Everything posted by nochchi
-
பூபதித்தாயே வணங்குகின்றோம்!
பூபதித்தாயே வணங்குகின்றோம்! வாழ்வுத் தேடலில் சுழன்றிடும் தாய்மையின் வரம்பினை உடைத்து வரலாற்றுத் தாயாகி தேசத் துயரினை நெஞ்சினில் ஏந்தியே பாசத் தாயாகிப் பசியேற்று நோன்பிருந்து தமிழீழத்து வெளியெங்கும் நிறைந்தாயே தாயே! நீதிக்காய் இன்னும் கண்திறக்கவில்லை என்று நீதியே சாவுக்குள் நிலையிழந்து கிடந்தாலும் நீதிக்காய் நீண்ட காத்திருப்பு நிச்சயமாய் ஒருநாள் பெருந்தீயாய் எழுகின்ற வேளைவரும் காலமதில் மாமாங்க முன்றலிலே ஒளிதோன்றும் தாயே! நின் பசிதீரும் அப்போது பகலாகும் தாயகமே நிழலரசை இழந்த இனம் நிலையரைசைக் கையேற்கும் எம் இளைய தலைமுறையோ தாயகனின் சிந்தனையை புதிய திசைவழியே பதியமிடும் காலமதில் நின் முகமாக நிலம் பூக்கும்! நிலம் பூக்கும் நீர் நிலைகள் வழிந்தோடும் பாவலரும் ஆடலரும் கூடியுந்தன் புகழுரைப்பர் தமிழீழப் பெண்களது தனித்துவத்தின் குறியீடாய் தமிழ் உலகு உள்ளவரை வாழும் புகழ்படைத்த எழுச்சியின் வடிவான பூபதித்தாயே வணங்குகின்றோம்! அன்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
தையல்கடை.
சீட்டுக்காசு, கடைதிறத்தல், நிர்வகித்தல், ஊழியர்களின் செயற்பாடு, மேலாடையை எப்படி அளவெடுக்கும் தொழில் நுட்பம், ஊடல் கூடல் என ஒரு விறுவிறுப்பான திரைப்படத்தைப் பார்ப்பதுபோல் நகர்த்தியமை சிறப்பு. சுவியவர்களே பாராட்டுகள். யாழினது எழுதாற்றல் கொண்டோரில்,நீங்கள் மக்களது வாழ்வியலை படைப்பதில் தனித்தன்மையுடையவர். நன்றி
-
காக்கா நரிக் கதை #I ain’t playin - ஒரு நிமிடக்கதை
படைப்புக்குப் பாராட்டுகள் ! நரியார் எதையுமே இழக்கவில்லை. ஏனென்றால் அவரிடம் இழக்க ஏதுமில்லை. ஆனால், தன்மானத்தை இரந்தல்லவா ஒரு வடையைப் பெற்றிருக்கிறார். ஒரு வடையைவைத்தே பல வித்தைகளைக் காட்டக்கூடும். பார்வையாலேயே வீழ்த்தினனான் என்று ஒரு புரளியை எடுத்துவிட்டு விழுந்து விம்பத்தை தூக்கிநிறுத்தவும் கூடும். ஏனென்றால் அவளவு தந்திரமானவரல்லவா? மீண்டும் காகங்களுக்கு ஆப்பா?
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
தமிழ்சிறி அவர்களே சிறப்பு. பாராட்டுகள்!
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
ரஞ்சித் அவர்களே, அறிந்தவை அறியாதவை எனச் சிறப்பு. இளையதலைமுறை மட்டுமல்ல அனைவரும் வாசிப்பிற்குட்படுத்த வேண்டிய பல்வேறு வரலாற்றுத் தரவுகளின் பெட்டகமாக உள்ளது. தங்களின் சிறந்ததொரு செயற்பாட்டினை மிகப்பொருத்தமானதும் அவசியமானதுமானதொரு காலத்திற் செய்யும் தங்களை நன்றியுடன் பற்றிக்கொள்கின்றேன்.
-
நீங்களும் ஆகலாம் நொஸ்டிரடாமஸ் 2023
ஈழத் தமிழர்கள் அரசியல் தீர்வு என்ற போர்வையில் 2023இலும் மீண்டும் ஏமாற்றப்படுவார்கள். ரணில அரசுத்தலைவராகச் சிறுசிறு சலசலப்புகளோடு தொடர்வார். தமிழ்த் தலைமைகள் நம்பினோம் ஏமாற்றிவிட்டார்கள் என்று கைவிரிப்பர். வட-கிழக்கிலும், தெற்கிலும் புதிய அரசியற் கூட்டுகள் உருவாகும். இலங்கையில் பொருளாதாரம் மேலும் மோசமடைவதோடு நாடு மேலும் பலவீனமாகும். உலகெங்கிலும் பொருண்மிய மந்த நிலை தொடரும். ருஸ்ய – உக்ரேன் போர் தொடரும். கிரிமியா உக்ரேனிடம் வீழுமானால் போர் முடிவுக்குவரும் தொடக்கப் புள்ளியாகும். இந்தியாவில் இந்துத்வாவும் தமிழகத்தில் திராவிடமும் கோலோச்சும். பலஸ்தீனர்கள் மீது கடும் அழுத்தங்களை இஸ்ரேல் மேற்கொள்ளும். ருஸ்யா - சீனா - இந்தியா - துருக்கி ஆகியன தமது பொருண்மிய நலன்நோக்கி ஒன்றிணைந்து பயணிப்பர். இது பலமடைந்தால், மேற்கின் பொருண்மியச் சமநிலையுட்படப் பங்குச் சந்தைகளில் தாக்கமேற்படும் உலகிற் சிறுபான்மை இனங்கள் தொடர்ந்து நசுக்கப்படும். யேர்மனியில் வலதுசாரிகளின் பலம் அதிகரிக்கும்.ஊதிய உயர்வு கிடைக்காது.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மனிதம் தோற்கடிக்கப்பட்டபோது மனிதத்தை நேசித்த மகத்தானவர்களே நினைவுகளில் நிறைந்த மாவீர்களே வீரவணக்கம்!
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தமிழ்சிறியவர்களே இணைப்புக்குநன்றி. மூன்று லட்சம் உக்ரெனியருக்காக இன்று அழுகிறது உலகு அது சரியாதும் கூட. ஆனால் ஒரே இரவில் 5இலட்சம் மக்களது இடப்பெயர்வுகுறித்து எங்காவது மேற்குலக ஊடகங்கள் பேசியுள்ளனவா?
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
ரஞ்சித் அவர்களே காலத்தேவைகருதியதும், நாம் அறியாத பகுதிகளையும், உரையாடல்களையும் உள்ளடக்கியதாக உள்ளன. இது எமது இளைய தலைமுறை படித்தறிய வேண்டிய விடயமுமாகும். உங்கள் முயற்சிக்கும் உழைப்புக்கும் பாராட்டுகள். தமிழ்த்தலைவர்களில் பெரும்பகுதியானோர் இனத்துக்கான பேரம்பேசல்களில் ஈடுபடுவதில்லைத்தானே. அவர்கள் தமக்கான பெட்டிகளுக்கான பேரம்பேசல்களில் இருப்பதால் இனமாவது நிலமாவது....... தேவையேற்பட்டால் அவர்கள் பெயரைக்கூட மாற்றிக்கொண்டு வாழ்ந்துவிடுவர். அப்படியான சுயநலமிகளிட நீங்கள் எதிர்பார்க்கலாமா?
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
நல்லவிடயம். தொடருங்கள். காலத்தேவைகருதியதாக அமையும் . நன்றி
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கருத்துக்கள நிர்வாகத்தினருக்கு வணக்கம், "கோட்டாவின் நிழல் அரசாங்கமே தற்போதும் நாட்டை ஆட்சி செய்கிறது : எதிர்க்கட்சி தலைவர் சஜித் " என்ற புதினத்தை இணைத்தபோது இருமுறை பதிந்துவிட்டது. எனவே ஒன்றை நீக்கி உதவவும். நன்றி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
விசுகு அவர்களே, நலமும் வளமும் எழிலும் துணையாக இனிதாக இன்னும் பல்லாண்டு வாழ்கவென்று வாழ்த்துகிறேன்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கிருபன். குமாரசாமி ஐயா. மற்றும் புத்தன் ஆகியோருக்கு நலம்கூடி நல்வளம் செழிக்க..
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
இணைப்புக்கு நன்றி👌
-
கருத்து படங்கள்
உண்மை. சிறப்பான வெளிப்பாடு.பாராட்டுகள்! முதலிலே பார்த்திருந்தால் நேரிலேயே பாராட்டியிருக்கலாம். இந்த சிந்தனையும் சிறப்பாக உள்ளது. ஒரு கவிதையோ, கட்டுரையோ மனதில் ஏற்படுத்தும் தாக்கத்தைவிட ஓவியம் மொழிகளைக் கடந்து தாக்கத்தைத் தரவல்லது.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நிர்வாகத்தினருக்கு வணக்கம், என்னால் 'விருப்பு' சுட்டியையையோ அல்லது வேறுவகைப் பிரதிபலிப்பகளையோ சொடுக்க முடியவில்லை. ஏனென்று அறியவிரும்புகிறேன். நன்றி
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
முதலில் கதிகலங்கவைத்த செய்தியினூடாக யாழ்களத்தின் இவ்வாண்டுக்கான சிறந்த பதிவாளராகிவிட்ட தமிழ்சிறியவர்களுக்குப் பாராட்டு. ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடக ஜம்பவான்களெனத் தமக்குத் தாமே நாமம் சூட்டியவர்களின் வண்டவாளமும் வாய்வீச்சும் தண்டவாளத்தில் ஏறித் தடாலடியாகக் கடலுள் வீழ்ந்த நிலை ஒன்று. அதேவேளை ஊடகங்கள் தனது பணியைத் தனது மக்களது நலன்கருதி செயற்பட்டால் எவளவு மாற்றங்களை கொண்டுவர முடியும் என்பது இரண்டு. யாழ்க்களமானது அனைத்துலகிலும் எப்படி அவதானிக்கப்படுகிறது என்பதற்கான அளவுகோலாகவும் அமைந்துள்ளது மூன்று. இதனை நாம் பத்தோடு பதினொன்றாகக் கடந்துபோக முடியாதென்பதையும் மனம்கொள்ளல் நன்று. கருத்துகளிலே பகிரும் விடயங்கள் எப்போதும் ஒரேமாதிரி இருக்கவேண்டும் என்றில்லையானபோதும், இனமாக ஒரு பொதுமைப்பண்பியலைக் கட்டியமைக்க வேண்டிய அவசியத்தையும் இது உணர்த்துவதாவே தோன்றுகிறது. எனவே இனநலன் சார்ந்து பதியப்படும் பதிவுகள் உற்றுநோக்கி உறவுகளை வளர்த்தெடுக்கும் புள்ளிகளாக அமைய வேண்டுமென்பதே எனது பார்வையாகும். மொழியால் ஒன்றித்து, மதங்களோடு ஒத்திசைவாக அணுகி எமது அவலத்தைக் களைந்து தமிழீழத்தை மீட்டெடுகச் சிந்திக்கும் பொறுப்புணர்வோடு, யாழ் களத்தின் நோக்கத்தை மெய்நிலையாக்கிட இந்தச் செய்தித்திரியும் சுட்டுகிறது. அன்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
ஏப்பிரல் 1 என்பதற்காக இப்படிப் பீதியைக்கிளப்பி விடுகிறீங்களே ஐயா!
-
முள்ளிவாய்க்காலும் உக்கிரேனும்... சமன்பாடும் ஒப்பீடும்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விருப்பையும் நன்றியையும் வழங்கி உற்சாகமூட்டும் கள உறவுகள் அனைவருக்கும் நன்றி.
-
முள்ளிவாய்க்காலும் உக்கிரேனும்... சமன்பாடும் ஒப்பீடும்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நாம் நாமாக இருப்பதே எமக்கு நன்மை. அதேவேளை மனித உயிர்களின் அழிவினை யார் ஏற்படுத்தினாலும் கண்டித்தல் அவசியம். மேற்குலகின் நகர்வுகளனைத்தும் தலைமைப்பாத்திரம் மாறிவிடுமோ என்ற ஐயத்தின் வெளிபாடே. யூகோசிலாவியாவை மேற்குத் துண்டாடியதபோல்(அதற்கான கரணியங்களும் இருந்தன) உக்கிரேன் துண்டாடப்படுமானால் மேற்கின் பாத்திரம் ஆட்டம்காணலாம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ஒருவேளை நாங்களும் மதவாதக் கண்ணாடியூடாக நோக்கியதன் விளைவாகவும் இருக்கலாம்.
-
முள்ளிவாய்க்காலும் உக்கிரேனும்... சமன்பாடும் ஒப்பீடும்
படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. படித்தமைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி.இன்றைய சூழலை கையாளும் திறனற்ற தலைமைகளால் ஒன்றும் செய்யமுடியாது. மக்கள் போராடினால் மட்டுமே மாற்றம்வரும்.
-
முள்ளிவாய்க்காலும் உக்கிரேனும்... சமன்பாடும் ஒப்பீடும்
முள்ளிவாய்க்காலும் உக்கிரேனும்... சமன்பாடும் ஒப்பீடும் ------------------------- முள்ளிவாய்க்காலும் உக்கிரேனும் பாடுகள் ஒன்றானபோதும் கோடுகள் வெவ்வேறானது! முள்ளிவாய்க்காலிலே கொள்ளியிட அனைத்துலகும் ஒன்றாய் நின்றது நன்றாய் அள்ளியும் கொடுத்தது! உக்கிரேனென்றதும் உலகம் மூன்றாய் நான்காய் முகம் காட்டி நடக்கிறது! எல்லா உயிர்களும் ஒன்றெனச் சொல்கிறோம் பதின்மூன்று ஆண்டுகள் முன் இவர்கள் எங்கே போயினர் பனியாய் உறைந்து போயா கிடந்தனர்! மேற்கின் தெருவெங்கும் கெஞ்சியும் அழுதும் யுத்தத்தை நிறுத்தக் கேட்டோம் நாங்கள் அப்பாவி மக்களின் அழிவைத் தடுக்க அனைத்துலகின் படிகளில் நின்றோம் ஆனாலும் நடந்தது என்ன வார்த்தைகளாலே கூறிட முடியுமா(?) கொலைக்கருவிகள் கொடுத்தனர் பலர் கொலைக்கான அறிவும் கொடுத்தனர் கொலைக்கான வேவும் சொன்னார்கள் கிட்டநின்று திட்டங்கள் தீட்டீயே கொத்துக் கொத்தாக் கொன்றிடவென்றே மேற்கின் கூலிகள் வழி காட்டின எல்லாம் எம்மினக் கொலைக்காகவே! பாதுகாப்புச் சபையும் ஐநா மன்றும் ஐரோப்பிய ஒன்றியமும் நேட்டோ கூட்டணியும் ஜீ ஏழு நாடுகள் குழுவும் உக்கிரேனென்றதும் உடனே கூடுது ருஸ்யாவைப் பார்த்துக் கடுமையாய் சாடியே கண்டனம் செய்தே தடைகளை போட்டன! மனித உயிர்கள் ஒன்றெனும் அதனை மதித்து நடத்தல் அரசுகளின் கடனென்றும் அடிக்கடி கூறிடும் ஐநாவே பதின்மூன்றாண்டின் முன் எங்கேபோனது உன் சமன்பாடு! முள்ளிவாய்க்காலில் உன் முகம் இழந்து போனாயே! உக்கிரேன் மக்களின் இழப்புச் சரியன்று எல்லாவுயிர்களும் எமக்குப் பெரிதே என்ற உணர்விலே வாழும் தமிழனோ பல்லுயிரோம்பிடும் பண்பினைக் கொண்டவன் பல்லாண்டுகாலமாய் அழிவினைக் கண்டவன் இன்றேனும் எங்களின் நிலைதனைப் பாரீர் காலம் கடந்து கண்ணீரும் காய்ந்தே போனது இனியேனும் உங்கள் சமன்பாடு சரியானால் எங்கள் இனத்தின் அழிவும் ஓயலாம் எங்கே ஒருமுறை சிந்திப்பீரா எம்மின அவலத்தை ஏற்றிடுவீரா? அன்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
பார்வை ஒன்றே போதுமே.......!
சுவியவர்களின் கதை சிறப்பாக நகர்ந்து நடந்து செல்கிறது. காத்திருக்வைக்காது தொடர்ந்து எழுதியமை மேலும் சிறப்பு. பாராட்டும் வாழ்த்தும் உரித்தாகுக.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ்சிறி அவர்களே! நலமேகி நகை சூழ இன்னும் பல்லாண்டு இனிதாக வாழிய வாழிய வாழியவே!
-
லெப்.கேணல் பொன்னம்மான், மேஜர் கேடில்ஸ் உட்பட 10 போராளிகளின் 30 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.
வெற்றுவரச்சென்றவரே சென்றதிசை மீளவில்லை சென்றுவிட்டீர்! நினைவுகளாய் வாழ்ந்து எம் நிலம் மீட்க உறுதிதரும் வீரர்களே வீரவணக்கம்!