கேரளத்தின் பிரபல பாடகர் சதீஸ் பாடிய சமூக நலன் மிக்க மலையாள பாடலை ,
காயல் பட்டினத்தின் சிறந்த பாடகர்களுள் ஒருவரான கே ஜே ஷாகுல் ஹமீது தமிழில் பாடியுள்ளார்
அன்றங்கே ஒரு நாடிருந்ததே
அந் நாட்டில் ஆறிருந்ததே
ஆறு நிறைய மீனிருந்ததே
மீனும் முழுகிடக் குளிரிருந்ததே
அன்னமிட வயலிருந்ததே
வயல் முழுவதும் கதிருந்ததே
கதிர் கொத்திடக் கிளி வந்ததே
கிளிகள் பாடும் பாட்டிருந்ததே
அந் நாட்டில் நிழல் இருந்ததே
மண்வழியில் மரம் இருந்ததே
மரத்தடியில் பேசிச் சிரித்திட நண்பர் கூட்டம் நூறிருந்ததே
நல்ல மழை பெய்திருந்ததே
நரகத் தீ சூடில்லையே தீவட்டிக் கொள்ளை இல்லையே
தின்றது எதுவும் நஞ்சில்லையே
அன்றங்கே ஒரு நாடிருந்ததே
அந் நாட்டில் ஆறிருந்ததே
ஆறு நிறைய மீனிருந்ததே
மீனும் முழுகிடக் குளிரிருந்ததே
அன்னமிட வயலிருந்ததே
வயல் முழுவதும் கதிருந்ததே
கதிர் கொத்திடக் கிளி வந்ததே
கிளிகள் பாடும் பாட்டிருந்ததே
அந் நாட்டில் நிழல் இருந்ததே
மண்வழியில் மரம் இருந்ததே
மரத்தடியில் பேசிச் சிரித்திட நண்பர் கூட்டம் நூறிருந்ததே
நல்ல மழை பெய்திருந்ததே
நரகத் தீ சூடில்லையே தீவட்டிக் கொள்ளை இல்லையே
தின்றது எதுவும் நஞ்சில்லையே
ஒரு வீட்டில் அடுப்பெரிந்தால் மறுவீட்டில் பசியில்லையே
ஒரு கண்ணு கலங்கி நிறைந்தால் ஓடி வரப் பலருண்டங்கே
நாடெங்கும் மதில்கள் இல்லையே
ஒரு வீட்டில் அடுப்பெரிந்தால்
மறுவீட்டில் பசியில்லையே
ஒரு கண்ணு கலங்கி நிறைந்தால்
ஓடி வரப் பலருண்டங்கே
நடைவெளி இடைவெளி நூறிருந்ததே
நாலுமணிப் பூவிருந்ததே
நல்லோர் சொல்லுக்கு விலையிருந்ததே
அன்றும் பல மதம் இருந்ததே
அதையும் தாண்டி அன்பிருந்ததே
அன்றும் பல மதம் இருந்ததே அதையும் தாண்டி அன்பிருந்ததே
உன்னைப் படைத்தோன் என்னைப் படைத்தோன்
என்றதொரு சண்டை இல்லையே
உன்னைப் படைத்தோன் என்னைப் படைத்தோன் என்றதொரு சண்டை இல்லையே
அந் நாட்டைக் கண்டவர் உண்டோ
எங்கே போனது தெளிவுண்டோ
அந் நாடு இறந்து போனதோ
அது வெறும் ஒரு கனவானதோ
அந் நாட்டைக் கண்டவர் உண்டோ
எங்கே போனது தெளிவுண்டோ
அந் நாடு இறந்து போனதோ
அது வெறும் ஒரு கனவானதோ
அந் நாடு இறந்து போனதோ
அது வெறும் ஒரு கனவானதோ
அன்றங்கே ஒரு நாடிருந்ததே அந் நாட்டில் ஆறிருந்ததே
ஆறு நிறைய மீனிருந்ததே மீனும் முழுகிடக் குளிரிருந்ததே
அன்னமிட வயலிருந்ததே வயல் முழுவதும் கதிருந்ததே
கதிர் கொத்திடக் கிளி வந்ததே கிளிகள் பாடும் பாட்டிருந்ததே
கிளிகள் பாடும் பாட்டிருந்ததே