-
Posts
5737 -
Joined
-
Last visited
-
Days Won
7
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by nochchi
-
அநுரகுமாரவின் வெளிப்பாடு அச்சுறுத்தல் அல்ல : பாதுகாக்கும் சுமந்திரன்
nochchi replied to nunavilan's topic in ஊர்ப் புதினம்
சீச்சி... அவரது கை அசுத்தமடையாத கை. ஏன் பயப்பிட வேண்டமு;. அதைவிட கிறிமினல்.. சட்டம் படித்தவராயிற்றே.. நீங்கள் அந்தப் பச்சோந்தி வகையையா சொல்கிறீர்கள். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி -
வாத்தியாரவர்களுக்குப் படித்துக் கருத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. இருந்ததையும் இழந்துவிட்ட மனிதனின் கடைசித்தேடலாக இருப்பது என்னவோ அவனது பிறப்பிடமே. அது இளமையில் தெரிவதில்லை. இலகுவாக வந்துவிடுவோம். ஆனால், தேடலில் பதியும் பாதங்கள் தேடுவது என்னவோ ஆறுதலை. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
ராஜ்குமார் ரஜீவின் செவ்வியை கொஞ்சம் கேளுங்கள்.
nochchi replied to ஈழப்பிரியன்'s topic in அரசியல் அலசல்
உண்மை,இணைப்புக்கு நன்றி. சிறப்பு, இவர்போன்ற தெளிவான செயற்பாட்டு அரசியல்வாதிகளை மக்கள் இனங்கான வேண்டும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி -
விசா பிரச்சினைக்கு அநுர அரசாங்கத்தின் உடனடி தீர்வு.
nochchi replied to ஈழப்பிரியன்'s topic in ஊர்ப் புதினம்
புதிய நிறுவனம் இவர்களையும் கவனித்திருக்கும். ஆண்டுக்கு 50மில்லியனென்றால் சும்மாவா? பீயோனில் இருந்து பிரதம செயலாளர்வரை எவளவு கைமாறியிருக்கும். அன்னியச் செலாவணியைக்கொண்டுவரும் ஒரு திணைக்களமே இப்படியென்றால், மற்றவை... நான் நினைக்கவில்லை. புதிய அரசுத்தலைவருக்கு இதற்கே ஒப்புதல் அளிப்பதிலே நேரம்போனால், எப்படி இனமுரண்பாடு, பொருண்மியம், அபிவிருத்தி என்று செல்லமுடியும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி -
படித்தோர் மற்றும் விருப்போடு இணைந்த புங்கையூரனவர்களுக்கும், கவலையை வெளிப்படுத்திய குமாரசாமி ஐயாவுக்கும் நன்றி. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
nochchi replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
ரெளடிசம் அவ* க்குக் கைவந்தகலையல்லவா? இல்லாவிடில் போலிப் பந்தாவுக்காகக் போராளிகளைப் போடுக்கொடுத்தாளல்லோ.ஆட்கள் படித்தைவை அதாவது சட்டம் படித்தவை. மக்களின் வரிப்பணத்தில் படித்து மக்களிடம் வாக்குப்பெற்று வயிறு வளரப்பதோடு, தமது சொந்ததிகளுக்கும் சொத்துகளைச் சேர்க்கும் அரசியல் வியாபாரக்கூட்டம். இந்தப் போலியானது தனக்காகப் பலரை ஆள் நல்லதொகைகொடுத்துப் புலத்திலும் களமிறக்கிவிட்டுள்ளது போலுள்ளது. -
இறையாண்மையென்று கூறிச் சிங்கள அரசுகள் தமிழினத்தை அழித்தொழித்ததோடு முழு இலங்கை மக்களதும் இறையாண்மையைப் பறிகொடுத்துப் பரிதவிக்கிறது. (சிறிலங்காத் தேசியவாதிகள் படிக்காது கடந்து செல்லப் பணிவுடன் வேண்டுகிறேன்) இதைத்தான் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதோ. இவரது வெற்றிச் செய்திதொடர்பான திரியில் ஏலவே பகிர்ந்தவைதான். இவர் நினைத்தாலும் நிலைமை அவளவு இலகுவானதல்ல என்பதே மெய்நிலையாகும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
ரசோதரனவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. உண்மைதான். ஒருநாளென்றால் அது ஒரு தனிச்சுவை. ஆனால், சிறிமாவின் ஆட்சிக்காலத்தில் கைகொடுத்தது மரவள்ளி. மறக்கமுடியாத காலம். ஒவ்வொரு வீட்டிலும் மரவள்ளி நட்டகாலமாக இருந்தது. இனிவருங்காலங்கள் இலங்கைத் தீவுக்கு எப்படியோ அநுர மாத்தையா மட்டுமே அறிவார். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
வாசித்த உறவுகளுக்கும், விருப்போடு, நன்றியையும் பகிர்ந்த ரசோதரன், தமிழ்சிறி மற்றும் உடையார் ஆகியோருக்கும் உளமார்ந்த நன்றி. தமிழ்சிறியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. அந்த அமைதிக்காலத்தில் சோலைக் கடற்கரை. அதன் கம்பீரம். பின்வந்த ஆண்டுகளில்.... உயிருள்ளவரை மறக்க முடியாத வலிகளோடு வாழும் வாழ்வாகிவிட்டது. சிலவேளைகளில் மனம் எதையாவது கிறுக்கச் சொல்கிறது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
மீனவர்களை விட்டுப்போட்டு நாடாளுமன்ற வெற்றிவாய்ப்பை இழக்கவேண்டியநிலையை எதிர்கொள்ள வேண்டுமா என்று புதிய சனாதிபதி சிந்திக்கமாட்டார் என்று எப்படி இந்த இந்திய அரசியல்வாதிகள் யோசிக்கிறார்கள். இருதரப்பும் முழுமையாக ஆய்வுசெய்து சரியானதொரு புரிந்துணர்வோடும், இருபகுதி மீனவர்களது நலன்களும் பாதிக்காத வகையிலும் சிந்திக்காது ஒரு இலக்கற்று வெற்றுக் கடிதங்களோடு விடுதலையைக் கோருவது சாத்தியமா? முதலில் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பாவித்தைத் தமிழக மற்றும் ஒன்றிய அரசுகள் தடை செய்யவேண்டும். எல்லை தாண்டும் மீனவர்களை கட்டுப்படுத்த வேண்டும். இதற்கான பொறிமுறைகள் கண்டறியப்பட்டு ஒரு நிரந்தரமான தீர்வு நோக்கி நகரவேண்டும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
உருவப்படுமா? --------------------- எங்கும் ஒருவித மயான அமைதி காடைத்தனத்தின் உச்சத்தைக் கடந்த பொழுதில் நிலமெங்கும் மனிதமலைகளாய் உடலங்கள் குருதியும் சகதியுமாய்... எனக்கு உயிர் இருந்தது அதுவே எனக்குப் போதுமானது கடற்காற்று ஊவென்று வீசியது உடம்பெங்கும் சில்லிட்டுக் குளிர்ந்தது ஆடையற்று அம்மணமாகக் கிடக்கும் உணர்வு நானும் செத்திருக்கக் கூடாதா மனம் சொல்லிற்று குப்புறக் கிடந்த என்னால் அசையக்கூட முடியவில்லை பிணங்களில் இருந்துவரும் வாடை வாடைக்காற்று வீசிய கடலோரம் பிணவாடை உலுப்பியது சட்டென அம்மாவின் குரல் என் காதில் ஒலித்தது டேய் அரைநாண் கயிறைக் கட்டடா அவிழ்ந்தால் நீ அம்மணக்கட்டையடா ஒட்டுத் துணிகூட இல்லாதபோதிலும் அரைநாண் கயிறிருந்தால் உன்னை அம்மணமானவன் என்றழையார் என்று என் அம்மா சொன்னது நினைவிலே வந்து போனது! என் சக்தி முழுவதையும் திரட்டி சுற்றுமுற்றும் தலையைத் தூக்கிப்பார்த்தேன் சற்றுக் கைக்கெட்டும் தூரத்தில் ஒற்றைச் சப்பாத்தொன்று புதையுண்டவாறு யாரோ ஒரு போராளியினுடையதாக இருக்க வேண்டும் மெல்ல நகர்ந்து சப்பாத்திலிருந்து நூலைப் பிரித்தெடுத்து என் இடுப்பிலே கட்டிக்கொண்டேன் இப்போது எனக்கொரு திருப்தி! தொலைவில் ஒற்றை வெடியோசைகள் வெடிப்புகள் எனக் கேட்டன... மெதுவாக ஊர்ந்து பற்றையுள் பதுங்கினேன் எதுவுமே தெரியவில்லை கண்விழித்ததோ ஒரு மருத்துவமனையில் நான் ஒரு அரச ஊழியன் ஆனாலும் நான் தமிழன் அல்லவா இடுப்பு நூலுக்கும் விசாரணை விளத்தங்கள் அலைக்கழிப்புகள் ஆனாலும் என்ன அரைநாண் கயிறை இப்போதுவரை அணிந்திருக்கிறேன்! அப்பா அம்மாவை முள்ளிவாய்கால் அள்ளிச் சென்றுவிட்டது உறவுகளில் ஏறக்குறையத் தொண்ணூறுவீதம் பேரையும் இழந்துவிட்டேன் நண்பர்கள் ஒரு சிலரோ வாடா வெளிநாடென்கிறார்கள் அரைநாண் கயிற்றையும் இழக்க முடியுமா அம்மா சொன்னதை மறக்க முடியுமா இழப்பதற்கு நான் தயாரில்லை எங்கள் மண்ணில் எங்கள் வளவிலே சிறு பயிர்களோடும் சிறு உயிர்களோடும் நகர்கிறது என்வாழ்வு பொருண்மியத் திரட்சி இல்லையென்றாலும் மனதிற்குள் மகிழ்வு துளிர்கிறது! என்னைப் பார்க்க வந்த வெளிநாட்டு உறவொன்று மரவள்ளிக் கிழங்கும் கட்டைச் சம்பலும் அற்புதமென்றான் அற்புதங்கள் நிகழ்துவதாய் பழைய நாற்றொன்று புதிதாய் மின்னி அனைவரையும் அழைத்துத் தலைமையேற்றுள்ளது ஆனாலும் என்ன அரைநாண் கயிற்றுக்கும் ஆபத்து வருமா(?) என்ற வினா என்னைத் தொடர்கிறது! நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
ஏகேடி மேற்கினுள் சங்கமிப்பதும் மக்களின் ஆணையை நிராகரிப்பதும் ஒன்றே. என்ன தமிழர்களை சிங்களத் தேசியத்துள் கரைத்துவிட உழைத்துவரும் இந்த வெள்ளைநரி புதிய தலைமைக்கு உதவுமாறு ஊளையிடுகிறது. முதலில் இந்தத்தலைப்பே பிழையானது. ''ஒரு புதிய அரசியல் தலைமையின் தொடக்கம் என்பதே பொருத்தம்.
-
நாட்டை விட்டு வெளியேறும் அரச பிரபுக்கள்?; பலத்த பாதுகாப்பு
nochchi replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
உண்மைதான், ஆனால் சீனா அவளவுதூரம் கண்ணை மூடிக்கொண்டு கொடுக்குமா?சிலவேளை ரணிலுக்குக் கொடுத்ததுபோல் இந்தியா கொடுக்கலாம். இந்திய அமெரிக்க உளவு அமைப்புகளைக் கடந்து நடக்குமா? அநுராவின் பொருண்மிய இலக்குகள் கடினமானவையாகவே இருக்கும். சிலவேளை குறுகியகால மரவள்ளி, மிளகாய், நெல், சிறுதோட்டப் பயிர்களை நோக்கி மக்களை நகர்த்தக்கூடும். -
கண்கள் பனிக்கின்றன. ஏறக்குறைய எங்கள் நிலைபோலவே. என்ன வேற்றுமொழிச் சூழல்.. ஆனால், நிலமென்னும் நல்லாளுக்கு நிறங்களையோ,இனங்களையோ தெரியாது. தன்மேல் கால்பதிப்போரை அரவணைத்துக் கொள்கிறது.
-
நிதியை ஏன் விரயமாக்குவான் என்ற நோக்கில் சிந்திக்கக்கூடும். ஆனால், இவரைத் தேரர்கள் விடவேண்டுமே..... உங்கள் நம்பிக்கை நிறைவேறினால் ஒரு 5ஆண்டுகள் தமிழர் தாயகத்தில் பௌத்தமயமாக்கல் பின்னோக்கியதாக அமையும்.
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
nochchi replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
இலங்கையின் குற்றிவியல் சட்டங்களைப் படித்தார்களேயன்றி, அரசறிவியலைப் படித்திருப்பார்களா? அதனால்தான் சிங்களத்திடம் தொடர் ஏமாற்றம். சிங்களத்தின் ஒவ்வொரு அரச தூதுவர் முதல் அரச அதிகாரிகள் வரை எப்படி அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பதற்குப் பல எடுத்துக்காட்டுகள். யுத்த காலத்திற் கடும்போக்காளரான மகிந்த குடும்பத்திற்கும், அவர்கள் நாட்டைப் பொருண்மிய ரீதியாக வீழ்த்தியபோது அறகலயவாகத்திரண்டு துரத்தியடித்தமை, இன்று யே.வி.பியோடு என்று காலத்தைக் கணித்துத் தமது தலைமையைத் தேடிக்கொள்கிறார்கள். ஆனால், தமிழர்களில் மிகச் சொற்ப எண்ணிக்கையிலான அற்பர்கள் கொழும்பு மற்றும் இந்தியா என வசதியான வசிப்பிடங்களை வைத்துக்கொண்டு, தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தியவாறு ஒட்டுமொத்தத் தமிழினத்தையே பலிகொடுத்து வருகிறார்கள். இவர்களது முகாமைத்துவம் இருக்கும்வரை தமிழினத்தால் சுழியத்திலிருந்து மீளமுடியாது. இன்றொரு காணொளி பார்த்தேன் இலங்கையில் தொடருந்து உல்லாசப் பயணம் பற்றிய விவரணமாக டீ.டபிள்யூ(DW) ஒளிபரப்பியது. அதில் கண்டியின் கடைசி மன்னன் சிங்களவனென்றும், தேயிலை உற்பத்தியைக் காட்டும்போது இந்தியாவில் இருந்து வந்த தொழிலாளர் என்றும் போகிறது. எப்படிக் கனகச்சிதமாக வரலாற்றுத் திரிபு நடக்கிறது. ஆனால் எமது வரலாற்றாய்வாளர்களோ, சட்டவாளர்களோ மற்றும் அறிவுலகத்தினரோ(ஒரு சிலரைத் தவிர) எதிர்வினையாற்ற முடியாத மௌனிகளாக இருப்பதும் ஒருவகையில் அழிவுக்கு உதவுதலேயாகும். கண்டியின் கடைசிமன்னன் சிறீ வேங்கடப்பெருமாள் சிறீ சுப்பம்மாவின் மகனான சிறீ விக்கிரம ராஜசிங்கன் எனத் தகவல்கள் இணைய உலகில் உள்ளபோதும் சிங்களம் எப்படித் தமக்கேற்றவாறு பரப்புரை செய்கிறது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி -
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
nochchi replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
உண்மைதான், ஆனால் சஜித் தெற்கு மக்களின் ஆதரவோடு வென்றிருந்தால்கூட சும் மற்றும் சிறிலங்கா தேசியவாதிகளால் உங்களது *** மும் உருவப்பட்டிருக்கும். நல்லவேளை சஜித்தின் தோல்வியால் தப்பிவிட்டீர்கள் என்று நினைக்கின்றேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி -
உண்மை, கார்ல் மார்க்ஸை பின்பற்றுவதாகப் படம்காட்டும் தென்னமெரிக்க மற்றும் ஆசிய நாடுகள்தான் ஐ.நா.மனித உரிமைச் சபையிலே தமிழின அழிப்பு எதிரான போர்க்குற்ற விசாரைணையை நிராகரித்துவருவதோடு, வெளிநாட்டு விசாரணைகள் தேவையில்லை என்று கூறிவரும் நாடுகளாகும். இதுதான் இவர்களது கார்ல் மார்க்ஸைப் பின்பற்றும் தன்மை. இதில் தீவிர இந்திய எதிர்ப்பாளராக, சீன ஆதரவாளராக, பௌத்த சாசனத்தை மீறாதவராக ஒரு புதிய இலங்கையைக் கட்டமைக்கப்(?) போகிறார் புதிய சனாதிபதி என எப்படி நாம் ஒரு வெள்ளாந்தித் தனமாக நம்புகின்றோம்?????????????? நட்பார்ந்த நன்றியுடன்
-
உண்மைதான், ஆனால் இந்தியக் கைக்கூலிகள் உட்படச் சிங்களத்துக்குச் செம்பு தூக்கும் இவர்களைக் களைவது இலகுவல்ல. இவர்களது படிப்பே எப்படி ஏழை மக்களை ஏமாற்றித் தம்மைத் தக்க வைப்பதென்பதே. இல்லையென்றால் சும் சிங்களக் காவல்துறைப் பாதுகாப்போடு வடமராட்சியில் சுற்றித்திரிந்தவிட்டுச் சஜித்துக்கும் வாக்குக் கேட்க முடிந்திருக்கிறதே. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி