Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nochchi

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by nochchi

  1. உண்மைதான், ஆனால் தமிழ் இளையோர் தமிழரது அரசியலைப் பார்த்து, யேர்மன் அரசியிலில் ஈடுபாடுகாட்கிறார்களில்லைப்போலும்.... உள்ளக மட்டத்திற்கூட இதுதமிழருக்குப் பாதகமான நிலையே. எதிர்வரும் காலங்களே தீர்மானிக்கும். எமது இளையோர் பல்வேறு முன்னணித் துறைகளில் (யாழ் மனோநிலையில்) முன்னேறி உள்ளனர். அரசியில் ஆரவமற்றநிலையே தொடர்கிறது. நன்றி, இலண்டனில் ரூற்றிங் அம்மன் கோவில் வைத்திருந்தார்கள். யேர்மனியில் ஸ்ருட்காட் பிள்ளையார் கோவிலிலும் பார்த்த ஞாபகம். ஸ்ருட்காட் கோவிலில் யாராவது பார்த்திருந்தால் பகிரலாம். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  2. யேர்மனியத் தமிழர்கள் முயற்சி செய்யாது அரசியலுள் நுளைய முடியாது. சில உள்ளூராட்சி அவைகளில் அங்கத்துவம் பெற்றதாகப் பார்த்த நினைவு. அரசியலில் இருந்தால்தான் கோரமுடியுமா? ஏன் இங்கே நகரத்து ஒரு கழகமெனக் கழங்களும், இரண்டு, மூன்று ஆலயங்களெனவும் உள்ளனவே. அவர்களும் முயற்சிக்கலாமே. இலங்கை வழக்குப்போடுவதிருக்கட்டும்.முதலில் முயற்சியுண்டா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  3. யேர்மனியிலும் கணிசமான தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்குள் கணிசமானவர்கள் வாக்களர்களாகவும் இருக்கிறார்கள்தானே. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  4. யேர்மனியிலும் இந்தநிலை வரக்கூடும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  5. எல்லாத் தாக்கங்களுக்கும் எதிர்த் தாக்கம்போல் கடும் சட்டங்களைக் கொண்டுவர உளவுத்துறைகள் இதுபோன்ற உத்திகளைக் கையாள்கின்றனவா என்று யோசிக்க வைக்கிறது. யேர்மனியின் சனநாயகச் சட்டங்கள் காவல்துறையின் கடும் நடவடிக்கைகளுக்குத் தடையாக உள்ளன. அதேவேளை வலதுசாரிகள் மேலெழுந்து வருவதானது தாராளவாத வலதுசாரித்துவத்துக்குச் சவாலாக மாறிவரும் நிகழ்நிலையானது, நிலையான ஆட்சிக்கும் யேர்மனியின் நிலைத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக மாறிவருகிறது. வலதுசாரிகள்பால் ஈர்க்கப்பட்ட 14 முதல் 17வயதுவரையான சிறுவர்கள் கைது செய்யப்பட்டுச் சட்ட நடவடிக்கைக்குட்படுத்தப்பட்டள்ளனர் என்று ஒரு செய்தியை அறிந்தேன். பெருகிவரும் என்போன்ற அகதிகளின் வருகை, முசுலிம் தீவிரவாதம் மற்றும் ரஸ்யாவுடன் முற்றிவரும் யுத்தநிலை மற்றும் தற்போதைய அமெரிக்க அரசுத் தலைமையின் நிலைப்பாடென ஆரோக்கிமற்றதாக மாறிவரும் இயல்புநிலையைக் கட்டுப்படுத்த முள்ளை முள்ளால் எடுக்கு உத்தியை யேர்மனி கையாள முனைகிறதா என்று இதனை இன்னுமொரு கோணத்திலும் நோக்கலாமா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  6. 18பேர் கத்திக்குத்திற்குள்ளாகியுள்ளதோடு, 4வரது நிலை ஆபத்தானதாக உள்ளதாகவும் தாக்குதலை நடத்தியவர் 39வயதுடைய யேர்மன் பெண்மணியென யேர்மன் செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலை நடத்தியவர் நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  7. அரசுக்கு அரசுகள் என்ற அடிப்படையில் ஒத்தோடி எம்மை அழித்த ஆயுதங்களில் யேர்மனது ஆயுதங்களும் பங்கேற்கத் தவறவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தில் வலிமைமிகு நாடாக உள்ள யேர்மனி, 2009இன் முதற்காலாண்டில் யேர்மனியிலே வாழும் தமிழர்களது சனநாயக வழியிலான எதிர்ப்பை அதற்கான காரணமறிந்தும் அதற்குத் தலைமை தாங்கியவரை இனங்கண்டு நடவடிக்கை எடுத்த நாடாகும். ஐரோப்பிய ஒன்றியம் தடைசெய்துள்ளதாகக் கூறித் தமிழரது தேசியக்கொடியைத் தடுத்துவைத்துள்ள அரசாகவும் உள்ளது. ஆனால், அதே ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள வேறு நாடுகள் தடுக்காதுள்ளமை நோக்குதற்குரியது. றைன்லாண்ட் பாள்ஸ் மாநில முதல்வர் குற்ட் பெக் (Kurt Beck 1994 – 2013) இலங்கை அரசோடு பொருண்மிய மட்டத்தில் நெருக்கமாக செயற்பட்டவர். மேற்கு யேர்மனி மற்றும் ஒன்றிணைந்த யேர்மனியென நீண்ட காலம் ஆட்சித்தலைவராக இருந்த கெல்மட் கோல்(Helmut Kohl 1982 – 1998) அவர்கள் இலங்கையின் சிறந்த நண்பராவார். இப்படியான பின்புலத்தின் தொடர்ச்சி ஒரு அரசாகப் பேணப்படுவதோடு, தொடர் அரசியல் இராசதந்திரப் பேச்சுகள் என்பன இயல்பானதே. ஆனால், அரசுத் தலைவரது ஊடகப்பிரிவு ஏதோ அநுராதான் முதல் முதல் இலங்கை சார்பில் யேர்மனிக்கு வருவதுபோல் தங்களது பரப்புரை வேலையை அவர்கள் செய்கிறார்கள். நாமொன்று செய்யமுடியும் எமது எதிர்ப்பைப் பதிவுசெய்யலாம். ஆனால், பேர்லினுக்குப் போகவேண்டுமே. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  8. வீரவணக்க நிகழ்வு 31.5.2025 யேர்மனி ஸ்ருட்காட் Posted on May 14, 2025 by சமர்வீரன் 112 0 https://www.kuriyeedu.com/?p=672395
  9. ஆனையிறவு உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு Posted on May 23, 2025 by தென்னவள் 7 0 ஆனையிறவு உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி வியாழக்கிழமை (22) 9 வது நாளாக போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில் 22ஆம் திகதி வியாழக்கிழமை மாலை யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சென்று முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர். மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில்,குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் நான்கு பேர் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு பல்வேறு பிரச்சனைகளை முன் வைத்து முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர். ஆனையிறவு உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி கடந்த புதன்கிழமை (14) முதல் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த உப்பளத்தின் தற்போது உள்ள பொது முகாமையாளர், முகாமைத்துவ பிரிவினர், உதவி முகாமையாளர், மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் தம்மை பழிவாங்குவது போன்றே செயற்படுகின்றனர். எமக்கு உரிய வகையில் வேலைகளை வழங்குவதில்லை. எமக்கான மருத்துவ வசதிகள் உப்பளத்தில் இல்லை. குடிநீர் பிரச்சனை காணப்படுகிறது. குடிநீர் வெளியே உள்ள தாங்கியில் இருந்து தான் உள்ளே எடுத்து செல்லவேண்டும். இந்த மாதம் தொடங்கி இதுவரை எமக்கு 4 நாட்களே வேலை வழங்கப்பட்டது. 10 நாட்கள் வேலை இல்லாமலே இருக்கின்றோம். இதை விட இந்த மாதம் வேலை செய்யாத ஊழியர்கள் கூட காணப்படுகின்றனர். மனித வலு இருக்கும் போது இயந்திர வலுவை பயன்படுத்துகின்றனர். வேலை செய்யும் எமக்கு சீருடைகள், பாதுகாப்பு கவசங்களோ வழங்கப்படுவதில்லை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் வகையில் வியாழக்கிழமை (22) மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் சார்பாக நான்கு பேரை யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைத்துச் சென்று முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட ஆனையிறவு உப்பள ஊழியர்கள் சார்பாக துரித விசாரணைகளை மேற்கொள்வதாக யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழு குறித்த ஊழியர்களிடம் தெரிவித்துள்ளது. https://www.kuriyeedu.com/?p=675128
  10. ஆனையிறவைக் கடந்துசெல்லும்போது உப்புக் குவியல் குவியலாகக் காட்சிதரும். உப்புவயல்களில் உப்புக்குமேலால் ஓலைகாளால் வேயப்பட்டுப் பாதுகாக்கப்பட மற்றொரு பகுதி வயல்களுக்கு உப்புற்பத்திக்கு நீர் மாற்றப்படும் செயற்பாடு நடக்கும். இப்படி ஒரு தொடர் உற்பத்தியும் அதனோடிணைந்த பொருண்மிய வாழ்வுமாக இருந்த பகுதிகளை இனவாத வன்மத்தோடு அழத்தொழித்து இன்று உப்புக்குக் கையேந்தும் நிலை.சிங்களத்துக்கு ஏது வெட்கம். அது தமிழரை அழிக்கு எங்கும் எதற்காகவும் கையேந்தும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  11. சிங்களத்தினது எந்தத் தலைமையும் துணியாத, தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை ஏற்கும் ம.வி.மு(JVP) என்ற தே.ம.ச(NPP) வருமானால் அதுவே இதுவரை உலகில் நடைபெற்ற அரசியல் மாற்றங்களுள் மிகப்பெரிய மாற்றமாக வரலாற்றில் பதிவாகும். ஆனால், சிங்களத் தலைமைகள் யாவும் சிங்களவரிடம் நற்பெயர் பெறத் தமிழரை ஒடுக்குவதில் பின்னிற்காதோர். எனவே இவரும் பத்தோடு பதினொன்றாக மனச்சாட்சி, துணிச்சல் மற்றும் நடைமுறை அறிவை பயன்படுத்தமாட்டாரென்பதை நகர்வுகள் பதிவுசெய்கின்றன. தமிழீழ தேசிய விடுதலை முன்னணி(NLFT) இந்த அமைப்பினது நிறுவனரும் இந்தக் காலஞ்சென்ற என். சண்முகதாசன் அவர்களா? உறவுகள் யாருக்காவது தெரிந்தால் தெளிவுபடுத்துங்கள். இந்த அமைப்பு 1984 காலப்பகுதியில் ஒரு 'அரசியல் திட்டம்' என்றொரு தொகுப்பை வெளியிட்டிருந்தது. அதனை அவர்கள் மக்களுக்கு விநியோத்திருந்தார்கள். சில நல்ல விடயங்களும் இருந்ததாக நினைவு. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  12. இதனை முதலில் யே.வி.பீ(JVP) வந்தால் தேனும் பாலும் ஓடித் தமிழினத்தின் கோரிக்கைகள் தங்கத்தட்டில் வைத்துச் சிவப்புக்கம்பள விரிப்பில் பவனியாக எடுத்துவந்து கையளிப்பர் என்ற தமிழருக்கும், யூரூப்பற்மாருக்குமே வெளிச்சம். ஆட்சிக்குவருவோரின் முகங்களும் கட்சிக்கொடியின் நிறங்களுமே வேறேதவிரக் கடைந்தெடுத்த பச்சை இனவாதத்தில் சற்றும் குறையாதோர் என்பது தெரிந்ததே. ஆனால், அவர்களுக்கு ஆலவட்டம் பிடித்தோருக்கு இவளவு விரைவாக நாமம் போடுவார்களென எதிர்பார்த்திருக்கார். கட்டுரையாளர் பல்வேறு தடவைகள் தமிழின அரசியல் குறித்து யேவிபீ(JVP)யின் நிலைப்பாட்டைச் சுட்டியிருந்தார். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  13. முள்ளிவாய்க்கால் நினைவு விடுதலையின் விளைநிலம்-பேராசிரியர் முனைவர் குழந்தைசாமி May 20, 2025 இறப்பு விட்டுச்சென்ற இதயவலியை எவரும் குணப்படுத்தமுடியாது. அன்பு விட்டுச் சென்ற நினைவை எவரும் திருட முடியாது. நமது விடுதலைப் போராளிகளும் மக்களும் விட்டுச் சென்ற வலியை எவராலும் போக்க முடியாது. அதனால் வலியை போக்கும் வடிகாலாக நினைவேந்தல் அமைந்துள்ளது. அந்த நினைவேந்தல் அன்பின் வெளிப்பாடாக உள்ளது. இந்த அன்பு நிறைந்த நினைவேந்தல் இறப்பை வாழ்வின் முடிவாக கருதாமல் புதிய வாழ்வின் வழியாக மாற்றுகிறது. அப்போதுதான் வலி குறைக்கப்படும். இந்த வலியை வலி மையாக்குவது இந்த நினைவேந்தலாகும். இந்த வலிமையாக்கும் செயலை எவரும் தடுக்க முடியாது, தவிர்க்க முடியாது, தள்ளிப்போட முடியாது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முடிவல்ல. விடுதலையின் தொடக்கமாகும். இந்த விடுதலை வேள்வியை எவராலும் முடக்க முடி யாது. அது அனைத்து அன்பு உள்ளங்களிலும் அணையாது எரியும். அதனால் சீனாவில் சன்யாட் சன் இறந்து அடக்கம் செய்யப்பட்ட கல்லறையில் நினைவேந்தல் நடத்தும்போது விடுதலைக் கனல் பற்றவைக்கப்பட்டது. அதுபோல வால்டர், ரூசோ போன்றோரின் கல்லறைகள் திறக்கப்பட்டு, பிரான்சு நாட்டில் புரட்சியாளர்கள் விடுதலை வேட்கையைப் பெற்றனர். எல் சல்வதோரில் பேராயர் ஆஸ்கர் ரோமேரோவின் கல்லறையில் நினைவேந்தல் நடத்தும்போது இராணுவ ஆட்சியின் கொடுமையிலிருந்து விடுதலைபெற வேண்டிய ஆற்றலை மக்கள் பெற்றனர். பிலிப்பைன்சு நாட்டின் விடுதலை வீரர் ரிசாலின் கல்லறையில் நினைவேந்தல் நடத்தும்போது இசுபானிய ஆட்சியை தூக்கி எறியும் துணிவைப் பெற்றனர். இவர்கள் வலியை வலிமையாக்கி வழிகாட்டினர். நினைவேந்தல் ஒரு வரலாற்று ஆசிரியன். கடந்த காலத்தை துல்லியமாக சொல்லிக் கொடுத்து, இன்றைய இளைய தலைமுறையினரை தூண்டி எழுப்பும் அறிவுள்ள ஆசானாக செயல்படுகிறது. பண்படுத்தும் பயிற்சிப் பாசறையாக இந்த வரலாற்று ஆசிரியன் வடிவமைக்கிறான். உணர்வு கள், உணர்ச்சிகள், வேதனைகள், கவலைகள், கையறுநிலை, எதிர்நோக்கு, சவால்கள், மறக்கமுடியாத நிகழ்வுகள், கண்ணீர் போன்றவை நிறைந்த பயிற்சி பாசறையாக அமைகிறது. நினைவேந்தலில் உணர்வுகள் வெளிவருகின்றன. சிந்தனைகள் தெளிவுபடுத்தப்படுகின்றன. வழிப்பிறக்கிறது. உணர்வுகளையும் சிந்தனைகளையும் வெளிக் கொணர்ந்து, நல்வழிகாட்டுவது சிறந்த ஆசிரியரின் கடமையாகும். வெற்றிக்கும், விடுதலைக்கும், ஆக்கபூர்வமான செயல்களுக்கும் ஆற்றல்படுத்து வதுதான் நல்லாசிரியனின் நற்செயலாகும். அதை தான் நினைவேந்தல் செய்கிறது. நினைவேந்தல் நடைபெறும் இடம் மிகச்சிறந்த வகுப்பறையாகும். வாழ்வுக்கும், வழிக்கும், விடுதலைக்கும், எழுச்சிக் கும் வழிகாட்டும் வகுப்பறையாக உள்ளது. கொலைகாரர்கள் சட்டங்களை உருவாக்கும் நாட்டில் நீதியை காணமுடியாது என்று பாப் மார்லே கூறுவதை இந்த நினைவேந்தல் நமக்கு உணர்த்தும் பாடமாகும். அதை மறக்காமல் செயல்பட தூண்டும் பள்ளியறையாகும். நினைவேந்தல் ஒருங்கிணைக்கும் ஆற்றல் படைத்தது. பல்வேறு இடங்களிலிருந்தும் சம யங்களிலிருந்தும், சாதிகளிலிருந்தும் மக்கள் ஒன்றுகூடுவர். உலகில் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்கள் இந்த நினைவேந்தலை கொண் டாடுகின்றனர். அனைத்து தமிழர்களையும் ஒருங்கிணைக்கும் புள்ளியாக இந்த நினைவேந்தல் உள்ளது. தமிழர்களுக்கு நடந்தது ஓர் இனப்படுகொலையாகும் என்று நினைவுபடுத்து கிற செயலாகும். இனப்படுகொலைக்கு நயன்மை கிடைக்க நினைவேந்தல் பயன்படுகிறது. நயன்மை கிடைக்க பாதிக்கப்பட்ட தமிழர்களை ஒருங்கி ணைக்கும் ஆயுதமாக நினைவேந்தல் உள்ளது. முள்ளிவாயக்காலில் நடந்த இனப்படுகொலை மனித வாழ்வுரிமை மீறலாகும் அல்லது பறித் தலாகும் என்பதை உலகிற்கு எடுத்துரைக்க மக்களை ஒருங்கிணைக்கிறது. இப்படிபட்ட இனப்படுகொலை எவ்வினத்திற்கும் நடக்கக் கூடாதென எச்சரிக்கை விடுக்க மக்களை ஒருங்கி ணக்கிறது. கூடி நின்று குரல் எழுப்பினால் உலகம் ஏறெடுத்து பார்க்க நினைவேந்தல் மக்களை ஒருங்கிணைக்கிறது. விடுதலை, நயன்மை, சகோதரத்துவம் போன்றவை கூட்டுமுயற்சியால் கிடைப்பவை என்பதை தெளிவாக்க இந்த நினைவேந்தல் மக்களை ஒருங்கிணைக்கின்றது. இறுதியாக நினைவேந்தல் வலியை வலிமை யாக்கும் ஆற்றலாக உள்ளது. கடந்தகால வரலாற்றை தெளிவாக உணர்வுடன் எடுத்துக் கூறும் ஆசானாக நினைவேந்தல் இருக்கிறது. நினைவேந்தல் பலதரப்பட்ட மக்களை ஒற்றைப் புள்ளியில் இணைக்கும் ஆற்றல் கொண்டது. இனப்படுகொலை அல்லது நயன்மை அல்லது வாழ்வுரிமை பறிப்பு போன்ற ஒரு தளத்தில் ஒருங்கிணைக்கும் ஆற்றல் உள்ளது. முள்ளிவாய்க் கால் நினைவு மூவுலகிற்கு முன்வைக்கும் முடிவுறா கோரிக்கையாகும். விடுதலையில் விளைநிலமாக முள்ளிவாய்க்கால் விளங்குகிறது. உங்கள் கனவை நனவாக்குவது எங்கள் காணிக்கை !https://www.ilakku.org/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5-42/
  14. பெரும் தமிழினப்படுகொலையைத் தடைசெய்யப்பட்ட நச்சாயுதங்களைப் பயன்படுத்திச் செய்து முடிசூடா மன்னர்களாகத் தாமே தொடர்ந்து சகோதர மற்றும் வாரிசரசியல் செய்யலாம் என்ற பெரும் கனவில் மண் விழுந்ததால், சிதைந்து போன கனவுகளையும் கட்சியையும் தூக்கி நிறுத்தக் கையாளும் உத்தியே இந்தப் இனஅழிப்பில் செத்த சிங்களப் படைகளுக்கு அஞ்சலி செலுத்தித் தானே யுத்த வெற்றியின் உரித்தாளரென சிங்களவருக்கு நினைவூட்டுகிறார். 2009 இல் மனிதாபிமான யுத்தம் 2025இல் சமாதானத்தக்கான யுத்தம். சிங்களம் ஒருபோதும் பொறுப்புக்கூறும் சிந்தனைக்குப் போகாது. எனவே உலகு தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை ஏற்று தம்வழியில் வாழவிட முன்வரவேண்டும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  15. க.தில்லைவிநாயகம் அவர்களே, நினைவுகளைப் பகிர்தல் ஒருவகை. அதனைக்காணாது உணர்தல் என்பது அந்த மண்மீது, அந்த மண்ணின் உரித்தாளர்கள் கொள்ளும் பாசஉணர்வும், அந்த மண்மணத்தின் நுகர்வின் நினைவுகளின் கலப்பால் விளைவதும் ஒரு பிரித்தறிய முடியாத உணர்வு. உங்கள் ஆக்கம் மீண்டுமொருதடவை 2009 மே18க்கு முந்திய இறுதிநாட்களை எம்முள்ளே அழுத்திச் செல்கிறது. இதுபோன்ற படைப்புகள் அல்ல உண்மைகள் தொடர்ந்து எழுதப்பட வேண்டும்.உறவே தொடரட்டும் உங்கள் பணி. நன்றியும் பாராட்டும் உரித்தாகுக. இந்த ஆக்கத்தை உள்சென்று உணரும்போது உள்ளம் கலங்கிக் கவிழ்கிறது.
  16. கலைத்தமிழோடு களமாடும் வளரிளம் கலைஞர்களின் கலைத்திறனாற்றுகை – கற்றிங்கன். Posted on February 5, 2025 by சமர்வீரன் 361 0 தமிழரது கலை வடிவங்களைத் தமிழினத்தின் இளைய தலைமுறை கற்றும் கண்டும் உணரவும், அதனுடாகப் படைப்பாக்கத் திறனைப் பெறவும், தமிழர் கலைகள் அழிந்துவிடாது காக்கவும் கலை அரங்காற்றுகை, செயலாக்கம் பெறுதல் வேண்டும். புலம்பெயர் நாடுகளில் மூன்றாந் தலைமுறைத் தமிழர்களும் தமிழர் கலைகளை அறிந்துகொள்ளவும், பயிலவும் களம் அமைத்துக் கொடுக்கும் நோக்கோடு, தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவு கலைத்திறன் போட்டியை நடாத்தி வருகிறது. இக்கலைத்திறன் போட்டியில் மயிலாட்டம், புலியாட்டம், காவடியாட்டம், காவடி, கரகம், பொய்க்காற்குதிரை, வில்லுப்பாட்டு போன்ற கிராமியக் கலைவடிவங்களுடன் பரதநாட்டியம் மற்றும் விடுதலை நடனம், விடுதலைப் பாடல், வாய்ப்பாட்டு ஆகிய ஒன்பது கலைகள் போட்டிகளாக நடைபெறுகின்றன. முதலாவது போட்டியரங்கம் வடமத்திய மாநிலத்தின் கற்றிங்கன் நகரிலே பொதுச்சுடர் ஏற்றலோடு தொடங்கியது. போட்டியரங்கிலேயே வெற்றியாளர்களுக்கான மதிப்பளிப்புகளும் நடைபெற்றன. வடமத்திய மாநிலத் தமிழாலயங்களிடையேயான போட்டியில் முதலாம் இடத்தை வாறன்டோர்வ் தமிழாலயமும் இரண்டாம் இடத்தை டோட்முன்ட் தமிழாலயமும் மூன்றாம் இடத்தை எசன் தமிழாலயமும் பெற்றுக்கொண்டன. முதல் மூன்று நிலைகளைத் தமதாக்கிய தமிழாலயங்களுக்கான சிறப்பு மதிப்பளிப்பு, தமிழ்க் கல்விக் கழகத்தின் 35ஆவது அகவை நிறைவு விழாவில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 2025ஆம் ஆண்டிற்கான முதலாவது போட்டியரங்கம் வடமத்திய மாநிலத்திலே 01.02.2025ஆம் நாளன்று 08:30 மணிக்குப் பொதுச்சுடரேற்றலோடு தொடங்கிய போட்டிகள், 19:30 மணிக்குத் தமிழினத்தின் நம்பிக்கையைப் பறைசாற்றிச் சிறப்பாக நிறைவுற்றது. தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகப் பொறிமுறைக்கேற்ப ஐந்து மாநிலங்களிலும் போட்டிகளை நடாத்துவதற்கான ஏற்பாட்டொழுங்கில் முதலாவது போட்டியரங்கம் வடமத்திய மாநிலத்திலே நிறைவுற்றுள்ளது. தொடர்ந்து 08.02.2025ஆம் நாளன்று மத்திய மாநிலத் தமிழாலயங்களுக்கான போட்டி கிறீபெல்ட் நகரில் நடைபெறவுள்ளது. https://www.kuriyeedu.com/?p=653424
  17. இலங்கை தமிழன் நெல் உற்பத்தியில் சாதனை 🔥| Climate action challenge | Safe food | Srilanka🇱🇰 நெற்பயிர்செய்கை தொடர்பான காணொளி. தேய்வடைந்துசெல்லும் துறையாக கமம் செய்தல் மாறிவரும் சூழலில் இளைய தலைமுறை இப்படிவருவதை அறிவோம். வரவேற்போம். நன்றி- யூரூப் நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  18. வெளிநாடுகளில் பெற்ற ஆயுத தளபாடங்களும், புலிகளிடம் கைப்பற்றி ஆயுத தளபாடங்களும், தமிழரிடம் ஆக்கிரமிக்கப்பட்ட நிலமும், மகாவம்சமும் புத்தர்சிலைகளும் உள்ளன. இவற்றைப் பாதுகாக்கப் போதுமான படையினரும் உள்ளனர். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  19. இந்தக் கட்டாயநிலைநோக்கித் தள்ளியது ஒன்றும் ஆசிய, ஆபிரிக்க நாடுகள் அல்ல. உலகைச் சுரண்டிக்கொழுத்த மேற்குலகும் அவற்றின் பல்தேசியக்கூட்டுகளுமே என்பது எனது பார்வை. இதுவரை யுத்தங்களை அவர்கள் நடாத்தினார்கள். இன்று அவர்களது சந்திக்கு அருகாமையில் யுத்தம் வந்து நிற்கிறது. நாம் மேற்கில் இருப்பதால் அதன் நேரடித்தாக்கங்களை காண்கின்றோம். சுரண்டலாதிக்க சிந்தனை உள்ளவரை போர்களும் ஓயாது. போர்களைத் தடுக்கும் அல்லது தவிர்க்கும் நோக்குநிலை மங்கிவிட்டதன் அண்மைய எடுத்தகாட்டாக காஸாவும் உக்ரேனும் உள்ளன. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  20. இவர்களை சீனா ஓரளவு நம்பும். சீனா பெயரில்தான் பொதுவுடமை. ஆனால் உள்ளுக்கு அப்படியில்லை. இந்த யே.வி.பி (JVP) என்ற என்.பி.பி (NPP) யும் உண்மையான மாக்ஸிஸவாதிகள் அல்லர்.பெயரில்தான் மாக்ஸிஸ்டுகள்.இந்தியா இவர்களை நம்பாது, ஆனால் நம்புறமாதிரி நடித்து அதற்குபின்வரும் அரசிடம் அறுவடை செய்யலாமென்ற நோக்கில் உதவும். சிலநேரம் வடை போச்சே நிலையும் ஆகலாம். ஆனாலும் இந்திய ராசதந்திரக் கூசாக்கள் தாங்கள் தமிழரை நசுக்கிவிட்டோம் என்று தமக்குள் பெருமைப்பட்டுக்கொள்வர். தமிழரது வேட்டியை உருவுவதாக நினைத்துத் தமது கோவணத்தையும் சிங்களத்திடம் இழப்பர். தமிழரால் இந்திய இறையாண்மைக்கு ஆபத்து என்று தமிழர் மீது தடைகளைப் போட்டு சிங்களத்தைக் குஷிப்படுத்துவர். என்னதான் செய்தாலும் சிங்கள ராசதந்திரத்திடம் இந்தியா தோற்பது நடக்கும். அது ஜெயவர்தன காலம் முதல் தொடர்கதையே. உலகம் இப்போ மத்தியகிழக்கு, உக்ரேன் என நேரமற்றநிலை. இவற்றைக்கடந்து இலங்கையரசு மக்களின் தேவைகளை நிறைவுசெய்ய நிறைய உழைக்க வேண்டும். அதற்கு இன்னும் 30ஆண்டுகளாவது எடுக்கும். அதற்கு முன்பாக இனப்பிரச்சினையும் தீர வேண்டும். தமிழரை அழிக்கக் கடன்பட்டு, கடன்பட்டு வந்த பொருளாதார வீழ்ச்சியை ஒரு இரு ஆண்டுகளில் சீராக்க அனுரவும் அவரது சகபாடிகளும் என்ன மந்திரவாதிகளா? தேங்காய்க்கு குறைந்தது 6ஆண்டு.. உப்புக்கு... என ஒரு காலம் தேவைதானே. அப்போது அடுத்த தேர்தல் வந்துவிடும் மீண்டும் ஊழலை ஒழித்தல்... புதிய நாட்டை அமைத்தல் என்ற கோசங்கள் கேட்கத் தொடங்கும். மறதிநோய்கண்ட மக்கள் மீண்டுமொரு வாக்குபதிவுக்குப் போவார்கள். இலங்கையில் ஆட்சிகள் மாறலாம், காட்சிகள் மாறாது. இனவாதமெனும் ஆயுதமும் மகாவம்ச மதவாதமெனும் பௌத்தமமதையும் கோலோச்சும்வரை இந்தநிலையே நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  21. யுத்தங்கள் தொடர்வதை மாந்தநேயர்கள் விரும்பவதில்லை. யாழில்கூட ரஸ்ய-உக்ரேன் போர் நடந்ததை அனைவரும் அறிவர்.புதிய றம்பும் பொருண்மியத்தடை குறித்தே பேசியுள்ளார். நேரடியாகத் தனது தரப்பிலிருந்து ஒரு சமாதானத்தூதுவரை அனுப்புவதாகக் கூறவில்லை. உலக ஆயுத விற்பனையில் 41.7 வீதத்தைக் (2019 - 2023 கணிப்பின்படி) கொண்டுள்ள அமெரிக்கா உலகில் யுத்தத்தை ஏதாவதொரு பிராந்தியத்தில் மாறிமாறித் தோற்றுவித்தே வருகிறது. வல்லரசுகளுக்கிடையேயான யுத்தத்தை வல்லரசுகள் நேரடியாகச் செய்யாது தத்தமது நாடுகளைப் பாதுகாத்தவாறு ஏதாவதொரு பிராந்தியத்தில் தொடர்கின்றன. உலக வல்லரசுகள் முதலில் இனங்களின் தனித்துவத்தையும் பண்பாட்டையும் மதித்து சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கடைப்பிடிக்கும் உலகொன்றை கட்டியமைத்தால் யுத்தங்கள் நிகழா. ஆனால், அவர்கள் அதனைச் செய்ய முன்வரார். உலகு அமைதியானால் பாதுகாப்பு உறுதியானால் தமது ஆயுத விற்பனையைத் தொடரத்தான் முடியுமா? ரஸ்ய-உக்ரேனியப் போரின் சுமையை உலகில் பணக்காரர்களைப் பாதித்ததா? இல்லையே. சாதாரண மக்களை அவர்களது சேமிப்புகளில் கைவைக்குமளவுக்குக் கூட, சிலர் வீட்டுக்கடனைக் கட்டமுடியாது விற்கும் நிலைவரை என்று... நிறைய எழுதலாம். ஆனால் நீங்கள் சுட்டியிருப்பது நிலைபெற்றால் மிக்க மகிழ்ச்சியே. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  22. மிகவும் சரியாகச் சுட்டியுள்ளமைக்கு நன்றி. இதுகூட ஒருவகைக் கருத்தியல் மடைமாற்றமாகவே நோக்க வேண்டியுள்ளது. நீங்கள் சுட்டியுள்ள விடயங்களை விட கடந்த காலத்தில் சீமான் மற்றும் ரஸ்யா - உக்ரேன் விடயஙகள் யாழ்க்களத்திலே முதன்மை விடயங்களாகி தமிழீழத்தவரது விடயங்கள் விவாதங்களில் இருந்து மறைந்துவிட்டநிலை தெரிகிறது. நாமே நகர முடியாது நிற்கையில் தமிழக அரசியல் எம்மை நோக்கி வரரதென்பதைப் பட்டுறிவாகக்கொண்ட தமிழீழத்தவர்கள் தமது பொன்னான நேரத்தை செலவழித்துப் பயனேதும் வருமா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  23. மேலும் பல செயலதிசயங்களும் வரவிருப்பதாக புதிய அரசினது விசிறிகள் காத்திருக்கிறார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.