Everything posted by nochchi
-
அரசியல் குழுவின் இறுதி முடிவு!; கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அரியநேத்திரன்
யார்யாரெல்லாம் புலி அனுதாபிகளோ அவர்களனைவரும் நீக்கப்படுவர். அடுத்தவர் சிறீதரன்? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
தெற்கிற்கும் வடக்கிற்கும் ஒரே சட்டம் எனக் கூறும் ஜனாதிபதி விகாரை விடயத்தில் அதை நிறைவேற்றாதது ஏன்? - அருட்தந்தை மா.சத்திவேல்
கடந்த 78ஆண்டுகளாக வந்த எல்லா ஆட்சியாளரும் சொல்லியதையும் செய்ததையுமே அநுர ஆட்சி தொடர்கிறது. மாற்றங்கள் மகாசங்கங்களின் அதிகாரத்துவம் உள்ளவரை அல்லது சிங்கள் வெகுசனங்களிடையே இருதரப்பும் ஈழத்தீவின் சமமான பங்காளர்கள் என்ற மனமாற்றம் ஏற்படாதவரை அரசியல் மாற்றங்கள் நிகழாது. அவை ஒற்றையச்சிலேயே சுழலும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
அரசியல் குழுவின் இறுதி முடிவு!; கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அரியநேத்திரன்
தைப்பொங்கல் சிரிப்புகளில் வரவேண்டிய செய்தியைப்போல் சுமந்திரன் கட்சியின் நிலை உள்ளது.
-
யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
துணைவியாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் மோகன் அவர்களுக்கும் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்! அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம்.
-
அமைச்சர் லால்காந்தவின் கருத்தை உடனடியாக மீளப் பெறப்பட வேண்டும்
உங்கப்பரும், சித்தப்பருமா இந்தச் சட்டத்தைத் தமிழ் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தேக்க என்ன கோமாவிலா இவர் இருந்தவர். உங்கடை கையாளான சவீந்திர சில்வா தையிட்டியிலை விகாரை கட்டேக்கை, குருந்தூர்மலை... கிண்ணியா... சிவபுரமென உங்களாட்சிக்காலத்தில் அடாவடிகள் செய்து இனஅழிப்பையும் இனவெறுப்பையும் அதியுச்சமாகச் செய்தபோது எங்கே போனது எங்கபோனது அந்த சட்டம். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
பிணையில் விடுதலையான டக்ளஸ் தேவானந்தா கங்காராம விகாராதிபதியிடம் ஆசி பெற்றார்!
சிங்கள மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும், டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அரசியல் செயற்பாடுகளை தொடர்ந்தும் நாட்டு மக்கள் எதிர்பார்ப்பதாகவும் குறித்த சந்திப்பின்போது விகாராதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தேரர் சொல்லாமல் விட்ட சொல் ''சிங்கள'' ஏனென்றால் அவரது சிங்கள விசுவாசமும் சுவாசமும் ஒன்று. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
சீனாவுடன் தாய்வான் இணைவதை எவராலும் தடுக்க முடியாது – சீன ஜனாதிபதி!
இந்த உலகில் ''இறையாண்மை'' என்று ஒன்று உள்ளதா? அப்படியிருப்பதாக இருந்தால் ஆக்கிரமிப்பும் குடியேற்றவாதமும் நிறைவடைந்த 50க்குப் பிற்பட்ட உலக சூழலில் இனங்களின்(தனித்துவம்) சுயநிர்ணயம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும். தமிழீழம் முதல் காசா வரையான அழிவுகளும், ஈராக், உக்ரேன் முதல் வெனிசுவேலா வரையான ஆக்கிரமிப்புகள் நடைபெற்றிருக்குமா? பாபர் மசூதி இடிப்பு, காஸ்மீரின் தனித்துவ உரிமைகள் மறுப்பு மற்றும் சட்டநீக்கம் எனப் பல்தேசிய இனங்களின் உரிமை மறுப்பு, காலிஸ்தான் உரிமைப்போராட்ட அழிப்புப் போன்றனவும் தொடர்கின்றன. யூகோஸ்லாவியாக்காவைக் கையாண்டது ஒரு விதம். இலங்கையை மற்றும் இஸ்ரேலைக் கையாள்தல் ஒருவிதம் எனத் தத்தமது தேவைகளும், கொள்ளையிடத் தேவையான வளங்களுமே சுயநிர்ணய உரிமையையும், இறையாண்மையையும் தீர்மானிக்கின்றன. மேற்கோ கிழக்கோ வளச்சுரண்டலுக்கான போட்டியில் ஒருவரை ஒருவர் மிஞ்சியோரல்ல. ஆனால், அழிவது என்னவோ அப்பாவி மக்களே. சனநாயகமென்ற போர்வையுள் நின்று ஆக்கிரமிப்பையும், அப்பாவி மக்கள் மீதான படுகொலைகளையும் புரிவோர் இறுதிவரை அரச சுகபோகங்களை அனுபவித்து அரவசவாழ்க்கையை வாழ்ந்து அரசமரியாதையோடு அடக்கம் செய்யப்பட்டுவிடுகின்றனர். அதற்கும் மக்களின் வரிப்பணமே செலவாகிறது. சீ** இந்த வெட்கம் கெட்ட வாழ்வுக்கு எத்தனை பந்தா மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் வேறு. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
ஈராக் முதல் வெனிசுவேலா வரை இந்த ஒரே ஒப்பாரியை வைத்துவிட்டு ஓய்ந்துவிடுவதே வழமை. பிறகென்ன. பேசாமல் ஐ.நாவைக் கலைத்தவிட்டு அமெரிக்கச்சபையாக்கிவிடலாம்.
-
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு : அரசுக்கு நெறியியல், அறநெறிசார் சட்டபூர்வத்தன்மை இல்லை - கிறிஸ்தவ பாதிரிமார்கள், செயற்பாட்டாளர்கள் 61 பேர் கூட்டாகக் கண்டனம்
மக்கள் விடுதலை முன்னணி(JVP) என்ற தேசிய மக்கள் சக்தி(NPP) அரசொன்றும் தாமும் இனவாதத்தில் சளைத்தோரல்ல என்பதைப் பதிவுசெய்தே வருகிறார்கள். முன்பு அரசாண்ட கட்சிகளை நீலமும் பச்சையும் மோதகமும் கொழுக்கட்டையுமெனச் சுட்டும் ஒரு சொற்றொடருண்டு. மக்கள் விடுதலை முன்னணி(JVP) என்ற தேசிய மக்கள் சக்தி(NPP)யைப் பொறுத்தவரை முந்தியவை இரண்டும் அவித்ததென்றால், இது பொரித்த மோதகம் அல்லது கொழுக்கட்டை போன்றது. வெளியே போர்வையாக உள்ள மாவென்னவோ பொரிப்பதால் சுவை வேறுபட்டாலும் உள்ளுடன் ஒன்றுதான். மகாவம்சமும் பௌத்தமதமும் சிங்களத்தின் நிலையான தூண்கள். அவற்றைச் சாய்த்துவிட்டுத் தமிழினத்தை அரவணைத்து ஏற்ற தீர்வைத் துணிவோடு இவர்கள் முன்வைப்பார்கள் எனத் தமிழினம் 2026இலும் சிந்திப்பதானது பட்டறிவைச் சீர்தூக்கிப்பாராமையின் நிலையே. என்ன இது அநியாயம்? இவர்கள் மதம் சார்ந்த வேலையைப் பார்ப்பதைவிட்டு எதற்காக இந்த அரசியல் செயற்பாடுகள் மீது அறிக்கையிடுகிறார்கள். இலங்கையரைப் பொறுத்தவரை அபத்தமல்லவா? இலங்கை நேசர்கள் பிக்குகள் மட்டுமே அரசியல், இராணுவ மற்றும் சட்டவாக்கம் போன்றவற்றில் தலையிடும் உரமையுள்ளோரெனக் கூறுகிறார்கள்.! நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
உதவி தேவை: இந்தியக் கடற்படையால் குருநகர் "துறைமுகம்" தாக்கப்பட்டதா?
https://www.google.com/search?q=ipkf+operation+gurunagar&oq=IPKF+&gs_lcrp=EgZjaHJvbWUqBggBECMYJzIGCAAQRRg5MgYIARAjGCcyFAgCECMYExgnGIAEGIoFGPAFGJ4GMgYIAxBFGDsyBggEEEUYQDIJCAUQABgTGIAEMgkIBhAAGBMYgAQyCQgHEAAYExiABNIBCzUwODQ4M2owajE1qAIIsAIB8QXbeXB0ATCm7PEF23lwdAEwpuw&sourceid=chrome&ie=UTF-8
-
செம்மணி யாழ் வளைவு பகுதியில் தடை - நல்லூர் பிரதேச சபையின் சர்ச்சைக்குரிய தீர்மானம்
புடுங்கவேண்டிய ஆணிகளைவிட்டுப் புதிய ஆணிகளைத் தாமாகத் தேடிப்பித்து தமது தலையிலேயே அடித்துக்கொள்வதில் எங்கள் அரசியல்வியாதிகளை மிஞ்சிவிட இந்த உலகில் யாருமிலர். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
பொலிசாரிடம் வேலன் சுவாமிகளின் ஆபத்தான திக்.. திக்.. நிமிடங்கள் - முதன் முறையாக அம்பலமாகும் உண்மைகள்!
பொலிசாரிடம் வேலன் சுவாமிகளின் ஆபத்தான திக்.. திக்.. நிமிடங்கள் - முதன் முறையாக அம்பலமாகும் உண்மைகள்! சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள தையிட்டி தொடர்பாக அதிலே பங்குபற்றித் தாக்குதலுக்குள்ளானவரால் பேசப்படும் கருத்துகளுக்காக இணைத்தள்ளேன். நன்றி - யூரூப் நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி (லங்காசிறியின் தலைப்பு காணொளியோடு ஒத்துப்போகவில்லை என்பது வேறு)
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
உண்மை, அனுர அரசுக்கும் முன்னைய அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. பெயர்களும் நிறங்களுமே வேறு. சிலர் கோத்தாபோல் கடுமையாக இல்லை என்பர். மக்களுக்கு ஆட்சியை வழங்க வேண்டுமேயொழியக் கடுமையாக இருக்க வேண்டியதில்லை. நியாயமான சட்டத்தின் ஆட்சியை சகலருக்கும் உறுதிப்படுத்த வேண்டும். சட்டத்தின் ஆட்சியை சகலருக்கும் சமனாக வழங்கமுடியாதவராகவே இந்தத் தலைவரும் உள்ளார். திருகோணமலை புத்தர் சிலைவிவகாரத்தையே துணிவோடு கையாள முடியாத அரசு.அரசியலமைப்பென்று இதற்கும் விளத்தம் கொடுப்போரும் உளர். பெரும்பான்மையைக் கொண்ட அரசு ஏன் சரியானதொரு உலக நடைமுறைகளை உள்வாங்கி இன சமத்துவத்தைப் பேணக்கூடிய அரசியலமைப்பொன்றை முன்வைத்து நாட்டை சனநாயக நாடாக மாற்றலாமே. இவர்கள் ஒருபோதும் அப்படிச் செய்யமாட்டார்கள். அப்படிச்செய்தால் இவர்களது கட்சியில் உள்ளோரும் நீதியின் முன் நிற்கவேண்டி வரலாம். இதைக் கூறியவரை எப்போது காணாமலாக்குகிறார்களோ தெரியவில்லை. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி இதைக் கூறியவரை (சு.பொன்னையாவை) எப்போது காணாமலாக்குகிறார்களோ தெரியவில்லை. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
பனியால் சூழப்பட்ட சவுதி அரேபியாவின் பாலைவன நிலப்பரப்புகள்!
காலநிலை தொடர்பாக நடைபெறும் மாநாடுகள் வடையும் தேனீரும் அருந்தும் மாநாடுகள் போல் தோன்றுகின்றன. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
திலீபத்திற்கு மாலை சூடிய சிங்கள தளபதி
இணைப்புக்கு நன்றி. எம்மவர்களே .இன்னும் முழுமையாக விளங்கிக்கொண்டதாகத் தெரியவில்லை. வீழ்ந்ததால் எம்மவர்களது நக்கல் நளினம் முதல் தூற்றல் என்று தொடர்கையில் சர்வதேசம் விளங்கிக்கொள்ளாமல் இருப்பது ஒன்றும் புதிரல்ல. (சர்வதேசம் விளங்கிக்கொண்டு விளங்காததுபோல் நடிக்கிறார்கள் என்பது வேறுகதை) நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
இது அநியாயம். சிறிலங்கா அரசின் யாழ்க்காவலனும் அரசுகளுக்காகவும் தனது பழிதீர்ப்பாகவும் பலகொலைகளைச்செய்து சிறிலங்கா சிங்கள அரசுகளுக்கு உதவியவரை கைது செய்யலாமா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
மலையகத்தை அழிக்கும் தமிழர்கள் | போரியல் ஆய்வாளர் அருஸ்
அண்மைய புயற்பேரழிவு மீட்சி மற்றும் சமகால அரசியல் தொடர்பான உரையாடற் காணொளியாதலால் இணைத்துள்ளேன் நன்றி - யுரூப் நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
தையிட்டி திஸ்ஸ விகாரை போலியானது - வட இலங்கையின் சங்க நாயக்க தேரர்
புத்தன் அனைத்தையும் துறந்து பரிநிர்வாணம் அடைந்து போதித்தவற்றைக் குழிதோண்டிப் புதைத்த சிங்கள இனத்தில் இப்படியான நியாயக்குரல்கள் மிகஅரிதாகத் தோன்றி மறைவது தொடர்கதையானபோதும், அதனை சரியாகக் கையாளமுடியாத தரப்பாகப் பாதிக்கபபட்ட தமிழர் தரப்பு ஏமாந்தே நிற்கிறது.தேரருக்கு மாதந்தோறும் மக்கள் போராடுவதும் பிரச்சினையாக இருக்கிறது. அந்த மக்களின் போராட்டமே இவரைப் பேசவைத்திருக்கலாம். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
“60 வயதுக்கு மேல் இளமையாக இருப்பது எப்படி?” – ஆரோக்கியத்திற்கான 5 எளிய மந்திரங்கள்!
யேர்மனியில் ஓய்வூதிய வயதெல்லையை 70ஆக்கினால் என்ன என்று அரச சிந்தனைக்குழாம் சிந்திப்பதாகத் தொழிலாளர்களிடையே உரையாடல் வந்துபோகிறது. இதிலே எப்படியாம் 60 வயதுக்கு மேல் இளமையாக இருப்பது? பிறந்த ஆண்டின் அடிப்படையில் எடுத்துக்காட்டுகள்: 1957: 65 ஆண்டுகள் மற்றும் 11 மாதங்கள். 1959: 66 ஆண்டுகள் மற்றும் 2 மாதங்கள். 1964: 67 ஆண்டுகள் (2031 இல் முழுமையடைகிறது) இந்தத் தரவுப்படி "70மேல் இளமையாக.. " என்றுதான் தலைப்பைப் போட வேண்டும் என்று நினைக்கின்றேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
'ஒன்டன் செட்ரோன்' எனப்படும் வாந்தி ஏற்படுவதை தூண்டுவதை தடுக்கும் மருந்து பாவனையிலிருந்து முற்றாக நீக்கம்
உண்மை, மருத்துவர் ஒரு நிறுவன மருந்தை எழுத, மருந்தகர் வேறொரு நிறுவன மருந்தைத் தருகிறார். கேட்டால் ஆ.ஓ.கAOK வைக் கேட்கச் சொல்கிறார்கள். மனிதத் தவறுகள் மருத்துவத்துறையில் நிகழ்வதானது உயிரோடு விளையாடுவதாகும். இன்றும் ஒருதகவலை அறிந்தேன். ஒரு இளம் மாணவிக்கான எலும்பு முறிவுச் சத்திர சிகிச்சையின்போது தவறு நடைபெற்றுள்ளது. ஆணிகளைக் கழற்றி எடுத்துவிட்டு மீண்டும் சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் கூறியுள்ளார்கள். யேர்மனியில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறை மருத்துவத்துறையையும் பாதித்துவருகிறது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
'ஒன்டன் செட்ரோன்' எனப்படும் வாந்தி ஏற்படுவதை தூண்டுவதை தடுக்கும் மருந்து பாவனையிலிருந்து முற்றாக நீக்கம்
மருந்துகள் ஒருபுறம் மருத்துவர்கள் மற்றும் தாதியரின் தவறுகள் மறுபுறமாக மனிதநலவாழ்வுக்கான மருத்துவத்துறை நிச்சயமற்றதாகி வருகிறது. சில தினங்களின் முன் கிளிநொச்சியில் ஒரு உயிரிழப்பு. அது தாதியரின் தவறால் என்று உரையாடல் இடம்பெற்றதாக இறந்தவரது உறவுகள் ஊடாக அறிந்தேன். எல்லாம் பணமயமாகிவிட்டது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
நிவாரண பொருட்களுடன் யாழ். பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கியது அமெரிக்க விமானம்
தமிழீழத்தை வேட்டையாடிய இரண்டுமே ஓநாய்கள். ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல. அமெரிக்காவும் இணைந்தே எம்மை அழிந்தன. எமது தாயகனின் நிருவாகத்தை அழத்துவிட்டு சிங்களத்தை காத்தவாறு தமிழித்துக்கு உதவுவதாக நாடகம் போடுவதன் நோக்கம் தமிழர்கள் மீதான அக்கறையல்ல. சீனாவால் உள்வாங்கப்பட்ட சிறிலங்காவைவிட தமிழர்கள் எதற்கும் இசைவாக்கம் அடையும் இயல்புடையோரான தமிழரைக் கையாள்வது இலகுவானதென்பதை அமெரிக்கா அறியாதிருக்குமா? ஆனாலென்ன தமிழரால் துரத்தப்பட்டோர் போய் இருப்பதையும் விற்காமிலிருந்தால் சிறப்பு.
-
நாட்டுப்பற்றாளர் யோகராசா சிறிஸ்கந்தராஜா (சிறி) அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு.
நாட்டுப்பற்றாளர் யோகராசா சிறிஸ்கந்தராஜா (சிறி) அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு. Posted on October 23, 2025 by சமர்வீரன் 342 0 யேர்மனியின் தலைநகரில் நீன்டகால செயற்பாட்டாளர், நாட்டுப்பற்றாளர் யோகராசா சிறிஸ்கந்தராஜா அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு மிகவும் சிறப்பாகவும் உணர்வு பூர்வமாகவும் தலைநகரில் நடைபெற்றது. பல்முகத் தேசியச் செயற்பாட்டாளராகிய சிறியண்ணாவுக்கு பல நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் தங்கள் இறுதிவணக்கத்தை உணர்வு பூர்வமாகச் செலுத்தினர். தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளையின் ஆளுகைக்கு உட்பட்டு யேர்மனியின் பேர்லின்மாநிலத்தின் நகரப் பிரதிநிதியாகவும் பல்முகச் செயற்பாட்டாளராகவும் பணியாற்றிக் கடந்த 12.10.2025 அன்று உடல்நலக் குறைவினால் சாவடைந்த நாட்டுப்பற்றாளர் யேகராசா சிறிஸ்கந்தராஜா அவர்களது இறுதி வணக்க நிகழ்வானது இன்று (23.10.2025) மிகவும் உணர்வுப்பூர்வமாக தலைநகரில் நடைபெற்றது. அனைத்துலகச் செயலகத்தினால் வழங்கப்பெற்ற நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு அறிக்கை வாசிக்கப்பட்டு, யேர்மனிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் வெளியிடப்பட்ட நினைவுப் பிரசுரமும், அனைத்துலக மக்களவையால் வெளியிடப்பட்ட நினைவுப் பிரசுரமும் வாசிக்கப்பட்டது. நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பெற்ற வரலாற்று ஆவணம், திருவுருவப்படப் பேளை, வித்துடல்மீது போர்த்திய தமிழீழத் தேசியக் கொடி என்பன, மாவீரர் பணிமனையின் ஒழுங்கமைப்பிற்கு அமைவாக குடும்பத்தாரிடம் கையளிக்கப்பெற்றது. https://www.kuriyeedu.com/?p=704009
-
உள்நாட்டு யுத்த காலத்தை விட தற்போது பயங்கரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது- சாகர காரியவசம்!
போரைச் சந்தித்த ஒரு நாடு அல்லது ஓர் அரசானது போரின் தோற்றுவாய்க்கான தீர்வை முன்வைத்து அனைத்துத்தரப்பினரையும் ஒரு நேர்கோட்டிற் கொண்டுவராதவரை எப்படியான ஆட்சியை செய்தாலும் அரசியல் வறட்சியே நிலவும்.. அதிலும் பொதுவுடமைச் சிந்தாந்த கோட்பாடுடையோரின் ஆட்சிகள் ஒருவகை மறைநிலை எதேச்சதிகார ஆட்சிகளாகவே இருந்துள்ளன. மிகமோசமான பொருண்மிய வீழ்ச்சியைச் சந்தித்த ஈழத்தீவில் முதல்முறையாக பொதுவுடமைச் சிந்தாந்தக் கோட்பாடுடையோர் ஆட்சியமைத்துள்ள அரசாக உள்ளநிலையில் அவர்கள் ஒருநிலையெடுப்பதற்குள் ஆட்சிக்காலம் முடிவடைந்துவிடலாம். மாறிமாறி ஆண்ட இருதரப்புகளும் தமிழினத்தை அழிக்கும் நோக்கிலே ஒருவகைப் படையப் பலப்பிரயோக ஆட்சியை (இராணுவ ஆட்சி)கடந்த அரைநூற்றாண்டாகச் செயற்படுத்தின. அதனையே இன்றைய அரசும் தொடர்கிறது. அங்கே பயின்ற படைகளும், சிவப்புக்கொடிக்குள் மறைந்துள்ள யே.வி.பி என்ற என்.பி.பி அரசும் தமது முன்னாள் இன்னாள் எதிரிகளை ஒடுக்க பல்வேறு தந்திரங்களைக் கடந்த ஓர் ஆண்டாகச் செயற்படுத்திவருதை காணக்கூடியதாக உள்ளது. அதிலே ஒரு வேறுபாட்டையும் காணமுடிகிறது. சிலரைக் கைது, மருத்துவவசதி என்று உயர்பிரிவிலும், சிலரை உயிர்பிரிப்புப் பிரிவிலும் என அரச நிகழ்ச்சிநிரலோடு நகர்வதாகவே தோன்றுகிறது. ஆனால், மகிந்த தரப்பைக் கைவைத்து இருப்பதையும் இழப்பான் ஏன் என்ற ஒரு அச்சநிலையோடு ஆட்சியைத் தொடர்கின்றனர். அனுர அரசும் என்னதான் சமத்துவம் சமதர்மம் என்றாலும் இனத்துவநிலையில் இருந்து சிந்திப்பதையே காணமுடிகிறது. அதற்கான அளவுகோலாக வடமாகாணத்திலுள்ள தையிட்டியில் தனியாருக்கு உரித்துடைய காணிகளை அத்துமீறி அடாத்தாகப் பிடித்து அமைக்கப்பட்டுள்ள விகாரை விடயத்தை அனுர அரசு கையாளும் தன்மையே போதுமானது. இன்னுமொருபடி மேற்சென்று சர்ச்சைக்குரிய விகாராதிபதியிடம் ஆசீர்வாதம்வேறு பெற்று அதை உறுதிப்படுத்தியது என்பன சான்றாகும். இனமோ, இனப்பிரச்சினை என்ற ஒன்றோ இல்லை. பொருண்மியப் பிரச்சினையே உள்ளது. எனவே அபிவிருத்தி அரசியலைச் செய்தால் தமிழரது பிரச்சினை தீர்ந்துவிடும் என்று பொய்களை அவிட்டுவிட்டு பொருண்மிய உதவிகளை வெளிநாடுகளிடம் பெற்றுச் சிங்களப்பகுதிகளின் மேல் அபிவிருத்திக்;குவிப்பைப் பல பத்தாண்டுகள் செய்ததுபோல் அனுர அரசும் செயற்பட்டு வருவதை காங்கேசன்துறைத் துறைமுக அபிவிருத்தி மீதான அக்கறையின்மை தெளிவுறக்காட்டுகிறது. எனவே, துணிவுடைய அரசுத்தலைமையும், நாட்டின் முதன்மைப் பிரச்சினையான இனப்பிரச்சினையைத் தற்துணிவோடு எதிர்கொள்ளும் ஆளுமையும் உள்ள ஒரு அரசுத் தலைமையால் மட்டுமே ஈழத்தீவை மீட்டெடுக்க முடியும். ஈழத்தீவை நிலையாக்கக் குறைந்தபட்சம் உள்ளக சுயநிர்ணய உரிமையைக் கொண்ட கூட்டாட்சி முறையொன்றை உளத்தூய்மையோடு நிறுவுதலே ஒட்டுமொத்த ஈழத்தீவினது மீட்சியாகவும் ஒரு திறந்தநிலைச் சட்டத்தின் ஆட்சியாகவும், தெற்காசியவட்டகையில் உயர்நிலைச் சனநாயக விழுமியங்களைக் கொண்ட சிறந்த மக்களாகவும் நாடாகவும் அமையும். அடிப்படை மாற்றங்களைச் செய்யாது தற்போதுள்ள அரசியற் சட்டம் ஒர் அரசுப்பொறியாக இல்லாது மக்களை அழிக்கும் ஆட்சிப்பொறியாகவே இருக்கும். அனாமதேயக் கொலைகளுக்கும் பஞ்சமிருக்காது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
இது ஒரு தீபாவளிக் கதை: பாவம் நரகாசுரன் -பேராசிரியர் சி. மௌனகுரு
கவனிக்கபடாத ஆனால் கவனிக்கப்படவேண்டிய உண்மை.