-
Posts
5737 -
Joined
-
Last visited
-
Days Won
7
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by nochchi
-
இங்கே பிள்ளைகளை அடித்துவளர்க்குமாறு யாரும் கூறவில்லை. அதைவிடப் புலத்திலே பிள்ளைகளுக்குக் கல்விமுறை அவர்களுக்கான தெளிவைக்கொடுக்கும். ஆனால், குமுகாயம் தொடர்பான பார்வை மற்றும் தொடர்பாடலை நாம்தான் தெளிவுபடுத்த முடியும். அத்தோடு மீண்டும் சொல்கின்றேன். இங்கு யாரும் யாருக்கும் எதுவும் சொல்லமுடியாது. ஒருவேளை எனது நன்பணின் மகன் தண்ணியில் தள்ளாடியதைக் கண்டால் கேட்கக்கூட முடியாது. தந்தையிடம் சொன்னால், இதெல்லாம் இங்கு சர்வசாதாரணம்தானே என்று கேட்பார். இதுதான் மனநிலை. நன்றி
-
யேர்மன் தலைநகரில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு Posted on August 15, 2023 by சமர்வீரன் 66 0 முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி சிங்கள பேரினவாத அரசின் விமானப்படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில், 53 அப்பாவி சிறுமிகள் கொல்லப்பட்டதோடு, 129 பேர் படுகாயமடைந்தனர்.குறித்த தாக்குதலில் காயமடைந்த பலர் தமது அவயவங்களை இழந்த நிலையில் வாழ்க்கையில் இன்றும் போராடிக்கொண்டிருக்கின்றனர். செஞ்சோலை படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்றைய தினம் யேர்மனி தலைநகரம் பேர்லினில் கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெற்றது. இவ் நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் கொல்லப்பட்ட செஞ்சோலை சிறுமிகளை நினைவில் ஏந்தி மலர் தூவி சுடர் ஏற்றி வணங்கினர். செஞ்சோலையில் கொல்லப்பட்ட சிறுமிகளை நினைவில் நிறுத்தி அவர்களின் படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு , ஈன இரக்கமற்ற சிங்க பேரினவாத அரசின் படுகொலையை வெளிப்படுத்தும் முகமாக பதாதையை ஏந்தியவாறு இளையோர்களால் பல்லின மக்களுக்கு யேர்மன் மொழியில் விளக்கங்கள் வழங்கப்பட்டது. யேர்மன் தலைநகரில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு – குறியீடு (kuriyeedu.com)
-
சிங்கள இராணுவத்தின் ஆலோசனையோடு இராணுவத்தோடு இயங்கும் சமூக விரோதக்கும்பல்களாக இருக்கவே வாய்ப்புள்ளது. அவர்கள் தமது சொந்தங்களோடு சேர்ந்து போராட அது செய்தியாக வருகிறதா?
-
13க்கு எதிராக சிங்கள பௌத்தத்தை அணிதிரட்டும் ரணிலின் உத்தி! Posted on August 13, 2023 by தென்னவள் 13 0 தமிழருக்கான அதிகாரப் பகிர்வையும், அரைகுறை அதிகார மாகாண சபை முறைமையையும் முற்றாக ஒழித்துக் கட்டுவதற்காகவே பதின்மூன்றாம் திருத்தத்தை மீண்டும் நாடாளுமன்ற அங்கீகாரத்துக்கு எடுத்துச் செல்ல முனைவதுடன், சகல கட்சிகளினதும் ஆலோசனையைக் கோரியுள்ள ரணிலின் இலக்கு இலகுவாக எட்டப்படுகிறதா? இன்றைய பத்தியை எழுத ஆரம்பிக்கும்போது ‘இதற்குத்தான் ஆசைப்பட்டாயா ரணிலகுமாரா” என்ற வரிகளை வாய்க்குள் முணுமுணுப்பது தவிர்க்க முடியாதுள்ளது. பதின்மூன்று பதின்மூன்று என்று வாய்ப்பாடாகச் சொல்லப்படும் அரசியல் திருத்தத்தை சிங்கள பௌத்த நெருக்கடிக்குள் தள்ளி, அதில் குளிர் காய்ந்து, எப்படியாவது முழுமையாக இல்லாமற் செய்ய வேண்டுமென்பதையே குறியாகக் கொண்டு ரணில் எடுத்துள்ள முயற்சி திசை தவறாது நகர ஆரம்பித்துள்ளதை ஒவ்வொரு கணமும் பார்க்க முடிகிறது. பதின்மூன்றுக்கு எதிராக சிங்களப் பெரும்பான்மையை, பௌத்த பீடத்தின் தலைமையில் அணி திரட்ட வேண்டுமென்ற ரணிலின் உத்தி வெற்றிகரமாக அதன் ஓட்டத்துக்கு தயாராகிறது. முன்னர் பல தடவை பதின்மூன்றாம் திருத்தத்தின் மூலம் பற்றி குறிப்பிட்டாயிற்று. ராஜிவும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் ஒருவரையொருவர் மடக்கும் முனைப்பில் மேற்கொள்ளப்பட்ட 1987 யூலை ஒப்பந்தத்தின் கருவறைக் குழந்தை பதின்மூன்றாம் திருத்தம். இதிலிருந்து உருவானது மாகாண சபை முறைமை. இந்த ஒப்பந்தத்தில் ஜே.ஆர். கையொப்பமிடும்போது சிங்களத் தரப்பில் அவருக்கு பலமான எதிர்ப்பு இருந்தது. முக்கியமாக அவரது பிரதமர் ஆர்.பிரேமதாச, தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி ஆகியோர் ராஜிவின் இலங்கை விஜயத்தையே புறக்கணித்தார்கள். ராஜிவ் மீதான கொலை முயற்சியும் கொழும்பில் இடம்பெற்றது. அப்போது விமல் வீரவன்ச தலைமையில் இயங்கிய ஜே.வி.பி. இந்த ஒப்பந்தத்தை தீவிரமாக எதிர்த்து கொலைகளையும், தமிழர் வணிக நிலையங்களை அடித்து நொருக்கி தீமூட்டியும் வந்தது. எனினும் வடக்கையும் கிழக்கையும் இணைக்க நடத்தப்படும் சர்வஜன வாக்கெடுப்பு நிச்சயம் தோல்வியடையும் என்ற பூரண நம்பிக்கையில் இந்த ஒப்பந்தத்தில் தாம் கைச்சாத்திட்டதாக ஜே.ஆர்.ஜெயவர்த்தன தமது சுயசரிதையான ஷமென் அன்ட் மெமரீஸ்| (ஆநn யனெ ஆநஅழசநைள) என்ற நூலின் 109ம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ‘கிழக்கு மாகாணத்தில் சிங்களவரும் முஸ்லிம்களும் இணைந்து அறுபது வீதமாக உள்ளனர். இவர்கள் வடக்கு கிழக்கு இணைப்புக்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள். இதனால் சர்வஜன வாக்கெடுப்பு வெற்றி பெறாது” என்று ஜே.ஆர். தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். 1987ல் அறுபது வீதமாக இருந்து கிழக்கின் சிங்கள முஸ்லிம் சனத்தொகை அதன் பின்னைய 35 ஆண்டுகளில் இடம்பெற்ற திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களால் எழுபது வீதத்தை தாண்டிவிட்டது என்பதையும், 2016ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் நிரந்தர இணைப்பு ரத்தாகி விட்டது என்பதையும், இன்று சர்வஜன வாக்கெடுப்பு கோரும் தமிழ் தலைமைகள் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். மறுபுறத்தில், ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட பின்னர் புதுடில்லி திரும்பும் வழியில் சென்னை மரீனா கடற்கரையில் மாபெரும் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்த ராஜிவ் காந்தி அதில் உரையாற்றினார். ‘தமிழ்நாட்டில் நீங்கள் அனுபவிக்கும் உரிமைகளிலும் பார்க்க கூடுதலானவற்றை இலங்கைவாழ் தமிழர்களுக்கு பெற்றுக் கொடுத்துவிட்டு உங்கள் முன்னால் வந்துள்ளேன்” என்று அவர் தெரிவித்தபோது கடல் அலையை மேவிய கையொலி எழுந்தது. நடந்தது என்ன? பதின்மூன்றாம் திருத்தமும் மாகாண சபையும் மெல்லிழையில் ஊசலாடுகின்றன. முன்னர் ஒரு தடவை கூறியது போன்று குரங்கு அப்பம் பங்கிட்ட கதைபோல பதின்மூன்றாம் திருத்தத்தில் கூறப்பட்டவைகளை பிய்த்துப் பிடுங்கும் போக்கில் பொலிஸ் அதிகாரத்தை முழுமையாக இல்லாமற் செய்ய ரணில் நடவடிக்கை எடுத்துள்ளார். இலங்கையின் பிரதான சிங்கள கட்சிகள் அனைத்திலும் அமைச்சர் பதவிகளை வகித்து, இன்று எந்தக் கட்சியும் இல்லாது நிற்கும் ஜி.எல்.பீரிஸ் முதன்முறையாக ஓர் உண்மையை சில நாட்களுக்கு முன்னர் வாய் திறந்து கூறியுள்ளார். ‘பதின்மூன்றாவது திருத்தம் என்பது இலங்கையின் அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்பட்டது. அதனை நடைமுறைப்படுத்த நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் பெற வேண்டியதில்லை” என்ற அவரது கூற்று ரணிலை அப்பட்டமான பொய்யர் என்று அம்பலப்படுத்தும் அரசியல் நோக்கத்துக்கானதாயினும் சொல்லப்பட்ட விடயம் நூற்றுக்கு நூறு உண்மையானது. 1978ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஜனாதிபதியாக இருந்தபோது அமலாக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு அவர் ஓய்வு பெற்ற 1988க்கு முன்னரான பதினொரு வருடங்களுக்குள் பதினேழு திருத்தங்களைக் கண்டன. பதினெட்டு முதல் இருத்தொன்று வரையான திருத்தங்கள் அதன் பின்னர் நிறைவேற்றப்பட்டவை. இவை அனைத்தும் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டவை. எனவே இவைகளை நடைமுறைப்படுத்தும் முழுமையான அதிகாரம் நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதி ரணிலுக்கு உண்டு. அரசியலமைப்பு விதிகளுக்கு உட்பட்ட வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை வாக்குகளால் தெரிவான இவர் அமைச்சரவை நியமனங்கள், அமைச்சரவை மாற்றங்கள், வெளிநாடுகளுடனான ஒப்பந்தங்கள் அனைத்திலும் தமது அதிகாரங்களை பூரணமாக பயன்படுத்தி வருகிறார். ஜனநாயக வரம்புக்குட்பட்ட தொழிற்சங்கங்களின் போராட்டங்கள், மாணவர் போராட்டங்கள் போன்றவற்றை பாதுகாப்பு படையின் பலத்தை பயன்படுத்தி முறியடிக்கும் சர்வாதிகார செயற்பாடுகளிலும் ஜனாதிபதி என்ற பதவி வழி வந்த நிறைவேற்று அதிகாரத்தையே பயன்படுத்தி வருகிறார். ஆனால், பதின்மூன்றாம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது என்று வரும்போது மட்டும், நாடாளுமன்றமே முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டது என்றும், தம்மை ஒரு றப்பர் முத்திரை போலவும் காட்டிக் கொள்வது உலுத்தத்தனமான அரசியல். கடந்தாண்டு டிசம்பர் மாதத்துக்கு முன்னர் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணப்போவதாக அறிவித்தபோது நாடாளுமன்ற அங்கீகாரம் பற்றி எதுவும் இவர் கூறவில்லை. பெப்ரவரி 4ம் திகதி சுதந்திர தினத்துக்கு முன்னர் தீர்வு காணப்படும் என்று அறிவித்தபோது நாடாளுமன்ற அங்கீகாரம் பற்றி எதுவும் சொல்லவில்லை. தமிழ் அரசியல் கட்சிகளை அழைத்து பேச்சை ஆரம்பித்தபோதும் நாடாளுமன்ற அங்கீகாரம் பற்றி மூச்சு விடவில்லை. சகல கட்சிகளையும் இணைத்து பேச்சு நடத்தும்போது திடீரென தாம் அதிகாரமற்றவர் போன்றும், நாடாளுமன்றமே அதியுயர் பீடம் என்பது போலவும் காட்ட வேண்டிய தேவை எவ்வாறு ஏற்பட்டது. இந்தியா புறப்படும் முன்னர் இடம்பெற்ற அரசியல் கட்சிகளுடனான பேச்சின்போது பொலிஸ் அதிகார நீக்கம் பற்றிச் சொன்னார். இல்லாத ஒன்றை நீக்கப்போவதாக அவர் சொன்னபோது இருக்கும் அதிகாரங்களுடன் மாகாண சபை தேர்தல்களை நடத்துமாறு சகலரும் கேட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இதில் அடக்கம். ஆனால், மழுப்பல் பதிலளித்துவிட்டு கூட்டத்தை முடித்துக் கொண்டார். இந்தியப் பிரதமரை சந்தித்தபோது பிரச்சனைத் தீர்வுக்கான தமது முன்மொழிவை அரசியல் கட்சிகளிடம் சமர்ப்பித்துவிட்டதாகவும், நாடு திரும்பியதும் அவ்விடயம் தொடரும் எனவும் அவரிடம்; தெரிவித்ததாக ஊடகச் செய்திகள் வந்தன. ஆனால், தமிழ்க் கட்சிகளை சந்தித்த கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் பதின்மூன்றாம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்தவும் ரணிலிடம் இந்தியப் பிரதமர் வலியுறுத்தியதாகத் தெரிவித்தார். நாடு திரும்பிய ரணில் சகல அரசியல் கட்சிகளிடமும் பதின்மூன்றாம் திருத்தம் தொடர்பான ஆலோசனைகளை இந்த மாதம் பதினைந்தாம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும் வேண்டினார். அதற்கிடையில் கடந்த 9ம் திகதி இது தொடர்பான உரை ஒன்றை நாடாளுமன்றத்தில் நிகழ்த்தியபோது நாட்டின் அபிவிருத்திக்கு பதின்மூன்றாம் திருத்த நடைமுறை அவசியமானது என்று பெரும் குண்டொன்றை தூக்கி வீசியதோடு இதற்குத் தேவையான ஆலோசனைகளை அரசியல் கட்சிகளிடம் கேட்டார். இவைகளை கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது, பதின்மூன்றாம் திருத்தம் வெட்டித் தள்ளி சீரழிக்கப்படப் போகிறது அல்லது இதற்குப் பதிலாக இன்னொன்று உப்புச் சப்பில்லாததாக உருவாகப் போகிறது என்பது வெளிச்சமாகத் தெரிகிறது. வழமைபோன்று தேசிய நல்லிணக்கம், அபிவிருத்திக்கான துரித நடவடிக்கைகள் என சர்வதேசத்தை வளைத்துப்போடும் சொல்லாட்சிகளை தமதுரையில் தாராளமாக பயன்படுத்தியுள்ளார். அதேசமயம், மாகாண சபைத் தேர்தலுக்கு சட்டம் தயாரிக்கப்படுவது, மாகாண சபைகள் செயற்படும்வரை ஆளுனர்களுக்கு ஆலோசனை வழங்க சபைகள் அமைக்கப்படுவது, மாகாணத் தேர்தல் வாக்களிப்பில் மாவட்ட விகிதாசார முறைமையை நடைமுறைப்படுத்துவது, மாகாண சபைத்தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்களை சேர்த்துக் கொள்வது என்பவை இவரது உத்தேச திட்டத்தில் உள்ளன என்பது தெரியவந்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, பதின்மூன்றாம் திருத்தம் நாட்டைப் பிளக்கும் என்ற அறிவிப்பை பௌத்த மகாநாயக்கர்கள் பகிரங்கப்படுத்தி பதின்மூன்றாம் திருத்த சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டுமென்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர். இதற்கு ஆதரவான குரல்கள் தெற்கிலிருந்து ஒலிக்க ஆரம்பித்துள்ளன. ரணில் எதனை எதிர்பார்த்து காய்களை நகர்த்தினாரோ அது அதுவாக இயங்க ஆரம்பித்துள்ளது. நாட்டின் அபிவிருத்திக்கு பதின்மூன்றாம் திருத்தம் அவசியமென ரணில் கூறியபோது சகல பிரச்சனைகளின் தீர்வுக்கும் இதனையே சர்வரோக நிவாரணியாக அவர் நினைத்ததுபோல கருத இடமளித்தது. ஆனால், சகல பிரச்சனைகளையும் ஒரேயடியாக தீர்த்துக்கட்ட பதின்மூன்றை ரணில் கையில் எடுத்தாரென்பது இப்போது பரகசியமாகியுள்ளது. சந்தர்ப்பத்தைப் பார்த்திருந்த சிங்கள பௌத்த மேலாண்மையை, பதின்மூன்றை ஆயுதமாக்கி எழுப்பியுள்ளார் ரணில். இன்னும் எத்தனை ஷகறுப்பு| மாதங்களை தமிழர் காணவேண்டும் தீர்வுக்காக! பனங்காட்டான் 13க்கு எதிராக சிங்கள பௌத்தத்தை அணிதிரட்டும் ரணிலின் உத்தி! – குறியீடு (kuriyeedu.com)
-
பாகிஸ்தான் நாட்டின் இடைக்கால பிரதமராக அன்வர் உல் ஹக் ககர் நியமனம் Posted on August 13, 2023 by தென்னவள் 10 0 பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது 100-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அரசுக்கு வந்த பரிசுப் பொருட்களை விற்று சொத்து சேர்த்ததாக இம்ரான்கான் மீது ‘தோஷகானா’ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக இம்ரான்கானின் எம்.பி. பதவி பறிபோனது. ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அதைத்தொடர்ந்து இம்ரான்கான் உடனடியாக கைது செய்யப்பட்டு பஞ்சாப் மாகாணத்தின் அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தான் பாராளுமன்றம் இரவோடு இரவாகக் கலைக்கப்பட்டது. பாராளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் இன்னும் 90 நாட்களில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் தற்காலிக பிரதமராக பலூசிஸ்தான் எம்.பி. அன்வர் உல் ஹக் ககர் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் பதவியில் இருந்து விலகும் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ராஜா ரைஸ் அகமது இணைந்து தற்காலிக பிரதமராக அன்வர் உல் ஹக் ககரை நியமித்துள்ளனர். அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படும்வரை அன்வர் தற்காலிக பிரதமராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக பிரதமர் நியமனத்திற்கு பாகிஸ்தான் அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டின் இடைக்கால பிரதமராக அன்வர் உல் ஹக் ககர் நியமனம் – குறியீடு (kuriyeedu.com)
-
வீரமுனையிலே இனப்படுகொலைக்குள்ளான அனைத்து உறவுகளுக்கும் ஆழ்ந்த அகவணக்கம். இலங்கைச் சோனகர்களது வாக்குகளுக்காக யாழ் குடா வெளியேற்றத்தை மனிதஉரிமை மீறல் எனக் கதறியழும் தமிழ் அரசியல்வாதிகள் யாரையும் வீரமுனைப்படுகொலை நினைவிடத்திலே காணமுடியவில்லை. தாமே சுத்தத் தமிழ்த் தேசியக் காப்பர்களென மார்தட்டும் கஜன்,விக்கியையா போன்றவர்களையும் காணவில்லையே. சோனகர்கள் முதலில் இவற்றிற்குப்பொறுப்ப கூற நிர்பந்திக்கப்பட வேண்டும். நீங்கள் தேடிய வீரமுனை இனப்படுகொலை என்று ஒரு தலைப்பில் விவரங்களை ஆவணமாக்கி வெளியிட வேண்டும். அப்போதாவது இந்தச் சோனகருக்குத் தாம் செய்தது புரிகிறதா எனப்பார்க்கலாம்.
-
குமுகாயம் சரியான திசையில் சிந்திக்காதவரை சட்டங்களால் வேலிபோட்டுவிட முடியாது. 1. தாம் சகோதரர்களென்ற மனப்பாங்கு அவர்களுக்குள் வராமை. 2. இதனால் உறவுமுறைகளிடையே தோன்றக்கூடிய பகைமைகளைக் கருத்திற் கொள்ளாமை. 3. பெற்றோரின் கண்மூடித்தனமான போக்கு. 4. உடற்கவர்ச்சி மீதான ஈர்ப்பு. 5. குமுகாயப் பார்வையோ அக்கறையோ இல்லாத நிலை. 6. எமக்கு வயது(18 தொடங்கிவிட்டால்)வந்துவிட்டது என்ற மனப்பாங்கு. 7. 18வந்தவுடன் எல்லாம் தெரியும். அதனால் முடிவெடுக்கும் உரிமை உள்ளது என்ற தற்துணிபாற்றல். 8. வேலை செய்கின்றோம் எம்மால் வாழ முடியாதா என எண்ணுதல் போன்ற பல்வேறு சுய ஊடாட்டங்களின் விளைவாக இது போன்ற பிறள்வுநிலை உறவுகள் தொடர்கின்றன. நான் 1980காலப்பகுதியில் இதுபோன்ற(ஒன்றுவிட்ட சகோதரியை மணம்புரிதல்) ஒரு விடயத்தை அறிந்தேன்.
-
வளர்நிலைக் குமுகாயம்... கல்தோன்றி மண்தோன்றா.... என்ற விளித்தலோடு பேசும் எமதினத்தினது இந்தப்போக்கு எங்கு கொண்டுபோய் நிறுத்தப்போகிறது. இதற்கு இன்று உறவுமுறைகளை மதிக்காத போக்கும் இதற்கு அடிப்படை. கொஞ்சம் வசதி வந்தவிட்டாலோ அல்லது படித்து முன்னேறிவிட்டாலோ நீ யார் என்னைக் கேள்விகேட்க என்ற மனநிலையும் பெருகிவிட்டது.இவைகூட ஆரோக்கியமற்ற நிலைதானே. இவையெல்லாம் சேர்ந்தே குமுகாயப் பிறள்வுகளை ஏற்படுத்துகின்றன. அண்மையில் தாயகத்திலே அதிர்ச்சியான விடயமொன்றை அறிந்தபோது என்ன என்றாகிவிட்டது. ஒன்றுவிட்ட அதாவது, கூடப்பிறந்த அண்ணின் மகன்தானே என்று கவனியாமல் விட்டதால் பெரும் அவமானமாகிவிட்டதாக அவன் தன் மகளை திருமணம் செய்துவிட்டானெ அன்பரொருவர் அழுதுவிட்டார். அழைத்துச் சென்று தாலியும் கட்டி குடும்பமாகிவிட்டார்கள். எங்கே போகிறது எமது இனம்?
-
சிங்களம் தீர்வை நோக்கி நெருங்கினாலும்(?) பெரும் தடைக்கற்களாக இருக்கப்போவது இவர்களே என்பதை தெட்டத்தெளிவாக உரைத்துள்ளார்கள். அதைவிட எங்கேயாம் ஐ.நாவில் புலிகளுக்கு ஆதரவான நியாயங்கள் பேசப்படுகிறது. அங்கே தமிழருக்கான நியாயமே தொடக்கூடப்படவில்லை. இதிலெப்படிப் புலிகளுக்கான நியாயம். தொடர்ந்தும் தமிழரது குருதியில் படகோட்டிக்கொண்டிருக்க முடியாதென்பதையும், 1948இற்கு முன்பிருந்த நிலைக்கு மீளாய்வு செய்தால் என்ன பெறுபேறு கிடைக்கும் என்பதையும் யோசிக்க வேண்டும். எப்போதாவது தீர்வு முயற்சிகள் வேகமடையும்போது உடனே புறப்பட்டுவிடுவார்கள். இது மறைந்த அஸ்ரப்பின் காலத்திலிருந்தே தொடர்கிறது. உங்களுக்கு ஒரு அலகு வேண்டும் என்று கேட்டதுபோல் ஏன் சிங்களத்தை நோக்கி அதிகாரத்தில் இருக்கும் அலி சாப்ரி போன்றோரால் கேட்க முடியவில்லை. அவளவு சிங்கள எச்சிலை விசுவாசமா? சாவுகளும் அழிவுகளும் தமிழருக்கு அதில் குளிர்காய்தல் என்ன ஈனத்தனம். இலங்கைச் சோனகர்கள் தெளிவாக யோசிக்க வேண்டும்.தமிழினம் இருக்கும்வரைதான் தண்ணியடிக்கும்போதான கொறிப்பதுபோலாவது (சைட்டிஸ் மாதிரியாவது) உங்களைச் சிங்களம் தேடும்.
-
இராவணன் சிங்கள இயக்கர் குலத்தை சேர்ந்தவர் - சரத் வீரசேகர
nochchi replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
அதைப்பற்றி எனக்கென்ன கவலை. நானென்றாவது தமிழர் பற்றி அக்கறைப்படவனா. எந்தச் சிங்களக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நான் அமைச்சர்தானே. பிறகேன் கவலை. -
மேற்கின்நிலையிலிருந்து எமது குமுகாயத்தை நோக்குதல் பொருத்தமாக இல்லை. அதற்காக அவர்கள் இந்த உலகுக்குள் இல்லையா என்று கேட்க வேண்டாம். காதலில் மனமொத்தால் உடலொவ்வாமை தாக்கம் செலுத்தாதென்பது எவளவுதூரம் பொய் என்பதற்கான பதில் உங்கள் கருத்திலேயே உள்ளது. எதனைச் சரியென்பது சில நாட்கள், சில வாரங்கள், சில ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு போதலா? இது மற்றுமொரு குமுகாயச் சுமையாக மாறாதா?
-
போகிற போக்கில் உங்கள் முன்றாவது நிலையை எமது மக்கள் எடுத்தாலும் ஆச்சரியப்படமுடியாது. ஆனால், கலியாணம் கட்ட முதல் இருந்த நிலை கட்டினபிறகு மாறினால் என்னவாம் செய்யிறது. பாலியல் திருப்தியின்மை என்பது எல்லா வயதில் உள்ளோரிடமும் ஏற்படுவதை ஆய்வுகள் சுட்டுகின்றன. அது ஒரு கூட்டுமுயற்சியென்பதை நான்சொல்லியா..... சம வயதுத் திருமணங்களில் எல்லாம் சரியாக இருப்பதுண்டா?
-
திரியில் பல கருத்துகள், தங்களின் கருத்துட்படக் குமுகாய அக்கறையோடு முன்வைக்கப்படுகின்றன. அவற்றைப் படித்தாலே நன்று. என்றாலும் எனது மனதிற்பட்டதை எழுதியுள்ளேன். குமுகாய ஆய்வுநிலை நோக்கிலும், முப்பது ஆண்டுகள் பெரும் இனஅழிப்புப் போரை எதிர்கொண்ட இனமென்ற வகையிலும், மிகவும் பலவீனமாக்கப்பட்டவர்கள் என்ற வகையிலுமாக எமது மக்கட் கூட்டத்தை நோக்கியே சிந்திக்க வேண்டியுள்ளது. தாய்நிலத்திலும் புலத்திலும் சரிவடைந்து செல்லும் பிறப்புவீதம், காதல் மற்றும் குடும்ப வாழ்வில் ஈடுபாடின்மையென்பன ஒரு நோய் போன்று எம்மினத்தை அரித்துவருகிறது. அப்படியானதொரு சூழலில் இதுபோன்ற குமுகாயப் பிறள்வுகள் சூழலை மேலும் பாதகமான நிலை நோக்கித் தள்ளிவிடும் அபாயத்தையும் நாம் கவனத்திற்கொள்ள வேண்டும். பிரபலங்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு இதுபோனால் இன்னொன்று எனக் கடந்துவிடுவர். ஆனால், சாதாரணர்களின் வாழ்வு அப்படியா? உங்கள் நம்பிக்கை நிலைக்கட்டும்.
-
குமுகாய நோக்கிலும், அழிவடைந்துவரும் இனமென்ற நோக்கிலும் பார்த்தால் சட்டம் விருப்பு வெறுப்பகளுக்கப்பால் இது ஒரு நல்ல விடயமாகக் கொள்ளமுடியாது. ஆனால், அதற்காகக் காட்டுமிராண்டித்தனமாகத் தண்டிக்கும் உரிமையையும் கையில் எடுத்தல் நியாயமற்றது. பெற்ற மகளின் மார்பையும் அந்தரங்க உறுப்பையும் சிதைக்கும் அல்லது அதன்மீது தாக்குதல் செய்யும் அளவிற்கு ஒரு தாயாகக் கொடூரமான மனநிலை எப்படி வந்தது. ஒரு தவறு நடந்துவிட்டால் தம்மால் கையாள முடியாதவிடத்து தாய்மாமனையோ, சிற்றப்பாவையோ அல்லது ஒரு உறவையோ அழைத்து உரையாடிப் பக்குவமாகக் கதைத்து மீட்டெடுத்த எமது குமுகாயம் இன்று பொறுமையிழந்து நிற்பதாவே தோன்றுகிறது. முன்பென்றால் கிராமங்களில் ஒருவரது நடமாட்டத்தைக் கண்டாலே விழிப்படைந்து வினாத்தொடுப்பதன் ஊடாகவே சிலவிடங்களை அறிவதும் அடுத்தவருக்குத் தெரியாது தடுத்துவிடுவதும் நடந்தது. இன்று இணைய உலகில் வாழும் குமுகாயம் தேவையானதைவிடத் தேவையற்ற விடயப்பரப்புகளில்(காதலை வேண்டாமென்று சொல்லவில்லை)கவனத்தைக் குவிப்பதாகவே உள்ளன. தந்தையின் நண்பராக இருந்துகொண்டு இந்த நபர் செய்தது ஏற்புடையதன்று. ஒருவேளை பெண்ணே விரும்பியிருந்தாலும் அவர் அதனை பக்குவமாகக் கையாண்டிருக்க வேண்டும். ஆனால், அவரே தூண்டுகோலாக இருந்திருப்பாராயின் குமுகாயச் சீரழிவின் வளர்முகமாகவே பார்க்க வேண்டும்.யாரும் தமது தவறென்று ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. பெற்றோரிலும் தவறிருக்கிறது. எப்படி வீட்டிலிருக்கும் பிள்ளையினுடைய நடவடிக்கைகளை அவதானிக்காதிருந்தனர். விடயம் கைமீறியபின்னர் கூட அதனைக் காட்டுமிராண்டித்தனமாக அணுகியுள்ளர். பிரபல்யங்களின் வாழ்வும் சாதாரண மக்களின் வாழ்வும் ஒப்பீட்டிற்குரியதாகத் தெரியவில்லை. பாலியலுறவுக்கும் வயதுக்கும் தொடர்பில்லை அல்லது வயதைப்பார்த்தல்ல மனதைப் பார்த்தே காதல் வயப்படுதல் என்ற எடுகோள் மில்லியனில் ஒன்றுக்குப் பொருந்தலாம். பாலியல் திருப்தியின்மை கரணியமாகவும் பல விவாகரத்துகள் நடைபெறுவதாக ஊர்காகம் சொல்கிறது. நன்றி
-
வெள்ளைக்கொடியோடு சென்று சரணடைந்தோர் மாவீரரா இல்லை அமரரா?
nochchi replied to நன்னிச் சோழன்'s topic in எங்கள் மண்
சிறப்பு, யஸ்ரினவர்களுக்கு நன்றி. -
தியாகி திலீபன் அவர்களின் தியாகத்தை யேர்மனிய வாழ் ஈழத்தமிழர்கள் மறந்துள்ளார்களா? -ஈழத்துச் சுந்தர். – குறியீடு (kuriyeedu.com)
-
திலீபனவர்கள் உண்ணாவிரதமிருந்து வீரச்சாவடைந்த நாள் செப்டெம்பர் 26. 1987 செப்டெம்பர் 15ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்து 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு லெப்டினன் கேணலாகஇ யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் வீரச்சாவடைந்தார். இந்தக்காலப் பகுதியில் இது போன்ற களியாட்டங்கள் ஊடாக இளைய தலைமுறையை மடைமாற்றம் செய்வதற்கான முனைப்புகளா என்பதே பலரது ஆதங்கம். நிகழ்ச்சி நடாத்துபவர்களது வாய்மொழியிலான கூற்றாகவே உள்ளதாகத் தகவல். அவர்கள் இதுவரை பிற்போடுவதாகத் தெளிவான அறிவித்தலைச் செய்யவில்லை. தியாகி திலீபன் அவர்களின் தியாகத்தை யேர்மனிய வாழ் ஈழத்தமிழர்கள் மறந்துள்ளார்களா? -ஈழத்துச் சுந்தர். Posted on August 6, 2023 by சமர்வீரன் 224 0 தியாகி திலீபன் அவர்களின் தியாகத்தை யேர்மனிய வாழ் ஈழத்தமிழர்கள் மறந்துள்ளார்களா? இந்திய மற்றும் இலங்கை அரச இயந்திர நிகழ்ச்சி நிரலுக்குள் ஏ .ஆர். ரஹ்மான் சிக்கியுள்ளாரா ? யேர்மனிய நாட்டில் எதிர் வரும் 23.09.2023 அன்று, ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் அகிம்சைய வழியில் ஆகுதியாகிய பெரும் தியாகி லெப்டினன்ட் கேணல். திலீபன் அவர்களின் 36 வது ஆண்டு நினைவெழுச்சியின் 9ஆம் நாளிலேஇந்திய பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் அவர்களின் இசை நிகழ்ச்சி விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளதை காணும் போது கவலையழிக்கிறது. ஈழத்தமிழர்கள் கண்ணீரில்க் கலக்கும் காலத்தில் அவர்களின் முதுகில் வென்நீரை ஊற்றுவது போல்லுள்ளது எங்கள் வேதனை.உலகத்தமிழினமே! உணர்வெழுச்சி கொண்டு உண்ணா நோன்பு அனுஸ்டிக்கும் காலத்தில் இந்த இசைக் கூத்தும் குத்தாட்டமும் எதற்கு எமக்கு? புலம்பெயர்ந்து யேர்மனியில் வாழ்ந்துவரும் ஈழத் தமிழர்களே! தமிழக தமிழர்களே!! தியாகி திலீபனை, அவரது மெய் கூச்செறியும் தியாகத்தை மறந்து போனீர்களா?தமிழினம் சுதந்திரம் அடையவும், தமிழ்மொழி காக்கவும்,தன்னை அணுவணுவாக 12 நாட்கள் உருக்கினாரே! அந்த நினைவுகள் உங்கள் நினைவினில் இல்லையா? ஏற்கனவே வீரச்சாவடைந்த 650 மாவீரர்களோடு நானும் வானத்திலிருந்து ஈழம் மலர்வதைப் பார்ப்பேன் என ஆசை கொண்டுதானே இன்னுயிரை ஈகம் செய்தார். அவர் உங்கள் பிள்ளை இல்லையா? அவர் ஈகம் பெரிதில்லையா? உங்களுக்கு இன மானம் இல்லையா? அல்லது இனம் பெரிதில்லையா? திலீபன் நினைவு நிகழ்வுகளை மறுத்து இசையமைத்து இலாபம் தேடவேண்டுமா? இப்படி ஒரு வியாபாரம் செய்து ஈழத்தமிழரின் பணத்தைப் பெற்று நீங்கள் வாழவேண்டுமா? இதை எம் இனம் பார்த்து மகிழுமா? யேர்மனிய வாழ் ஈழத்தமிழர்களே ஆழ்மனதிலிருந்து சிந்தியுங்கள்.எதிரியும் ஏளனம் செய்வான் இதைபார்த்து. போராடிய சமூகமாக நாங்கள் இன்னும் அகதி முகாம்களிலே இருந்தபடியே, பார்க்க வேண்டுமா இந்த நாகரீகமற்ற கூத்தை? இதயம் திறந்திருக்கட்டும் இமைப்பொழுதில் எம்முறவுகளே! இவ்வுலகில் அகிம்சையின் அடையாளம் காந்தி அடிகளே என்று சொன்ன, பாரத தேசம் ஈழத்தமிழ் இனத்தின் அகிம்சையின் அடையாளமாகிய தியாகி திலீபன் அவர்களின் தியாகத்தை வேடிக்கை பார்த்தது மட்டுமல்ல, அவரது ஈகத்தின் பின்னே பாரதம் தலைகுனிந்ததும் வரலாறு. அந்த தியாக வரலாற்றை யாரும் அழிக்க முடியாது. அது வானுயர எழுதப்பட்ட வரலாறு. இன்றுவரை உலகம் வியந்து நிற்கும் ஒரு வீர வரலாறு. இன்று வரை ஈழத்துயரில் களத்தினில் பங்கு கொள்ளும் எம் உலகத் தமிழ் புலம் பெயர் உறவுகளே! யேர்மன் வாழ் ஈழத்தமிழர்களே!! உங்கள் இதயத்தை இந்தக் காலத்தில் அந்த உன்னதனுக்காக, திறந்து வையுங்கள். நாம் ஆழ வேரறுந்து விழுந்துவிடக் கூடாது. ஏனெனில் உங்கள் நிழலில்த்தான் இன்று எம் தாயகம் மூச்சை இழுத்து விடுகிறது. இந்த இசைக் களியாட்டத்தை ஒழுங்கு படுத்தும் வியாபார விசமிகளுக்கு உங்கள் விடுதலைப்பற்றை, தன்மான உணர்வை மீண்டும் வெளிப்படுத்துங்கள். இந்த விசமிகளை அறச்சீற்றத்தோடு விரட்டியடியுங்கள். நீங்கள் புலம்பெயர்ந்த சமூகமானாலும் தமிழீழத் தனியரசின் பிரதிநிகளாய் இழிவானோரை திருத்தி வழிநடத்துங்கள். உண்ணாவிரதக் காலத்தை உணர்வோடும், தூய்மையோடும் தாங்கிநின்று, மாவீரர்களின் பெருந் துணையோடு உறுதிகொள்ளுங்கள். இது உங்கள் காலத்தின் கடமை. கட்டாயம் செய்வீர்களென நம்பிக்கை கொள்கிறோம். தாய்நாட்டின் சுகமிழந்து, இயல்பு வாழ்வின்றி, இந்தோனேசிய அகதி முகாம்களில் இன்னும் அல்லலுறும் நாங்கள், ஈழத்தமிழர் என்ற உணர்வை மட்டும் குலையாது வைத்துள்ளோம். நீங்கள் இருக்கிறீர்கள் என்ற ஒற்றை நம்பிக்கையில். நன்றி, நிறைந்த வலியோடு, ஈழத்துச் சுந்தர், தமிழீழ அகதிகள் சார்பாக, இந்தோனேசியா. 04.08.2023.