-
Posts
5737 -
Joined
-
Last visited
-
Days Won
7
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by nochchi
-
வளர்ச்சி மற்றும் நுகர்வுத்தேவைகளுக்கான திட்டங்களைச் செயற்படுத்தும் முன்பாக முதலில் அந்தப் பிரதேசத்தின் வாழ்வியல், இயற்கைவளம், சுற்றுச்சூழல், வாழ்வாதார நிலைமைகள், உடல்நலன் சார்ந்த நன்மை தீமைகளை ஆய்வுக்குட்படுத்துவதும், அங்கே வாழ்கின்ற மக்களது கருத்துகளை அறிந்து திட்டமிடுதலுமே மக்களுக்கான அரசுகளின் செயற்பாடாக இருக்கும். இன்று பெரும்பாலான அரசுகள் மக்களுக்கான அரசுகளாக இல்லை. அவை, முதலாளிகளின் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் முகவர்களாகவே உள்ளன. அவர்கள் மக்களுக்கான சேவையாளர்களாக மாறமாட்டார்கள். அதனால் இந்த நிலைமைகள் தொடரவே செய்யும். அரசியல்வாதிகளும் அடுத்த தேர்தல் வரும்வரை வரப்போவதுமில்லை, அவர்களுக்கு மக்களின் குரல்கள் கேட்கப்போவதுமில்லை. நன்றி
-
பேசாமல் வட-கிழக்கை இந்தியாவும், தெற்கை சீனாவும் தத்தெடுத்துவிட்டால் இப்படிப் பகுதி பகுதியாகச் சுரண்டத்தேவையில்லையல்லவா?
-
தமிழர்தாயகத்திலே, குறிப்பாக யாழ்க்குடா நாட்டிலே பௌத்தமும் இந்துதீவிரவாதமும் கூட்டு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாகவே தோன்றுகிறது.ஏற்கனவே கிழக்கின்நிலை எதிரிகளுக்குச் சாதகமாக மாற்றப்பட்டுவிட்டது. இதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகளின் கணிசமான பங்களிப்பும் ஒத்துழைப்பும் துணை செய்துவருகின்றன. தமிழர் தாயகத்தில் மத முரண்கள் தலைகாட்டியது இல்லை. சாதியாகவும் மதமாகவும் நிற்காது ஒரு இனமாக, ஒரு தேசியமாக நின்றதன் விளைவாக ஒரு நடைமுறைஅரசை எவரது தயவுமின்றித் தமது சொந்தப்பலத்தில் மிகக் குறுகியகாலத்தில் ஈழத்தமிழரால் அடைய முடிந்தததை சிறிலங்காவைவிட, இந்தியாவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தமிழினம் வீழ்ச்சியில் இருந்து எழுந்துவிடாதிருக்க இந்தச் சக்திகளுக்குப் பிரதேசம்,சாதி,மதம் போன்ற கொலைவாட்களை கூர்மைப்படுத்தவேண்டிய தேவையுள்ளது. தமிழினம் விழிப்போடும், தெளிவான சிந்தனையோடும் கையாளவேண்டிய காலமாகும்.
-
இலங்கையிலேயே சீனாவின் அடுத்த இராணுவதளம் - சர்வதேச அறிக்கை பரபரப்பு தகவல்
nochchi replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
இந்தியா சிதறுவதால் ஈழம் விடியுமென்ற உருவகிப்பு முன்பும் பல தமிழ் அரசியல் ஆய்வாளர்களது உரையாடல் வெளிக்குள் பேசுபொருளாக இருந்த காலம் இருந்தது. அக்காலத்தில் ஜம்மு-காஸ்மீர், மணிப்பூர்,நாகலாந்து மற்றும் பஞ்சாப்(காலிஸ்தான்) போன்ற மாநிலங்களில் விடுதலைப்போராட்டம் தீவிரமாக இருந்தகாலமாகும். இன்று அந்தநிலை இல்லை. அப்படியொருநிலை தோன்றுமாயின் எந்தவிலை கொடுத்தாவது, அதாவது எவளவு மக்களைக் கொன்றாவது, தமிழீழத்தில் நடாத்தியதுபோன்று செய்தாவது இந்தியா தனது ஒருமைப்பாட்டைத் தக்கவைக்கும். இந்தியா அப்படியொரு இனஅழிப்பில் ஈடுபட்டாலும் உலகநாடுகள் ஒன்றும் தலையிடப்போவதுமில்லை. அதற்கு அண்மைய ஜம்மு-காஸ்மீர் மற்றும் மணிப்பூரே சாட்சி. எமக்கான விடுதலையை வென்றெடுக்கத் திடமான அரசியல் தலைமையும், அர்பணிப்புமிக்க செயற் திட்டங்களும், உழைப்புமே தேவை. காகம் இருக்குப் பழம்பழம் விழுந்த கதை தமிழீழ விடுதலைக்குப் பொருந்தாது. எமக்கான விடியல் எமது கைளில், அதாவது தாயகம்-புலம்-தமிழகம் என 75வீதம் நகர்த்தப்பட்டால் 25வீதம் அனைத்துலக மற்றும் புவிசார் அரசியலைக் கையாள்வதன் ஊடாகச் சாத்தியப்படுத்த முடியும். ஆனால், 2009இன்பின் நாம் என்ன செய்துகொண்டிருக்கின்றோம். எல்லாத் தரப்புகளும் சேற்றுவாழிகளோடு திரிகின்றநிலையைக் காண்கின்றோம். இந்த இடுக்குகளின் ஊடாக மாற்றுச் சக்திகள் தமிழரிடையே வேகமாக ஊடுருவித் தமிழினத்தின் சிந்தனைப்போக்கைச் சிதைத்துவருகின்றன என்பதைக் கவனிக்கத்தவறுகின்றோம். சிலதரப்புகள் இன்னும் ஒருபடிமேற்சென்று தலைவர் வருவார் என்றும், 13தொடக்கப்புள்ளியென்றும், 13பிளஸ் என்றும் கதையாடல்களோடு திரிகின்றன. தேசியத் தலைவரின் கூற்றான ''விழிப்புதான் விடுதலைக்கான முதல்படி,, என்பதைத் தமிழினம் உற்றுநோக்காதவரை விடிவு கானல்நீரே. -
மாதத்தின் முதலாவது அமாவாசை ஆடி அமாவாசை இல்லை : சர்வதேச இந்துமத பீடம் !
nochchi replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
இங்கும் அதேதான். ஆனால், எனக்கு மரக்கறியும் பிடிக்கும். ஊரிலையே சித்திரை தொடங்கிற விரதச் சாப்பாடு புரட்டாதிவரை நீளும்.அதோட வெள்ளி-செவ்வாயும் பிறகென்ன.... புலத்திலை தனிய இருக்கேக்கை வெள்ளிமட்டும். பிறகு துணைவியார் வர செவ்வாயும் இணைந்துவிட்டது. -
மாதத்தின் முதலாவது அமாவாசை ஆடி அமாவாசை இல்லை : சர்வதேச இந்துமத பீடம் !
nochchi replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
அரசியல், நாடுகள், மதங்கள், மனிதர்களின் குழப்பம். இயற்கையே குழம்பியநிலை. நேற்று காலையிலிருந்து ஒரு கைபேசி அமவாசை தொடர்பாக இலங்கை-நோர்வே-இலண்டன் என்று அலறியபடி இருந்தது. நானே இன்றுதான் என்று நினைத்திருந்தேன். இணைப்புக்கு நன்றி -
Kosovo Parliament Brawl: நாடாளுமன்றத்தில் அடித்துக்கொண்ட MP-க்கள்; எதனால்?
nochchi replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
இதெல்லாம் அரசியலிலை இல்லாமலா? -
தியாக தீபம் திலீபனின் நினைவை கொச்சைப்படுத்தும் தீய சக்திகளின் சதிகளை முறியடிப்போம் . Posted on July 14, 2023 by சமர்வீரன் 503 0 தமிழீழத் தேசிய நினைவெழுச்சி நாட்களை மடைமாற்றி, நீர்த்துப்போகச் செய்யும் நிகழ்வுகளில் தென்னிந்திய திரை நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் அண்மைக்காலமாக, தமிழ் இளையோர்களை இலக்கு வைத்து அவர்களின் தாயகம் நோக்கிய பயணத்தின் சிந்தனைகளை சிதறடிக்க இந்நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இதன் நீட்சியாக ஒரு படி மேலே சென்று , தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் காலத்தில் ,(23/09/2023) ஜேர்மனியில், திரு AR ரகுமான் அவர்களின் இசைநிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. எனவே இவை தொடர்பான விழிப்புணர்வை எமது உறவுகள் மத்தியில் ஏற்படுத்துவது அவசியமாகிறது யாழ். மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் தியாகத்தை மூடி மறைக்க முயலும் சக்திகளின் சதிமுயற்சிக்கு துணைநின்று ,தமிழ்த் தேசிய நீக்க அரசியலை முன்னெடுக்கும் சூழ்ச்சிகளை தெளிவாக இனங்கண்டு,முறியடித்து ,மாவீரர்களின் இலட்சியமான தமிழீழத் நோக்கிய விடுதலைப் பணிகளை முன்னெடுக்கும் கடமையுடன் அனைவரும் இணைந்து பயணிப்போம் . தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்கள் இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து யாழ். நல்லூர் முன்றலில் 15.09.1987 இருந்து 26.09.1987 வரை பன்னிரண்டு நாட்கள் நீராகாரமும் அருந்தாமல் (அகிம்சை வழியில்) உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்ந்து வீரச்சாவைத் தழுவிக்கொண்டர் எமது தேசிய நினைவெழுச்சிக் காலங்களின் களியாட்ட நிகழ்வுகளை தவிர்த்து, எமக்காக தமையீந்தவரை நினைவேந்திடுவோம்.இவற்றை புறந்தள்ள யார் நினைத்தாலும் அவர்களை மாவீரர் ஈகங்கள் மன்னிக்கமாட்டார்கள் என்பதை நினைவிற்கொள்ளுங்கள். தியாக தீபம் திலீபனின் நினைவை கொச்சைப்படுத்தும் தீய சக்திகளின் சதிகளை முறியடிப்போம் . – குறியீடு (kuriyeedu.com)
-
யாருக்குத்தெரியும்! முன்பு ஊடகங்களை நடாத்த அறிவும் புலமையும் தேவைப்பட்டது. இன்று ஒரு கணனியும் நிழற்படக் கருவியும் இருந்தால் போதுமென்றானதால் ஊடகம் என்றபெயரில் ஏமாற்றிப் பிழைத்தல் நடக்கிறது. ஏமாறுவோர் இருக்கும்வரை இவர்களுக்கு பிழைப்புத்தான். இவர்களுக்கு பிழைப்புத்தான்.
-
யமுனா நதியில் வெள்ளப் பெருக்கு: திணறும் தலைநகர் டெல்லி
nochchi replied to ஏராளன்'s topic in அயலகச் செய்திகள்
-
யமுனா நதியில் வெள்ளப் பெருக்கு: திணறும் தலைநகர் டெல்லி
nochchi replied to ஏராளன்'s topic in அயலகச் செய்திகள்
நாசா நிபுணர்கள் பழுதுபார்த்துக்கொண்டிருப்பதாக டெல்லிவட்டார ரகசியத்தகவற்குறிப்பேடு சொல்கிறது. நீந்துவது தப்பா? உடற்சூடு தணிய வேண்டாமோ? நாம் ஏவுகணைவரை முன்னேறியவர்கள் என்று மோடியி எச்சரிக்கை. சீனாவே வெருண்டுபோக்கிடக்குது. நினைச்சா ஒரு விரலாலையே வெள்ளத்தை வற்றப்பண்ணிவிடுவார்கள். -
அந்த மண்ணிலே இருந்து,அந்து மக்களின் மனநிலையை பதிவு செய்தல் நன்று. மனித வாழ்வே தேடல்தானே. ஆனால், தமிழினமோ எங்கே அகதியவது என்ற தேடல் முற்றுப்புள்ளியற்று அரைநூற்றாண்டைக் கடந்தும் தொடர்கிறது.
-
கறுப்பு ஜூலை கலவரத்தை நினைவுகூர்ந்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம் Published By: NANTHINI 15 JUL, 2023 | 10:22 AM கறுப்பு ஜூலை கலவரத்தை நினைவுகூர்ந்தும் ஒற்றுமையை வலியுறுத்தியும் வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை (14) மாலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சோசலிச இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் மூவின மக்களின் பங்குபற்றுதலுடன் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதில் ஈடுபட்டவர்கள் 'இனியும் கலவரம் வேண்டாம்', 'பிரிவினைகள் வேண்டாம்', 'சமூக ஒற்றுமையை குலைக்காதே', 'ஆட்சியாளர்களே இனவாதத்தினை தூண்டாதே', 'யாழ் நூலகத்தை எரித்தது இனவாதமே', 'நாடு பூராகவும் ஜூலை கலவரத்தை திட்டமிட்டு நடத்தியது ஆட்சியாளர்களே' என எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், இது தொடர்பில் பலவாறு கோஷங்களை எழுப்பினர். அத்தோடு, மாறி மாறி ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசிய கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுன என்பனவே நாட்டின் இன நல்லுறவு சீர்குலைந்து, கலவரங்கள் ஏற்படக் காரணம் எனவும், அவ்வாறான ஆட்சியாளர்களை விரட்டியடிக்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் இதன்போது கருத்து தெரிவித்தனர். கறுப்பு ஜூலை கலவரத்தை நினைவுகூர்ந்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம் | Virakesari.lk
-
என்னத்தைக் கூறுவது. நாமெல்லோரும் விடுமுறைக்கு சிறிலங்காவுக்கு உல்லாசப்பயணம் போகத்தயாராகிக் கெகாண்டிருப்பதால் இவற்றையெல்லாம் சிந்திக்கமுடியாது. மன்னிக்கவும். நாம் தாயக உறவுகளான உங்களது துன்பங்களை புலம்பெயர் வாழ்வாக அறுவடை செய்தோம். இப்போது அதன்பயனாக மீண்டும் உல்லாசமாகச் சிறிலங்கா போகின்றோம். பயணச்சீட்டும் பயணப்பொதியும் தயார்.
-
இலங்கையைச் சேர்ந்த மேலும் 8 பேர் தமிழகத்தில் தஞ்சம் Published By: DIGITAL DESK 3 15 JUL, 2023 | 01:15 PM இலங்கையைச் சேர்ந்த மேலும் 8 பேர் இன்று சனிக்கிழமை (15) தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு ஆண், இரண்டு பெண்கள், குழந்தைகள் என இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் யாழ்ப்பாணம் கடற்கரையில் இருந்து புகலிடம் தேடி அகதிகளாக நேற்றிரவு சுமார் 8 மணியளவில் பைபர் படகில் புறப்பட்டு இன்றைய தினம் அதிகாலை தனுஷ்கோடி அரிச்சல்முனையை சென்றடைந்தனர். தகவலறிந்த ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் இலங்கை தமிழர்களை மீட்டு ராமேஸ்வரம் மரைன் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்குப் பிறகு 8 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படவுள்ளனர். இதுவரை பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்துக்கு இலங்கையிலிருந்து வந்த அகதிகளின் எண்ணிக்கை 265ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையைச் சேர்ந்த மேலும் 8 பேர் தமிழகத்தில் தஞ்சம் | Virakesari.lk