வல்வெட்டித்துறையில் பறக்க விடப்பட்ட பட்டத்திருவிழா தமிழர் திருநாளான தைப்பொங்கலை முன்னிட்டு அதனை சிறப்பிக்கும் முகமாக வல்வை வாழ்மக்களால் வல்வெட்டித்துறை உதயசூரியன், கடற்கரையில் மாபெரும் பட்டப்போட்டியானது ஆண்டுதோறும் நடார்த்தப்பட்ட்து வருகின்றன .இப் பட்ட போட்டியானது 1994 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலப்பகுதியில் வல்வெட்டித்துறை சன சமூக நிலையத்தால் நடார்த்தப்பட்டது .பின் நாட்டில் நிலவிய யுத்த நிலைமை காரணமாக இந் நிகழ்வு கைவிடப்பட்டது .தொடர்ந்து 2010ஆம் ஆண்டிலிருந்து வல்வை விக்னேஸ்வரா சன சமூக சேவா நிலையத்தால் மிகவும் பிரமாண்டமாக இப் போட்டியானது நடார்த்தப்பட்ட்து வருகின்றன .
போட்டியில் கண்ணைக்கவரும் விதமாக வினோதமான பட்டங்கள் பறக்கவிட்டிருந்தமை பார்வையாளர்களின் மனதை கொள்ளைகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது .
. இப் பட்டப்போட்டியின் சிறப்பம்சம் என்னவென்றால் பல வித விதமான உருவங்களையும் ,கண்ணைக்கவரும் நிறநிற வடிவங்களையும் கொண்டிருப்பதே காரணமெனலாம் .இதுவே இப் பட்டப்போட்டிக்கு அதிக வரவேற்பை பெற்றுக்கொடுக்கின்றது எனலாம் .எத் துறையாகிலும் ஒரு விடயத்தை செய்து முடிப்பதற்கு அதனுடன் தொடர்பான அறிவையும் ஆற்றலையும் கொண்டிருக்கவேண்டும் .அந்த வகையில் பட்டம் கட்டுவதற்கும் ஒரு வித கலைத்திறன் வேண்டும் அவ்வாறு இருந்தாலே வினோதமான பட்டங்களை உருவாக்கமுடியும் . மேலும் இப் பட்டப்போட்டிக்கு முழுக்க முழுக்க பொழுதுபோக்குத்தான் காரணம் என்று குறமுடியாது .அதையும்தாண்டி மக்களிடையே ஒளிந்திருக்கும் கலையம்சமே காரணமெனலாம். அத்துடன் இப் பட்டப்போட்டியின்போது மிகவும் பிரமாண்டமான பட்டங்களே பார்வையாளர்களின் மனதை கொள்ளைகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது . இப் பட்டப்போட்டடியில் போடடியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதுடன் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச்செல்கின்றன .