்கொண்டால் அவன் வம்சத்தை இழுத்து கழுவிதிரிவார்கள் , காவியும் திரிவார்கள். நித்திரை மெல்ல கண்ணை அரட்ட என் இருண்ட வாழ்வு கனவு வெளிச்சத்தில் நிழலாக மிதந்து வருகிறது. எடேய் சின்னவோவ்!!................ அவன காணல்ல அம்மா என்ற சத்தத்தோடு பெரியவன் வருகிறான் அவன கண்ட நீயா? பள்ளிவிட்டு வந்தான் இந்தா புத்தக பைய எறிஞ்சு போட்டு , சோத்துக்கோப்பையும் கழுவல விளையாட ஓடிட்டான் நீ வெளிய எங்கயும் போகாத எங்க தங்கச்சி? இந்தா உள்ள இருக்கா சரி ரெண்டு பேரும் வீட்டில இருங்க அவனுக்கு ரெண்டு போட்டு ஆள கூட்டுக்கொண்டு வாரன் என செல்கிறாள் பொன்னி . பொன்னி வாழ்வது படுவாங்கரையில். படுவாங்கரையென்பது மட்டக்களப்பில் சூரியன் எழும் பகுதி எழுவாங்கரையெனவும் மறையும் பகுதி படுவாங்கரையெனவும் அந்த காலத்திலிருந்து சொல் வழக்கில் வருகிறது படுவாங்கரையில் அழகிய கிராமம் தும்பங்கேணி. பொன்னியும் அவள் மூன்று பிள்ளைகளும் வாழ்ந்து வருகிறார்கள் . மூத்தவன் ( மோகன் ) சின்னவன் ( கீரன் ) புள்ள ( கீதா) தன் பிள்ளைகளை பெயர் சொல்லி அழைக்கமாட்டாள் பொன்னி மூத்தவனை மூத்தவன் எனவும் , இளையவனை சின்னவன் எனவும் பெண் பிள்ளையை புள்ள எனவும் செல்லமாக கூப்பிடுவாள். ஊரவர்களும் அப்படியே கூப்பிடுவார்கள் மூத்தவன் உயர்தரம் படிக்க, இளையவன் தரம் 10 படிக்க , பெண் புள்ள தரம் 8 படிக்கிறாள் . தகப்பனாரோ விறகு வெட்ட காடு சென்றவர் இதுவரை வீடுதிரும்பல இவர்களும் தேடாத காடு இல்லை. சின்னவனை தேடிச்சென்ற பொன்னிக்கு அவன் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தான் எடேய் இப்ப வரப்போறியா இல்ல கம்ப முறிச்சு வெளுக்கட்டுமா உனக்கு? நான் வரமாட்டன் போ போ என்றான் அவன். எடேய் நீ எங்க விளையாடுனாலும் ராவைக்கு வீட்டுக்குத்தானே வரணும் வா உனக்கு அப்ப பூச தாரன் . ஒரு வழியாக அவனும் வர எடேய் கெதியா வாடா வீட்டுக்கு விசயம் ஒன்று சொல்லுறன் என்ன சொல்லுங்கவன் ஊட்ட வா சொல்லுறன் ம் வீட்டை வந்தடைந்ததும் முதலில் வாசலில் இருந்த முருங்க கம்பை முறிச்சு நாலு அடி போட்டாள் பொன்னி அவனும் அடியாதீங்க அம்மா அடியாதீங்க அம்மா என கத்தினான் . அடேய் நாளைக்கு பொடியனுகள் ஆள் பிடிக்கப்போறாங்களாம் உங்க மாமா வந்து சொல்லிட்டு போனான். உங்கள கவனமா இருக்கட்டாம் நீ சொன்ன கேட்கமாட்டியா உங்க அப்பன தொலச்சிட்டு நான் படுற பாடு காணாத நீங்களும் போகப்போறிங்களா? அவனுகள் வேற வீட்டுக்கு ஒருவர் வந்து போராட்டத்துக்கு வாங்க என கூப்பிடுறானுகள் உங்க மாமாவ‌ அம்மம்மா காறி கொடுத்துட்டு இப்பவும் அழுது கொண்டிருக்கிறது நீங்க பார்க்கலயா? நானும் அது போல வாழ்நாள் முழுக்க அழணுமா? சொல்லு சொல்லு என கண்னைக்கசக்கினாள் பொன்னி. நீ இங்க படிக்காத கல்லடி சிவானந்தா கொஸ்டலில் படி இளையவா அண்ணா இங்க படிக்கட்டும் வீட்ட ரெண்டு பொடியனுகள் இருந்தால் விடமாட்டானுகள் எப்படியும் பிடிச்சிட்டு போயிடுவானுகள் . சொல்லுறது விளங்குதா ம்ம் அங்க உங்க அப்பாட சொந்தங்கள் எல்லாம் இருக்கு அவங்க கிட்ட போகவேணாம் போனால் எப்படியும் நாலு கத கத கதைக்கும் காது பட. நீ கொஸ்டலில இருந்து படி அப்பாவும் இல்லலெண்டால் படிக்க இடம் தருவாங்கள் நான் இங்க ஆட , மாட வச்சி இவங்களுக்கு சோறு கொடுப்பன் . உன்னை நாளைக்கு கொண்டு போய் அங்க சேர்க்கிறன் என்ன ம்ம் என்றான் இளையவன். ஆட்டம் தொடரும்
  11. வாவ் தொடக்கமே அட்டகாசமா இருக்கு நைனாதீவுக்கு நான் சென்ற நேரம் நம்ம கள உறவு ஜீவன் சிவா அண்ண கூட்டிக்கொண்டு சென்றார் அப்போது எனக்கு முன் ஓர் அழகிய 2 பெண் பிள்ளைகள் ஏன்டா இதுகளுல ஒன்றைப்பார்த்து கல்யாணம் கட்டிட்டு இங்க செட்டில் ஆகன்டா என்றார் மனுசன் அந்த நேரம் காஞ்ச மாடு கம்பில பாயுற ரைம் கல்யாணம் ஆகல எனக்கு புள்ள ஓகே சொன்னா நான் வேண்டாம் என்றா சொல்லப்போறன் என மனதுக்குள் நினைத்துக்கொண்டன் இந்த யாழ்ப்பாண சனம் மட்டக்களப்பார கல்யாணம் கட்டுமா? குறிப்பு அது இது என எக்கச்செக்க பிரச்சினை வரும் நான் யோசித்து அவளப்பார்ப்போம் என முன்னே நிமிர்ந்தேன் ஏனென்றால் எனக்கு கூச்ச சுபாவம் அதிகம் அவளைப்பார்க்கிறேன் . அவளும் என்னைப்பார்க்கிறாள் ஆகா அந்தப்பயணம் நெடுந்தீவுக்கும் செல்லாதா என நான் நினைத்தால் நைனாதீவில் படகு கரைதட்ட நான் முதலில் பாய்ந்து தரையில் இறங்கினன் அண்ணன் ஜீவன் சிவாவை வெளியே இழுத்து எறியாத குறையாக அவளை தூக்கிவிட கையை கொடுத்தேன் அவளும் சிரித்துவிட்டு கையை கொடுத்தாள் மெதுவாக தூக்க மனுசன் அங்கால திரும்பிட்டு நான் இந்த கூத்தையெல்லாம் பார்க்கல என ஓடிட்டார் பின்னர் மடத்தில் சோறு சாப்பிட போனோம் அங்கேயே நின்றாள் பார்வைகள் மட்டும் பேசி கதைத்து விடை பெற்றது . குறிப்பு இது என் மனைவிக்கு தெரியாமல் இருப்பது மிக நல்லது 😀
  12. நாம் தெரிந்தே தொலைத்துக்கொள்கிறோம் நன்றி உங்கள் கருத்துக்கு வாதவூரான்
  13. ஊருல சலக்கடுப்பு , உச்சா ,போகும் எரியுது என்றால் கிழவிகள் சொல்லுவார்கள் போய் ஆத்துல நல்லா குளி மணிக்கணக்கில் அதுக்க்கு பிறகு ஒன்றும் செய்யாது என்று ஆனால் இப்ப ஒரு சின்ன வருத்தம் வந்தாலும் வரும் மரண பயத்தால் ஆயிரம் வைத்தியருட்ட காட்டி செக் பண்ண வேண்டி இருக்கும் அப்படி காட்டியும் திருப்தி என்பது மனதிற்கு வரவே வராது சிலரின் அனுபவத்தை வைத்து சொல்கிறேன் விபரமா எழுதுனா நாங்களும் தெரிஞ்சிக்குவமே
  14. முடிக்கட்டும் மொத்தமா வச்சி செஞ்சிடலாம் மிச்சத்தயும் எழுதுங்கள் பேபி
  15. பாசத்துக்கு வேலி இல்லை கு, சாமியார் வாழ்த்துக்கள் உங்கள் கடிதத்துக்கு
  16. வாழ்க்கை போராட்டமா அல்லது போராட்டமா வாழ்க்கை எனும் கேள்வி எழும் போது போராடித்தான் வாழவேண்டிய கட்டாயம் எழுகிறது சூழலாலும் சுற்றத்தாருடனும் இதில் கொரோனாவும் சேர்ந்து கொடுமப்படுத்துகிறது மீண்டு வருவார்கள் பிள்ளைகள் கவலை வேண்டாம் உங்கள் குழதைகள் ஆச்சே மனதை தளரவிடாதீர்கள் அக்கா
  17. விசுகர் Busy Man ஆனாலும் இந்த கொரோனா காலத்தில போய் சொந்தத்தை வளைர்த்து விட்டிருக்கார் மனுசன் வாழ்த்துக்கள்
  18. அப்பப்ப அவர்களும் மனிசர்களுக்கு ப்பிரசர் கொடுத்துட்டு போயிடுவாங்கள் அதைதான் சொல்ல வந்தன்
  19. மருந்து கொஞ்சம் கசப்பாக இருக்கும் குடிப்பதா வேண்டாமா என சிலர் !!சிலர் குடித்துவிட்டார்கள் , நான் கையில்தான் வைத்திருக்கிறேன் இன்னும் குடிக்கவில்லை இதைப்புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறன் . இதுவரைக்கும் இந்த விடிவெள்ளிகளின் சிறு உதவிகள் கூட எங்கள் அம்பாறை மக்களுக்கு கிடைத்ததில்லை ஆனாலும் பெயருக்காவது இருந்து விட்டு போகட்டுமே என மக்கள் எண்ணுகிறார்கள் அதை நீங்கள் தேர்தலில் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன் ஏன்யா என்ன மாட்டி விடுறீர் நீங்க என்ன த்த சொன்னாலும் லண்டன் என்றா கன பெட்டைகள் ஓடுதுதான் நாட்டைவிட்டு நன்றி புங்கையூரன் உங்கள் கருத்துக்கும் கருவுக்கும்
  20. சொல்லுங்கள் மாமா .........இங்க பார் மகள் எனக்கும் ஓர் பெண் பிள்ளை இருக்குறா நான் பெய்ய சொல்ல விரும்பல உண்மைய சொல்கிறன் நீ என்ற மகனுடன் கதைச்ச நீயா ? தயங்கியவள் இல்ல மாமா நான் கோல் எடுத்த நான் ஆனால் அவர் ஆன்சர் பண்ணல. ம்ம் தெரியும் அவனுக்கு கல்யாணம் கட்டுற ஐடியா இல்ல. என்ற மனிசி சொன்னது எல்லாம் பொய் அவன் உன்ற வாழ்க்கைக்கு சரிவரமாட்டான். அவன் அந்த நாட்டு வாழ்க்கை வாழ்கிறான் உன் வாழ்வை கெடுத்துக்கொள்ளாதே நல்லா இரு மகள் உனக்கும் கையில் வேலை இருக்கிறது நல்ல பெடியனா பார்த்து கல்யாணம் கட்டு என ஏக்கத்துடன் . சொல்லிவிட்டு விடைபெறுகிறார்.மாணிக்கவாசகர் வரும் வழியில் தான் வெளிநாட்டு வாழ்கையில் தன் பிள்ளையைக்கூட ஒழுங்காக வளர்க்க முடியாத நாட்டில் வாழ்ந்து தொலைக்கிறோமே என் எண்ணியும். தனக்கும் ஓர் பெண் பிள்ளை இருப்பதை எண்ணியும். தன் காலில் உள்ள தடத்தையும் எத்தனை கண்டிப்பு எத்தனை அடி தன் தகப்பனின்ற வாங்கி நான் வளர்திருப்பேன். ஆனால் தற்போத்ய வாழ்வில் தங்கள் பேச்சைக்கூட கேட்காத பிள்ளையை வளர்த்த என்னிடம் எந்த பிழையும் இல்லை. நாடும் சட்டமும் நாகரிகமும் நம்மை நமது வாழ்வையும் தொலைத்து தொலைவில் கொண்டுபோய் விடுகிறது என எண்ணி வீடு செல்கிறார். அடுத்த நாள் கொழும்பு விமான நிலையம் வருகிறோம் ஐயர் என்ன சொல்கிறார்? ஐயர் கொஞ்ச பரிகாரம் செய்ய சொல்கிறார் ஓ அப்படியா மனிசி கோல் எடுக்கிறா அந்த பிள்ளையின் வீட்டுக்கு ஹலோ ரம்யாவா ஓம் சொல்லுங்க மாமி ஐயர் வந்து கொஞ்ச பரிகாரம் செய்ய சொல்லுறார் நான் இங்குள்ள ஐயரிட்ட காட்டியும் உங்களுக்கு கல்யாணம் வைக்கிற தேதிய‌ சொல்லுறன் சரியோ சரி மாமி கவனமாக போய்வாருங்கோ ஓம் நான் வைக்கிறன் . சரி லண்டன் வந்த அவர்கள் மீண்டும் அவர்கள் வந்திறங்கியதை அறிவிக்க அழைப்ப்பு எடுக்கிறார் சாரதா. ரம்யாவின் போண் நிறுத்தப்பட்டு இருந்த்து . இஞ்சாருங்கோ போண் வேலை செய்யுதில்லை பரிமளத்த்க்கு எடுத்து பாரேன் என நான் சொல்ல. பரிமளம் அக்கா ரம்யா போண் வேலைசெய்யுதில்ல ஏன்? ஓ அதுவா அவளுக்கு லண்டன் வர விருப்பம் இல்லையாம் ஏனாம் அவளுக்கு விருப்பம் இல்ல? அவளுக்கு யாரோ என்னவோ சொல்லி இருக்காங்கள் போல கல்யாணத்துல விருப்பம் இல்லெண்டு சொல்லுறாள் . நாம பாவம் என்று பார்த்து வெளிநாட்ட்டுக்கு எடுத்து விடுவோம் என பார்த்தால் கழுதைக்கு விருப்பம் இல்லையாமா? அவள் இல்லாட்டி ஆயிரம் பொட்டைகள் கிடைப்பாள் என கடுங் குரலுடன் போணை வைத்தாள் சாரதா . இஞ்சாருங்க அந்த பெட்டை கல்யாணம் வேணாம் என்று சொல்லுதாம், அவளுக்கு இங்கு வந்து வாழ கொடுத்து வைக்கல ஆரோ என்னவோ சொல்லி இருக்காங்களாம். நீங்கள் ஏதும் சொன்ன நீங்களோ? நான் என்ன சொல்ல போறன் நான் சில இடங்களை பார்க்கல எண்டு இருக்கன் நீ வேற.... ஓ உங்களுக்கு இடம் பார்க்கிரதுதான் முக்கியம் போல? சரி சரி விடு வேற யாரையெண்டாலும் பார்ப்போம் என மாணிக்கவாசகரும்... என் மனதிற்குள் நான் செய்தது நன்மையா , தீமையா, நல்லதா, கெட்டதா என என்மனம் ஆயிரம் கேள்விகள் கேட்டு உறுத்திக்கொண்டே இருக்கிறது உறுத்துகிறது நல்லது என நினைத்தால் நல்லது கெட்டது என நினைத்தால் கெட்டது நல்லதுதான் செய்திருக்கிறேன் என உறுதிகொள்கிறார். மகளை வீட்டுக்கு அழைக்க போணை எடுக்கிறார். அப்போது அடுத்த மெசேஞ் வருகிறது காணொளியாக அதை திறந்த போது அங்கு P2P பேரணி சுமந்திரனும் , சாணாக்கியரும் பேரணி நடத்துகிறார்கள். சாரதா அந்த குளிசைப்போத்தல எடுத்துவா பிரசர் கூடுனமாதிரி இருக்கு என்று கூறி போணை ஓவ் செய்கிறார் மாணிக்கவாசகர். முற்றும் கற்பனையும் உண்மையும் சேர்த்து நன்றி உடையார் உங்கள் கருத்துக்கு
  21. நாலு பேர் ஓடும் போது நாமளும் சேர்ந்து ஓடாமல் என்ன விசயம் என்று கேட்டு ஓடுவமே ஒன்றும் இல்லையென்றால் தனிய நின்று ஆட வேண்டிய சூழ்நிலையில் தனியொருவனாக ஆட வேண்டியதுதான் அக்கா. வாசியுங்கள் கருத்துக்கு மிக்க நன்றி கற்பனைக்கு அளவில்லை எண்ணத்தை இறக்கிவிட வேண்டும் சிறு சம்பவங்களை வைத்து அண்ண தொடரும் இறுதிப்பகுதி நன்றி புத்தர் வாழ் மிக்க நன்றி அண்ணை சும்மா சிறு சம்பவங்கள் ஊரில் நடக்கும் அவை மனதில் கதை போல கால ஓட்டத்தில் கிறுக்கலாக மாறுகிறது அடுத்த கதை ஊர் கதை ஒன்றும் எழுதணும் இன்னும் இரு நாட் கள் பாடசாலை பார்ப்போம் நேரம் கிடைத்தால் அதையும் கிறுக்கிட வேண்டியதுதான்
  22. நாட்டுக்கு போக வெளிக்கிட்டார்கள் இருவரும் பயணம் தயாரானது விமானம் வெளிக்கிடுகிறது மாஸ்க போடுங்கள் , நீ என்ன சாறி கட்டாமல் ரவுசரோட வாரநீ? ஊருக்க போய் சாரியை கட்டுறன் போதுமா? நீங்க அங்க போனதும் கைக்கு குளவுஸ்சோடதான் திரிய வேண்டும் ம்ம் பயணம் முடிந்து நாட்டை வந்தடைகிறார்கள் இருவரும் .சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊர போல வருமா என்பது போல திறந்த வெளிச்சிறைச்சாலையானாலும் அங்கே முழுமூச்சை இழுத்து விடும் போது அந்த மூச்சின் சுதந்திரத்தை அனுபவிக்கிறார் மாணிக்கவாசகர். இலங்கை போரின் பின்னர் புதிய கண்ணாடிக் கட்டிடங்கள் மெதுவாக நகர்புறங்களில் முளைத்து வளர்ச்சியடைவதையும் பாதைகள் சீராக இருப்பதை பார்த்தவாறே மட்டக்களப்பு விரைகிறார்கள். ஆனாலும் இலங்கையென்பது எத்தனை யுகங்கள் ஆனாலும் தமிழ் மக்களை நிம்மதியாக வாழவிடாது என்று என்று அவர் மனத்துக்குள் ஓர் விம்பம் திரைவிரித்து செல்கிறது .மட்டக்களப்பு உங்களை அன்புடன் வரவேற்கிறது எனும் பெயர் பலகையைப்பார்த்த பின்னர் தான் தன் கால்களுக்கு ஓர் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. மூட்டுவலி வந்த முழங்கால் வலி இல்லாமல் ஓடித்திரியவும் புழுதியில் நடக்கவும் புதிதாக நடை பழக எண்ணிய குழந்தைபோல தான் வளர்ந்த ஊரை சுற்றிப்பார்க்க துடிக்கிறது மாணிக்கவாசகர் மனது ஊரை( கல்லடி) வந்தடைகிறார்கள் ஊரில் மாணிக்கவாச்காரின் அக்காவின் வீடு மேல்மாடி இவர்களுக்காக தயாராக இருந்தது வீடு வந்தவர்களை பொது சுகாதார பரிசோகதருக்கு அறிவிக்கிறார் அக்கா. அவர் வந்து பி சி ஆர் பரிசோதனையெல்லாம் முடிந்ததா? ஓம் எல்லாம் கொழும்பில முடிச்சிட்டம் சரி இருந்தாலும் வெளியில் அதிகமாக நடமாடாதீர்கள்.. சரி என உறுதி வழங்கிய பின்னர் அவர் நகர்கிறார். நலன் விசாரிப்புகள் தொடர்ந்த பின்னர் மாணிக்க வாசகர் குளிக்க செல்கிறார் குளித்து முடிந்து வந்த அவர் சரத்தை கட்டிக்கொண்டு காலில் செருப்பை மாட்டிக்கொண்டு ஓடத்தயாராகிறார் அந்த கல்லடி பாலத்துக்கு எங்க போறீங்க அவசரமாக?? இந்த கல்லடி பாலத்துக்குத்தான் போயிட்டு வாரன் ஒரு டீ , சாப்பாடு ஏதாவது சாப்பிட்ட்டு போகலாமே? வேனில வரக்குள்ள சாப்பிட்டது இன்னும் சமிக்கல நான் நடந்து போய் வந்தால் சமிச்சிடும் என்று சொல்லிவிட்டு போகிறார் பசியும் மறந்து ஊர் நினைவும் நண்பர்களுடன் கூடி ,மகிழ்ந்த நினைவும் யாரைத்தான் விட்டு வைத்தது. போய் வந்த பிறகே பல நினைவுகளை பாலம் இன்னமும் சுமந்து நிற்பதை அறிகிறேன். என்னைப்போன்றவர்களின் பலநினைவுகளைசுமந்து பழைய பாலமும். எப்போதும் புதிதை கண்டால் மனிதன் பழையதை மறந்துவிடுவார்கள் ஆனால் பழையது பழையதுதான் காதலாகட்டும் , கடந்த கால நினைவுகளாகட்டும் மனதில் நின்றுகொண்டே பயணம் செய்யும் மரணிக்கும் வரை. அந்த நினைவுகளுடன் விடு வருகிறார் மாணிக்க வாசகர் அன்றிரவே எந்த குழுசையும் இல்லாமல் நிம்மதியான நித்திரையை அணைத்துக்கொள்கிறார். அடுத்த நாள் காலை பரிமளம் சொன்ன பிள்ளையின் வீட்டுக்கு இருவரும் செல்கிறோம் வேகம் கூடிய மோட்டார் சைக்கிளும் ,அதிக வாகனங்களும் கொஞ்சம் கூட பொறுமைஇல்லாத சாரதிகளும் , பெரிய மதில் சுவர்களும் யாரும் எட்டிப்பார்க்க முடியாத மதில் சுவர்கள் ஒரு மாடி வீடு ஒரு கார் என்றும் தானும் தன்ற குடும்பமும் என்ற சுவரை மனதில் எழுப்பி காலத்தின் மாற்றத்தில் நகர்புறங்களில் நாகரீகத்திலும் வாழ்வதைக்காணக்கூடியதாக இருந்தது . அவர்கள் வீட்டை அடைகிறோம் பிள்ளையை பார்த்ததும் மனிசிக்கு பிடித்து போகிறது. சீதனம் வேண்டுமென்றவள் சீதனம் கீதனம் ஒன்றும் வேண்டாம் பெண்னை மட்டும் கொடுங்கள் என்றதும் எனக்கும் அவளை மருகளாக ஏற்றுக்கொள்ள மனம் ஏங்கியது . மகனும் கதைத்ததா உங்கள் நம்பர், பேஸ்புக் ஐடி எல்லாம் கொடுத்தேன் அவனிட்ட கோல் எடுக்கலயா? என்று கேட்க அவள் தலையை அசைத்தும் அசைக்காமலும் இருந்தாள் . அந்த அசைவில் நான் புரிந்து கொண்டேன் அவன் இவளும் கதைக்கவில்லையென . என் மனைவி லண்டனைப்பற்றிப் புழுக ஆரம்பித்தாள் அவளுக்கு அவள் மனதில் ஓர் மாய‌விம்பத்தை ஏற்படுத்துகிறாள் ஆனால் அவை வெளியுலக வாழ்க்கையே ஆனால் கல்யாண வாழ்க்கை இருமணம் இணைந்து வாழும் உள்ளக வெளியக வாழ்க்கை என்பது எனக்கு மட்டுமே தெரிந்தது . நலன் விசாரிப்புக்களும். தேநீர் உரையாடல்களுடன் அவளுடைய ஜாதகம் வாங்கி விடைபெறுகிறோம். மனைவி ஐயரை தேடிச்செல்கிறாள் நானோ மீண்டும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ மீண்டும் நாட்டுக்கு வர எண்ணி மாமாங்கேஸ்வரயும், கொக்கட்டிச்சோலையானையும் ,களுதாவளை பிள்ளையாரையும் , வெளிச்சவீடு, கச்சேரி இருக்கும் கோட்டை பகுதியியையும் , முகத்துவார கடற்கரையும் காணச்செல்கிறேன் ஓர் ஆட்டோவைப்பிடித்து. நாட்கள் கரைகின்றது விடுமுறை முடியும் தறுவாயில் அந்த பிள்ளையின் வீட்டுக்குச் செல்கிறேன் . வாங்கோ அண்ணா என அந்த பிள்ளையின் அம்மா உள்ளே அழைக்கிறாள் என்ன நீங்கள் மட்டும் தனிய வந்திருக்கிறியள்? ஒன்றும் இல்லை மனிசி ஐயருட்ட போய்ட்டா நான் பிள்ளையோட கொஞ்சம் கதைக்க வேணும் அதுதான் வந்தேன் ஓஅப்படியா! இனி வந்துடுவா என்றது பிள்ளையும் வருகிறது வாங்கோ மாமா எப்ப வந்த நீங்கள் இப்பதான் மகள் ஓ சாப்பிட்ட நீங்களா ஓம் சாப்பிட்டன் உங்களுடன் மகள்கொஞ்சம் கதைக்க வேண்டும் ஓ கதைக்கலாமே. தொடரும்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.