யாழ்ப்பாணத்தில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த சில திரையரங்கங்கள்
1. ராஜா 2. ராணி 3. வெலிங்டன் 4. லிடோ 5. றியோ 6. ஹரன் 7. சாந்தி 8. றீகல் 9. மனோகரா 10. ஸ்ரீதர் 11. மஹேந்திரா 12. வின்சர்.13.மஹேந்திரா.14.காளிங்கன்.15.லக்சுமி.16.
இதைவிட மானிப்பாய் ,சுண்ணாகம் ,இணுவில் ,தெல்லிப்பளை,அச்சுவேலி,காங்கேசன்துறை,போன்ற இடங்களிலும் சில திரையரங்குகள் இருந்துள்ளன,
போரினால் அவை உருக்குலைந்து காலுடைந்தது ம்,கையுடைந்ததுமாக ஊனமுற்றது போன்ற தன்மையில் இருந்து சில அரங்குகள் மட்டும் இயங்குகின்றன
றீகல் திரையரங்கு யாழ் கோட்டைக்கு முன்பாக வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகில் அமைந்து இருந்தது, அநேகமாக ஆங்கிலப் படங்கள் ஓடும்,
ராஜா திரையரங்கு கஸ்தூரியார் வீதியில் தற்பொழுதும் உள்ளது, வின்சர் தியேட்டருக்கு முன்பாக ,
வெலிங்டன் திரையரங்குஸ்டான்லி வீதி ஆஸ்பத்திரி பின் வீதி சந்தியில் அமைந்து இருந்தது,
ராணிதிரையரங்கு யாழ் பேருந்து நிலையத்துக்கு முன்பாக மின்சார சபை வீதியில் அமைந்து இருந்தது,
ஹரன் திரையரங்கு யாழ் போதனா வைத்திய சாலைக்கு முன்பாக உள்ள ஒழுங்கையில் யாழ் கோட்டைக்கு அருகில் அமைந்திருந்தது,
லிடோ திரையரங்கு பழைய வின்சர் ஸ்டான்லி வீதியில் அமைந்து இருந்தது,
மனோகரா திரையரங்கு கே.கே எஸ் வீதியில் நாவலர் வீதி சந்தியில் அமைந்திருந்தது, யாழ்ப்பாணத்தில் இருந்த "A" சான்றிதழ் பெற்ற மிகச் சிறந்த , வசதிகள் கொண்ட திரைப்பட மாளிகை இதுவாகும், இங்கு மிகப் பெரிய கார் தரிப்பிடம் உண்டு.திரை அரங்கினுள் குடும்ப அறைகள் இந்த திரை திரையரங்கு இதுவாகும் ,
ஸ்ரீதர் திரையரங்கு ஸ்டான்லி வீதியில் ஆரியகுளம் சந்திக்கு மிக அருகில் உள்ள புகையிரத்தைக் கடவைக்கு அருகில் அமைந்து இருந்தது,
மஹேந்திரா திரையரங்கு யாழ் சுண்டிக்குளி வீதியில் யாழ் பரியோவான் கல்லூரிக்கு முன்பாக அமைந்து இருந்தது,
வின்சர் திரையரங்கு யாழ்ப்பாணத்தில் இருந்த மிகப் பிரம்மாண்டமான , கூடிய இருக்கைகள் கொண்ட பெரிய திரைப் பட மாளிகை இதுவாகும், .கே.கே. எஸ் வீதியில் ஸ்டான்லி வீதி சந்திக்கு அருகில் அமைந்து இருந்தது,
றியோ திரையரங்கு யாழ் பழைய மாநகரசபை கட்டடத்தின் பின் பகுதியில் சுப்பிரமணியம் பூங்காவுக்கு முன்பாக கண்டி வீதியில் அமைந்து இருந்தது,
சாந்தி திரையரங்கு யாழ் போதனா வைத்திய சாலைக்கு முன்பாக உள்ள ஒழுங்கையில் யாழ் கோட்டைக்கு அருகில் அமைந்திருந்தது, இதனருகில் முன்பு சம்பந்தன் கிளினிக் இருந்தது, ) இந்த திரையரங்கு ன் விசேடம் யாதெனில் பல்கணி,சூப்பர் பல்கணி இருந்தது, சாந்தி திரையரங்கு , நாதன்ஸ் திரையரங்கு மாறியிருக்கின்றது,
1.இணுவில் - காளிங்கன் திரைப் பட மாளிகை (நியூ காளிங்கன் )
2.நெல்லியடி லக்சுமி திரையரங்கு , மஹாகாத்மா திரையரங்கு.
3. சாவகச்சேரியில் தேவேந்திரா திரையரங்கு , வேல்ஸ் திரையரங்கு.
4. சுன்னாகத்தில் நாகம்ஸ் திரையரங்கு
5. காங்கேசன்துறையில் யாழ் திரையரங்கு , ராஜநாயகி திரையரங்கு.
6.வல்வெட்டித் துறையில் யோகநாயகி திரையரங்கு , ரஞ்சனா திரையரங்கு.
7.தெல்லிப்பளையில் துர்க்கா திரையரங்கு
8.அச்சுவேலியில் லிபேர்ட்டி திரையரங்கு
9.பருத்தித்துறையில் சென்றல் திரையரங்கு
10. புலோலியில் காசில் திரையரங்கு( புலோலி சினிமா)
11.மானிப்பாயில் ,வெஸ்லி திரையரங்கு என நினைக்கிறன்
12.நிரஞ்சனாஸ்" சங்கானை
13.கோண்டாவில்,லதா திரையரங்கு