-
தமிழர் பிரச்சினைகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ள 9 பேரடங்கிய இணைக்குழு நியமனம் தமிழரசுக்கட்சி - ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி சந்திப்பில் தீர்மானம்
இவ்வளவு பேரும்தான் கட்சியே கட்சிகளில் வேறு யாரும் இல்லை. கூடிப்பேசி அனைவரும் உள்ளடங்கிய இணைப்புக்குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
-
புலவர் started following இலங்கை எமது உற்ற நண்பன்; எந்நேரமும் உதவத் தயார்! - ஈரான் தூதுவர் , தமிழர் பிரச்சினைகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ள 9 பேரடங்கிய இணைக்குழு நியமனம் தமிழரசுக்கட்சி - ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி சந்திப்பில் தீர்மானம் , சிரித்துக் கொண்டே அழுகிறோம்!- தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க புலம்பல்! and 3 others
-
சிரித்துக் கொண்டே அழுகிறோம்!- தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க புலம்பல்!
நேற்றுவரை பாஜகவுடன் கூட்டணிவைத்திருந்த தேதிமுகவுக்கு கடந்த தேர்தலில் அதுவும் அமமுகவுடன் கூட்டணிவைத்து 0.43 வீத வாக்குகள்தான் அதற்கு 10+1 ராஜ்ய சபா கொடுத்த திமுகவினர்.பாஜக கூட்டணியில் சேரமாட்டாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் இரு கம்னியூஸ்ட்டுகள்>விசிக>மநீம> தவாகவுக்கு குநறந்த இடங்களைக் கொடுத்திருப்பது. தெலுங்கு பாசத்தைத்தவிர வேறு எதைச் சொல்வது. 2.8 வீத வாக்குகளை கொண்ட மநீமய்யத்துக்கு உதய~ரியனில் நிற்க வற்புறுத்தியதால் மனமுடைந்து தேர்தலில் நிற்பதையே புறக்கணித்து விட்டார். தமிழர்களைப்புறக்கணித்து தெலுங்கர்களை அரவணைத்திருக்கிறது திமுக.
-
மத்திய கிழக்கு மோதல் கட்டுப்பாட்டை மீறிவிட்டது - ஐ.நா. பொதுச்செயலாளர்
இந்தச் சபையின் தலைவர் ஒரு அதிகாரமில்லாத தலைவர். இந்தச் சபையால் ஒரு பிரயோசனமும் இல்லை.எந்தப் போரையும் இவர்களால் நிறுத்த முடியாது.
-
இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட தமிழ்ப் பெண் பிரான்ஸில் துணை மேயரானார்
கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லை. அதனால்தான் வெளியில் இருந்து வந்தவர்கள் எல்லாம் தமிழர்களை ஆட்சி செய்கிறார்கள். இந்த நிலையை மாற்றி மற்றைய மாநிலங்களைப் போல தமிழர்களை தமிழர்களே ஆளவேண்டும் என்பது மட்டமான சிந்தனையாகும்.இது தொடக்கம்தான் காலப் போக்கில் இது நடந்துதான் தீரும்.அதனைக் குழப்ப காலத்திற்குக்காலம் நடிக்க கோமாளிகளை இறக்கி விட்டு திராவிடம் சூழ்ச்சி செய்வது தொடர்கதையானாலும். அந்த அரிதார வேடம் வெகு சீக்கிரமாகவே கலைந்து வெளிச்சத்துக்கு வருவதை கண்கூடாகவே பார்த்து வருகிறோம்.
-
ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களைக் கண்டிக்கக் கோரி யுனிசெப் அமைப்புக்கு இஸ்ரேல் அவசர கடிதம்!
பள்ளிக்கூடத்தில் ரீச்சர் இவன் நுள்ளிப் போட்டான் என்று முறையிடுகிற மாதிரி இருக்கிறது. நடைபெறுவது போர். அதுவும் போரைத் தொடங்கியது இஸ்ரேலும் அமெரிக்காவும். எடுத்த எடுப்பிலேயே ஈரானில் பாடசாலையில் குண்டுகள் விழுந்து 150 பள்ளிக் குழந்தைகள் அநியாயமாக இறந்து போனார்கள். குண்டுகளுக்கு குழந்தைகள்,பெண்கள்,முதியவர்கள் என்று வேறுபடுத்திப்பார்க்கத் தெரியாது.காசாவில், பாலஸ்தீனத்தில், லெபனாலில் எத்தனை குழந்தைகள் இஸ்ரேலின் தாக்குதல்களில் இறந்து போயிருக்கிறார்கள்.அதற்கெல்லாம் யாரிடம் முறையிடுவது. போர் நடக்கின்றது. போரைத் தெடங்கியவர்கள்தான் போரை நிறுத்த வேண்டும். தோல்வியை ஒப்புக் கொண்டு போரை நிறுத்தினால் இருபக்கமும் அழிவுகளைத்தடுக்கலாம்.
-
இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட தமிழ்ப் பெண் பிரான்ஸில் துணை மேயரானார்
உங்கள் கண்களுக்கு சீமான் பேசுவது இனவெறுப்பாகத் தெரிகிறது.சீமான் தமிழர்நிலத்தை தமிழர் ஆளவேண்டும் என்று சொல்கிறார்.இங்கு யாரும் வாழலாம்ஆனால் ஆள்வது மண்ணின் மைந்தனாக வாழவேண்டும் என்பதில் என்ன தவறு?கேரளாவிலோ.கர்நாடகவிலோ.ஆந்திராவிலோ அல்லது தமிழ்நாட்டைத்தவிர வேறு எந்த மாநிலத்திலோ அந்த மண்ணின் மைந்தர்களைத் தவிர வேறு யாராவது முதலமைச்சராக இருந்துள்ளார்களா? அல்லது இனி வரமுடியுமா?மற்றைய மாநிலங்கள் அந்ததந்த மொழிவழி மாநிலங்களாக இருக்கும் பொழுது தமிழ்நாடு மட்டும் திராவிட நாடு என்ற போர்வையைப் போர்த்தியது யார்?என்ன காரணத்திற்காக திராவிடக் கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடிக்கிறார்கள் . திராவிடப் போர்வையில் தமிழர்களை ஆள்வதற்குத்தானே.தேசியக்கட்சியான காங்கிரசின் கொள்கை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டு அந்ததந்த மாநில நன்மை கருதும் காங்கிரசை எப்படி தேசியக்கட்சி என்று சொல்ல முடியும்.கர்நாடகாவில் இருந்து தண்ணீர் தமிழ்நாட்டுக்கு வருவதை கர்நாடக காங்கிரஸ் தரமறுக்கிறது கேரள காங்கிரசும் அவ்வாறே கேரளமக்களின் நலன்களைப் பேசுகிறது.தமிழக காங்கிரஸ் மட்டும் ஏன் தேசியம் பேச வேண்டும்.ஏனைய மாநிலத்தவர்கள் இனத்தூய்மைவாதம் பேசும்போது அது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லை சீமான் தமிழர்களைத் தமிழரே ஆளவேண்டும் என்னும் பொழுது இனவாதம் என்று சொல்லி மடை மாற்றுகிறீர்கள். சீமான் தமிழின உரிமை பற்றி மட்டும் பேசவில்லை அனைத்து உயிர்களுக்குமான அரசியலைப் பேசுகிறார். சூழலியல் பேசுகிறார். பொருளாதாரத்தைப்பற்றிப் பேசுகிறார். வேறு எந்க்கட்சி பேசுகிறது. அதுவெல்லாம் உங்கள் கண்களுக்குத் ஏன் தெரியவில்லை?
-
இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட தமிழ்ப் பெண் பிரான்ஸில் துணை மேயரானார்
அது உண்மைதான் ஆனால் அழுத்தமும் தமிழ்நாட்டு அரசிடமிருந்து மத்திய அரசுக்கு கொடுப்பதில்லையே. தங்கள் குடும்பத்தினருக்கு பதவிகளைப் பெறுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.இந்திய மத்திய அரசு இந்த விடயத்தில் அக்கறை அற்று இருந்தாலும் தமிழக அரசு அதற்கான அழுத்தம் கொடுத்திருக்கலாம். அல்லவா. இலங்கை அரசு இந்தியமக்களுக்கு குடியுரிமை கொடுத்தது போல இந்திய அரசு குடியுரிமை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. கல்வி வேலை வாய்ப்பிலாவது அவர்களுக்கு மனிதாபிமான ரீதியில் உதவவில்லையே என்பதே எனது ஆதங்கம்
-
இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட தமிழ்ப் பெண் பிரான்ஸில் துணை மேயரானார்
வாழ்த்துக்கள் ஆதித்யா!தமிழர்தாயகத்தில்ஏற்பட்ட யுத்தம் காரணமாக அகதிகளாகச் சென்றவர்கள் மேற்கு நாடுகளில் அரசியலில் பங்கெடுக்க முடிகிறது. அதே வேளையில் தாய்த்தமிழகத்திற்கு அகதியாகச் சென்றவர்களுக்கு குடியுரிமையும் இல்லை. தாயகத்திற்கு திரும்பவும் கடவுச்சீட்டு இல்லை.முகாம்களில் அடைக்கப்பட்டு உயர்கல்வி வாய்ப்புகள் .வேலை வாய்ப்புகள் மறுக்கப்பட்டு துன்பத்தில்வாடுகிறார்கள்.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
அங்கிகரிக்கப்பட்ட கட்சியான விசிகவுக்கு 8 அதே சமயத்தில்0 .4 வீத வாக்குகளைப் பெற்று நேற்று வரை திமுகவை திட்டி பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த தேதிமுகவுக்கு 10+1ராஜ்ய சபா இடங்களைக் கொடுத்த திமுகவின் தெலுங்கு மணவாடு பாசம்.யாரெல்லாம் பாஜகவை கடுமையாக எதிர் க்கிறார்களோ அந்தக்கட்சியோடு கூட்டணி நம்பகமாக வைக்கமட்டார்களோ ,திமுக கூட்டணியில் நீண்டகாலமாக இருந்து திமுக ஆட்சியின் தவறுகளை கண்டுகொள்ளாமல் முரட்டு முட்டு கொடுத்தார்களோ அவர்களைப் (விசிக,கம்மனியூஸ்ட்டுகள்) புறக்கணித்திருக்கிறது திமுக அவர்களின் ஒரே தேர்தல் கோஷம் பாஜக உள்ளே வந்திரும்.நாளை தேர்தல் முடிவுகள் தொங்கு சட்டசபையாக வந்தால் அண்ணியார் என்ன ஆட்டம் போடுவார் என்பதை நினைத்துப்பார்க்க முடியாது.(ஓரிரு இடங்களை வென்றிருந்தால்)இந்த இலட்சணத்தில் தனித்துப் போட்டுயிடும் நாதகவைபாஜகவின் B ரீம் என்று தங்கள் ஊடகங்களை வைத்து பிரச்சாரம் பண்ணுகிறார்கள் .அதை நம்பி யாழ்களத்திலும் சிலர் அதனை மேற்கோள் காட்டி எழுதுகிறார்கள்.உண்மையில் திமுகதான் பாஜகவுடன் மறைமுகக் கூட்டணி வைத்திருக்கிறது.எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது மோடிக்கு கறுப்புக் கொடி காட்டுவது ஆளும்கட்சியாக வந்தவுடன் வெள்ளைக்குடை பிடிப்பது இதுதான் திமுக.இதற்குள் கமல்என்ற கோமாளி உதயசூரியன் சின்னத்தில் நிற்கச் சொன்னதற்காக தேர்தலில் தங்கள் கட்சி மோட்டியிடாதாம்.ஆனால் திருட்டுத்திமுகவுக்கு முரட்டு ஆதரவும்.இப்பொழுது அடுத்த கோமாளி தயாராகிக் கொண்டிருக்கிறார்.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
இந்த நெருக்கடியான சூழலில், மதவாத -திரிபுவாத-வலதுசாரி கும்பலை வீழ்த்த வேண்டிய இந்த அறப்போரில், மக்கள் நீதி மய்யம் கட்சியும் நம்மைப் போலவே தேர்தலில் போட்டியிடும் ஒரு பங்கேற்பாளராக நம்மோடு கைகோர்த்துக் களமாடவேண்டும். அதாவது அண்ணன் கமல்ஹாசன் அவர்களும் தங்கள் தலைமையில் கொள்கை பகை வீழ்த்த கருத்தியல் வாளேந்த வேண்டும். மக்கள் நீதி மய்யம் இத்தேர்தலில் போட்டியிடாது என முடிவெடுப்பது அவரது பெருந்தன்மையாக இருக்கட்டும். மதவெறி எதிர்ப்பில் உறுதியாக நிற்கும் கருத்தியல் வலிமையும், நான்கு சதவீத அளவில் உறுதிப்படுத்தப்பட்ட 'வாக்கு வங்கி வலிமையும்', தமிழ்ச் சமூகத்தில் பெரும் செல்வாக்கு என்னும் உயரிய 'நன்மதிப்பு வலிமையும்' கொண்ட அண்ணன் கமல்ஹாசன் அவர்களை, 'அவ்வாறு விட்டு விடமாட்டோம்' என அவரை அரவணைத்துக்கொள்ள வேண்டியது தங்களின் உயரிய மாண்பாக அமையட்டும். தொகுதிகளின் எண்ணிக்கை எதுவானாலும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள 'டார்ச்' சின்னத்தில்' போட்டியிட அனுமதித்து, கூட்டணியின் மீதான நன்மதிப்பையும் தங்களின் மீதான பெருமதிப்பையும் மென்மேலும் உயர்த்திட வேண்டும் என தோழமையோடும் தங்களின் உடன்பிறப்பு என்னும் உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன். அப்போதுதான் 'வெல்வோம் ஒன்றாக' என்கிற தங்களின் உன்னதம் வாய்ந்த சகோதரத்துவ முழக்கம் வெற்றிகரமாக முழுமையுறும்" என்று திருமாவளவன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
விசிகவுக்கு இரட்டை இலக்கத்தில் படிந்தது பேரம் 08. புதுவையில் விசிக தனித்துப் போட்டியாம்.
-
இலங்கை எமது உற்ற நண்பன்; எந்நேரமும் உதவத் தயார்! - ஈரான் தூதுவர்
ஈரான் தூதுவருக்கு நன்றி!இந்தச் செய்தியை அமெரிக்கா மற்றும் மேற்குலகத்துக்கும் கொடுக்கப்பட்ட செய்தியாக அந்த நாடுகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
https://tamil.oneindia.com/news/chennai/nda-seat-pact-sealed-27-seats-to-bjp-18-to-pmk-11-to-ammk-in-aiadmk-alliance-783769.htmlபாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! By Vignesh Selvaraj Updated: Monday, March 23, 2026, 15:43 [IST] 3Subscribe to Oneindia Tamil சென்னை: அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாஜக 27 தொகுதிகளில் போட்டியிடும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். டிடிவி தினகரனின் அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பாமகவுக்கு என்.டி.ஏ கூட்டணியில் 18 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. AD தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ள சூழலில், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இந்தச் சூழலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவின் இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? இந்நிலையில், பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று சென்னைக்கு வருகை தந்தார். சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்களோடு வந்தார் பியூஷ் கோயல். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் வருகை தந்தனர். இதையடுத்து, என்.டி.ஏ கூட்டணியில் ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. பாஜகவுக்கு - 27 தொகுதிகள், அமமுகவுக்கு -11 தொகுதிகள், பாமகவுக்கு -18 தொகுதிகள், ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். AD கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகளும், பாஜகவுக்கு 20 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. Read more at: https://tamil.oneindia.com/news/chennai/nda-seat-pact-sealed-27-seats-to-bjp-18-to-pmk-11-to-ammk-in-aiadmk-alliance-783769.htmlஎடப்பாடி கூலாக பாஜகவை டீல் செய்துள்ளார்.தொகுதிப்பங்கீடு விடயத்தில் எடப்பாடியின் கையே மேலோங்கி இருந்தது.காங்கிரசின் விஜை கூட்டணி நாடகத்துக்கு பயந்து .4 வீத தேதிமுகவுக்கு அளவுக்கு மீறிய விட்டுக்கொடுப்புக்களைச் செய்து இவ்வளவு காலமும் விசுவாசமாக இருந்த கூட்டணிக்கட்சிகளுக்கு அல்வா கொடுத்த திமுக இப்பொழுது முழிக்கிறது. திருமா இரட்டை இலக்கத்துக்கு குறைவாக ஒத்துக்கொள்ளக்கூடாது என்று கட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.திருமாவுக்கு சிக்கல்.அதிக கட்சிகளின் கூட்டணிகளைக் கொண்ட திமுகவின்பலமே அதன்பலவீனமாகவும் இருக்கிறது.
-
ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்தார் ட்ரம்ப்
அமெரிக்காவின் ஜனாதிபதி பேசும்போது வார்த்தைகளை அளந்து பேச வேண்டும்.அது தான் ஒரு வல்லரசு நாட்டின் அதிபருக்கு வேண்டியது. ஆனால் தம்பர் வாய்க்கு வந்தபடி முன்னுக்குப் பின் முரணாகப் பேசிவருகிறார்.அமெரிக்காவின் பலவீனத்தை தம்பர் போட்டு உடைத்து விட்டார்.இது அவரைத் தெரிவு செய்த மக்களுக்குத் தேவை.
-
தம்பரும் , இரானும் யுத்த நிறுத்தத்திற்கு தயார்
சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்பது போல . ஈரான் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் பெருமளவில் போரடிக் கொண்டிருந்த போது தேவையில்லாமல் அமெரிக்கா இஸ்ரேல் போரில் இறங்கி ஈரானியர்களை ஒற்றுமையாக்கி விட்டது.