-
Posts
5737 -
Joined
-
Last visited
-
Days Won
7
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by nochchi
-
வறுமையில் பெருந்தோட்ட மக்களே அதிகளவில் பாதிப்பு Posted on June 20, 2023 by தென்னவள் 17 0 இலங்கையில் 7 மில்லியன் மக்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளதாக லேர்ன் ஏசியா என்ற அமைப்பு முன்னெடுத்த ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கின்றது. அதாவது 2019 ஆம் ஆண்டு வரையில் மூன்று மில்லியன் மக்களே வறுமையின் கீழ் இருந்ததாகவும் எனினும் கடந்த பொருளாதார நெருக்கடிகள் காரணமாக வறுமையின் கீழ் தள்ளப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 7 மில்லியன்களாக உயர்வடைந்திருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு 14 சதவீதமாக இருந்த இலங்கையின் வறுமை நிலை 2023 ஆம் ஆண்டாகும் போது 31 சதவீதமாக அதிகரித்திருக்கின்றது.இலங்கையின் சனத்தொகையில் 7 மில்லியன் மக்கள் அதாவது 70 இலட்சம் பேர் வறுமைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றனர். கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கையில் தீவிரமடைந்த டொலர் நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடி இந்த வறுமை நிலை அதிகரிப்புக்கு காரணமாக அமைந்திருக்கிறது. சர்வதேச அறிக்கைகள் இலங்கையின் வறுமை நிலை தொடர்பாக பல்வேறு அமைப்புகள் பல்வேறு சர்வதேச நிதி நிறுவனங்கள் தொடர்ச்சியாக அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, உலக உணவுத் திட்டம், யுனிசெப் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இலங்கையின் வறுமை நிலை மிகவும் கவலைக்குரிய நிலையில் இருப்பதாக ஆய்வு அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. முக்கியமாக மக்கள் தமது உணவு தேவைகளை குறைத்துக்கொண்டிருப்பதாகவும் பலர் பசியுடன் நித்திரைக்கு செல்வதாகவும் அறிக்கைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதேவேளை இலங்கை மக்களில் சுமார் 75 இலட்சம் பேருக்கு போதுமான உணவு கிடைப்பதில்லை என வெளியான சர்வதேச அறிக்கைகளுக்கு ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு தெரிவித்திருக்கிறது. உணவு பாதுகாப்பு தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையில், சனத்தொகையில் 17 சதவீதமானவர்கள் அதாவது 39 இலட்சம் பேர் உணவு பாதுகாப்பின்மை பிரச்சினைக்கு ஆளாகியுள்ளனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த வருடத்தின் ஜூன்/ஜூலை மாதங்களுடன் ஒப்பிடும் போது, அந்த நிலைமை 40 வீதம் குறைவடைந்திருப்பதாகவும் ஜனாதிபதி செயலகம் அறிவித்திருக்கின்றது. லேர்ன் ஏசியாவின் ஆய்வு எப்படியிருப்பினும் லேர்ன்ஏசியா அமைப்பு வறுமை தொடர்பாக முன்னெடுத்த ஆய்வு அறிக்கையிலுள்ள விடயங்களையும் ஆராயவேண்டியது அவசியமாகின்றது. இந்த ஆய்வின்படி 31 சதவீதமான வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களில் 51 சதவீதமானோர் பெருந்தோட்ட பகுதியில் வாழ்கின்ற மக்களாக இருக்கின்றனர். கிராமப் பகுதிகளில் 32 சதவீதமானோரும் நகர் பகுதிகளில் 18 சதவீதமானோரும் வறுமை கோட்டுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். 70 இலட்சம் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களில் அரைவாசிப் பேர் அதாவது 51 சதவீதமானோர் பெருந்தோட்ட பகுதிகளில் இருப்பதாக ஆய்வு கூறுகின்றது. மேலும் தற்போது காணப்படும் சமூகநல பாதுகாப்பு திட்டங்கள் ஏழை மக்களை சென்றடைவதில் பலவீனமான நிலைமை காணப்படுவதாக ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. எனினும் சமுர்த்தி போன்ற உதவிகளை பெறுகின்றவர்களில் நான்கு வீதமானோர் வசதி படைத்த குடும்பங்களாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது இவ்வாறிருக்க இது தொடர்பில் அனுபவத்தை பகிர்ந்துள்ள இந்த ஆய்வு செயற்பாட்டில் பங்கெடுத்த லேர்ன்ஏசியா நிறுவனத்தின் கயனி ஹுருல்லே, இந்தளவு குறுகிய காலத்துக்குள் மேலும் 4 மில்லியன் மக்கள் வறுமை நிலைமைக்குள்ளாகியுள்ளமை கவலையளிக்கிறது. ஆரோக்கியமான, சரியான அளவில் குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாமலுள்ளதாக நாம் சந்தித்த பெற்றோர்கள் தெரிவித்தனர் என்று குறிப்பிடுகிறார். சொத்துக்களை விற்கும் மக்கள் கடந்தகாலங்களில் வறுமை நிலைமை காரணமாக மக்கள் பல்வேறு ரீதியான தீர்மானங்களை எடுத்திருக்கின்றனர். 70 மில்லியன் மக்கள் வறுமையின் கீழ் வாழ்கின்ற நிலையில் 47 சதவீதமானோர் உணவுகளின் எண்ணிக்கையை குறைத்திருக்கின்றனர். அதேபோன்று 33 சதவீதமானோர் குறைவான உணவை உட்கொள்கின்றனர். 27 சதவீதமானவர்கள் (சிறுவர்கள்) பெரியோர்களின் உணவைப் பயன்படுத்துகின்றனர். நுவரெலியாவை சேர்ந்த 37 வயதான பெண் கருத்து வெளியிடுகையில், எனது கணவர் ஒரு சாதாரண தொழிலாளி. அண்மையில் ஒருநாள் எனது கணவர் வேலைதேடி அலைந்து மாலையில் குறைந்தளவு பணத்துடன் வீட்டுக்கு வந்தார். அதில் குழந்தைகளுக்கு சிறிது உணவை தயாரித்தேன். நான் பசியுடன் இருந்தேன். இவ்வாறு எத்தனையோ நாட்கள் சாப்பிடாமல் பட்டினி கிடந்துள்ளேன். எனினும் நான் சாப்பிடவில்லை என்பதை எனது குடும்பத்தாருக்கு வெளிப்படுத்தமாட்டேன் என்று மிகவும் சோகமான தனது கதையை கூறியிருந்தார். இதேவேளை கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் தமது சொத்துக்களை விற்பனை செய்தே அன்றாட உணவுத்தேவையை நிறைவேற்றிக் கொண்டனர். ஆய்வின் பிரகாரம் 37 சதவீதமானவர்கள் தமது சொத்துக்களை விற்பனை செய்திருக்கின்றனர். அதேபோன்று 50 சதவீதமானோர் சேமிப்பை உணவு தேவைக்காக பயன்படுத்தியுள்ளனர். இந்த ஆய்வின் பிரகாரம் 2019 ஆம் ஆண்டில் இருந்த நிலைமையுடன் ஒப்பிடுகையில், இலங்கை 2023ஆம் ஆண்டு பாரியளவில் மோசமான வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் 2019 ஆம் ஆண்டு 28 சதவீதமான வறுமை நிலை காணப்பட்டது. தற்போது 33 சதவீதமாக அதிகரித்திருக்கின்றது. வட மத்திய மாகாணத்தில் 18 சதவீதமாக இருந்த வறுமை நிலை தற்போது 31 சதவீதமாக அதிகரித்துள்ளது. இவ்வாறு சகல மாவட்டங்களிலும் வறுமை அதிகரித்துள்ளது. நெருக்கடியின் ஆரம்பம் 2022 ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்தது. டொலர் நெருக்கடி ஏற்பட்டதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்து கொள்ள முடியாத நிலையேற்பட்டது. எரிபொருள், எரிவாயு, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் போன்றவற்றை இறக்குமதி செய்ய முடியவில்லை. மிகவும் குறைந்த அளவிலான எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களே கூடிய விலைக்கு விற்பனை செய்யப்பட்டன. எரிபொருள், எரிவாயு போன்றவற்றுக்கு மக்கள் நாட்கணக்கில் கிலோமீற்றர் கணக்கில் வரிசையில் நிற்க வேண்டிய யுகம் ஏற்பட்டது. உணவுப் பொருட்களின் விலைகள் தீவிரமாக அதிகரித்தன. வாழ்க்கைச் செலவு தொடர்ந்து அதிகரித்தது. பணவீக்கம் 80 சதவீதத்தை தாண்டியது. பொருளாதார நெருக்கடி காரணமாக சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டன. இதனால் மக்கள் தொழில் வாய்ப்புகளை இழந்தனர். சம்பளங்கள் குறைக்கப்பட்டன. மக்களினால் பெறுகின்ற சம்பளம் மற்றும் அன்றாட வருமானத்தைக் கொண்டு குடும்பங்களின் உணவுத் தேவையை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மக்கள் தமது தேவைகளை குறைத்துக்கொண்டனர். இரண்டு வேளை உணவு உண்ணும் நிலைமை ஏற்பட்டது. யுனிசெப் அமைப்பின் 2022 ஆம் ஆண்டின் அறிக்கையின் பிரகாரம் பல குழந்தைகள் இரவு நேரத்தில் பசியுடன் நித்திரைக்கு செல்வதாகவே அறிக்கையிடப்பட்டது. மாணவர்களின் கல்வி பாதிப்பு இந்தவகையிலேயே தற்போதைய ஆய்வின் பிரகாரம் வறுமை நிலை அதிகரித்துள்ளது. மேலும் வறுமை நிலையானது மாணவர்களின் கல்வியை பாதித்துள்ளது. நாட்டில் ஆறு சதவீதமான மக்கள் ஐந்து முதல் 18 வயது வரையான தமது குழந்தைகளை பாடசாலைகளுக்கு அனுப்பவில்லை என்று இந்த ஆய்வு கூறுகின்றது. முக்கியமாக இலங்கையில் குறைந்தபட்சம் 2 இலட்சம் மாணவர்கள் பாடசாலைகளுக்கு நெருக்கடி காலப்பகுதியில் செல்லவில்லை என்பதை ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. சமூக பிரதிநிதி ஒருவர் இது குறித்து குறிப்பிடுகையில், இங்கிருக்கின்ற ஒரு தோட்டத்தில் அரைவாசிக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை. அவர்கள் பல தொழில்களை தேடித் திரிகின்றனர். அவர்கள் ஒரு நாளைக்கு 200 ரூபாய் வரை உழைக்கின்றனர் என்கிறார். நிவாரண திட்டங்கள் இதேவேளை வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ள இந்த ஏழு மில்லியன் மக்களில் 2 மில்லியன் குடும்பங்கள் இருக்கின்றன. எனினும் தற்போது காணப்படுகின்ற சமூக பாதுகாப்பு திட்டங்கள் வறுமை நிலையிலுள்ளவர்களை சென்றடைவதில்லை என்ற விடயமும் ஆய்வில் முன்வைக்கப்படுகின்றது. அரசாங்கம் அஸ்வெசும நிவாரணத் திட்டத்தை கடந்த வருடத்தின் இறுதிப் பகுதியில் அறிவித்ததுடன் நிவாரணம் பெறுவதற்கான தகுதியான மக்களை தெரிவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்தது. அதனடிப்படையில் 39 இலட்சம் மக்கள் விண்ணப்பங்களை அனுப்பியிருந்தனர். அதில் தற்போது 20இலட்சம் பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படவுள்ளன. இலங்கையில் கிட்டத்தட்ட 25 வகையான சமூக உதவி பாதுகாப்பு திட்டங்கள் காணப்படுகின்றன. அதில் முக்கியமாக சமுர்த்தி உதவி திட்டம், சிரேஷ்ட பிரஜைகளுக்கான கொடுப்பனவு திட்டம், விசேட தேவையுடையோருக்கான உதவி திட்டம், சிறுநீரக நோயாளர்களுக்கான உதவி திட்டம் உள்ளிட்டவை காணப்படுகின்றன. மேலும் இலங்கை கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு முன்னரான காலப்பகுதியில் மொத்த தேசிய உற்பத்தியில் 0.4 சதவீதமான நிதியையே சமூக நிவாரணங்களுக்காக செலவழித்திருக்கிறது. அதாவது 2019 ஆம் ஆண்டு இலங்கையின் வறுமை சதவீதம் 14 ஆக இருந்தபோது நிவாரணத்துக்காக மொத்த தேசிய உற்பத்தியில் 0.4 சதவீதமான நிதியே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் 6.8 சதவீதமான வறுமையைக் கொண்ட வியட்நாமில் மொத்த தேசிய உற்பத்தியில் 1.6 சதவீதமான நிதி வறுமையை போக்க பயன்படுத்தப்படுகின்றது. அதாவது வறுமையை போக்குவதற்கான வேலைத்திட்டங்களின் பங்களிப்பு இலங்கையில் போதுமானதாக இல்லை என்பதே ஆய்வில் புலப்படுகின்றது. 20 இலட்சம் பேருக்கு நிவாரணம் அரசாங்கத்தின் அஸ்வெசும திட்டத்தின்படி நான்கு இலட்சம் பேர் 2500 ரூபாய் மாதாந்த கொடுப்பனவை பெற தகுதிபெற்றுள்ளனர். மேலும் மிகவும் பாதிக்கப்பட்ட நான்கு இலட்சம் பேர் 5000 ரூபா மாதாந்த கொடுப்பனவை பெற தகுதிபெற்றுள்ளனர். வறுமையின் கீழ் வாழுகின்ற எட்டு இலட்சம் பேர் 8,500 ரூபா கொடுப்பனவை பெறவுள்ளனர். மிகவும் கடுமையான வறுமை நிலையில் இருக்கின்ற நான்கு இலட்சம் பேர் 15,000 ருபா கொடுப்பனவை மாதாந்தம் பெறவுள்ளனர். இவை ஒவ்வொரு காலகட்டம் வரை நீடிக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக 15,000 ரூபா கொடுப்பனவை பெறுகின்றவர்கள் 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அந்த கொடுப்பனவை மாதாந்தம் பெறுவார்கள். மொத்தமாக 20 இலட்சம் பேர் நிவாரண உதவிகளை பெறுவதற்கு தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர். 72,000 பேருக்கு விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவு கிடைக்கின்றது. சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவான 5000 ரூபா 39 ஆயிரத்து 150 பேருக்கு கிடைக்கின்றது. சிரேஷ்ட பிரஜைகளுக்கான 2000 ரூபா கொடுப்பனவு 4 லட்சத்து 16 ஆயிரம் பேருக்கு கிடைக்கின்றது. இதேவேளை சரியான விழிப்புணர்வு இல்லாததன் காரணமாக சிலர் இந்த அஸ்வெசும நிவாரணத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. மாத்தறையை பகுதியைச் சேர்ந்த 36 வயதான ஒருவர் குறிப்பிடுகையில், அரசாங்கத்தின் அனுசரணையுள்ள திட்டம் என்றால் அது எமக்கு கிடைக்காது என்பது நன்றாகவே தெரியும். அதனால் அது தொடர்பாக நான் கவலை அடையவில்லை என்று குறிப்பிடுகிறார். என்ன செய்ய வேண்டும்? மேலும் லேர்ன்ஏசியா நிறுவனத்தின் ஆய்வின் பிரகாரம் பல பரிந்துரைகள் முன்வைக்கப்படுகின்றன. அதாவது உடனடியாக இந்த அஸ்வெசும திட்டத்தை மீளாய்வு செய்து மீண்டும் மக்களுக்கு அவற்றுக்கு விண்ணப்பிப்பதற்கான சந்தர்ப்பம் கொடுக்கப்பட வேண்டும். அத்துடன் வறுமை கோட்டுக்கு இடையில் இருக்கின்ற மக்களுக்கான தொடர்பாடல்கள் சரியான முறையில் இடம்பெற வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்படுகின்றது. இதேவேளை இந்த ஆய்வை மேற்கொள்வதற்காக இலங்கையில் 13 மாவட்டங்களில் 400 கிராம சேவகர் பிரிவுகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்காக 10,000க்கும் மேற்பட்ட மாதிரி குடும்பங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. 2019 ஆம் ஆண்டு 14 சதவீதமாக இருந்த வறுமை இன்று 31 சதவீதமாக அதிகரித்திருக்கின்றது. ஆனால் இன்னும் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக வறுமையை நிலையை அறிவிக்கவில்லை. எனினும் 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொருளாதார நெருக்கடி வறுமை உயர மிக முக்கிய காரணமாகும். அதாவது எரிபொருள் விலை உயர்ந்தமை, எரிபொருளுக்கான தட்டுப்பாடு காரணமாக உற்பத்திகளில் ஏற்பட்ட வீழ்ச்சி, உற்பத்தி செலவு அதிகரித்தமை, தொழில்கள் இழக்கப்பட்டமை, மக்களின் சம்பளங்கள் குறைந்தமை, தொழில்துறை பலமிழந்தமை தொழிற்சாலைகள் செயலிழந்தமை, சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்கள் கைவிடப்பட்டமை, பணவீக்கம் அதிகரித்தமை, வாழ்க்கைச் செலவு உயர்வடைந்தமை போன்றன இதற்கு முக்கிய காரணங்களாக அமைந்திருக்கின்றன. தற்போது இந்த வறுமை நிலையிலிருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும். முக்கியமாக பெருந்தோட்ட பகுதிகளில் வறுமையை தாண்டவமாடுவதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகின்றது. எனவே இது தொடர்பாக சரியான நடவடிக்கைகள் அவசியமாகின்றன. பெருந்தோட்ட மக்களின் நிலை குறித்து கவனம் அவசியம் பெருந்தோட்டப் பகுதிகளில் சகலருக்கும் இந்த நிவாரணம் வழங்கப்பட வேண்டும். இது தொடர்பாக மலையக அரசியல்வாதிகள் உலக வங்கி மற்றும் அரசாங்கத்தின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர். மேலும் தற்போது நிவாரண உதவிகள் அவசியமாகின்றன. ஆனால் நீண்டகாலத்தில் வறுமையை போக்குவதற்கான பொருளாதார அபிவிருத்தி வலுவூட்டல் திட்டங்கள் அவசியம். இந்த ஆய்வு அறிக்கைகளை தீர்மானம் எடுக்கின்ற நிலையில் இருக்கின்றவர்கள் ஆராய்ந்து பார்ப்பது மிக அவசியமாகவே உள்ளது. ரொபட் அன்டனி வறுமையில் பெருந்தோட்ட மக்களே அதிகளவில் பாதிப்பு – குறியீடு (kuriyeedu.com)
-
'வாக்னர் குழுவால் மாறிய உலக ஒழுங்கும் ரஸ்யாவும்' என்று பேசுகின்ற நிலையை புதின் ஏற்படுத்திவிடுவார் போலுள்ளது. நேற்று இங்கு உலகில் புதிய ஒழுங்கு என்று எழுதப்பட்டது. எழுதி 24மணிநேரம் கூட ஆகவில்லை. ............ எல்லாம் அவனுக்கே வெளிச்சம். அவனெண்டது கடவுளை.... யாராவது பிறகு, CIA என்றோ அல்லது வேறு படைகளோ என்று நினைத்துவிடக்கூடாதல்லவா?
-
ரஸ்யாவில் பெரும் குழப்பநிலை : வீதிகளில் இராணுவ வாகனங்கள் : கூலிப்படையினர் அரசாங்கத்திற்கு எதிராக கலகம் Published By: RAJEEBAN 24 JUN, 2023 | 07:12 AM ரஸ்ய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வந்த கூலிப்படையினர் ரஸ்ய அரசாங்கத்திற்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டுள்ளதை தொடர்ந்து ரஸ்யாவில் திடீர் குழப்ப நிலையேற்பட்டுள்ளது மொஸ்கோ உட்பட ரஸ்ய நகரங்களில் இராணுவ வாகனங்களை அவதானிக்க முடிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன ரஸ்ய தொலைக்காட்சி வழமையான நிகழ்ச்சிகளை இடைநிறுத்தி அவசர செய்திகளை வெளியிடுகின்றது. ரஸ்யாவில் உருவாகிவரும் நிலைமையை உன்னிப்பாக அவதானித்துவருவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ரஸ்யாவுடன் இணைந்து உக்ரைன் படையினருக்கு எதிராக செயற்பட்டுவந்த வோக்னர் ஆயுதகுழுவினர் ரஸ்ய பாதுகாப்பு அமைச்சர் தங்கள்; முகாம்கள் மீது எறிகணை தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவித்ததை தொடர்ந்தே இந்த குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. எங்கள் படைமுகாம் மீது ரஸ்ய படையினர் ரொக்கட் தாக்குதல்களை மேற்கொண்டனர் எங்கள் தோழர்கள் பலர் கொல்லப்பட்டனர் அவர்கள் எங்களை ஏமாற்ற முயல்கின்றனர் என வாக்னர் கூலி;ப்படையின் தலைவ பிரிகோஜின் தெரிவித்திருந்தார். எனினும் ரஸ்ய பாதுகாப்பு அமைச்சர் சேர்ஹே சைய் இதனை மறுத்திருந்தார். இதனை தொடர்ந்து ரஸ்ய பாதுகாப்பு அமைச்சரை தனது படையினர் அகற்றுவார்கள் என எச்சரித்த வாக்னர் குழுவின் தலைவர் ரஸ்ய படையினரை தலையிடவேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார். இது இராணுவசதிப்புரட்சியில்லை நீதிக்கான பயணம் என தெரிவித்த அவர் தனது குழுவினர் உக்ரைனிலிருந்து ரஸ்யாவிற்குள் நுழைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். ரஸ்யாவில் பெரும் குழப்பநிலை : வீதிகளில் இராணுவ வாகனங்கள் : கூலிப்படையினர் அரசாங்கத்திற்கு எதிராக கலகம் | Virakesari.lk
-
ரஸ்ஸிய அரசுக்கெதிராகத் திரும்புகிறதா வாக்னர் கூலிப்படைப்பிரிவு?
nochchi replied to ரஞ்சித்'s topic in உலக நடப்பு
முதுகில் குத்திவிட்டீர்கள் -கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள் - வாக்னர் கூலிப்படைக்கு புட்டின் எச்சரிக்கை Published By: RAJEEBAN 24 JUN, 2023 | 03:17 PM ரஸ்ய படையினருடன் இணைந்து செயற்பட்ட வாக்னர் கூலிப்படை துரோகமிழைத்துவிட்டது என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். நாட்டிற்கு ஆற்றிய தொலைக்காட்சி உரையில் அவர் இதனை தெரிவித்துள்ள புட்டின் கூலிப்படை முதுகில்குத்துவிட்டது என தெரிவித்துள்ளனர். வஞ்சகம் அல்லது சூழ்ச்சியால் அல்லது அச்சுறுத்தலால் ஒரு குற்றவியல் சாகசத்திற்குள் இழுக்கப்பட்டு ஒரு கடுமையான பாதைக்குள் இழுக்கப்பட்டவர்கள் ஆயுதகிளர்ச்சியில் ஈடுபட்டவர்களிற்கு வேண்டுகோளை விடுத்துள்ள புட்டின் ரஸ்யா தனது எதிர்காலத்திற்காக கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது நவநாஜிகளின் அவர்களது தலைவர்களின் ஆக்கிரமிப்பை முறியடித்துவருகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேற்குலகின் இராணுவ பொருளாதார தகவல் கட்டமைப்பு முழுவதும் எங்களிற்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றது இது எங்கள் மக்களின் தலைவிதிகள் தீர்மானிக்கப்படுகின்ற போர்க்களம் அதனால் அனைத்து சக்திகளும் ஐக்கியப்படவேண்டிய அவசியம் உள்ளது இது எனது தேசத்தின் முதுகில் குத்திய செயல் எனவும் அவர் தெரிவித்துள்ளார். உள்ளேயிருந்து இழைக்கப்படும் துரோகம் உட்பட அனைத்து விதமான ஆபத்துக்களில் இருந்தும் மக்களையும் நாட்டையும் பாதுகாப்பேன் நாங்கள் எதிர்கொள்வது நிச்சயமாக ஒருதுரோகம் அதிகப்படியான இலட்சியங்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களின் நோக்கங்கள் இதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நான் மீண்டும் சொல்கி;ன்றேன் எந்தவொரு உளநாட்டு குழப்பமும்எங்கள் தேசத்திற்கு ஒரு அச்சுறுத்தலாகும் இதுரஸ்யாவிற்கு மக்களுக்கான அடியாகும் எங்கள் தந்தையர் தேசத்தை பாதுகாப்பதற்கான எங்களின் நடவடிக்கை கடுமையானதாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வேண்டுமென்றே துரோகத்தில் ஈடுபட்டவர்கள் ஆயுதகிளர்ச்சியை திட்டமிட்டவர்கள் அச்சுறுத்தும் மற்றும் பயங்கரவாத செயலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தவிர்க்கமுடியாமல் தண்டனையை அனுபவிப்பார்கள் எனவும் புட்டின் தெரிவித்துள்ளார்.முதுகில் குத்திவிட்டீர்கள் -கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள் - வாக்னர் கூலிப்படைக்கு புட்டின் எச்சரிக்கை | Virakesari.lk -
ஓட்டமாவடியில் தியாகிகள் நினைவுத் தூபி திறப்பு 24 JUN, 2023 | 01:01 PM கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட ஓட்டமாவடி பாலத்துக்கு அருகாமையில் தியாகிகள் நினைவுத் தூபியினை திறந்துவைக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்றது. கல்குடா தியாகிகள் நினைவுத்தூபி குழுவினர் ஏற்பாடு செய்த இந்நிகழ்வு அல் கிம்மா சமூக சேவைகள் அமைப்பின் பணிப்பாளர் மௌலவி எம்.எம்.ஹாரூன் ஸஹ்வி தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின்போது கடந்த மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தத்தின்போது தாய்மண்ணையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்காக கல்குடா முஸ்லிம் பகுதியில் உயிர்நீத்த வீரர்கள், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவர்கள், கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பிரதேச கல்விமான்கள், புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள் நினைவுகூரப்பட்டனர். அத்துடன் உயிர் நீத்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள், பிரதேச நலன்விரும்பிகள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர். ஓட்டமாவடியில் தியாகிகள் நினைவுத் தூபி திறப்பு | Virakesari.lk
-
உக்ரேனுக்குத் தனியே சநனாயகத்தின் மீதான உறுதிப்பாட்டிற்காகவும் ஒருமைப்பாட்டிற்காகவும் மட்டும் மேற்கினது கட்டற்ற வாரியிறைத்தல் நிகழவில்லை. உலகிற்கான ஒற்றைத் தலைமையைத் தக்கவைப்பதற்காகவுமே. ஆனால், நீடித்துச்செல்லும் போரானது மக்களை விரைந்து ஒரு சலிப்புநிலையையும் பொருண்மிய இழப்பையும் நோக்கி இட்டுச்செல்வதால், உக்கிரேனின் ஒருமைப்பாட்டிற்காக நாம் பலியாக முடியாதெனும் குரல்கள் வீச்சோடு எழும்போது போர் ஓயலாம். அதுவரை அரசுகளின் அடாவடிகள் தொடரும்.
-
விமான வழித்தடமற்ற அனைத்துப் பயணங்களும் திகிலூட்டுபவை. கிழக்கைரோப்பிய நாடுகளுக்கு வந்து அதனூடாக மேற்கு நாடுகளுக்குப் பயணிப்பது ஏறக்குறைய மறுபிறப்புப் போன்றது. அப்படியொரு ஆபத்துநிறைந்த முடிவை எடுக்க அந்தந்த நாடுகளின் சூழல் ஒருபுறமும் ஒப்பிட்டுப்பார்த்து வசதி வாய்ப்பிற்கான தேடலை நோக்கி மறுபுறமும் அகதிப் பயணம் ஆபத்துக்களோடு நிகழ்கிறது. வெற்றிகரமாக அகதியாகிவிட்டால் மகிழ்ச்சி. இல்லையேல் இறப்பும் அவதியுமாக அகதிவாழ்வு கழிந்துபோகிறது. உலகம் சமனிலை பெறாதவரை புலப்பெயர்வுகளும் அகதியாகப் புறப்படுவோரின் சாவுகளும் ஓயாது. அகதிகளாகப் புறப்பட்டுக் கரைசேரமுடியாது சாவடைந்துவிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்.
-
உண்மையில் யாழிணையத்தின் உறுப்பினர்களிடையேயான ரஸ்யாவின் உக்ரேன் மீதான ஆக்கிரமிப்புப் போர் அல்லது ரஸ்யாவின் மேற்கிற்கெதிரான தற்காப்புப் போர் குறித்த வாதப்பிரதிவாதங்களின் இறுதிநிலையை நாம் காணத்தானே போகின்றோம். இந்தப் போரின் பெறுபேறாக உலக ஒழுங்கில், தொடர்ந்தும் அமெரிக்க நாட்டாண்மையா அல்லது புதியதொரு மாற்றமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். மக்களின் அழிவின்மேல் தமது அதிகாரத்தையும், வளச்சுரண்டல்களையும் கட்டமைத்துவரும் அதிகார மையங்களோ, அவற்றை வழிநடாத்தும் சக்திகளோ அழிவதுமில்லை. ஒரு சிறு கீறுகூடப்படுவதுமில்லை. அப்பாவிகளின் மக்களின் மரணஓலம் இந்த அதிகாரசக்கிகளின் காதில் விழுவதுமில்லை. அதிகார ஓய்விலும் பாதுகாப்பு படாடோபமென உல்லாசமாக மனித அவலங்களின் மேலும், மனிதக் கொலைகளின் மேலும் அனுபவித்து முடித்துவிட்டு மீண்டும் சிலையாகக் கம்பீரமாக நிறுவப்பட்டு நின்றுகொண்டிருப்பர். அதனைப் பராமரிப்பதற்கும் மக்கள் மீது மீண்டும் சுமை. இந்தப் போலியான நீதிபேசும் பொய்மை உலகே அழிந்து புதிய உலகு தோன்றினால் மட்டுமே மாற்றம்.
-
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2023 யேர்மனி
nochchi replied to nochchi's topic in வாழும் புலம்
நன்றி, எல்லாம் ஒருவகை உறைநிலைநோக்கிச் செல்லவதாகவே தோன்றுகின்றது. -
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2023 யேர்மனி Posted on April 26, 2023 by சமர்வீரன் 578 0 மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2023 யேர்மனி – குறியீடு (kuriyeedu.com)
-
அன்று நான் 17 வயதில் அரசியல் கைதி – தந்தையை சுட்டுக்கொன்றனர் – இன்று நான் கனடாவில் முக்கியமான நிதி நிர்வாகி- ரோய் ரட்ணவேல் Posted on June 22, 2023 by தென்னவள் 22 0 நான் இலங்கையில் பதின்ம வயதில் அரசியல் கைதியாகயிருந்தேன் தற்போது நான் கனடாவின் தலைசிறந்த நிதி நிர்வாகிகளில் ஒருவர் என சிஐ குளோபல் அசெட் மனேஞ்மென்ட் மற்றும் சிஐ பினான்சியலின் நிறைவேற்று துணை தலைவர் ரோய் ரட்ணவேல் தெரிவித்துள்ளார். அவருக்கு 17 வயதாகயிருந்தவேளை இலங்கை தமிழர் என்ற காரணத்திற்காக ரோய்ரட்ணவேல் இலங்கை இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டார்- பல மாதங்களாக அவர் சித்திரவதை செய்யப்பட்டார் மிகவும் ஈவிரக்கமற்ற நிலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். அவரது தலைவிதியை தீர்மானித்த ஒரு சந்திப்பின் பின்னர் அவரது விடுதலை சாத்தியமானது 1988 இல் அவரே கனடாவிற்கு புறப்பட்டார். மெயில்ரூமில் தனக்கு ஒரு வேலையை தருமாறு கேட்டுப்பெற்றுக்கொண்டார் தற்போது அவர் அதே நிறுவனத்தின் விநியோகப்பிரிவின் தலைவராக உள்ளார். 2020இல் ரோய் ரட்ணவேலை கனடாவின் தலைசிறந்த நிறைவேற்று அதிகாரிகளில் ஒருவராக ரிப்போர்ட் ஒன் பிசினஸ் தெரிவு செய்தது. சமீபத்தில் அவர் பிரிசினர் 1056 நான் எப்படி யுத்தத்திலும் சமாதானத்திலும் தப்பினேன் என்ற நூலை வெளியிட்டார். அனைத்து தடைகளையும் தாண்டி தான் எப்படி வெற்றிபெற்றேன் என்பதை அவர் இங்கு பகிர்ந்துகொண்டுள்ளார். நான் கொழும்பில் இலங்கையின் தலைநகரில் 1969ம் ஆண்டு பிறந்தேன் – நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்தவன் -அப்பா அரசாங்க உத்தியோகத்தர்அம்மாவீட்டுப்பெண் எனக்கு ரவி என்ற மூத்த சகோதரரும் இருந்தார். எனது சிறுவயதில்தந்தை அனேகமான தமிழர்கள் வாழ்ந்த வடக்கிற்கு செல்ல தீர்மானித்தார்இஎங்கள் பாதுகாப்பிற்காக. பருத்தித்துறை என்ற கரையோர நகரில் நான் ஆண்கள்மாத்திரம் கல்விக்கு கற்க்கும் பாடசாலையொன்றிற்கு சென்றேன்நான் அங்கு கிரிக்கெட்டும் கால்பந்தாட்டமும் விளையாடினேன். யுத்தம் வெடிக்கும்வரை குழப்பமற்ற இயல்பான சிறுபிள்ளை பருவமாக அது காணப்ட்டது. 1948 இல் பிரிட்டனிடமிருந்து சுதந்திரத்தை பெற்றதுசிறுபான்மை தமிழர்களிற்கும் பெரும்பான்மை சிங்கள பௌத்தர்களிற்கும் இடையில் இனமோதல் காணப்பட்டது. 1983 இல் அரசாங்கம்திட்டமிட்டு முன்னெடுத்த கறுப்புஜூலை என அழைக்கப்படும் தமிழர்களிற்கு எதிரான கலகம் தென்னிலங்கையில் இடம்பெற்றது – 3000 தமிழர்கள் கொல்லப்பட்டனர். அதன் பின்னரே பதற்றம் அதிகரித்து உள்நாட்டு யுத்தம் தீவிரமடைந்ததுநான்கு வருடங்களின் பின்னர் மோதல் மேலும் தீவிரமடைந்தது. ஒப்பரேசன் லிபரேசன் என்ற இராணுவநடவடிக்கையின் மூலம் விடுதலைப்புலிகள் என்ற கிளர்ச்சிகுழுவிடம் தாங்கள்இழந்த நிலத்தை கைப்பற்றுவதற்கான நடவடிக்கையை ஆரம்பித்தனர். 1987ம் ஆண்டு இலங்கை இராணுவத்தினர் பருத்தித்துறைக்கு வந்து 14 முதல் 40 வயதுடையை அனைத்து ஆண்களையும் சுற்றிவளைத்தனர்எனது சகோதரர் அவ்வேளை டென்மார்க்கிற்கு சென்றுவிட்டார் ஆனால் நான் கைதுசெய்யப்பட்டேன். அவர்கள் எங்களிற்கு கைவிலங்கிட்டு சில கிலோமீற்றர்கள் நடக்கச்செய்து சரக்குகப்பலொன்றில் ஏற்றினார்கள். இலங்கையின் தென்பகுதியில் உள்ள மிகமோசமான வதைமுகாமான பூசாவிற்கு நாங்கள் கொண்டு செல்லப்பட்டோம்இஎன்னை சுமார் 2700 பேருடன் அங்கு தடுத்துவைத்திருந்தனர். அந்த முகாமில் நான் பலவகையான சித்திரவதைகளை எதிர்கொண்டேன் இரும்புவயர்களால் என்னை தாக்கிபைபகளால் அடித்தார்கள் இராணுவ விசாரணையாளர்கள் பிளாஸ்டிக் பைப்களில் மண்ணை நிரப்பி தலைகீழாக தொங்கவிடப்பட்டுள்ள எங்களின் கால்பாதங்களின் மீது அடிப்பார்கள். அதுமிகவும் வேதனையானதாக காணப்படும்மின்சார சித்திரவதைகளையும் எதிர்கொண்டோம்சிலரின்காதுகளில் இருந்து இரத்தம் வந்தது கண்கண் வீங்கியிருந்தன பார்க்க முடியாத நிலையில் அவர்கள் காணப்பட்டனர். நாங்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என ஏற்றுக்கொள்ளவேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.சித்திரவதையை தாங்க முடியாமல் அதிலிருந்து விடுபடுவதற்காக அவர்கள்வாக்குமூலத்தில்கைச்சாத்திட்டனர் ஆனால் அவர்களை முகாமிலிருந்து வெளியே செல்ல அவர்கள் அனுமதிக்கவில்லை. என்னை கைதுசெய்து இரண்டுமாதமாகியும் நான் எங்கிருக்கின்றேன் என்பது எனது குடும்பத்தவர்களிற்கு தெரியாத நிலை காணப்பட்டதுசிங்கள அதிகாரியாக காணப்பட்டாலும் எனது அப்பாவின் நெருங்கிய நண்பராக காணப்பட்ட ஒருவரின் மூலம் எனது குடும்பத்திற்கு தகவலை வழங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சில நாட்களின் பின்னர் என்னை சிறைச்சாலையின் வாயிலிற்கு அழைத்தனர் நான் எனக்கு மரணம்தான் என நினைத்தேன்ஆனால் அங்கு எனது தந்தையின் நண்பர் இராணுவசீருடையில் நிற்பதை பார்த்தேன். அவர் என்னை சிறையிலிருந்து விடுவித்து எனது குடும்பத்தினருடன் சேர்த்தார். எனது பாதுகாப்பிற்காக நான் இலங்கையிலிருந்து வெளியேறவேண்டும் என எனது தந்தை தீர்மானித்தார்எனது அம்மாவின் சகோதரர் கனடாவில் வசித்தார்எனது தந்தை இலங்கையில்உள்ள கனடா தூதரகத்திற்கு மன்றாட்டமாக ஒரு கடிதத்தை எழுதினார் அவர்கள் என்னை நேர்முகத்திற்காக அழைத்தனர் நான் நேர்முகதேர்வின் போது சேர்ட்டை அகற்றி காயங்களை காண்பித்தேன். 18 வயதில் நான் 1988ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 19ம் திகதி கனடாவின் ரொரன்டோவில் காலடிவைத்தேன். அவ்வேளை இலங்கையில் இந்திய படையினர் அமைதிகாக்கும் படையினர் என்ற அடிப்படையில் காலடிஎடுத்துவைத்திருந்தனர்.அவர்களிற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளிற்கும் இடையில் மற்றுமொரு யுத்தம் மூண்டிருந்தது நான் கனடாவிற்கு வந்து இரண்டு நாட்களின் பின்னர் எனது தந்தை சுட்டுக்கொல்லப்பட்டார் எனது ஒருபகுதி அவருடன் இறந்தது. ஆனால் அவர் பெருமைப்படக்கூடிய பாரம்பரியத்தை உருவாக்கி வாழவேண்டும் என்பது குறித்து நான் உறுதியாகயிருந்தேன். BY ROY RATNAVEL, AS TOLD TO SANAM ISLAM TORONTOLIFE. ரஜீபன் அன்று நான் 17 வயதில் அரசியல் கைதி – தந்தையை சுட்டுக்கொன்றனர் – இன்று நான் கனடாவில் முக்கியமான நிதி நிர்வாகி- ரோய் ரட்ணவேல் – குறியீடு (kuriyeedu.com)
- 1 reply
-
- 1
-
இந்திய ரூபாவை இலங்கையில் பயன்படுத்தக் கூடாது : விமல் வீரவன்ச!
nochchi replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
வியாபாரிகளிற்கு வரப்பிரசாதம். விவசாயத்தை நம்பிவாழும் குடும்பங்களுக்கு ஆப்பு. -
அனலைதீவு வைத்தியசாலைக்குள் பொலிஸாருடன் அத்துமீறி நுழைத்த புலம்பெயர் நாட்டவர் கைது! Posted on June 22, 2023 by தென்னவள் 4 0 யாழ்ப்பாணம் அனலைதீவு பிரதேச வைத்தியசாலைக்குள் இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தருடன் புலம்பெயர் நாட்டவர் ஒருவர் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த வைத்தியர் மற்றும் பெண் ஊழியர்களுடன் முரண்பட்டு, வைத்தியசாலை சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். அதேவேளை அவருடன் சென்ற இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவருக்கும் எதிராக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. வெளிநாடொன்றில் இருந்து அனலைதீவு பகுதியில் வந்து தங்கி நின்ற நபர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர், இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சகிதம் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்டு, அங்கு கடமையில் இருந்த பெண் வைத்தியர் மற்றும் பெண் தாதிய உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்டவர்களுடன் முரண்பட்டு வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன், வைத்தியசாலையில் இருந்த தளபாடங்களுக்கும் சேதம் விளைவித்த பின்னர் அங்கிருந்து சென்றிருந்தார். அதுதொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தால் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, வடமாகாண சுகாதார பணிமனை ஆகியோருக்கு முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அதேவேளை ஆதாரமாக வைத்தியசாலை கண்காணிப்பு கமராவின் காணொளியும் பொலிஸாருக்கு வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து, கடமையில் இருந்த பெண் வைத்தியர், பெண் தாதிய உத்தியோகஸ்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்து, அவர்களை அச்சுறுத்தியமை, வைத்தியசாலை சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் புலம்பெயர் நாட்டவர் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் விசாரணைகளின் பின்னர் அவரை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இதேவேளை குறித்த நபருடன் சென்ற இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கும் எதிராக பொலிஸாரினால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.அனலைதீவு வைத்தியசாலைக்குள் பொலிஸாருடன் அத்துமீறி நுழைத்த புலம்பெயர் நாட்டவர் கைது! – குறியீடு (kuriyeedu.com)
-
டைட்டானிக் சுற்றுலாப்பயணிகளிற்கான நீர்மூழ்கி காணாமல்போயுள்ளது
nochchi replied to ஏராளன்'s topic in செய்தி திரட்டி
உண்மை.ஆனால், ஊடகங்களுக்குத் தீனி கிடைத்திருக்கிறது. மேற்கு முதல் கிழக்குவரையான ஊடகங்கள் மீட்டுவிடுவார்கள் அல்லது கண்டுபிடித்துவிடுவார்கள். நன்றி -
பொக்கிஷம் விக்கி,மேஜர் மதன் போன்றோரின் பாணியில் உரைத்திருக்கின்றிர்கள். ஏதோ இந்தியா உலக வல்லராசாகி, உலகமே இந்து மயமாகி, உலகம் அழியாது காக்கப்படல் வேண்டும்.
-
கஜேந்திரகுமர் தொடர்பான நீதிமன்ற விசாரணைகளை அவதானிப்பதற்காக கொழும்பில் உள்ள அமெரிக்க இராஜதந்திரிகளை அனுப்பவேண்டும். Posted on June 16, 2023 by தென்னவள் 58 0 தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைதுதொடர்பான வழக்கினை அவதானி;ப்பதற்கு அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் அமெரிக்க தூதரகத்தை சேர்ந்த இராஜதந்திரிகளை அனுப்பவேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் அமெரிக்காவை தளமாக கொண்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகளும் வேண்டுகோள் விடுத்துள்ளன. அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கு எழுதியுள்ள கடித்தில் புலம்பெயர் அமைப்புகள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளன. இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக இடம்பெறும் சமீபத்தைய சம்பவங்கள் குறித்து நாங்கள் கூட்டாக எழுகின்றோம், எங்கள் கரிசனைகளிற்கு தீர்வை காண்பதற்கான பொறுத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம் என புலம்பெயர் தமிழர் அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்தக்கவலைகளில் முக்கியமானது இந்துக்கோவில்கள் உட்பட தமிழர்களின் பாரம்பரிய சின்னங்களை அழிப்பதும் அதனை தொடர்ந்து பௌத்தர்கள் யாரும் வசிக்காத பகுதிகளில் பௌத்த ஆலயங்களை அமைப்பதுமாகும் என புலம்பெயா தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளன. இலங்கை பாதுகாப்பு படையினரின் முழுமையான ஆதரவுடனேயே இது இடம்பெறுகின்றது எனவும் புலம்பெயர் அமைப்புகள் தெரிவித்துள்ளன. தமிழ்கட்சிகள் மற்றும் தமிழ் மக்களிற்கு எதிரான துன்புறுத்தல்கள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன தமிழ் அரசியல் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிராமமொன்றில் தனது கட்சியின் உறுப்பினர்களுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தவேளை சீருடை அணியாத புலனாய்வு பிரிவினர் தலையிட்டனர் என புலம்பெயர் அமைப்புகள் தெரிவித்துள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் அவர்களின் அடையாளத்தை உறுதிசெய்யுமாறு கோரியவேளை அவர்கள் அதற்கு மறுத்தனர், அதன் பின்னர் அவர் கொழும்பில் கைதுசெய்யப்பட்டார் அவர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்திய பின்னர் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார் நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ளார் பெண்ணொருவர் உட்பட மேலும் இருவருக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன என அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கான கடிதத்தில் புலம்பெயர் தமிழர் அமைப்புகள் தெரிவித்துள்ளன. இவை தெளிவாக தமிழ் அரசியல் தலைமை மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் தந்திரோபாயமாகும்,தமிழ்மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கைகள் அதிகாரத்தின் உயர்மட்டத்தில் உள்ளவர்களால் திட்டமிடப்படுகின்றன எனவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகமோசமான யுத்தகுற்றச்சாட்டுகள் போர்க்குற்றங்களிற்காக அமெரிக்க இரண்டு வருடங்களிற்கு முன்னர் அமெரிக்கா விதித்த தடையையும் அலட்சியம் செய்து சவேந்திரசில்வாவிற்கு முப்படைகளின் பதவி உயர்வு வழங்கப்பட்டது,சமீபத்தில் இலங்கையின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் சிவில் சமூகத்தினர் தொடர்பாக அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் தமிழர் பகுதிகளில் மிக அதிக அளவில் நிறுத்தப்பட்டுள்ள ஆயுதப்படைகள் மற்றும் பொலிஸாரை பயன்படுத்தி மீண்டும் தமிழர்களிற்கு எதிரான நடவடிக்கைகளை வழங்குவதற்கான கூடுதல் ஊக்கத்தை வழங்கியுள்ளது என புலம்பெயர் தமிழர்அமைப்புகள் தெரிவித்துள்ளன. இலங்கையில் தமிழர்கள் எதிர்கொண்டுள்ள மோசமான நிலைமைக்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கின்றோம், என தெரிவித்துள்ள புலம்பெயர் தமிழர் அமைப்புகள் இந்தநிலையை தடுப்பதற்கான முதல் நடவடிக்கையை நீங்கள் எடுக்கவேண்டும்,கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகளை அவதானிப்பதற்காக கொழும்பில் உள்ள அமெரிக்க இராஜதந்திரிகளை அனுப்பவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளன. கஜேந்திரகுமர் தொடர்பான நீதிமன்ற விசாரணைகளை அவதானிப்பதற்காக கொழும்பில் உள்ள அமெரிக்க இராஜதந்திரிகளை அனுப்பவேண்டும் – குறியீடு (kuriyeedu.com)
-
மனித உரிமை மீறல்கள் குறித்து இராணுவத்தினர் உள்ளிட்ட சகல தரப்பினரையும் விசாரியுங்கள் Posted on June 17, 2023 by தென்னவள் 9 0 வலிந்து காணாமலாக்கப்படல்கள் மற்றும் தன்னிச்சையான தடுத்துவைப்புக்களை முடிவுக்குக்கொண்டுவருவதுடன் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு இலங்கைக்குப் பரிந்துரைத்திருக்கும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் உலகளாவிய காலாந்தர மதிப்பீடு தொடர்பான குழு, அனைத்து விதமான மனித உரிமை மீறல்கள் சம்பவங்கள் குறித்து இராணுவத்தினர் உள்ளிட்ட சகல தரப்பினரிடமும் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளது. அதுமாத்திரமன்றி இன, மத சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புணர்வுப்பேச்சு மற்றும் அடக்குமுறைகளை தடுப்பதற்கு ஏற்ற செயன்முறையொன்றை நிறுவுவதன் மூலம் தேசிய நல்லிணக்கம் தொடர்பான கொள்கையை மேலும் வலுப்படுத்துமாறும் அக்குழு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் உலகளாவிய காலாந்தர மதிப்பீடு தொடர்பான குழுவானது இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்த மீளாய்வினைக் கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி மேற்கொண்டிருந்தது. இம்மீளாய்வின்போது கண்டறியப்பட்ட விடயங்களையும், மனித உரிமைகள் பாதுகாப்பை முன்னிறுத்தி இலங்கை மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் பற்றிய பரிந்துரைகளையும் உள்ளடக்கிய 24 பக்க அறிக்கை வெளியாகியுள்ளது. அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு: ‘உள்நாட்டிலும், பூகோள ரீதியிலும் மிகமோசமான சவால்களுக்கு முகங்கொடுத்திருந்தாலும்கூட, நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கான முயற்சிகளை இலங்கை தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்றது. அரசியல், பொருளாதார மற்றும் சமூக ரீதியில் இலங்கை முன்னேற்றமடைந்திருக்கின்றது. அரசியலமைப்புக்கான 21 ஆவது திருத்தமும், தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தல் சட்டமும் அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையையும், ஜனநாயக ஆட்சி நிர்வாகத்தையும், நிதியியல் பொறுப்புக்கூறலையும் வலுப்படுத்தியதுடன் தேர்தல் செயன்முறையில் வெளிப்படைத்தன்மையை விரிவுபடுத்தியது. ஊழல் ஒழிப்புச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோன்று மத்திய வங்கிச் சட்டமூலமானது அவ்வங்கியின் சுயாதீனத்தன்மையை வலுப்படுத்துவதுடன், நீண்டகால அடிப்படையில் பொருளாதாரத்தின் நிலைபேறானதன்மையினை உறுதிப்படுத்துவதை நோக்காகக் கொண்டிருக்கின்றது’ என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு விடயங்கள் இலங்கை அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அதேவேளை இம்மீளாய்வின்போது இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் 106 பேர் உரையாற்றியதுடன் அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், சீனா, இந்தியா, டென்மார்க், ஜேர்மனி, ஜப்பான், பிரான்ஸ், மாலைதீவு, நேபாளம், ரஷ்யா உள்ளடங்கலாக 101 நாடுகள் பரிந்துரைகளை முன்வைத்துள்ளன. இலங்கைப் பாராளுமன்றத்தில் கடந்த 2022 மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் மீதான திருத்தங்கள், சர்வதேச சட்டங்களுக்கு ஏற்புடைய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தை தயாரிக்கும் செயன்முறையை நோக்கிய இடைக்கால நடவடிக்கையாக அமைந்தது. அத்தோடு பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பிரயோகம் இடைநிறுத்தப்பட்டிருப்பதுடன் இன்றியமையாத சந்தர்ப்பங்களில் மாத்திரம் சட்டத்தைப் பயன்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது. மேலும் வடமாகாண மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான விசேட பிரிவொன்று ஜனாதிபதி செயலகத்தின்கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அப்பிரிவானது வடமாகாண அபிவிருத்தி, நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றை ஊக்குவிப்பதையும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான அமைச்சரவை உபகுழு ஆகியவற்றுக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதையும் பிரதான நோக்கமாகக் கொண்டிருக்கின்றது. அடுத்ததாக காணாமல்போனோர் குறித்த பெரும்பாலான முறைப்பாடுகள் தொடர்பில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் பூர்வாங்க விசாரணைகளை மேற்கொண்டிருப்பதுடன், அவைகுறித்த விரிவான விசாரணைகளை முன்னெடுப்பதற்குத் தயாராகிவருகின்றது. அத்தோடு இழப்பீட்டுக்கான அலுவலகமானது இதுவரையில் 4610 சம்பவங்கள் தொடர்பில் அவர்களது குடும்பத்தினருக்கு மொத்தமாக 277.9 மில்லியன் ரூபா இழப்பீட்டை வழங்கியிருக்கின்றது. அச்சம்பவங்களில் பெரும்பான்மையானவை யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் வட, கிழக்கு மாகாணங்களில் பதிவானவையாகும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தலை முன்னிறுத்தி இலங்கையால் நடைமுறைப்படுத்தப்படவேண்டிய 294 பரிந்துரைகளையும் இம்மீளாய்வுக்குழு அதன் அறிக்கையில் உள்ளடக்கியுள்ளது. அவை ஏனைய நாடுகளால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின் தொகுப்பாகும். அவற்றில் முக்கிய பரிந்துரைகள் வருமாறு: சித்திரவதைகள், மனிதாபிமானமற்ற ஏனைய நடத்தைகள் மற்றும் தண்டனைகளுக்கு எதிரான பிரகடனத்தின் தேர்வுக்குரிய செயன்முறையை ஏற்றுக்கொள்ளுதலும் நடைமுறைப்படுத்தலும், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச பிரகடனத்தின் தெரிவுக்குரிய செயன்முறையை ஏற்றுக்கொள்ளுதலும் நடைமுறைப்படுத்தலும், பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் தொடர்பான சர்வதேச பொருத்தனைகளின் தேர்வுக்குரிய செயன்முறையை ஏற்றுக்கொள்ளுதலும் நடைமுறைப்படுத்தலும், மரணதண்டனையை இல்லாதொழிப்பதை இலக்காகக்கொண்டு சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச பிரகடனத்தின் இரண்டாவது தேர்வுக்குரிய செயன்முறையை அங்கீகரித்தல், சர்வதேச மனித உரிமைகள் பொறிமுறைகளுடனான ஒத்துழைப்புக்களைத் தொடர்ந்து பேணுதல், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பொறிமுறைகளுடனான ஒத்துழைப்பைத் தொடர்ந்து பேணுதல், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் மனித உரிமைகள் பேரவையின் ஏனைய கட்டமைப்புக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குதல், ஐக்கிய நாடுகள் சபையின் முகவரமைப்புக்களுடனான தொடர்புகளை வலுப்படுத்தல், பொருளாதார மற்றும் நிதியியல் சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை வலுப்படுத்தல், நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கான முயற்சிகளை மேம்படுத்தல், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவை வலுப்படுத்துவதுடன் அதன் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்தல், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தடையின்றி முன்னெடுக்கப்படுவதற்கு அவசியமான வளங்கள் கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்தல், நீதித்துறை மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புக்களின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்தக்கூடியவாறு விரிவான கலந்துரையாடல்களின் அடிப்படையிலான அரசியலமைப்பு மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளல், உலகளாவிய காலாந்தர மீளாய்வின் பின்னரான பரிந்துரைகளின் அமுலாக்கத்தை ஒருங்கிணைப்பதற்கான உள்ளகப்பொறிமுறை நிறுவுதல், வெறுப்புணர்வுப்பேச்சு மற்றும் அடக்குமுறைகளை தடுப்பதற்கு ஏற்ற செயன்முறையொன்றை நிறுவுவதன் மூலம் தேசிய நல்லிணக்கம் தொடர்பான கொள்கையை மேலும் வலுப்படுத்தல் ஆகியவற்றை மேற்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் இன, மத சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புணர்வுப்பேச்சுக்களைத் தடுத்தல், சிறுபான்மையின மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுடன் தொடர்புடைய குற்றவாளிகளைத் தண்டித்தல், இன, மத, சாதி, பால் மற்றும் வேறு எந்தவொரு அடிப்படைகளிலுமான அடக்குமுறைகளை முடிவுக்குக்கொண்டுவருவதற்கும் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கும் அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுத்தல், மரணதண்டனையை முற்றாக இல்லாதொழித்தல், அனைத்து வடிவங்களிலுமான சித்திரவதைகள், வலிந்து காணாமலாக்கப்படல்கள் மற்றும் தன்னிச்சையான தடுத்துவைப்புக்களை முடிவுக்குக்கொண்டுவருவதுடன் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல், காணாமல்போனோரின் குடும்பங்களுக்கு உரிய பதிலைக் கூறுவதுடன் இழப்பீட்டை வழங்கல், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதுடன் அதற்குப் பதிலாகக் கொண்டுவரப்படும் எந்தவொரு புதிய சட்டமும் சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு அமைவாகக் காணப்படுவதை உறுதிசெய்தல், அச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்போரை விடுத்தல், அனைத்து மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பிலும் இராணுவத்தினர் உள்ளிட்ட சகல தரப்பினரிடமும் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணைகளை மேற்கொள்ளல் ஆகிய பரிந்துரைகளும் அவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மனித உரிமை மீறல்கள் குறித்து இராணுவத்தினர் உள்ளிட்ட சகல தரப்பினரையும் விசாரியுங்கள் – குறியீடு (kuriyeedu.com)
-
தமிழர் தாயகத்தை தொடர்ந்தும் பதட்ட நிலைக்குள் வைத்திருப்பதனை சிங்களம் மட்டுமல்ல, ஏனைய தரப்புகளும் விரும்புவதாகவே நோக்கவேண்டியுள்ளது. தொடர்ந்தும் அச்சுறுத்துவது, புதிய பிரச்சினைகளை உருவாக்குவது, போதைப்பாவனையை ஊக்குவிப்பது, வாள்வெட்டுக்குழுக்களை வைத்து வன்முறையை ஏற்படுத்துவது ஒருபுறமும் நிலஆக்கிரமிப்பு, புத்தரை நடுதல், ஆலயங்களை ஆக்கிரமித்தல் என மறுபுறமும் தமிழர் அமைதியற்றவர்கள் என்ற தோற்றப்பாட்டைத் தொடர்ந்து பேணுவதூடாகச் சிங்களம் தனது தேவைகளை அடைகின்றது. சட்டத்தின் ஆட்சி தமிழர் பகுதிகளில் இல்லையென்றாகிவிட்டதால் அடாவடிகள் தொடரவே செய்யும். ஏனென்றால் தமிழரிடம் ஆயுதபலமும் இல்லை. அரசியற் பலமும் இல்லை. மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு மக்கள் பிரச்சினைகள் குறித்த கரிசனையும் இல்லை.
-
சிங்களத்தோடு கைகோர்த்துபேச்சுவார்த்தைக்கு இழுத்துவந்து, இழுத்தடித்து தமிழீழ நிழரசை அழித்ததோடு தொடர்ந்தும் கட்டமைக்கப்பட்ட ஆக்கிரமிப்புகள் தொடர்வதை அமைதியாக அனுமதித்தவாறு ' நிலைபேறான அபிவிருத்தி,அமைதி, நீதி' என்ற அலங்கார வார்த்தைகளால் தமிழரை ஏய்த்து அழித்து சிங்கள மயமாக்கலுக்கு ஒத்துழைப்பதை வெவ்வேறு பெயர்களூடாக அழைத்துத் தமிழினத்தை அழிக்கத் துணைபோவதையே இன்று மேற்கும் கிழக்கும் அயலகமும் செய்கின்றன. நோர்வே ஒரு நடுநிலை நாடல்ல என்பதை பலஸ்தீன அழிவுகளும் பறைசாற்றுகின்றன. முதுகெலும்பற்ற நாடுகளா அல்லது தமிழின அழிவில் ஏதாவது எலும்புகளாவது சிங்களம்போடுமென்ற சிந்தனையா?
-
பொருளாதார நெருக்கடி எதிரொலி யாழில் பாடசாலை இடைவிலகல் அதிகரிப்பு
nochchi replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
வளர்முகம் நோக்கிய பலரது கருத்துகள் அவதானிப்புக்குரிய அதேவேளை, யஸ்ரின் அவர்களின் அவதானிப்பும் சுட்டுதல்களும் சரியானதே. நன்றி, கற்றலில் இருந்து வாழ்வை வளமாக்குதல்வரையான செயற்பாடுகள் ஒரு தொடர் சங்கிலியாக நடைபெறுவன என்பதை குமுகாய ஆர்வலர் முதல் ஆசிரியர்கள்,புலம்பெயர் நன்கொடையாளர்கள், கல்விசார் மாகாண, மாவட்ட, பிரதேச, கொத்தனி வலயங்களின் அதிகாரிகள் ஆகியோர் ஒன்றிணைந்து ஒரு கூட்டு முயற்சியில் இறங்குவதோடு, வட-கிழக்குக்கான ஒரு பொதுக் கல்வி அபிவிருத்திக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அதனூடாகக் களஆய்வு, நிதிமேலாண்மை என்பவற்றைத் திட்டமிடுதலும் செயற்படுத்தலும் வேண்டும். அதேவேளை வளவாளர்களையும்,உளவியலாளர்களையும் கொண்ட குழுக்களையும் உருவாக்கி கற்றலுக்கப்பாலான வாரஇறுதிநாள் கலந்துரையாடல்களை மேற்கோண்டு மாணவர்களின் உளவளத்தைப் பேணும் செயற்திட்டத்தையும் போட்டி,பொறாமை என்பவற்றைத் தூரவைத்துவிட்டு மேற்கொண்டால் மாற்றத்தைக் காணலாம் என்று நினைக்கின்றேன். அதேவேளை அரசியற் தலையீடுகளற்ற ஒரு பொதுத்தளமாக இருப்பதும் அவசியமாகும் நன்றி -
‘லிபரேஷன் ஒபரேஷன்’ : 36 ஆண்டுகளுக்கு முன் இராணுவம் நடத்திய முதல் போர்! Posted on June 2, 2023 by தென்னவள் 18 0 நாட்டின் இறுதிக்கட்ட போரில் செய்யப்பட்ட இனப் படுகொலைகளையும், போரில் உயிர் நீத்தவர்களையும் நினைவுகூரும் பல நிகழ்வுகளை கடந்த மே மாதம் பல்வேறு இடங்களில், குறிப்பாக, வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலும், புலம்பெயர் தேசங்களில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் இடம்பெற்றது. யுத்தம் முற்றுப்பெற்று 14 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், போர் முரசு கொட்டப்படுவதற்கு முதற்புள்ளி இடப்பட்டது எப்போது, யாரால் என்பதை அறியாத தரப்பினருக்கே இந்த பதிவு. ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவே 1987 மே 26 அன்று முதல் முதலாக யுத்தத்தை ஆரம்பித்தார். யாழ். குடாநாட்டை அரச கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்காக அவர் புலிகளுக்கு எதிராக வடமராட்சியில் போரிட முன்னின்றார். அதன் பின்னர், இந்தியாவின் தலையீட்டால் அந்த போர்க்கொதிப்பு தற்காலிகமாக தணிந்தது. அன்று ஜே.ஆர். ஆரம்பித்த யுத்தத்தை 2009 மே 18ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முடித்துவைத்தார். “1987 மே, ஜூன் மாதங்களில் விடுதலைப் புலிகளை (Liberation Tigers) ஒழிப்பதற்காக இராணுவத்தினரால் ‘லிபரேஷன் ஒபரேஷன்’ (Liberation Operation) – ‘விடுதலை நடவடிக்கை’ என பெயரிடப்பட்டது. வடமராட்சிக்கு பின்பு குடாநாட்டின் ஏனைய பகுதிகளையும் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருப்போம். புலிகள் ஏனைய தமிழ் இயக்கங்களை தடை செய்து, தனித்து இயங்கியதால் அவர்களை அழிப்பது சுலபமானது” என அன்றைய அமைச்சர் லலித் அத்துலத் முதலி கூறியிருந்தார். “பிரபாகரனும் மூத்த தலைவர்களும் அவர்களோடு ஏராளமான ஆயுதங்களும் வல்வெட்டித்துறையில் இருப்பதாக எமது புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவல்களே லிபரேஷன் ஒபரேஷனை முன்னெடுப்பதற்கான முக்கிய காரணம்” என கூட்டுப்படைத் தளபதி ஜெனரல் சிறில் ரணதுங்க எழுதிய ‘Adventurous Journey : From Peace to War, Insurgency to Terrorism’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: “விடுதலைப் புலிகளுக்கு இந்திய உளவுப் பிரிவு ‘றோ’ (RAW) ஆயுதங்களை வழங்குவது எமக்கு தெரியவந்தது. எனினும், இந்திய அரசும் றோவும் இதனை மறுத்தன. புலிகளை முற்றாக ஒழிப்பதற்கு இலங்கை படையினரை இந்தியா அனுமதிக்காது. காயமடைந்த புலிகள் சிகிச்சைக்காக கடல் வழியாக தமிழ்நாட்டுக்குச் செல்வதையும் நாம் அறிவோம். கூட்டுப்படை தளபதி ஜெனரல் சிறில் ரணதுங்க முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆருக்கு ஒபரேஷனை விளக்கும் படம். 1987 ஜூன் 4ஆம் திகதி இந்திய விமானங்கள் உணவுப் பொருட்களை யாழ். குடாநாட்டில் போட்டதால், வடமராட்சி போரை நிறுத்துமாறு ஜனாதிபதி ஜெயவர்தன எனக்கு உத்தரவிட்டபோது நான் மறுத்தேன். இதனால் கோபமடைந்த அவர், ‘இந்தியாவுடன் நாம் போர் புரியமுடியாது’ என்றார். போர்க்களத்தில் இத்தகவலை படையினருக்கு கூறி, போரை நிறுத்துமாறு அறிவித்தபோது அவர்களின் முகத்தில் ஏமாற்றத்தை கண்டேன். படையினர் ‘இந்தியா எப்படி இதனை செய்யலாம்’ எனவும் கேட்டனர். அத்தோடு, ‘லிபரேஷன் ஒபரேஷன்’ நிறுத்தப்பட்டது” எனவும் ஜெனரல் ரணதுங்க அந்நூலில் குறிப்பிட்டுள்ளார். 1987 மே 26 காலை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும், அதனால் மக்களை ஆலயங்கள் மற்றும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் வானொலியில் அறிவிக்கப்பட்டதுடன், ஹெலிகொப்டர்களில் இருந்தும் துண்டுப் பிரசுரங்கள் வீசப்பட்டன. அதனையடுத்து, மக்கள் பாடசாலைகள், ஆலயங்களில் தஞ்சமடைந்தனர். யாழ். குடாநாட்டில் முதல் முதலாக மக்களின் இடம்பெயர்வு வடமராட்சியிலேயே இடம்பெற்றது. மாட்டு வண்டில்கள், லாண்ட்ரமாஸ்ரர், உழவு இயந்திரங்கள், சைக்கிள்களில் தமது பொருட்களுடன் அதிகாலையில் இருந்து தென்மராட்சி, வடமராட்சி கிழக்கு நோக்கி சென்றனர். அல்வாய் முத்துமாரியம்மன் ஆலயத்தின் மீது 1987 மே 29 நடத்தப்பட்ட எறிகணை வீச்சால் அங்கு தஞ்சமடைந்திருந்த பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர். சிலரின் உடல்கள் உருக்குலைந்தன. பலர் காயமடைந்தனர். அவர்கள் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு செல்லமுடியாத நிலையில் காணப்பட்டனர். அப்போரில் சுமார் 8000 படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். எறிகணைகள், விமானக் குண்டுவீச்சுகள், ஹெலிகொப்டர்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்களால் குடாநாடே அதிர்ந்தது. இராணுவப் படையினர் வருவதைத் தடுக்க விடுதலைப் புலிகளும் போராடினர். அன்றைய காலகட்டத்தில் புலிகளிடம் போதிய ஆட்பலம் இருக்கவில்லை. தொண்டமானாறு முதல் பல திசைகளிலும் இராணுவத்தினர் முன்னே விரைந்து சென்றனர். மணற்காடு, மண்டான், முள்ளி பகுதிகளில் ஹெலிகொப்டர்கள், கடற்படை படகுகள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்களில் உயிரிழந்தனர். அந்த தாக்குதல் நடவடிக்கையின் பின்னர் வடமராட்சி பகுதி 1987 ஜூன் 1ஆம் திகதி இராணுவப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. பல இடங்களில் இராணுவ முகாம்கள் நிறுவப்பட்டன. சுமார் 5000 இளைஞர்கள் சுற்றிவளைக்கப்பட்டு, கைதுசெய்யப்பட்டு, கப்பல் மூலம் காலி பூசா சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டனர். சில இளைஞர்கள் ஓடவிட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன்போது நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். பெருமளவினர் காயமடைந்தனர். இந்நிலையில், வடமராட்சியில் இருந்து ஏனைய இடங்களுக்கு செல்வதற்கு கொடிகாமம் வீதியை மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டு, முள்ளி சந்தியில் சோதனை நிலையமும் அமைக்கப்பட்டது. அத்தோடு, வல்லை வீதியும் மூடப்பட்டது. நடந்த போர் நடவடிக்கையில் இந்தியா தலையிடாமல் இருந்திருந்தால், வெளிநாடுகளின் உதவியுடன் யுத்தத்தையும் முடித்து விடுதலைப் புலிகளையும் ஒழித்திருப்பேன் என ஜனாதிபதி ஜெயவர்தன அப்போது இந்திய ஊடகமொன்றுக்கு தெரிவித்திருந்தார். “புலிகளுடன் நாம் யுத்தம் புரியும்போது தடுத்தீர்கள்; இன்று உங்களுக்கு வீண் செலவுகளும் பாரிய அழிவுகளுமே எஞ்சியுள்ளது” என 1987 ஒக்டோபர் 10ஆம் திகதி விடுதலைப் புலிகள் – இந்திய படை மோதல் ஆரம்பமான போது ஜனாதிபதி ஜே.ஆர். அன்றைய இந்திய உயர்ஸ்தானிகர் ஜே.என்.டிக்சிற்றிடம் கூறினார். இந்திய பாதுகாப்பு அமைச்சர் கே.சி.பந்த் கொழும்பில் ஜனாதிபதி ஜே.ஆரை சந்தித்து புலிகளுக்கு எதிராக இந்திய படையினர் யுத்தத்தை ஆரம்பிக்க அனுமதி கேட்டபோதும், “நானும் இதனையே செய்தபோது கண்டித்தீர்கள்! எனது படையினரின் போரை உங்கள் படையினர் இப்போது முன்னெடுக்கின்றனர்” என்றே கூறினார். ஆக, வடமராட்சி போருக்குப் பின்னர், ஜூன் 4ஆம் திகதி அச்சுவேலி ஊடாக படை நகர்வை ஆரம்பித்து, யாழ். குடாநாட்டை முழுமையாக அரச கட்டுப்பாட்டில் கொண்டுவர அரசு முடிவு எடுத்தது. ஜூன் 4 – இந்திய விமானம் மூலம் உணவுப்பொருட்கள் குடாநாட்டில் போடப்பட்டதால் போர் நிறுத்தப்பட்டது. சுதந்திரமடைந்த பின்னர், நாட்டில் இடம்பெற்ற பாரிய படை நடவடிக்கை லிபரேஷன் ஒபரேஷனே ஆகும். 1971 ஏப்ரலில் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) ஆயுதப் போராட்டத்தை ஒழிக்க விமானக் குண்டுவீச்சுக்கள், எறிகணை தாக்குதல்கள் இடம்பெற்றதில்லை. சிங்கள மக்களும் அகதிகளாக இடம்பெயர்ந்ததில்லை. 1971 – சிறிமாவோ ஆட்சியில் ஜே.வி.பி. சிங்கள இளைஞர்கள் கைதாகி விசேட நீதிமன்றத்தால் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. 1977 – பதவிக்கு வந்த ஜே.ஆர். அந்த சிங்கள இளைஞர்களுக்கு மன்னிப்பளித்தார். ஆனால், தமிழ் இளைஞர்களை தடுத்துவைக்க பயங்கரவாத தடைச் சட்டத்தை 1979இல் அமுல்படுத்தினார். இறுதிப்போர் 2009 மே 18 முடிவடைந்த பின்னர் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “யுத்தம் ஆரம்பமானதன் பின்னர் நான்கு ஜனாதிபதிகள் ஆட்சியில் அந்த போரை நிறுத்த முடியாமல் போனதற்கான காரணங்களை ஆராய்ந்தோம். படையினர் எண்ணிக்கையை அதிகரித்தோம். பல திட்டங்களை வகுத்தோம். வெற்றி பெற்றோம்” என குறிப்பிட்டிருந்தார். எனவே, போரின் ஆரம்பகட்டத்தில் இராணுவத்தினர் எடுத்த நடவடிக்கைகள், சதித் திட்டங்களையும் கூட இனப் படுகொலை நினைவேந்தல்கள் நினைவில் நிறுத்துகின்றன. ‘லிபரேஷன் ஒபரேஷன்’ : 36 ஆண்டுகளுக்கு முன் இராணுவம் நடத்திய முதல் போர்! – குறியீடு (kuriyeedu.com)
-
'அங்கீகாரம்' தேய்ந்து செல்லும் மனிதவள மேப்பாட்டுநிலையான மனித உறவுகளும், குடும்ப உறவுகளும் பிளவுண்டு சிதைவுண்டு செல்லும் சூழலில் திருமண இணையர்களிடையேயும், திருமணம் என்பதை வெறுக்கும் இளையோரிடையேயும் ஆரோக்கியமற்ற குமுகாய நிலை வளர்முகமாகிச் செல்கின்றது. இதுபோன்ற விளையாட்டுபோட்டிகள் சிலநேரம் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். ஒரு பரப்புரையாகவும் அமையலாம்.