-
Posts
5737 -
Joined
-
Last visited
-
Days Won
7
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by nochchi
-
பேர்லினில் சிறப்பாக நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழா Posted on June 27, 2023 by சமர்வீரன் 112 0 தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு மற்றும் பேர்லின் தமிழாலயம் இணைந்து நடாத்திய தமிழர் விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. தமிழாலய மாணவர்கள் மற்றும் வெளிவாரிய மாணவர்கள் பங்குகொண்ட இல்லங்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகளுடன், சிறுவர்களுக்கான மற்றும் வளர்ந்தோர்களுக்கான உதைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி என நடைபெற்றது. விளையாட்டுத் திடல் தாயக நினைவுகளை முன்னிறுத்தி வடிவமைக்கப்பட்டதோடு , இல்லங்களும் மிகவும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. மாணவச்செல்வங்கள் தமது திறமைகளை வெளிக்காட்டி போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்றனர். தமிழர் விளையாட்டு விழா விளையாட்டை மட்டும் அல்ல எமது தாயக உணர்வுகளை வெளிப்படுத்தி மக்களை ஒருங்கிணைக்கும் நிகழ்வாகவும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவ் விளையாட்டு விழா சிறப்பாக நடைபெறுவதற்கு தமது ஆதரவை தெரிவித்த நடுவர்களுக்கும், உதவியாளர்களுக்கும் பேர்லின் தமிழாலயம் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றது. பேர்லினில் சிறப்பாக நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழா – குறியீடு (kuriyeedu.com)
-
- 1
-
கவிஞர் தீபச்செல்வனுக்கு அமெரிக்க விசா மறுப்பு Posted on June 28, 2023 by தென்னவள் 5 0 அமெரிக்காவில் நடைபெறும் இலக்கிய மாநாட்டுக்குச் செல்வதற்காக விண்ணப்பித்திருந்த ஈழ கவிஞர் தீபச்செல்வனுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. இரண்டு முறை விண்ணப்பித்திருந்தும் அமெரிக்கத் தூதரகம் தனக்கு விசா வழங்க மறுத்துவிட்டதாகக் கூறியிருக்கும் தீபச்செல்வன், எதிர்காலத்தில் இந்தியாவுக்குச் செல்லவும் தனக்கு விசா மறுக்கப்படலாம் என கவலை தெரிவித்திருக்கிறார். நாவலாசிரியர், கவிஞர், சிறுகதை எழுத்தாளர், திரைப்படப் பாடலாசிரியர், வசனகர்த்தா எனப் பல தளங்களில் இயங்கிவருபவர் கவிஞர் தீபச்செல்வன். அவர் எழுதிய ‘பதுங்கு குழியில் பிறந்த குழந்தை’, ‘நான் ஸ்ரீலங்கன் இல்லை’ ஆகிய கவிதைத் தொகுப்புகளும், ‘நடுகல்’ என்ற நாவலும் தமிழ் வாசகப் பரப்பில் மிகுந்த கவனம் பெற்றவை. சமீபத்தில் அவர் எழுதிய ‘பயங்கரவாதி’ நாவல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வட அமெரிக்க தமிழ் சங்கத்தின் (FeTNA) 36-வது தமிழ் விழா ஜூன் 30-ம் தேதி தொடங்குகிறது. இந்த நிகழ்வில் பங்குபெறுமாறு தீபச்செல்வனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்காக இலங்கைத் தலைநகர் கொழும்புவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் விசாவுக்காக அவர் விண்ணப்பித்திருந்தார். ஆனால், அவர் நாடு திரும்புவார் என்ற நம்பிக்கை அல்லது முகாந்திரம் இல்லை, அமெரிக்காவில் குடியேறிவிடுவார் என்று கூறி அமெரிக்கத் தூதரகம் அவருக்கு விசா வழங்க மறுத்துவிட்டது. இரண்டாவது தடவையாக விசா கோரி விண்ணப்பித்தபோதும், அதே காரணம் கூறப்பட்டு விசா மறுக்கப்பட்டது. இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலிடம் பேசிய தீபச்செல்வன், “இலங்கையில் தொடர்ந்து வாழ வேண்டும்; ஆசிரியர் பணி செய்ய வேண்டும்; தொடர்ந்து இலங்கையில் இருந்து எழுத வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம் என்று கூறியபோதும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் அதைப் பொருட்படுத்தவில்லை. ஒடுக்கப்பட்ட இலங்கை மக்களின் குரலாய் இந்த மண்ணில் வாழ்ந்து உரிமைகளைப் பெறுவதே என் எண்ணம். அதற்கு ஜனநாயக தளத்தில் தம் பண்பாடுகள், அடையாளங்கள் சார்ந்த குரலை முன்வைக்கவே மாநாட்டுக்குச் செல்ல வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், பொருத்தமில்லாத காரணத்தைச் சொல்லி எனக்கு விசா வழங்க மறுத்துவிட்டார்கள். அமெரிக்கத் தூதரகமே மறுத்துவிட்டதால், இனி இந்தியாவுக்கு வரவும் எனக்கு விசா வழங்கப்படுவது சந்தேகம்தான்” என்று கூறினார் கவிஞர் தீபச்செல்வனுக்கு அமெரிக்க விசா மறுப்பு – குறியீடு (kuriyeedu.com)
-
கருணாநிதிக்கு கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க அனுமதி!
nochchi replied to தமிழ் சிறி's topic in தமிழகச் செய்திகள்
நன்றி, 'கருத்தைச் சொல்லலாம் அல்லவா?' ஒவ்வொரு மனிதன் தொடர்பாக அல்லது அரசியல்வாதிகள் தொடர்பாக எல்லோரது பார்வையும் ஒன்றாக இருக்கவேண்டுமென்று அவசியமில்லையல்லவா? இங்கே நான் சுட்டுவது சமன்பாடுகளைத் தேடியல்ல. சாத்தியமான விடயங்களைக் கூட முயன்று பார்க்காத'மு.க'என்ற அரசியல்வாதியைப்பற்றி மட்டுமே. அவர் எதை எழுதி என்ன பயன் என்ற இடத்திலே தற்போது தமிழ்நாட்டிலேயே தமிழைக்கொண்டுவந்து விட்டிருக்கிறார்கள். இதிலே இலக்கியமோ, காவியமோ அதனை வாசிக்கும் திறன் கொண்ட மக்கள் கூட்டமாகத் தமிழ் மக்கள் இருக்கிறார்களா(?) என்பதே மதிப்பிட முடியாத வினாவாகும். நன்றி -
கருணாநிதிக்கு கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க அனுமதி!
nochchi replied to தமிழ் சிறி's topic in தமிழகச் செய்திகள்
இங்கே சுட்டுவது ஒரு இனத்தினது வலியையும் அழிவையும் ஏன் தடுக்க எத்தனிக்காது போலி நாடகம் போட்டுச் செய்த திசைதிருப்பல்கள் போன்றவற்றைத் தமிழினம் மறந்துவிடாதென்பதே. அவரது இலக்கிய ஆற்றல் குறித்து யாரும் குறைத்து மதிப்பிடவில்லை. கு.சா ஐயா சுட்டியதுபோல் தமிழகத்தில் பல இலக்கிய எழுத்தாளுமைகள் உள்ளனர் என்பதையும் மறுக்கமுடியாது. ராஜீவின் உத்தரவினால் இந்திய அமைதிப்படையால் (அது இந்திய இன அழிப்புப்படை) கொல்லப்பட்ட 5000யிரத்துக்கு மேற்பட்ட மக்களது உயிர் பெறுமதியற்றதா? 2009இலும் இந்தியப்படைகள் களத்திலே நின்றதை கண்ட மக்கள் இன்னும் வாழ்கிறார்கள். ஆகவே தமிழினம் எதிர்பார்ப்பது ஒரே மொழி கலைi பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட ஒரே இனத்தவர் வாழ்ந்தபோதும் நாம் அழிவுகளை எதிர்கொண்டோம். அங்கே மக்கள் எழுச்சி பெற்றிடாதவாறு தகவல்கள் தனிக்கை செய்யப்பட்டதோடு, தி.மு.க அரசு கவனமாகத்திட்டமிட்டு மக்கள் போராட்டங்கள் நிகழாதவாறு பார்த்துகொண்டதென்பதே மெய்நிலையாகும். எனவே இது குறித்து யாழிலும் தகவல்கள் இருக்கின்றன. நன்றி -
கருணாநிதிக்கு கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க அனுமதி!
nochchi replied to தமிழ் சிறி's topic in தமிழகச் செய்திகள்
உண்மைதான். ஆனால், கூட்டணியாகி ஆட்சியைப்பிடித்தால் பராமரிக்காதுவிட்டாலே போய்விடுமே. அதைவிட பேணாசிலை அமைப்பது அவர்களது குடும்பப் பணமா? மக்கள் பணம்தானே. அதனை மக்களின் நலவாழ்வுப் பணிகளுக்குப் பயன்படுத்தலாமென்ற ஆதங்கமே. தலைசிறந்த இலக்கிய எழுத்தாளுமை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. சுவைததும்பும் சொற்கோர்வைகளை கொண்டுவரும் வல்லமை வாய்க்கப்பெற்றவர். ஆனால், தமிழ்மக்கள் அழிக்கப்பட்டபோது அவரது நாடகம் முழுவிம்பத்தையும் நொருக்கிவிட்டதெனலாம். நினைத்திருந்தால் மக்களை வீதிக்கிறக்கிப் போராடியிருந்தால் கடைசிக்கட்டத்தில் கொல்லப்பட்ட 100000 மேற்பட்ட உயிர்களைக் காத்திருக்கலாம். மாநிலத்தில் அரசுத்தலைவர் மத்தியில் பங்காளியாக இருந்து தமிழின அழிவைத்தடுக்கத் தவறியவர் என்ற தோற்றமே தமிழர் முன் விரிகிறது. இது பலமுறை யாழ் களத்திலே பலராலும் சுட்டப்பட விடயமானபோதும், இங்கும் பொருந்துகிறது. சிலரது நினைவுகளைப் பாதிப்பிற்குள்ளான மக்களின் விழிகளின் வழியே பார்ப்பதன் ஊடாகவே மதிப்பிட முடியும். நன்றி -
ராஜபக்ஷர்களால் மாத்திரமே நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க முடியும் - பொதுஜன பெரமுன Published By: VISHNU 25 JUN, 2023 | 08:04 PM (இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானதும் எமது ஜனாதிபதி வேட்பாளரை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்துவோம். நாட்டின் ஒருமைப்பாட்டை ராஜபக்ஷர்களால் மாத்திரமே பாதுகாக்க முடியும் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். கலாவெவபகுதியில் சனிக்கிழமை (24) மாலை இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம்.கட்சியின் உள்ளக விவகாரங்களில் ஜனாதிபதி தலையிடுவதில்லை,நாங்களும் ஐக்கிய தேசியக் கட்சிகளின் அரசியல் செயற்பாடுகளில் தலையிடுவதுமில்லை. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் வீழ்ச்சியடைவதற்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. பொருளாதாரமா அல்லது மக்களின் சுகாதாரமா என்ற கேள்வி எழுந்த போது பொதுஜன பெரமுன அரசாங்கம் நாட்டு மக்களின் உயிரை பாதுகாக்க முன்னுரிமை வழங்கியது. கொவிட் பெருந்தொற்று தாக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளை பெரும்பாலானோர் மறந்து விட்டனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார்,யார் என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்புகிறார்கள். ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானதும் எமது ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்போம். ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் குறிப்பிடும் கருத்து அவர்களின் தனிப்பட்ட நிலைப்பாடே தவிர கட்சியின் நிலைப்பாடல்ல, நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க ராஜபக்ஷர்கள் அளப்பரிய சேவையாற்றியுள்ளார்கள்.ராஜபக்ஷர்களால் மாத்திரமே நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க முடியும்.எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் மக்கள் ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை நிச்சயம் தோற்றுவிப்பார்கள் என்றார்.ராஜபக்ஷர்களால் மாத்திரமே நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க முடியும் - பொதுஜன பெரமுன | Virakesari.lk
-
எமது தலைவரே உலகில் பலமிக்கவர் ; நாட்டு மக்கள் பெருமையடைய வேண்டும் - வஜிர அபேவர்தன 25 JUN, 2023 | 07:55 PM (எம்.வை.எம்.சியாம்) அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் மிகவும் பெரிய நாடுகளாகும். எனினும், அந்த நாடுகளை விட பெரிய உதாரண புருஷரே எமது நாட்டை ஆட்சி செய்கிறார் என்பதை நினைத்து நாட்டு மக்கள் பெருமையடைய வேண்டும். எமது தலைவரின் குரலுக்கு மேல் பேசக்கூடிய தலைவர்கள் இல்லை. அவர் இந்த உலகிலுள்ள பலமிக்க தலைவர் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார். காலி, கரந்தெனிய பகுதியில் சனிக்கிழமை (24) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிக்கு 55 ஆசனங்களும், ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு ஆசனமும் உள்ளது. தற்போது ஐக்கிய தேசிய கட்சிக்கு பாராளுமன்றத்தில் ஒரு ஆசனம் மாத்திரமே உள்ளது என நினைக்கிறீர்களா? இல்லை. தலைவர் உருவாகியிருந்தார். அதனை எனக்கு பார்ப்பதற்கு மாத்திரமே இருந்தது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் மிகவும் பெரிய நாடுகள். இருப்பினும், அந்த நாடுகளை விட பெரிய உதாரண புருஷரே எமது நாட்டை ஆட்சி செய்கிறார் என்பதை நினைத்து நாட்டு மக்கள் பெருமையடைய வேண்டும். அந்த நாடுகளை விட பெரியவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்பதை நான் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். நண்பர்களே, கனடாவின் தலைவர் எமது ஜனாதிபதியின் அருகில் அமரும் போது அவர் பேசுகிறாரா? இல்லை. பிரான்ஸ் ஜனாதிபதி பேசுவதை நான் பார்த்தேன். எமது தலைவரின் குரலுக்கு மேல் பேசக்கூடிய தலைவர்கள் இல்லை. அவர் இந்த உலகிலுள்ள பலமிக்க தலைவர். இது சிறிய நாடு. ஊடகங்களை அடக்குவதாக, சட்டங்களை கொண்டு வருவதாக கூறுகிறார்கள். சிங்கபூரின் ஊடக அதிகாரசபை சட்டமூலத்தை நான் படித்தேன். அது மிகவும் பெறுமதியானது. அதனையே கொண்டு வரவேண்டும். இதனிடையே பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை கொண்டு வரவுள்ளதாக கூறுகிறார்கள். அதனை கொண்டு வர வேண்டும். உலகில் ஏனைய நாடுகளுக்கு சிறந்தது என்றால் ஏன் இலங்கைக்கு சிறந்ததல்ல என்றார்.எமது தலைவரே உலகில் பலமிக்கவர் ; நாட்டு மக்கள் பெருமையடைய வேண்டும் - வஜிர அபேவர்தன | Virakesari.lk
-
இது ஒரு முடிவற்ற சமாதான ஒப்பந்தமாக இருக்கக்கூடும். நாடுகளுக்கிடையே, உள்நாட்டு அரச எதிர் ஆயுதப்போராளிகளிடையே என்ற நிலையிலிருந்து, தனது நாட்டின் படைத்துறைக் கட்டமைப்பின் நலனுக்காக உருவாக்கப்பட்ட படைப்பிரிவு கிளர்ச்சி செய்து அதனை சமாதானமாக அமைதிப்படுத்தியதோடு, அதனைத் தண்டிக்காது விட்டிருப்பது பல தெளிவற்ற செய்திகளைத் தன்னகத்தே கொண்டிருப்பதாகவே கொள்ளமுடியும். காலம் வெளிக்கொணரும்.
-
கருணாநிதிக்கு கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க அனுமதி!
nochchi replied to தமிழ் சிறி's topic in தமிழகச் செய்திகள்
அ.தி.மு.க வந்து பேனாவைப் புடுங்கினா அல்லது 5ஆண்டுகள் பராமரிக்காது விட்டால், பேனா மை காய்ந்து காணாமற்போய்விட்டால் பாவம் கருணாநிதி. கோபாலபுரம் இருக்கும் வரை அவரது பெயரும் இருக்கும்தானே பிறகேனிந்தப் பேனா. அதனை ஏழைகளின் நலவாழ்வுக்கு பயன்படுத்தலாமே. -
மதுவில் விழுந்தவர் வார்த்தையை மறுநாள் கேட்பது அவசியம்
nochchi replied to Kavi arunasalam's topic in செய்தி திரட்டி
தானே பொல்லையும் கொடுத்து தலையையும் காட்டியிருக்கிறார். -
ஈழத்தமிழரின் தயாரிப்பு, நடிப்பில் 'இருளில் ராவணன்' : வீழ்ந்தவன் எழுந்தால் விபரீதங்களும் விளையும் - பட இயக்குநர் A.V.S.சேதுபதி 24 JUN, 2023 | 07:33 PM 'இருளில் ராவணன்' எனும் படத்தை DUNSTAN INTERNATIONAL FILM CORPORATION பட நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இது ஈழத்தமிழர் ஒருவர் தயாரித்து, அவரே கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படமாகும். அதிரடியாக முதல் படத்திலேயே மூன்று வேடங்களில் நடித்து கதாநாயகனாக அறிமுகமாகிறார் ஈழத்தமிழர் துஷாந். 'பத்து என்றதுக்குள்ள', 'ரங்கூன்' போன்ற படங்களில் நடித்துள்ள மலையாள நடிகை ஸ்ரீது கிருஷ்ணன் இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அதேசமயம் அஜித் கோஷி, பாய்ஸ் ராஜன், சந்திரமௌலி, போராளி திலீபன், விஜய் டிவி முல்லை, யூடியூபர் கட்டெறும்பு ஸ்டாலின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'மெமரீஸ்', 'க்' போன்ற படங்களுக்கு இசையமைத்த கவாஸ்கர் அவினாஸ் இந்த படத்துக்கு இசையமைத்து வருகிறார். 'ஆற்றல்', 'சிக்லேட்ஸ்' படங்களின் ஒளிப்பதிவாளர் R.கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்துவருகிறார். 'அப்பா', 'போராளி', 'நாடோடிகள்', 'ஈசன்' போன்ற படங்களுக்கு எடிட்டிங் செய்த A.L.ரமேஷ் இந்த படத்துக்கும் எடிட்டிங் செய்கிறார். விஜய், அஜித் உட்பட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நடன இயக்குநராக இருந்த தினேஷ் மாஸ்டர் இந்த படத்துக்கும் நடனம் அமைத்து வருகிறார். மேலும், கலை இயக்கம் – மதன், தயாரிப்பு மேற்பார்வை – தண்டபாணி, மக்கள் தொடர்பு – மணவை புவன் ஆகியோரும் படத்துக்காக பணியாற்றுகின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் A.V.S.சேதுபதி. இந்தப் படத்தை பற்றி இயக்குநர் A.V.S.சேதுபதி பகிர்ந்தவை, "முழுக்க முழுக்க ராவண தேசத்தில் நடைபெறும் அக்சன் கலந்த க்ரைம், த்ரில்லர் படமாக உருவாக்கியுள்ளோம். வீழ்ந்தவன் எழுந்தால் விபரீதங்களும் விளையும் என்பதுதான் இந்த படத்தின் மையக்கரு. முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது இராமநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மிக விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெறவுள்ளது" என இயக்குநர் A.V.S.சேதுபதி தெரிவித்துள்ளார். ஈழத்தமிழரின் தயாரிப்பு, நடிப்பில் 'இருளில் ராவணன்' : வீழ்ந்தவன் எழுந்தால் விபரீதங்களும் விளையும் - பட இயக்குநர் A.V.S.சேதுபதி | Virakesari.lk
-
கருணாநிதிக்கு கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க அனுமதி!
nochchi replied to தமிழ் சிறி's topic in தமிழகச் செய்திகள்
பேனாவைக் கட்டுவதற்குப்பதிலாக வீடற்று வீதியோரங்களில் படுத்துறங்கும் 162குடும்பங்களைத் தெரிவுசெய்து குடியிருக்க வழிசெய்தால் கருணாநிதியின் பெயர் மட்டுமல்ல ஸ்ராலினின் பெயரும் நிலைக்குமல்லவா? -
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிவுறுத்தல்! 25 JUN, 2023 | 01:25 PM இஸ்ரேலில் தாதியர் வேலைகளுக்காக எந்தவொரு வெளித்தரப்பினருக்கும் பணம் செலுத்த வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக மாத்திரமே இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் தாதியர் வேலைவாய்ப்புகள் உள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்ற மற்றுமொரு குழுவினர் நாளை திங்கட்கிழமை (26) இஸ்ரேல் செல்லவுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி முதல் இஸ்ரேலில் தாதியர் துறையில் 389 இலங்கையர்கள் பணி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிவுறுத்தல்! | Virakesari.lk
-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்ந்தும் நிலைநிறுத்தப்படும் : திட்டவட்டமாக தெரிவித்தது அமெரிக்கா Published By: NANTHINI 25 JUN, 2023 | 02:19 PM (ஆர்.ராம்) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையில் நல்லிணக்கம், நீதி, பொறுப்புகூறலை உறுதி செய்வதற்காக இலங்கையை நிகழ்ச்சி நிரலில் தொடர்ந்தும் நிலைநிறுத்துவதில் தாம் உறுதியாக இருப்பதாக அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அத்துடன், தமிழ் மக்களுக்கான அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட எதிர்கால செயற்பாடுகளில் இந்தியாவுடன் கூட்டிணைந்த செயற்பாடுகளுக்கு நடவடிக்கைகளை தொடர்ந்தும் பரந்துபட்ட அளவில் முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அண்மையில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ. பிரதானி வில்லியம் பேர்ன் தலைமையிலான தேசிய பாதுகாப்பு குழுவினர் இலங்கைக்கு நேரில் விஜயம் செய்து குறிப்பிட்ட மணித்தியாலங்கள் தங்கியிருந்ததன் பின்னணியில் அமெரிக்க தேசிய பாதுகாப்புச் சபை உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த அழைப்பினை ஏற்றுக்கொண்ட உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகளான சுரேன் சுரேந்திரன் (பிரித்தானியா), கலாநிதி சோமா இளங்கோவன்(அமெரிக்கா), கலாநிதி எலியஸ் ஜெயராஜ்(அமெரிக்கா), கலாநிதி வாணி செல்வராஜ்(கனடா), கலாநிதி காருண்யன் அருளானந்தம்(அமெரிக்கா) உள்ளிட்டவர்கள் முக்கிய சந்திப்புக்களில் ஈடுபட்டனர். குறிப்பாக, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்காசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலாளர் டொனால்ட் லூ, உலகளாவிய குற்றவியல் நீதிக்கான துணைச் செயலாளர் அம்பெத் வான், தேசிய பாதுகாப்பு சபையின் இலங்கை, நேபாளம் மற்றும் மாலைதீவு ஆகியவற்றுக்கான பணிப்பாளர், செனட் அலுவலகத்தின் வெளி விவகார குழுவின் சிரேஷ்ட பணிப்பாளர், உட்பட பல முக்கிய அதிகாரிகளுடன் சந்திப்புக்கள் நடைபெற்றிருந்தன. இந்த சந்திப்பின்போதே அமெரிக்க பிரதிநிதிகள் தரப்பில் மேற்கண்டவாறு உறுதிபடத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்விடயம் சம்பந்தமாக அமெரிக்க பிரதிநிதிகள் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் உள்ள நிலைமைகளை தொடர்ச்சியாக உன்னிப்பாக அமெரிக்கா கவனித்து வருகிறது. இந்நிலையில், இலங்கையில் நல்லிணக்கம், நீதி, பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான ஊக்குவிப்புக்களையும் ஒத்துழைப்புக்களையும் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றது. இவ்வாறான பின்னணியில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் கால எல்லை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் நிறைவுக்கு வருகின்ற நிலையில், நல்லிணக்கம், நீதி, பொறுப்புகூறலை உறுதி செய்வதற்கான சர்வதேசத்தின் கரிசனை தொடர்ச்சியாக இருக்குமா என்பது தொடர்பில் பலத்த கேள்விகள் எழுந்துள்ளன. அமெரிக்காவை பொறுத்தவரையில், இலங்கையில் நல்லிணக்கம், நீதி, பொறுப்புகூறலை உறுதி செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. அதற்கான அர்ப்பணிப்பான பங்களிப்பை அளிக்கின்றது. அதன் பிரகாரம், இலங்கையின் நல்லிணக்கம், நீதி, பொறுப்புகூறலை உறுதி செய்வதற்காக இலங்கை செப்டெம்பரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் நிகழ்ச்சி நிரலில் தொடர்ந்தும் நிலைநிறுத்தப்படும் என்பதை உறுதியாக கூற முடியும். அத்துடன், இலங்கையில் தற்போது அரசியல், பொருளாதார ஸ்திரமற்ற நிலைமை காணப்படுகிறது. இந்த குழப்பான சூழலை ஒரு எதிர்மறையான விடயமாக கருதாமல் அமெரிக்கா அனைத்து இன மக்கள் மத்தியிலும் மேற்கொண்டுள்ள உரையாடல்களின் அடிப்படையில் தற்போதைய சூழலை, நாட்டின் எதிர்காலத்தினை கருத்திற்கொண்டு எவ்வாறு சாதகமாக பயன்படுத்த முடியும் என்று சிந்திக்க வேண்டியுள்ளது. இந்த விடயத்தில் வெவ்வேறு இனங்களைக் கொண்ட இலங்கையின் பிரஜைகள் முற்போக்காக சிந்திக்க ஆரம்பித்துள்ளமையை அடையாளம் காண்பதற்கு முடிந்துள்ளது. இதேநேரம், தமிழ் மக்கள் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்துக்கு பிரதான இடத்தினை கொண்டுள்ளார்கள். அந்த விடயத்தில் இந்தியாவின் வகிபாகம் முக்கியமானதாக உள்ளது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் தேசிய இனப் பிரச்சினையின் மைய விடயமான அதிகாரப்பகிர்வு விடயத்தில் மாறுபட்ட நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. இருப்பினும், இந்தியா தொடர்ச்சியாக அதிகாரப்பகிர்வு விடயத்தில் அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தினை அமுலாக்குமாறு வலியுறுத்தி வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட பிரதான விடயங்களில் இந்தியாவுடன் கூட்டிணைந்த செயற்பாடுகளை பரந்துபட்ட அளவில் முன்னெடுப்பதற்கு அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், குறித்த சந்திப்பு தொடர்பில் உலகத் தமிழர் பேரவையின் ஊடகப் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: இம்முறை வழமைக்கு மாறாக, அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபையின் அழைப்பின் பேரில் நாம் பல்வேறு முக்கிய சந்திப்புக்களில் பங்கேற்றிருந்தோம். அச்சந்திப்புக்களின்போது, 5 ஆண்டுகளுக்கும் மேலாக காலாவதியான மாகாண சபைத் தேர்தலின் முக்கியத்துவத்தை நாங்கள் தெளிவாக வெளிப்படுத்தினோம். உள்நாட்டு யுத்தம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பாதித்தது. இருதரப்பு மற்றும் சர்வதேச அரங்குகளில் இந்தியா தொடர்ச்சியாக 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுலாக்குமாறு வலியுறுத்தி வருகிறது. 2006ஆம் ஆண்டு துணைச் செயலாளராக இருந்த ரிச்சட் பௌச்சரும், 2015இல் இராஜாங்க செயலாளராக இருந்த ஜோன் ஹரியும் மட்டுமே அதிகாரப்பகிர்வு விடயத்தினை பற்றி அழுத்தங்களை பிரயோகித்தனர். இந்நிலையில், இந்தியாவைப் போன்று அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இலங்கைக்கு அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். புலம்பெயர் மக்கள், ஏனைய முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டு அரசாங்கங்களிடமிருந்து பொருளாதார ஆதரவைப் பெறுவதற்கு தமிழ் தேசிய பிரச்சினைக்கு நிரந்தரமானதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமான தீர்வினை காண்பது முக்கியமானதாகும். அத்துடன், 2024 செப்டெம்பர் மாதத்துக்குப் பின்னரும் இலங்கையை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் நிகழ்ச்சி நிரலில் நிலைநிறுத்துதல், சர்வதேச சட்ட மீறல்களுக்கு பொறுப்புக்கூறுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்ந்தும் நிலைநிறுத்தப்படும் : திட்டவட்டமாக தெரிவித்தது அமெரிக்கா | Virakesari.lk
-
அதிகரிக்கும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்; பொலிஸார் அதிரடி
nochchi replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
உலகில் இறுதியாக எங்கும் ஆயுதத்தளபாடக் குவியல்கள் மட்டுமே மிச்சம் இருக்க அவற்றின் மேல் சில காகங்களும் கழுகளும் அமர்ந்திருக்கும்போல் தோன்றுகிறது.