Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nochchi

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by nochchi

  1. பி.பி.சி தமிழை நினைக்கப் பரிதாபமாக இருக்கிறது. பாவம் அவர்களும்தான் என்ன செய்வது. இந்தியாவிடம் பெறும் மேலதிக கொடுப்பனவுகளுக்காக ஈழத்தமிழரை கீழிறக்கும் திரிபுகளைச் சந்தைப்படுத்தகிறார்கள். இவர்களால் ராஜீவின் கொலைப்படைசெய்த கொடுமைகள் குறித்து எழுத அல்லது விவாதிக்க முடியுமா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  2. அனுரவின் ஆட்சிக்கால நிகழ்ச்சி நிரலில் மகிந்தவின் கைது இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை. பாதுகாக்கும் திட்டமே இருக்கும்.மகிந்தவின் கைது தமது எதிர்காலத் தோல்விக்கானதாக அமையலாம் என்ற பயமும் இருக்கும். ஒருவேளை இரண்டாவது பதவிக்காலம் கிடைத்தால் அப்போது மகிந்தவை நோக்கித் திரும்பலாம். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  3. தேடுவதும் இணைப்பதும் எழுதுவதுமாக தொடரும் தங்களுக்கு உளமார்ந்த நன்றி. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  4. ஊழலை ஒழிக்க வேண்டும். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், ரணிலைவிடப் பெரும் ஊழல்வாதிகள் சுனாமி நிதியிலிருந்து போர்விமானக் கொள்வனவு என்று இதனைச் சுட்டிய ஊடகவியலாளர் ல.விக்ரமதுங்க போன்றவர்களையே கொலைசெய்தவர்களெனப் பலர் வெளியே. தையிட்டி முதல் மட்டக்களப்பு மேய்சல்தரை வரையான பல்கிப்பெருகியதும் அவசரமாகத் தீர்வுகாண வேண்டிய விடயங்கள் குறித்து அனுர அரசுக்கு அக்கறையில்லை. ரணிலின் கைதுசெய்து அதனை ஒரு பேசுபொருளாக்கி உலகிடம் தானொரு உழலற்ற அரசை நடாத்துவதாகப் படம் காட்டும் அடையாள நடவடிக்கைகள். அனுர அரசிடம் நேர்மையிருந்தால் செம்மணியை அனைத்துலக நிபுணர்களை அழைத்து விசாரணை செய்துகாட்ட முடியுமா? எனவே, சிங்கள அரசியல்வதிகள் தமக்கிடையே குத்துப்பட்டாலும் இனமென்று வந்தால் ஒன்றாகி நிற்பவர்கள். தமிழினத்தை அழிப்பதில் மாற்றுக்கருத்தற்றோர். இந்தக் கைதால் தமிழருக்கு எந்த நன்மையாவது உண்டா? இனப்படுகொலையின் பங்காளிகள் ஒருவன் ஊழலுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளான். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  5. ஐயா, இந்த அநீதியான உலகிலே அப்படியொன்று இருக்கிறதா? உலக நீதிமன்று 77ஆண்டுகளாக அழிக்கப்பட்டுவரும் தமிழினத்துக்கான நீதியைத் தருமா? போர் முடிவடைந்து பதினாறு ஆண்டுகளாக நீதியைக் காணவில்லை. கேட்டால் சிறிலங்காவின் சிங்கள அரசுகள் கட்டிவைத்துள்ளதாகச் சாட்டு. பலஸ்தீனர்கள் பேரழிவுக்குள்ளாகி வருகிறார்கள். உலக நீதிமன்றை அங்கேயும் காணவில்லை. ஓரச்சுலகுக்கான போரில் மேற்கும் ரஸ்யாவும் உக்ரைனூடாக மோதுகின்றன.(யாழில் பலரும் சுட்டியதே) உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஷெலென்ஸ்கியின் கையில் எதுவுமில்லை. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் கைகளிலேயே உள்ளன. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  6. இலங்கை போன்ற வளரும் நாடுகள் கட்டிடங்களாலும் வீதிகளாலும் வளர்வதே வளர்ச்சியாகும் என்ற சிந்தனாவால், ஏழை மக்கள் பெருகிவரும்நிலை. பாவம் ஒரு மூதாளர் செய்தது தவறேயானபோதும், மரண தண்டனை கொடுக்கும் அளவு சென்றிருப்பது பெரும் துயரமாகும். பொதுவுடமைத் தத்துவார்த்த கொள்கைவழி ஆட்சி வந்தாலும் இனவாதநோய்த்தொற்றில் இருக்கும்வரை மக்களின் பசி பட்டிணி மாறப்போவதில்லை. முன்னைய ஆட்சிகளின் தொடர்ச்சியே இந்த ஆட்சியுமாகும் நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  7. மன்னாரைக் காக்க மாபெரும் மக்கள் போராட்டம் - வலுச்சேர்த்த தமிழ் தேசியப் பேரவை பதிவேற்றுனர்: அன்பரசி திகதி: 11 Aug, 2025 மன்னார் நகரத்தின் சுற்றுச் சூழலுக்கும், மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ள சர்ச்சைக்குரிய காற்றாலைத் திட்டம் மற்றும் மன்னார் தீவையே முற்றாக அழிக்கக்கூடிய கனியமண் அகழ்வுத் திட்டம் ஆகியவற்றை உடனடியாகக் கைவிடக்கோரி, இன்று மன்னாரில் மக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து மாபெரும் கண்டனப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். போராட்டத்திற்கான அவசியம் என்ன? மன்னார் பகுதியில் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலைத் திட்டமானது, அப்பகுதியின் சூழலியல் சமநிலையை முற்றாகப் பாதிக்கும் வகையிலும், அங்குள்ள மக்களின் மீன்பிடி மற்றும் விவசாயம் சார்ந்த வாழ்வாதாரங்களை அழிக்கும் வகையிலும் அமைந்துள்ளதாகப் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். அதேபோல, மன்னார் தீவில் முன்னெடுக்கப்படவுள்ள கனியமண் அகழ்வானது, ஒரு வளமான நிலப்பரப்பை முற்றிலுமாக அழித்து, எதிர்காலத்தில் மன்னார் தீவு என்ற ஒன்றே இல்லாத நிலையை உருவாக்கும் ஒரு பாரிய அழிவுத் திட்டம் என அவர்கள் குற்றம் சாட்டினர். இந்த அழிவுத் திட்டங்களுக்கு எதிராகவே மக்கள் தன்னெழுச்சியாக வீதியில் இறங்கிப் போராடி வருவதாக ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர். வலுச்சேர்த்த தமிழ் தேசியப் பேரவை மக்களின் இந்த நியாயமான போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்கும் வகையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் தேசியப் பேரவையின் தலைவர்கள் நேரடியாகக் கலந்துகொண்டு தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இந்தப் போராட்டத்தில், தமிழ் தேசியப் பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், மன்னார் மாவட்ட அமைப்பாளர் துரைராஜா ஜோன்சன் மற்றும் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு, மக்களின் கோரிக்கைகளுக்கு வலுச்சேர்த்தனர். தமது அரசியல் நோக்கங்களுக்கு அப்பால், மக்களின் வாழ்வுரிமையையும், மண்ணின் வளத்தையும் பாதுகாப்பதே தமது முதன்மையான கடமை எனத் தெரிவித்த அரசியல் தலைவர்கள், இந்த அழிவுத் திட்டங்களை அரசு கைவிடும் வரை தமது போராட்டம் தொடரும் எனவும் சூளுரைத்தனர். மன்னாரைக் காக்க மாபெரும் மக்கள் போராட்டம் - வலுச்சேர்த்த...மன்னார் நகரத்தின் சுற்றுச் சூழலுக்கும், மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ள சர்ச்சைக்குரிய காற்றாலைத் திட்டம் மற்றும் மன்னார் தீவையே முற்றாக அழிக்கக்கூடிய கனியமண் அகழ்வுத் திட
  8. நியூசிலாந்தில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் ஆறு நூல்கள் வெளியீட்டு விழா ——————————— நியூசிலாந்து, ஓக்லாண்ட்(Auckland) மாநகரில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் ஆறு நூல்கள் வெளியிடப்பட உள்ளது. “தேசிய சுய நிர்ணயமும் ஐரோப்பிய சிறுபான்மை இனங்களும்”, “இலத்தீன் அமெரிக்காவில் தேசிய இன முரண்பாடுகள்”, “ஆபிரிக்க தேசிய இனங்களும் சுயநிர்ணய விடுதலையும்”, “முரண்பாடுகள் முற்றிய அரபுலகின் தேசிய இனங்கள்”“தென்கிழக்காசிய விடுதலைப் போராட்டங்கள்”, “இந்தியாவில் தேசிய இன எழுச்சியும் வீழ்ச்சியும்” ஆகிய ஐங்கரன் விக்கினேஸ்வராவின் ஆறு நூல்கள் வெளியீடு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. நியூசிலாந்து, ஓக்லாண்ட் மாநகரில் உள்ள மவுண்ட் ரோஸ்கில் போர் நினைவு மண்டபம், 13 வது மே சாலை, மவுண்ட் ரோஸ்கில், ஓக்லாந்து 1041 எனும் முகவரியில் உள்ள மண்டபத்தில் மாலை 1800 முதல் 2030 மணி வரை இவ் வெளியீட்டு நிகழ்வு நடைபெற உள்ளது. (Mt Roskill War Memorial Hall, 13 May Road, Mt Roskill, Auckland 1041, New Zealand) இந்நிகழ்வு திரு. சண் வேலுப்பிள்ளை அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது. இந்நூல் வெளியீட்டு விழாவில் அறிமுக உரையை திரு. மேவின் கொன்ஸ்ரன்ரைன் அவர்கள் உரையாற்றுவார். அத்துடன் நூல்களின் ஆய்வுரைகளை திரு. சிவசரவணபன் சர்வேஸ்வரன், திரு. பூபாலசிங்கம் பிரதீபன், திரு. கௌரிசங்கர் சுதந்திரபாலன், திரு. பிரேம்குமார் கந்தசாமி, திருமதி. வித்தியா நந்தகுமார் மற்றும் திருமதி. தமிழினி வாமதேவன் ஆகியோர் வழங்குவார்கள். ஓக்லாண்ட் மாநகரில் நிகழும் இந்நூல் வெளியீட்டின் ஏற்புரையை திரு. ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்கள் நிகழ்த்துவார். யாழ்க்கள உறவுகளே, வட்ஸ்அப்பில் படித்ததைப் பகிர்ந்துள்ளேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  9. நன்றி ஐயா, அந்தநிலைக்கு சென்றதன் விளைவே எதிரான கொள்கைகள் ஆட்சிக்காக ஒன்றிணைந்து கொண்டமை என நினைக்கின்றேன். அப்பாவிகளைப் பலிகொடுத்து அதிகார சுகபோகங்களை அனுபவித்துவரும் அதிகாரவர்க்கங்களின் அடாவடிகள் பொருண்மிய வீழ்ச்சியின் ஊடாக உலகில் ஆங்காங்கே ஆட்டம் கண்டுவருகின்றன. (ராஜபக்சர்களின் வீழ்ச்சிபோல்) பொருண்மிய வீழ்ச்சியின் ஊடாக மக்கள் கொதிநிலை அடைந்து தமக்கு எதிராகத் திரும்பிவிட்டால் என்ன செய்வது என்ற பயமும், மக்களின் விருப்பத்தக்கு மாறான அரசுகளே அண்மைய காலங்களில் யேர்மனியை ஆள்வதும் ஒரு வரள்நிலையாகும். தொடர்ந்தும் முன்றுகட்சி, இரு கட்சி ஆட்சிகளாகவே உள்ளன. கொள்கைகளை இலக்காக்கிக் கட்சிகளுக்கு வாக்களிக்கும் மக்கள் காணும் காட்சிகள் வேறாக உள்ளன. கடந்த அரையாண்டில் உள்நாட்டு உற்பத்தி கீழ்நோக்கிய நிலை. அமெரிக்க வரியேற்ற ஆதிக்கம் போன்ற பல்வேறு நெருக்கடிகளோடு, உற்பத்தித் தொழிலாளர் பற்றாக்குறை என்பனவற்றின் தாக்கமும் தாக்குகின்றது. தொழிற்சாலைகள் உட்பட பல்வேறு கட்டமைப்பகளுள் அதிகரித்துவரும் முஸ்லிம்களின் எண்ணிக்கை போன்றவற்றையும் அரசுத் தலைமையர் முதல் பொருண்மிய ஆய்வாளர் வரை கணித்திருப்பார்கள். அதன் விளைவாகவும் மாற்றி யோசிக்கிறார்களோ யாராறிவார். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  10. உண்மை, சிவாகுமாரவர்களது முயற்சியால் அகரம் நிறுவனம் பல ஏழை மாணவர்களுக்கு உதவி வருகிறது. அவர்களது முயற்சி நீடித்து நிலைக்க வேண்டும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  11. யேர்மனி ஏதோ கிட்லரின் இன அழிப்பை ஆற்றுவதாக எண்ணி, இன்னொரு இனத்தின் அழிவுக்கு உதவுகிறது. அதைவிட யேர்மனியில் ஏற்பட்டுவரும் பொருண்மியத் தாக்கமும், எண்ணிக்கை அளவில் பெருகிவரும் முஸ்லிம்களின் சனத்தொகையால் தமது வாக்குப்பலத்துக்கு ஆபத்தாகிவிட்டால் என்ற அச்சம் போன்ற பல்வேறு காரணியங்களால் இந்த முடிவை எடுத்திருக்கலாம். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  12. உலகிலே அமெரிக்காவோ,ரஸ்யாவோ,சீனாவோ, ஐரோப்பாவோ வல்லரசுகளல்ல என்பதை இஸ்ரேல் நிரூபித்து வருகிறதா? மாற்றங்கள் எப்போதும் என்நேரமும் நிகழ்வது. ஆனால், இஸ்ரேலைப் பாதுகாக்கும் உரிமை உண்டென்று உலக நாடுகள் தடவிக் கொடுத்ததன் விளைவாக, அதனைப் பலஸ்தீனர்களை அழிப்பதற்கான முன்மொழிவாக இஸ்ரேல் பயன்படுத்துகிறது. தற்போது உலகம் ஆப்பிழுத்த குரங்கின் நிலைக்கொப்பாகியுள்ளது. அழிவுகரமான ஆயுதங்களை மக்கள்மேல் கொட்டிக் கொடிகட்டிப் பறக்கும் உலக நாடுகள் இருக்கும்வரை போரழிவுகளும் தொடரவே செய்யும். காலத்துக்குக் காலம் இனங்களின் பேரழிவு தொடர்கிறது. முள்ளிவாய்காலில் தமிழின அழிவுக்கு வித்திட்ட உலகுக்கு மனித உரிமை என்று பேசும் தகமை இல்லை. ஐ.நா என்பதெல்லாம் வெற்றுக்காகிதங்களே. ஒரு பயனும் கிடையாது. ஈழத் தமிழினமும் இறுதி நம்பிக்கையாக ஐ.நாவைப் பார்க்கிறது. ஆனால், ஐ.நாவால் வெளித்தெரியும் பலஸ்தீனப் பேரழிவையே தடுக்க முடியவில்லை. வெளியே முழுமையாகத் தெரியாத ஈழத் தமிழினத்தின் இன அழிப்பை எப்படிக் கையாளும்? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  13. எல்லாம் கண்துடைப்பாகவே முடியும். ஒன்று இனத்துவ அடிப்படையில் சிங்களத்தின் காவலனான ராஜபக்ஸ குடும்பத்தைக் காப்பாற்றாது விடமாட்டார்கள் அல்லது இனக்கலவரத்தைத் தூண்டி திசைதிருப்பிவிடுவார்கள். சிங்களத்தை தவறாகத் தமிழினம் தொடர்ந்து மதிப்பிடுவதன் பயனாகவே யாழில் சிங்களப் பெரும்பான்மைக் கட்சியின் மூன்று உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். சிங்களம் புதிதாகச் சிந்தித்திருந்தால் ஒரு இராணுவத்தின் சாட்சியோடு உள்ள செம்மணியை வெளிக்கொண்டரும் செயற்பாட்டைப் பொறுப்போடு கையேற்று நடாத்தியிருக்கும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  14. ஊடங்களின் உசுப்பேத்தும் செய்தித் தலைப்புகளும், தமிழும் படும்பாடானது 21ஆம் நூற்றாண்டின் கொடுமை. திருந்தவேமாட்டார்கள் போலுள்ளது. ஆதவன் நியூசுக்கு என்ன அதிரடி இருக்குதோ!
  15. மிருதங்க இசை வித்துவான் சண்முகரட்ணம் பிரணவநாதன் காலமானார் Posted on July 19, 2025 by தென்னவள் ஈழத்து இசைப்பாரம்பரியத்தின் முன்னோடிக் கலைஞர் மிருதங்க வித்துவான் சண்முகரட்ணம் பிரணவநாதன் காலமானார். அவர் கடந்த (16) ஆம் திகதி உடல்நலக் குறைவால் ஜேர்மனியில் காலமானார். 1951 ஓகஸ்ட் 13 ஆம் திகதி அன்று யாழ்ப்பாணம் உடுவிலில் இசைப்புலவர் சண்முகரட்ணம் மற்றும் ஜெயலக்ஷ்மி தம்பதியருக்கு மகனாகப் பிறந்த பிரணவநாதன், தனது தந்தையார் வழியிலேயே இசைப்புலைமை பெற்று, மிருதங்கக் கலையில் தேர்ச்சி பெற்று விளங்கினார். இலங்கையின் புகழ் பெற்ற கர்நாடக இசை வித்துவான் கலாசூடாமணி சண்முகராகவனின் இளைய சகோதரர் இவராவர். தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து ஜேர்மனி நாட்டில் வாழ்ந்து வந்த இவர் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற பல நூறு நிகழ்ச்சிகளில் மிருதங்க இசை மீட்டி மக்களை மகிழ்வித்து வந்தவர். இவரது மிருதங்க நாதம் என்பது மிகவும் உன்னதமானது. பாடகர்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்ற விதத்தில் மிருதங்க நாதத்தை வழங்கிப் புகழ்பெற்றவர். ஆடற்கலை அரங்கேற்றங்களிலும் இவரது மிருதங்க இசை மீட்டல் ஆடல் புரிகின்றவர்களுக்கு மிகச்சிறப்பான ஒத்திசைவாக இருக்கும். பல மாணாக்கர்களை ஐரோப்பிய தேசத்தில் உருவாக்கிய பெருமைக்குரியவர். அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் முதுநிலைத் தேர்வு நடுவராகவும் பிரபல்யமான மிருதங்க ஆசிரியராகவும், அணிசேர் கலைஞருமாக விளங்கிய பிரணவநாதன் சங்கீதரத்தினம், லயஞானகுமாரன் ஆகிய பட்டங்களையும் பெற்றிருக்கிறார். இந்தியாவின் புகழ்பெற்ற இசைக்கலைஞர்களான சஞ்சய் சுப்ரமணியம், உன்னிகிருஷ்ணன், சுதா ரகுநாதன் உள்ளிட்ட பல முன்னணி கலைஞர்களுக்கு தனது மிருதங்க லயத்தால் அழகு சேர்த்தவர் ஐரோப்பிய நாடுகளில் கர்நாடக இசையைப் பரப்பும் பணியில் முன்னணி பங்கு வகித்தவர். மிகவும் நுண்ணியதுடன் அதீத ஈடுபாட்டுடனும், இசைக்காக வாழ்ந்த அற்புத மிருதங்க வித்துவான். அவரது மறைவு ஈழத்து இசைப்பாரம்பரியத்துக்கு பேரிழப்பாகும். அவரது நினைவுகள் அவர் மீட்டிப் பதிவாகியுள்ள மிருதங்க இசையூடாக இவ்வுலகம் உள்ளவரை ஒலித்துக்கொண்டே இருக்கும். அவரது நினைவுகளும் நிலைபெற்றிருக்கும். https://www.kuriyeedu.com/?p=686915
  16. யாழ்.பல்கலை இந்த நிதித் தேட்டம் தொடர்பாக ஏன் புலம்பெயர் மக்களை நாடியதா? அல்லது நாடவில்லையா?. உள்ளூரில் பல்வேறு வாழ்வாதாரப் பணிகளைத் தமிழ்க் குமுகாயம் மேற்கொள்ள இதுபோன்ற படம் காட்டல்களுக்கு எதற்காக எம்மைக் கருவறுக்க முனையும் சக்திகளை யாழிலே கொண்டுதிரிகிறார்கள். படித்த, அறிவாளர்கள் கொண்ட பல்கலைக் குமுகாயத்தின் வரண்ட சிந்தனையா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  17. ஈழத்தீவினுள் உங்களுடைய அதிதீவிர பௌத்தமதவாதச் சிந்தனையே இந்தியத் தலையீட்டுக்கு வழிவகுத்துக் கொடுத்தது. சமத்துவம், சகோதரத்தவத்தை நாடிய மிதவாதத்த தமிழ்த் தலைமைகளை அடித்து அவமானப்படுத்திக் கொன்றொழித்ததோடு, தென் பகுதியில் வாழ்த்த அப்பாவித் தமிழர்களைக் கொன்றதோடு, தொழிற்றுறையாளர்களையும் கைப்பற்றி வட- கிழக்கை நோக்கி அடித்து விரட்டியபோதே இந்தியத் தலையீடு கப்பல் வடிவிலே வந்துவிட்டது. இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. தமிழினத்தின் சுயநிர்ணய உரிமை ஏற்பதன் ஊடாக தமிழரும் சிங்களவரும் ஒரு வலிமை மிக்க சக்தியாகப் பரிணமிக்க முடியும். ஆனால், அதற்கு நீங்கள் உங்களின் மகாவம்ச மனோபாவத்திலிருந்தும், பொளத்த உயரினவாதச் சித்தாந்தத்திலிருந்தும் விடுபட வேண்டும். 42ஆண்டுகளின் முன் நீங்கள் ஆடிய பெருமாட்டம் மீண்டும் மீண்டும் உங்களின் முகத்தைக் காட்டி நிற்கிறது. நீங்கள் புத்தனைத் தொழும் தகுதியற்ற இனமாகிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டது. உண்மையான பௌத்தர்களாக இனியேனும் சிந்தித்தால் ஈழத்தீவு சிறக்கும். இல்லையேல் இரந்து வாழும் இழிநிலை தொடரும். குறிப்பு: அமெரிக்காவும் கடன் வேண்டுதுதானே; அதனால், இலங்கையரசு இரந்து சீவிப்பது சரிதானே என்று யோசிக்கலாம். யுத்த பேரிகையின் தொடர்ச்சியே பொருண்மிய வீழ்ச்சியாகத் தொடர்கிறது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  18. ஊடகங்களின் வறுமைநிலையே இதுபோன்ற தலைப்பிடுவதற்கான கரணியமாகும்.
  19. இன அழிப்புகளின் நேரடிப்பங்குதாரர்களாக இருந்து போர்த் தளபாட விற்பனையோடு, அதன் பின்னரான மீள்கட்டுமானத்திற்போதும் பெருநிறுவனங்களான பல்தேசிய நிறுவனங்களின் கட்டுமானத்துறைக்கான விற்பனைவரை பெரும் இலாபத்தை அடைவது பெருமுதலைகளான இந்த நிறுவனங்களே. ஆனால், அவற்றின்மீது இந்த நாடுகள் தடைகளையோ கட்டுப்பாடுகளையோ விதிப்பதில்லை. ஆனால், வளர்ந்துவரும் மூன்றாம் மண்டல நாடுகளில் எங்காவது ஒரு நிறுவனத்தில் பணியாளருக்கு சரியான ஊதியம் கொடுக்கவில்லை, பாதுகாப்புப்பொறி முறைகள் இல்லை, குழந்தைத் தொழிளார்கள்(இவை ஏற்புடையனவன்று) எனப் பல்வேறு கெடுபிடிகளை ஏற்படுத்திவரும் இந்த நாடுகள் அல்லது நிறுவனங்கள் காஸாவில் 50000 சிறுவர்களைக் கொன்று மற்றும் காயப்படுத்திய இஸ்ரேலிய அரசு மீது காத்திரமான நடவடிக்கை எடுக்காதிருக்கின்றனர். இது கூட ஒருவகையில் இன அழிப்பிற்கு உதவுவதே. முள்ளிவாய்க்காலைத் தடுத்திருந்தால் அல்லது இன அழிப்பாளர்களைத் தண்டித்திருந்தால் ஏனைய நாடுகளுக்குத் தயக்கம் வரும். இப்போது காஸா இன அழிப்பை ஆதரிப்பதன் ஊடாக அடுத்து எந்த இனம் அழிவுக்குள்ளாகப் போகுதோ யாரறிவார். இன அழிப்பால் பயனடையும் நிறுவனங்கள் மற்றும் அரசுகளைப் பட்டியலிட்டு வெளிப்படுத்துதல் மற்றும் இஸ்ரேலின் உற்பத்திகளை வாங்கும் மேற்குலக நாடுகளையும் பட்டியலிடல் இதுபோன்ற செயற்பாடுகளே வெற்று அறிக்கைகளுக்கு அப்பாற் பயனுடையதாக அமையும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  20. சிறுவர்களுக்கும்தானே அவர்கள் அறியாத பருவத்திலும் 'சுன்னத்' சடங்கு செய்கிறார்கள். அது ஏற்புடையதா?
  21. உண்மை, ஆனால் அந்தக்கூட்டத்துக்குத் தாம் படித்தவர்கள் என்று கூறியவாறு ஆலவட்டம் பிடிக்கிறதுக்கும் ஒரு கூட்டமிருப்பதுதான் வெட்கக்கேடு.
  22. ரஞ்சித் அவர்களே, எவளவு கடுமைகளைக் கடந்து வந்திருக்கிறீர்கள். மனம் கரைந்துபோகிறது. உறவுகளைக் கடந்த தூய உள்ளங்களால் இந்த உலகு நகர்வதாக நான் சிந்திப்பதுண்டு. அப்படியான ஒருவராக உங்கள் அன்ரா இருக்கிறார். உங்களோடும், அவர் உதவிய பலரோடும் என்றும் நிலையாக வாழ்வார்.
  23. வசியவர்களே, எப்படி எண்ணெய் சட்டியிலிருந்து அடுப்பினுள் வீழ்வது போன்றா? இது இன்னும் நிலைமையை மோசமாக்குவதோடு மேலும் கொதிநிலைக்கான வழியாக மாறாதா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.