Jump to content

nochchi

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    5416
  • Joined

  • Last visited

  • Days Won

    6

Everything posted by nochchi

  1. Operation Duwaraka ஒரு புலனாய்வுச் சதி: ஆதாரங்களுடன் விளக்கும் தலைவர் பிரபாகரனின் மெயப்பாதுகாவலர் திரியோடு தொடர்புடைய உரையாடலைக் கொண்டுள்ளது. நன்றி-யூரூப். தலைப்புப் பொருத்தமாக இல்லையென்பது எனது பார்வை. ஊடகங்கள் தமது பிழைப்புக்காகவே தலைப்புகளைத் தடம்மாற்றி வைக்கின்றன. இதுவும் ஒரு சாபக்கேடன போக்கே. நன்றி
  2. வணக்கம் சுவியவர்களே, நினைவிருக்கிறது. நிழற்படப்பதிவில் உங்களைக் காணமுடிந்தது. இரண்டாண்டுகள் ஓடிவிட்டன. பேரனைப் பார்க்க வந்துபோயிருப்பீர்கள் என்று நம்புகின்றேன். அழகான, அற்புதமான தருணங்கள் வாய்க்கப்பெற்றுள்ளீர்கள். வாழ்க நலமுடனும் வளமுடனும் என வாழ்த்தவதில் மனநிறைவடைகின்றேன். வணக்கம் ஈழப்பிரியனவர்களே, உங்கள் பேரக்குழந்தைகள் பற்றிய பகிர்வைப் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துகள்.
  3. "எங்களுடன் இணையுங்கள்" - வட பகுதி மக்களுக்கு ஜே.வி.பி. தலைவர் அழைப்பு Published By: RAJEEBAN 10 DEC, 2023 | 01:09 PM எங்களுடன் இணையுங்கள் நாங்கள் உங்கள் தேவைகளைபூர்த்தி செய்வோம் என வடபகுதி மக்களிற்கு வேண்டுகோள் விடுத்துள்ள ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க ஊழல்மிகுந்த ஆளும்குழுவை தோற்கடிப்பதற்கான தேசிய விடுதலை இயக்கத்திலும் நீங்கள் இணைந்துகொள்ளவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார் இந்து நாளிதழிற்கான பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் எங்களின் நெருங்கிய அயல்நாடான இந்தியா மிகவும் வலுவான அரசியல் பொருளாதார மையமாக மாறியுள்ளமை எங்களிற்கு தெரியும். ஆகவே பொருளாதார அரசியல் முடிவுகளை எடுக்கும்போது அதுஇந்தியாவை எப்படி பாதிக்கும் என்பது குறித்து நாங்கள்கவனம் செலுத்துவோம் இரண்டு சக்தி வாய்ந்த நாடுகள் மத்தியிலேயே பூகோளஅரசியலில் போட்டி காணப்படுகின்றது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் இல்லை இந்த நாட்டில் சில பிரச்சினைகள் உள்ளன என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம் குறிப்பாக தமிழர்கள் முஸ்லீம்கள் தொடர்பில் - அவர்களது மொழி கலாச்சார விடயங்கள் மற்றும் ஆட்சி முறையில் பங்கெடுத்தல் தொடர்பில் பிரச்சினைகள் உள்ளன. இந்த விவகாரங்களிற்கு நாங்கள் தீர்வை காணவேண்டும். வடக்கு மக்களிற்கு தேசிய மக்கள் சக்தி விடுக்கின்ற வேண்டுகோள் இதுதான் எங்களுடன் இணையுங்கள் நாங்கள் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வோம். ஊழல்மிகுந்த ஆளும்குழுவை தோற்கடிப்பதற்கான தேசிய விடுதலை இயக்கத்திலும் நீங்கள் இணைந்துகொள்ளவேண்டும் . "எங்களுடன் இணையுங்கள்" - வட பகுதி மக்களுக்கு ஜே.வி.பி. தலைவர் அழைப்பு | Virakesari.lk
  4. கருத்துப் பகிர்வுக்கு நன்றி. மிகவும் சிறப்பாக நடைபெற்றுமுடிந்துள்ளது. வேலைநாளானபோதும் மக்களும் திரண்டமை நல்லதொரு மாற்றமே. தமிழர்களாகத் திரள்நிலையடைவதற்கான ஒரே களமாக மாவீரர்தினமே உள்ளது. ஆனால் தாயகத்தோடு ஒப்பிடமுடியாது. கனகபுரம் மாவீரர் துயிலகம் கண்களைக் குளமாக்கிச் செல்கிறது. நன்றி
  5. 'உங்களுக்குத் தீங்கு செய்கிறவனுக்குத் தீங்கு செய்யாதீர்கள்; எவனாவது உங்களை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் காட்டுங்கள்' என்று பிரசித்திபெற்ற மலைப் பிரசங்கத்தில் இயேசு கிறிஸ்து சொன்னார் என்று போதிப்பவரே சிறுமியை தாக்கி இந்த நிலையை ஏற்படுத்தியுள்ளார். இது மதவெறியா?சிறுமியின் மீதான அக்கறையா? மனிதர்கள் இனி எங்குதான்போவது? அரச வன்முறை, வாள்க்குழு வன்முறை, காவல்துறை வன்முறை, அரசியல்வாதிகளின் வன்முறை, மதவாதிகளின் வன்முறை... எப்போது ஓயும்?
  6. மாவீரர் தினத்திற்குரிய மாண்போடு தந்த தவகரனவர்களது பதிவைப் பார்த்துவிட்டு இணைக்க வேண்டும் என்று யோசித்தேன். மருதங்கேணியாரவர்கள் இணைத்துள்ளார் நன்றி. சிங்கள மற்றும் இந்தியக் கூட்டுகளுக்கும், உலகினது வல்லாதிக்க சக்திகளுக்கும் தமிழீழ தேசிய மாவீரர் தினத்திலே மக்கள் சக்தி சொல்லியுள்ள செய்தி காத்திரமானது. தமிழ் மக்களின் தாயகத்தை மீட்டெடுக்கும் இலட்சிய உறுதியோடு களமாடி மாவீரம் ஆகிவிட்ட எங்கள் பிள்ளைகளையோ, உறவுகளையோ, போராளிகளையோ வணங்குவதை யாராலும் தடுக்க முடியாது என்பதை இந்த ஆண்டும் அனைத்துத் தடைகளையும் கடந்து உறுதியோடு எடுத்தியம்பி உள்ளனர். புரளிகளைக் கிளப்பி விட்டு தமிழர்களை இனிமேலும் திசைதிருப்ப முடியாதென்பதையும் இந்த மாவீரர் தினம் சுட்டிக்கடக்கிறது. எங்கள் தேசியத் தலைவரின் சிந்தனையான '' எமது மக்கள் சிங்கள இனவாத அடக்குமுறையின் அக்கினிப் பட்டறையில்புடம்போடப்பட்டவர்கள். அரசியல் பயங்கவாதத்தில் அகோரங்களைச் சந்தித்தவர்கள் துன்பச் சிலுவையைச் சதா சுமந்து பழகியவர்கள் மரணத்தின் நிழலில் படுத்துறங்கி வாழ்பவர்கள்,, சுட்டுவதுபோல் எமது மக்கள் எழுந்து வருகிறார்கள். இந்த எழுச்சி ஒருநாள் அரசியல் எழுச்சியாக மாறும் என்ற அச்சத்தின் வெளிப்பாடே சிங்களத்தினது தடைகள். தடைக் கடந்த மக்களுக்குப் பாராட்டுகள்.
  7. இலக்கின் சிந்தனை | தேசமாக எழுந்த மக்களும் மாறுபாடுகள் ஏற்படுத்தக் கூடிய விளைவுகளும் | ILC | இலக்கு மாவீரர் நாளினது கருவைத்தொட்டுச் செல்லும் கருத்தாடல் என்பதால் இணைத்துள்ளேன். நன்றி - யூரூப்
  8. இசுலாமிய எழுச்சி பிரான்ஸைத்தான் முதல் தாக்கும்போல் தெரிகிறது. விதைத்ததன்அறுவடையா? உலகைச் சுரண்டியதன் விளைவா? இரக்கம் பார்த்ததற்குப் பரிசா? சுரண்டாலிதிக்க உலகின் வல்லாதிக்க சக்திகள் தாமே உலகின் மீட்பர்கள்போல், உலகைக் கண்ணிமைக்கும்நேரத்துள் அழித்துவிடும் அணு ஆயுதப்பெட்டிகளோடு அலைவதன் விளைவாக உருவாகியுள்ள நிலையின் பிரதிபலிப்பா? உலகம் அமைதிபெற இரு வழிகளே உள்ளன.ஒன்று, தாம் பொருண்மிய நிலையில் உயர்வடைய நாடுகளை ஆக்கிரமித்துச் சுரண்டிப் பெருப்பதை நிறுத்துதல். இரண்டாவது, இனங்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்று அவர்களை அங்கீகரித்து அவர்களைத் தனித்துவமாக வாழவிடல் போன்றனவற்றை இந்த உலகின் ஆதிக்க உணர்ந்து வழிவிடுவதே உலக அமைதிக்கும் அகதிகளற்ற உலகுக்கான திறவுகோலாகும். இன்னொருவனது அழிவில் தாம் வாழநினைப்பதை இந்த ஆதிக்க சக்திகள் கைவிட்டு உலக அமைதிக்கு உதவ முன்வரவேண்டும். நன்றி
  9. தமிழீழத் தேசிய மாவீரர் நாள் யேர்மனி டோர்ட்முண்ட் (Dortmund) – 2023 Posted on November 30, 2023 by சமர்வீரன் 708 0 மாவீரர்கள் கந்தகச் சூளையில் தம்மை புடம்போட்டுத் தேசவிடுதலைக்காய் ஆகுதியாகிய நெருப்பின் அலைகள். சாவின் வாசலை அதிரவைத்த எறிகணைகள். தேசத்தில் காதல் கொண்டு உயிரீகம் செய்த தெய்வப்பிறவிகள். தலைவனின் விழியில் பாயும் கதிர்வீச்சின் உயிராயுதங்கள். மனிதப்பிறவியின் உன்னத இலக்கினை அடைந்த இறையாளர்கள். இத்தகைய ஈகத்தெய்வங்களின் திருநாள் 27.11.2023 அன்று யேர்மனியில் உள்ள டோர்ட்முண்ட் (Dortmund) மேற்கு விளையாட்டு அரங்கில் உணர்வு பூர்வமாக நடைபெற்றது. இந்தநிகழ்வின் போது முதலாவதாக அனைவரதும் உணர்வு பொங்கும் மன ஒருங்கிணைப்பின் அலைவீச்சின் மத்தியில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. பொதுச்சுடரினை Nordrhein-Westfalen குர்திஸ்தான் அமைப்புகளின் சார்பில் கலந்து கொண்ட திருமதி. நாட்சோ (Nazo) அவர்கள் ஏற்றி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து தமிழீழ தேசியக்கொடியினை யேர்மன் தமிழ் பெண்கள்அமைப்பின் துணைப்பொறுப்பாளர் செல்வி. தமிழினி பத்மநாதன் அவர்கள் ஏற்றிவைத்தார். அந்தவேளையில் கொடியேற்றப்பாடல் இசைக்கப்பட்டது. பாடலின் உணர்வுகள் தமிழீழத்தேசத்தின் ஒவ்வொரு அணுவிலும் மனதை பதியம் வைத்தது. தொடர்ந்து தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 2008ஆம் ஆண்டின் மாவீரர் உரையிலிருந்து சிறு பகுதி ஒளிபரப்பப்பட்டது. எக்காலத்துக்கும் பொருந்தும் வகையில் தூரநோக்குப் பார்வையின் வெளிப்பாடக அமைந்தது. தலைவர் அவர்களது 2008ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரையைத் தொடர்ந்து தமிழீழவிடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பக கொள்கை வகுப்பு உரை ஒலிபரப்பப் பட்டது. இன்று நாம் எதிர் கொள்ளும் தடைகளையும், அதற்காக நாம் ஆற்றவேண்டிய பணிகளின் அவசியம் பற்றியும் இவ்வறிக்கையில் தெளிவு படுத்தப்பட்டது. இதனை அடுத்து எமது தேசத்தின் உயிரீகத்தெய்வங்களின் துயிலுமில்லத்தில் அகவணக்கம் செய்யப்பட்டு துயிலுமில்லப் பாடல் ஒலிக்கவிடப்பட்டது. துயிலுமில்லத்தில் முதன்மைச் சுடரினை 24.06.1997ஆம் ஆண்டு அன்று வவுனியா பெரியமடுவில் அமைந்திருந்த ஜெயசிக்குறு படையினரின் ஆட்லரி, மோட்டார், ஏவுதளங்கள் மற்றும் காப்பரண்களின் மீதான தாக்குதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட திரவியம் அமுதினி எனும் இயற்பெயர் கொண்ட லெப்.நித்தியா அவர்களின் தாயார் திருமதி. திரவியம் செவ்வந்திமலர் அவர்கள் ஏற்றி வைத்தார். அந்தவேளையில் மாவீரர் குடும்பங்கள் சுடர் ,மலர் வணக்கத்தை இதயம் வெதும்பும் உணர்வோடு துதித்து வணங்கினார்கள். அதனைத் தொடர்ந்து அனைத்து மக்களும் மாவீரர் உணர்வுடன் தமது சுடர்,மலர் வணக்கத்தை செலுத்தி உணர்வேற்றிக்கொண்டனர். துயிலும் இல்லத்தில் விளக்கேற்றும் நேரத்தில், எமது மாவீரமணிகளின் எழுச்சிப்பாடல்கள் மேடையில் இசைக்கப்பட்டு மென்மேலும் உணர்வினை ஊட்டி ஆழ்மனதில் மாவீரர்களின் தியாகங்களை உரமூட்டியது. யேர்மனிக் கிளையின் மாவீரர் பணிமனை ஒவ்வொரு வருடமும் மாவீரர்களினதும் ,எமது தேசத்தின் விடுதலை பற்றிய அறத்தைத் தாங்கிய இதழாக “கார்திகை தீபம் ” எனும் இதழை வெளியீடு செய்து வருகின்றனர். அவ்விதழை இவ்வருடம் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தாயகநலன் பொறுப்பாளர் திரு இரா.இராஜன் அவர்கள் வெளியீடு செய்ய, தமிழ்க் கல்விக்கழகத்தின் தேர்வுப் பொறுப்பாளர் திரு.சேரன் யோகேந்திரன் அவர்கள் பெற்றுக்கொண்டார். மேலும் அனைத்துலக செயலகத்தின் வெளியீடான “மாவீரம் பேசும் காற்று” எனும் பாடல் தொகுப்பின் தகவல் சேமிப்பானை (USB) தமிழர் ஒருங்கிணைப்புக்குழு யேர்மனிக் கிளையின் துணைப்பொறுப்பாளர் திரு. சுப்பிரமணியம் ஜெய்சங்கர் வெளியீடு செய்ய திரு.சக்தி அவர்கள் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து மாவீரர் வெற்றிக்கிண்ண போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற தமிழாலயங்களுக்கு மதிப்பளிக்கப்பட்டது. இம்மதிப்பளிப்பின் போது வெற்றிபெற்ற தமிழாலய மாணவர்கள் தமது அறுவடையின் வெற்றிக்களிப்பின் உச்சத்தை தொட்டனர்.அத்தோடு தமிழத்திறன் போட்டிகளில் யேர்மன் தழுவிய ரீதியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற தமிழாலய மாணவ, மாணவிகளுக்கு மதிப்பளிக்கப்பட்டதோடு, அவர்களது பேச்சும், கவிதையும் மாவீரர் அரங்கினை மேலும் எழுச்சி ஊட்டியது. உணர்வின் வேர்களை ஆளும் பேர்லின் (Berlin) கலைஞர்களின் உணர்வூட்டிய நாடகமும், எமது தேசியத்தின் வரலாற்றுப்பதிவாக யேர்மன் இளையோர் அமைப்பால் ஒளிபரப்பப்பட்ட வரலாற்றுப் பதிவும் சிறப்பாக அமைந்தது. தொடர்ந்து இடதுசாரிக் கட்சியின் உறுப்பினரும் குர்திஸ்தான் அமைப்பின் Baden-Württenberg இணைப்பாளருமாகிய திரு. டென்னிஸ் ஸ்டோஸ் (Dennis storz) அவர்களும், Nordrhein-Westfalen குர்திஸ்தான் அமைப்புகளின் சார்பில் கலந்து கொண்ட திருமதி. நாட்சோ (Nazo)அவர்களும் விடுதலை பெறும்வரை சோர்வின்றி போராடவேண்டியத்தின் அவசியத்தினை வலியுறுத்தி யேர்மன் மொழியில் உரையாற்றினார்கள். அத்தோடு யேர்மன் பெண்கள் அமைப்பு தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெண்கள் தொடர்ந்து ஆற்ற வேண்டிய பணிகள் சார்ந்தும், தமிழீழப் பெண்கள் மீது சிங்கள இனவெறி அரசினால் தொடர்ந்தும் நடத்தப் பட்டுவரும் அநீதிகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. இந்த ஆண்டின் மாவீரர் நாளின் சிறப்பு உரையினை யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன் அவர்கள் வழங்கியிருந்தார். இன்றைய அரசியல் நிலைப்பாட்டின் உண்மைத் தன்மையினை எடுத்தியம்பும் பேச்சாக அவரது சிறப்புரை அமைந்திருந்தது. மாவீரர் நாள் எழுச்சி நிகழ்வுகளின் நிறைவாக யேர்மன் தமிழர் கலை பண்பாட்டுக் கழக ஆசிரியர்களின் நெறியாள்கையில் நூறுக்கும் மேற்பட்ட மாணவர்களது “உணர்வின் அலைகள்” எனும் நாட்டியத் தொகுப்பு எழுச்சி ஊட்டும் வகையில் இடம்பெற்றிருந்தது. நிகழ்வுகளின் நிறைவாக இளையோர் அமைப்பினர் ஒன்றிணைந்து மக்களோடு உறுதிமொழியினை எடுத்துக்கொண்ட பின்னர் தமிழீழத் தேசியக்கொடி இறக்கிவைக்கப்பட்டு “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற எழுச்சிப்பாடலோடு 2023ஆம் ஆண்டின் மாவீரர் வணக்கநிகழ்வுகள் எழுச்சியோடு நிறைவேறியது . தமிழீழத் தேசிய மாவீரர் நாள் யேர்மனி டோர்ட்முண்ட் (Dortmund) – 2023 – குறியீடு (kuriyeedu.com)
  10. எமக்கு எவராவது அகப்பட்டால் அவரது முதுகில் ஏறிச் சவாரிசெய்து பழகிவிட்டது. அதனை மாற்ற முடியாது. ஆனால் காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லையல்லவா? எனவே எமக்குச் சரியென்பதை அது யாருக்கும் கெடுதல் இல்லையென்றால், அடுத்தவர் அப்போதைய நிலைக்கேற்ப செய்ய வருவாரென்ற நம்பிக்கையோடு இப்போது எமது முறை என்று செய்துவிட்டு நகர வேண்டியதே. தமிழினம் கடந்துவரும் பாதை தெரிந்ததுதானே. சிலவற்றை நாம் கடப்பதைத் தவிர வேறுவிழியில்லை. நாம் யாரையும் மாற்றவும் முடியாது. யாருக்காவும் யாரும் மாறவேண்டுமென்றுமில்லைத்தானே. ஆனால், தம்மையறியாமலே மாற்றத்துள் அமிழ்ந்துவிவோரும் உண்டு.
  11. Prabhakaran’s Daughter Dwaraka is No more - Who is Fake Duwaraka? - Advocate Johnson Expose திரியோடு தொடர்புடைய காணொளியாதலால் இணைத்துள்ளேன். நன்றி - யூரூப்
  12. எம் மனமெங்கும் நினைவுகளில் நிறைந்துலவும் மாவீரர்களே வீரவணக்கம்.உங்கள் இலட்சியம் ஒருநாள் ஈடேறும். தாயகவெளிகளில் நீங்கள் மீண்டும் நிமிர்வீர்கள்.
  13. எங்கள் தமிழ்த் தேசியத்தின் தலைமகனே தன்னிகரில்லாப் பேரொளியே என்றும் எம்முள் ஒளிரும் சுடராக வாழும் தலைவா, நின் காலத்து மாந்தராய் நாமும் வாழக்கிடைத்ததே என்ற பேருண்மையின் கீற்றுகளிற் தமிழ் உலகு உள்ளவரை உங்கள் கீதம் ஒலித்படியே இருக்கும். ஒருநாள் வரலாற்றின் பக்கங்களில் பெரும் காவியமாய் மலரும் உங்கள் விடுதலைப் போருலக வாழ்வு. கரம் குவித்து சிரம் தாழ்த்தி வாழ்த்துகின்றேன் எம் தலைவா!
  14. இணைப்புக்கு நன்றி, 3:49ஆவது நிமிடத்திலிருந்து சிறுவனின் வினா எமது முகத்தில் ஓங்கி அறைவதுபோல் இருக்கிறது.சிந்திப்பார்களா(?) என்பதே விலைமதிக்க முடியாத வினா.
  15. வீட்டிலை அடிக்கடி வாற வினா, என்ன சாப்பாடு! சமையற்கட்டு மேசையிலை மரவள்ளியைக் கண்டதாலே, கட்டைச் சம்பலும் மரவள்ளியும் என்றால்.... பிறகென்ன நல்லாத்தானிருந்தது. மூக்கடைப்பெல்லாம் போயிற்றுது. சின்ன வெங்காயம் கூடப்போட்டால் நல்லது. இப்ப மூன்று வாரமா ஒருநாள் இரவுச் சாப்பாடு மரவள்ளி.
  16. தமிழர்கள் மட்டுமல்ல முழு ஈழத்தீவுமே கொண்டாடவேண்டிய தாய். முள்ளியவளை மண்ணிலேயிருந்து தமிழுக்குப் பெருமை சேர்த்த தாயே வாழ்த்துகின்றோம்.
  17. Israel's Arab Warriors : Israel இராணுவத்தில் அரேபிய முஸ்லிம்கள் | Niraj David's Nitharsanam | IBC இந்தத் திரியோடு தொடர்புடைய செய்தியைக் கொண்டுள்ளதால் இணைத்துள்ளேன். நன்றி
  18. சிங்களத்துக்கு ஆலோசனை கொடுத்துக் கொம்பு சீவிவிட்டதே இஸ்ரேல்தானே. தமது உத்தியைத் தாமே தோற்கடித்துவிட்டார்கள்.
  19. இந்திய இராணுவத்தினது கதையென்பதால் இணைத்துள்ளேன். நன்றி
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.