-
Posts
5737 -
Joined
-
Last visited
-
Days Won
7
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by nochchi
-
அழைப்புக்கு நன்றி, நான் வருவேன். எந்த இடத்தில் என்பதை இரகசியமாகச் வைத்திருக்கவும். பிறகு சும் விசுவாசிகள் கும்மியடித்துவிடுவார்கள். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி இதைவிட ஒரு மனிதன் வன்மத்தோடு சிந்திக்கமுடியாது. உடல்நலம் குன்றிருக்கும் வேளையில் ஒரு மனிதனாகவேணும் சிந்திக்க வேண்டாமா? அரசியல் என்பது ஒவ்வொருவர் பார்வை பட்டறிவின்பாற்பட்டு பொதுநலம் சார்ந்தது. ஒருவர் சரியோ தவறோ தமிரது அரசியலில் இருந்தார் தற்போது ஒதுங்கி இருக்கிறார். முந்தநாள் வந்தசிலர் தமிழினத்தைக் காட்டிக்கொடுத்ததைவிட திரு.மாவையவர்கள் ஒன்றும் செய்யவில்லைத்தானே. நன்றி.நன்றி.நன்றி
-
மக்கள் விடுதலை முன்னணியின்(JVP ) புதிய பெயர் கொண்டு கட்சியான தேசிய மக்கள் சக்தி(NPP) பல முகவர்கள் சுயேச்சைகளாகக் களமிறக்கப்பட்டுள்ளதாகவே இவற்றை ஆழமாக உற்றுநோக்கும் சிலரது கருத்தும் உள்ளது. எனவே தமிழ் மக்கள் இதுவரை இல்லாத பெரும் கவனத்தோடு வாக்களிக்க வேண்டிய தேர்தலாகும். தமிழின அழிப்புக்கான போரும், அதன் தொடர்ச்சியாக ஊதிப்பெருத்து நிற்கும் படைபல, ஆளணிப் பெருக்கத்தாலும் நாடு பெரும் பொருண்மிய வீழ்ச்சியைக் கண்டதை ஊழலால் நாடு பின்னோக்கிப்போனதாகக் காட்டிப் பெரும் எடுப்பிலே பரப்புரைசெய்து ஜ.வி.பெ(JVP) என்ற தே.ம.ச.(NPP) ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதோடு தமிழருக்குப் பொருண்மியப் பிரச்சினை மட்டுமே உள்ளது என்று கூறியவாறு தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை மறுதலித்தவாறு ஆளமுனையும் போலி மாக்ஸிட்களையும் தமிழ் மக்கள் இனங்கண்டு செயற்பட வேண்டும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
நியாயமான வினாக்களைத் தொடுத்துள்ளபோதும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மீதான திண்மமானதும் வன்மானதுமான வினாக்களை அவர்களை நோக்கிக் கேட்பதற்கு, அவர்களுக்கு வட-கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கொடுத்ததுபோல் ஒரு அடர்த்தியான வாய்ப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறதா என்பதையும் நிலாந்தனவர்கள் ஆய்வுசெய்து எழுத வேண்டும். அவர்கள் சொல்லுகின்ற ஒருநாடு இருதேசங்கள் போன்ற நிலைப்பாட்டைக் கடந்து15ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார்கள். அவர்களை ஊடகங்களில் கூடக் காட்டுவதில் ஊடகங்கள் பின்னிற்பதையும் காணமுடிகிறது. எல்லாம் இந்திய வல்லாதிக்கத்தின் கைத்தடிகளாகிவிட்ட சூழலில் இன்று தனியே தமது சக்திக்கேற்பக் தமிழர்களுக்காகக் களத்திலே நிற்கிறார்கள். பொதுக்கட்டமைப்பினை நோக்கித் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வைத்த விமர்சனங்கள், அதனது மூளையாகச் செயற்பட்டு செயற்பாட்டுவடிவத்துள் தள்ளியவர்களில் ஒருவரான இந்தக் கட்டுரை ஆசிரியருக்குக் கடுப்பை ஏற்றியதன் விளைவா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
பார் சிறியென்று, சிறீதரனைக் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கின்றேன். சிறீதரனுக்கென யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதிக்குள் உள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் கணிசமான வாக்குக்களை நிரந்தரமாகக் கொண்ட ஒருவராக இருக்கிறார். அதற்காகவே அவரைச் சும் முதன்மை வேட்பளராக நிறுத்தியுள்ளது. இல்லையேல் இவரையும் சும் தூக்கிவீசியிருக்கும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
வடக்கு - கிழக்கில் 15ஆசனங்கள் உறுதி- சுமந்திரன் தெரிவிப்பு!
nochchi replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
தமிழ்த் தேசியத்தை பழித்தும் இழித்தும் உரைப்பவன் 1. சிங்களவானக இருக்கவேண்டும். 2. சிங்களத்தின் கைக்கூலியாக இருக்க வேண்டும். 3. தமிழனல்லாதவானாக இருக்க வேண்டும் இப்படியானவர்கள் குறித்து நீங்கள் நேரத்தை விரயமாக்குவதால் ஒரு பயனும் இல்லை. அவர்கள் தமது விசுவாசத்தைத் தமது எஜமானர்களுக்குக் காட்டவிட்டு நீங்கள் பயணிப்பதே பொருத்தமானது. -
ரணில் மற்றும் மஹிந்தவின் வாகனங்களை கோரும் அரசாங்கம்
nochchi replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
உண்மையில் சனாதிபதியின் பயிற்சிப்பட்டறை அப்படி. எப்படி எதிரிகளைச் சாய்த்து ஓரங்கட்டுவது என்பதற்கான வியூகங்கள் வியக்க வைக்கிறது. எல்லாம் 14ஆம் திகதிவரை மட்டுமே. அதன்பின்னர் அரசியலில் இதெல்லாம் சாதாரணமென்று போட்டுவிடுவார். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி -
வடக்கு - கிழக்கில் 15ஆசனங்கள் உறுதி- சுமந்திரன் தெரிவிப்பு!
nochchi replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
நீங்கள் கேட்ட காணொளி இந்தத் திரியிலே உள்ளதா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி -
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து, வடமாகாணசபை முதல்வராக இருந்த ஐயா விக்கினேஸ்வரனும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து யாழ்ப்பாண மாநகரசபை முதல்வராக இருந்த தம்பி மணிவண்ணனும் இணைந்து தேர்தலில் போட்டியிடச் சேரமுடிகிறதென்றால், உண்மையில் கட்சிகள் ஒன்றிணைய முடியாதிருப்பதொன்றும் கொள்கையடிப்படையில் இல்லையா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
வடக்கு - கிழக்கில் 15ஆசனங்கள் உறுதி- சுமந்திரன் தெரிவிப்பு!
nochchi replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
மனிதத்தை நேசிக்கும் எவரும் அதையே செய்ய முனைவர். ஆனால், எம்மவர்கள் சிலருக்கு அதுகூட உறுத்தலாகவல்லவா இருக்கிறது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி -
வடக்கு - கிழக்கில் 15ஆசனங்கள் உறுதி- சுமந்திரன் தெரிவிப்பு!
nochchi replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
காங்கேசன்துறை இடைத்தேர்தலை மனதில் வைத்துச்சொல்கிறார்போல் உள்ளது. யாரறிவார் எல்லாம் 14.11க்குப் பிறகே வெளிச்சம். ஆனால், யாருக்கு வெளிச்சம் என்பதே இங்கு அவதானத்திற்குரியதாகும். தமிழினம் எந்தச் சூழலிலும் மிகச்சிறிய தொகையினர் ஒரு தடுமாற்றநிலைகொண்டு எடுக்கும் முடிவுகளைத் தவிர உரிமைகளின் முன் சலுகைகளை நோக்கிய ஓடியதாக இல்லை. மக்கள் இந்தத் தேர்தலில் எத்தனை பேரை வீட்டினுள்(தஅக கட்சியின் சின்னத்தையல்ல) இருத்தப்போகிறார்கள் என்று பார்ப்போம். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி -
வலி. வடக்கு காணிகள் தொடர்பில் ஜனாதிபதி கவனம் - இராமலிங்கம் சந்திரசேகர்
nochchi replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
நானறிந்தவரையில் ஆட்களைக் கூப்பிட்டு பரப்புரைக்காகக் கதையை எடுத்துவிட்ட என்.பி.பிக்காரரிடம் மக்கள் உங்கடை தலைவர் ஒன்றும் புதியவரல்ல. அவர் 20ஆண்டுகளாக நாடாளுமன்ற அரசியலில் இருக்கிறார். அவரிடம் சொல்லி முதலில் எமது காணிகளை விடுவித்துவிட்டு பிறகு வாருங்கள் என்று சொல்லி அனுப்பினார்கள் அந்தக் காணிகளுக்குரிய மக்கள். நட்பார்ந்த நன்றியுடன். நன்றி -
தமிழினம் அரசியலை முழுமையாக அறியாவிடினும், அங்கிடுதத்தி அரசியலை அறிந்துகொள்ள வைக்கும் தேர்தலாக இந்தத் தேர்தல் இருக்கப்போகிறது. இதன் பின்னர்தான் தமக்கான அரசியல் எது என்பதை அடையாளம் காணவும்கூடும். முந்தி நான் படித்தகாலத்தில் இலங்கையிலை பெஞ்சன் எடுக்கிறவையே ஒரு பெருமையோடைதான் வருவினம். இதிலை மேற்கலக பெஞ்சனியர்மாரென்றால் சொல்லவும் வேண்டுமா? இனிப் படித்த பெருமக்களாகிவிட்டால்,அவைக்கு சிங்களம் நல்லதாவே தெரியும். ஏனென்றால் என்ன சுழி சுழித்து ஓடியிருப்பார்கள். எனவே எல்லாம் தெளிவுபெற ஒரு கால அவகாசம் தேவையல்லவா? அப்போது சிலவேளை ஒவ்வொரு வீட்டுவாசலில் புத்தர்சிலை வைக்கப்பட்டடிருக்கும். நட்பார்ந்த நன்றியுடன். நன்றி
-
தந்தை செல்வா அவர்களின் ஆத்மா இந்தப் புகைப்படத்தையும், இப்ப உள்ள டமிழரசுக் கட்சியையும் பார்க்க நேர்ந்தால், அவரது ஆத்மாவும் தற்கொலை செய்துகொள்ளும். பெற்றோரது பெயரைக் கெடுக்கவென்றே.. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி யாழிலே ''டமிழ்,டமிழ்'' என்று வாசித்து அப்படியே கை தட்டிவிட்டுட்டுது. அது 'டமிழரசு, இல்லை தமிழரசு என்று வாசியுங்கள் உறவுகளே. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
1. நல்ல வருமானம்(சம்பளம்) 2. தரமான, மலிவான உணவு 3. வாகன வசதி 4. எரிபொருளுக்கான இலவசக் கூப்பன் 5. பிரமுகராக வலம் வரும் வியாதி 6. பெறுமதியான கடவுச்சீட்டு 7. நாடாளுமன்ற வரப்பிரசாதங்கள் 8. விழாக்கள் பரிசுகள் இத்தியாதிகள் 9. உறவுகளுக்கு உதவுதல் இப்டிப் பலதை இழக்க மனம் வருமா? மேற்கு மாதிரித் தேர்தலிலை நின்று நாடாளுமன்றம் போனா தொகுதி வேலையைக் கட்டாயம் பார்க்க வேண்டியதில்லை. இப்படி சும்மா இருக்க வாற வரப்பிரசாதங்களைத் தரும் தொழிலாக உள்ளதை விடமுடியாதுதானே. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
நல்ல விடயம். இதனை அரசியல் ரீதியாகத் தீர்க்கவேண்டும். ஆனால், இதனை அரசியலாக்காது, இது மீனவர்களது வாழ்வாதாரத்திற்கானதென்ற அடிப்படையில் தீர்வுகள் தேடப்பட்டுப் பொருத்தமான பொறிமுறையொன்று உருவாக்கப்படுவதோடு, ஒருவரை ஒருவர் தாக்கும் செயற்பாடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படல் வேணடும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
தமிழ்சிறியவர்களே நன்றி. நிச்சயமாக வாசித்தறிகின்றேன். அரசியல் தளத்தில் மட்டுமல்ல ஊடகத் தளத்திலும் தமிழ்தேசியம் மீதான தெளிவான நோக்குநிலை மற்றும் செய்திகளைத் துணிவோடு வெளிக்கொண்டுவந்தோர் எனத் திட்டமிட்ட அழிப்புகள் சிங்களப் புலனாய்வால் செய்யப்பட்டவையே. ஆனால், அவற்றைத் தற்போதைய சிங்கள அரசு தோண்டி எடுத்து விசாரணை செய்து நீதிவழங்குமாயின் வரவேற்கத்தக்கது. ஆனால், இந்த விசாரணைகள் ஊடாக மேற்குலக்கும், நாம் முன்னைய அரசுகள் போன்ற கடும்போக்காளரல்ல என்ற செய்தியைச் சொல்வதற்கான களம் திறக்கப்பட்டு உள்ளக விசாரணையை நோக்கித் தமிழரது அழிப்புக்கான நீதிகோரலையும் திருப்பி உள்நோக்கி இழுத்துவரும் நுண்நகர்வாகவும் கொள்ளலாம். எனவே சிங்கள அரசியற் சடுகுடு ஆட்டத்தையும், அதனது இனவாத முகத்தையும் எமது முன்னோரும், நாமும் கண்டுவருகின்றோம். தமிழினத்திற்கான அரசியல் உரிமையும் அமைதியான வாழ்வும் ஏக்கங்களாகவும், ஏமாற்றங்களாகவும் கடந்த 110 ஆண்டுகளாக கடந்து சென்றுகொண்டிருக்கிறது. இலங்கை விடுதலைக்கான முயற்சிக்காலத்தில் கண்டியச் சிங்களவர் சமஷ;டியைக் கேட்டபோது, ஒரேநாடாகச் சிந்தித்தவர்கள்(சேர்.பொன். அருணாசலம்) தமிழ்த் தலைவர்கள். ஆனால், எம்மை தமிழீழம் நோக்கித் தள்ளியது சிங்களம். உலகம் வேகமாக மாறிவருகிறது. அந்த வெளியக மாற்றத்தை உள்வாங்கிக் குறைந்தபட்சம் ஒரு உள்ளக சுயநிர்ணய உரிமை குறித்துச் சிங்களம் சிந்திக்குமாயின் அப்போதுதான் இலங்கைத்தீவிற்கான உண்மையான வாழ்வாக அமையும். அதனை சோல்பரியின் காலம்தவறிய வருத்தமும் சுட்டுகிறது. கீழுள்ள தகவலைத் தமிழீழக் கல்விக் கழகத்தால் வெளியிடப்பட்ட "வரலாறு சொல்லும் பாடம்,, என்ற நூலில் இருந்து இணைத்துள்ளேன். சோல்பரியின் காலந்தவறிய வருத்தம் பீ.எச்.பாமர் எழுதிய "சிலோன் ஏ டிவைடட் நேசன்,, என்ற நூலுக்கு முகவுரை எழுதியபோது அதில், சோல்பரி இப்படிக் குறிப்பிடுகிறார். இந்தியா,பாகிஸ்தான்,மலாயா,நைஜீரியா போன்ற நாடுகளுக்கான அரசியற்றிட்டங்களில் செய்ததுபோல, சிறுபான்மையினரின் உரிமையை உறுதிசெய்யும் வலிய காப்பீடுகளை இந்த(இலங்கை) அரசியற்றிட்டத்திற்குப் பரிந்துரை செய்யாமல் விட்டது பெரும் பிழையென்று இப்போது நான் நினைக்கின்றேன். இந்த இரண்டு(சிங்களவர்,தமிழர்)சமுதாயங்களுக்கிடையிற் காலங்காலமாக நிலவும் முரண்பாடுகள் பற்றிய மேலெழுந்தவாரியான புரிதலே எமது ஆணைக்குழுவுக்கு அப்போது இருந்தது. சிறுபான்மையினரின் மனநிறைவும், நலனும் இலங்கைத்தீவின் ஒட்டுமொத்த நலனுக்குத் தேவையானது என்பது அரசாங்கத்திற்கு நன்கு தெரியுமென்றே ஆணைக்குழு அன்று திருப்திப்பட்டுக் கொண்டது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி அதற்கான களமுனைகளைத் துரிதப்படுத்துவதிவருவதைக் காணக்கூடியதாகவே உள்ளது. நாசபக்சர்கள், ரணில் மற்றும் விமல் வீரவன்ச எனத்தொடர்கிறது. இன்னும் யார்யாரெல்லாம் பின்வாங்குகிறார்களோ தெரியாது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
சலிப்பின் விளைவாகவே சனாதிபதித் தேர்தலில் ஒரு கூட்டுணர்வை தமிழர் தாயகத்தில் கட்டமைக்க முடியவில்லை. மக்களுக்கான அரசியலைவிட்டு வணிக அரசியல், அதாவது தமது தேவைகளுக்காக மக்களது வாக்குளை அடகு வைக்கும் அரசியலைக் கடந்த பதினைந்து ஆண்டுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்ததன் விளைவுக்கு சூழல் பொருந்திவரச் சிங்களம் தமிழர் தாயகத்தில் வாக்கு அறுவடைக்குத் துணிந்துள்ளது. நாசபக்ஸர்களின் காலத்தில் தமிழர் தாயகத்தை நோக்கி வாக்குவேட்டையில் நேரடியாக ஈடுபடாது பினாமிகளூடாகவே நகர்ந்தனர். ஆனால் இன்று 1977இற்கு முற்பட்ட நிலைபோன்றதொரு நிலையில் சிங்களக் கட்சிகளின் நிலை உள்ளது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
விசாரணை என்பது நல்ல விடயம். ஆனால், இது ஒரே கல்லிற் பல மாங்காய்களை வீழ்த்தும் விசாரணை நகர்வு. கிழக்கிலே மக்கள் விடுதலை முன்னணி(ஜனதா விமுக்தி பெரமுன) என்ற தேசிய மக்கள் சக்தி(ஜாதிக பலவேகய)க்கான பலமேற்றலுக்கு முரளீதரன் மற்றும் சந்திரகாந்தன் போன்றோரது கட்சிகள் இடையூறாக அமையும் என்ற நோக்கிலே நகர்த்தப்படும் விசாரணையாகவும் நோக்கலாம். உண்மையில் ஊடகவியலாளர்களின் கொலை குறித்த விசாரணை நிமலராஜன் போன்றவர்களில் இருந்து தொடங்கப்படுவதோடு, நாடாளுமன்ற உறுப்பினர்களாயிருந்த மாமனிதர்களான திரு. ரவிராஜ் மற்றும் திரு.பரராசசிங்கம் ஆகியோரின் படுகொலைகளுக்கும் நீதி வழங்கப்பட வேண்டும். குறிவைத்து நகரும் விசாரணைகளா அல்லது பொதுமையான நியாயம் தேடும் விசாரணையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி